Posted by: மீராபாரதி | January 21, 2017

தமிழகத்தின் எழுச்சி: அதிகாரத்திற்கு எதிரான குரல்

தமிழகத்தின் எழுச்சி: அதிகாரத்திற்கு எதிரான குரல்

16114977_10208421874610765_6042609719111608127_nஇந்திய அரசின் பல்வேறு ஒடுக்குமுறைகளையும் புறக்கணிப்புகளையும் எதிர்கொண்ட தமிழகம் இதுவரை கங்கு போல இருந்தது. ஆனால் எப்பொழுதும் அது எரிவதற்கு தயாராக இருந்துள்ளது. அந்த நெருப்பை மூட்டியது ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) மீதான தடை. இத் தடைக்கு எதிரான ஒரு சிறு நெருப்பு மட்டுமே மூட்டப்பட்டது. இன்று அது மக்களின் தன்னெழுச்சியான பெரும் போராட்டமாக கொழுந்து விட்டு எரிவதைக் காண்கின்றோம். ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) இன்று ஒரு குறியீடு. தமிழகத் தமிழர்களின் அடையாளத்தின் குறியீடு. அவர்களின் விடுதலைக்கான குறியீடு.

15977281_10208421819449386_805849504895841250_nஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) தடைக்கு எதிரான போராட்டம் என்பது இந்திய இந்தி இந்து மத அரச ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம். இந்திய அரசின் தமிழின அடையாள அழிப்புக்கு எதிரான போராட்டம். மேலும் தமிழ் மொழியையும் அதன் அடையாளத்தையும் மற்றும் தமிழக மக்களின் நலன்களையும் இந்திய அரசு  புறக்கணிக்கப்பதற்கு எதிரான போராட்டம். இது தமிழகத் தமிழர்களின் அடையாளத்திற்கான எழுச்சி. இன அடையாள உரிமைக்கான குரல். ொறுப்பற்ற தமிழக அரசுக்கு எதிரான ோராட்டம். தமிழக மக்கள் தமக்குள் இருக்கும் வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் கடந்து ஒன்றுபட்டு போராடுவதைக் காணும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஒடுக்கப்பட்ட ஈழத் தமிழராக புலம் பெயர்ந்து வாழும் தமிழராக அலைந்து திரியும் மனிதராக இதனை மகிழ்வுடன் வாழ்த்தி வரவேற்று ஆதரிப்போம்.

16194942_10208435123061968_7586500864340229669_nஇப் போராட்டத்தில் இன்னுமொரு மகிழ்வான விடயம் பொதுப்போக்குவரத்து வாகனங்களை எரிக்காது, அவற்றைத் தடைசெய்யாது, பொது இடங்களை தாமே சுத்தம் செய்து பொது மக்களுக்கும் பங்குபற்றாதவர்களுக்கும் அல்லது பங்குபற்ற முடியாத மக்களுக்கும் இடைஞ்சல்கள் ஏற்படாதவாறு அனைத்து ஒழுங்குகளையும் செய்துகொண்டு போராட்டத்தை முன்னெடுப்பதாகும். இதனைப் பார்க்கும் பொழுது மேலும் மதிப்பு கூடுகின்றது. மேலும் ஆடலும் பாடலும் பாராம்பரிய கலை நிகழ்வுகளுமாக போராட்டமானது ஆரோக்கியமான வழிகளில்  நடைபெறுவது முன்னேற்றகரமானது. இதுவே இனிவரும் காலத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்ட வழிமுறையாகும். இதற்கான முன்னுதாரணமாக தமிழக மக்கள் இருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. இறுதி முடிவுரை தொடருங்கள். உங்களுடன் ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவரும் அல்லது பெரும்பான்மையானவர்கள் இருக்கின்றார்கள்.

எல்லாப் போராட்டங்களுக்கும் விமர்சனங்கள் எழுவதுபோல இதற்கும் விமர்சனங்கள் எழுவது தவிர்க்க முடியாதது. குறிப்பாக ஈழப் போராட்டமானது ஆரம்பத்தில் ஒழுங்கான தலைமைகள் இன்றி தன்னெழுச்சியான போராட்டமாக ஆரம்பித்து இறுதியில் தவறான கைகளுக்கு போராட்டம் சென்று தோற்றுப் போனது. இது நாம் கற்க வேண்டிய முக்கியமான ஒரு பாடம். இன்று தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் இவற்றை உள்வாங்கிக் கொண்டு தம் சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் அகம் நோக்கிப் பார்த்துக் கொண்டு சுயவிமர்சனங்கள் மூலமாக மாற்றங்களை ஏற்படுத்தி முன்னேறுவார்கள் என நம்புகின்றேன். இப் போராட்டத்தில் இவர்கள் பெறும் வெற்றி தமிழகத் தமிழ் சமூகத்தில் காணப்படும் அக அடக்குமுறைகளான சாதிய பெண்ணிய பால் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராட வித்திடும் என எதிர்பார்க்கின்றேன்.

16114523_10208415146082556_1770520165597846136_nகாலம் காலமாக மக்கள் தன்னெழுச்சியாகவே தம் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராட ஆரம்பித்திருக்கின்றார்கள் என்பதை வரலாற்றை அறிந்தவர்கள் எவரும் புரிந்து கொள்வார்கள். இப் போராட்ட உணர்வையும் அவை உருவாகும் சந்தர்ப்பங்களையும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட இயக்கங்கள் கட்சிகள் கவனித்து தலைமை தாங்கி முன்னெடுத்து வெற்றியை மட்டும் அல்ல சமூக மாற்றத்தையும் நோக்கி வழிநடாத்தி உள்ளார்கள். ஆனால் தூரதிர்ஸ்டவசமாக அவ்வாறான இயக்கமோ கட்சியோ தமிழகத்தில் இல்லை. ஆகவே பலர் குறிப்பிடுவதுபோல தலைமயின்றி கட்சியின்றி இயக்கமின்றி மக்கள் தன்னார்வத்துடன் தன்னெழுச்சியாக போராட்டத்தில் இணைகின்றனர். உறுதியாகவும் நிற்கின்றார்கள். இது இவர்கள் தவறல்ல.

இப் போராட்டம் தவறான  சிந்தனைகளின் கோட்பாடுகளின் அடிப்படைகளிலும் வழிகளிலும் செல்கின்றது என விமர்சிப்பவர்கள் முதலில் தம்மை சுயவிமர்சனம் செய்து கொள்ளவேண்டும். ஏனெனில் இவ்வாறு விமர்சிப்பவர்களின் ொடர்ச்சியான செயற்பாடின்மையே இவ்வாறான தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் பொழுது தலைமை கொடுக்க முடியாத நிலைமையை உருவாக்குகின்றது. தவறான சக்திகளின் கைகளுக்கு போராட்டத்தின் தலைமையும் அதனால் கிடைக்கும் வெற்றிகளும் நலன்களும் சென்றடைகின்றன. மேலும் குறிப்பிட்ட இலக்கை அடைந்தவுடன் உருவான எழுச்சியானது அடங்கிவிடுகின்றது. இவற்றுக்கு போராடுகின்ற மக்களை குறை சொல்லக் கூடாது. மாறாக தம்மை சுயவிமர்சனம் செய்து கொண்டு தமது தவறை ஏற்றுக் கொள்ள வேண்டும். தமது செயற்பாடின்மைகளே இவ்வாறு நடைபெறுவதற்கான காரணம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதுவே ஒரு புரட்சிகர செயற்பாட்டாளரின் பார்வையாக இருக்க முடியும்.

ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) சாதிய விளையாட்டு என்கின்றார்கள் சிலர். இன்னும் சிலர் இது தமிழகத்தின் பொதுவான விளையாட்டு இல்லை என்கின்றார்கள். இதற்கு மாறாக சிலர் எல்லா சாதிகளும் விளையாடும் விளையாட்டு என்கின்றார்கள். தமிழகத்தின் பொதுவான விளையாட்டு என்கின்றார்கள். ஒரு விளையாட்டு தொடர்பாக இவ்வாறான முரண்பட்ட கருத்துகள் வருவதற்கு காரணம் என்ன? இந்த விளையாட்டு தொடர்பான விரிவான ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. அல்லது அவ்வாறு மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அக் கருத்துகள் பொதுஜன கருத்தியலாக மாற்றம் பெறவில்லை. இத் தவறு போராடுகின்றவர்களின் தவறல்ல. மாறாக இத் துறை சார்ந்து செயற்படுகின்ற கற்றவர்களினதும் புரட்சிகர செயற்பாட்டாளர்களினதும் தவறே இது என்றால் மிகையல்ல. இவர்கள் தமது பொறுப்பை செவ்வனே செய்யாது போராடுகின்ற மக்கள் மீது விமர்சனங்களை முன்வைத்து குறை கூறுவது தவறான செயற்பாடு மட்டுமல்ல தமது செயற்பாடின்மையை மறைக்கு செயற்பாடுமாகும். ஆனால் இப் ோராட்டம் ஒரு உண்மையைப் புலப்படுத்துகின்றது. அது ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) தமிழகத்தின் அடையாளம்.

தமிழகத்தில் மிகக் கொடூரமான சாதிய ஒடுக்குமுறைகள் நிலவுகின்றன. பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு சுரண்டப்படுகின்றன. குழந்தைகளின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு சுரண்டப்படுகின்றார்கள் விவசாயிகள் தற்ொலை செய்கின்றார்கள். இவற்றை ஜல்லிக் கட்டு தடைக்கு எதிரான போராட்டம் போல வெகுஜன கருத்தியலாக மாற்ற முடியாமைக்கான காரணங்களை கட்டுபிடித்து களையவேண்டும். இதனை செய்யாமல் குறை கூறுவது அர்த்தமற்றதாகும். அதேவேளை இன்றைய போராட்டமானது மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளின் தமிழக மக்களின் பொதுவான உணர்வின் வெளிப்பாடு என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அதாவது இந்திய அரசின் ஏதேச்சதிகாரத்திற்கு எதிரான உணர்வு. அதுவே வெகுஜன உணர்வாக வெளிப்பட்டு போராட்டமாக வெடித்துள்ளது. இதில் தமிழக சமூகத்தில் அடக்குபவர்களும் அடக்குமுறைக்கு உள்ளாகின்றவர்களும் ஒன்றாக ஒடுக்கப்படுவதாக உணர்கின்ற புள்ளி இது. போராட்டம் என்பது இவ்வாற பல முரண்பட்ட புள்ளிகளைக் கொண்டது. வெறுமனே வெள்ளை கருப்பு என்ற இருமை பார்வைக்கு அப்பால் நாம் பார்க்க வேண்டி தேவை உள்ளது என்பதை ஒவ்வொரு போராட்டமும் நமக்கு உணர்த்துகின்றன.

16003303_10208438556547803_8092641002427498152_nசரியான பார்வையுள்ள தலைமைகள் மக்களின் இந்த எழுச்சிக்கு தலைமை கொடுக்குமாயின் இந்திய தேசிய இனங்களின் ஒன்றிய அரசு அமைவது வெகுதுரத்தில் இல்லை. அந்த நாளை எதிர்பார்த்து நம்பிக்கையுடன். ஏனெனில் அவ்வாறான இந்திய அரசு ஒன்றின் உதயம்தான் இந்திய தேசிய இனங்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் மட்டுமல்ல ஈழத் தமிழ் தேசத்திற்கும் ஏன் சிங்கள தேசத்திற்கும் கூட நன்மையளிப்பதாகும்.

தமிழக மாணவர்களுக்கும் இளைஞர்களும் முன்பு ஈழத் தமிழர்களுக்காக போராடிய பொழுது ஒரு விமர்சனக் கடிதம் எழுதியிருந்தேன். இன்று இவர்கள் தன்னெழுச்சியாக தம் உரிமைக்காக ஒன்றுபட்டு போராடுவதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியுடன் ஆதரவு தெரிவித்து ஒரு பதிவை எழுதுவது அவசியம் எனக் கருதுதினேன். இது எனது பொறுப்பும் கூட. அதன் விளைவே இப் பதிவு.

போராட்டத்தை வரவேற்றும் ஆதரித்தும்

மீராபாரதி

படங்கள் காட்டுனீஸ்ட் பாலா

வாசிக்க வேண்டிய கட்டுரைகள்
கீற்று இணையத் தளக் கட்டுரை

சாதியால் ஒடுக்கப்பட்டரின் குரல்

விமர்சனக் கடிதம்

Advertisements

Responses

  1. http://newpopewatch.com/2017/01/07/hello-world/


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: