என்னைப்பற்றி நானே…

நட்புடன் நண்பர்களுக்கு….
நான் உங்களைப் போன்ற ஒரு மனிதர்..
இந்த பிரபஞ்சத்தில் இயற்கையின் இயக்கத்தால் படைக்கப்பட்டேன்….
நீர் நிலம் வாயு சூரியன் என ஒவ்வொன்றும் என் உருவாக்கத்திற்கும்…
நான் வாழ்வதற்கும் பங்களிக்கின்றன…
பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாகவே வாழ்கின்றேன்…

ஆனால் நான் பிறந்த சமூகத்தின்…

சமூக கட்டுப்பாடுகளாலும் அடக்குமுறைகளாலும்

எனக்கும் இயற்கைக்குமான உறவு துண்டிக்கப்பட்டுவிட்டது….
மீண்டும் உறவை ஏற்படுத்த முயற்சிக்கின்றேன்…..

தியானம் அதற்கான பாதை….
பிரக்ஞை வழி காட்டும் ஒளி….

எனது சிறுவயதில் எனது தகப்பனார் இருந்த கம்யூனிஸ் கட்சியின் அங்கத்தவர்களின் செயற்பாடுகளை கண்டபோதும்

பதினாராம் வயதில் சூழ் நிலையால் கழக இயக்கத்தில் இணைந்து உணர்ச்சிபூர்வமாக செயற்பட்டபோதும்

பின் அன்றைய சுய அறிவில் ஈரோஸில் இணைந்து உணர்வுபூர்வமாக செயற்பட்டபோதும்

தொடர்ந்தும் செயற்படவேண்டும் என்ற ஊந்துதளினால் நவ சமசமாஜ கட்சியில் ஒருவருடம் இணைந்திருந்தபோதும்

இறுதியாக உயிர்ப்பு சஞ்சிகையின் பின்னணியில் உருவான தமிழீழ மக்கள் கட்சியில் பணியாற்றியபோதும்

மேலும் இவற்றைவிட நாடகக்குழுக்களில் நடிகராகவும்

சரிநிகர் பத்திரிகையில் பத்திரிகையாளராகவும் செயற்பட்ட காலங்களில் மட்டுமல்ல

இன்று சுய மாற்றத்திற்கான தேடலிலும் செயற்பாட்டிலும் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் பொழுதும்

அறிந்த கண்ட உணர்ந்த அனுபவித்த ஒரு உண்மை

இன்றைய பல பிரச்சனைகளுக்கு காரணமும் அடிப்படையும்

சமூக ொருளாதரா காரணங்களுக்கு அப்பால்

தனிநபர் சார்ந்த உறவுகள் மற்றும் உள மன பிரச்சனைகளே என்பது வெள்ளிப்படையானது.

இத் தனிநபர் பிரச்சனை என்னையும் உட்படுத்தியதே என்பதை புரிந்துகொள்வீர்கள்.

ஏனனில் ஒவ்வொரு தனிநபரும் மிகக் குழந்தைத்தனமாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் பக்குவமின்றி முதிர்ச்சியின்றி

குறிப்பாக பிரக்ஞை இல்லாது இயந்திரமாயமாக செயற்பட்டதை, செயற்படுவதை

கடந்தகால அனுபவங்களின் மூலம் அறிய, அனுபவிக்க, புரிந்து, உணரக் கூடியதாக இருந்தது என்றால் மிகையானதல்ல.

சமூகம் என்ற ஒன்று இல்லை அல்லது இது கற்பனையில் கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பு.

ஒரு சமூகம் எனக் கூறும் பொழுது தனி மனிதர்களின் சேர்ந்து உருவான ஒரு குழு அடையாளமே பதிலாக கிடைக்கின்றது.

ஆகவே சமூக மாற்றம் என்பது ஒவ்வொரு தனிமனிதர்களின் மாற்றம் (transform) மூலமே சாத்தியமானது.

இத் தனிமனிதர்கள் மாறாது (transform) சமூகம் என்றழைக்கப்படுவது மாறுவதற்கு சாத்தியமே இல்லை.

ஆகவே இன்றைய தேவை (தனி) மனித மாற்றமும் (transform) வளர்ச்சியுமே (evolution through consciousness).

ஏனனில் புதிய சமூக கட்டமைப்பை உருவாக்கவேண்டிய பொறுப்பு, பக்குவப்பட்ட முதிர்ச்சியடைந்த விழிப்புடன் 9awareness) இருக்கின்ற வளர்கின்ற பிரக்ஞையுடன் (conscious) செயற்படுகின்ற, மாற்றத்தை (transforming) நோக்கிச் செல்கின்ற,

ஒவ்வொரு தனி மனிதருடையதும் பொறுப்பு என்றால் மிகையல்ல.

தனி மனித மாற்றமும் வளர்ச்சியும் சாத்தியமானதே.

தியானம் என்ற விஞ்ஞான பயிற்சி முறைகளினாலான அனுபவத்தினால் ஆதி கால மனிதர்களால் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக மெருகூட்டப்பட்டு வளர்க்கப்பட்ட பயிற்சி முறைகளை பின்பற்றுவதன் மூலம் ஒவ்வொரு மனிதர்களும் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

இப் பயிற்சிகளினுடாக ஒவ்வொரு மனிதரும் தமது பிரக்ஞையை மேலும் மேலும் வளர்க்கலாம். ஏனனில் இன்றைய கால மனிதர்கள் தமது பிரச்சனைகளை முரண்பாடுகளை தீர்க்கமுடியாது இருப்பதற்கு தடையாக இருப்பது அவர்களது பிரக்ஞையின்மையே (unawareness).

ஒவ்வொரு மனிதரும் தாம் மாறுவதற்கும் (transform) ,

பிரக்ஞையில் வளர்ச்சியடைவதற்கும் (evolution through consciousness),

(மதம் சாராத) தியான வழிமுறைகளைப் பின்பற்றவேண்டியது இன்றியமையாததாகும்.

இதுவே நாம் எதிர்நோக்கும் சமூக மனித பிரச்சனைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் எதிர்வினையாற்றாது (reaction)

பொறுப்பான (response) முறையில் செயற்பட (act) வழியமைக்கும்.

சமூக மாற்றத்திற்கான செயற்பாடும் தனி மனித மாற்றத்திற்கான செயற்பாடும் சமாந்தரமாக நடைபெறவேண்டும்.

அரசியல் என் மூச்சாக இருந்தது…
ஒரு காலத்தில்….
சமூக மாற்றம் கனவாக இருக்கின்றது….
இன்றும்….
ஆகவே செயற்பாட்டிற்கான அதே அக்கறை இருக்கின்றது…
ஆனால் வழி என்ன….?
தேடுகின்றேன்….
என் தேடலையும் தேடும் நண்பர்களே…
எங்கள் தேடல்….
புதிய உறகளை வளர்க்கும்..
பழைய உறவுகளை புரிந்து கொள்ள முயற்சிக்கும்….
என்ற நம்பிக்கையில்….
நட்புடன்
மீராபாரதி
(ஆண்மையும் பெண்மையும்)

தியானப் பயிற்சி தொடர்பான வகுப்புகள் மற்றும் பற்றறைகள் தொடர்பான விபரங்களுக்கு…
Meerabharathy.com

ஆரம்பகால கட்டுரைகளுக்கு…Awakening Awareness

எனது பார்வையை மாற்றி, செழுமைப்படுத்தி, வளர்த்த…
நான் வாசித்த கட்டுரைகள்…
உங்கள் பார்வைக்கு…

Advertisements

Responses

  1. Love is great power, but it takes power to have pure love.

    மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
    மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
    மாற்கு 8:36,37 (Mark 8:36,37)


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: