Posted by: மீராபாரதி | December 29, 2021

பழங்குடி மக்கள்: சமூக இயக்கங்களும் தொடரும் போராட்டங்களும்

கனேடியப் பழங்குடி சமூகங்கள்: சமூக இயக்கங்களும் தொடரும் போராட்டங்களும்

Depiction of the Indigenous self as a spiritual web of relations Eagle... |  Download Scientific Diagram

சமூக உருவாக்கம் என்பது மக்கள் கூட்டத்தின் தேவைகளுக்கு அமைய அவர்களின் ஒருமைப்பாடான செயற்பாடுகளுடன் இயற்கையாக உருவாவது.  இவ்வாறான கூட்டு முயற்சிகளுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். பல சமூகங்கள் பலவகையான செயற்பாடுகளுடன் பல்வேறு தேவைகளுக்காக உருவாகின்றன. பழங்குடி சமூகங்கள் சமூக விழுமியங்களை ஆழமாகக் கடைபிடிப்பவை. சமூக உறவுகளையும் பரஸ்பரம் பங்களிப்பதையும் மதிப்பவை. பாரம்பரிய பழக்கவழக்கங்களையும் விதிகளையும் பின்பற்றுபவை. சமூகத்திலிருந்து பெறுவதைப் போல மீள சமூகத்திற்கு வழங்கவும் வேண்டும் என்ற பொறுப்புகளை ஏற்றுக்கொள்பவை. ஏற்கனவே பார்த்ததைப் போல பழங்குடி தேசங்கள் சிக்கலான அரசியல், பண்பாடுகள், ஆன்மீகம், சமூக முறைமைகள் என்பவற்றைக் கொண்டவை. இவை காலனியாதிக்கத்திற்கு முற்பட்டவை என்பதுடன் இவ்வாறான உரிமைகளையும் பொறுப்புகளையும் சுதந்திரங்களையும் ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டுள்ளது.

ஒரு தேசம் ஒரு சமூகமாகவும் இருக்கலாம். பல சமூகங்களை கொண்டதாகவும் இருக்கலாம். சில நேரங்களில் சில சமூகங்களுக்கு தேசங்களே இல்லாமலும் இருக்கலாம். பழங்குடி மக்களின் பாரம்பரியத்தில் பண்பாடு, குலம், மரபு, உறவுகள் போன்றவற்றின் அடிப்படையில் சமூக உருவாக்கங்கள் நடைபெற்றன. ஒரு சமூகம் என்பது கூட்டு நினைவுகளையும் வரலாறுகளையும் தொடர்ச்சியாக கொண்டிருப்பதாகும். இது இவர்களுக்குள் ஒரு ஒற்றுமையையும் உருவாக்குகின்றது. உதாரணமாக பழங்குடி மக்களின் புராணக் கதைகள் கூட இவர்களை சமூகமாக உணரவும் ஒன்றாக இருக்கவும் பங்களித்திருக்கின்றன. இவ்வாறான சமூக உருவாக்கங்கள் எல்லாம் ஒரு வகையான அடையாள உருவாக்கமுமாகும். ஆனால் காலனித்துவம் இவ்வாறான சமூக உறவுகளையும் முறைமைகளையும் அழித்தன.

நான்கு வகையான  பழங்குடி சிறு சமூகங்கள் உள்ளன. mythic, sited, temporary invented, மற்றும்  ongoing invented communities என்பவையாகும். mythic  சமூகம் பல்வேறுவகைப்பட்டவர்களாக இருப்பினும் ஒரேவகையான விழுமியங்களையும் அனுபவங்களையும் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். குறிப்பாக காலனித்துவத்தின் பின்பு எதிர்கொண்ட அடக்குமுறைகள், நிலங்களின் மீதான உரிமைகளை இழத்தல், மற்றும் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடுதல் என்பன இவர்களின் பொதுவான அனுபவமாக இருக்கின்றன. தாம் ஒரு சமூகமாக இருப்பதற்காக தமக்குள் இருக்கின்ற வேறுபாடுகளையும் தனித்தன்மைகளையும் இழந்து பொதுவான அடையாளத்துடன்  வாழ்கின்றனர். sited சமூகமானது ஒரு மக்கள் கூட்டமாகும். இவர்கள் தாம் வாழ்கின்ற இடத்தினால், ஒரே வகையான செயற்பாடுகளினால், அல்லது ஒரே நோக்கத்திற்காக செயற்படுதல் என்பவற்றால் ஒரு சமூகமாக இருக்கின்றார்கள்..  உதாரணமாக Nehiyawak , Inuit போன்ற சமூகங்களும் பழங்குடி மாணவர் அமைப்புகளும் அரசியல் செயற்பாடுகளினால் ஒன்றினைகின்றவர்களும் இந்த வகைக்குள் வருகின்றன. temporary invented சமூகங்கள் என்பது குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கூடி ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்துவனவாகும். ongoing invented communities என்பது பழங்குடி மக்களின் ;பல்வேறு நினைவுகளை தொடர்ச்சியாக மீள மீள முன்னெடுக்கும் நிகழ்வுகளால் உருவாவதாகும். உதாரணமாக உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைப்பு (TRC) தொடர்ச்சியாக உருவாக்குகின்ற வதிவிட பாடசாலைகளில் கற்ற மாணவர்களை ஒன்றினைப்பது போன்ற நிகழ்வுகளை குறிப்பிடலாம். இவ்வாறான சமூக செயற்பாடுகள் பழங்குடி மக்களுக்கு பல்வேறு வகைகளில் ஆரோக்கியமான பங்களிப்புகளை வழங்குகின்றன.

Missing and Murdered Indigenous Women & Girls (MMIWG)

சமூக நீதிக்கும் அரசியல் செயற்பாடுகளுக்குமான பல இயக்கங்கள் குறிப்பிட்ட நோக்கங்களை அடைவதற்காக இவ்வாறான சமூகங்களை உருவாக்குவதனுடாக பழங்குடி மக்களை ஒன்றினைக்கின்றன. உதாரணமாக கொலை செய்யப்பட்ட காணாமலாக்கப்பட்ட பழங்குடி பெண்கள், சிறுமிகள் மற்றும் இரு ஆன்மா மனிதர்கள் (MMIW) ஆகியோருக்கான நீதி வேண்டிய போராட்டமானது பழங்குடி மக்களை மட்டுமல்ல பல்வேறு மக்களையும் ஒன்றினைத்தது. இதுபோன்று பல வருடக்கணக்காக நடைபெற்ற போராட்டங்களும் சமூக இயக்கங்களை தோற்றுவித்தன. உதாரணமாக நிலத்தைப் பாதுகாப்பதற்கும் சுத்தமான தண்ணீருக்குமான போராட்டங்கள் சுற்றுச்சூழல் இயக்கங்களை தோற்றுவித்தன. சமூகம், சுற்றுச்சூழல் என்பவற்றின் மீதான அக்கறை மனிதர்களை ஒரு சமூகமாக ஒன்றினைக்கின்றன.

What we fought for in Oka we still fight for today | The Star

1961ம் ஆண்டு ஓகா நகரில் கொல்வ் மைதானம் அமைப்பதற்கு எதிராகப் பழங்குடி மக்கள் போராடினார்கள். ஆனால் தூரதிர்ஸ்டவசமா அதை நிறுத்த முடியவில்லை. ஆனால் மீண்டும் 1989ம் ஆண்டு கியூபெக் மாகாணத்திலுள்ள ஓகா நகர மேயர் கொல்ப் விளையாட்டுத் திடலை அபிவிருத்தி செய்வது தொடர்பான புதிய திட்டங்களை அறிவித்தார். பழங்குடி மக்கள் தம் பழைய நினைவுகளை மீள நினைத்து மீண்டும் எழுந்து போராடினார்கள். மொவாக் பழங்குடி மக்களுடன் கலந்தாலோசிக்காமல் இவர்களின் நிலத்திலையே கொல்ப் விளையாட்டுத் திடலை அபிவிருத்தி செய்வதுடன் குடியிருப்புகளையும் அமைப்பது தொடர்பான முடிவு எடுத்தமையே பழங்குடி மக்களைப் போராட நிர்ப்பந்தித்தது. குறிப்பிட்ட இடம் மொவாக் பழங்குடி மக்களின் மாயானமாகும். நீண்ட காலமாகவே இந்த நிலத்திற்கான உரிமையை கோரிப் போராடிக் கொண்டிருந்தனர். இதுவே இந்த முரண்பாட்டிற்கான ஊக்கியாக இருந்தது.ஆகவே 1990ம் ஆண்டு கியூபெக் நகரில் குறிப்பிட்ட இடத்தில் சிறிய போராட்டம் ஒன்றை ஆரம்பித்தார்கள். இச் சிறு போராட்டம் விரைவாக தேசியளவில் பரவி பிரதான இடத்தைப் பிடித்தது. இது மொவாக் பழங்குடி தேசத்தின் அங்கத்தவர்களுக்கும் கனேடிய இராணுவத்திற்கும் காவற்துறையினர்களும் இடையிலான ஆயுதரீதியான முரண்பாடாக வெளிப்பட்டது. இதனை ஓகா நெருக்கடி (Oka Crisis ) என அழைப்பார்கள். போராட்டம் பெரிதாக வளர்ந்து சென்றபோதும் அவர்கள் தம் திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்தார்கள். ஆகவே மொவாக் பழங்குடியினர் தம் குரலை மேலும் உயர்த்தியதுடன் குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் பாதைகளை மறித்துப் போராடினார்கள்.

Oka Crisis, 1990 | Warrior Publications

பழங்குடி மக்கள் தம் மண்ணில் கோடு ஒன்றைக் கிறீனார்கள். கோட்டின் ஒரு புறம் பழங்குடி மக்களும் இவர்களின் ஆதரவாளர்களும் மறுபுறம் காவற்துறை, இராணுவம் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களும் எனப் பிரிந்தனர். முரண்பாடுகளும் பதட்டமும் வளர்ந்தன. மேலும் பல பழங்குடி மக்களின் பிரிவினர்களும் போராட்டத்தில் கலந்து பங்களித்தனர். நீதிமன்றத்தினுடாக வீதித் தடையை நீக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. காவற்துறையினர் கண்ணீர்ப்புகை அடித்தும் கைக் குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை களைக்க முயற்சித்தனர். இறுதியாக இருதரப்பும் துப்பாக்கியால் சுடுபட  காவற்துறையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இதனால் காவற்துறை பின்வாங்கியது. இருப்பினும் பதட்டம் அதிகரித்தது. அருகிலிருந்த இன்னுமொரு பழங்குடி மக்கள் பிரிவினர் முக்கியமான பாலத்தை இடைமறித்தனர். இதனால் போக்குவரத்துகள் தடைபட உணவு விநியோகமும் தடைபட்டது. இதன் விளைவாக மக்கள் அரசாங்கத்தையும் காவற்துறையினரையும் இந்த முரண்பாடுகளுக்கு காரணம் என குற்றம் சாட்டினார்கள். இறுதியாக பேச்சுவார்த்தைகளினுடாக இந்தப் பாலமானது மீண்டும் திறக்கப்பட்டது. பழங்குடி மக்களுக்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. இது பழங்குடி மக்களின் நிலத்தையும் இவர்களின் உரிமைகளையும் மதிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பரவலாக ஏற்படுத்தியது. மேலும் பழங்குடி மக்களின் அவல நிலையையும் வெளிப்படுத்தியது. இறுதியாக கொல்ப் விளையாட்டுத் திடல் அபிவிருத்தி செய்கின்ற திட்டம் கைவிடப்பட்டது. மத்திய அரசாங்கம் குறிப்பிட்ட நிலத்தை வாங்கி பழங்குடி மக்களுக்கு மீளக் கையளிப்பதாக உறுதியளித்தது.

Some 30 years on, what have we learned from the Oka Crisis?

இப் போராட்டத்தை ஒழுங்கு செய்வதும் பரவலாக்குவதும் பழங்குடி மக்களின் தாய் வழி சமூக முறைமையில் தங்கியிருந்தது. ஒவ்வொரு குலத்தின் தாய்மார்களும் முக்கியமான முடிவுகளை எடுப்பதில் பொறுப்பாக நின்று செயற்பட்டமை இப் போராட்டத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணியாகும். மேலும் வேறு பழங்குடி சமூகங்கள் பங்குபற்றியதுடன் பழங்குடி வீரர்கள் முன்னணியில் இருந்தமையால் காவற்துறையினரால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. இப் போராட்டமானது வெறுமனே கொல்ப் விளையாட்டுத் திடலுடன் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. மாறாக பழங்குடி மக்களின் நில உரிமையுடன் தொடர்புபட்டதுடன் கால காலமாக பழங்குடி மக்கள் ஏமாற்றுப்பட்டு புறக்கணிக்கப்பட்டு வந்தவற்றின் விளைவுகளே இந்தப் போராட்டமாகும்.

Socialist Fightback at Concordia and McGill - During the Oka Crisis of  1990, the Canadian government did not hesitate to deploy the army against  Mohawk people to secure the construction of a

இந்தவகையில் அடிமட்டத்திலிருந்து எழுகின்ற இயக்கங்களும் போராட்ட சமூகங்களை உருவாக்குகின்றன. இவ்வாறு உள்ளூரில் ஆரம்பிக்கப்படுகின்றன இயக்கங்கள் வளர்ந்து தேசியளவிலும் சர்வதேசளவிலும் வளர்ந்துள்ளன. சமூக அரசியல் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான உள்ளூர் செயற்பாடுகள் பழங்குடி மக்களின் பண்பாடுகளின் அடிப்படையிலும் சட்ட மரபுகளுக்கும் உட்பட்டே முன்னெடுக்கப்படுகின்றன. 2012ம் ஆண்டு Apache Corporation நிறுவனம் பழங்குடிகளின் நிலத்தினுடாக எண்ணைக் குழாய்களை Pacific Trails Pipeline கொண்டு செல்ல முற்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பழங்குடி மக்களின் தலைவர் (Chief Toghestiy of the Wet’suwet’en ) இச் செயற்பாட்டை முன்னெடுத்த நிறுவனத்தின் (Can-Am Geomatics Company) பொறுப்பாளரிடம் கழுகின் இறகு ஒன்றைக் கொடுத்து இந்த நிலத்தை விட்டுச் செல்லும்மாறு கோரினார். இவ்வாறு கழுகின் இறகு வழங்குவது என்பது பழங்குடி மக்களின் சட்டத்திற்கு ஏற்ப அமைதியான முறையில் எச்சரிக்கை செய்கின்ற பழக்கமாகும். மேலும் பழங்குடிகளின் சட்டத்திற்கு ஏற்ப துணைவியாரின் நிலங்களைப் பாதுகாப்பது துணைவர்களின் பொறுப்பாகும். ஏனனில் இந்தப் பிரதேசமானது இறைமையுள்ள நிலமாகும். இவ்வாறுதான் அடிமட்டங்களிலிருந்து தமது எதிர்ப்பு செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றார்கள். இப் பழங்குடி தேசத்தைச் சேர்ந்த ஐந்து குலங்களாக இருக்கின்ற மக்கள் தமது எதிர்கால தலைமுறையினர் ஆரோக்கியமாகவும் தன்னிறைவாகவும் வாழ்வதற்கு இந்த நிலங்களைப் பாதுகாக்க உறுதிபூண்டனர். நிலத்தைக் கண்காணிப்பதற்கான சமூகம் ஒன்றையும் உருவாக்கினார்கள். இவ்வாறான செயற்பாடுகளினுடாக மேற்குறிப்பிட்ட திட்டம் முன்னெடுக்கப்படுவதை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் இப் பிரதேசத்தில் இந்த முயற்சி தொடராமல் இருக்க தந்திரோபாய அடிப்படையில் தமது சமூகம் தொடர்ச்சியாக இங்கு இருப்பதற்கு ஏற்றவகையில் உருவாக்கினார்கள். உறுதி செய்தார்கள்.

Pipeline opposition takes on Pacific Trails natural gas project | Vancouver  Observer

பழங்குடி மக்களின் நிலத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட  Idle No More movement இயக்கமும் நல்லதொரு உதாரணமாகும். 2012ம் ஆண்டு சஸ்கச்சுவானைச் சேர்ந்த Jessica Gordon, Sheelah McLean, Sylvia McAdam, and Nina Wilson நான்கு பெண்களால் Idle No More என்ற போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.  அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட மசோதா  Bill C-45வில் பல பிரச்சனைக்குரிய கூறுகளை எதிர்ப்பதற்காக இப் போராட்டத்தை ஆரம்பித்தனர். அதாவது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்புகளுக்குள்  பழங்குடி மக்களின் இறையாண்மையும் உரிமைகளும் தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக தாம் ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டும் என இவர்கள் சிந்தித்ததன் விளைவே இந்தப் போராட்டமாகும். இவர்களைப் பொறுத்தவரை பழங்குடி மக்களின் நிலமானது பாதுகாக்கப்பட வேண்டும். தாம் இப் போராட்டத்தை முன்னெடுக்காவிட்டால் விரைவில் பழங்குடி மக்களுக்கு எந்த நிலமும் இல்லாமல் போகும் நிலைவரலாம் என உணர்ந்ததன் விளைவாக ஒரு நிலைப்பாட்டை எடுத்தனர். மேலும் இவர்கள் பழங்குடி மக்களுக்கும் பழங்குடி அல்லாத மக்களுக்கும் இடையிலான உறவையும் மறுசீரமைக்க விரும்பினர். தம் போராட்டத்தினுடாக அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்க முனைந்தனர். நாடுதழுவிய ரீதியில் நிலவுகின்ற சமத்துவமின்மை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முயற்சித்தனர். மிக முக்கியமாக தமது பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து நிலைநிறுத்திப் பலப்படுத்த வேண்டும் என உணர்ந்தார்கள். இந்தப் போராட்டமானது தேசத்தையும் கடந்து சர்வதேசளவில் ஆதரவைப் பெற்று பெரும் சமூக இயக்கமாக செயற்பட்டது. இதற்கு சமூக ஊடகங்கள், வீதித்தடைகள், வட்டவடிவிலான நடனங்கள் என பல வழிகளில்  ஆதரவும் பங்களிப்பும் கிடைத்தன.

மசோதாவை (Bill C-45) மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒரு பிரச்சனையும் இல்லாததுபோல தோன்றும். ஆனால் குறிப்பான திருத்தங்களை நான்கு பெண்களும் ஆழமாக கவனித்தமையின் விளைவே Idle No More என்ற போராட்டமாகும். முதலாவது இந்தியன் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்ற முன்மொழிவு. இவ்வாறு பழங்குடி மக்களை கலந்து ஆலோசிக்காமல் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் மாற்றங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற ஒப்பந்தங்களையும் பழங்குடி மக்களின் உரிமைகளையும் பாதிப்பதுடன் பழங்குடி மக்களுக்கு பல ஆபத்துக்களையும் ஏற்படுத்தலாம் என்பதே இவர்களது புரிதல். இரண்டாவது பெற்றோலிய குழாய்களையும் மின்சார கம்பிகளையும் நிறுவுகின்ற திட்டங்களின் போது இவை எந்தவிதமான பாதிப்புகளையும் அழிவையும் நிலத்திற்கும் நீர்ப் பாதைகளுக்கும் ஏற்படுத்தாது என்ற ஆதாரங்களை பழங்குடி மக்களுக்கு காண்பிக்கத் தேவையில்லை என்ற முன்மொழிவு. இவ்வாறான மாற்றமானது கனடாவிலுள்ள 99 வீதமான ஏரிகளையும் ஆறுகளையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்காது மாசுபடுத்தப்படலாம் என்பதே இவர்களின் அக்கறைக்குரிய விடயமாகும். மூன்றாவது சுற்றுச்சூழல் மதிப்பீடுகள் தேவைப்படுகின்ற பல திட்டங்களை குறைத்து மதிப்பீடுகளை விரைவாக பெறக்கூடிய சில திட்டங்களை மட்டும் முன்னெடுப்பது. இதனுடாக சுற்றுச்சூழல் தொடர்பான அக்கறையின்மையை அரசாங்கம் வெளிப்படுத்தியது. இவ்வாறு அரசாங்கங்கள் தொடர்ச்சியாக கொண்டுவருகின்ற சட்ட அல்லது கொள்கை மாற்றங்கள் திருத்தங்கள் எல்லாம் பழங்குடி மக்களின் உரிமைகள் எந்தவிதமான அர்த்தமோ பெறுமதியோ அற்றவை என்பதையே மீள மீள உறுதி செய்கின்றன. ஆகவே  இவ்வாறான செயற்பாடுகள் அனைத்து பழங்குடி மக்களின் நிலங்களையும் சுற்றுச் சூழலையும் குறிப்பிடளவில் பாதிக்கும் என்பதே இவர்களின் அக்கறைக்குரிய விடயங்களாகும். ஆகவே மற்றவர்கள் தம் மீது சட்டங்களை இயற்றி தம்மைக் கட்டுப்படுத்துவதை இவர்களால் கைகட்டி சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. இவர்கள் எழும்பி நின்று குரல் கொடுத்தார்கள். இவர்களுடன் அனைவரும் இணைந்து குரல் கொடுத்தார்கள். தேசியளவில் இவர்களின் குரல்கள் ஒலித்தன. அனைவரினது பார்வைகளும் இவர்களின் பக்கம் திரும்பியது. இதனால் பழங்குடி மக்களின் உரிமைகள் மட்டுமல்ல கனடாவின் இயற்கை வளமும் பாதுகாக்கப்பட்டன. இனியும் சும்மா பார்த்துக் கொண்டு நிற்க மாட்டோம்.

Idle No More: From Grassroots to Global Movement | Occupy.com

காலனித்துவத்தின் பின்பு பழங்குடி மக்களின் கலை வடிவங்கள் பல அழிக்கப்பட்டதுடன் களவாடப்பட்டன தவறாக சித்தரிக்கப்பட்டன. விற்கப்பட்டன. மேலும் ஐரோப்பிய கலைகளுடன் ஒப்பிடும் போது இவை பழமையான நாகரிமற்ற வளர்ச்சியற்ற வடிவங்கள் என ஒதுக்கப்பட்டன. இதனால் பழங்குடி மக்களின் கலைகள் பல மாற்றங்களையும் கண்டன. பழங்குடி மக்களுக்கான முன்னாள் அமைச்சரும் பின்பு பிரதமராக இருந்தவருமான ஜோன் கிரிச்சியானின் வெள்ளை அறிக்கையில் பழங்குடி மக்களின் கலைகள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டியவை என்ற கருத்துக்கு எதிராக பழங்குடி கலைஞர்கள் ஒன்றுதிரண்டு எதிர்ப்பைக் காட்டினார்கள்.  Professional Native Indian Artists Incorporated (PNIAI) என்ற அமைப்பை உருவாக்கிய பழங்குடி கலைஞர்கள் இதற்கு எதிராகத் திரண்டார்கள். மேலும் பழங்குடி கலைஞர்களின் சம உரிமைகளுக்காகவும் குரல் எழுப்பினார்கள்.  மொன்றியலில் நடைபெற்று எக்ஸ்போ 67 என்ற கண்காட்சி நிகழ்வில் பழங்குடி கலைஞர்கள் இரண்டாம் தரமாக நடாத்தப்பட்டமைக்கும் இவர்களது படைப்புகளுக்கு சம உரிமை வழங்காமைக்கு எதிராக தமது கண்டங்களை தெரிவித்தார்கள். மேலும் இக் கண்காட்சியில் மேலாதிக்கம் செலுத்திய காலனித்துவ கருத்துகளுக்கும் இருஎதிர்பாலுறவு ஆணாதிக்க கருத்துகளுக்கு எதிராகவும் தமது விமர்சனங்களை முன்வைத்து அதன் போக்கை மாற்றக் காரணமாக இருந்தார்கள்.

Professional Native Indian Artists Inc.

பழங்குடி மக்களின் கலைச் செயற்பாடுகளும் இவர்களின் ஒர் போராட்ட வடிவமே என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. பல பழங்குடி மக்கள் நிரந்தரமாக ஒரிடத்தில் தங்குபவர்கள் அல்ல. ஆகவே நிரந்தரமான கலைச் செயற்பாடுகள் அரிதாகவே காணப்படுகின்றன. (மேற்குக்கரையோரங்களில் வாழ்பவர்கள் விதிவிலக்கானவர்கள்.) இருப்பினும் இவர்களும் கலைச் செயற்பாடுகளை படைத்துள்ளார்கள். இவர்களின் கலைச் செயற்பாடுகள் சிறியதாக பயன்படுத்தக் கூடியதாக இருந்தன. ஆடைகளில் காலணிகளில் தாம் பயன்படுத்தும் ஆயுதங்களில் சிறு சிறு கலைத்துவ வேலைப்பாடுகளை செய்தார்கள். குறிப்பாக காலணிகளில் பயன்படுத்தப்பட்ட சில வடிவங்கள் குறிப்பிட்ட குழுக்களுக்கு குலங்களுக்கு குடும்பங்களுக்கு உரியனவாக அவர்களின் நம்பிக்கைகள் பண்பாடுகள் என்பவற்றின் அடிப்படையில் இருந்தன. மேலும் ஒருவரின் ஆன்மாவை ஆன்மீகத்தை வெளிப்படுத்துவனவாகவும் இருக்கின்றன. பழங்குடி மக்களின் கலைகள் அறிவைப் பகிர்கின்ற தம்மை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஆற்றல்களைத் தம்முள் கொண்டிருக்கின்றன. இவர்களின் சமகால கலைகள் கடந்த காலமானது எப்போதும் நிகழ்காலமாக தாம் உணர்ந்து கொள்ளக்கூடிய வகையில் உள்ளன. பழக்குடி மக்கள் இன்று புதிய பொருட்களுடன் புதிய முறைகளின் தம் கலைத்துவ செயற்பாடுகளை முன்னெடுத்தபோதும் தமது பண்பாட்டையும் ஆன்மீகத்தையும் வரலாற்று அறிவையும் பகிர்பவையாக இருக்கின்றன. ஆரம்பக் காலங்களிலிருந்து இன்றுவரை இவர்கள் முத்துக்களை அல்லது முள்ளம்பன்டிகளின் இறகுகளை இவ்வாறான செயற்பாடுகளுக்குப் பெரும்பாலும் பயன்படுத்தினர். குறிப்பாக முள்ளம்பன்டிகளின் இறகுகளில் கலை வேலைப்பாடுகளைச் செய்வதற்கு நீண்ட நேரங்களை செலவு செய்யவும் அதிக பொறுமையும் வேண்டும். மேலும் இவ்வாறான செயற்பாடுகள் இவர்களுக்கு இடையிலான தொடர்பாடல்களுக்கும் கதைகளைக் கூறுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.  அடிப்படையில் இது ஒரு கூட்டுச் செயற்பாடாக பாரம்பரியமாக தொடர்கின்றது.

7: Professional Native Indian Artists Inc. Art Exhibit - First Nations Drum  Newspaper

நதியா மறியா Nadia Myre என்ற கலைஞர் மத்திய அரசாங்கத்தின் 56 பக்கங்கள் கொண்ட இந்தியன் சட்டத்தை எவ்வாறு கலை வடிவமாக்கினார் என்பதை அறிவது அவசியமானது. ஒரு கலை வடிவம் எவ்வாறு போராட்ட வடிவமாகவும் மாறுகின்றது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமாகும். இச் சட்டத்தில் ஒவ்வொரு சொற்களிலுமுள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு முத்து என்ற அடிப்படையில் உருவாக்கினார். சட்டத்திலுள்ள பழங்குடி மக்களுக்கு எதிரான விடயங்களை சிகப்பு முத்துகளாலும் மற்றவற்றை வெள்ளை முத்துக்களாலும் ஒரு துணியில் வடிவமைத்தார். நான்கு வருடங்களில் 200க்கு மேற்பட்ட நண்பர்கள் உறவினர்கள் செயற்பாட்டாளர்களின் கூட்டுப் பங்களிப்புடன் இதை நிறைவேற்றினார். இச் செயற்பாடானது காலனித்துவத்தின் யதார்த்தத்தையும் இந்த சட்டங்கள் பழங்குடி மக்களுக்கு ஏற்படுத்திய பாதிப்புகளையும் கதைக்கின்றது.

1876 - Indian Act by Nadia Myre | 150 years 150 works

காணாமலாக்கப்பட்ட கொல்லப்பட்ட பழங்குடி பெண்களை நினைவு கூருமுகமாகவும் கலைப்படைப்புகள் படைக்கப்பட்டன. இவ்வாறுதான் எங்கள் சகோதரிகளுடன் நடத்தல் Walking With Our Sisters 15 (WWOS) என்ற நினைவுகூரும் கலைப் படைப்பு உருவாக்கம் பெற்றது. இவ்வாறான கலைச் செயற்பாடுகள் சமூகத்தின் பலத்தை சக்தியை வெளிப்படுத்தும்  படைப்புகளாகவும் இருக்கின்றன. இவ்வாறுதான் பழங்குடிகளின் கலைச் செயற்பாடானது தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஒரு கலை வடிவமாக மலர்ந்தது. போராட்டம் தொடர்கின்றது.

Walking With Our Sisters series | Algoma University Archives

மீராபாரதி
அல்பேட்டா பல்கலைக்கழத்தின் பழங்குடி மக்களின் பீடம் நடாத்தும் பழங்குடி மக்கள் தொடர்பான கற்கை நெறியின் 11ம் 12ம்  பாடத்திட்டத்தை தழுவி மொழிபெயர்ப்பதனுடாக எழுதியதாகும்.

Indian Act - Myre, Nadia | Collections | MNBAQ


படங்கள் கூகுள்
உசாத்துணைகள் (பாடத்திட்டத்திலிருந்து)

Barnes, Mich. 2017. ‘Daphne Odjig – Biography’. Red Kettle: Art & Collectibles.
http://www.redkettle.com/biographies/daphne-odjig.htm.
Bear Robe, Amber-Dawn. 2006. ‘Rebecca Belmore’s Performance of Photography’.
Aboriginal Curatorial Collective/Collectif Des Conservateurs Autochtone
(ACC/CCA). http://www.aboriginalcuratorialcollective.org/features/bearrobe.html.
Congdon, Kristin G., and Kara Kelley Hallmark. 2012. American Folk Art: A Regional
Reference. Santa Barbara, CA: ABC-CLIO.
Dubin, Lois Sherr. 2010. The Worldwide History of Beads: Ancient, Ethnic,
Contemporary. London: Thames & Hudson.
Dubin, Lois Sherr and Togashi. 1987. The history of beads from 30,000 BC to the
present. New York: Harry N. Abrams. Inc.
Freeman, Lucas. 2013. ‘Modest Livelihood: Brian Jungen and Duane Linklater’. Fuse,
June 19. http://fusemagazine.org/2013/06/36-3_freeman.
Friesen, John W. 2006. Canadian Aboriginal Art and Spirituality: A Vital Link. Calgary,
AB: Detselig Enterprises.
Gosselin, Viviane, and Phaedra Livingstone. 2016. Museums and the Past:
Constructing Historical Consciousness. Vancouver, BC: UBC Press.
Grunt Gallery. n.d. “Marianne Nicolson: Cliff Painting”. The Medicine Project (Website)
http://www.themedicineproject.com/marianne-nicolson.html
Hetherington, Michelle. 2009. Discovering Cook’s Collections. Canberra, AU: National
Museum of Australia Press.
Jeffries, Catronia. 2013. ‘Brian Jungen & Duane Linklater: Modest Livelihood’. Catronia
Jeffries. http://catrionajeffries.com/exhibitions/past/modest-livelihood/.
Jernigan, E. W. 1978. Jewelry of the prehistoric Southwest. Santa Fe, NM: School of
American Research.
Lavallee, Michelle. 2014a. “7: Professional Native Indian Artists Inc” In 7: Professional
Native Indian Artists Inc. Group of Seven: Janvier, Ray, Morrisseau, Odjig,
Sanchez, Beardy, Cobiness edited by Michelle Lavallee, 45–69. Regina,
SK: Mackenzie Art Gallery
23
———. 2014b. “Daphne Odjig”. In 7: Professional Native Indian Artists Inc. Group of
Seven: Janvier, Ray, Morrisseau, Odjig, Sanchez, Beardy, Cobiness edited by
Michelle Lavallee, 73–79. Regina, SK: Mackenzie Art Gallery
Lonetree, Amy. 2012. Decolonizing Museums: Representing Native America in National
and Tribal Museums. Chapel Hill, NC: University of North Carolina Press.
Nadia, Myre. 2017. ‘ART’. Nadia Myre. http://www.nadiamyre.net/.
Orchard, William C. 1984. The Technique of Porcupine-Quill Decoration among the
North American Indians. Ogden, UT: Eagles View Publishing.
Phillips, Ruth B. 2011. Museum Pieces: Toward the Indigenization of Canadian
Museums. Montreal, QC: McGill-Queen’s University Press.
Phillips, Ruth B., and Sherry Brydon. 2011. “‘Arrow of Truth’: The Indians of Canada
Pavilion at Expo 67.” In Museum Pieces: Toward the Indigenization of Canadian
Museums edited by Ruth B. Phillips, 27–47. Montreal, QC: McGill-Queen’s
University Press.
Sandals, Leah. ‘Rebecca Belmore to Make Major Human Rights Museum Piece’,
Canadian Art, January 24, 2014. http://canadianart.ca/news/rebecca-belmore-2/
Stonechild, Blair. 2011. The New Buffalo: The Struggle for Aboriginal Post-Secondary
Education. Winnipeg, MB: University of Manitoba Press.
Teri, Greeves. 2008. Great Lake Girls. Glass beads, bugle beads, Swarovski crystals,
sterling silver stamped conchae, spiny oyster shell cabochons, canvas highheeled sneakers.
https://www.brooklynmuseum.org/opencollection/objects/186543.
———. 2016. ‘Teri Greeves Beadwork’. http://terigreevesbeadwork.com/.
Tuhiwai Smith, Linda. 1999. Decolonizing methodologies: research and indigenous
peoples. London: Zed Books.
‘Walking with Our Sisters’. 2017. Walking With Our Sisters.
http://walkingwithoursisters.ca/.
Whitehead, Ruth Holmes, and Museum Nova Scotia. 1982. Micmac Quillwork: Micmac
Indian Techniques of Porcupine Quill Decoration, 1600-1950. Halifax, NS: Nova
Scotia Museum.
Whyte, Murray. 2013. ‘Two Artists Go Moose Hunting: Modest Livelihood at the AGO |
Toronto Star’. Thestar.com. October 26.
https://www.thestar.com/entertainment/visualarts/2013/10/26/two_artists_go_mo
ose_hunting_modest_livelihood_at_the_ago.html


Leave a comment

Categories