Posted by: மீராபாரதி | May 4, 2016

மீராபாரதியின் ‘பிரக்ஞை’ – ஓர் பார்வை – முல்லைத்தீபன் வே

முல்லைத் தீபன்

முல்லைத்தீபன் வே

மீராபாரதியின் ‘பிரக்ஞை’ – ஓர் பார்வை
********************************

மீராபாரதி
°°°°°°°°°°°°°°°°

கடந்த 2014 ல் ஒரு சாயங்காலம்.. யாழ்/ஏ9 சாலையருகில்.. இலக்கியச் சந்திப்பொன்றில்.. ஒரு சாமியாரைப் போலொருவரைச் சந்தித்தேன்.

முகத்தில் நீண்டு தொங்கிக்கொண்டிருந்த தாடியையும், தலையில் ஒரு நூலால் நெய்த தொப்பியையும், ஒரு பக்கத் தோளில் தொங்கிய பயணப்பையையும், அந்த வயதிலும் கள்ளங்கபடமற்ற சின்னப்பிள்ளையின் சங்கடமற்ற சிரிப்பையொத்த.. இரத்தச் சிவப்புடைய உதட்டோரம் வழிந்த அந்த சிரிப்பையும் தனது குறியீடாகக் கொண்டு அமர்ந்திருந்தார் அமைதியின் உருவமான அவர்.

உண்மையில் ஓசோவின் மறு உருவமாகத் தெரிந்தார். தத்துவஞானிகள் பலரும் தாடி வளர்த்திருப்பார்கள். மீராபாரதியின் முகத்திலும் தாடிதான்.

அவருக்கு அருகிலிருந்து கதை பல பேசும் போது.. தனது இரண்டு புத்தகங்களை தந்திருந்தார். அதிலொன்றே இப் பிரக்ஞை.

பிரக்ஞை
°°°°°°°°°°°°°°

book headingதனிமனித மாற்றத்திலிருந்து சமூக மாற்றத்தை நோக்கி – இது ஓர் அறிவியியல் சார் உளச்சிகிச்சை நூலென்பேன் நான்.

தனிமனித தளத்திலிருக்கும் சிக்மன் பிரைட் சிந்தனையையும்.. சமூகத்தளத்திலிருக்கும் கால் மார்க்ஸ் சிந்தனையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் மீராபாரதி, பிரக்ஞை யை அறிந்திட இவ் ஒப்பீடு தவிர்க்க முடியாதது என்கிறார்.

பிரக்ஞை என்று ஒன்று இருக்குமானால்.. அது தொடர்பான புரிதலைப் பெறலாம். அல்லது இல்லை என்பதையாவது நிரூபிக்கலாம். ஆனால்.. இவ்வாறு முயற்சிக்காதிருப்பது தவறு எனவும் தனிமனித மாற்றம் என்பது சமூக மாற்றத்திற்கு சமாந்திரமாக நடைபெற வேண்டிய அவசியமானதொரு செயற்பாடு எனவும் கூறுகிறார்.

சரி.. இப் பிரக்ஞை என்றால் என்ன என்பதற்கு இவ்வாறு விளக்கம் தருகிறார்..

பிரக்ஞை எனும் சொல்லை ‘உயிர்ப்பூ’ சஞ்சிகையூடாக அறிந்தபின்பே இது தொடர்பாக ஆராய முற்பட்டிருக்கிறாராம்.

Awareness என்பதனை பலரும் ‘விழிப்புணர்வு’ எனப் பொருள் கொள்வர். ஆனால் இது ஒரு உணர்வு நிலையல்ல எனவும்.. மாறாக உணர்வுகள், சிந்தனைகள், செயற்பாடுகள், பார்த்தல், கேட்டல் என மனிதருக்குள்ளும் அவரைச் சுற்றி நடக்கின்ற அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் awareness உடன் இருக்கின்ற நிலையாகுமெனவும் கூறும் ஆசிரியர்.. இதனை ஒர் “விழிப்பு நிலை” எனக்கூறலாம் என்கிறார்.

meeraa back cover.....இறுதி வடிவம் சொற்களுடன்Consciousness என்பது மனிதர்களது ஒவ்வொரு செயற்பாடுகளையும் முழு மனப் பங்களிப்புடன் செயற்படப் பயன்படுத்துவதாகும் என்றும் இதனையே நாம் “பிரக்ஞை” எனப் பொருள் கொள்ளலாம் எனவும் கூறுகிறார் மீராபாரதி.

ஆக.. இவரூடாக நான் இப் பிரக்ஞை என்பதை.. தனிமனித அல்லது ஒரு சமூக புறச்செயற்பாட்டை இயக்குகின்ற அகவெழுச்சி எண்ணப்பாங்காக அல்லது சக்தியாக எடுத்துக்கொள்ளலாம் என கருதுகிறேன்.

கடந்த காலத்தில்.. இயக்கம், கட்சி, அரசியல், நாடகம், பத்திரிகை என 2000ம் ஆண்டு வரை ஒருவித புரட்சிகர சிந்தனையில் நம்பிக்கை கொண்ட மீராபாரதி.. கடந்த கால தனிமனித மற்றும் குழு முரண்பாடுகளுக்கு பிரக்ஞையின்மை ( unconsciousness) மற்றும் கூட்டுப் பிரக்ஞையின்மையே (collective unconsciousness) காரணம் என்பதை புரிந்து கொண்டுள்ளார். இதற்கு கடந்த காலத்தின் ஆதாரங்களையும் அவர் முன் வைக்கிறார்.

நாம் நம்புகின்ற ஒன்றுக்காக நம்மை முழுமையாக ஈடுபடுத்துவது.. குறிப்பாக சமூக மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலின் குறைபாடாகுமெனவும் குறிப்பிடுகிறார்.

அட்டன் ஹன்ட்ஸ் கல்லூரி, யாழ்/ பொண்ட் மற்றும் நியூ மாஸ்டர்ஸ், யாழ்/பல்கலைக் கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், யோக் பல்கலைக்கழகம் என்பவற்றில் கல்வி கற்றுள்ளார். ஓசோவினதும் சிக்மன்
பிரைட்டினதும் சிந்தனையால் அதீதமாகக் கவரப்பட்ட இவர்.. மற்றும் பல தத்துவஞானிகள் உளவியலாளர்களின் கோட்பாடுகளையும் கோடிட்டுக் காட்டுகிறார். பலவற்றை சமகாலச் சம்பவங்களினூடே நிறுவியும் போகிறார்.

தெளிவான சிந்தனைக்கும், அகப்புறச் செயற்பாடுகளின் இயங்கு நிலைக்கும் இப் பிரக்ஞை அவசியம் எனக் கருதும் ஆசிரியர்.. கட்டுரையின் பல இடங்களில் ‘தியானம்’ எனும் சொல்லை அழுத்திச் செல்வதினூடாக, பிரக்ஞை யின் அடிப்படையில் தியானம் அதிக செல்வாக்கு பெறுவதை உய்த்துணரக்கூடியதாக இருக்கிறது.

இலகுவான மொழி நடையில் எல்லோருக்கும் புரியும் படியாக.. இடையிடையே பொருத்தமான விளக்களுக்காக ஆங்கிலப் பதங்களையும் அடைப்புக்குறிக்குள் அடக்கிச் செல்லுகிறார்.

எனவே, அறிவியலுக்குள் அனைத்து ‘இயல்’ களும் அடங்குவதால்.. மீராபாரதியின் இப் ‘பிரக்ஞை’ முழுமையான ஓர் அறிவியியல் ஆய்வு நூலென்பதுடன்.. சந்தர்ப்பம் கிடைக்கும் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய நூலுமாகும்.

நூல்: பிரக்ஞை
ஆசிரியர்: மீராபாரதி
பதிப்பு: 2012 மே
பக்கங்கள்: 210
விலை: இல்லை
தொடர்பு: வ.க.செ.மீராபாரதி (முகநூல்)

03.05.2016 முல்லைத்தீபன் வே அவர்களால் முகநூலில் பதியப்பட்ட பதிவு இது.

பிரக்ஞை தொடர்பான மேலதிக விமர்சனங்களுக்கு பன்முகப் பார்வைகள் பக்கத்தைப் பார்க்கவும்.
https://meerabharathy.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: