Posted by: மீராபாரதி | May 2, 2018

ஒன்டாரியோ மாகாணத் தேர்தல் – என்டிபிக்கு வாக்களிக்கலாமா?

ndpகனடா: ஒன்டாரியோ மாகாணத் தேர்தல் – என்டிபிக்கு வாக்களிக்கலாமா?

கனடாவிற்கு 1996ம் ஆண்டு வந்ததிலிருந்து எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் தீவிரமாக இணைந்து செயற்படவில்லை. சில நம்பிக்கையீனங்களே காரணமாக இருந்தன. இருப்பினும் புதிய ஜனநாயக கட்சியே ஆதரவு செய்வதற்கு நெருக்கமானதாக இருந்தது. அதற்கான ஆதரவுவை மட்டும் மனதளவிலும் நண்பர்கள் உறவினர்கள் மத்தியிலும் வழங்கி வந்தேன். அந்தவகையில் கனேடிய அரசியல் வாதி ஒருவரின் மரணச் சடங்குக்கு சென்றது என்றால் அது புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக் லேடன் அவர்களின் மரணச் சடங்குக்கே மட்டுமே இதுவரை சென்றுள்ளேன்.

ndp1ஜக் லேடன் தலைமையில் பல போராட்டங்களை முன்னெடுத்தபோதும் 15 வருடங்களுக்கு முன்னால் போல் மாட்டினின் லிபரல் மத்திய ஆட்சிக்கான தனது ஆதரவை மீளப் பெற்று இல்லாமல் செய்தார். இதற்கு கொள்கை ரீதியான காரணங்கள் இருப்பினும் அவர் உருவாக்கிய ஓரேஞ் அலையினால் தான் பிரதமராகலாம் என்ற கணிப்பும் நம்பிக்கையும் இன்னுமொரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் நடந்தது என்ன? இதன் விளைவாக அதன்பின் வந்த பத்தாண்டுகள் ஹாப்பர் தலைமையில் பழமைவாதக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்தது. ndp2இக் காலங்களில் பழமைவாதக் கட்சியின் அரசு தொழிலாளர்களுக்கும் குடிவரவாளர்களுக்கும் சுற்றுச் சுழலுக்கும் எதிரான பல சட்டங்களை இயற்றினார்கள். இதனடிப்படையில் ஜக் லேடன் எதற்காகப் போராடினாரோ அதற்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வழிசமைத்தவரும் ஆனார் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுவதுண்டு.

ndp6இன்று பிரிட்டிஸ் கொலம்பியா அல்பேட்டா மாகாணங்களில் புதிய ஜனநாயக கட்சி ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் இந்த இரு மாநிலங்களிலுமுள்ள தலைமைகளும் மசகு எண்ணையைக் கொண்டு செல்வதற்காக குழாய் வழி அமைக்கும் திட்டத்தில் ஒரு உடன்பாட்டிற்கு வரமுடியாமல் முரண்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனைப் பழமைவாதக் கட்சிக்கு சார்பான சன், நெசனல் போஸ்ட் போன்ற பத்திரிகைகள் நையாண்டி செய்து எழுதுவதுடன் இவர்கள் ஒன்டாரியோவில் ஆட்சியமைத்தால் எப்படி இருக்கும் என்றும் கேள்வி கேட்டு வாக்காளர்களைக் குழப்புகின்றார்கள். அவர்களின் இவ்வாறான கபட நோக்கத்திற்கு அப்பாலும் கட்சி என்றளவில் இந்த விடயம் தொடர்பான பொதுவான நிலைப்பாடு ஒன்று தேசிய மாகாணளவில் அவர்களிடம் இல்லையா என்பது கடுமையான விமர்சனத்திற்கு உரியதே. மாகாணங்களின் வருவாய் எந்தளவு முக்கியமோ அதற்காக முன்னெடுக்கப்படும் திட்டங்களில் மக்கள் குறிப்பாக பழங்குடி மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்புகள் ஏற்படக் கூடாது என்ற அக்கறை இருக்க வேண்டும்.   ndp5முற்போக்கு கட்சி என்றடிப்படையில் இது தொடர்பான பொதுவான நிலைப்பாடு இருக்குமாயின் இந்த மாகாணங்களை ஒரே கட்சி ஆட்சி செய்த போதும் முரண்பாடு ஏற்பட்டிருக்காது ஆனால் ஏன் முரண்பாடுகள் ஏற்படுகின்றன? கட்சியின் தவறா? தலைமையின் தவறா? அல்லது தனிநபர்களின் தவறா? அல்லது அதிகாரத்திற்கு வந்தபின் ஏற்படும் மனக் குழப்பமா? இவ்வாறான குழப்பம் கொண்டதாக என்டிபியின் மாகாண கட்சிகளும் தேசிய கட்சியும் இருக்கும் பொழுது எந்த நம்பிக்கையில் இவர்களுக்கு வாக்களிப்பது?

ndp3மேலும் என்டிபி் கட்சியினர் தேர்தலுக்காக தமது பிரதிநிதிகளை தேர்வு செய்வதிலும் பொறுப்பற்ற அக்கறையற்ற தன்மைகள் காணப்படுகின்றன. தோற்கின்ற கட்சிக்கு யார் நின்றால் என்ன என்ற மனப் போக்கே இதற்கான காரணமாக இருக்கின்றதோ என்ற சந்தேகம் உள்ளது. இதுவும் இவர்களுக்கு வாக்களிக்கும் ஆர்வத்தை இல்லாமல் செய்கின்றன. மேலும் இவர்களின் தொடர்ச்சியான செயற்பாடின்மைகளும் இவர்களுக்கான ஆதரவவை வழங்குவதற்கு தடையாக இருக்கின்றன. ஓன்டாரியோவில் பல வேலைகளை முன்னெடுத்திருக்கலாம். குறிப்பபாக பாலியல் கல்விக்கு எதிராக பழமைவாதிகள் எந்தளவு ஊக்கமாக வேலை செய்கின்றார்கள். அதைவிடப் பன்மடங்கு என்டிபி கட்சி வேலை செய்திருக்க வேண்டும். இத் திட்டத்தை லிபரல் கட்சி கொண்டுவந்திருப்பினும் சரியானதொன்றை ஆதரிப்பதுதான் ஆரோக்கியமானது. இதேபோல சுற்றுச் சூழல் தொடர்பாகவும் செயற்பட்டிருக்க வேண்டும். இவ்வாறான பல செயற்பாடுகளின்மையினால்தான் ஒன்டாரியோ மாகாண என்டிபி கட்சி எப்பொழுதும் அல்லது பெரும்பாலும் மூன்றாம் இடத்தில் நின்கின்றது.

ndp4அதேநேரம் பழமைவாதக் கட்சியினர் தாம் வெல்வதற்காக லிபரல் கட்சியின் வாக்குகளைப் பிரிக்கும் நூண் அரசியலிலும் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் லிபரல் கட்சியிலுள்ள இடது சிந்தனையாளர்கள் என்டிபிக்கும் வலது சிந்தனையாளர்கள் பழமைவாதக் கட்சிக்கும் பிரிந்து வாக்களிக்கும் நிலை ஏற்படலாம். அவ்வாறு ஏற்படுமாயின் நிச்சயமாக பழமைவாதக் கட்சி இலகுவாக வென்றுவிடும். இந் நிலையில் இந்த வருடம் நடைபெறப் போகின்ற ஒன்டாரியோ மாகாணத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது? ஆதரவளிப்பது என்பது மிக முக்கியமானதாக இருக்கின்றது.

உண்மையில் பழமைவாதக் கட்சியை ஒன்டாரியோவில் தோற்கடிக்க வேண்டுமானால் என்டிபியும் லிபரல் கட்சியும் கூட்டாக இணைந்து செயற்படுவதே ஒரே வழி. எந்த இடங்களில் எல்லாம் வழமையாக என்டிபி வெற்றி பெறுமோ அந்த இடங்களில் என்டிபி வேட்பாளர்கள் நிற்க மற்ற இடங்களில் லிபரல் கட்சியினர் போட்டி போடலாம். இதன் மூலம் அதிக வாக்குகளையும் பிரதிநிதிகளையும் பெற்று பழமைவாதக் கட்சியைத் தோற்கடிக்கலாம். ஆனால் இவ்வாறு செயற்பட ஒருவரும் தயார் இல்லை. ஆகவே இனிவரும் பத்து வருட காலம் ஒன்டாரியோவில் போராட்ட காலமாகவே இருக்கும் என நம்பலாம்.

அடுத்து யாருக்கு வாக்களிப்பது அவசியம்?
அதற்கு அடுத்தது கட்சிகளுக்கு இடையிலானன வேறுபாடுகள் எத்தனை வீதம்?

மீராபாரதி
மே 1
தொழிலாளர்கள் தினம் என்பது வெறுமனே நினைவு கூருவதற்கானது மட்டுமல்ல.
அவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதும் ஆகும்..
மேலும் தொழிலாளர்களின் உரிமைகள் மட்டுமல்ல சம்பள உயர்வு, சம வாய்ப்புகள், சம ஊதியம், பாலியல் கல்வி, இலசவக் கல்வி, இலவசக் குழந்தை பராமரிப்பு, இலவச முதியோர் பராமரிப்பு, மற்றும் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது என பல உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகப் போராடுவதே மே தினத்தை நினைவு கூருவதாகும்.

படங்கள் நன்றி கூகுள்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: