Posted by: மீராபாரதி | March 13, 2016

கங்கு: புதுமையானது ஆனால் தெளிவானதில்லை – அரவிந்தன்

கங்கு: புதுமையானது ஆனால் தெளிவானதில்லை – அரவிந்தன்Untitled

உயிர்ப்பு 5ன் நாடகங்கள்: ஒரு பார்வையாளனின் குறிப்புகள்!

kankuகனடாவில் அதுவும் டொரன்டோவில் நாடகங்கள் உச்சத்தில் இருந்ததொரு காலம் இருந்தது என்ற கருத்தை பல நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். கடந்த சனியன்று யோர்க்வூட் கலையரங்கில் நிகழ்ந்த உயிர்ப்பு 5ன் நாடக விழா நிகழ்வின் இடைவேளையின் போது ஒரு நண்பர் சொன்னார், “இந்த நாடகங்களைப் பார்க்கும் போதுதான் அவன் எவ்வளவு பெரியவன் என்று தெரிகிறது” என்று. அவர் குறிப்பிட்டது இங்கு முக்கியமானவரென அறியப்பட்ட எனக்குத் தெரிந்த ஒரு நெறியாளரை. அவர் ஒரு நல்ல நெறியாளர் என்று பல நண்பர்கள் எனக்கும் சொல்லியிருக்கின்றார்கள். ஆனால் நான் அவரது எந்த நாடகங்களையும் பார்த்ததில்லை. கேள்விட்பட்டது மட்டுமேதான். இந்த உரையாடல் நடக்குபோது நான் இரண்டு நாடகங்களைப் பார்த்து விட்டிருந்தேன். ஆனாலும் அவரிடம் நான் அவர் எந்த நாடகத்தை மனதில் வைத்து சொல்கிறார் என்று கேட்கவில்லை. ஆனால் அவராகவே தொடர்ந்தார், “பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தினால் ஏமாற்றம் ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை” என்று. இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது. இதற்குமேல் அங்கு நடந்த உரையாடல் இங்கு முக்கியமற்றது. ஆம் அவர் சொன்னது முதலாவது நாடகமான “கங்கு” பற்றி.

DSC04706-Lமறைந்த கவிஞர் திருமாவளவனை நினைவுகூரிய ரவி பொன்னுத்துரை அவர்களது உரையைத் தொடந்து மீராபாரதியின் நெறியாள்கையில் தயாரிக்கப்பட்ட “கங்கு” மேடையேறியது. நாடகத்தில் பாரதியும் ஒரு பாத்திரமேற்று நடித்திருந்தார். “ஒடுக்கப்பட்டவருக்கான அரங்கு” என்ற அரங்க அணுகுமுறையின் அடிப்படையில் பங்களிப்போர் எல்லோரினதும் கூட்டு முயற்சியில் உருவாகியதென இந்த நாடகம் பற்றிய குறிப்புகள் தெரிவித்திருந்தன.
நாடகம் தொடங்குகையில் இருவர், ஒரு சோடியாக, ஆணும் பெண்ணுமாய் நடனமாடியபடி மேடையில் தோன்றினார்கள். அவர்களது நடனமும் அதற்காக ஒலித்த இசையும் சிறப்பாக இருந்தன. இதை அடுத்து நாடக மாந்தர்கள் சபையிலிருந்து பேசியபடியே மேடையை நோக்கி வந்து மேடையில் ஏறுவதாக அமைந்த காட்சி வருகிறது. அதுவரை எல்லாமே சரியாகத்தான் இருந்தன. அதன்பின் இரண்டொரு காட்சிகள் முடியும்வரை என்ன நடக்கிறது என்று புரியவில்லை. அவர்கள் பேசும் வசனங்களில் எந்தத் தொடர்ச்சியும் இருப்பதாகத் தெரியவில்லை. பிறகுதான் இது ஒரு காட்சி மாற்ற உத்தி என்று புரிந்தது. இப்படி நாடகம் செய்யப்பட்ட முறையில் புதுமை இருந்தது.

DSC04746-XLநடிகர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள். ஆயினும் அதையும் மீறி திரும்பத் திரும்ப புதிய புதிய பாத்திரங்களாக நடிகர்கள் மாறுவதும், பேசுவதும், ஒரு சில காட்சிகளுக்குப் பிறகு அயர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. எல்லாவிதமான சமூகப் பிரச்சனைகளையும் ஒரே நாடகத்திலேயே நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்ற தெரிவு ஒரு நல்ல மேடை நிகழ்வைத் தராது என்று சொல்லத் தோன்றுகின்றது. இறுதியில் உள்ளொளியை இவை அனைத்துக்குமான தீர்வு என்று காட்டுவது போல வந்த காட்சி, அதுவரை பேசப்பட்ட விடயத்தின் அரசியலை மிகவும் மலினமான புரிதலுக்கு இட்டுச் சென்றுவிட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. இதனால் நாடகத்தின் மையக் கருவாக இருந்த “கங்கு” என்ற சொல்லுக்குரிய அர்த்தம் தெளிவாக்கப்படாமலே போய்விட்டதோ என்று தோன்றுகிறது. DSC07448-L

நடிகர்கள் எவறும் குறுப்பிட்ட பாத்திரமாக இல்லாது போவதால் அவர்களில் பலரும் நன்றாக நடித்திருந்தபோதும், அவர்களது நடிப்பின் சிறப்பை பெருமளவுக்கு அடையாளம் காணமுடியவில்லை. பாரதியின் இந்த முயற்சி, ஒரு புதுவகை முயற்சி என்ற வகையில் கவனத்தை ஈர்த்தாலும், கருத்துக்களைச் சொல்லுவதற்கு மட்டுமான பாத்திரங்களைக் கொண்ட வகை மேடை அளிக்கைக்கு இத்தகைய உத்தி பொருத்தமற்றதோ என்று சொல்லத் தோன்றுகின்றது. பாரதியின் இந்த முயற்சி கனடாவில் அவரது முதல் முயற்சி என்ற அளவில் ஒரு வெற்றியை நோக்கிய முதற் படி என்று சொல்லலாம்.
அரவிந்தன்
நன்றி – தீபம் 09.03.2016

படங்கள் நன்றி: ஈகுருவி ஐயா
கங்கு பார்ப்பதற்கு இங்கு அழுத்தவும்.

Untitled

Advertisements

Responses

  1. […] கங்கு: புதுமையானது ஆனால் தெளிவானதில்… […]

  2. […] பதிவுகள் விமர்சனம் 1 விமர்சனம் 2 எனது அனுபவங்கள் […]

  3. […] பதிவுகள் விமர்சனம் 1 விமர்சனம் 2 எனது அனுபவங்கள் […]


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: