Posted by: மீராபாரதி | November 3, 2021

பழங்குடிகள்: சட்ட மரபுகளும் காலனித்துவ சட்டங்களும் – பகுதி 4

கனேடியப் பழங்குடிகள்: புதிய விதிகள் புதிய விளையாட்டுகள் – பகுதி 4

Historical ban on potlatch ceremony has lingering effects for Indigenous  women, author says | CBC News

பழங்குடி மக்களிடம் அவர்களது சூழலில் அமைதியாகவும் சமாதானமாகவும் இயற்கையுடன் ஒன்றினைந்து வாழ்வதற்கு ஏற்ப விதிகைள உருவாக்க ஆளும் குழு ஒன்றிருந்தது. இருப்பினும் ஒவ்வொரு பழங்குடி மக்கள் குழுவும் தமது சட்ட மரபுகளில் பல வேறுபாடுகளைக் கொண்டிருந்தன. இதற்கு ஒவ்வொரு குழுவினதும் மரபு வழிவந்த கதைகள், வரலாறுகள், சடங்குகள், கொண்டாட்டங்கள், உலகப் பார்வைகள் என்பன காரணமாக இருந்தன. பழங்குடி மக்கள் தங்களுக்கிடையிலான, தங்களுடைய சுற்றுச் சூழலுடனான, உறவுகளின் அடிப்படையிலையே   வழிநடாத்தப்படுகின்றார்கள். இவர்களது சட்ட மரபானது, இயற்கை சூழலின் விதிகள் தொடர்பான வரலாற்றுரீதியான பார்வை, சமூகத்திலும் அரசியலிலும் சட்டத்தின் பாத்திரம், ஒழுங்கான நிறுவன அமைப்பும் அதன் சட்டரீதியான செயற்பாடும், சட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி உருவாக்க, பிரயோகிக்க, கற்க, கற்பிக்க வேண்டும் என்பவற்றால் ஆழமாக வேரூண்டப்பட்டதாகும்.

Potlatch broken up by police 100 years ago remembered by 'Namagis chief

பழங்குடி தேசங்கள் ஒரேவிதமான நிர்வாகமுறையை செயற்படுத்த சகல குழுக்களுடனும் சமூகங்களுடனும் நெருக்கமான உறவுகளைப் பேணி செயற்பாட்டார்கள். உதாரணமாக தத்தெடுப்பது, கலியாணம் போன்றவற்றை நடைமுறைப்படுத்த சட்டங்களை ஏற்படுத்த வேண்டியிருந்தது. சமூக அங்கத்தவர்கள் தாக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கவும், அமைதியான வழிகளில் முரண்பாடுகளைத் தீர்க்கவும், ஒழுங்குமுறையைப் பேணவும் சட்டங்களை உருவாக்க வேண்டியிருந்தது. இந்த சட்டமுறைமைகள் பெரும்பாலும் எழுதப்படாமல் இருந்தபோதும், நிகழ்வுகளில், பாட்டுக்களில், ஆடல்களில், வாய்மொழி மூல உரையாடல்களில் எனப் பல வழிகளில் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு வந்துள்ளன.

2020 National Indigenous Peoples Day Celebrations | Together 4 Health

பழங்குடி மக்களின் சட்டங்கள் அவர்களது உலகப்பார்வையிலும் நம்பிக்கைகளின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டது. பொதுவாக கூறினால் மனிதர்களுக்கிடையிலும் மனிதர்கள் அல்லாதவைகளுடனும் நல்லூறைவைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டது எனலாம். இயற்கையின் சூழற்சியை பின்பற்றுவதையும் சமூகத்தில் நல்லிணக்கத்தை பேணுவதையும் நல் வாழ்விற்கான நோக்கமாக புரிந்துகொள்ளப்பட்டன. இவை பழமைவாத சிந்தனையாக கருதப்படலாம். அதேநேரம் தம் உலகப் பார்வைகளிலிருந்து பரந்த கோட்பாடுகளையும் கொள்கைகளையும் உருவாகினர். அதிலொன்றுதான் கூட்டுறவுக்கு முன்னுரிமை வழங்கும் கோட்பாடாகும். இவை குறிப்பிட்ட சம்பவங்களை அல்லது குறிப்பிட்ட சட்ட மரபுகளை, விதிகளை வரையறை செய்யப் பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக வளங்களை முகாமைத்துவம் செய்வதற்கு அல்லது முரண்பாடுகளை சீர்செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டன. ஏனெனில் கூட்டுறவு என்பது முக்கியமானது. தனிநபர்கள் தம் நல்வாழ்வு பாதிக்கப்பட்டாலும் இவ்வாறு சுயமாகச் செயற்பட முனைகின்றார்கள். மேலிருந்து அதிகாரம் செய்வதற்குப் பதிலாக அனைவரும் இணைந்து சம நிலையில் தீர்வு காணும் முறைகளைப் பின்பற்றுகின்றார்கள்.

Ghost Dance, Amerindian Rebellion and Religious Ritual

பழங்குடி மக்களின் சட்டங்கள் என்பவை அனைத்து மக்களின் நன்மைக்காகவும் முழுமையான தீர்வை நோக்கியும் சமூக விழுமியங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. இச் சட்டங்களை மீறுவதனால் ஏற்படும் விளைவுகள், குறிப்பிட்ட சூழ்நிலைகளிலும் ஒவ்வொரு பழங்குடி சமூகங்களினது சட்டங்களுக்கும் அமைய பல விதங்களில் வேறுபட்டன. இருப்பினும் பெரும்பாலும் இவர்களின் சட்டங்கள் தண்டனைகளையும் முரண்பாடுகளையும்  தவிர்த்தன. ஆகவே பரஸ்பர புரிந்துணர்வையும் மரியாதையையும் முன்னிறுத்தும்  மறுசீரமைப்பு  அணுகுமுறைகளை உள்ளடக்கியதாக இருந்தன. உதாரணமாக சில பழங்குடி சமூகங்கள் குற்றவாளியாக கருதப்படுகின்றவருடனும் சமூகத்தில் இருக்கும் முதியவர்கள் அல்லது மரியாதைக்குரிய அங்கத்தவர்கள் உளவியல் ஆற்றுப்படுத்தல் வழிமுறையில் உரையாடுவார்கள். இது பிரச்சனையைத் தீர்க்காதபோது அனைத்து சமூகமும் ஒன்றினைத்து அவரை வெட்கப்பட வைப்பதனுடாக அவர் நல்ல மனிதராக நடப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். இவற்றுக்குப் பின்பும் இவரது குற்றங்கள் தொடருமாயின் இறுதியாக ஆனால் அரிதாக சமூகத்தை விட்டு வெளியேற்றும் முடிவை எடுப்பார்கள். இதனால் ஏற்படும் தனிமையும் சமூகத்தின் ஆதரவின்மையும் ஒருவகையில் குற்றவாளிக்கான மரணதண்டனையாகவே கருதப்படுகின்றது.

Young couple strives to keep indigenous wedding traditions alive | CBC News

மனிதர்களைப் போல் பூமியிலுள்ளஅனைத்து உயிரினங்களும் முக்கியமானவை எனவும் மற்றவற்றின் மீது கட்டுப்பாட்டையும் அதிகாரத்தையும் பிரயோகிப்பதற்குப் பதிலாக அவற்றுடன் எப்படி கூடி வாழ்வது என்ற உலகப் பண்பாட்டுப் பார்வையின்  அடிப்படையிலையே பழங்குடி சமூகங்களின் சட்டங்கள் அமைந்துள்ளன. மேலும் கால சூழல்களுக்கும் அதன் சவால்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப புதிதாகவும் சீர்த்திருத்தப்பட்டும் பழங்குடி சமூகங்களின் சட்டங்கள் காலத்திற்கு காலம் வளர்ச்சியடைந்து வந்துள்ளன. இப்பொழுதுகூட தம் சமூகங்களை வழிநடாத்துவதற்கு பழங்குடி சட்ட மரபுகள் முக்கியமான கூறுகளாக இருக்கின்றன. இவ்வாறான மரபார்ந்த சட்ட நடைமுறைகள் தொடர்ந்தும் பின்பற்றப்படுகின்றன.

Indigenous peoples suffer from the most adverse impacts of climate change,  says Victoria Tauli-Corpuz | EnviroNews.ph Philippine EnviroNews

இந்தடிப்படைகளில்தான் முதன் முதலாக ஐரோப்பியர்கள் வந்தபோது தம்மிடம் ஏற்கனவே இருந்த சட்ட மரபுகளுக்கும் சட்டங்களுக்கும் ஏற்ப அவர்களுடன் அறிமுகம் செய்து பின்பற்றினார்கள்.  இதனால் முதற்கட்டத் தொடர்பில் பிரிட்டிஸ், பிரான்ஸ். ஒல்லாந்து குடியேற்றக்காரர்கள் பழங்குடி மக்களின் நிகழ்வுகள், சடங்குகள், சட்டங்கள், பழக்கவழக்கங்கள் என்பவற்றைப் பின்பற்றினார்கள். முதலாவது அமைதிக்கும் நட்புக்குமான ஒப்பந்தத்திற்கான (Peace and Friendship treaty) பேச்சுவார்த்தைகளின்போதும் பின்பற்றினார்கள்.

Shining a Light on the Peace and Friendship Treaties of 1760 and 1761 | The  Loyalist Collection

18ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உருவான நாகரிகம் எனும் கோட்பாடானது சிக்கலான மத்தியத்துவ அமைப்பைக் கொண்டதுடன் சுற்றுச்சூழலுடனான தம் உறவை முறித்துக் கொள்ள ஐரோப்பியர்களுக்கு வழிகாட்டியது. ஐரோப்பியர்களைப் பொறுத்தவரை ‘நாகரிக மனிதன்” என்பவன் தம் பண்பாட்டின் அடையாளமாகும். இது கிரிஸ்தவத்தையும் தொழிற்நூட்பத்தையும்  நிரந்தரமான வாழ்விடங்களையும் தன்னகத்தே கொண்டதாகும். ஆகவே மத்தியத்துவமற்ற ஆதி சமூகங்களை நாகரிகமற்ற பாமர சமூகங்கள் எனக் குடியேறிய ஐரோப்பியர்கள் கருதினார்கள். இதனுடாக நாகரிகம் எனும் கோட்பாடு படிநிலை அதிகாரத்துவ இனவாதக் கூறுகளையும் தன்னகத்தே உள்வாங்கிக்கொண்டது. இது அறிவாளிகள் எனக் கருதப்படுகின்ற புலமைசார் துறையினர்களாலும் பயணிகள் எனக் கூறுபர்களாலும் பொதுவான கருத்தாக பரவலாகப் பரப்பப்பட்டது.

Indigenous Peoples in Canadian Law | The Canadian Encyclopedia

Aboriginal law and Indigenous laws இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு என்பது முதலாவது எவ்வாறு கனேடிய அரசு பழங்குடி மக்களுடன் ஊடாடுகின்றது  என்பதற்கான வழிமுறைகளைக் கொண்டது. இரண்டாவது ஐரோப்பியர் கள் வருவதற்கு முன்பு பழங்குடி மக்களிடமிருந்த சட்டவரையறைகளாகும். குடியேறியவர்களிடம் மேலிருந்து கீழ் நோக்கி அதிகாரத்தின் மூலம்  செய்கின்ற முறைமை காணப்பட்டது. இதன் விளைவாக கனேடிய சட்டங்களை அமுல்படுத்தியபோது,  பழங்குடிகளின் சட்ட மரபுகளிலும் சம்பிரதாயங்களிலும் அவை அழிவை ஏற்படுத்தின. கனடாவின் பொதுவானதும் சிவில் சட்டங்களும் குடியேறியவர்களது விழுமியங்களினதும் வரலாறுகளினதும் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டன. அவர்களுடைய கிரிஸ்தவ நம்பிக்கைகளுக்கு அப்பால் அவர்களது உலகப்பார்வையானது இருமைத்துவ பார்வையாக உள்வாங்கப்பட்டுள்ளது. உதாரணமாக சூழலுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவை முதன்மைப்படுத்துவதற்குப் பதிலாக ஐரோப்பிய உலகப்பார்வையானது சூழலிலிருந்து பிரித்து மனிதர்களை தனித்துவமாக காண்பதாகும். இந்தப் போக்கானது நிலத்தைச் சுரண்டிப் பயன்படுத்தும் நோக்குநிலைக்கு கொண்டு சென்றது. ஆகவே கூட்டுறவாக ஒன்றினைந்து செயற்படுவதற்கு மாறாக மனிதர்களுக்கு இடையிலான போட்டியை ஊக்குவிக்கும் உலகப்பார்வையை கொடுத்தது. இதன்விளைவாக மனிதர்கள் தமது நடத்தைகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு மிகவும் கடுமையான சட்டங்கள் அவசியப்பட்டன.

Intellectual Property - Aboriginal Law & Indigenous Laws - Research Guides  at Queen's University

பழங்குடி சமூகங்களின் பண்பாடானது ஐரோப்பிய அணுகுமுறைகளிலிருந்து பெரிதும் வேறுபட்டு பிரச்சனைகளையும் முரண்பாடுகளையும் தனித்துவமான சட்டங்கள் வழிமுறைகளினுடாக தீர்த்தனர். பழங்குடி தேசங்களுக்கிடையில் சட்டங்கள் தொடர்பாக தனித்துவமான வேறுபட்ட புரிதல்கள் உள்ளன. பொதுவான சட்டமானது பழங்குடி மக்களுக்கு பிரயோகிக்கும் வகையில் பன்முகத்தன்மைகள் சட்டங்களில் பிரதிபலிப்பதை உறுதிசெய்ய முயற்சித்தனர். அந்தவகையில் நான்கு வகையான கூறுகளை உள்ளடக்கினர். முதலாவது பழங்குடி மக்களின் உரிமைகள் தனித்துவமானவை. (sui generis) அல்லது  (of its own kind). அதாவது ஐரோப்பிய சட்டமுறைமைகளுக்கு அமைவாக இல்லாது பழங்குடி மக்களின் சட்டங்களின் அடிப்படையில் இந்த உரிமைகள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இரண்டாவது பழங்குடி மக்களின் உரிமைகள் கூட்டு உரிமைகள். இந்த உரிமைகள் தனிநபர் ஒருவரால் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் இத் தனிநபர் சமூகத்திற்கு பொறுப்புக் கூறுகின்றவர் ஆவார். மூன்றாவது பழங்குடி மக்களின் உரிமைகள் அரசாங்கத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் அல்லது அதன் செயற்பாடுகளை வழிநடாத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. நான்காவதும் இறுதியும் பழங்குடி மக்களின் உரிமைகள் கனேடிய அரசியலமைப்பு சட்டத்தில் தனித்துவமாக இருக்கின்றன. அரசியலமைப்பு சட்டத்தின் இரண்டாவது பகுதியில் உள்ளன. முதலாவது பகுதி கனேடிய  (Charter) சாசனமாகும்.

Canadian Charter of Rights and Freedoms | Our Country, Our Parliament

1763ம் ஆண்டு மூன்றாம் ஜோர்ஜ் அரசரால் ( King George III) வழங்கப்பட்ட பிரகடனம் (Royal Proclamation of 1763) முக்கியமானது. ஏழு வருட கால போரின் பின்பு பழங்குடி மக்களுக்கும் பிரிட்சாருக்குமான உறவை வரையறுக்கின்ற முதலாவது ஆவணம் இது என்றடிப்படையில் குறிப்படத்தக்கதாகும். அந்தவகையில் நிலத்திற்கான முதல் உரிமை பழங்குடி மக்களுக்கானது எனக் குறிப்பிடப்பட்டது முக்கியமானது. மேலும் தம்முடன் வியாபாரம் செய்து கொண்டே தமது வழமையான வாழ்வை வாழலாம் என்று பழங்குடிகளை நம்பச் செய்தார்கள். பழங்குடி மக்களுடன் எந்தவிதமான உடன்படிக்கைகள் செய்வதற்கோ காணிகள் வாங்குவதற்கோ தனிநபர்களுக்கு உரிமைகள் இல்லை எனவும் பிரட்டிஸ் அரசரும் அவரது பிரதிநிதிகளும் மட்டுமே அவ்வாறு செய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டது. இந்த சட்டங்கள் ஏற்கனவே வந்தவர்களுக்கானதல்ல. மாறாக புதிதாக வந்தவர்களுக்கே பொருத்தமானது எனவும் வரையறுக்கப்பட்டது.

Canadian Constitution, 1982 - Migmawei

19நூற்றாண்டுவரை குடியேற்றவாதிகளின் சட்டரீதியான நிறுவனங்கள் பழங்குடி சமூகங்களின் சட்டங்களை மதித்தன எனக் கூறப்படுகின்றது. ஆனால் தொடர்ச்சியான குடியேற்றங்களும் ஐரோப்பிய சனத்தொகை அதிகரிப்பும் ஐரோப்பியர்களின் சட்டங்களே பொதுவாகப் பயன்படுத்தப்பட்டதுடன் அவை பழங்குடி சமூகங்கள் மீதும் அதிகாரத்துவமாக திணிக்கப்பட்டன. அமெரிக்க போரின்போது ஐரோப்பியர்கள் இந்த சட்டங்களை மதிக்காமல் மீறினார்கள். குறிப்பாக 1867ம் ஆண்டு கைசாத்திடப்பட்ட பிரிட்டிஸ் வட அமெரிக்க சட்டம் இதை மீறுவதற்கு வழிவகுத்தது. 1876ம் ஆண்டு இந்திய சட்டம் (Indian Act) மூலம் பழங்குடி மக்களை தம்முள் உள்வாங்க ஐரோப்பியர்கள் முயற்சித்தார்கள். இந்த சட்டமானது பழங்குடி மக்களின் அடையாளத்தையும் இறைமையையும் தேச இருப்பையும் குறைவாகவே மதிப்பிட்டது. இவ்வாறுதான் பழங்குடி மக்கள் “இந்தியன் (Indian)” களாக அடையாளப்படுத்தப்பட்டார்கள். மேலும் பழங்குடி மக்களின் வழமையான முறைமைகள் மாற்றப்பட்டு ஆண்மைய தலைமைத்துவ பிரதிநிதித்துவ முறைகளைப் பின்பற்ற கட்டாயப்படுத்தபட்டார்கள்.

Royal Proclamation of 1763: Relationships, Rights and Treaties – Poster

குடியேற்றவாதிகளின் ஐரோப்பிய சட்டங்கள் பழங்குடிகளின் சட்டங்களையும் அரசியல் நிர்வாக அமைப்புகளையும் நிலத்தையும் வளங்களையும் சடங்கு நிழ்வுகளையும் சட்டவிரோதமானவை எனக் கூறின. பழங்குடி மக்களின் சடங்குகளை நிகழ்வுகளை (potlatch and the Sun Dance) தடை செய்தார்கள். இவர்கள் கனேடிய பிராஜா உரிமை பெற்றவர்களாக வரவேண்டுமாயின் பிரன்ஞ் அல்லது ஆங்கில மொழி தெரிந்திருக்க வேண்டும், கடனில்லாதவராக இருக்க வேண்டும், ஒரு நிலத்தின் உரிமையாளராக குறைந்தது மூன்று வருடங்களுக்கு  விவசாயம் செய்து அதனைப் பராமரித்திருக்க வேண்டும். அல்லது சட்டத்தரணியாக, ஆசிரியராக, வைத்தியராக, அரசியல் பிரதிநிதியாக இருக்க வேண்டும். பழங்குடி மக்களுக்கு இந்த இலக்குகளை அடைவது என்பது மிகவும் சவாலானதாகவும் பல தடைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தன.  இவ்வாறு வட அமெரிக்காவின் மீதான காலனித்துத்தின் அதிகாரம் என்பது சட்டரீதியான வரலாறானது. அதேநேரம் பழங்குடி சமூகங்களை அழிப்பதாகவும் இருந்தது.

Joanne Hammond on Twitter: "ffs we participate in this apartheid state—and  I mean actual, genuine, Canadian Made🇨🇦 Original Apartheid™️—stop  pretending to not understand systemic racism how do you think the Indian Act

1982ம் ஆண்டு சட்டமூலத்தின் 35வது பிரிவுக்கு அமைய இன்றும் 1763ம் ஆண்டு சாசனம் செல்லுபடியாகின்றது. இருப்பினும் அந்த உரிமைகள் என்ன என்பதில் பழங்குடி தேசங்களும் கனேடிய நீதிமன்றங்களும் முரண்படுகின்றார்கள். அதேநேரம்  இந்தியன் சட்டம் ;1951ம் ஆண்டு சில மாற்றங்களை பெற்றபோதும் 1985ம் ஆண்டு முழுமையாக நீக்கப்பட்டது.

இக் கட்டுரை அல்பேட்டா பல்கலைக்கழகத்தின்  பழங்குடி கற்கைகள் துறை முன்னெடுக்கும்  பழங்குடிகள் கற்கைகள் தொடரின் நான்காவது பாடமாகும். இதனைத் தழுவி மொழிபெயர்க்கப்பட்ட பதிவு இது.

மீராபாரதி.

கனேடியப் பழங்குடிகள் : ஒவ்வொரு குழந்தையும் முக்கியமானது பகுதி -1
https://tinyurl.com/tu8wb9u6

பழங்குடி மக்கள்: வணிகமும் காலனித்துவமும் – பகுதி 2
https://tinyurl.com/3hw3y4fb

பழங்குடிகள்: ஒப்பந்தங்களும் குடியேறியவர்களும் – பகுதி 3
https://tinyurl.com/3ayvampn

பழங்குடி மக்கள் – குழந்தையில் இருக்கும் “இந்தியனை”க் கொலை செய்தல் – பகுதி 5
https://tinyurl.com/28k2s55t

References

Aboriginal Justice Implementation Commission. 1999. ‘Chapter 2 – Aboriginal Concepts

of Justice’. Report of the Aboriginal Justice Inquiry of Manitoba. Winnipeg, MB:

Government of Manitoba. http://www.ajic.mb.ca/volumel/chapter2.html.

Bartlett, Richard H. 1988. The Indian Act of Canada. Saskatoon, SK: University of

Saskatchewan, Native Law Centre.

Bastien, Betty. 2012. ‘Indigenous Pedagogy: A Way out of Dependence’. In Aboriginal

History: A Reader, edited by Kristin Burnett and Geoff Read, 2nd ed., 15–28.

Don Mills, ON: Oxford University Press.

Battiste, Marie Ann. 2013. Decolonizing Education: Nourishing the Learning Spirit.

Saskatoon, SK: Purich Publishing Ltd.

Belanger, Yale Deron. 2013. Ways of Knowing: An Introduction to Native Studies in

Canada. Second ed. Toronto, ON: Nelson Education.

Borrows, John. 2006. Justice within Indigenous Legal Traditions: Discussion Paper.

Ottawa, ON: Law Commission of Canada.

———. 2010. Canada’s Indigenous Constitution. Toronto, ON: University of Toronto

Press.

———. 2016. Recovering Canada: The Resurgence of Indigenous Law. Toronto, ON:

University of Toronto Press.

Branch Legislative Services. 2015. ‘Consolidated Federal Laws of Canada,

Consolidated Acts’. August 18. http://laws-lois.justice.gc.ca/eng/const/.

Brigham, Clarence Saunders 1877-1963, ed. 1911. British Royal Proclamation. Vol. 12.

Worcester, MA: American Antiquarian Society.

Christie, Gordon. 2003. ‘Law, Theory and Aboriginal Peoples’. Indigenous Law Journal

2: 67–115.

‘Civilization’. 2016. Dictionary.com Unabridged. Random House, Inc.

http://www.dictionary.com/browse/civilization?s=t.

Cole, Douglas, and Ira Chaikin. 1990. An Iron Hand upon the People: The Law against

the Potlatch on the Northwest Coast. Vancouver, BC: Douglas & McIntyre.

Dickason, Olive Patricia, and William Newbigging. 2015. A Concise History of Canada’s

First Nations. 3rd ed. Don Mills, ON: Oxford University Press.

23

Forbes, Rachel. 2008. ‘Creating Legal Space for Animal-Indigenous Relationships’.

UnderCurrents: Journal of Critical Environmental Studies 17: 27–33.

Gilbert, Paul. 2010. Cultural Identity and Political Ethics. Edinburgh Edinburgh

University Press.

Grim, John. 2008. ‘Indigenous Lifeways and Knowing the World’. In The Oxford

Handbook of Religion and Science, edited by Philip Clayton and Simposon, 87–

107. Oxford; New York: Oxford University Press.

Hall, Stuart. 1992. ‘The West and the Rest: Discourse and Power’. In The Formations of

Modernity: Understanding Modern Societies an Introduction, edited by Bram

Gieben and Stuart Hall, 185–227. Cambridge, MA: Polity Press.

Hogue, Michel. 2015. Metis and the Medicine Line: Creating a Border and Dividing a

People. First edition.. UPCC Book Collections on Project MUSE. Chapel Hill, NC:

The University of North Carolina Press.

Johnson, Shelly. 2014. ‘Developing First Nations Courts in Canada: Elders as

Foundational to Indigenous Therapeutic Jurisprudence’ 3 (2): 1–14.

Johnstone, Gerry. 2013. Restorative Justice: Ideas, Values, Debates. London; New

York: Routledge.

Jones, Eric E., and James W. Wood. 2012. ‘Using Event-History Analysis to Examine

the Causes of Semi-Sedentism among Shifting Cultivators: A Case Study of the

Haudenosaunee, AD 1500-1700’. Journal of Archaeological Science 39 (8):

2593–2603.

Kan, Sergei. 2015. Symbolic Immortality: The Tlingit Potlatch of the Nineteenth Century.

2nd ed. Seattle, WA: University of Washington Press.

Laidlaw, Z., and Alan Lester, eds. 2015. Indigenous Communities and Settler

Colonialism: Land Holding, Loss and Survival in an Interconnected World.

Basingstoke, UK: Palgrave Macmillan.

MacDonald, Cathy, and Audrey Steenbeek. 2015. ‘The Impact of Colonization and

Western Assimilation on Health and Wellbeing of Canadian Aboriginal People’.

International Journal of Regional and Local History 10 (1): 32–46.

Merryman, John Henry, and Rogelio Pérez-Perdomo. 2007. The Civil Law Tradition: An

Introduction to the Legal Systems of Europe and Latin America. Stanford, CA:

Stanford University Press.

Milloy, John Sheridan. 2008. ‘Indian Act Colonialism: A Century of Dishonour, 1869-

1969’. Ottawa, ON: National Centre for First Nations Governance.

24

Muskeg Lake Cree Nation. 2017. ‘Nêhiyaw Wiyasowêwina (Cree Law)’. Muskeg Lake

Cree Nation. https://muskeglake.com/services/community-justice/nhiyawwiyasowwina-cree-law/.

Palmater, Pamela. 2011. Beyond Blood: Rethinking Indigenous Identity. Vancouver,

BC: UBC Press.

———. 2014. ‘Genocide, Indian Policy, and Legislated Elimination of Indians in

Canada’. Aboriginal Policy Studies 3 (3): 27–54. doi:10.5663/aps.v3i3.22225.

Poonwassie, Anne|Charter. 2001. ‘An Aboriginal Worldview of Helping: Empowering

Approaches’. Canadian Journal of Counselling 35 (1): 63–73.

Ray, Arthur J. 2016. An Illustrated History of Canada’s Native People: I Have Lived

Here since the World Began. 4th ed. McGill-Queen’s Press.

Royal Commission on Aboriginal Peoples. 1996. ‘Report of the Royal Commission on

Aboriginal Peoples’. Ottawa, ON: Minister of Supply and Services Canada.

Sayers, Judith F., ed. 2001. First Nations Women, Governance and the Indian Act: A

Collection of Policy Research Reports. Ottawa, ON: Status of Women Canada.

Scow, Jim, and Royal Commission of Aboriginal Peoples (RCAP). 1992. ‘Our Legacy:

Transcriptions of Public Hearings and Round Table Discussions, 19921993’.

Ottawa, ON.

http://digital.scaa.sk.ca/ourlegacy/solr?query=ID:30466&start=0&rows=10&mode

=results.

Small, Garrick, and John Sheehan. 2008. ‘The Metaphysics of Indigenous Ownership:

Why Indigenous Ownership Is Incomparable to Western Conceptions of Property

Value’. In Indigenous Peoples and Real Estate Valuation, edited by Robert A.

Simons, Rachel Malmgren, and Garrick Small, 103–119. New York, NY:

Springer. http://link.springer.com/chapter/10.1007/978-0-387-77938-6_6.

St-Onge, Nicole, Carolyn Podruchny, Brenda Macdougall, and Maria Campbell, eds.

2012. Contours of a People: Metis Family, Mobility, and History. New Directions

in Native American Studies. Norman, OK: University of Oklahoma Press.

Tennant, Paul. 2011. Aboriginal Peoples and Politics: The Indian Land Question in

British Columbia, 1849-1989. UBC Press.

Turner, Dale A. 2006. This Is Not a Peace Pipe: Towards a Critical Indigenous

Philosophy. Toronto, ON: University of Toronto Press.

http://login.ezproxy.library.ualberta.ca/login?url=http://search.ebscohost.com/logi

n.aspx?direct=true&db=nlebk&AN=468932&site=ehost-live&scope=site.

Walters, Mark. 2015. ‘The Aboriginal Charter of Rights: The Royal Proclamation of 1763

and the Constitution of Canada’. SSRN Scholarly Paper ID 2574812. Rochester,

25

NY: Social Science Research Network.

https://papers.ssrn.com/abstract=2574812.

Wood, Patricia K. 2003. ‘Aboriginal/Indigenous Citizenship: An Introduction’. Citizenship

Studies 7 (4): 371–378.

Yunupingu, Galarrwuy. 1997. Our Land Is Our Life: Land Rights: Past, Present and

Future. Brisbane, AU: University of Queensland Press


Leave a comment

Categories