Posted by: மீராபாரதி | June 3, 2017

இலக்கிய அரசியல் – பாற்கடலில் நீந்தினேன்

இலக்கிய அரசியல் – பாற்கடலில் நீந்தினேன்

downloadயாழ் நோக்கிய யாழ் தேவி பயணத்தில் மக்கத்துச் சால்வை எஸ்.எல்.எம் ஹனீபாவின் பாற்கடலில் நீந்திக்கொண்டிருந்தேன். முத்துக்கள் பலவற்றைக் கண்டிருப்பேன் என்பதை ஹனீபாவின் பெயரை வாசித்தபோதே உணர்ந்திருப்பீர்கள். இவருக்கு அறிமுகம் தேவையில்லை. பேராசிரியர் சிவதம்பி அவர்கள் தமிழ் சிறுகதைத் துறையின் பங்களிப்பாளர்களில் ஒருவர் ஹனீபா அவர்கள் என்கின்றார். மேலும் இவரது “சிறுகதைகள் சிற்பியின் பிரதிமைகளா, ஓவியரின் சித்தரிப்புக்களாக நவீன தமிழிலக்கியத்திற்கு நிச்சயமாக வளம் சேர்க்கின்றன” என்கின்றார். இவற்றை மனதில் கொண்டு காலச்சுவடு வெளியிட்ட ஹனீபா அவர்களின் அவளும் ஒரு பாற்கடல் என்ற நூல் தொடர்பான எனது எண்ணங்களையும் உணர்வுகளையும் பதிவு செய்கின்றேன். இந்த வயதிலும் துடிப்புடன் சுவை ததும்ப எழுத்திக் கொண்டிருப்பவர் ஹனீபா அவர்கள். மேலும் நம்மை மட்டுமல்ல அவரது வீட்டை தேடி வருவோருக்கு அவரது வாசல் மட்டுமல்ல இதயமும் திறந்தே இருக்கின்றது. உரிமையுடன் பழகிய அவரின் படைப்புகளை உரிமையுடன் விமரசனக் குறிப்புகளை எழுதுவதை ஏற்பார் என்ற நம்பிக்கையில் பின்வரும் குறிப்புகளை முன்வைக்கின்றேன்.images (3)

முதல் கதை வேலி யை வாசித்தபோது ஏமாற்றமடைந்தேன். கதையில் வரும் பெண் பாத்திரம் தான் விரும்பியவருடன் வாழாமல் மீண்டும் கணவனுடன் சேர்கின்றது. இவ்வாறு மீள சேர்ந்தபோதும் தனது உணர்வுக்கு மதிப்பளித்து தான் விரும்பியவருடன் உறவு கொண்டபின் தனது கணவருடன் வாழும்  முடிவை எடுத்திருக்கலாமே என உணர்ந்தேன். பெண் வேலியை கடந்து செல்ல முடியாதவாறு படைப்பாளரைத் தடுப்பது எது? இவ்வாறு கேள்விகள் எழுந்தபின் எழுதிய காலத்தைப் பார்த்தேன். 1970ம் ஆண்டு என இருந்தது. சரி அப்பொழுது படைப்பாளர் சமூக கட்டுப்பாடுகளை கடக்காதவராக இருந்திருப்பார் என நினைத்துக் கொண்டு தொடர்ந்தும் வாசித்தேன். ஆனால் பாலியல் தொழிலாளியின் உரிமைக்காக சன்மார்க்கம் கதையில் 1968ம் ஆண்டே குரல் கொடுத்திருப்பார். இக் கதையை வாசித்தபின் முதல் கதையில் படைப்பாளர் தொடர்பாக ஏற்பட்ட எண்ணம் மாறுபட்டது. பிறவிகள் கதை பலவகையில் முக்கியமானது. சமூகத்தால் ஏற்கப்படாத காதலால் உருவான குழந்தை. அதை எறிந்து விட்டு “கன்னி”யாக மீண்டும் திருமணம் செய்யும் பெண். அத் திருமணத்திலையே எறியப்பட்ட குழந்தை அநாதையாக சாப்பிடுவதையும் மரணிப்பதையும் மனதை உருக்கும்படி படைத்திருப்பார். இப்பொழுது இவரது படைப்புகளில் ஏழைகளில் அன்பு அதிகம் என்றும் பணக்காரர்களில் அது குறைவென்றும் கூறுகின்றார் எனப் புரிந்து கொண்டேன். ஆனால் வேட்டை க்குச் சென்று திரும்பியபோது, படைப்பாளர் ஏழை பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடுகளை மட்டும் உரையாடவில்லை. அதற்கும் மேலாக மனித உணர்வுகள் உணர்ச்சிகள் தொடர்பாகவும் உரையாடுவதுடன் சமூகத்தின் கண்ணாடியாகவும் இருக்கின்றார் என உணர்ந்தேன். ஆனால் இக் கதையில் தனது துணைவியார் இன்னுமொருவருடன் உறவு கொள்வதைக் கண்டபோது கதாநாயகன்  அடிவயிறு புரட்டியதாகவும் காறித் துப்பியதாகவும் பதிவு செய்கின்றார். இது துணைவியாரின் செய்கை தொடர்பான படைப்பாளரின் நிலைப்பாடா அல்லது சமூகத்தில் ஆண்கள் இவ்வாறுதான் இருக்கின்றார்கள் என்பதைக் கூறுகின்றாரா என்பது கேள்வியாகவே இருந்தது.

download (1)குளிர் தென்றல், யோக்கிய கண்கள் உட்பட பல கதைகளில் ஆண்களின் பார்வைகள் யோக்கியமானவை என்கின்றார். தபஸ் என்ற கதையில் ஆண் பெண் உறவையும் துணைவிக்காக ஏங்கும் ஆணின் உணர்வையும் வெளிப்படுத்தியிருப்பார். இவ்வாறு ஆண்களின் நற்பண்புகளை மட்டும் கூறுவது பெண்களுக்கு எதிரான பார்வைகளை படைப்பளார் கொண்டுள்ளாரா? தனது சமூக மதக் கட்டுப்பாடுகளை கடக்க முடியாது தவிக்கின்றாரா? என்ற எண்ணங்களையும் எழுப்பியது. அதேவேளை பல கதைகளில் பெண்களின் பாடுகளை உணர்வுபூர்வமாக பதிவு செய்துள்ளமை எனது எண்ணங்களைக் கேள்விக்குள்ளாக்கியது. உதாரணமாக கணவனைப் பிரிந்து தனிமையில் இருக்கும் பெண்ணும் அவள் தொடர்பான சமூகத்தின் பார்வையையும் ஒரு விமர்சனம் ஆக முன்வைத்திருப்பார். மேலும் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியின் உணர்வுகளையும் அவள் வாழ்வையும் சலனம் ஆக சித்தரித்திருப்பார். இதேபோல மச்சி இராணுவத்தால் பாலியல் சுரண்டலுக்கும் வன்புணர்வுக்கும் உள்ளாக்கப்பட்டு எப்படி கொல்லப்படுகின்றார் என்பதை விபரித்திருப்பார். மேலும் வறுமை மற்றும் பல்வேறு சமூகக் காரணங்களால் இளம் பெண்களை வயதுபோன ஆண்கள் திருமணம் செய்கின்றனர். இதனால் பெண்கள் வெறுமனே பொம்மைகள் தானா? எனக் கேள்வி கேட்கின்றார். இறுதியாக போர்ச் சுழலில் மக்கள் மட்டுமல்ல போராளிகளும் வயது போனவர்களை கைவிட்டுப் போவதை மருமக்கள் தாயம் சொல்லுகின்றது. இவ்வாறு இவரது சிறுகதைகள் சமூகத்தின் பல தட்டுகளில் வாழும் மனிதர்களைப் பற்றிய பன்முகப் பார்வைகளையும் திசைகளையும் காண்பிப்பதாக இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக பெண்கள் தொடர்பான இவரது காதலும் ஈர்ப்பும் அவதானிப்புகளும் இரசிக்கத்தக்கவை.

images (2)ஒரு தொழிலாளி எவ்வாறெல்லாம் தனது முதலாளிக்காக உழைத்தபோதும் தொழிலாளிக்கு மிஞ்சுவது மரணமே என்பதை அழகாக திசைகள் இல் வெளிப்படுத்துகின்றார். தீட்டு எவ்வாறு சமூக நம்பிக்கைகள் உயிர்களைப் பலி கொள்கின்றன என்பதையும் மருத்துவம் கை வைத்தியத்தின் எல்லையையும் ஆங்கில வைத்தியத்தின் அவசியத்தையும் கூறுகின்றன. ஆனால் இன்று ஆங்கில வைத்தியம் முக்கியத்துவமானதாக இருந்தபோதும் அதன் பக்கவிளைவுகள் காரணமாக கவனமாக பயன்படுத்தும்படி எச்சரிக்கை செய்வதுடன் இயற்கை மருந்தே சிறந்தது என வலியுறுத்தப்படுகின்றது என்பதை மனங்கொள்ளல் முக்கியமானது. மேலும் பேய்கள் தொடர்பான மனப் பயத்தை பேய்களுக்கு ஒரு வாழ்க்கை! யில் அலசுகின்றார். இவற்றைவிட போட்டிகளும் மரியாதைகளும் எவ்வளவு போலியானவை என்பதையும் நேர்மையும் அன்பு எந்தளவு மனிதர்களை நெருக்கமாக்குகின்றது என்பதையும் மக்கத்துச் சால்வை கூறுகின்றது. இவ்வாறான அன்புடனும் உரிமையுடனும் தான் எம்மை வரவேற்று உபசரித்தார். அவ்வாறான ஒருவரின் நூலை விமர்சனபூர்வமாக பார்ப்பது என்பது சங்கடமானதுதான். ஆனால் அவருக்கு நேர்மையாக இருப்பது பிடிக்கும் என நம்புகின்றேன்.18557489_2057825724267677_1631833237886551469_n copy

இறுதியாக 1995ம் ஆண்டு சரிநிகரில் எழுதிய வெள்ளைக் காகம் என்ற கதையில் அன்றைய அரசியலை நையாண்டி செய்து விமர்சிக்கின்றார். மக்களின் இயலாமையை கட்டிப்போட்ட கால்கள் என்ற கதையில் விபரிக்கின்றார். யாருக்கு வோட்டுப் போட்டு என்ன? வீடுகள் கட்டிக் கூடுத்து என்ன?  நாடு சிங்க பௌத்த மயமாகின்றது. ஆனால் நாம் இன்னும் வோட்டுப் போட்டு நமது பிரச்சனைகள் தீரும் என நம்பி அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கின்றோம். இனி நமக்கென்ன? என ஒதுங்கியிருக்கப் போகின்றோமா? அல்லது ஆடுகள் நனைவதைப் பார்த்து….! அழுபவர்களைப் பார்த்து ஆதரிக்கப்போகின்றோமா அல்லது  நமது வாழ்வை நாமே தீர்மானிக்கப் போகின்றோமா? கடுகு மிக அழகான கதை. ஒரு குழந்தையின் மழலை மொழி கொஞ்சி விளையாடுவது மட்டுமல்ல சமூகத்தின் நாட்டின் நடப்புகளையும் அந்த மொழியிலையே அழகாக எளிமையாக வெளிப்படுத்தியிருப்பார். (மீண்டும்) ஆயுதம் தூக்குமளவிற்கு கோவம் வருகின்றது என்கின்றார்.

இப்படியாக யாழ் நோக்கிய பயணத்தில் முஸ்லிம் சமூகம் தனது அக புற முரண்பாடுகளுடன் ஆடி ஆடி குளுங்கி குளுங்கிப் பயணித்தது. என்னுடன் ஹினிபாவும் அவருடைய நண்பர்களும் உறவினர்களும் பயணித்தனர். நாவற்குழி பாலத்தை புகையிரதம் கடந்தபோது “யாழ் வரவேற்கின்றது” தூரத்தில் கண்டி வீதியில் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

மீராபாரதி.

நன்றி உமாவரதராஜன்

[21.05.2017] ஞாயிறு தினகரன் -பிரதிபிம்பம்

படங்கள் கூகுள்

18557489_2057825724267677_1631833237886551469_n

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: