Posted by: மீராபாரதி | January 27, 2022

கேதாரியின் சினிமாத்தடம் ஒர் பார்வை

கேதாரியின் சினிமாத்தடம் ஒர் பார்வை
சினிமா அறிமுகம் விமர்சனம் மட்டுமல்ல சமூக ஆய்வாகும்.
“எண்பதுகளின் ஆரம்பத்தில் திரைப்பட அனுபவங்களைப் பெறுவதற்காக நாட்டின் தலைநகரான கொழுப்பில் அலைந்து திரிந்து கொண்டிருந்தேன். இக் காலங்களில் சோவியத் கலாசார நிலையத்திற்கு அடிக்கடி திரைப்படங்கள் பார்க்கச் செல்லுவேன். அப்படியான ஒரு நாளில் தற்செயலாக இரண்டு பேர்களைச் சந்தித்தேன். ஒருவர் அ.யேசுராசா மற்றவர் ஜி.ரி.கேதாரநாதன். இவர்கள் இருவரும் தென்னிந்திய சினிமா தொடர்பாக நான் அறிவதற்கு என்னில் நிறைய தாக்கம் செலுத்தியவர்கள். மூன்று தசாப்தங்களின் பின்பு தென்னிந்தியா எனது இரண்டாவது வீடானது.

ஜி.ரி.கேதாரநாதன் அல்லது நாம் அன்புடன் அழைக்கும் ஜிரிகே யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது இயல்பான திரைப்பட ஆர்வத்தினாலும் ஆழமான விமர்சன நோக்கினாலும் எந்த ஒரு திரைப்படமும் இவரது பார்வையிலிருந்து தப்பாது. தென்னிந்திய திரைப்படங்களில் மட்டுமல்ல சிங்களத் திரைப்படங்களிலும் குறிப்பாக டாக்டர். லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், தர்மசிறி பத்திராஜ, வசந்த ஒபயசேகர ஆகியோரின் திரைப்படங்களில் இதேயளவு ஆர்வம் கொண்டவர்.  என்னைப்போல கொழுப்பில் பாதுகாப்பாக வாழாது பல பிரச்சனைகளைக் கடந்த காலங்களில் இவர் எதிர்கொண்டபோதும் சினிமா மீதான இவரது அக்கறை குறையவில்லை. அந்தவகையில் சினிமா தொடர்பான இவரது படைப்புகள் தொகுப்பாக வருவது முக்கியமானதும் சினிமா ஆர்வலர்களுக்குப் பயனுள்ளதுமாகும்” என இலங்கையின் முக்கியமான சிறந்த Image result for prasanna vithanageதிரைப்பட நெறியாளர் பிரசன்ன விதானகே அவர்கள் கேதாரநாதன் பற்றியும் அவரது கட்டுரைகள் தொடர்பாகவும் குறிப்பிடுகின்றார். அ.யேசுராசா அவர்களும் தனது சினிமா தொடர்பான அனுபவங்களைக் குறிப்பிடும் பொழுது தாம் கொழும்பில் வாழ்ந்த என்பதுகளின் ஆரம்ப காலங்களில் கேதாரிநாதனுடன் சோவியத் ஜெர்மனிய பிரன்ஞ் கலாசார நிலையங்களில் பல திரைப்படங்களைப் பார்ததாகவும் அப்பொழுது பிரசன்ன விதானகே போன்ற பலரை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்ததுடன் அவர்களுடன் நெருக்கமான உறவும் ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.

40342_422085905781_3695443_n(1)நாம் அன்புடன் கேதாரி என அழைக்கும் கேதாரநாதன் தொடர்பாக சரிநிகர் சிவக்குமார் அவர்கள், “ஈழத்திலுள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய சினிமா விமர்சகர்களில் இவரும் ஒருவர். இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். சினிமாவோடு இலக்கியம், ஓவியம். சிற்பம் என அவருடைய ஆர்வமும் தேடலும் விரிவடைந்து செல்வது. இத்தகைய பல்துறை அறிவும் தேடலும் கொண்ட ஒருவரை பத்திரிகையாளராகக் கொண்டிருந்ததில் வீரகேசரி பெருமையடையலாம்.” எனக் குறிப்பிடுகின்றார். மேலும் சினிமா இரசனையை வளர்க்கும் நோக்கில் 2009களில் கேதாரியுடன் இணைந்து நிகரி திரைப்பட வட்டத்தை கொழும்பில் ஆரம்பித்ததாகவும் பல திரைப்படங்களை திரையிட்டு உரையாடல்களை நடாத்தியதாகவும் குறிப்பிடுகின்றார்.

இந் நூலில் உலகின் பல பாகங்களிலும் வெளியான தரமான பல திரைப்படங்களையும் அதை இயக்கிய நெறியாளர்களையும் அறிமுகம் செய்வதுடன் காத்திரமான விமர்சனப்பார்வையையும் முன்வைத்துள்ளார். இந் நெறியாளர்களின் நேர்காணல்களை மொழிபெயர்த்தும் இணைத்துமுள்ளார். மேலும் குறிப்பாக இந்திய இலங்கை திரைப்படங்கள், நெறியாளர்கள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தியுள்ளார். இதை முழுமையாக வாசிக்கும் பொழுது திரைப்படம், நெறியாள்கை, நடிப்பு, ஒளிப்பதிவு, மற்றும் இத் துறைகளில் சிறப்பாக செயற்படுகின்றவர்கள் தொடர்பான நல்லதொரு பார்வை நமக்கு கிடைக்கின்றது. மேலும் சமூகப் பிரச்சனைகளான பொருளாதாரம், சுரண்டல், காலனித்தவ ஆதிக்கம் மற்றும் இன, மத. சாதிய. பால். பெண்ணிய, சாதிய, பிரதேச அடக்குமுறைகள், புறக்கணிப்புகள் தொடர்பான ஆழமான தெளிவான விமர்சனப் பார்வைகளையும் இத் திரைப்படங்களின் அடிப்படையில் முன்வைக்கின்றார். இவை நம் சமூகத்தினதும் நாட்டினதும் மட்டுமல்ல சர்வதேசம் சார்ந்த ஒரு கண்ணோட்டத்தை நமக்குத் தருவதுடன் நல்ல தரமான சினிமா இரசனை பற்றிய ஆழமான புரிதலையும் தருகின்றது.

Image result for vittorio de sicaகாலாவதியாகாத நவயதார்த்த சினிமாச் சித்தாந்தம் என்ற கட்டுரையில் “யதார்த்த உலகின் மெய்மையினை நேரடியாக வெளிக்கொணரும் திரைப்படங்களையே நவ யதார்த்தவாத சித்தாந்தத்தை தழுவிய  திரைப்படங்கள் எனலாம். இவற்றில் சமூகரீதியாக சினிமாபெறும் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். .. இவை தொற்றவைக்கும் அனுபவங்கள் மெய்மையானவை கூர்மையானவை” என்கின்றார். இவ்வாறான திரைப்படங்கள் ஒரு சினிமா இயக்கமாகப் பரிணமித்தது 1942-1952 காலப்பகுதியாகும். இதற்குக் காரணம் இத்தாலியில் முசோலினியின் ஆட்சிக் காலத்தில் “கருத்துச் சுதந்திரம் மீதான கட்டுப்பாடு காரணமாக ஆற்றல்மிக்க திரைப்பட நெறியாளர்கள் சிலருக்கு ஏற்பட்ட அதிருப்தியே” இவ்வாறான சினிமாக்களுக்கான தோற்றுவாய்.  இந்த இயக்கத்தின் “உந்துசக்தி வாய்ந்த Image result for vittorio de sicaமுன்னோடி ஆளுமைகளாக விற்றோரியா டீ சிக்கா, ரோஸலினி, விஸ் கோன்ரி ஆகிய நெறியாளர்களும் சினிமாக் கோட்பாட்டாளரும்  கதாசிரியருமான சவாற்றினி” ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர். இந்த இயக்கத்தின் முழு உதாரணமாகத் திகழும் திரைப்படம் பைசிக்கிள் தீவிஸ் என விமர்சகர்கள் கூறுகின்றனர். இத் திரைப்படமே  பதர் பாஞ்சாலியை உருவாக்க காரணமாக இருந்தது என்கின்றார் சத்தியஜித் ரே. இக் காலத் திரைப்படங்களுக்கான உதாரணங்களாக the bicycle thieves, shoeshine, umberto D குறிப்பிடலாம். இவையே “பிரான்ஸின் புதிய அலைத் திரைப்படங்கள் தோன்றுவதற்கான வித்துக்கள்” எனவும் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

Image result for dariush mehrjuiநவ யதார்த்தம் தழுவிய ஈரானிய சினிமா என்ற தலைப்பில் ஈரானிய சினிமா தொடர்பாக எழுதியுள்ளார். இதில், “இத்தாலிய நவயதார்த்த சினிமாச் சித்தாந்தத்தின் அபரீதமான தொடர்ச்சியினைச் சமகால ஈரானிய திரைப்படங்கள் பலவற்றில் காண முடிகிறது” என்கின்றார். அந்தவகையில். White balloon, the mirror, the cow, where is the friend’s house?, children of heaven சிலவற்றைக் குறிப்பிட முடியும் என்கின்றார். இத் திரைப்படங்கள் மூலம் “புகழீட்டிய ஆளுமைகளாக டாரியுஸ் மெக்ரூஜி, மொஷன் மக்மெல்வ். அபாஸ் கியரொஸ்ரமி, மாஜிட் மாஜிடி, பக்ரம் பெஸாய், யவார் பானகி, ரக்மினா மிலானி” போன்ற சிலரைக் குறிப்பிடுகின்றார். மேலும் ஈரானிய நெறியாளர்கள் டாரியுஸ் மெக்ரூஜி, அபாஸ் கியரொஸ்ரமி, பக்மன் ஹோபாடி அவர்களின் Image result for dariush mehrjuiவிரிவான நேர்காணல்களையும் மொழிபெயர்த்துள்ளார். உண்மையில் பக்மன் ஹோபாடி ஈரானிய குர்திஸ்தானில் பிறந்தவர். இப் பிரதேசத்தில் திரைப்பட அரங்குகளோ நடிகர்களோ இல்லாதது மட்டுமல்ல பார்வையாளர்களும் இல்லை என்கின்றார். இருப்பினும் சர்வதேச கவனத்தைப் பெற்ற life in the fog, the wind will carry us, a time for drunken horses, songs of my mother land, turtles can fly திரைப்படங்களை உருவாக்கியுள்ளார். இதன்பின்னனியில் இலங்கையில் நடைபெற்ற ஈரானிய திரைப்பட விழா ஒன்று தொடர்பாகவும் தனது விரிவான விமர்சனங்களை முன்வைக்கின்றார்.

Image result for raoul peckமக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு கொங்கொ நாட்டுப் பிரதமர் பற்றிஸ் லுமும்பா படுகொலை செய்யப்படுவது தொடர்பான கதையே லுமும்பா திரைப்படமாகும். இதனை கெயிட்டியில் பிறந்து தனது இரண்டாவது தாயகமான கொங்கோவில் குடியேறிய ஆபிரிக்க நாட்டின் சுதந்திரம், இறைமை, ஜக்கியம் என்பவற்றில் பற்றுறுதிமிக்க றோல் பெக் திரைக்கதை எழுதி நெறியாள்கை செய்துள்ளார்.   லுமும்பா பாத்திரத்தில் நடித்த எரிக் எபோனியின் பங்களிப்பும் இவர் இப் பாத்திரத்திற்கு மிக நெருக்கமாக ஒத்துவருவதும் மிக முக்கியமானது என்கின்றார். ஐரோப்பிய காலனிய ஆதிக்கத்திற்கு எதிராக இருந்த இவரை மேலைத்தேய நாடுகள் ஜக்கிய நாடுகளின் சபையின் பாராமுகத்துடன் எவ்வாறு பதிவியிறக்கி கொலை செய்கின்றனர் என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் கூறுகின்றது. இப் Image result for lumumba filmபடுகொலையின் மூலம் இந்த நாட்டின் கனிமவளங்களை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இந்த நாட்டு மக்களை அடிமைப்படுத்தி சுரண்டுகின்றனர். இந்தவகையில் லுமும்பா ஓரு துன்பியல் வரலாற்று நாயகன் என்கின்றார். இத் திரைப்படத்தின் நெறியாளர் றோல் பெக்கின் விரிவான நேர்காணலையும் மொழிபெயர்த்துள்ளார். இதில் இத் திரைப்படம் எடுத்தமைக்கான காரணங்களையும் எடுத்த சூழலையும் தனது அரசியலையும் நோக்கங்களையும் வெளிப்படுத்துகின்றார். இதனுடாக உண்மையை வெளிப்படுத்துவதே எனது பிரதான நோக்கம் என்கின்றார்.

Image result for agnieszka hollandபோலாந்தில் பிறந்த அக்கினிஸ்கா ஹாலண்டின் ஜரோப்பா ஜரோப்பா திரைப்படம் எவ்வாறு யூத இளைஞன் ஒருவன் நாசிகளிடமிருந்து தப்புவதற்காக தான் ஒரு ஜெர்மனியனாகவும் கம்யூனிஸ்டாகவும் மாறி மாறி சாதுரியமாகச் செயற்படுகின்றான் என்பதைக் கூறுவதாகும். மேலும் இவரது சில படங்களினதும் (provincial actors, fever, a lonely woman) யூத படுகொலைகள் தொடர்பான சிறந்த படங்களினதும் (life is Beautiful, broker, Mr.clean, Mephisto, 25 hour) குறிப்புகளையும் Image result for europa europa filmஎழுதியுள்ளார்.  இந் நெறியாளர் “தன்னை ஒரு நாட்டுடன் அடையாளப்படுத்தாது ஒர் உலகத்தின் பிரதிநிதியாகத் தாம் அடையாளம் காணப்பட வேண்டும் என விரும்புகின்றார். இதனாலையே வித்தியாசமான கலாசாரப் பின்னணிகளையும் பாரம்பரியங்களையும் கொண்ட பல நாடுகளிலும் அந்நியப்பட்டுவிடாது கவனத்தை ஈர்க்கும்  கலைத்துவமான திரைப்படங்கள் பலவற்றை அவரால் உருவாக்க முடிந்தது” என்கின்றார் நூலின் ஆசிரியர்.

Image result for lester james periesஇலங்கையைச் சேர்ந்த நெறியாளர்களான லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், தர்மசேன பத்திராஜ, பிரசன்ன விதானகே, பிரசன்ன ஜெயகொடி ஆகியோரின் திரைப்படங்கள் தொடர்பான கட்டுரைகளையும் நேர்காணல்களையும் அதன் மொழிபெயர்ப்புகளையும் இந் நூலில் தொகுத்துள்ளார்.

லெஸ்டர் ஜேம்ஸ்  பீரிஸின் ரேக்காவ திரைப்பட வருகையுடனேயே சிங்கள திரைப்படங்களின் ஆரோக்கிய வழிபட்ட பரிணாம Rekava.jpgவளர்ச்சி ஆரம்பிக்கின்றது என்கின்றார். “இந்தவகையில் சிங்களத் திரைப்படங்களுக்கு மாற்று வடிவம் கொடுத்த முன்னோடியாக அதற்கு வழிகோலியதுடன் உறுதியான அடித்தளத்தையிட்டவர்” இவர் எனக் கருதப்படுகின்றார். அந்தவகையில் இவரது கம்பெரலிய முக்கியத்தவம் வாய்ந்த திரைப்படம் ஒன்று. இருப்பினும் இவரது பிற்காலத் திரைப்படமான அம்மா வருணே, “விரிந்ததொரு பார்வையினைத் தொலைத்துவிட்டு வெகுஜனத் தளங்களில் கட்டமைக்கப்படுகின்ற கருத்தாக்கங்களுக்கும் படிமங்களுக்கும் அவர் ஆட்பட்டிருப்பது தூரதிர்ஸ்டமானது.” ஆகவேதான் லெஸ்டர் ஒர் காலத்துயர் எனத் தலைப்பிட்டிருக்கின்றார்.

Image result for dharmasena pathirajaஇலங்கையின் சிங்கத் திரைப்பட வரலாற்றில் மட்டுமல்ல தமிழ்த் திரைப்பட வரலாற்றிலும் தர்மசேன பத்திராஜாவிற்கு முக்கியமான பங்களிப்பு உள்ளது. இவர், “சினிமா ஊடகத்தை யுத்தத்தைக் கொண்டாடும் நோக்கில் திரைப்படம் எடுத்து ஒருபோதும் கீழிறக்கிவிடக்கூடாது” எனக் கூறுகின்றார். இந்தவகையில் சமூக அக்கறையுடன் கூடிய மாற்று சினிமா ஒன்று எழுச்சி பெறுவதற்கு செய்த பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது விமர்சகர்களது கருத்து என்கின்றார். இவரது நேர்காணல் ஒன்றையும் மொழிபெயர்ப்பு செய்து இந்த நூலில் இணைத்துள்ளார்.

Image result for prasanna jayakodyபிரசன்ன ஜெயகொடியின் முதல் திரைப்படமான சங்காரா சினிமா மொழியில் ஒர் உள்மன யாத்திரை என்கின்றார். இளம் பௌத்த துறவி ஒருவரின் மனவுலகில் ஆழமான ஒரு பார்வையை இத் திரைப்படம் செலுத்தியிருப்பதால் முக்கியமானது என்கின்றார். குறிப்பாக, இவரது “ஆசைகள், இச்சைகள் எவ்வளவு தூரம் இவரை அலைக்கழித்து இம்சைப்படுத்துகின்றது என்பதை நுண்ணுணர்வுடன் மிகத் துல்லியமாக வெளிப்படுத்தியமை துணிகரமான முயற்சி” என்கின்றார். அதேநேரம், “துறவியின் மஞ்சள் அங்கியின் புனிதம் கெட்டுவிடாமல் காத்திருப்பதும் சிருஷ்டியின் கூறுகளான கலையாக்கம், கருத்தாக்கம் என்ற இரு தளங்களிலும் நெறியாளர் ஒரேயடியாகச் சரிக்கி விழுந்திருப்பதையே எடுத்துக் காட்டுகிறது.” அதேநேரம் புத்தி கீர்த்தி சேனாவின் மில்ல சொயா “ திரைமொழியின் அர்த்தம் கூடிய நீட்சியாகக் கலையாக்கத்தின் அடிப்படைதன்மை குலையாமல் நாம் வாழும் காலகட்டம் எவ்வாறு உக்கிரமான வன்முறையால் சகல விதங்களிலும் Image result for prasanna jayakodyசூழப்பட்டிருக்கிறது என்பதை மெய்மை குன்றாமல் காலாபூர்வமாக வெளிப்படுகின்றது” என்கின்றார். பிரசன்ன விதானகேயுடன் விரிவான நேர்காணல் ஒன்றை செய்திருக்கின்றார். அதில், ‘காட்சிப்படிமங்களாக உணர்வுகள் வெளிப்படும்போதே தூய சினிமா உருவாகிறது” என்கின்றார். இவரின் பெரும்பாலான திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர் எம்.டி.தர்மபால. இவர் ஒளிப்பதிவாளராக தனக்கெனத் தனித்தடம் பதித்தவர் என்கின்றார் ஆசிரியர். இவரது நேர்காணல் ஒன்றையும் மொழிபெயர்த்து இத் தொகுதியில் இணைத்துள்ளார்.

Image result for Vasanthabalanவசந்தபாலனின் வெயில் தொடர்பாக குறிப்பிடும் பொழுது, “விருது நகர் சேரிப்புற வெயிலின் தணல் தகிப்பும், மூக்கைத் துளைக்கும் கந்தக நெடியும், யதார்த்தப்பாங்காக மெய்மை குன்றாது வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக அணுகப்பட்டிருக்கிறது. அதேநேரம், ‘இடைவேளைக்குப் பின்னர் தமிழ்த் திரைப்படங்களின் பழகிய தேய்ந்த தடத்திலையே வெயில் பயணிக்க ஆரம்பிக்கின்றது. மிகையுணர்ச்சிகள், அதீதங்கள் போன்றன வந்தவிடுகின்றன…. இந்தவகையில் நெறியாளர் தனது சமநிலையினையும் கட்டுப்பாட்டினையும் இழந்துபோய்விடுவது சினிமாவை Image result for வெயில் திரைப்படம்விழிப்புணர்வுமிக்கதொரு மென்மையான கலைச்சாதனம் என்ற உயர் தளத்திலிருந்து முற்றாகவே கீழிறக்கி விடுகிறது.” என்கிறார். தமிழ் திரைப்படங்கள் தொடர்பாக எதிர்மறையான பார்வையைக் கொண்டிருந்தபோதும் ஈழத்தைச் சேர்ந்த புலம்பெயர் நெறியாளர் லெனின் எம் சிவமும் அவரின் கன் அன் த ரிங் என்ற திரைப்படமும் நம்பிக்கைத் தரக்கூடியதாக இருக்கின்றமையைப் பாராட்டுகின்றார்.

.  தமிழ் குறுந்திரைப்படங்கள் பற்றி குறிப்பிடும் பொழுது, “நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் குறும்பட ஊடகத்தை உருத்தெரியாமல் சிதைத்துவிட்டது. கார்ப்பிரேட் மயமாக்கலே தரவீழ்ச்சிக்கான மூலகாரணமாகும்”. இந்த விமர்சனத்தின் அடிப்படையில் வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் இவரது பார்வைக்காக அனுப்பிய இருபது குறுந்திரைப்படங்களில் நான்கை மட்டும் தெரிவு செய்து அவை தொடர்பான அறிமுக விமர்சனங்களை செய்துள்ளார். அதேநேரம் சர்வதேச தரம் வாய்ந்த சில குறுந்திரைப்படங்களான before dawn, the lunch date, a chairy tale போன்றவற்றை அறிமுகம் செய்துள்ளார். குறுந்திரைப்படம் ஒன்று எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை சண்முகம் சிவலிங்கத்தின், “ஒரு சின்னப்புல்லும் அதன் வடிவில் முழுமை” என்ற கவிதை மூலம் வெளிப்படுத்துகின்றார்.

திரைப்பட நெறியாளர்கள் தொடர்பாக மட்டுமின்றி ஒளிப்பதிவாளர்கள் தொடர்பாகவும் பல தகவல்களை குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில் திரைப்படமேதை சத்தியஜித்ரேயின் நிரந்தர ஒளிப்பதிவாளராக பங்காற்றிய சுப்ரற்ற மித்ரா இந்தியாவின் முதலாவது தலைமுறை ஒளிப்பதிவாளர் என்கின்றார். இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் கே.கே. என அழைக்கப்படும் கே.கே.மகாஜன்.  இவர் மிருணாள் சென், குமார் சகானி, மணி கெளல், சியாம் பெனகல் ஆகியோரின் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவராவர். இவற்றினடிப்படையில் “நிலைக்கக்கூடிய படிமங்களின் சிருஷ்டியாளர்” என அழைக்கின்றார்.

2012ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சார்க் திரைப்பட விழா தொடர்பான விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார். இவ் விழாவில் அஞ்சன் டுற்றாவின் ‘ரஞ்ஞன அமிஅர் அஸ்போநா’ கேபி.சுவீரனின் “பயாரி’ ஆகிய திரைப்படங்களும் ரேவதியின்  ‘றெட்பில்டிங் வெயார் த சன் செற்’ பிரமோட் புஸ்வாணியின் ‘அன்ட் வீ பிளே ஒன்’ ஆவணத்திரைப்படங்களும் இந்தியளவில் திரையிடப்பட்டன. இலங்கைப்பிரிவில் பிரசன்ன விதானகேயின் ஆகாசகுசும்’ அசோக்கா ஹந்த கமவின் ‘விடு’ திரைப்படங்கள் காண்பிக்கப்பட்டன. பங்களாதேசின் பிரிவில் ‘மைமதர்ரங்’ என்ற வங்க மொழியின் மேப்பாடு குறித்ததும் பங்களாதேசின் தேசசிற்பியான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை தொடர்பான ஆவணப்படங்களும். ஹெலாகார்’ ‘பிரியற்றோமெஸ்’ அகிய திரைப்படங்களும் காண்பிக்கப்பட்டன. பாக்கிஸ்தான் பிரிவில் ‘ஸேவிங் பேஷ்’ என்ற ஆவணப்படமும் ராம் சந்பாகிஸ்தானி’ ‘டுவால்’  ஆகிய திரைப்படங்களும் காண்பிக்கப்பட்டன. இத் திரைப்படங்கள் தொடர்பான விரிவான அறிமுகங்களையும் ஆழமான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். மேலும் பார்ஸானியா பூமியில் ஒரு நரகத்தின் கதை என்ற தலைப்பில் பார்ஸானியா திரைப்படம் தொடர்பாகவும் அதைத் திரைப்படம் முகம் கொடுத்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்கின்ற மொழிபெயர்ப்பு கட்டுரை ஒன்றுமுள்ளது. இது 2002ஆம் ஆண்டு குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளின்போது காணாமல்போன தமது மகனைத் தேடுவதைப் பின்புலமாகக் கொண்ட திரைப்படமாகும்.

நூலாசிரியர் பல பெண் நெறியாளர்களையும் அவர்களது திரைப்படங்கள் தொடர்பாகவும் விரிவாக குறிப்பிட்டிருக்கின்றார். மேலும் “பெண்களது பிரச்சனைகளை அணுகி அலசிய நல்ல திரைப்படங்களில் சிலவற்றை குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக sara, colour purple, surviving Picasso, fire, khamosh pani, ஆகியன சர்வதேசங்களைச் சார்ந்தன. dadaiyama, pavaru walalu என்பவை சிங்களத் திரைப்படங்களாகும்.

ஈரானிய நெறியாளர் ரக்மினா மிலானியின் இரு பெண்கள் என்ற திரைப்படம் தொடர்பான கட்டுரை சிறப்பானதொன்று. அதில் “ஆரோக்கியமான சமூகமொன்றினை அவாவித் திரைப்படங்களை உருவாக்கி வருவதாகவும் அதற்காக எந்த விலையினைக் கொடுக்கவும் தயாரெனவும் தம்மைப் பொறுத்தவரையில் சமூக அசைவே அக்கறைக்குரிய இலக்கு எனவும் வலியுறுத்தியிருக்கிறார்.” நெறியாளர். இத் திரைப்படம் பெண்ணிலைவாத நோக்கில் மிக முக்கியமான திரைப்படம் என்கின்றார் நூலாசிரியர்.

பாக்கிஸ்தானைச் சேர்ந்த சபிகா சுமாரின் கமோஸ் பானி என்ற திரைப்படம் இந்திய பிரிவினையின்போது சிக்கியர்களுக்கும் முஸ்லிம்களுக்குமான முரண்பாடுகளையும் சியா உல் ஹக்கின் ஆட்சிக் காலத்தில் எவ்வாறு அடிப்படைவாதிகள் அதிகாரம் பெறுகின்றார்கள் என்பதையும் இவ்விரு காலங்களிலம் பெண்கள் குறிப்பாக தாய்மார் எதிர்கொள்ளும் அவலங்களையும் வெளிப்படுத்துவதாக குறிப்பிடுகின்றார். இத் திரைப்படம் தொடர்பான விரிவான அறிமுகத்தை செய்வதுடன் நெறியாளரின் நேர்காணல் ஒன்றையும் மொழிபெயர்த்துள்ளார். இந் நேர்காணலில் நெறியாளர் பல விடயங்களை விரிவாகப் பேசுகின்றார். இவர் விடுதலைப் புலிகளின் பெண் தற்கொலைப் போராளிகள் தொடர்பாக suicide warriors என்ற ஆவணப்படத்தையும் மேலும் don’t ask why, a place under the heaven, where peacocks dance, who will cast the first stone? போன்ற ஆவணப்படங்களையும் எடுத்துள்ளார். இவற்றிக்கான இவரது உழைப்பையும் இவற்றினால் எதிர்கொண்ட பிரச்சனைகளையும் இந்நூலிலுள்ள கட்டுரையும் நேர்காணலும் வெளிப்படுத்துகின்றன. மேலும் சுனிலா அபயசேகரவின் கட்டுரை ஒன்றை மொழிபெயர்த்துள்ளார். இதில் சிங்கத் திரைப்படங்களில் கிராம நகரங்களில் பெண்களும் பால் நிலையும் எவ்வாறு சித்திரிக்கப்படுகின்றன என்பது அலசி ஆராயப்படுகின்றது.

இவ்வாறான ஆற்றலையும் பின்புலங்களையும் கொண்ட கேதாரநாதனின் சினிமாத்தடம் என்ற நூல் ஈழத்தின் சினிமாத்துறைக்கும் விமர்சனதுறைக்கும் முக்கியமான வரவு எனலாம். இந்த நூலிற்கு முன்னுரை எழுதிய வைத்தியர் கொ.றொ.கொண்ஸ்ரன்ரைன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“கேதாரநாதன் தமிழ் வாசகர்களுக்கு குறிப்பாகக் கலை இலக்கிய ஆர்வலர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இவர் பல ஆண்டு காலமாக கலை இலக்கிய விமர்சனதுறையில் தனக்கென இடத்தைப் பிடித்துக் கொண்டவர். சினிமா விமர்சனத்துறையில்  தமிழிலே முன்னணியில் இருப்பவர்.  சினிமா சம்பந்தமான கட்டுரைகள் அடங்கிய இந்த நூல் காலத்தின் தேவையாகும்.  வீரதீரச் செயல்களைச் செய்யவல்ல கதாநாயகர்களது செயல்களைப் பற்றியதல்ல சாதாரண மக்களது நாளாந்தப் பிரச்சனைகள்தான் தரமான சினிமாவின் இயங்குதளம் என்பதை ஆசிரியர் தெளிவாகக் காட்டியுள்ளார்.”

சினிமாத்தடம் என்ற தனது நூலை கேதாரநாதன் அவர்கள் நால்வருக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். ஏ.ஜே.கனகரட்ன, கே.எஸ்.சிவகுமாரன், அ.யேசுராசா, பிரசன்ன விதானகே. இந்த நால்வரும் சினிமா தொடர்பான தனது அறிதலில் முக்கியமான பங்காற்றியவர்கள் என்கின்றார். நூலின் இறுதியில் ஏ.ஜே யின் மரணத்தின்போது எழுதிய தனது அஞ்சலிக் குறிப்பை அரிதான உயிர்ராசி என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். இதில் ஏ.ஜே அவர்கள் தனக்கும் சினிமாவுக்கும் மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் மொழிபெயர்ப்புக்கும் அரசியலுக்கும் ஆற்றிய பங்களிப்புகள் தொடர்பாக குறிப்பிடுகின்றார்.

சினிமா ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல திரைப்படத்துறையில் செயற்படுகின்றவர்களுக்கும் அரசியல் சமூகம் சார்ந்த காத்திரமான யதார்த்தபூர்வமான திரைப்படங்களையும் ஆவணப்படங்களையும் எடுக்க விரும்புகின்றவர்களுக்குமான ஒரு பாடவிதானமாக இந்த நூல் அமையும் என்றால் மிகையல்ல. இந்த நூலை வெளிக்கொண்டுவர நீண்ட காலமாக முயற்சிக்கப்பட்ட போதும் கடந்த இரண்டு வருடங்கள் எனது இலங்கைக்கான பயணத்தின்போது குறிப்பிட்ட நாட்களை இதற்காக ஒதுக்கி செயற்பட்டு சரிநிகர் நண்பர்களை ஒருங்கிணைத்து அவர்களின் நிதிப் பங்களிப்புடன் நிகரி வெளியீடாக கொண்டுவந்தமைக்காக பங்களித்தமை எனக்கு மகிழ்ச்சியும் பெருமையுமாகும். இப் பயணத்தில் பங்களித்த அனைத்து நண்பர்களுக்கும் குறிப்பாக கேதாரநாதனின் தம்பி கைலாசநாதன் அவர்களுக்கும் நன்றி பல. நூற்களை வெளியிடுவது என்பது பதிப்புதுறை தொடர்பாக கற்பதுமாகும்.

மீராபாரதி

Gopalapillai Thiruketharanathan

A native of Chavakacheri, Jaffna, Gopalapillai Thiruketharanathan, known to most as ‘Ketharanathan,’ after completing his education at Vaithiswara Vidyalayam, Jaffna started his career in journalism at Virakesari newspaper during the early 1980s.

In Virakesari, at the inception, Ketharanathan worked as a clerk/translator for a short period, and then joined the editorial department as a sub-editor at the foreign news desk. In addition he was entrusted to handle local news as well. Since Ketharanathan was deeply interested in the fields of literature and arts, at the insistence of his superiors he was absorbed into the Sunday Virakesari section under the veteran editor late Pon. Rajagopal. There he made a contribution in writing and selecting inspiring articles in the spheres of politics, literature and arts and criticism. Ketharanathan’s keen interest and commitment in selecting and translating the insightful writings of eminent local and foreign thinkers, observers and analysts for Sunday Virakesari, at that time, was very much appreciated by the Tamil readers. He had a specific place among the Tamil writers and journalists who contributed immensely in making the Tamil newspaper readers familiar with the local and foreign alternative cinema.

Even after retirement in 2006, following a tenure of more than a quarter century, Ketharanathan has been continuously writing to newspapers and magazines on various subjects.

http://www.ft.lk/news/Lifetime-Achievement-Awards/56-691002

Journalist Gopalapillai Thiruketharanathan honoured with Lifetime Achievement Award
📰 🏆
Image may contain: 2 people Thiruketharanathan (G.T. Ketharanathan), a longtime professionally acclaimed journalist in the fields of modern literature, alternative cinema and translation has recently been honoured with Lifetime Achievement Award.

The Lifetime Achievement Award was presented at the 20th Special Media Awards ceremony of the Sri Lanka Press Institute and the Editors Guild of Sri Lanka held on 10th of December, 2019 at the
Mount Lavinia Hotel. The award was in recognition of G.T.Ketharanathan’s work on topics in politics, cinema, literature and arts and criticism.

His brother, renowned artist and educationist Gopalapillai Kailasanathan received the award on Ketharanathan’s behalf at the Mount Lavinia Hotel.

Ketharnathan’s cinema-related articles, reviews and translations are soon to be published as a book, his colleagues in Colombo said.

A brief profile note on G.T. Ketharanathan released to the media by Sri Lanka Press Institute and the Editors Guild of Sri Lanka is follows:

A native of Madduvil-North in Chavakacheri, Jaffna, Gopalapillai Thiruketharanathan, known to most as ‘Ketharanathan,’ after completing his education at Vaithiswara Vidyalayam, Jaffna started his career in journalism at Virakesari, newspaper during the early 1980s.

In Virakesari, at the inception, Ketharanathan worked as a clerk/translator for a short period, and then joined the editorial department as a sub-editor at the foreign news desk. In addition he was entrusted to handle local news as well. Since Ketharanathan was deeply interested in the fields of literature and arts, at the insistence of his superiors he was absorbed into the Sunday Virakesari section under the veteran editor late Pon. Rajagopal. There he made a contribution in writing and selecting inspiring articles in the spheres of politics, literature and arts and criticism.

Ketharanathan’s keen interest and commitment in selecting and translating the insightful writings of eminent local and foreign thinkers, observers and analysts for Sunday Virakesari, during that period, was very much appreciated by the readers.

Ketharanathan had a specific place among the Tamil writers and journalists who contributed immensely in making the readers of Virakesari newspaper familiar with the local and foreign alternative cinema.

After retirement in 2006, following a tenure of more than a quarter century, Ketharanathan has been continuously writing to newspapers and magazines on various subjects.

Lifetime Achievement Award was conferred upon four other professionals as well belonging to the Lake House, Sri Lanka Broadcasting Corporation and other Sri Lanka’s leading media houses
at the Sri Lanka Press Institute and the Editors Guild of Sri Lanka organized 20th annual ceremony.

They are veteran journalists Dudley Jansz, Thilakaratna Kuruvita Bandara, A.L.K.Perera and K.M.L.B. Senaratne.
🌈
(This article appears in the Monsoon Journal, print edition of January 2020)

மீராபாரதி

 

 


Leave a comment

Categories