Posted by: மீராபாரதி | August 10, 2010

காமம், பிரம்மச்சாரியம், மனிதர்கள், சமூகம் மற்றும் காதல் – ஒரு பார்வை – பகுதி 1

காமம், பிரம்மச்சாரியம், மனிதர்கள், சமூகம் மற்றும் காதல் – ஒரு பார்வை – பகுதி 1

ஒரு பிரச்சனையின் பன்முகத்தன்மையையும் அப் பிரச்சனை மீதான சமூகத்தின் பன்முக பார்வைகளும் அடக்குமுறைகளையும் அலசி ஆராய்வதற்கு நம்மிடம் பன்முகத் தன்மை கொண்ட பார்வை இல்லாமல் இருப்பது மிகவும் துரதிர்ஸ்டமாகும். ஏனனில் அவ்வாறு பார்க்கும் பொழுது மட்டுமே ஒரு பிரச்சனையின் பன்முகத்தன்மைகள் வெளிப்படும். அதனடிப்படையில் அதற்கான தீர்வுகளை காண்பதும் இலகுவாகும். இந்த அடிப்படையில் அண்மைக்காலங்களில் பேசப்படும் சாமியார்கள் மதகுருமார்கள் மற்றும் அரசியல் குறிப்பாக இடதுசாரி அரசியல் செய்ற்பாட்டாளர்களின் பாலியல் தூஸ்பிரயோகங்கள் அல்லது பயன்படுத்தல்கள் மற்றும் அவர்களது காம அல்லது பாலியல் உறவுகள் தொடர்பான செய்திகள் பார்க்கப்படவேண்டும். இவ்வாறன செய்திகள் குறித்த தனிநபர்களுக்கு எதிரான ஒரு வம்புச் (gossip) செய்தியாக குறுகிய காலத்தில் பரபல்யமாகி ஊடக செய்திகளின் விற்பனைக்கும் அதனால் அவர்கள் இலாபம் ஈட்டுவதற்கும் மட்டுமே வழிவகுக்கின்றது. இதற்குக் காரணம், அச் செய்தியின் பால் இருக்கும் கவர்ச்சித்தன்மையே. ஏனனில் நமக்குள் புதைந்திருக்கும் அல்லது புதைக்கப்பட்ட பிரக்ஞையற்ற காம மற்றும் பாலியல் மீதான ஆசைகளே இச் செய்திகளை நோக்கி நம்மை இழுக்கின்றன. ஆனால் காலோட்டத்தில் இப் பிரச்னைக்குறிய அம்சம் பெரும்பாலும் கதைக்கப்படுவதில்லை ஏனனில் பல்வேறு வம்வுச் செய்திகள் வந்து எம்மை அள்ளிக்கொண்டு சென்றுவிடும். அல்லது மீண்டும் இன்னுமொருவர் மூலம் பாலியல் தூஸ்பிரயோகம் தொடர்பான பிரச்சனை பெரிதுபடுத்தப்படும். சிறிது காலத்தில் மீண்டும் இச் செய்தியின் முக்கியத்துவம் குறைந்து போகின்றது. ஆனால் இந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் நமது சமூகத்தன் காமம் மற்றும் பாலியல் தொடர்பான கருத்துக்கள் சிந்தனைகளின் ஆதிக்கம் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளும், அதன் மீதான அடக்குமுறைகளும் கேள்விக்குட்படுத்தப்படுவதோ அல்லது ஆராயப்படுவதோ இல்லை. மாறாக இந்த செய்திகள் ஆணாதிக்க சமூகத்தின் பார்வையின் அடிப்படையில் அமைந்ததாகவே பெரும்பாலும் எம்மை வந்தடைகின்றன. அது பற்றிய விமர்சன பார்வையின்றி நாமும் அதை அப்படியே உள்வாங்குவது நமது துரதிர்ஸ்டமே. இதுபோன்று குறிப்பாக அரசியலில் ஆயுதப் போராட்டங்கள் ஏன் உருவாகின என்பது மற்க்கப்பட்டு ஆயுதப் போராட்டம் என்பதே முக்கியபிரச்சனையாகவும் பயங்கரவாத பிரச்சனையாகவும் சித்தரிக்கப்படும் அதேவேளை ஆயுதப் போராட்டத்தற்கு காரணமாக இருந்த சமூக பிரச்சனை மறைக்கப்பட்டு அல்லது மீண்டும் அடக்கப்பட்டு விடுகின்றது. அதேபோல்தான் காமம் மற்றும் பாலியல் உறவுகள் தொடர்பான பிரச்சனைகளும் இருக்கின்றன. ஏனனில் காமம் மற்றும் பாலியல் உறவுகள் தொடர்பானவையும் அடிப்படையில் ஒரு சமூகப் பிரச்சனையே. அதேவேளை தனிநபரின் பொறுப்புணர்வு மற்றும் உரிமை சுதந்திரம் என்பனவும் பின்னிப்பினைந்த ஒரு பிரச்சனை. ஆனால் இது வெறும் தனிநபர் பிரச்சனையாக மட்;டும் பார்க்கப்பட்டு உண்மையான சமூகப் பிரச்சனை முழுகடிக்கப்பட்டுவிடுகின்றது. எப்படி பிரபாகரன் மற்றும் அவரைப் போன்றவர்களை பயங்கரவாதிகளாக மட்டும் காண்பிப்பதன் மூலம் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய சமூக அல்லது தேசிய பிரச்சனையை அடக்கிவிடுவதன் மூலம் அவ்வாறனா ஒரு சமூகப் பிரச்சனை இல்லை என்றாகிவிடுகின்றது. இதே நிலைமைதான காமம் பாலியல் உறவுகள் தொடர்பான பிரச்சனைக்கும் ஏற்படுகின்றது. ஏனனில் சமூகம் ஒரு புறம் பிரச்சனைக்கான விதைகளை விதைத்துவிட்டு மறுபுறம் அதனால் ஏற்படும் விளைவுகளை மட்டுமே பிரச்சனையாக பார்த்து தண்டனை அளிக்கின்றது. விதைத்த விதைகளை வசதியாக மறந்துவிடுகின்றது. இப்படிதான் சமூகத்தின பல பிரச்சனைகள் இருக்கின்றன. இது முரண்பாடானது மட்டுமல்ல நியாயமற்றதுமாகும். ஆகவே காமம் பாலியல் உறவுகள் தொடர்பான பிரச்சனைகளையும் தூஸ்பிரயோகங்களையும் ஒரு சமூகப் பிரச்சனையாகவும் அதனால் உருவாக்கப்பட்ட தனிநபர் பிரச்சனையாகவும் அணுகும் பொழுது அதற்கான காரணங்களையும் நியாயமான தீர்வுகளையும் கண்டறியலாம். அதன் ஒரு முயற்சியே இந்தக் கட்டுரை. இது தொடர்பான ஒரு கலந்துரையாடலுக்கான ஒரு ஆரம்பமே.

இந்தியாவிற்கான எனது முதல்; பயணத்தில் முக்கியமான சென்ற ஒரு இடம் கஜீரோ என்றழைக்கப்படும் இடத்திலிருக்கும் கோவில்கள் ஆகும். இது இந்தியாவின் வட கிழக்குப்பகுதியில் தாஜ்மாகால் இருக்கும் பிரதேசத்திற்கு கீழே இருக்கின்றது. ஜான்ஸி ராணியின் நினைவாக இருக்கும் ஜான்ஸி புகையிரத நிலையத்திலிருந்து பஸ்ஸில் பயணிக்கவேண்டும். இந்தக் கோவில்களில் உள்ள விசேசம் முக்கியத்துவம் என்னவென்றால் இதன் கர்ப்பகிரகத்திற்குள் அதாவது மூலஸ்தானத்தில் கடவுள் இல்லை. வெறுமையான ஒரு இடம் மட்டுமே இருக்கின்றது. கோபுரத்தின் உச்சியிலிருக்கும் சிறுதுவாரத்தின் மூலம் வெளிச்சம் வருகின்றது. இக் கோயில்களின் கோபுரங்களின் வெளிப்புரமாக பிற இந்து சைவ கோயில்களில் இருக்கும் கடவுள் சிலைகளுக்குப் பதிலாக நிர்வாண சிலைகளுகம் மற்றும் பாலியல் அல்லது காமத்தின் இன்பத்தை அனுபவிக்கும் உறவுகளின் பல்வேறுவிதமான முறைகளையும் அழகான சிலைகளாக வடிவமைத்திருக்கின்றனர். இதன் நேரிடையான அர்த்தம் என்னவெனில் காமத்தை அனுபவிக்காது அறியாது அல்லது பூர்த்தி செய்யாது மனிதர்கள் முக்தி அதாவது ஒருநிலை அல்லது முழுமையான பிரக்ஞை நிலை அல்லது சமயங்களின் பார்வையில் கடவுள் நிலையை அடைய முடியாது என்பதே. இப்படி பல காரணணங்களை கூறலாம். ஆடிப்படையில் மனிதர்கள் தமது காம அல்லது பாலியல் தேவையை பூர்த்திசெய்தபின்பே உயர் நிலையை அடையளாம். இதற்கு புத்தர் போன்று பலர் உதாரணங்களாக இருக்கின்றனர். குறிப்பாக பிற மதக் கடவுகளின் வாழ்க்கை வரலாறுகளின் இருந்து இவ்வாறன பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது புறக்கணிக்கப்பட்டுவிட்டன.; பல ஆண்டுகளுக்கு முன்பு கஜீரோவில் 1000 கோவில்கள் இருந்தன என வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. ஆனால் அரேபிய மற்றும் ஐரோப்பிய படையெடுப்புகளாலும் மற்றும் இயற்கை அனர்த்தங்களாலும் இந்த கோயில்கள் அழிக்கப்பட்டு இன்று 10 கோவில்கள் மட்டுமே மிகுதியாக உள்ளன. இது மட்டுமின்றி இந்திய வரலாறு நமக்கு ஆணின் பார்வையில் அமைந்த காமசூத்திராவையும் பெண்ணின் பார்வையில் அமைந்த தந்திராவையும் நமக்கு தந்திருக்கின்றன. சீனாவிலும் இதற்கு நிகரான காம சாஸ்திர நூல்கள் உள்ளன. இவற்றில் எல்லாம் காமம் சக்தியின் பயன் மற்றும் அதை எவ்வாறு அணுகுவது மற்று பல்வேறுவிதமான உறவு முறைகள் நிலைகள் தொடர்பாக விளக்குகின்றன. இவ்வாறான வரலாறு கொண்ட இந்திய பிரதேசத்தில்தான் இன்று காமம் மற்றும் பாலியல் உறவுகளுக்கு எதிரான கட்டுப்பாடுகள் பிற நாடுகளைவிட கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்தக் கட்டுப்பாடுகளில் குறிப்பாக பெண்களுக்கு எதிரான போக்கு மிக அதிகமாகவும் நுண்மையாகவும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

பிரம்சச்சாரியம்
ஒரு புறம் பெண்களை அடக்கி ஒடுக்கும் சமூகம் மறுபுறத்தில் சமய நம்பிக்கைகளின் அடிப்படையில் ஆண்களையும் அவர்களது காமத்தையும் கட்டிப்போடுகின்றது. பிரம்மச்சாரியம் என்பது அதியுயர் மனித நிலையாக பொதுவாக அணைத்து மதங்களாலும் போற்றப்பட்டுவருகின்றது. இதானால் பல பெற்றோர் குழந்தைகளை குறிப்பாக ஆண் குழந்தைகளை சிறுவயதிலையே சமய நிறுவனங்களில் அல்லது மடங்களில் சேர்த்து அவர்களை துறவிகளாக்கிவிடுகின்றனர். இவ்வாறு செய்வது குழந்தை போராளிகள் போன்று சிறுவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களாகப ;பார்க்கப்படுவதில்லை. காரணம் சமய நிறுவனங்களின் ஆதிக்கம் மட்டுமல்ல மாறாக அதை சரியானதாகவும் நல்லதாகவும் பார்க்கும் சமூகக் கண்ணோட்டமுமே காரணமாகும். குழந்தைப் போராளிகளுக்கு எதிரான சட்டங்கள் போல் இதற்கும் சட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். தனது ஆன்மீகப் பாதையை ஒருவர் தானே தெரிவு செய்வதற்கான உரிமையையும் அதற்கான வயதெல்லையை ஆகக்குறைந்நதது 14 வயதுவரை வைத்திருக்கவேண்டும். அதாவது ஒரு குழந்தை தனக்கு விரும்பியதை தெரிவு செய்யும் மனவளர்ச்சியையும் பக்குவத்தன்மையும் பெறும் வரை சமூகமும் பெற்றோரும் பொறுத்தருப்பது நல்லது. ஏனனில் குழந்தைப்பருவத்திலிருந்தே பிரம்மச்சாரியம் நோக்கி மத வழியில் வளர்க்கப்பட்டு வாலிப வயதில் தமது காம உணர்வினால் உந்தப்பட்டு பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யமுடியாது அவதிப்படுகின்ற பலரைக் நமது சமூகங்களில் சாதாரணமாக காணலாம். இவ்வாறானவர்கள் வாய்ப்புகள் கிடைத்தால் துறவற வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சதாரண வாழ்க்கைக்கு வந்துவிடுகின்றனர். முடியாதவர்கள் களவாக மறைவாக பாலியலுறவுகளில் ஈடுபடுகின்றனர். அதிகாரத்தில் உள்ளவர்கள் அதிகார துஸ்பிரயோகங்களின்; மூலம் தமது காம மற்றும் பாலியலுறவின் தேவைகளை பூர்த்திசெய்கின்றனர். இதற்கான உதாரணங்கள் அணைத்து மத நிறுவனங்களிலும் நடைபெறுவதை காலம் காலமாக காணலாம். இது ஒரு புறம் சமய அறிவும் சடங்குகளும் தவறானது மற்றும் நடைமுறை வாழ்வுக்கு பொருத்தாதது என்பதையே இவை சுட்டி நிற்கின்றன. மறுபுறம் வரலாறு தோறும் இது தொடர்பான சர்ச்சைகள் எழுந்தவண்ணமே உள்ளன. ஆனால் அதற்கான தீர்வை யாரும் காண்பதாக இல்லை. மாறாக பொது மனிதிர்கள் இந்த மத போதகர்கள் பிரச்சாரர்கள் மீது ;ஆத்திரம் அடைகின்றனர். ஏனனில் “படிப்பது தேவராம் இடிப்பது சிவன் கோவில்” என்பது போல இந்த மத போதகர்களும் பிரச்சாரகர்களும் போதிப்பது பிரம்மச்சாரியம் ஆனால் (களவாக) ஈடுபடுவது காம மற்றும் பாலியல் உறவில் என அறியும் பொழுது பொது மனிதர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஒரு நம்பிக்கை துரோகமே. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு இரு வழிகள் உள்ளன. ஓன்று பிரம்மச்சாரியம் என்பது மனித வாழ்வில் மற்றும் சமூகத்தின் உயர்நிலை அந்தஸ்து என்பது முதலில் அகற்றப்படவேண்டும். அது தொடர்பான சிந்தனை மாற்றப்படவேண்டும். மாறாக பிரம்மச்சாரியம் மனிதர்களுக்கு இயல்பாக வரவேண்டிய நேரத்தில் வரும் என்ற புரிதலும் அது ஒரு சமூக மற்றும் ஆன்மீக அந்தஸ்து அல்ல என்ற புரிதலும் ஏற்பட வேண்டும். இயற்கைக்கு மாறாக உடலின் தேவைகள் மறுக்கப்பட்டு கட்டாப்படுத்தி திணிக்கப்படக் கூடாது. செய்யவேண்டியது என்னவெனில் காம உணர்விற்கு மதிப்பளித்து உடலின் பாலியல் தேவைகளை ப+ர்த்தி செய்யும் பொழுது பிரம்மச்சாரியம் இயற்கையாக சிலவேளை நடைபெறலாம். அதாவது ஒரு மரத்திலிருக்கும் பழுத்த பழம் தானாக கீழே விழுவது போல் காமமும் தனது முதிர்வில் மனித மனித்திலிருந்து உடலிலிருந்து விலகிவிடலாம். ஆல்லது அவ்வாறு நடைபெறாதும் விடலாம். ஆப்படி நடைபெறாது விடுவதனால் எந்த மனிதரும் மனித நிலையில் இருந்து ஒருபோதும் குறைந்துவிடப்போவதில்லை. ஏனனில் காமம் இயற்கையான ஒரு சக்தி. மனிதரில் காமம் இருப்பதில் தவறேதும் இல்லையே. இரண்டாவது வழி குழந்தைகளை சிறு வயதிலையே மத வழிப்பாட்டு சடங்குகளில் பின்பற்ற நீர்ப்பந்திப்பதும் துறவர வாழ்க்கைக்கு அவர்களை அனுப்பிவிடுவதும் நிறுத்தப்படவேண்டும். குறிப்பாக இது சிறுவர் மீதான மனித உரிமை மீறல்களாக கணிக்கப்பட்டு தடுக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் மத குருமாரின் பாலியல் தூஸ்பிரயோகங்கள் குறைவதற்கான சாத்தியங்கள் ஏற்படுவது மட்டுமல்ல அவர்களும் தமது உடல் மற்றும்; மன தேவைகளின் அடிப்படையில் நியாயமான பாலியல் உறவுகளில் ஈடுபடலாம். அவ்வாறு ஈடுபடுவதும் தவறாக பார்க்கப்படுவது தவிர்க்கப்படும்.

காமம் பாலியல் உறவு ஒரு பிரச்சனை
காமம் அழகானது. ஆந்த உணர்வு அற்புதமானது. இதமானது. இன்பமானது. இந்த அனுபவமானது காமத்தையும் அதனால் உருவாகும் பாலியல் உறவையும் உண்மையாகவும் ஆத்மார்த்மாகவும் பிரக்ஞையாகவும் செயற்படுத்தும் போது மட்டுமே சாத்தியமானது. காமம் ஒன்றும் அசிங்கமானதல்ல. மறைக்கப்படவேண்டிய ஒரு உணர்வும் அல்ல. குற்ற உணர்வால் கூனிக்குறுகி நிற்கப்படவேண்டிய ஒரு செயற்பாடும் அல்ல. ஆனால் அனைத்து அல்லது பெரும்பாலான மனிதர்கள் தமது அல்லது பிறரது காம உணர்வை குற்றவுணர்வுடன் தயக்கத்துடன் கூனிக் குறுகியே பாhக்கின்றனர், அனுபவிகக்கின்றனர்;. ஆவ்வாறு ஏன் செய்கின்றனர் என்பதற்கான பதிலைக் கண்டறிவதன் மூலம் காமம் மற்றும் பாலியல் உறவுகளை சுற்றியிருக்கும் மர்மங்களும் பிரச்சனைகளும் நீர்த்துப்போவதற்கான சாத்தியங்கள் உள்ளன. இவ்வாறு செய்வதன் மூலமே மனிதர்கள் காமம் மற்றும் பாலியல் உறவு தொடர்பான ஒரு ஆரோக்கியமான பார்வையை கொள்வதுடன் அதை முழுமையாக குற்றவுணர்வின்றி அனுபவித்து நிறைவேற்றலாம். அல்லது வழமையைப்போல் இயந்திரத்தனமாக பார்த்தும் செய்தும் தமக்கும் பிறருக்கும் பாதகமான நிலைமைகளைத் தோற்றுவிக்கலாம் . தெரிவு எங்கள் முன் இருக்கின்றது. தெரிவு செய்வதா இல்லையா என்பதும ;ஒவ்வொரு மனிதரதும் உரிமை. ஆனால் நமது தெரிவுகளுக்கு அமைய அதற்;கான விளைவுகளும் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்வது நன்று. ஆனால் காமம் மற்றும் பாலியல் உறவு தொடர்பான ஆரோக்கியமான தெரிவை மனிதர்களால் செய்யமுடியாது இருப்பதற்கு காரணம் என்ன?

காம உணர்விற்கும் பாலியல் உறவுகளுக்கும் எதிரான சமூக அடக்குமுறை தான் இதற்க்குக் காரணம் என்றால் மிகையல்ல. இந்த அடக்குமுறைக்கு நீண்ட கால வரலாறும் உள்ளது. இந்த வரலாறு நிச்சயாமாக ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டிய ஒன்று. இதன் மூலம் பல தனிமனிதர்களின் உளவியல் பிரச்சனைகளை கண்டறிவது மட்டுமல்ல அதற்கான தீர்வுகளையும் கண்டறியலாம். இதன்மூலம் ஒரு ஆரோக்கியமான நலமான சமூகத்தை கட்டி எழுப்பலாம். ஆனால்; ஆணாதிக்கம் (patriarchy) சமூகம் ஒருதார மணத்தையும் (monogamous) இருபால் ஒரு மண உறவையுமே (heteronormative) சரியானது என கட்டமைத்து அமுல்படுத்தி வருகின்றது. இதற்கு அப்பாற்பட்ட எந்த உறவுகளையும் அங்கிகரிப்பதோ மதிப்பதோ இல்லை. மாறாக ஒரு தார ஒரு வழி இருபால் ஒரு மண உறவுக்கு அப்பாற்பட்ட அணைத்தையும் அடக்கி ஒடுக்குகின்றது.. இது குறிப்பாக பல வழிகளில் ஆண்களுக்கு சாதாகமாகவும் நன்மையளிப்பதாக இருந்தாலும் காம உணர்வின் இன்பதை;தையும் பாலியல் உறவையும் உண்மையாகவும் அதன் ஆழத்திற்கும் அனுபவிப்பதையும் பொறுத்தவரை அனைவருக்கும் பாதகமானதே. மேலும் பிற அல்லது ஓரின பால் உறவுகளை (homosexual) மேற்கொள்பவர்களும் மற்றும் பிற பால் அடையாளங்களைக் (trans) கொண்ட அரவாணிகள் போன்ற மனிதர்களுமே இதனால் பாதிப்படைபவர்கள். குறிப்பாக உலகத்தின் சரிபாதி மனித வர்க்கமான பெண்கள் இதனால் பல வழிகளில் இன்றுவரை மிக மோசமாக பாதிக்கப்பட்டுவருகின்றனர். இதற்கு ஆணாதிக்க இருபால் உறவு கொண்ட ஒருதார மண வழி சமூகம் (heteronormative patriarchal society) தனது பல்வேறுவகையான சமூக நிறுவனங்கள் மற்றும் வழிகளின் மூலமாக நடைமுறைப்படுத்துகின்றது. இந்த அடக்குமுறையையும் அது தொடர்பான கருத்தியல் கட்டமைப்பையும் மனிதர்களின் குழந்தை பருவத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது. குழந்தைகளை கட்டுப்படுத்தி நெறிப்படுத்துவதன் மூலம் செயற்படுத்துகின்றது. மேலும் காமம் மற்றும் பாலியல் உறவுகள் தொடர்பான அறிவுத் தேடல்கைளை அழித்து அல்லது ஒழித்து பொய்யான அல்லது தவறான அறிவை கட்டமைத்து பரப்புரை செய்வதன் மூலமும் நிலைநாட்டுகின்றது. இவற்றுக்கு எல்லாம் மேலாக பெண்களை அடக்குவது மட்டுமல்ல அவர்கள் தொடர்பான மாயையை கட்டமைப்பதன் மூலம் அவர்களை ஆண்கள் மட்டும் பயன்படுத்த கூடியவாறு பாலியல் பொருட் பண்டங்களைப்போல (sexual objects) உருவாக்கி உள்ளது. அதேவேளை மறுமுனையில் புpரம்மச்சாரியம் என்பதை சமூகத்தில் உயர்நிலையில் வைத்திருப்பதன் மூலம் காமம் தொடர்பான உண்மைக்குப் புறம்பான யாதார்த்தமில்லாத சடங்குகளை மேற்கொண்டு மனிதர்களை கட்டுப்படுத்துகின்றது. இப்படி பலவற்றை இந்த ஆணாதிக்க சமூகம் தன் சமூக சாதிய சமய கட்டமைப்பைக் காப்பதற்காக செய்கின்றனது. இந்த அடக்குமுறைகளும் கருத்தாதிக்கமும் காலம் காலமாக கேள்வியின்றி பின்பற்றப்பட்டு வருவதால் நமக்குள் ஆழமாக பதிந்துள்ளன. காமம் பாலியல் உறவுகள் தொடர்பான ஆணாதிக்க சமூகத்தின் சிந்தனைகள் தவறானது என்ற சிந்தனைக்கே இடம் இல்லாதவாறு நமது எலும்பு மச்சைகள் வரை இந்த கருத்துக்கள் சென்றுள்ளன. ஆகவே நாமும் எந்தவிதமான கேள்வியின்றி பின்தொடர்கின்றோம் மந்தைக் கூட்டங்களாக….

மீராபராதி
(ஆண்மையும் பெண்மையும்)
தொடரும்


Responses

  1. கோவில் கருவறைக்குள் உல்லாசம் கோவில் அர்ச்சகர் கைது !

    கோவில் கருவறைக்குள் உல்லாசம் கோவில் அர்ச்சகர் கைது !

    meerabharathy
    Posted on 11/18/2009 at 12:36 am
    நட்புடன் இச் செய்தியை எழுதிய எழுத்தாளருக்கும் வெளீயிட்ட ஆசிரியருக்கும் மற்றும் வாசக நண்பர்களுக்கும்…

    இந்த இணையத்தளமானது சமூக அக்கறையுள்ள சமூக மாற்றத்தை உருவாக்க விரும்புகின்ற ஒன்றாகவே நான் பார்க்கின்றேன். அதை அடைவதற்கான உருவாக்குவதற்கான கருத்துக்கள் பாதைகள் வேறு வேரானவையாக இருந்தபோதும் நமது நோக்கம் ஒன்றே.

    ஆந்த அடிப்படையில் இச் செய்தி தொடர்பான எனது கருத்தை விமர்சனத்தை இங்கு முன்வைப்பது பொருத்தமானது எனக் கருதுகின்றேன்.

    முதலாவது மேற்குறிப்பிட்ட செய்தியை வெளியிட்ட முறையானது ஒரு மூன்றாம்தரத்திலான செய்தித்தாள்கள் வெளியீடும் செய்தி போன்றதாகவே நான் பார்க்கின்றேன். ஏனனில்….

    அண்மையில் ஒரு பெண்ணியக் கட்டுரை ஒன்றும் அது தொடர்பான விபரணப்படம் ஒன்றும் பார்த்தேன். இது கனடாவில் பழங்குடி பெண்களை வெள்ளையின ஆண்கள் எவ்வாறு வன்புணர்ச்சி செய்து கொலைசெய்கின்றனர் மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பானது.

    அக் கட்டுரையினது விபரணப்;படத்தினதுமு; நோக்கமானது அக் குறிப்பிட்ட ஆணை பிரபல்யப்படுத்துவதோ அல்லது வெளிக் கொண்டுவருவதோ அல்ல. அதற்கும் மேலாக இவ்வாறன வன்புணர்ச்சிகளும் கொலைகளும் நடைபெறுவதற்கான சமூக காரணிகளை ஆராய்ந்திருந்தது. ஏனனில் இச் சமூக காரணிகளே இவ்வாறன சம்பவங்கள் நடைபெறக் காரணமாக இருக்கின்றன. இச் சமூக காரணிகளை கண்டுபிடித்து அதற்கான தீர்வைக் காணும் பொழுது இவ்வாறான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான தீர்வுகளை நாம் காண முயற்சிக்கலாம்.
    ஆல்லது மேற்குறிப்பிட்ட செய்தி போன்று எய்தவர் இருக்க அம்மை நோகும் கதையாகவே இருக்கும்…
    இனி மேற்குறிப்பிட்ட செய்தியை பகுத்தாய்வுக்கு உட்படுத்துவோம்….

    முதலாவது இவ்வாறன செயலில் ஈடுபட்டது ஒரு ஆண்…

    ஆந்தவகையில இது ஆச்சரியமானதல்ல…நாம் வாழுவது ஒரு ஆணாதிக்க சமூகத்த்pல்…இதில் ஆண்களுக்கு அதிகாரம் கட்டுக்கடங்காதிருக்கின்றது…ஆகவே ஒரு ஆண் தான் விரும்பியதை செய்வதில் எந்தவிதமான தடையும் அந்த ஆணின் சமூக சாதிய வர்க்க பிண்ணியைப் பொறுத்து இருக்கப்போவதில்லை….ஆகவே இங்கு விமர்சிக்கப்படவேண்டியது ஆணாதிக்க சமூகத்தையே…அந்த ஆண் தனது ஆணாதிக்க மனோபாவத்தை பயன்படுத்த pஅவ்வாறான ஒரு செயலில் ஈடுபட்டிருந்தால்..ஆணாதிக்க சமூகத்தில் ஆண் எவ்வாறு எல்லாம் நன்மை அடைகின்றான்…பெண்ணை தனது தேவைகளுக்கு எற்ப எவ்வாறு அடக்கி பயன்படுத்துகின்றான்…என அலசி ஆராய வேண்டும்…இதை விடுத்து….

    இரண்டாவது…

    ஆந்த ஆணின் சாதிய பின்னணி முக்கியமானது. செய்தியின் அடிப்படையில் அவர் ஒரு பிராமண சாதியைச் சேர்ந்தவராகவே இருக்கலாம். ஆகவே கண்டறியவேண்டியது…அதில் ஈடுபடுத்தப்பட்ட அல்லது ஈடுப்பட்ட பெண்களின் சாதிய பிண்னணி…ஏனனில் ஆதிக்க சாதிகள் அடக்கப்பட்ட சாதி பெண்களை தமது காம இச்;சைகளுக்கு தொடர்ந்தும் சுரண்டி வருவது வரலாறு. ஆப் பெண்கள் சாதியால் அடக்கப்பட்டவர்களாக இருப்பின் இச் செய்தியின் பின்னணியை சாதிய சுரண்டலினதும் அடக்குமுறையினதும் அடிப்படையில் அணுகவேண்டும். ஆதிக்க சாதிகளின் பாலியல் சுரண்டலுக்கு எதிரானதாக இச் செய்தி இருந்;திருக்க வேண்டும்….அதைவிடுத்து..

    ஆக் குறிப்பிட்ட பெண் ஒரே சாதியை சேர்ந்தவராக இருப்பின் ஒன்று ஆணாதிக்கத்தின் அடிப்படையில் நோக்கலாம் அதாவது ஏற்கனவே மேலே கூறியது போல் ஆண்களால் பெண்கள் எவ்வாறு பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்பது பற்றிய ஆய்வாக இச் செய்தி இருந்திருக்கவேண்டும்.

    இவ்வாறு பல் வேறு கோணங்களில் அக் குறிப்பிட்ட சம்பவத்திற்கான சமூக காரணிகளை கண்டறிந்து வெளீயிடும் பொழுது சமூகத்தில் புறையோடிப்போயிருக்கும் ஆணாதிக்க அதிகாரத்துவத்தையும் அதன் துஸ்பிரயோகங்களையும் அடக்குமுறைகளையும் மற்றும் அனைத்துவிதமான சுரண்டல்களையும் பிற்போக்குத்தனங்களையும் வெளிக்கொண்டுவரலாம். இது சமூக மாற்றத்தை நோக்கிய செயற்பாட்டிற்கான ஒரு அடியாக இருக்கும்.

    இதைவிடுத்து இவர் அவரோடு கருப்பகிரக்த்திலோ சொர்க்கத்திலோ சல்லாபித்தால் நமக்கு என்ன…நம்மால் முடியவில்லையே என பொறாமையாக இருக்கின்றதா…அல்லது…
    இரு மனிதர்கள் அது பிராமணனாக இருந்தால் என்ன தலித்தாக இருந்தால் என்ன தமது இயற்கையான காம சக்தியை வெளிப்படுத்துதல் தவறேதுமில்லையே…அவ்வாறு தவறு என கூறுகின்றவர்கள் யார் என மீண்டும் சமூக ஆய்வு செய்யவேண்டும்….இவ்வாறு கூறுபவர்கள் நமது பிற்போக்கான கலாசார பண்பாட்டு அம்சங்களை தூக்கிப்பிடிக்கும் சமூக ஆதிக்கசக்திகளே…இச் சக்திகளையே சமூகத்தின் முன்வெளிக்கொண்டு வரவேண்டும்….

    மூன்றாவது…

    எனது புரிதலில் நீங்கள் நாத்திகர்கள் என்றே நம்புகின்றேன். அப்படியாயின் ஒரு கோயிலுக்குள் அதன் கர்ப்பகிரகத்தில் ஒரு மனிதர் காம செயற்பாட்டில் ஈடுபடுவதில் தவறு என்ன? அது துய்மையான இடம் என நீங்களும் கருதுகின்றீர்களா? குhம செயற்பாட்டால் தூய்மை போய்விட்டது எனக் கவலைப்படுகின்றீர்களா?

    காமத்தைக் கட்டிப்போட்டு அடக்கி அழகு பார்க்கும் வேடிக்கை பார்க்கும் சமூகத்தில் இருவர் பயமின்றி காமஉறவில் ஈடுபடுவதற்கு கடவுள் இருக்குமிடமான கருப்பகிரகத்தைத் தவறி வேறு எந்த இடமும் பாதுகாப்பானதல்ல…

    இங்கு நாம் அந்த செய்தியின் பின்னணியில் கவனிக்கவேண்டியது வர்க்க சாதி பிரிவுகளுக்கு அப்பாற்பட்டு இரு மனிதர்கள் காம உறவில் ஏன் அவ்வாறு களவாக ஈடுபடுகின்றனர்….அதற்கான சுதந்திரம் சமூகத்தில் மறுக்கப்படுகின்றதா?

    ஆவ்வாறு மறுக்கப்படுகின்றதாயின் அதற்கான காரணம் என்ன? என்றடிப்படையில் ஆய்வு செய்யவேண்டும்…
    காமம் மனிதரின் இயற்கையான சக்தி. அது ஏன் நமது சமூகத்தில் அடக்கப்பட்டிருக்கின்றது. இந்த அடக்குமுறைக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் தொடர்பிருக்கின்றதா? தொடர்பிருந்தால் அதற்கான பின்னணி காரணம் என்ன? என்பன கண்டறியப்பட்டு களையப்படவேண்டும்..
    அனைத்து மனிதரும் அனைத்து அடக்குமுறைகளிலிருந்தும் {(காம அடக்குமுறையிலிருந்தும்) விடுதலை பெற்று சுநத்திரமாக வாழவேண்டும்…

    எனது சொந்த அனுபவத்தில் காமத்தை அடக்குவதால் நான் படும் அவஸ்தையை யாரிடமும் சொல்லமுடியாது படும்பாடு இருக்கின்றதே…

    இளமையில் இலட்சியக் கொள்கைப்பிடிப்பால் அரசியல் வாழ்விற்காக காமத்தை கட்டுப்படுத்தி சுய இன்பம் மட்டும் வாழ்வானது…

    முடியாதபோது 27வயதில்(!) காமத்தை அனுபவிப்பதற்காகவே காதலியை கைபிடித்து…அப்பாடா பிரச்சனை தீர்ந்தது என நினைத்துபோது…

    அது அனை திறந்த்த வெள்ளம் போல் அதன் பின்தான் பாய்ந்து வருகின்றது…

    அதன் பின் பத்து வருடங்களாக தியான பயிற்சியில் இருந்தும் ம்ம்ம்…அது ஓய்ந்தபாடில்லை…
    ஒரு ஆணாக இருந்து…அதிலும் பெண்ணியவாதியாக இருந்து…எனது உள் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் மதிப்புக் கொடுத்து…அதேவேளை பெண்ணையும் மதித்து அவளது உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் மதிப்புக் கொடுத்து அவள் மீது எனது ஆணாதிக்க அதிகாரத்தை பிரயோகிக்காது…பாலியல் அடிப்படையில் சுரண்டாது பிரக்ஞையுடன் நேர்மையாக இந்த பிற்போக்கு சமூகத்தில் வாழ்வது என்பது….

    ஆப்பாடா….இக் கஸ்டத்தை யாரிடம் முறையிடுவது…. கடவுள் மீது நம்பிக்கையில்லை…நல்ல தலைமைகளும் இல்லை…வழி காட்டிகளும் இல்லை..என்ன வாழ்வு இது…

    பிரச்சனை என்னவெனில் காமத்தை எவ்வாறு தீர்ப்பது அதற்காக மற்று பாலிடம் எவ்வாறு அணுகுவது என்பது தொடர்பான அறிவு நமது சமூகத்தில் இல்லை….குறிப்பாக ஆண்கள் காதல் என்பதையே காமத்தை தீர்ப்பதற்கு பயன்படுத்துகின்றனர். இது துர்ப்பாக்கியமானதே… பெண்ணுடன் எனக்கு காதல் இல்லை காமம் தான் உள்ளது என வெளிப்படையாக சொல்லவும் முடியாது…ஏனனில் அந்தளவு திறந்து உரையாடும் சமூகம் அல்ல நம்முடையது…அதனால் பல முற்போக்கு பேசும் ஆண்களே பெண்களுடன் உறவு கொள்வதற்கு மறைமுகமாகவே அணுகுகின்றனர்…ஆணிக்கே இந்த நிலையெனின் பெண்ணின் நிலை…

    இதன் சக்தியைக் கண்டுபயந்து தான் ஆணாதிக்க வர்க்கம் ஆரம்ப காலத்திலையே அடக்கிவிட்டதா?
    ஆய்வுகளின் படி ஒரு ஆண் ஆகக் குறைந்தது 3 நிமிடங்களுக்கு ஒரு முறை காமத்தைப் பற்றி சிந்திக்கின்றான்….பெண் ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கு ஒரு முறை சிந்திக்கின்றாள்…

    இக் காம பிரச்சனையிலிருந்து நாம் ஒருவரும் தப்பமுடியாது…இன்று மனிதர்களிடம் இருக்குமு; பல உளவியல் பிரச்சனைகளுக்கு காமத்தை அடக்கி வாழ்வதும் ஒரு காரணம்…இருப்பினும் ஒவ்வொருவரும் நமது அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப இப் பிரச்சனைக்கு முகம் கொடுக்கின்றோம்….இதற்கான நமது தீர்வுகள் எல்லாம் சரி என நாம் வாதிட முடியாது எனனில் எந்தளவிற்கு நம்மை பிற்போக்கான சமூக கருத்துகள் ஆதிக்கம் செய்கின்றது என்பதை பொருத்தது அது…

    உண்மையிலையே காமம் ஒரு பிரச்சனையல்ல…ஆனால் பிரச்சனைக்குரியதாக ஆக்கப்பட்டுள்ளது….
    நானும் இங்கு பிரச்சனைக்கு வரவில்லை…எனது கருத்தை மட்டுமே முன்வைக்கின்றேன்…மீண்டும் நேரம் கிடைக்கும் பொழுது கேள்விகள் இருப்பின் பதில் எழுதுவேன்…

    நன்றி
    மீராபராதி
    (பெண்மையும் ஆண்மையும்)

    Like


Leave a comment

Categories