Posted by: மீராபாரதி | March 27, 2016

கங்கு: எனது அனுபவம்

கங்கு: எனது அனுபவம்

கங்கு2015ம் வருடம் மாசி மாதத்தின் ஆரம்பத்தில் சுமதி உயிர்ப்பு நிகழ்விற்காக ஒரு நாடகம் செய்ய முடியுமா என என்னைக் கேட்டார். எனக்கு ஆச்சரியம். நான் ஒருபோதும் நாடகம் ஒன்றையும் நெறியாள்கை செய்ததில்லை. ஆகவே எந்த நம்பிக்கையில் கேட்கின்றீர்கள் எனக் கேட்டேன். அதற்கு நான் எழுதும் கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு ஒன்றைச் செய்யலாம் என சக்கரவர்த்தி சொன்னதாக கூறினார். நானும் யோசித்து சொல்வதாக கூறினேன். சந்தர்ப்பங்களை தவறவிடுவதா இல்லையா சிந்திக்க ஆரம்பித்தேன். சில வாரங்களின் பின் ஒரு கருவை உறுதி செய்து கொண்டு அவர்களின் பங்களிப்புடன் செய்யலாம் என உறுதியளித்தேன்.12006086_10153203134357362_7688598352941605036_n

ஆதிக்க சமூக சக்திகளால் மனிதர்களிடம் எவ்வாறு சிந்தனைகள் ஊட்டப்படுகின்றன என்பதையும் ஒடுக்கப்பட்ட மக்களும் எவ்வாறு தம்மை ஒடுக்குகின்ற சுரண்டுகின்ற ஆதிக்க சிந்தனைகளையே உரையாடுகின்றனர் என்பதையும் சமூக (அக மற்றும் புற) வெளிகள் அனைத்துப் பாலினருக்கும் சம வாய்ப்புகளையும் பாதுகாப்புகளையும் வழங்குவதில்லை என்பதை வெளிப்படுத்தும் ஒரு நாடகப் பிரதியை குறிப்புகளாக எழுதினேன். முதலில் ஷேளியிடமும் பின் தேவ அபிராவிடமும் அபிப்பிராயங்களுக்காக காண்பித்தேன். அவர்களின் கருத்துக்களை அறிந்து மேலும் பல மாற்றங்களை செய்து புதிய குறிப்புகளுடன் புதிதாக ஒரு நாடகப் பிரதியை ஓகஸ்டம் மாதம் உருவாக்கிக் கொண்டேன். இறுதிவரை பிரதியில் மாற்றம் செய்வது நடிகர்களுக்கு கஸ்டமாக இருக்கும் என்று நினைத்து மாற்றக்கூடாது என முடிவெடுத்தேன். (ஆனால் நாடகம் நன்றாக வருவதற்காக கடைசி நேரத்திலும் மாற்றம் செய்வதை தவிர்க்க முடியவில்லை. இதற்காக நடிகர்கள் என்னைப் புரிந்து கொண்டு மன்னிப்பார்கள் என நம்புகின்றேன்) இதன் பின் நடிகர்களைத் தேடும் படலம் உருவாகியது.

2015 - 1நாடகத்திற்கு நடிகர்களை தேடுவது முயற்கொம்பாக இருந்தது. இதற்கு சில காரணங்கள் இருந்திருக்கலாம். முதலாவது முதன் முறையாக ஒரு நாடகத்தை நான் நெறியாள்கை செய்வதால் பலருக்கு என்னுடன் இணைவதற்கு தயக்கம் இருந்திருக்கலாம். இரண்டாவது புலம்பெயர் வாழ்வின் அலைச்சலும் அழுத்தமும் நேரமின்மையும் இன்னுமொரு காரணமாக இருக்கலாம். மூன்றாவது என்னுடன் இணைந்து வேலை செய்ய விருப்பமில்லாமலும் இருக்கலாம்.  இவ்வாறான தடைகளுக்கும் எண்ணங்களுக்கும் மத்தியிலும் இறுதியாக நடிகர்களையும் தொழிற்நுட்ப செயற்பாட்டிற்கான பங்காளர்களையும் கண்டுபிடித்தோம்.

2015 - 5முதலில் வெள்ளை, சிங்கள, தமிழ், முஸ்லிம், மற்றும் மலையக இனங்களிலிருந்து பன்முக சமூக அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகள் தொடர்பாக புரிதலுள்ள ஒவ்வொருவரை தெரிவு செய்து நடிக்க வைக்கலாம் என முயற்சி செய்தேன். ஆனால் அது சாத்தியப்படவில்லை. பின் பல முயற்சிகளின் பயனாக பல மாதங்களின் பின்பு ஆடி மாத இறுதியில் ஒரு நாள் மூன்று ஆண்களையும் மூன்று பெண்களையும் ஒன்றாகச் சந்திக்க கூடியதாக இருந்தது. வழமையாக இவ்வாறான சந்திப்புகளுக்கு நான் நேரம் பிந்தி செல்வதில்லை. இருப்பினும் முதல் சந்திப்பு அன்று இருவர் எனக்கு முன்னமே வந்து காத்திருந்தனர். இச் சந்திப்பு முடிந்தவுடனையே ஒருவர் வேலைப் பிரச்சனையால் தன்னால் வரமுடியாது என்றார். தனோ தான் நடிக்கவில்லை நினைவூட்டலை செய்யலாம் என்றார். அன்றிலிருந்து இறுதிவரை நம்முடன் நின்றதுடன் பயிறசிகளின் போது பல கருத்துகளைக் கூறி நாடகத்தை மெருகூட்டினார். இதன்பின் சுமதி யசோதாவை அறிமுகப்படுத்தினார். சக்கரவர்த்தி தங்காவை அறிமுகப்படுத்தினார். இவர்கள் இருவரும் இணைந்து கொண்டதிலிருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தது மட்டுமல்லாமல் ஆர்வமாகவும் பங்குபற்றினர். இந்த ஆர்வமும் அர்ப்பணிப்பும் ஒரு ஊக்கச்சக்தியாக இறுதிவரை இருந்தது.DSC04735-XL குறிப்பாக தங்கா தந்த நம்பிக்கையும் உற்சாகமும் பலமுறை நாடகத்தை விட நினைக்கும் பொழுதெல்லாம் ஒரு ஊக்கியாக இருந்து முன்நோக்கி தள்ளியது. நாடகத்திற்காக ஒரு நடனத்தையும் பாடலையும் உருவாக்கினார். மேலும் அவரது துணைவியார் இரண்டு நாட்கள் உணவுகள் சமைத்து அனுப்பியிருந்தார். மகள் நாடகத்திற்கு தேவையான சீப்பையும் கத்திரிக்கோலையும் வடிவமைத்து தந்திருந்தார்.

DSC04812-XLநான் ஒரு சதாரண சமூக அக்கறையுள்ள எழுத்தாளன் மட்டுமே. பரந்த ஆழமான இலக்கிய வாசிப்பு கொண்ட படைப்பாளனில்லை. ஆகவே அழகிய ஆழமான நல்ல தமிழ் சொற்கள் என்னிடமிருந்து வருவது கடினம். இதன்காரணமாக பிரதியை எழுதுவதை தவிர்த்தேன். அதேவேளை ஒரு நாடகத்தின் வசனங்களை அதில் நடிப்பவர்களிடமிருந்தே பெற்றுக் கொள்ளும் பொழுது அவை உயிர்ப்புடனும் அதற்குரிய உணர்வுடனும் பேசப்படலாம் என நம்புகின்றேன். ஆகவே நாடகத்தில் பங்கு பற்றுகின்றவர்களிடமிருந்தே பிரதிக்கு தேவையான வசனங்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்ப சில உரையாடல்களையும் உடற் பயிற்சிகளையும் செய்வித்தேன். இப் பயிற்சிகள் குறிப்பான பிரச்சனைகள் தொடர்பாக நடிகர்களுக்குள் பல உணர்வுகளை சிந்தனைகளை அனுபவங்களை உருவாக்கலாம். இது அவர்களிடமும் மாற்றங்களை ஏற்படுத்த வழிவகுக்கலாம். ஏனெனில் அரங்க அளிக்கை என்பது வெறுமனே பார்க்க வருபவர்களுக்கு ஒரு அனுபவத்தை வழங்குவதோ செய்தி சொல்வதோ மட்டுமல்ல. நெறியாளரிடமும் நடிப்பர்களிடமும் மாற்றங்களை உருவாக்க வேண்டும். இவர்கள் தம்மையும் சக மனிதர்களையும் புரிந்துகொள்கின்ற புதிய மனிதர்களாக உருவாக்க வேண்டும். இதுவே அரங்கப் பயிற்சிகளின் அடிப்படை நோக்கம். ஆனால் இப் பயிற்சியை செய்ய சிலர் தயங்கினர். சிலர் மறுத்தனர். இருவர் ஆர்வமாக உணர்ந்து செய்தனர். ஒருவாறு நாடகம் தொடர்பான நம்பிக்கை பிறந்தது. தூரதிர்ஸ்டவசமாக இப் பயிற்சியை தொடர்ந்து செய்ய முடியவில்லை. அவ்வாறு செய்திருந்தால் வேறு ஒரு பிரதி வெளிவந்திருக்கலாம்.Drama 011

இதேநேரம் வசனங்களை பயிற்சிகள் செய்து நாமாக உருவாக்கமால் பிரதி ஒன்று இருந்தால் நல்லது என நடிகர்கள் அனைவரும் ஆரம்பத்திலையே விரும்பினர். ஆகவேதான் எனது குறிப்புகளைக் கொண்டு ஒரு பிரதியை தயார் செய்தேன். ஒரு நாள் தங்கா, யசோ, ஷேளி மற்றும் நான் நால்வரும் இருந்து பிரதியை வெட்டிக் கொத்தி நமது நோக்கத்திற்கு ஏற்ப இன்றைய பிரதியை உருவாக்கினோம். தொடர்ச்சியாக பயிற்சிகளின்போது உரையாடி பிரதியில் மாற்றங்களை மேற்கொண்டோம். ஆதிக்க சிந்தனைகள், ஆதிக்க சக்திகள், மற்றும் பால் வேறுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் பாரபட்சங்கள் என பல தளங்களிலும் விடயங்களை உரையாடி பொதுவான ஒரு பார்வையை பெற்றுக் கொண்டோம். அல்லது தவிர்க்க முடியாமல் சிலவற்றை உடன்படில்லாவிட்டாலும் ஏற்றுக்கொண்டோம்.

DSC04801-XLநாடகப் பயிற்சி செய்வதற்கு இடம் தேடுவது பெரும் பிரச்சனையாக இருக்க தங்கையின் வீட்டின் கீழ் தளத்தில் அடுத்த பயிற்சியை நடாத்தினோம். இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் கலந்து கொண்டனர். புதிதாக ஒரு பெண் கலந்து கொண்டார். மேற்குறிப்பிட்ட பயிற்சி நிகழ்வின் பின் ஒருவர் பல தனிப்பட்ட நடைமுறைப் பிரச்சனைகளினால் தன்னால் தொடர்ந்து பங்களிக்க முடியாது என ஒதுங்கிக் கொண்டார். சிறிரஞ்சனி தான் நடிக்கவில்லை ஆனால் நினைவூட்டலுக்குப் பங்களிக்கின்றேன் என்றார். அன்றிலிருந்து கடைசிவரை இவரும் நம்முடன் பயணித்தார். செப்டெம்பர் மாதமும் இன்னுமொருவரும் சில தனிப்பட்ட பிரச்சனைகளினால் பங்களிக்க முடியாது எனக் கூறி விலகிக்கொண்டார். மீண்டும் நடிகர்கள் தேடும் படலம் உருவானது. டொரன்டோவில் நான் கேட்காத நடிகர்கள் இல்லை. பார்வதி கந்தசாமியும் மனவெளி செல்வனும் நடிகர்களை கண்டுபிடிக்க முயற்சித்தனர்.  அக்டோபர் மாதம் நடைபெறும் நிகழ்விற்கு செப்டம்பர் மாதம் ஆரம்பத்தில் தான் நடிகர்களை உறுதி செய்தோம். மேலும் ஒரு நண்பரின் பங்களிப்புடன் பயிற்சி செய்வதற்கான இடங்களையும் பிரச்சனையில்லாமல் பதிவு செய்து நாடகப் பயிற்சியை வெற்றிகரமாக தொடர்ந்தோம். IMG_20150912_091245137இதைத் தவிர ஒரு நாள் போல் மற்றும் யசோவின் வீடுகளிலும் இரண்டு நாட்கள் ஜெபா மற்றும் கற்சுறாவின் வீட்டிலும் பயிற்சிகள் செய்தோம். அவர்களின் சுவையான உணவும் நமக்கு ஊக்கம் தந்தது.

தர்சன் அவர்கள் ஒலி ஒளி நிர்வாகப் பங்களிப்புக்கு செப்டெம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் வந்து பங்களித்தார். அன்றிலிருந்து மிகவும் ஆர்வமாகவும் பொறுப்புடனும் பங்களித்தார். அப்போது பிரதியில் இருக்கின்ற சில குறைகளை சுட்டிக்காட்டினார். அதற்கு ஏற்ப சொற்களில் வசனங்களில் மாற்றங்களை செய்தோம். ஆரம்பத்தில் வசனங்கள் வேறு வேறு இனத்தவர்கள் பேசுவதாகவே இருந்தது. அவ்வாறு நடிகர்களைக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லாதபோது நாமே அந்த வசனங்களைப் பேசுவதாக முடிவெடுத்தோம். ஆனால் அவ்வாறு பேசுவது அரசியலடிப்படையில் முரண்பாடானதாகும் எனச் சுட்டிக்காட்டினார். ஆகவே மீள பிரதியின் வசனங்களை IMG_20160305_192744049ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களின் அனுபவமாகவும் அவர்களுக்குள்ளே இருக்கின்ற அடக்குமுறைகளை, ஒடுக்குமுறைகளை, முரண்பாடுகளை தாமே வெளிப்படுத்துவதாகவும் மாற்றினோம். இவ்வாறான மாற்றங்களினுடாக அனைவரும் சேர்ந்து ஒன்றாக பயிற்சி செய்தது ஆகக் கூடியது  ஐந்து நாட்கள் மட்டுமே இருக்கும்.

நாடகத்திற்கு ஒரு பெயர் வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எனது அறிவுக்கு உட்பட்டு மௌனம் பிழந்து என்பதை முன்மொழிந்தேன். நண்பர்களுக்கு உடன்பாடு இருந்தது. இருப்பினும் எனக்குள் திருப்பதியின்மை இருந்ததால் தேடிக் கொண்டிருந்தேன். அப்பொழுதான் அக் காலத்தில் நடைபெற்ற ஒளவை, கீதா, ஊர்வசி ஆகியோரின் கவிதை நூல்களை வேலைக்கான பயணங்களின்போது வாசித்தேன். கீதாவின் கவிதை ஒன்று நாடகத்தினுடாக நான் கூறவருவதை உணர்த்துவதாக இருந்தது. அந்த வேதனையை உணர்வை கங்கு எனவும் குறிப்பிட்டிருந்தார். பிடித்துக் கொண்டேன். நண்பர்களிடம் நாடகத்தின் பெயர் கங்கு என எனது தீர்மானத்தைக் கூறினேன். குறுகிய காலம் என்பதால் கலந்துரையாட முடியாது போனமைக்காக குழுவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.DSC04706-L

நாடகத்திற்கான இசையை இசை வல்லுனர்கள் நால்வரை கொண்டு அவர்களை மேடையின் முன் அமர்த்தி செயற்படுத்தவே விரும்பியிருந்தேன். ஆனால் அவ்வாறானவர்களை கண்டுபிடிப்பதிலும் கஸ்டங்கள் இருந்தன. ஆகவே தங்காவும் ஷேர்ளியும் நாடகத்திற்கு தேவையான இசையை இணையங்களில் தேடித் தெரிவு செய்வதில் பல மணி நேரங்களைச் செலவு செய்தனர். பின் தங்கா அதை நாடகத்திற்கு ஏற்ப வெட்டி எடுப்பதில் குறிப்பிட்ட நேரங்களை செலவு செய்தார். சில இசைகளை கனடாவில் பதிவிறக்கம் செய்ய முடியாததால் அவசரத்திற்கு அமெரிக்காவில் வாழ்கின்ற நமது உறவினர் டிலோஜன் உதவினர். குணசீலன் நாடகம் தொடர்பான அறிமுகத்திற்கு நான் விரும்பியாவறு ஒரு போஸ்டரை வடிவமைப்பு செய்து எனது எதிர்பார்ப்பை குறுகிய காலத்தில் பூர்த்தி செய்தார். இதே காலங்களில் நடன ஆசிரியை வசந்தா டானியலின் பங்களிப்புடன் நானும் ஷேர்ளியும் நடனப் பயிற்சியையும் பெற்றுக் கொண்டோம். வசந்தா டானியலும் அவரது மாணவி சுஜிவா ராஜேசேகரமும் குறுகிய நாட்கள் பல மணி நேரங்களை நமக்காக ஆர்வத்துடன் பங்களிப்பு செய்தனர். இவ்வாறு நமக்கு கிடைத்த நேரத்தில் நாடகத்தை மேடையேற்றுவதற்கு ஏற்ப அறுபது வீதமே பழகியிருந்தோம்.

thirumaஇவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில்தான் நண்பர் கவிஞர் திருமாவளவனின் மரணம் எதிர்பாராமல் இடம் பெற்றது.  நம் அனைவருக்கும் இது ஒரு துன்பகரமான நிகழ்வாயிற்று. அவரும் உயிர்ப்பு நிகழ்வுகளில் கடந்த காலங்களில் பங்குபற்றியிருந்தமையினாலும்  கவிஞராகவும் கலைஞராவும் மட்டுமல்ல நம் அனைவரினதும் நண்பராகவும் இருந்தமையினாலும் உயிர்ப்பு நிகழ்வு பிற்போடப்பட்டது.  இதன் பின் நடைமுறை சிக்கல்களால் இந் நிகழ்வு நடைபெறுமா என்ற கேள்வியையும் உருவாக்கியது. இம் முறை எந்தவிதமான பொது நிதியையும் பெறாமல் சில நண்பர்களின் பங்களிப்புடன் மட்டும்தான் செலவுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆகவே மேற்கொண்டு இதை சமாளிக்க முடியுமா என்பது கேள்வியாக இருந்தது. நிகழ்வை நிறுத்தியமைக்காக யோர்க்வூட் அரங்க நிர்வாகமும் முழுப் பணத்தையும் திருப்பித் தரவில்லை. நமது பயிற்சிகள் நின்று போயின. தங்கா இக் கவலையில் கங்குவைத் தேடி ஒரு கவிதையும் எழுதினார்.

kankuமீண்டும் உயிர்ப்பு நிகழ்வை நடாத்துவதற்கான மண்டபம் மார்ச் மாதம் 5ம் திகதி கிடைக்கும் என சுமதி அக்டோபர் மாதம் இறுதியில் அறிவித்தார். மீள மண்டபங்களை பதிவு செய்து பயிற்சிகளை ஆரம்பிக்க முயற்சித்தோம். ஆனால் அனைவருக்கும் ஒரே நேரம் சரிவரவில்லை. ஒருவாறு வரக்கூடியவர்களை கொண்டு நவம்பர் மாதம் பயிற்சிகளை ஆரம்பித்தோம். இதேவேளை நாடகத்திற்கு புதிதாக ரொனாட்டும் மற்றும் நிருபாவின் அறிமுகத்தினுடாக ஆர்த்தியும் இணைந்து கொண்டார்கள். இறுதியாக இணைந்து கொண்டபோதும் இறுதிவரை தம் முழுமையான பங்களிப்பை வழங்கினர்.

IMG_20160305_192629247_HDRகுழுவை ஒருங்கிணைத்து நாடகத்தையும் நெறிப்படுத்துவதில் நான் படுகின்ற கஸ்டத்தைப் பார்த்து ஒளி நிர்வாகத்திற்காக வந்த தர்சன் கார்த்திகை மாதம் முதல் குழு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுவற்கு தானே முன்வந்தார். இதன் மூலம் எனது சுமை குறைவதற்குப் பங்களித்தார். மேலும் நாடகத்தில் ஒலியின் அதாவது இசையின் முக்கியத்துவதை உணர்ந்து அதை நிர்வகிக்கும் பொறுப்பையும் எடுத்தார். ஏனெனில் இசை நம் அரங்க அளிக்கையின் உயிராக இருந்தது. இதன்பின் மார்கழி மாத விடுமுறைகளில் பயிற்சிகள் நடைபெற முடியாது போயின. ஜனவரியில் பயிற்சிகள் ஆரம்பித்தபோது இருவர் தமது வேலைகளின் நேரமாற்றம் காரணமாக தொடர்ந்தும் பங்களிக்க கஸ்டம் என்றார்கள். அதை ஏற்றுக் கொண்டோம். மீண்டும் நடிகர்களில் மாற்றங்கள் செய்ய வேண்டி ஏற்பட்டது. அதேவேளை தீபன் ஒளி நிர்வாகத்திற்கு தன்னால் இயன்றதை இறுதி நேரங்களில் பழகிப் பங்களித்தார். இவ்வாறு புதிய மாற்றங்களின் விளைவாக சில மாற்றங்களை நாடகத்தில் மேற்கொண்டோம். இவ்வாறு அனைவரும் கலந்து கொண்டு மேலும் ஆகக் கூடியது ஐந்து பயிற்சிகளினுடாக கங்கு நாடகத்தை பங்குற்றிய குழுவிற்குத் திருப்தியாக மேடையேற்றினோம். பார்வையாளர்களுக்கும் திருப்தியானதாக இருக்கும் என உணர்ந்தோம்.

Drama 079இந்தக் கூட்டுமுயற்சியில் தங்கா, யசோ, ஆர்த்தி, ரொனாட், தர்சன், தீபன், தனோ, சிறிரஞ்சனி மற்றும் ஷேர்ளி ஆகியோர் தம்மால் இயன்ற பங்களிப்பை இறுதிவரை செய்தனர். தவிர்க்க முடியாத காரணங்களினால் இடையில் விலகியவர்களின் சிறு சிறு பங்களிப்புகளும் ஊக்கமும் நினைவு கொள்ளவேண்டியவை. எல்லோரும் நன்றாக நடித்திருந்தனர். நாடகத்தில் நடித்த பலர் பண்பட்ட நடிகர்கள். ஏற்கனவே பல நாடகங்களில் நடித்தவர்கள். அதேநேரம் ஒரு நெறியாளனாக எனக்குள் ஒரு “கலைஞர்” இருக்கின்றார் என்பதை அறிந்ததும் மற்றும் ஷேளியினதும் ஆர்த்தியினதும் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியதும் தனிப்பட்டளவில் மகிழ்வானதும் திருப்பதியானதுமாகும்.DSC04745-XL

இந்த நாடகத்தை மேலும் மெருகேற்றி இன்னும் காத்திரமானதாக செய்திருக்கலாம். இவ்வாறான செயற்பாடுகளில் திருப்தி என்பது ஒரு படைப்பாளருக்கு எப்பொழுதும் இருக்காது. ஆனால் அதற்கான கால அவகாசம் கிடைக்கவில்லை. ஆனால் நாடகங்கள் தொடர்பாக இதுவரை நான் முன்வைத்த விமர்சனங்களுக்கு முரணில்லாத வகையில் பொறுப்புடன் ஒரளவு தரமான அரங்க ஆற்றுகையை அனைவரினதும் கூட்டுழைப்புடன் மேடையேற்றினோம் என்ற திருப்தி எனக்கும் பங்குபற்றியவர்களுக்கும் உள்ளது. இதேநேரம் இதிலுள்ள குறைபாடுகளை முன்வைக்கும் விமர்சகர்களின் மற்றும் ஆவர்வலர்களின் விமர்சனங்களை மதிக்கின்றோம். அதைப் புரிந்து உள்வாங்கிக் கொள்ள முயற்சிக்கின்றோம். அதற்கான பதில்களையும் விரைவில் முன்வைக்கின்றேன்.DSC04796-XL

ஒரு அரங்க அளிக்கையை ஒழுங்காக மேடையேற்றுவதற்கு பல வசதிகளும் ஆதரவுகளும் பங்களிப்புகளும் நேரமும் இன்றியமையாதவை. முக்கியமாக நடிகர்கள். தொழிற்நுட்ப வல்லுனர்கள் மற்றும் பழகுவதற்கான நேரமும் இடமும். மேலும் இவ்வாறான மேடை நாடகங்களை குறைந்தது ஒரு வருடமாவது பயிற்சி செய்வேண்டும். அதற்கான உறுதிப்பாடும் அவசியமானது. இவ்வாறானவற்றை உறுதி செய்து கொண்டே இப்படியான முயற்சிகளில் இறங்கவேண்டும். நாம் புலம் பெயர்ந்தவர்கள். பல கஸ்டங்களுக்கு மத்தியில் வாழ்பவர்கள். ஆகவே இவ்வாறான விடயங்களில் ஆர்வமுள்ளவர்கள் நமக்குள் இருக்கின்ற முரண்பாடுகளை குறித்துக் கொண்டு பொதுவாக உடன்பாடு காணக் கூடிய விடயங்களில் உடன்பட்டு கூட்டாகப் பங்களித்து செயற்படுவதே தரமான படைப்புகளை வழங்க வழிசெய்யும். அப்பொழுதுதான் கனேடிய தமிழ் அரங்க வரலாற்றில் சிறந்த நாடகங்ளை எதிர்காலங்களில் மேடையேற்ற முடியும். இதை நண்பர்களும் அரங்க ஆர்வலர்களும் புரிந்து கொள்வார்களா என்பது கேள்விக்குறியே. ஆனால் நம்பிக்கையே வாழ்வு. இப் பதிவும் அந்த நம்பிக்கையிலையே எழுதப்படுகின்றது.DSC04797-XL

அதேவேளை ஒரு நண்பர் குறிப்பிட்டது போல் குறைந்த நடிகர்களை கொண்டு அல்லது ஒருவரே நடிக்கக்கூடிய அரங்க அளிக்கைகளை தயாரிப்பது நல்லது. அல்லது தெரு நாடகங்களை உருவாக்கலாம். ஏனெனில் இதற்கு அதிக தொழிற்நுட்பங்கள் தேவைப்படாது. மேலும் இவ்வளவு பேரின் ஒரு வருட உழைப்பும் காலமும் மற்றும் தனிப்பட்ட ஒருத்தல்களையும்  ஒரு நாற்பத்தைந்து நேர நமிடங்களுக்காக செலவு செய்து நூறு பேருக்கு ஒரு தரம் மட்டும் மேடையேற்றுவதுடன் நிறைவு பெறுவது தூர்ப்பாக்கியமானது. ஆகவே இவ்வாறன முயற்சிகள் எந்தளவு பயன்மிக்கவை என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. அல்லது பயன்மிக்கவையாக்க தொடர் மேடையேற்றங்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் நடைபெற முயற்சிக்வேண்டும். அதுவே இவ்வாறான அரங்க அளிக்கைகளுக்கும் பங்களித்த கலைஞர்களின் உழைப்புக்கு கிடைக்கும் மரியாதையும் பெறுமதியுமாகும்.DSC07448-L
அடுத்த பதிவில் கங்கு தொடர்பான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் எனது பதில்களை எழுதுதுகின்றேன். அதுவே கங்கு தொடர்பான எனது இறுதிப் பதிவாக அமையும்.
இந்த முயற்சியில் பங்களித்த ஊக்கம் தந்த அனைவருக்கும் நன்றி பல.
நன்றி
நட்புடன்
மீராபாரதி
இன்று உலக நாடக தினம் 27.03.2016

நன்றி: படங்கள் ஈகுருவி ஐயா

 

Advertisements

Responses

  1. […] பதிவுகள் விமர்சனம் 1 விமர்சனம் 2 எனது அனுபவங்கள் […]

  2. […] பதிவுகள் விமர்சனம் 1 விமர்சனம் 2 எனது அனுபவங்கள் […]


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: