Posted by: மீராபாரதி | May 18, 2019

அஞ்சலியும் அவதூறும் முரண்பாடுகளும்

அஞ்சலியும் அவதூறும் முரண்பாடுகளும்

indexமே 18 ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு யுகத்தின் முடிவு. ஒரு வரலாற்றின் முடிவு. அந்த வரலாறு மக்களுக்கான விடுதலையை மட்டும் தரலாமல் முடிந்துபோனது சோகம். அது ஏன் அவ்வாறு முடிந்தது என்பதை நாம் ஆராயவேண்டும். துக்கம் அனுஸ்டிப்பது நினைவு கூருவது எல்லாம் அவசியமானவை. முக்கியமானவை. ஆனால் நாம் விடுதலையை நோக்கிப் பயணிக்க அக நோக்கிப் பார்த்து நமது தவறுகள் என்ன என்பதை கண்டறிய வேண்டும். அதுவே ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக மரணத்தவர்களுக்கு செய்கின்ற சரியான அஞ்சலியாக இருக்கமுடியும். அல்லது மே 18 நிகழ்வுகள் பத்தோடு பதினொன்றாக கடந்து சென்றுவிடும். மக்கள் மட்டும் வழமையைப் போல ஒடுக்குமுறைக்குள்ளும் அடக்குமுறைகளுக்குள்ளும் வாழ வேண்டியதுதான். இந்தடிப்படையில் ஈழதமிழர்கள் முன்னெடுக்கும் அஞ்சலிகள் அவதூறுகள் முரண்பாடுகள் தொடர்பான சிறு அலசல் இதுவாகும்.

13007357_10156932645035637_8798797280762352843_nகருணாநிதி அவர்கள் மிகத் தீவிரமான திராவிட அரசியற் செயற்பாட்டாளர். பகுத்தறிவாளர். சொற்பொழிவாளர். தமிழகத்தில் பெரியார் அண்ணாதுரை ஆகியோருக்குப் பின்பு உருவான முக்கியமான ஆளுமை. தமிழகத்தில் வாழும் ஏழு கோடி தமிழர்களின் அல்லது பெரும்பான்மைத் தமிழர்களின் தலைவர். பெரும்பான்மையான உலகத் தமிழர்களால் போற்றப்படுகின்றவர். மதிக்கப்படுகின்றவர். இதில் நாம் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. மேலும் இந்திய இராணுவத்தை வரவேற்காமை. ஈழத்திற்காக தனது ஆட்சியை இழந்தமை என ஈழம் தொடர்பாகவும் பல செயற்பாடுகளை உறுதியாக முன்னெடுத்தார். இதனால் ஈழத் தமிழர்கள் மத்தியிலும் மதிப்பை பெற்றார். இவை எல்லாவற்றுக்காகவும் இவருக்கு அஞ்சலி செய்வது தமிழகத் தமிழர்களினது மட்டுமல்ல ஈழத் தமிழர்களினதும் பொறுப்பாகும்.

பெண் போராளி சோபாஒரு நண்பர் குறிப்பிட்டதுபோல இவர் சமூகத்திற்காக செயற்பட்டது 70களின் முற்பகுதி வரையே எனலாம். அதன் பின் குடும்ப அரசியலுக்குள் சிக்கிவிட்டார். தனது குடும்பதையே பிரதானமாக முன்னிறுத்தி அரசியலை முன்னெடுத்துள்ளார். தி.மு.க பெயருக்குத்தான் ஒரு ஜனநாயக கட்சி. ஆனால் நடைமுறையில் அல்ல. அவ்வாறு இருந்திருப்பின் அண்ணாதுரையின் பின்பு கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக வந்திருக்க முடியாது. ஆனால் அவ்வாறு வந்தமைக்கு அதில் பல சூழ்ச்சிகள் நடந்தன எனக் கூறப்படுவதுண்டு. ஏன் இப்பொழுது கூட ஸ்டாலின் தலைவராக வந்திருக்க முடியாது. ஸ்டாலின் கீழ் மட்டத்திலிருந்து வேலை செய்திருந்தாலும் கட்சிக்குள் நடைபெறவேண்டிய ஜனநாயக முறைமைக்குள்ளால் தலைவராகவில்லை. மாறாக கட்சித் தலைமையை நோக்கி திட்டமிட்டு வளர்க்கப்பட்டவர் அவர். இவ்வாறு கட்சியையும் தலைமையையும் அதன் மீதான அதிகாரத்தையும் தன் குடும்ப நலன்களுக்காக தாரைவார்த்தவர் கருணாநிதி என்றால் மிகையல்ல. மேலும் இவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இறுதிவரை செயற்பட்டவருமல்ல குரல் கொடுத்தவருமல்ல. இந்தவகையில் இவர் ஆழமான விரிவான விமர்சனத்திற்கு உட்பட்டவரே. மேலும் கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழுக்கும் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை எனப் பிரபலமான முக்கியமான ஈழக் கவிஞர் ஒருவர் குற்றம்சாட்டி முகநூலில் விமர்சித்தார். ஆக மொத்தத்தில் பார்க்கும் பொழுது நேர்மறையான பங்கை விட எதிர்மறையான பங்கையே சமூகத்திற்கு விட்டுச் சென்றுள்ளார் என்றால் மிகையல்ல.

images1கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துகின்ற ஈழத் தமிழர்களின் முரண்நகை இங்குதான் உள்ளது. குறிப்பாக புலி எதிர்ப்பாளர்கள் கருணாநிதி அவர்களுக்கு விழ்ந்து விழ்ந்து அஞ்சலி செலுத்துகின்றனர். அவரது அரசியலுக்காக தமிழுக்காக உரைகளுக்காக எழுத்துக்காக அஞ்சலி செலுத்தலாம். அதில் ;நியாயம் உள்ளது. ஆனால் அவரது அரசியல் செயற்பாடுகளின் அடிப்படையில் அஞ்சலி செலுத்துவது நியாயமா? இவரது கடந்த கால ஆட்சிகளில் எந்தளவு மக்கள் நலன்கள் முதன்மைப்படுத்தப்பட்டன? எந்தளவு பொருளாதரா முன்னேற்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன? பகுத்தறிவுக்கு ஆதரவாகவும் மத, சாதி, ஆணாதிக்க ஆதிக்கங்களுக்கு எதிராகவும் எந்தளவு செயற்பட்டுள்ளார்? இவற்றை ஒழிப்பதற்கான ஆரோக்கியமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டனவா? என்றால் எல்லாமே கேள்விக்குறி தான். இவரும் இறுதியில் சதாரண ஒரு அரசியல்வாதியாகவே வளரவில்லை. கீழ்; இறங்கிவிட்டவர். அவருக்கு விழ்ந்து விழ்ந்து அஞ்சலி செலுத்தும் புலி விரோத ஈழத் தமிழர்கள் பிரபாகரனுக்கு மட்டும் அஞ்சலி செலுத்த தயங்குவது ஏன்?

images (10)பிரபாகரன் அவர்களிடம் கருணாநிதியைப் போல தமிழ் அறிவு இல்லாவிட்டாலும் அவரைவிட அதிகம் தமிழர்கள் குறிப்பாக ஈழத் தமிழர் விடுதலைக்காகப் பங்களித்தவர். தன்னை அர்ப்பணித்தவர் எனலாம். கருணாநிதியைப் போல குடும்பத்தை முதன்மைப்படுத்தி அரசியல் செய்யவில்லை. தனது குடும்பத்தையே தான் நம்பிய ஒன்றுக்காக பலியிட்டவர். இறுதிவரை தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றவர். இது தவறான நிலைப்பாடாக இருந்தபோதும் அதில் அவர் சமரசம் செய்து தன்னையோ தனது குடும்பத்தையோ வளர்க்கவில்லை. மற்றும்படி போலித்தனமான ஜனநாயகப் போர்வை போர்த்திய  தி.மு.கட்சியின் அதிகாரத்துவ சக்தியான கருணாநிதிபோல போல விடுதலைப் புலிகள் இயக்கமும் ஜனநாயகப் போர்வை போர்த்தாத பிரபாகரனின் அதிகாரத்தின் கீழ் இயங்கிய இயக்கம் என்றால் மிகையல்ல. இங்கு கருணாநிதி ஜனநாயக முகமுடி அணித்துள்ளார். பிரபாகரன் முகமுடி அணியாது வெளிப்படையாக இருந்துள்ளார் எனலாம். பிரபாகரனிடம் ஆயுதம் இருந்தது. கருணாநிதியிடம் ஆயுதம் இருக்கவில்லை. இருந்திருந்தால் இவரும் எத்தனை பேரை துரோகி என கொன்றிருப்பாரோ யார் அறிவார்? கருணாநிதியுடன் ஒப்பிடும் பொழுது பிரபாகரன் சமூக உலக அறிவற்றவராக குறிப்பாக தமிழறிவற்றவராக பேச்சாற்றளற்றவராக கருதப்படுவதுண்டு. ஆனால் கருணாநிதி அவர்களிடம் இருந்த தமிழறிவும் பேசும் ஆற்றலும் எதற்குப் பயன்பட்டன என்ற கேள்வியே முக்கியமானது. இப்படியான ஒருவருக்கு அஞ்சலி செய்யலாம் எனின் நிச்சயமாக பிரபாகரனுக்கு பல மடங்கு அஞ்சலி செய்யலாம். தவறில்லை. புலி எதிர்ப்பு வாதிகளின் இவ்வாறான சந்தர்ப்பவாதம் ஒரு புறம்.

மறுபுறம் தமிழ் தீவிர புலி ஆதரவாளர்களின் சந்தர்ப்பவாதம். எழுத்தில் மட்டும் தீவிரமாக செயற்படும் தமிழ் தேசிய வாதிகள் சிலர் கருணாநிதியின் முதிய வயதிலும் அவர் சாகட்டும், இருந்தும் என்ன? இறந்தும் என்ன? எனப் பலவாறு மிக மோசமாகத் திட்டினார்கள். இதற்கு அவர்கள் சொன்ன காரணம் ஈழத்திற்காக ஒன்றும் செய்யவில்லை, படுகொலை நடந்தபோது செயற்படாமல் இருந்தார் போன்ற குற்றச் சாட்டுகளையும் முன்வைத்து அவரை மரணப்படுக்கையிலும் வைத்து நையப்புடைத்தனர். இவ்வாறு செய்தமை அநாகரிகமான செயற்பாடு கண்டிக்கப்பட வேண்டியது என்றால் மிகையல்ல. அதேநேரம் கருணாநிதியை நம்பியா போராட்டத்தை ஆரம்பித்தீர்கள்? என்ற கேள்வியை இவர்களைக் நோக்கி கேட்க வேண்டும். மேலும் அவர் தமிழர் என்பதற்காக ஈழத்தமிழர் இல்லையே. அந்தவகையில் அவரின் எல்லை மட்டுப்படுத்தப்பட்டது என்பதை ஏன் புரிய மறுக்கின்றோம். அப்படிப்பார்த்தால் அவரது காலத்தில் அவரது எல்லைக்குள் நின்று பலவற்றை ஈழத்திற்காக செய்துள்ளார் என்றால் மிகையல்ல. இதற்கும் மேல் அவரிடம் எதிர்பார்ப்பது அநாகரிகம் மட்டுமல்ல நியாயமுமற்றதுமாகும்.

balaசரி அவர் தவறு விட்டார் என ஏற்றுக்கொள்வோம். ஆனால் நாம் நமது போராட்டத்தை என்ன செய்தோம்? போராட்டத்திற்கு என்ன பங்களித்தோம்?
விடுதலைப் புலிகளின் தலைவர் என்ன செய்தார்? கொள்கையில் உறுதியாக இருந்தால் மட்டும் போதுமா? தனது குடும்பத்தையே பலி கொடுத்தால் மட்டும் போதுமா? இன்று ஈழத் தமிழர்களின் விடுதலையே கேள்விக்குறியாக இருப்பதற்கு காரணம் என்ன?  சும்மா எல்லாவற்றுக்கும் சர்வதேசத்தை காரணம் கூறாமல் நம்மிடமிருக்கின்ற தவறுகளை அதற்கான காரணங்களை அறிய வேண்டும். தன்னையும் பலி கொடுத்து போராட்டத்தையும் நடுத் தெருவில் விட்டு விட்டல்லவா சென்று விட்டார் பிரபாகரன். அதுமட்டுமா, தன்னை நம்பிவந்த போராளிகளையும் மக்களையும் மட்டுமல்ல கட்டாயப்படுத்தி பிடித்த சிறுவர்களையும் அல்லவா இராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டு சென்றார். போராட்டத்தை ஏதேச்சதிகாரமாக தனது கைகளில் தூக்கிய அவர் எப்படி போராளிகளையும் மக்களையும் கைவிட்டு செல்லலாம்? இதற்கான பொறுப்புக்கூறல் எங்கே? இறுதிக் கணங்களிலாவது அதை செய்திருக்க வேண்டாமோ? எங்களது தவறுகளை மறைத்துவிட்டு எப்பொழுதும் நமது தோல்விக்கான காரணங்களை மற்றவர்களில் தேடுகின்றோம். நமக்கு வெளியில் தேடுகின்றோம். உண்மையில் எங்களுக்குள் தோல்விக்கான காரணங்களைத் தேடவேண்டும். நாம் என்ன தவறு செய்தோம்?

index1கருணாநிதிக்கும் பிரபாகரனுக்கும் அரசியல் செயற்பாட்டாளர் போராளித் தலைவர்கள் என்றடிப்படையில் அஞ்சலி செய்ய வேண்டும். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இவர்களின் அரசியல் போராட்டம் எந்தளவிற்கு மக்களின் விடுதலைக்கு சுதந்திரமான வாழ்விற்கு பங்களித்த என்பது தொடர்பான தயவுதாட்சணிமின்றி விமர்சனத்திற்கு உள்ளாக வேண்டும். மக்களுக்காவே தலைவர்கள் அன்றி தலைவர்களுக்காக மக்களில்லை.
imagesஙமே 18 போர் முடித்துவைக்கப்பட்ட நாள். இருப்பினும் சிங்களப் பேரினவாத அடக்குமுறைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக சரியான பாதையிலோ தவறான பாதையிலோ பலர் போராடினார்கள். இறுதியில் அனைவரும் தோல்வியைத் தழுவினார்கள். இருப்பினும் அவர்கள் ஒவ்வொருவரினதும் பங்களிப்புகளை நினைவு கூர்ந்து நாம் அவர்களுக்கு அஞ்சலி செய்ய வேண்டும். இந்த நாளில் நமது வேறுபாடுகளை மறந்து அந்தத் தலைவர்களுக்கும் போராளிகளுக்கும் மக்களுக்கும் அஞ்சலி செய்வோம். மே 18 உடன் மட்டும் இந்த அஞ்சலிகளும் நினைவு கூரல்களும் நின்றுவிடக் கூடாது. இவை ஈழத் தமிழர்களின் வாழ்வில் ஒரு பகுதியாக வரவேண்டும். அவ்வாறான வாழ்வு முறைகளை உருவாக்க வேண்டும். இதுவே புதிய தலைமுறை சரியான வழிகளில் போராட்டத்தை முன்னெடுக்க வழிவகுக்கும்.
download (21)அடக்குமுறையிலிருந்து விடுதலைபெறவும் நலமான வாழ்வை நோக்கி பயணிப்பதும் எவ்வாறு என சிந்திப்போம் செயற்படுவோம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: