Posted by: மீராபாரதி | August 8, 2016

பல்கலைக்கழக இன முரண்பாடு: ஒரு அரசியல் முரண்பாடு

பல்கலைக்கழக இன முரண்பாடு: ஒரு அரசியல் முரண்பாடு

images41991ம் ஆண்டு ஆரம்பத்தில் ஒரு நாள். காலை பத்து மணி இருக்கும். நாம் கொழும்பு பல்கலைக்கழக இரசாயண பரிசோதனைக் கூடத்தில் இருக்கின்றோம். தீடிரென ஒரு குண்டுச் சத்தம் கேட்கின்றது. பரிசோதனைக் கூடங்களிலிருந்த சமான்கள் விழுகின்றன. நாம் வெளியில் ஒடுவதா உள்ளே விழுந்து படுப்பதா எனத் தெரியாமல் திண்டாடி வெளியில் ஓடிவந்தோம்.

images1என்னுடன் வந்த நண்பர்கள் ஜாதிக்க சிந்தனையை சேர்ந்தவர்கள். பல்கலைக்கழகத்திற்கு நான் வந்தபோது அவர்கள் என்னை வரவேற்று உறவானார்கள். அவர்களின் அரசியல் நிலைப்பாட்டுடன் உடன்பாடு இல்லாதபோதும் அவர்களின் சமூகத்தின் மீதான அக்கறையை மதித்து அவர்களுடன் நட்பாக இருந்தேன். ஜாதிக்க சிந்தனைக்கு எதிரானவர்கள் அன்றைய பிரேமதாசா அரசாங்கத்திற்கு சார்பான “அல” மாணவர்கள். சமூக அக்கறையற்ற அரசியலைக் கொண்டவர்கள். அவர்களுடன் இருப்பது முற்றிலும் உடன்பாடானதல்ல. இருப்பினும் அவர்களிலும் எனக்கு நண்பர்கள் இருந்தார்கள். எந்தப் பகுதியானாலும் பெரும்பாலானவர்கள் இன முரண்பாட்டு அரசியலில் இனவாத நிலைப்பாடு உடையவர்கள் என்பதை அறிந்து கொண்டேன்.

indexகுண்டுச் சத்தம் றோயல் கல்லூரி சிறுவர் பாடசாலை பக்கம் இருந்து கேட்டது. அனைவரும் சிறுவர் பாடசாலைக்குத்தான் புலிகள் குண்டு வைத்துவிட்டார்கள் என நினைத்தார்கள். நாம் சத்தம் கேட்ட திசையை நோக்கி நடக்கின்றோம். என்னுடன் வந்த ஒரு நண்பன்(?) சொன்னார், “குழந்தைகள் இறந்திருந்தால் உன்னை இப்பொழுதே கொல்வேன்” என்றார். அவன் சொன்னதைக் கேட்டு நான் பயப்பிடவோ கோவப்படவோ இல்லை. பக்கத்தில் வந்த நண்பர்களும் அவன் சொன்னதை எதிர்க்கவில்லை. அனைவரும் அமைதியாக ஆனால் உணர்ச்சியுடன் நடந்த இடத்தை நோக்கி செல்கின்றோம். இராணுவ கூட்டுத் தலைமையகத்தில் குண்டு வெடித்திருந்தது. புலித் தலைமைகளின் களையெடுப்புக்கு பயந்து யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து இடம் பெயர்ந்த ஒரே ஒரு (சுடச் சுட) யாழ் தமிழ் மாணவனாக 1991ம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழத்தில் நான் எதிர்கொண்ட சூழ்நிலை இதுவாகும்.

பல மாணவர்களின் போராட்டங்களின் நான் கலந்து கொள்வதுண்டு. ஒரு முறை மாணவர்களும் எதிர்கட்சிகளை இணைத்து அன்றைய பிரமேதாசாவின் ஐ.தேக அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்தார்கள். சந்திரிகா பிரபல்யமாக வந்து கொண்டிருந்த நேரமது. யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து இடம் பெயர்ந்த மாணவராக எனக்கும் உரையாற்ற ஒரு இடம் தந்தார்கள். அனைத்து தலைவர்களும் பேசி முடிய இறுதியாக எனது பேச்சிருந்தது. தலைவர்கள் அனைவரும் பேசிவிட்டு சென்றுவிட்டனர். என்னைப் பேச அழைத்தபோது வெளியில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் அனைவரும் மண்டபத்திற்குள்ளே ஓடிவந்ததைக் கண்டேன். நான் புலிகளின் தலைமைகளுக்கு எதிராக இருந்தபோதும் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தவன். எனது பேச்சும் அவ்வாறே இருந்தது. மேலும் அனைத்து சிங்கள கட்சிகள் மீதும் விமர்சனங்களை முன்வைத்தே எனது உரையை ஆற்றினேன். பலருக்கு அவர்களது மேடையில் அவர்களையே விமர்சனம் செய்தமை பிடிக்கவில்லை. இருப்பினும் ஜேவிபி லக்திவ என்ற பத்திரிகையை இரகசியமாக ஜனரஞ்சமாக ஆனால் அரசியல் நோக்கத்துடன் வெளியீட்டுக் கொண்டிருந்தனர். அப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் விமல் வீரவன்ச ஆசிரியராக இருந்தார். அடுத்த நாள் அவர் என்னை சந்தித்து எனது நேர்காணல் ஒன்றையும் அதன்பின் ஒரு கட்டுரை ஒன்றையும் தனது பத்திரிகையில் பிரசுரித்தார். அவ்வாறான விமல்வீரவன்ச இந்த நிலைக்கு மாறுவார் என நினைத்ததில்லை. அரசியலில் எப்பொழுதும் மனிதர்களுடன் அல்ல நமது நிலைப்பாட்டுகளுடன் உறுதியாக இருப்பதுதான் சரியானது.

இதே நேரம் எனக்கும் இன்னுமோரு தமிழ் மாணவனுக்கும் மிகவும் கஸ்டமான ராக்கிங் தந்தார்கள். அந்த மாணவன் அதன்பின் பல்கலைக்கழகம் வரவில்லை. பல மாணவர்களின் இதன் பின் வந்த ஆண்டுகளில் கொழும்பு, யாழ் மற்றும் கிழக்கு தமிழ் முஸ்லிம் மாணவர்கள் பலர் வந்தார்கள். இரண்டு வருடங்களின் பின்பு சில சிங்கள மாணவர்களுடன் சேர்ந்து ஜாதிக்க சிந்தனையின் ஆதிக்கமாக பல காலம் இருந்த விஞ்ஞான பீட மாணர் அமைப்பை கைப்பற்றி மாற்றங்களை ஏற்படுத்தியது வேறு கதை. ராக்கிங்கும் சில காலம் இல்லாதும் போனது.

17994jaffna-university-6000கொழும்பு பல்லைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்படுவது வழமை. இது பார்ப்பதற்கு வெறுமனே மாணவர் குழு மோதலாகத் தென்படும். ஆனால் இதன் பின் ஒரு அரசியல் இருக்கின்றது. பெரும்பாலும் சகல பீடங்களிலும் ஜாதிக்க சிந்தனையின் மாணவர் அணியின் ஆதிக்கமே அதிகம் இருந்தது. இப்பொழுது மந்திரியாக இருக்கின்ற பரணவித்தான அப்பொழுது கலைப் பீட மாணவர் தலைவராகவும் கொழும்பு பல்கலைக்கழக மாணவர் தலைவராகவும் இருந்தவர். இவரும் யாழ் பல்கலைக்கழ மாணவர் முரண்பாடுகளை விசாரிக்க சென்ற குழுவில் இருந்தமை கவனிக்கதக்கது. ஜாதிக்க சிந்தனைக்கு எதிரானவர்கள் “அல” எனக் கூறப்படுவார்கள். இவர்கள் பெரும்பாலும் அரச சார்பானவர்கள். இவர்களை ஜாதிக சிந்தனையைக் சேர்ந்தவர்கள் சில நேரங்களில் கருத்து முரண்பாடுகளை பேசித் தீர்க்காமல் தூரத்தித் தூரத்தி அடிப்பார்கள். இன்னுமோரு மாணவர் குழு இருந்தது. இது பெரும்பாலும் சட்ட பீடத்தில் ஆதிக்கத்திலிருந்தது. இவர்கள் பழைய சுதந்திர மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் (ஐஎஸ்யு). 1990களுக்கு முதல் இன முரண்பாட்டிற்கு தீர்வாக சுயநிர்ணைய உரிமையை ஏற்றுக் கொண்டவர்கள். இந்திய இராணுவம் ஈழத்தில் நிலை கொண்டிருந்த காலத்தில் இயக்கங்களின் மாணவர் குழுக்களை சந்திக்க யாழ் வந்தவர்கள். ஆனால் பிற்காலங்களில் இவர்களது அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக ஜேவிபி இவர்களது தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலரை கொலை செய்தது. இதன விளைவாக இவர்கள் தூரதிர்ஸ்டவசமாக தம்மைப் பாதுகாக்க பிரேமதாசாவிடம் சரணடைந்தார்கள். அவரோ ஜேவிவியை அழிக்க இவர்களையும் பயன்படுத்திக் கொண்டார். விளைவு இவர்கள் அழிந்தார்கள். ஆனால் அதன்பின் இவர்கள் உதிரிகளாகவும் சின்னஞ்சிறு குழுவாகவும் திரிந்தார்கள். இவர்கள் அரசாங்க சார்பானவர்கள் என ஜாதிக்க சிந்தனை மாணவர்கள் இவர்கள் மீதும் தாக்குதல் நிகழ்த்துவதுமுண்டு. கொழும்புப் பல்கலைக்கழத்தில் நாமிருக்கும் வரை இந்த நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணமே இருந்தன. இப்படி சகல தென் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழங்களிலும் இன்றுவரை நடைபெறுகின்றன. இவை வெறுமனே மாணவர்களின் குழுச் சண்டைகளல்ல. இதன் பின் ஆழமான அரசியல் செயற்படுகின்றது.

images5இந்தப் பின்னணியில்தான். யாழ் பல்கலைக்கழத்தில் நடைபெற்ற மாணர்வகளுக்கு இடையிலான குழுச் சண்டைகளைப் பார்க்க வேண்டி உள்ளது. இந்த முரண்பாடுகள் தொடர்பாக சரியான பார்வையை தூரதிர்ஸ்டவசமாக தமிழ் தரப்பிலிருந்து யாரும் முன்வைக்கவில்லை. தேர்தல் காலங்களில் தமிழர்களின் பிரதிநிதிகள் எனக் கூறுவோரும் முன்வைக்கவில்லை. ஆனால் ஒரளவு அல்லது மிகச் சரியான பார்வையை களனி பல்கலைக்கழக வரலாற்றுத்துறை விரிவுரையாளர் கல்கந்தே தம்னந்த தேரர் அவர்கள் முன்வைத்தமை ஆச்சரியமாகவும் வரவேற்க கூடியதாகவும் இருந்தது. இவ்வாறான சில சிங்கள தலைவர்கள் தென்பகுதியில் உருவானால் இலங்கையில் இன ஒடுக்குமுறை இல்லாதுபோய் சமத்துவ வாழ்வு மலரலாம். ஆனால் நடந்த நிகழ்வுகளை அதை ஒரு கனவாகவே உறுதி செய்கின்றன. நாம் கொழும்பில் கற்ற காலத்தில் மாணவர் தலைவராக பேராதெனியவில் இருந்தவரும் இன்று அமைச்சரவையில் முக்கியமானவருமான சம்பிக்க ரணவக்கவின் இம்முரண்பாடுகள் தொடர்பாக முன்வைத்த இனவாதக் கருத்துக்கள் குறிப்பிடத்தக்கன.

images3இலங்கையின் ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு கலாசாரம் பண்பாடு உள்ளன. யாழ் குடாநாட்டில், வன்னியில், அனுராதபுரம் பொலநறுவையில், புத்தளம் சிலாபத்தில், திருகோணமலையில், அதனை அண்டிய பிரதேசங்களில், மட்டக்களப்பில், கல்முனையில், கண்டியில், கம்பளையில், காலியில், மாத்தறையில், மலையகத்தில், என ஒவ்வொரு பிரதேசத்திற்கும் வேறுபாடுகள் உண்டு. இந்த மண்களுக்கு வேவேறு விதமான மண் வாசனைகளும் மனித பழக்க வழக்கங்களும் உள்ளன. இதுவே இலங்கையின் அழகு. இதை நாம் பாதுகாக்க வேண்டும். ஆனால் இந்தப் பன்முகத்தன்மையை இல்லாது செய்து முழு இலங்கையிலும் ஒரேவிதமான சி்ங்கள பௌத்த (பேரினவாத) பண்பாடுகளை கலசாரத்தை உருவாக்கும் ஒரு முனைப்பின் விளைவுகள்தான் யாழ் பல்கலைக்கழக மாணவர் முரண்பாடுகள். இது யாழ் பல்கலைக்கழத்தில் மட்டுமல்ல மட்டு பல்கலைக்கழத்திலும் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளது.

index4கொழும்பில் நாம் படித்த காலத்தில் பொது நிகழ்வுகளில் சிங்கள பௌத்த கலாசாரதன்மைகளே பிரதானமாக இருந்தன. இவை மிக கலைத்தன்மையுடன் அழகியலாக காணப்படும் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த நிகழ்வுகளில் தமிழ் கூறுகள் சில சிங்கள மாணவர்களின் முயற்சியினால் மேடைகளில் மட்டும் காணப்படும். தென்பகுதி பல்கலைக்கழங்களில் முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தன்மைகளே காணப்பட்டன. இன்றும் காணப்படுகின்றன. இது தவறல்ல. ஆனால் ஒருபோதும் புதிய மாணவர்களை வரவேற்பதற்கு கண்டிய நடனத்தைப் பயன்படுத்தியதாக நினைவில்லை. அப்படி இருக்கும் பொழுது யாழ் பல்கலைக்கழத்தில் மட்டும் அதை முன்னிறுத்த வேண்டிய தேவை என்ன?

இலங்கை அரசும் அரசாங்கங்களும் நாட்டில் நிலவும் இன ஒடுக்குமுறை அம்சங்களை களைவதற்கான எந்த முயற்சிகளையும் இன்றுவரை எடுக்கவில்லை. அரசியல் சாசனத்தை மாற்ற முடியவில்லை, ஆகக் குறைந்தது சமஸ்டி முறையையாவது தீர்வாக அமுல்படுத்த முடியவில்லை, மாகாண அரசுகளுக்கு அதிகாரங்களைக் கூடப் பகிர முடியவில்லை. ஆனால் பெரிய இராணுவ முகாம்கள் இன்னும் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கின்றன. இப் பிரதேசத்து மனிதர்களின் வாழ்வில் நாளாந்தம் இவர்கள் இடையூறு செய்கின்றார்கள், புத்தர் சிலைகளை சந்திகள் சாக்கடைகள் எங்கும் முளைவிடுகின்றன. (இவை புத்தரையே அவமதிக்கும் செயல் என்பது வேறு ஒரு உரையாடல்), இதை எல்லாம் தடுத்து நிறுத்தாமல், இன ஒடுக்குமுறைகளுக்குத் தீர்வுகளை முன்வைக்காமல் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல், சிங்கள மாணவர்களை யாழ் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களுக்கு பெருவாரியாக திட்டமிட்டு அனுப்புவது மட்டும் தூரிதகதியில் செயற்படுத்தப்படுகின்றன. இதனூடாக சிங்க மக்களையும் குடியேற்றுகின்றார்கள். இவர்கள் இராணுவத்துடன் இணைந்து வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்த கலாசார பண்பாட்டு வேர்களை நிலைநாட்டுகின்றனர். இவை சிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பின் ஒரு வடிவமே என தமிழ் மாணவர்கள் உணர்வதில் தவறில்லை. ஏனெனில் இவர்களில் பலர் 2009ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பினால் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டவர்கள். இந்த வடுக்கள் இன்னும் ஆற்றப்படாது இவர்களது ஆழ்மனதில் உள்ளன. தமிழர்களின் மனங்களிலும் உள்ளன என்றால் மிகையல்ல.

imagesஇந்த மாணவர் குழுக்களின் முரண்பாடுகளில் கூட ஒரு பக்க (சிங்கள மாணவர்களின்) முறைப்பாடு மட்டுமே கவனத்தில் எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட (தமிழ்) மாணவர்களுக்கே மீண்டும் தண்டனை வழங்கியமை யார் அதிகாரத்தில் இருக்கின்றார்கள் என்பதை வெளிப்படையாக காட்டுகின்றது. (தகவல் டிபிஎஸ்). சமூகத்தில் எப்பொழுதும் ஒடுக்கப்படுகின்ற சமூகத்தினருக்கே (பெண்கள் மற்றும் சாதிகள்) தண்டனைகளும் கிடைப்பது ஆச்சரியமான முரண்பாடுகளாகும். இதற்கான தீர்வு ஒ்ன்றே ஒன்றுதான். முதலில் அரசாங்கம் இன ஒடுக்குமுறைகளுக்கு தீர்வை முன்வைக்க வேண்டும். இல்லையெனில் இவ்வாறான நிகழ்வுகள் எதிர்காலத்தில் தொடர்வது தவர்க்கமுடியாததும் ஆச்சரியமானதுமல்ல.

யாழ் பல்கலைக்கழகத்தில் ஒன்றை வருடங்கள் கற்றவன் என்ற நிலையிலிருந்து சில சுயவிமர்சனங்களும் செய்யக் கடமைப்பட்டவன். நாங்கள் புதிய மாணவர்களாக பல்கலைக்கழத்திற்குப் புகுந்தபொழுது எம்மை கருத்தடை ஆணுறைகளைத் தொங்கவிட்டே வரவேற்றார்கள். (நான் ஆணுறைகளுக்கு எதிரானவன் அல்ல ஆனால் அதைப் பயன்படுத்த வேண்டிய இடத்தில் பயன்படுத்த வேண்டும். அதற்கான தேவையை வேறு இடங்களில் பொறுப்புடன் வலியுறுத்த வேண்டும்.) தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை மிக மோசமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், அதற்கு எதிராகப் போராட்டம் ஒன்று மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அதுவும் இந்திய இலங்கை இராணுவங்கள் ஆக்கிரமித்திருக்கும் பொழுது இவ்வாறான வரவேற்பானது எனக்கு பல கேள்விகளை உருவாக்கியது. நமது போராட்டத்தின் அரசியலையும் அதில் மாணவர்களின் பங்களிப்பையும் அவர்களின் புரிதலையும் கேள்விக்குட்படுத்தியது. சில வருடங்களின் பின்பு கொழும்பு பல்கலைக்கழத்தில் கற்றபோது அவர்கள் புதிய மாணவர்களை வரவேற்றவிதம் அவர்கள் மீது மதிப்பை உருவாக்கியது.  மிகக் கலைத்தன்மையுடன் அழகியலாக அதை செய்தனர். ஒடுக்குகின்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு பண்பட்ட முறையில் செய்யும் பொழுது ஒடுக்கப்படுகின்ற இனத்தைச் சேர்ந்த விடுதலைக்காகப் போராடுகின்ற தமிழ் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் இதைவிட முற்போக்கான கலைத்துவத்துடனும் அழகியலுடனும் இவ்வாறான நிகழ்வுகளை நடாத்தியிருக்க வேண்டும். இவ்வளவு கால கசப்பான அனுபவங்களின் பின்பும் இப்பொழுதும் வரவேற்பதற்கு நாதஸ்வரத்தையும் மேளத்தையும் பயன்படுத்தியதைப் புரிந்து கொள்ளலாம். ஆணுறைகளைக் கொண்டு வரவேற்பதை விட முன்னேற்றமானதுதான். ஆனாலும் பறை போன்ற இசைக் கருவிகளைப் பயன்படுத்தாமல் இவற்றைப் பயன்படுத்தியதை கேள்விக்குட்படுத்தி சுயவிமர்சனங்கள் செய்ய வேண்டும்). பல மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்கும் சூழலில் இவ்வாறு ஒரு இன மத சார்புக் குறியீடுகளை அதுவும் அதைத் தமிழ் கலாசாரக் குறியீடுகளாகப் பயன்படுத்தியமை நாம் இன்னும் அரசியல் வறுமைக்குள் இருக்கின்றோம் என்பதையே வெளிப்படுத்துகின்றது. இது தமிழ் குறுந்தேசிய வாதத்தின் வெளிப்பாடு என்றால் மிகையல்ல. இதிலிருந்து விடுபட்டு முற்போக்கான தமிழ் தேசியவாதத்தை உயர்த்திப் பிடிக்கும் பொழுது நமது விடுதலை தூரத்திலில்லை என நம்பலாம்.

index5கடந்த காலங்களில் நடைபெற்ற தமிழர்களின் மீதான தாக்குதல்களின் போது சிங்களப் பகுதிகளில் கற்ற தமிழ் மாணவர்களை பல சிங்கள மாணவர்கள் தாக்கியபோதும் சில சிங்கள மாணவர்களாவது தம் உயிரைப்  பணயம் வைத்துக் காப்பாற்றியிருக்கின்றார்கள் என்பதை நாம் மறுக்கவோ மறக்கவோ கூடாது. இன்று யாழ் மற்றும் மட்டுவில் கல்வி கற்கின்ற சிங்கள மாணவர்களில் பலர் இனவாதிகளாக இருக்கலாம். சிலர் உண்மையான நட்புறவை நாடி வந்தவர்களாகவும் இருக்கலாம். ஆனால் இவர்கள் அனைவரும் பேரினவாத அரசின் அம்புகள். இந்த அம்புகள் தமிழ் மாணவர்களைத் தாக்கும் பொழுது அம்புகளை நோவதும் அதை முறிப்பதும் அர்த்தமற்ற செயற்பாடுகள். ஒரு புறம் நாம் சிங்கள மாணவர்கள் மீது எந்தவிதமான தாக்குதல்களும் நடைபெறாமல் பாதுகாக்க வேண்டும். மறுபுறம் சிங்கள அரசின் நோக்கத்தை அவர்களுக்கு முடிந்தளவு தெளிவுபடுத்த வேண்டும். நாம் சிங்கள மக்களின் எதிரிகளல்ல ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தின் பேரினவாத ஒடுக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிரானவர்கள் என்பதை மீள மீள உறுதி செய்ய வேண்டும். இதுவே சிங்கள மக்களையும் நமது போராட்டதை நோக்கி வென்றெடுப்பதற்கான பாதையாகும்.

தமிழர்கள் சிங்களவர்கள் எனப் பலர் இந்த முரண்பாடுகள் தொடர்பாக தமது கருத்துக்களை தமது அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் புரிதல்கள் அடிப்படையில் கூறியிருக்கின்றனர். இதற்கான இணைப்புகள் கீழே உள்ளன. இவை வாசிக்க வேண்டியவை. அதேநேரம் ஒடுக்குமுறை சமூகத்தை சேர்ந்தவர்கள் தமது சமூகத்தை விமர்சிக்காமல் ஒடுக்கப்படுகின்ற சமூகத்தை விமர்சிப்பதையும் அவர்களுக்கு ஆலோசனைகள் கூறுவதையும் ஒடுக்கப்படுகின்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உயர்த்திப்பிடிப்பது தமிழர்களின் அரசியல் வறுமையையே காட்டுகின்றது .

தமிழ் சிங்கள முஸ்லிம் மாணவர்களுக்கு இடையில் நட்பு சகோதரத்துவமும் இருக்க வேண்டும். அதை வரவேற்கின்றேன். எனக்கு மிக நல்ல சிங்கள நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்களில் சிலர் இன ஒடுக்குமுறை தொடர்பான விடயத்தில் எனக்கு எதிரான நிலைப்பாடு உடையவர்கள். அவர்களுடன் நட்பாக இருக்கின்ற ஒரே காரணத்தினால் எனது அரசியல் நிலைப்பாடுகளை விட்டுக் கொடுக்க முடியாது. இரண்டும் வேறு வேறு தளத்தில் சந்திக்க வேண்டியவை. நம் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசியலை ஒதுக்கிவிட்டு மறைத்துவிட்டு சிங்கள மாணவர்களுடன் நாம் ஆழமான நட்பு கொள்ளமுடியாது. இது ஒரு மேலோட்டமான நட்பாகவே இருக்கும். இதற்குமாறாக வெளிப்படையான உரையாடலும் நமது அரசியல் புரிதல்களும் அதன் மீதான உறுதியான நிலைப்பாடுமே உறுதியான நட்புகளை உருவாக்கும். இந்த புரிதல்கள் நம் மத்தியில் எல்லாப் பக்கத்திலும் மிகக் குறைவாகவே உள்ளன. இது தூர்ப்பாக்கியமானது. எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையீனத்தையே தருகின்றது. இதை மாற்றுவதும் நமது பொறுப்பே. அதன் விளைவுதான் இப் பதிவும்.

மீராபாரதி

இக் கட்டுரை தீபம் பத்திரிகையில் வந்ததை விட மேலும் திருத்தி எழுதப்பட்டது.
கட்டுரையை வெளியீட்ட தீபம் ஆசிரியர் குழுவினருக்கு நன்றி

 

அன்புள்ள பல்கலைக்கழக தோழர்களுக்கு , | யதார்த்தன்// 3e3;case”diversity”:return g.fillText(h(55356,57221),0,0),c=g.getImageData(16,16,1,1).data,d=c[0]+”,”+c[1]+”,”+c[2]+”,”+c[3],g.fillText(h(55356,57221,55356,57343),0,0),c=g.getImageData(16,16,1,1).data,e=c[0]+”,”+c[1]+”,”+c[2]+”,”+c[3],d!==e;case”simple”:return g.fillText(h(55357,56835),0,0),0!==g.getImageData(16,16,1,1).data[0];case”unicode8″:return g.fillText(h(55356,57135),0,0),0!==g.getImageData(16,16,1,1).data[0]}return!1}function e(a){var c=b.createElement(“script”);c.src=a,c.type=”text/javascript”,b.getElementsByTagName(“head”)[0].appendChild(c)}var f,g,h,i;for(i=Array(“simple”,”flag”,”unicode8″,”diversity”),c.supports={everything:!0,everythingExceptFlag:!0},h=0;hhttp://yatharthan.com/wp-includes/js/wp-emoji-release.min.js?ver=4.5.3http://yatharthan.com/wp-includes/js/jquery/jquery.js?ver=1.12.4http://yatharthan.com/wp-includes/js/jquery/jquery-migrate.min.js?ver=1.4.1// http://yatharthan.com/wp-content/plugins/jetpack/modules/related-posts/related-posts.js?ver=20150408

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: