Posted by: மீராபாரதி | June 9, 2020

“என்னால் மூச்சு விட முடியவில்லை”

web15-blog-justice4jamar-1160x768_0

“என்னால் மூச்சு விட முடியவில்லை”
கறுப்பின விடுதலையும் உரிமைகளும்  (சில) ஈழத் தமிழர்களும்

b64122d4-49b7-45b9-b290-522a42234eed-large16x9_AP20150029007256ஒவ்வொருமுறையும் ஒரு கறுப்பின மனிதரை அமெரிக்க பொலிசார் எந்தவிதமான விசாரணைகளுமின்றி நையப்புடைத்து கைது செய்யும் பொழுதோ, கொலை செய்யும் பொழுதோ, எழும் கோவம் சொல்லிமாளாது. இவ்வாறான சம்பவங்களைப் பார்க்கும் பொழுது மக்களுக்கு ஏன் கோவம் வருவதில்லை என நினைக்காத நாளில்லை. கறுப்பின மக்களுக்கு எதிரான இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக ஏன் போராட்டங்கள் நடைபெறுவதில்லை என நினைப்பதுமுண்டு. ஆனால் அந்த நாள் வந்து சேர்ந்தது.

B881146663Z.1_20200528122943_000_GN4V7AGL.5-0_Super_Portraitஒரு சிறிய காரணத்திற்காக ஜோர் வுளொயிட்டை (George Floyd) கைது செய்ய வந்த அமெரிக்க பொலிசார் அவரது கழுத்தை முழங்காலினால் எட்டு நிமிடங்களுக்கு மேலாக அழுத்திக் கொலை செய்தார்கள். அந்த எட்டு நிமிடங்களும் அவர் மரண வேதனையை அனுபவித்தார். “என்னால் மூச்சு விட முடியவில்லை” என பல முறை கூறினார். ஆனால் அவர்கள் அதைக் கருத்தில் எடுக்கவில்லை. இறுதியில் தன் அம்மாவை அழைத்தபோது அவரது உயிரும் பிரிந்தது. இக் கொலையை ஐரோப்பிய வெள்ளையின பொலிசார் மட்டுமல்ல ஸ்பானிய, தென்கிழக்காசிய, கருப்பின அடையாளங்களைக் கொண்ட அமெரிக்க பொலிசாரும் சேர்ந்தே செய்தனர். இப்படிப் பலர் (Breonna Taylor, Eric Garner, Ahmaud Arbery, Philando Castile, Rodney King…) பொலிசாரின் அடாவடித்தனத்தால் அடிக்கடி கொல்லப்படுகின்றனர். இவ்வாறு கறுப்பின மக்களை எந்தக் காரணமுமின்றி கொலை செய்வதற்கு வெள்ளை நிற இனவாத மேலாதிக்க சிந்தனையும் அமெரிக்க பொலிசாருக்கு இருக்கின்ற கட்டுப்பாடில்லாத அதிகாரங்களும் காரணமாகின்றன. ஆனால் toab7325ax151வழமைபோல மக்கள் இந்தக் கொலையை பத்தோடு பதினொன்றாக கடந்து செல்லவில்லை. வெள்ளை நிற இனவாதத்திற்கும் பொலிசாரின் அதிகாரத்திற்கும் மிலேச்சனமான செயற்பாட்டிற்கும் எதிராகப் பல்லாயிரக்கணக்கான பல்லின மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட ஆரம்பித்தனர். இக் கொலைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை இனவாத சட்டங்களை மாற்றும்வரை போராட்டம் பத்தாவது நாளாகத் தொடர்கின்றது. இப் போராட்டத்திற்கு ஆதரவாக பல நாடுகளிலும் கண்டன ஊர்வலங்கள் நடைபெறுகின்றன.

3439வட அமெரிக்காவில் ஆபிரிக்க அமெரிக்கர்களின் வரலாறு 500 வருடங்களாகும். ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளாக கொண்டுவரப்பட்ட இவர்களின் வாழ்க்கை வரலாறு சொல்லொனாத் துயரங்களைக் கொண்டது. அமெரிக்க முதலாவது ஜனாதிபதி ஜோர்ஜ் வோசிங்டன் கறுப்பின மக்களை Slave Auctionஅடிமைகளாக வாங்கி விற்ற ஒரு வியாபாரி. இப்படியான ஒருவர்தான் இந்த நாட்டையும் அதன் சட்டதிட்டங்களையும் உருவாக்க காரணமாக இருந்துள்ளார் என்பதை அறிந்தால் அவை எவ்வாறானவை என்பதை ஊகிப்பது கடினமல்ல. இவர்கள் தம்மை ஐரோப்பிய அமெரிக்கர்கள் என அழைப்பதில்லை. தம்மை அமெரிக்கர்களாகவே உறுதி செய்து கொண்டு சக மக்களை அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்தப் பிரதேசத்தை கொண்டே அழைக்கின்றனர். இதுவே அடிப்படையில் வெள்ளைப் பேரினவாத ஆதிக்கம்தான்.

image-20150610-6814-cxat24நூறு வருடங்களுக்கு முன்பு அன்றைய ஜனாதிபதி ஆப்பிராம் லிங்கனின் முயற்சியால் சட்டரீதியாக 400 ஆண்டு கால அடிமைவிலங்கு ஒடிக்கப்பட்டது. இருப்பினும் கறுப்பின மக்களுக்கு எதிரான இனவாதக் கருத்தியலும் மனநிலையும் சட்டமும் மேலோங்கியே காணப்பட்டன. காணப்படுகின்றன. வெள்ளையின அரசும் மக்களும் இவர்களை தீண்டத்தாகதவர்களாக அனைத்து வெளிகளிலும் புறக்கணித்தனர். அவமதித்தனர். இருப்பினும் காலத்திற்கு காலம் கறுப்பின 1140-black-history-quiz-rosa-parks.imgcache.rev0074f29366d89df7ed0f05dbdd57ce99.webமக்கள் தம் உரிமைகளுக்காகப் போராடி வந்துள்ளனர். அந்தவகையில் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் 60களில் நடைபெற்ற கறுப்பின மக்களின் சிவில் உரிமைகளுக்கான போராட்டம் இந்த வேறுபாடுகளையும் புறக்கணிப்புகளையும் சட்டரீதியாக இல்லாமல் செய்தது. ஆயினும் வெள்ளை மேலாதிக்க நிறவாதமும் பொலிசாரின் அராஜக செயற்பாடுகளும் கறுப்பின மக்களை blackhistoryபுறக்கணித்து சுரண்டியது மட்டுமின்றி அநியாயமாக கைது செய்தும் கொலை செய்தும் வந்தனர். ஆகவேதான் அமெரிக்காவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் அதிகமாக கறுப்பின மக்கள் வாழ்வதுடன் இவர்களுக்கு ஒழுங்கான கல்வியும் வேலை வாய்ப்புகளும் இல்லாமல் ஏழ்மையில் வாழ்கின்றனர். மேலும் வெள்ளையின மக்களின் சனத் தொகையுடன் ஒப்பிடும் பொழுது அதிகளவான கறுப்பின மக்கள் அமெரிக்க சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.  ஆகவேதான் இப்பொழுது நடைபெறுகின்ற போராட்டம் பொலிசாரின் அராஜக செயற்பாடுகளை நிறுத்தக் கோருவதுடன் மட்டுமில்லாது கல்வி, சுகாதரம், வேலை வாய்ப்புகள், வாழ்க்கைத் தரம், தண்டனைகள், போன்றவற்றில் மாற்றங்களை  வேண்டி நிற்கின்றது. கறுப்பின மக்களின் வாழ்வும் முக்கியமானது என ஓங்கி ஒலிக்கின்றது.

101853664_10157996089080709_2584680081802844348_nஈழத் தமிழர்களான நாம், இன ஒடுக்குமுறைகளுக்கு முகம் கொடுத்து நாம் பிறந்த நாட்டில் வாழ முடியாமையினால் அல்லது வாழ விருப்பமில்லாது நாட்டை விட்டு வெளியேறி ஒப்பிட்டளவில் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்படுகின்ற நாடுகளில் வசதிகளுடன் வாழ்கின்றோம். இருப்பினும் இந்த நாடுகளில் வெள்ளையினவாத மேலாதிக்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் இயங்குகின்றது. குறிப்பாக (வட) அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கும்  பூர்வீகக் குடிகளுக்கும் எதிராக மிக மோசமான வழிகளில் மேற்கொள்ளப்படுகின்றன. நாம் பிறந்த நாட்டில் இது போன்ற அனுபவங்களைப் பெற்ற நாம் இந்த நாட்டில் இவ்வாறு ஒடுக்கப்படுகின்ற மக்களுடன் தோழமையுடன் ஒன்றாக நிற்பதுவே சரியானதாகும். இவர்களுடைய போராட்டங்களில் நாம் பங்காளிகளாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த நாட்டில் இன்று நாம் அனுபவிக்கும் பல உரிமைகளுக்கு இந்த மக்கள் கடந்த காலங்களில் தமது உயிர்களையும் கொடுத்து போராடியமையே காரணமாகும். இதை நாம் என்றும் மறக்காது நினைவில் வைத்திருக்க 20200606_142658_HDR[1]வேண்டியவர்களாக உள்ளோம். ஆகவேதான் டொரன்டோவில் நடைபெற்ற போராட்டத்திற்கு கோரோனா பயத்தையும் கடந்து இதில் பங்குபற்றுவது நமது பொறுப்பு என உணர்ந்து தோழமை உணர்வை வெளிப்படுத்த கலந்து கொண்டோம். உண்மையில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களிடம் ஒழுங்கான சர்வதேச அமைப்புகள் இல்லை. இருப்பவைகள் எல்லாம் கொள்ளையடிப்பவர்களும் கோமாளிகளுமே. அவ்வாறானதொரு அமைப்பு இருப்பின் இவ்வாறான மக்களின் போராட்டங்களில் ஈழத் தமிழர்கள் சார்பாக 20200606_142726[1]நாம் ஒரணியில் நின்று நம் ஆதரவையும் பங்களிப்பையும் வழங்கலாம். இவ்வாறான செயற்பாடுகளினூடுதான் ஈழத் தமிழர்களின் விடுதலையை சர்வதேசளவில் தொடர்ச்சியாக முன்னெடுக்கலாம். அவர்களின் ஆதரவையும் பெறலாம். மாறாக நாம் வாழ்கின்ற நாடுகளிலுள்ள பழமைவாதக் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் ஆதரவளிப்பது அல்லது வருடா வருடம் சடங்கு செய்வதைப் போல கோட் சூட்டுகளுடன் ஐக்கிய நாடுகளின் சபையின் முன் இருப்பது மட்டும் செயற்பாடுகளல்ல. இவை நம் விடுதலைக்கு சர்வதேச ஆதரவைப் பெற்றுத்தராது என்ற கசப்பான உண்மையை எப்பொழுது உணர்வோமோ?

20200606_144324[1]தூரதிர்ஸ்டவசமாக இவ்வாறான தோழமை உணர்வை பல அல்லது சில ஈழத் தமிழர்களிடம் காணமுடியவில்லை. இதற்கு இவர்கள் முன்வைக்கும் காரணங்கள் பல. கொல்லப்பட்டவர் ஏற்கனவே குற்றவாளியாக அடையாளங் காணப்பட்டவர்! போராட்டத்தின் போது கடைகளை உடைத்து களவெடுப்பது அநீதி! வெள்ளையர்கள் அனைவரும் கெட்டவர்களோ இனவாதிகளோ அல்ல! ஈழத் தமிழர்களை இன அழிப்பு செய்தபோது இவர்கள் அதை எதிர்த்தார்களா? எங்கள் போராட்டங்களுக்கு ஆதரவளித்தார்களா? எனப் பல கேள்விகள் முன்வைக்கப்படுவதுடன் இப் போராட்டங்களுக்கு எதிரான சில 20200606_143743[1]மத்தியதர வர்க்க வெள்ளை மேலாதிக்க சிந்தனையுள்ள கருப்பினத்தவர்களின் குரல்களையும் தம் நியாயத்திற்காக சாட்சியாக முன்வைக்கின்றனர். இது ஒருவகையான பல அல்லது சில ஈழத் தமிழர்களிடம் இருக்கின்ற கறுப்பின மக்களுக்கு எதிரான இனவாத சிந்தனை என்றால் மிகையல்ல. ஈழத் தமிழர்களின் போராட்டம் எந்தளவு நியாயமானதோ அதேயளவு நியாயமானது கறுப்பின மக்களின் போராட்டமும். ஆகவே ஈழத் தமிழர்களிடம் காணப்படுகின்ற இவ்வாறான சிந்தனைகளுக்கு எதிராக நாம் தொடர்ச்சியாக பல்வேறு தளங்களில் போராட வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம்.

264x0azஎந்த ஒடுக்குமுறையும் ஒன்றைவிட ஒன்று குறைந்ததல்ல. இருப்பினும் ஈழத் தமிழர்கள் தம் மீதான சில ஒடுக்கு முறைகளுக்கு வழங்கும் முக்கியத்துவம் பிற ஒடுக்குமுறைகளுக்கு வழங்குவதில்லை. இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும் இந்தியாவிலும் கடந்த 2000ம் ஆண்டுகளாக சாதியடிப்படையில் ஒடுக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் கொலை செய்யப்பட்டும் ஒடுக்கப்பட்ட சாதிகள் வாழ்கின்றனர்.  ஒடுக்கும் சாதிகளைச் EZnULUjX0AAgzk0சேர்ந்தவர்கள் எப்படி இவர்களைப் பற்றி அக்கறைப்படவில்லையோ இதைப் போலவே இவர்களுக்கு கறுப்பின மக்களின் மீதான ஒடுக்குமுறைபற்றியும் எந்த அக்கறையும் இல்லை. ஆகவேதான் அவர்களுக்கு எதிரான கருத்துகளை பரப்பிவருகின்றனர். நமது முழுமையான விடுதலை என்பது சக ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒன்றினைந்து செயற்படும்போது மட்டுமே சாத்தியம் என்பதை எப்பொழுது புரிந்து கொள்ளப்போகின்றோமோ?

EZnULXbWAAII8r5கறுப்பின மக்களுக்கு ஆதரவாக பல நாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுகின்றனர். ஆனால் பல்லின மக்கள் அதிகமாக வாழ்கின்ற டொரன்டோ நகரத்தில் மட்டும் இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் நடைபெறவில்லை என்பது கவலைக்கிடமானதே. டொரன்டோவில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு ஊர்வலமும் சனிக்கிழமை இரண்டு குழுக்கள் தனித்தனியாக ஒவ்வொரு ஊர்வலத்தையும் ஒழுங்கு செய்து டன்டாஸ் யங் சந்தியில் சந்தித்து அங்கும் தனித்தனியாக கூடி முடித்தனர். இவ்வாறு மூன்று பிரிவுகளாக ஏன் நடைபெற்றது எனத் தெரியாது. ஆனால் தூரதிர்ஸ்டமாக இவ்வாறான பிரிவுகள் EZnULDeWsAIIeFVபோராட்டத்தை பலமிலக்கச் செய்கின்ற செயற்பாடுகள் என்பதை ஒழுங்கமைப்பாளர்கள் ஏனோ புரிந்து கொள்ளவில்லை என்பது கவலைக்கிடமானது. இருப்பினும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் ஈழத் தமிழர்களின் சார்பாக சிவவதனி பிரபாகரன் அவர்கள் பங்குபற்றியதாக குறிப்பிட்டிருந்தார். நாம் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்குபற்றினோம். அன்று ஈழத் தமிழர்கள் ஒருவரையும் நாம் அடையாளங் காணாமல் இருந்தது கவலையைத் தந்தது. ஏனினும் அமெரிக்காவிலும் உலகின் பல நாடுகளிலும் இப் போராட்டம் எழுச்சி பெற்று நடைபெறுவதைப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியளிக்கின்றது.

102707182_2962298517194146_6421330128789307392_nகறுப்பின மக்களுக்கு எதிரான பொலிஸ் அராஜகம் நிறுத்தப்பட வேண்டும்!
கறுப்பின மக்களுக்கு எதிரான வெள்ளை மேலாதிக்க அடிப்படையிலான புறக்கணிப்புகள் நிறுத்தப்பட வேண்டும்!
கறுப்பின மக்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் சம வாய்ப்புகள்  கிடைக்க வேண்டும்.
கறுப்பின மக்களின் வாழ்வு மதிக்கப்பட வேண்டும்!
கறுப்பின மக்களின் வாழ்வும் பெறுமதியானதே!
கறுப்பின மக்களுக்கு விடுதலை கிடைக்கும் வரை அவர்களுடன் தோழமையுணர்வுடன் ஒன்றித்து நிற்போம்.

101403083_10222407780964699_2628351639613865984_n
மீராபாரதி.
Black lives matters
#WhyWeKneel #TheyDidNothing #ICantBreathe #GentleGiant

#PleaseDoSomething #BlackLivesMatter

#CivilRights #CriminalJusticeReform
படங்கள் கூகுள்
கருப்பின மக்களின் வரலாறு, போராட்டம், அவர்களுக்கு எதிரான வெள்ளையினவாத அடக்குமுறைகள் தொடர்பான சில இணைப்புகள்.

https://www.history.com/topics/black-history/black-history-milestones

BlacKkKlansman by Spike Lee
https://vimeo.com/335541076 

Freedom – Full Movie | Cuba Gooding Jr., William Sadler, Sharon Leal
https://www.youtube.com/watch?v=jkcFTI9_4Pc

https://www.bbc.com/news/av/world-us-canada-52943128/early-american-policing-runaway-slave-patrols#

 

 

Asian American Complicity in Racism

Asian American Complicity in Racism


Leave a comment

Categories