Posted by: மீராபாரதி | May 26, 2019

ஒர் அரசியல்வாதியின் துணைவியார்

ஒர் அரசியல்வாதியின் துணைவியார்

20190324_103926வசந்தாதேவி அவர்கள் வாழ்ந்த காலங்களை மூன்றாகப் பிரிக்கலாம். தனது தகப்பனுடன் வாழ்ந்த 19 வருட காலம். இதன்போது தனது தந்தைக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தார். கணவருடன் வாழ்ந்த 30 வருட காலம். இதன்போது தனது கணவருக்கு கட்டுப்பட்டு அவரது அரசியலுக்குப் பங்களித்தார். இறுதியாக பேரப்பிள்ளைகளுடனும் முதியவர்களுடனும் வாழ்ந்த புலம் பெயர்ந்த 23 வருட காலம். இந்த 23 வருடத்தின் கடைசி ஐந்தாண்டுகளும் தனது விருப்பப்படி சுதந்திரமாக முதியவர்களுடன் இணைந்து சுற்றித் திரிந்து வாழ்ந்தார் எனலாம்.

1946 – வசந்தாதேவியின் அம்மா ரீட்டா சிங்கள பௌத்த சமூகத்தைச் சேர்ந்தவர். கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அப்பா சௌவுந்தரநாயகம் தமிழ் சைவ சமூகத்தைச் சேர்ந்தவர். கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர்களின் காதலில் உருவானவர்கள் எட்டுப் பிள்ளைகள்.

20190324_103915“கொடூரமான இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்பு 1946ம் ஆண்டு மே மாதம் 26ம் திகதி இலங்கையின் தலைநகரமான கொழும்பில் நான் பிறந்தேன். எனக்கு இரண்டு தங்கைகளும் ஐந்து தம்பிகளுமாக ஏழு சகோதர சகோதரிகள் இருக்கின்றார்கள். எட்டுக் குழந்தைகளில் மூத்தக் குழந்தையாக இருந்த என்னிடம் வீட்டுப் வேலைகளும் தம்பி தங்கைகளை கவனிக்கின்ற பொறுப்பும் வழங்கப்பட்டது.  காலையில் எழும்பி சமைத்து சகோதரங்களை பாடசாலைக்கு செல்வதற்கு ஆயத்தம் செய்து பின் நானும் வெளிக்கிட்டு பாடசாலைக்குச் செல்லவேண்டும்.”

“இந்தப் பொறுப்புகள் மற்றும் பிரச்சினைகள் எல்லாம் அந்தச் சிறுவயதில் மிகப் பெரும் சுமையாகவே எனக்கு இருந்ததாக இப்பொழுதும் உணர்கின்றேன். எனக்கு கல்வி கற்பதில் ஆற்றலோ பெரிய விருப்பமோ இருக்கவில்லை. ஆகையால் பத்தாம் வகுப்புடன் பாடசாலையிலிருந்து நிற்பாட்டினர். ஆனால் பல்வேறு விளையாட்டுக்களில்  முக்கியமாக உயரம்பாய்தல்,  ஓட்டம் என்பவற்றில் ஆர்வமாக ஈடுபட்டதுடன் அதில் சான்றிதழ்களையூம் பெற்றிருக்கின்றேன்.”

1958 -“நாம் சிறுவயதில் சிலாபத்தில் வாழ்ந்து கொண்டிருந்தோம். அப்பொழுதுதான் முதன் முதலாக இனக் கலவரம் ஒன்றிக்கு முகம் கொடுத்தோம். 1958ல் தமிழர்களுக்கு எதிராக இனவாத சிங்களவர்களால் நடாத்தப்பட்ட தாக்குதல்களே இந்தக் கலவரம். அப்பொழுது பலரின் சொத்துக்கள் எரிக்கப்பட்டு கொலைகளும் நடந்தன. இக்காலங்களில்; எனது தம்பி தங்கைகளுடன் ஹெலிக்கப்டரில் இருந்து வீசப்படுகின்ற சாப்பாட்டு பார்சல்களுக்காக (பொதிகள்) ஓடியது இன்னும் நினைவில் இருக்கின்றது. பப்பா  இலங்கைப் புகையிரத திணைக்களத்தில் வேலை செய்தமையால் நாம் காங்கேசன்துறை, கொழும்பு, சிலாபம் எனப் பல இடங்களில் மாறி மாறி வாழ்ந்தோம்.

20190324_1038581965 – “எனது பப்பா (அப்பா) கண்டிப்பான மனிதராக இருந்தபோதும் என்னில் மிகவூம் அக்கறையானவராக இருந்தார். நான் அவரின் செல்லப் பிள்ளையாக இருந்தேன். தமிழ் பெண்ணாகவே வளர்த்தார். நான் படிக்காது வீட்டு வேலைகள் மட்டும் செய்து காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தேன். அப்பொழுது எனது வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. எனது தகப்பனார் தனக்குத் தெரிந்த உறவூக்காரப் பையனான கந்தசாமி என்பவரை எனக்கு திருமணம் செய்ய நிச்சயித்தார். ஆனால் எனது விருப்பங்கள் கனவூகள் ஒன்றையூம் யாரும் கேட்கவில்லை. அதைப்பற்றி யாரும் அக்கறைப்படவில்லை. எனக்கென சில விருப்பங்கள் கனவூகள் இருக்கின்றன என்பதை எனது பெற்றோருக்கு கூறுகின்ற தைரியம் அன்று என்னிடம் இருக்கவில்லை. இதனால் எனது தகப்பனாரின் தெரிவை ஏற்றுக் கொண்டேன்.”பப்பாவின் மீதான அன்பு மதிப்பு பயம்  என்பவற்றால் பப்பா தெரிவூ செய்த மனிதரையே திருமணம் செய்து கொண்டேன்;. திருணமணத்திற்கு முதல் எனது எதிர்கால கணவரை ஒரு தரம் சந்தித்தேன்;. அப்பொழுது அவர் “கோட்டும் சூட்டும் போட்டு டையூம்“ கட்டிக் கொண்டு இருந்த அழகில் மயங்கி விட்டேன். அவரை அவ்வாறு பார்த்தபோது எனது எதிர்கால வாழ்க்கை தொடர்பான நம்பிக்கையூம் கனவூம் எனக்கு வந்தது.”

“எல்லோரையூம் போல எனக்கு “நல்ல மனிதர்” ஒருவரை திருமணம் செய்வதே கனவாக இருந்தது. அந்த மனிதர் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கவேண்டும். குடி சிகரட் பழக்கங்கள் இல்லாதவராக இருக்க வேண்டும் என விரும்பினேன்.”

“எனக்குப் பத்தொன்பதாவது வயதில் திருமணமாகியது. நான்கு வருடங்களுக்குள் மூன்று குழந்தைகளுக்குத் தாயூமானேன்.”

20190324_103843“எனது கணவர் என்னைத் திருமணம் செய்யூம் பொழுது அவருக்கு வேறு ஒரு வாழ்க்கை இருந்தது. தான் ஏற்கனவே கட்சியை திருமணம் செய்ததாக கூறினார். கல்வி கற்றவராக இருந்தபோதும் அவர் முழு நேர கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தார். அக்கட்சியின் பத்திரிகையில் மிகவூம் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்து கொண்டிருந்தார். கட்சித் தலைவர் சண்முகதாசனின் மீது பெரிய மதிப்பு வைத்திருந்தார். அவரது துணைவியார் பரமேஸ்வரியை அக்கா என்றே அழைப்பார். அவரும் இவர் மீது நிறைய அன்பு வைத்திருந்தார்”

1966 – “எனது பப்பா (தகப்பனார்) இவர் (கணவர்) மீது கொண்ட விருப்பத்தினால் இவரிடம் என்னைப் பொறுப்புக் கொடுத்துவிட்டு சில மாதங்களில் அவர் இறந்து போனார்;.”

“எனது ப்பபாவின் (தகப்பனின்) மறைவூக்குப் பின் எனக்கு எனது குடும்பத்துடனான தொடர்புகள் பல்வேறு காரணங்களால் இல்லாது போனது. அவர்கள் வெளிநாடுகளில் குடியேறிவிட்டனர்.

திருமணமான புதிதில் எனது கணவரை விரும்பிய ஒரு உறவுக்காரப் பெண் என் மீது கோவத்தில் இருந்தார். ஆனால் பிற்காலங்களில் நான் பட்ட கஸ்டங்களைப் பார்த்து தான் நல்ல நேரம் தப்பித்தேன் என என்னிடமே கூறினார்.

20190324_103835“திருமணம் முடித்த சில மாதங்களில் 1966ம் ஆண்டு யாழில் அமெரிக்க அதிகாரி ஒருவருக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் ஒன்றில் அவர் மீது கூல் முட்டை எறிந்தமைக்காக கணவர் கைதாகி சிறை சென்றார்.

1967 –  முதல் குழந்தையாக பாரதிமோகன் பிறந்தான்.

1966ம் ஆண்டிலிருந்து 1972ம் ஆண்டுவரை கணவர் வேலை செய்த அல்லது செயற்பட்ட (சண்முகதாசனின் சீனச் சார்பு) கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த காலங்கள். “கணவருடன் சேர்ந்து கட்சிப் பத்திரிகை விற்கவூம் சுவரொட்டிகள் ஒட்டவூம் அலைந்தேன்.”

1969 – ”இரண்டாவது மகள் ஈழபாரதி  பிறந்தாள். இவர் வயிற்றில் இருக்கும் பொழுது இராணுவம் எனது வயிற்றில் அடித்தது. அதன் பாதிப்பு மகள் பிறந்தவுடனும் தொடர்ந்தது.”

1971 – “இக்காலங்களில் நடைபெற்ற சேகுவேரா கிளர்ச்சி எனப்படும் ஜே.வி.பி கிளர்ச்சியாலும் தீவிரமான செயற்பாடுகளாலும் பல முறை கணவர்; சிறைக்குச் சென்றார். இவ்வாறு சிறைக்குப் போவதும் வருவதுமாக இரண்டரை வருடங்கள் சிறை வாழ்க்கையாக கணவருக்கு கழிந்தது. இக் காலத்தில்தான் மூன்றாவது மகள் ஜெயபாரதி பிறந்தாள். இவள் பிறந்தபோது கணவர் சிறையில் இருந்தார். ஆகவே நான் எனது மூன்று குழந்தைகளுடன் பெரும்பாலும் தனித்துவிடப்பட்டேன்;.”

20190324_103819“எனது குடும்பத்துடன் உறவூம் தொடர்பும் இல்லாமையினால் கஸ்டமான காலங்களில் அவர்களிடம் உதவிக்குப் போக முடியவில்லை. கட்சியின் தலைவர்கள் சிறையில் இருந்தபடியாலும் கட்சிக்குள் பல முரண்பாடுகள் நடைபெற்றதாலும் கட்சியின் உதவியூம் கிடைக்கவில்லை. சில கட்சித் தோழர்கள் தனிப்பட உதவி செய்தார்கள். ஆகவே கடைசிப் புகலிடமாக இருந்த ஒரே இடம் கணவரின் குடும்பம்.”“வேறு வழியில்லாமல் கணவரின் வீட்டுக்குப் போய் சில காலம் இருந்தபின் மீண்டும் வெளிக்கிட்டு திருகோணமலைக்கு  வந்தேன்.”

“திருகோணமலையில் நெல்சன் தியேட்டருக்கு முன்பாக சூசைப்பிள்ளையின் கடைக்கு அருகில் கட்சி அலுவலகம் இருந்தது. அதன் பின்னால் இருந்த வளவில் நாம் குடியிருந்தோம்;.. நாம் குடியிருந்தது ஒரு பெரிய வளவூ. அந்த வளவிலிருந்த வீடுகளில் வேலைகள் செய்தும் அவர்களது உதவியூடனும் எனது குழந்தைகளை வளர்த்தேன்;. இக்காலங்களில் என்னிடமிருந்த நகைகளை எல்லாம் அடகு வைத்தேன். கழுத்தில் நகை இல்லாதிருப்பதை மறைப்பதற்காக எனது சாரியால் கழுத்தைச் சுற்றிப் போர்த்துவிடுவேன். காதில் கருவேப்பிலை தண்டினை குத்திக் கொண்டேன். எனது பெண் குழந்தைகளுக்கும் அதனையே குத்தினேன். இவ்வாறு வாழ்ந்து கொண்டு எனது கணவரை சிறையில் சென்று பார்ப்பது மட்டுமல்லாது அவரை வெளியில் எடுப்பதற்காகவூம் பல முயற்சிகள் செய்தேன். இராணுவப் பொறுப்பாளர்களையூம் கட்சித் தலைவர்களையூம் சென்று சந்திபேன். சிலர் உதவினர். பலர் கையை விரித்தனர்.”

20190324_103805“இப்படிக் காலம் போய்க் கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் கணவர் விடுதலையாகி வெளியே வந்தார். கட்சிக்குள் பல முரண்பாடுகள் தொடர்ந்துகொண்டிருந்தன.

1974 – அதேவேளை கட்சி வேலைகளுக்காகவூம் தொழிற்சங்க வேலைகளுக்காகவூம் மலையத்தில் அட்டன் நகரில் வேலை செய்ய கட்சியின் தலைமையால் அனுப்பப்பட்டார். அட்டனில் மட்டும் ஆறு வீடுகளில் குடியிருந்தோம். இதில் மூன்று வீடுகள். மிகுதி மூன்றும் ஒரு சிறிய அறை மட்டுமே.

1974- வீடு ஒன்றில் குடியிருந்தோம். 1975- அட்டன் – வீடு ஒன்றில் குடியிருந்தோம்.

1976 அட்டன் – வீடு ஒன்றில் குடியிருந்தோம்

சில காலத்தின் பின் கணவர் கட்சியிலிருந்து விலத்தப்பட்டார் அல்லது வெளியேறினார். இதன் பாதிப்புகளாலும் தனிப்பட்ட காரணங்களாலும் கணவர் குடிக்கும் புகைத்தலுக்கும் அடிமையாகிப் போனார். வேலை இல்லாதும் இருந்தார். தொழிற்சங்க வழக்குகள் பேசினார். ஆனால் அதில் அதிக வருமானம் வரவில்லை. பல வழக்குகள் பேசியபோதும் அவருக்கு சாராயத்தை வாங்கி கொடுத்துவிட்டு வழக்குப் பேசியதற்கான பணத்தை கொடுக்கமாட்டார்கள். இது எனக்;கு மேலும் பிரச்சினைகளைக் கொண்டு வந்தது. வாழ்வதற்கு ஒழுங்கான வீடில்லை. இருக்கின்ற அறைக்கும் வாடகை கொடுக்கவூம் வழியில்லை. கையில் காசில்லை. பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்க முடியாத நிலை. இப்படி என்னைச்; சுற்றி பல பிரச்சினைகள். இருக்கின்ற வீடோ ஐந்து பேருக்குமே படுக்க காணாத ஒரு இடம். சிறிய அறை ஒன்று.”

1977 அட்டன் – பெரிய வீட்டிலிருந்து சிறிய அறை ஒன்றுக்கு வாடகைக்கு சென்றோம்.

IMG-20190319-WA0002சின்ன சின்ன விசயங்களுக்கு எல்லாம் பயப்பிடுவேன். ஆனால் பிரச்சனைகளின் போது தைரியாமாக இருப்பேன். 1977ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின்போது ஊரடங்குச் சட்டம் போட்டிருந்தார்கள். நாம் இருந்த பேலி வீட்டில் சில வீடுகளில் சமான்கள் இல்லை. களவாக திறந்து விற்கும் கடைகளுக்குப் போய் சாமான்களை வாங்கிவர அனைவருக்கும் பயம். நான் மகனைக் கூட்டிக் கொண்டு குறுக்கு வழிகளால் சென்று எங்களுக்கும் அயலவர்களுக்கும் சமான்களை வாங்கி வருவேன்.

1980 அட்டன் – மீண்டும் சிறிய அறை ஒன்றுக்கு வாடகைக்கு சென்றோம்

1982 அட்டன் – மீண்டும் சிறிய அறை ஒன்றுக்கு வாடகைக்கு சென்றோம்

1977ம் 1983 ம் காலங்களில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்செயல்களை எனது கணவருடனும் குழந்தைகளுடனும் எதிர்கொண்டேன்.”

1982 – 15 வருடங்களின் பின் 1982ம் ஆண்டு எனது ஒரு சகோதரியூம் மூன்று சகோதரர்களும் அம்மாவூம் என்னைச் சந்திப்பதற்கு வந்தனர். இதன் பின் எனது தாயை நான் சந்திக்கவேயில்லை.

“இப்படியான ஒரு சூழலில் தான் எனது மூத்த மகள் பெரியவளாகினாள். நாம் வாழ்ந்த அறையின் மூலையில் அவளுக்கு ஒரு மறைவிடத்தை உருவாக்கினேன். சிரமத்துடன் இந்த நிகழ்வை நடாத்தினோம். பல வருடங்களின் பின்பு நானும் கணவரும் குழந்தைகளுடன் நின்று நம் நினைவூக்காக ஒரே ஒரு படம் மட்டும் எடுப்பதற்கு இந்த நிகழ்வூ உதவியது. “

IMG-20190216-WA00001983  – “1983ம் ஆண்டு ஏற்பட்ட தமிழ் மக்கள் மீதான வன்முறைகளினால் மலையகத்திலிருந்து யாழ் வந்தோம். 1990 ஆண்டு வரை யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் மேலும் புதிய பிரச்சினைகள் வந்தன. இக்காலங்களில் பெரும்பாலும் அகதிகள் அல்லது வந்தேறு குடிகள் என்ற அடையாளத்;துடன் வாழ்ந்தோம். இப்பொழுது சிறிலங்கா மற்றும் இந்திய இராணுவ முகாம்களுக்கும் இயக்க முகாம்களுக்கும் அழைந்தேன். எனது கணவரை விடுதலை செய்வதற்காக அல்ல. எனது மகனை விடுவிப்பதற்காக அலைந்தேன்.”

1984 – “கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் நான் முயற்சி செய்யத் தவறவில்லை. நாவற்குழியில் அகதிகளாக கொட்டில் ஒன்றில் வாழ்ந்தபோது அகதிப் பணம் கிடைத்தது. அதில் ஒரு பசு மாட்டை வாங்கினேன். ஆனால் அது ஒரு முரட்டு மாடு. பசுவைப் பற்றி ஒன்றும் தெரியாத எங்களிடம் யாரோ ஏமாற்றி விற்றுவிட்டனர். இதனால் வயல் வெளிகளில் அதன் பின்னால் ஓடித் திரிந்தேன். அது சில நேரங்களில் என்னை உதைக்கும். அடியை வாங்கிக் கொண்டு ஓடிப் பிடித்து இழுத்து வருவேன்”

நாவற்குழியில் மட்டும் எட்டு வீடுகளில் வாழ்ந்தோம். இதில் இரண்டு வீடுகளில் மற்ற அகதிகளுடன் ;இணைந்து வாழ்ந்தோம். மற்றவை எல்லாம் சிறு கொட்டில்கள். ஒரு கொட்டில் கோழி கூடு போல சிறியது.” பின் யாழ்ப்பாணம் சென்று இரண்டு வீடுகளில் வாழ்ந்தோம். இக் காலங்களில் இவருக்கு எந்த தொழிலும் இருந்ததில்லை. சில இயக்கங்களுக்கு மொழி பெயர்ப்புகள் செய்து கொடுத்தார். அதில் கிடைத்த வருமானத்தில் வாழ்ந்தோம். மகனுக்கு யாழ் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தது.

20190324_1053461990 – “ ஆண்டு கொழும்பில் வாழ ஆரம்பித்த பின்தான் எனது வாழ்வில் சிறிது அமைதி பிறந்தது. மூத்த மகளை சீதனம் எதுவூம் கொடுக்காமல் கனடாவில் வசித்த சற்குணம் அவர்களுக்கு திருமணம் செய்து கொடுக்க சந்தர்ப்பம் கிடைத்தது. சீதனம் இல்லாமல் என்றாலும் வெளிநாட்டு மாப்பிளைக்கு தங்கையை கலியாணம் செய்து கொடுப்பதில் மகனுக்கு விருப்பமில்லை. ஆனால் நீண்ட யோசனைக்குப் பிறகு இதற்கு உடன்பட்டோம்.

1991 – கணவரின் தங்கையும் அவரது கணவரும் இரண்டு மகள்மாரும் கொழும்புக்கு வந்து நம்முடன் இருந்தனர் அவர்களின் இரு மகன்மாரையும் பாஸ் நடைமுறை இருந்ததால் கிளிநொச்சியில் விட்டு விட்டு வந்தனர். இவர்களின் கடைசி மகள் ஆறுமாதக் குழந்தையாக வந்தார். இக் குழந்தையுடன் நாம் அனைவரும் அதிக அன்பு வைத்து நாமே வளர்த்தோம். இக் குழந்தையினால் குடும்பத்தில் மகிழ்ச்சி மட்டும் வரவில்லை. கணவர் குடியையும் கைவிட்டார்.

1991ம் ஆண்டு எனது தாயார் சிலாபத்தில் இறந்துபோனார். அப்பொழுது நான் கொழும்பிலிருந்தும் இந்த மரணத்தைப் பற்றி அறியவில்லை. ஆகவே செத்த வீட்டுக்குச் செல்லவில்லை.

1994 – இக்காலங்களில் மூன்று நேரங்கள் எனது பிள்ளைகளுக்கும் கொடுத்து நானும் சாப்பிடுவதற்கு உணவூ கிடைத்தது. அதுவூம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.

20190324_105328மார்கழி மாதம் முப்பத்தியோராம் நாள் மகனின் பிறந்த நாள். இரவூ உணவூ உண்பதற்காக அவனுக்காக நாம்; காத்திருந்தோம். அப்பொழுது எனது கணவரை இனந்தெரியாத ஆயூததாரி ஒருவர் என் கண் முன்னால் சுட்டுக் கொனறார். இதற்கு அரசியல் முரண்பாடுகளும் நாட்டில் நிலவிய முரண்பாடுகளும் காரணமாக இருந்தது. இந்த நிகழ்வில் எனது மூன்றாவது மகளும் காயம் அடைந்து மரணம் வரை சென்று பின் பிழைத்து வந்தார். எனது கணவரின் கொலை நான்; பிள்ளைகளுடன் வெளிநாட்டிற்கு குடி பெயர்வதற்கான விமானச் சீட்டையூம் அங்கு வாழ்வதற்கான நிரந்த குடியூரிமையையூம் பெற்றுக்கொடுத்தது. இலங்கையில் வாழ்வதற்கு எந்தவிதமான ஆதரவூம் அடிதளமும் இல்லாத நிலையில் எனது பிள்ளைகளுடன் நாட்டை விட்டு வெளியேறினேன். நம்முடன் கணவரின் தங்கையின் கடைசி மகளையும் அழைத்துச் சென்றோம்.” கனடாவில் மகளும் மருமகனும் இருந்தமை நாம் செல்வதற்கு வசதியாக இருந்தது.

இவ்வாறு 30 வருடங்களாக ஒழுங்கான வீடு மற்றும் வருமானம் இல்லாது எனது கணவர் சென்ற இடம் எல்லாம் அவரின் பின்னால் எனது குழந்தைகளுடன் இழுபட்டேன். நான்; இதுவரை எனது சொந்த வீட்டில் வாழ்ந்ததில்லை. இது எனது கனவில் மட்டுமே சாத்தியமானது. அவரால் இறுதிவரை அதை நிறைவேற்ற முடியவில்லை”

1996 – கனடா சென்று ஆறு மாதங்களில் மூத்த மகளுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. சில காலங்களின் பின்பு மூன்றாவது குழந்தையும் பிறந்தது. இரண்டாவது மகளுக்கும் கரவெட்டியைச் சேர்ந்த ஜெகநாதனுடன் திருமணம் நடைபெற்றது. மூன்று பேரக் குழந்தைகளுடனும் எனது குழந்தைகளுடனும் காலத்தை மகிழ்வுடன் கழித்தேன்.

20190324_1053162008 – மீண்டும் 2008ம் ஆண்டு எனது இரண்டு சகோதரிகளும் என்னைப் பார்க்க கனடா வந்தபோது சந்தித்தேன். அதில் ஒரு சகோதரியை 40 வருடங்களின் பின் முதன் முதலாக சந்தித்தேன். ஆண் சகோதர்கள் மூவரை பல ஆண்டுகளாக இன்னும் சந்திக்கவேயில்லை. ஒரு ஆண் சகோதரர் எங்கே இருக்கின்றார் என்றே தெரியவில்லை.”

2011 – “இப்பொழுது எனக்கு 65 வயது. எனது பேரப்பிள்ளைகள் வளரும் மட்டும் அவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். இப்பொழுது வார இறுதி நாட்களில் முதியோர் ஒன்று கூடல்களுக்குச் சென்று வருவதுடன் தொலைக் காட்சி நாடகங்கள் பார்ப்பதிலும் காலங்கள் கழிகின்றன.”

2016 – “நான் இறப்பதற்கு முன் எனது சகோதரர்கள் சகோதரிகள் அனைவரையூம் ஒன்றாகச் சந்தித்து அவர்களுடன் ஒரு நாளாவது ஒன்றாக இருப்பதற்கு விரும்புகின்றேன்.”
குழந்தைகளும் மருமக்களும் பேரக் குழந்தைகளும் எனது 65வது பிறந்த நாளை பெரிதாக கொண்டாடினார்கள்.

2019 – பெப்பிரவரி மாதம் நிசாந்திகாவின் திருமணம் விமர்சையாக நடந்தது. மிகவும் மகிழ்ச்சியா இருந்தேன். பேரக்குழந்தைகளுடன் நடனமாடினேன்.

18.03.2019 அம்மாவின் கடைசித் தேநீர்

1553395531839

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: