Posted by: மீராபாரதி | April 6, 2016

கங்கு: கேள்விகளுக்கான பதிலைத் தேடி…

கங்கு தொடர்பான விமர்சனங்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்.

கங்கு தனலாய் தகிக்கும் மனிதர்களின் வாழ்வின் ஒரு துளி!

சமூகங்களில் காணப்படுகின்ற புற அடக்குமுறைகளாலும் அக ஒடுக்குமுறைகளாலும் புற அக முரண்பாடுகளை தம்முள் கொண்டு எண்ணங்கள், உணர்வுகள், உணர்ச்சிகளின் என்பவற்றின் கலவையாக தமக்குள் தனலாய் எரிந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்வின் ஒரு துளியே இந்த அரங்க ஆற்றுகை.12006086_10153203134357362_7688598352941605036_n

முதலில் இந்த வீடியோவில் இருக்கும் அரங்க அளிக்கையைப் பாருங்கள்.
அரங்கத்தில் நேரடியாக பார்க்கும் பொழுது ஏற்படும் அனுபவம் இப்படியான தொழிற்நுட்ப வசதிகளினுடாகப் பார்க்கும் பொழுது கிடைப்பது அரிது என்பதை அறிவோம். இருப்பினும் யாரும் இடைஞ்சல் செய்யாத வகையில் அமைதியான இருட்டான ஒரு அறையிலிருந்து பார்க்கும் பொழுது கொஞ்சமாவது இதன் அனுபவத்தைப் பெறலாம் என நம்புகின்றேன்.

கங்கு

பார்த்து முடித்துவிட்டீர்களா?
இப்பொழுது அரங்க அளிக்கையை பார்த்தவர்களிடம் சில கேள்விகள்.

kankuநடனமாடியவர்கள் யார்?
சபையிலிருந்து அதிகாரத்துவமான கட்டளைக் கூறிக் கொண்டு வந்தவர்கள் யார்?
இவர்கள் நடனமாடியவர்களை என்ன செய்தார்கள்?

அதிகாரம் யாருடைய கைகளுக்கு சென்றது?
அதிகாரம் மனிதர்களிடம் எவ்வாறு பகிரப்படுகின்றது?
நடனமாடிய இருவரும் மேடையின் பின்தளம் (UC) நோக்கி குறுகிய வட்டத்திற்குள் தள்ளப்பட்டது ஏன்?
யாரால் தள்ளப்படுகின்றார்கள்?
இறுதிவரை இவர்கள் பேசாமல் இருந்தது ஏன்?

மேடையின் நடுவில் குறிப்பிட்ட எல்லைக்குள் (RC – LC) மட்டும் பெண்கள் நின்றதற்கான காரணம் என்ன?

மேடையின் முன் தளங்களில் (DR – DL) ஆண்கள் மட்டுமே நின்றதற்கு காரணம் என்ன?

சால்வை எதன் குறியீடு?

பின்னால் இருந்தவர்களின் வெள்ளை சால்வை நிலத்தில் இருந்தது ஏன்?

மேடையின் இடது பக்க (LC) நடுவிலிருந்த பெண்ணின் சால்வை எப்பொழுதும் இடுப்பில் இருந்தது ஏன்?

மேடையின் வலது பக்க (RC) நடுவிலும் இடது முன் பக்கத்திலும் (DL) நின்ற பெண்ணினதும் ஆணினதும் சால்வைகள் ஏன் ஒரு நிலையில் இடுப்பிடும் ஒரு நிலையில் கழுத்திலும் இருந்தன?
மேடையின் வலது மூலையில் (DR) இருந்தவரின் சால்வை எப்பொழுதும் கழுத்தில் இருந்தது ஏன்?

ஏன் ஒரே மனிதர்கள் மாறி (DR/DL) மாறி (RC/LC) வேறு இடங்களில் நின்றார்கள்?
இவர்கள் ஒரே பாத்திரங்களா? வேறு வேறு பாத்திரங்களா?
எப்பொழுது நான்கு மனிதர்களும் இடுப்பில் சால்வையை கட்டினார்கள்?

ஏன் தம் அதிகாரங்களுக்கும் அதிகாரமின்மைக்கும் அப்பாற்பட்டு அனைத்துப் பெண்களும் ஒரு காட்சியில் வலிகளால் துடித்தனர்?

இறுதிவரை பேசாமலிருந்த இருவரும் சால்வையை தூக்கிக் கொண்டு முன்நோக்கி வந்தது ஏன்?

ஏன் ஒரு சமூகம் எதிர்நோக்குகின்ற பல்வேறு அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் முரண்பாடுகளையும் ஒன்றாக இணைக்கப்பட்டன?

தியான வழிமுறைகளை வெறுமன மதவாத ஆன்மீகத்துடன் போட்டுக் குழப்பிக்கொள்ளலாமா?

தியானம் சகல பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான வழி என இந்த அரங்க அளிக்கை கூறுகின்றதா?

முன் மேடையில் நடித்த நான்கு பேரும் யாருடைய குரல்களைப் பேசின?

இவர்கள் பேசியது அவர்களின் குரலா?

நாம் சிந்திப்பதும் பேசுவதும் எங்களுடைய குரல்களா?

எது எங்களுடைய உண்மையான குரல்?
அதை எவ்வாறு கண்டுபிடிப்பது?

நம் குரல்களை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் என்ன?

இறுதியாக எத்தனை பேர் என் மீதான முன்மதிப்பீட்டுடன் அரங்க அளிக்கையைப் பார்த்தீர்கள்? விமர்சித்தீர்கள்?

கங்குஇக் கேள்விகளுக்கான பதில்களை நமது அரங்க அளிக்கை தெளிவாகத் தரவில்லையெனில் அதற்கான முழுப் பொறுப்பையும் பிரதியை எழுதியவர் நெறியாள்கை செய்தவர் என்றடிப்படையில் நான் எடுத்துக் கொள்கின்றேன். மேலும் இந்த அரங்க அளிக்கையானது பிரச்சாரத்தொனியையும் பார்வையாளர்களிடம் குழப்பத்தையும் சலிப்பையும் ஏற்படுத்தியது எனின் அதற்கான பொறுப்பையும் நான் எடுக்கின்றேன். உங்கள் நேரத்தை வீணடித்தமைக்காக மன்னிப்பு கேட்கின்றேன்.

அதேவேளை அரங்க அளிக்கையைப் பார்த்தவர்கள் மேற்குறிப்பிட்ட கேள்விகளை தமக்குள் கேட்டு நாம் சொல்ல வருவதை புரிந்துகொள்ள முயற்சித்தீர்களா? அல்லது உங்களுக்கு இவ்வாறான கேள்விகள் தோன்ற இந்த அளிக்கை வழிவகுத்தா? இவ்வாறு கேள்விகளை முன்வைப்பது சிலநேரம் சிலருக்கு அதிகப்பிரசங்கித்தனமாக இருக்கலாம். ஆனால் உரையாடல் ஒன்றைத் தொடர்வதற்கு தேவையானது எனலாம்.  ஏனெனில் இந்த அரங்க அளிக்கை தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்தவர்கள் மேலே கேட்ட கேள்விகளுக்கான பதில்களையோ அல்லது அந்தக் குறியீடுகள் தொடர்பாகவோ எதையும் குறிப்பிடவில்லை. கவனத்தில் எடுக்காமல் தவறவிட்டுவிட்டார்கள். நேரடியாக தமது விமர்சனங்களை முன்வைத்த சிலர் மட்டுமே இவற்றைக் கவனித்துக் குறிப்பிட்டனர். இந்த அரங்க அளிக்கைப் பொறுத்தவரை இவை முக்கியமானவையாகும்.

Untitled

தீபம் விமர்சனம் – அரவிந்தன்

ஆகவே நமது அரங்க அளிக்கை தொடர்பான விளக்கத்தை தெளிவாக முன்வைக்க வேண்டியது தவறானப் புரிதல்களை தவிர்ப்பதற்கு அவசியமானது. அதற்காக இவ்வாறு எழுதும் நிலை ஏற்பட்டது துர்பாக்கியமானது. இது அரங்க அளிக்கையின் குறைபாடா அல்லது விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் தேடலற்ற தன்மையின் குறைபாடா என்பது உரையாடலுக்கு உரிய ஒரு விடயமே. குறிப்பாக என்னை ஏற்கனவே அறியாதவர்கள் மற்றும் சில பெண்கள் அளிக்கை நன்றாக இருந்ததாக கூறினார்கள். ஆனால் என்னை ஏற்கனவே அறிந்தவர்கள் இறுதிக் காட்சியை ஆன்மீகத்துடன் இணைத்துப் பார்க்கின்றார்கள். இது முன்மதிப்பீட்டு அல்லது சார்புநிலைப் பார்வையா என்பது கேள்விக்கு உரியது. ஏனெனில் விமர்சனங்கள் இவ்வாறு தனிநபர் சார்ந்துதான் முன்வைக்கப்படுகின்றன. இது தூர்ப்பாக்கியமான ஒரு நிலை. நான் ஏற்கனவே முன்வைத்த பிற அரங்க அளிக்கைகள் தொடர்பான விமர்சனங்களுக்கான எதிர்வினைகளாகத்தான் சில விமர்சனங்கள் இருக்கின்றன போல தோன்றுகின்றன. மாறாக இந்த அரங்க அளிக்கைக்கான விமர்சனம் என்பது குறைவாகவே உள்ளது.

நண்பர்களின் விமர்சனங்களை வரவேற்கின்றேன். உள்வாங்குகின்றேன். அதுவே கற்றலுக்கும் வளர்ச்சிக்குமான அடித்தளம். நண்பர்கள் முன்வைத்த சில விமர்சனங்கள். உதாரணமாக இது எனது முதலாவது அரங்க அளிக்கை என்பதால் சமூகத்திலுள்ள எல்லாப் பிரச்சனைகளையும்  ஒரே மேடையில் காண்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் தென்பட்டது . மற்றும் புலம் பெயர்ந்த சமூகங்களில் மட்டுமல்ல தாயகத்திலும் இப்பொழுது பெண்கள் மீதான அடக்குமுறை மற்றும் சுரண்டல்கள் இந்தளவு வெளிப்படையாக நடைபெறுவதில்லை. இவை மறைமுகமாக ஆனால் இன்னும் ஆழமாகவும் அதேநேரம் அழகியலுடன் மென்மையான முறையில் நடைபெறுகின்றன. ஆகவே பெண்கள் மீதான அடக்குமுறைகளை சுரண்டல்களை வெளிப்படையாக தெரிவித்தமை யதார்த்தமற்றதாக ஒருவித அந்நியத்தன்மையை ஏற்படுத்தியது. மேலும் புதிய தலைமுறையினரால் புரிந்து கொள்ளமுடியாதிருந்தது என்றனர். இறுதியாக சமூகத்தில் காணப்படுகின்ற சகல அடக்குமுறைகளுக்கும் ஆன்மீக வழியிலான தியானமே தீர்வு என்பது ஒருவகையான கொச்சைப்படுத்தலாக இருந்தது. இந்த விமர்சனங்களை அரங்க அளிக்கையின் குறைபாடாகவே கருதிக்கொண்டு அதற்கான பொறுப்பை நான் எடுக்கின்றேன். இனி மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கான பதில்களை பகுதி இரண்டில் தரமுயல்கின்றேன். இதுவே விமர்சனங்களுக்கான எனது பதிலாகும்.

நன்றி
மீராபாரதி

அரங்கு

முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள்
1.

கங்கு: புதுமையானது ஆனால் தெளிவானதில்லை – அரவிந்தன்

2.

கங்கு: பன்முக விமர்சனங்கள் – பகுதி – 1

3. கங்கு தொடர்பான விமரசனங்களுக்கும் கேள்விகளுக்குமான எனது பதில்கள்

Advertisements

Responses

  1. […] கேள்விகளை கேளுங்கள். அதன்பின் எனது கேள்விகளையும் தொடர்ச்சியாக அதற்கான பதில்களை […]

  2. […] கேள்விகளை கேளுங்கள். அதன்பின் எனது கேள்விகளையும் தொடர்ச்சியாக அதற்கான பதில்களை […]


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: