Posted by: மீராபாரதி | March 12, 2016

கங்கு: பன்முக விமர்சனங்கள் – பகுதி – 1

கங்குகங்கு தொடர்பான விமர்சனங்கள் இங்கு தொடர்ச்சியாக பதிவு செய்யப்படும். கங்கு அரங்க அளிக்கையின் வீடியோ பதிவு இங்கு பதிவு செய்யப்படுகின்றது.

நண்பர்களினதும் விமர்சகர்களினதும் கருத்துக்களை அறிந்தபின் அவற்றுக்கான எனதும் நமது குழுவினதும் பதில்களை முன்வைக்க முயற்சிப்பேன். முயற்சிப்போம். இவ்வாறான ஒரு உரையாடல் இந்த அரங்க அளிக்கை தொடர்பாகவும் நாம் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சனைகள் தொடர்பாகவும் ஆழமாக அறியவும் புரியவும் வழி செய்யும் என நம்புகின்றேன். இப்பொழுது எனது உட்பெட்டிக்கு வந்த இரு விமர்சனங்களை அவர்களின் அனுமதியுடன் பதிவு செய்கின்றேன். நன்றி நட்புடன் மீராபாரதி

விமர்சனம் 1: சுந்தர் கந்தசாமிDSC04715-XL
உயிர்ப்பின் மூன்று நாடகத்தில்
குறிப்பாக (கங்கு)பற்றிய எனது புரிதலை உங்களோடு பகிந்துகொள்ள விரும்புகிறேன்.
நிகழ்கால இச் சமூகத்தின்
நிதர்சனங்களை ஏறத்தாழ பொரும்பாலனவற்றை தொட்டுச்
சென்றிருந்தீர்கள். குறிப்பாக
சாதி,மதம்,மொழி,நிறம்,
பெண்ணியம் ,இவற்றோடு மேலாதிக்க சிந்தனை .
இவை அனைத்தும் இன்னும்
பழைய பரண்களில் உட்காந்து இருக்கின்றது என்பதும் கசப்பான உண்மைகள் .சரி சாணை பிடித்தது போதும் என
வாளை எடுத்துள்ளீர்கள் பாராட்டு க்கும் ,மகிழ்ச்சிக்கும் உரியது.
இருதாலும் ஒரு படைப்பாளிக்கு
ஆரோக்கியமான விமர்சனங்கள்
அவரது படைப்பாற்றலுக்கு பயனளிக்கும்.
அந்த வகையில் நான் இங்கு அடிக்கோடிட்ட
ஆறு விடயங்களையும்
ஒரு மணித்துளிக்குள் உள்ளடக்குவதென்பது அவ்வளவு சுலபமானதொன்றல்ல ,
ஆகவே இசைக்கு நேர அளவைக் குறைத்து நீங்கள் நினைத்த அல்லது சொல்லவரும் கருத்தியலை சற்று கூடுதலாக
கூறியிருக்கலாம் என்பது என் பணிவான கருத்து.
நிகழ்வின் முடிவு நிறைவானது.
தொடரட்டும் வாழ்த்துக்கள் .
-சுந்தர்-

விமர்சனம் 2: நாதன் கந்தசாமி
DSC04735-XLஅன்புடன் மீராவுக்கு,
உங்கள் கங்கு நாடகம் பற்றிய எனது மனதில் தோன்றியதை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். எனது விமர்சனம் உங்களைப் புண்படுத்தாது மேலும் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையோடு முன்வைக்கின்றேன். எனது அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப என் சொந்தக் கருத்தை அல்லது விமர்சனத்தை முன்வைப்பதில் தவறில்லை என நினைக்கின்றேன்.
கங்கில் உங்களால் சொல்லப்பட்ட சமூகம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் உண்மை என்பது மட்டுமல்ல களையப்பட வேண்டியதுமாகும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. இருப்பினும் இந்த சமூகத்தில் பெண்கள் மட்டும்தான் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது அல்லவா? ஆனால் ஏன் உங்களைப் போன்றோருக்கு அவ்வாறு எழுவதில்லை? சமூகம் சார்ந்து சிந்திப்பவர்கள் அனைவரும் பாதிக்கப்படுவது சில ஆண்களாக இருந்தபோதும் அவர்களைப் பற்றி பாராமுகமாக இருப்பது ஏன்? உங்களால் ஒரு நடுநிலை நெறியாளனாக இரு பாலார் சார்ந்த பிரச்சனைகளையும் ஏன் கொண்டு வர முடியவில்லை? இது எனக்கு வேதனையாக உள்ளது.
ஒரு சமூக கருத்து பொதுவானதாக இருக்க வேண்டும். தனிப்பட்ட பாதிப்பின் வெளிப்பாடாக இருக்கக் கூடாது என்பது என் கருத்து. அந்த வகையில் சமூகத்தின் பெரும்பான்மையான எல்லா பிரச்சனைகளையும் அடக்குமுறைகளையும் வேகமாக தொட்டுச் சென்றுள்ளமை மகிழ்ச்சியானது.
மேலும் கங்கு என்பதன் அர்த்தம் என்ன? சக நாடகங்கள் போல ஒரு முன்னோட்டமாக சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அனைவருக்கும் புரியக்கூடிய முறையில் செய்திருக்கலாம். இருப்பினும் நல்ல கன்னி முயற்சி. தொடருங்கள் என்றும் எங்கள் அன்பும் ஆதரவும் உண்டு.
கங்குவில் பங்கு பற்றிய அனைத்து கலைஞர்களும் சிறப்பாக தமது பாத்திரங்களை செய்துள்ளார்கள். குறிப்பாக ஷேர்ளியின் நடிப்பு இயல்பாகவும் நன்றாகவும் இருந்தது.சாம்பல் பறவைகளில் ரமேசும் பகைப்புலத்தில் லங்கதாசும் தரிசியும் நன்றாக நடித்திருந்தார்கள்.
நன்றி
நட்புடன் நாதன்.

விமர்சனம் 3: நேத்ரா (Nedra Rodrigo)
DSC04746-XLMeerabarathy’s ‘Kangu'(Embers) explored the entrapment of natural wo/man in traditions and hierarchies, and posited an internal soul-searching as a means of liberation and finding one’s voice. The staging was often very effective, especially in breaking the fourth wall and showing the emergence of society as something we are all implicated in. Wo/man in a state of nature did not emerge from the audience, though, and maintained that Rousseauian moment just out of reach. The changing scenes were indicated by a series of mechanical movements that could have meant the passage of time, or shuffling in space. The play ended with the actors embodying a variety of spiritual practices and dispersing into the audience, once again implicating the observer as participant. The performers were very effective in conveying the moods of the piece through improvisation and a minimal set. The demands of a minimalist production are such that there is no distraction from a poor performer. Fortunately, there were no poor performers here. The play did leave me with the question as to how one finds an individual voice in spiritual practices that are still embedded in hierarchies and traditions, but the quest was no less powerful for it.

விமர்சனம் 4: கீத்
DSC04751-XL“வீடியோவில் மட்டும்தான் பார்த்தேன். விமர்சனத்தை விமர்சனமாக எடுக்கத் தமிழர்களுக்குத் தெரியாது என்று சொல்வீர்கள் அடிக்கடி. இதை நீங்கள் எப்படி எடுப்பீர்கள் என்று தெரியாது. ஆனால், முகத்துக்கு நேரே இதைச் சொல்லியாகவேண்டும். மிகமோசமான பிரதியாக்கம், அரங்காற்றுகை எல்லாவற்றுக்கும் அதியுயர் உதாரணம் இந்த ஆற்றுகை. கோபித்துக்கொள்ளாதீர்கள், தேன் தடவிய வார்த்தைகளில் சொல்லிக்கொண்டிருக்கமுடியாது. சர்வரோக நிவாரணியாக நினைத்துக்கொண்டு உலகின் எல்லாப் பிரச்சினைகளயும் தீர்த்துவைக்க முயல்கிற உங்களைப் பாராட்டுகிறேன். ஆனாலும், நான் கிட்டடியில பாத்த அரங்க ஆற்றுகைகளில் மிக மோசமானது இது.”

—-யாருக்கோ எழுதும் தீர்ப்பின் சிறுபகுதி

விமர்சனம்: அரசி

Untitled

Intersectionality

இது கங்கு பற்றி நீங்கள் எழுதிய குறிப்பு பற்றிய ஒரு விமர்சனம். உங்கள் நாடகத்துக்காக நீங்கள் நிறைய உழைத்திருக்கிறீர்கள். அதுபற்றி எதிர்மறையான கருத்துக்கள் வரும்போது வருத்தம் இருக்கத்தான் செய்யும். அதில் சில உங்கள் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியால் தான் எழுதபடுகிறது என்று நீங்கள் கருதினால் அதிலும் தவறில்லை.
ஆனால் இவையெல்லாம் ஒருபுறம் இருக்க விமர்சனங்களை எற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பற்றி நன்கு அறிந்த நீங்களே உங்கள் நாடகம் பற்றி வரும் விமர்சனம் எல்லாமே தனிப்பட்ட கோபத்தினால் வருபவை என்று எழுதினால் உண்மையான விமர்சனங்களை எப்படி இனங்காண்பீர்கள்? முதலாவது நடந்த நடனம் நன்றாக இருந்தது என்று பலர் சொன்ன பின்னர் “நான் ஆடியிருந்தால் அப்படிச் சொல்லியிருக்க மாட்டார்கள்” என்று நீங்கள் கூறுவது நல்ல கருத்துக்களை சொல்பவர்களைக் கூடக் காயப்படுத்துவதாக அல்லவா இருக்கிறது.
மற்றபடி நீங்கள் எழுதிய விளக்கங்கள் பயனுள்ளவை. நிறங்கள் மற்றும் மேடையில் இடம் போன்ற விடயங்களை நன்கு யோசித்து முடிவெடுத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.
Intersectionality என்பது முக்கியமான கருத்து தான். ஆனால் ஒரு கலைப்படைப்பு அகலத்தை விட ஆழத்தைத் தொடுவதே பர்வையாளருக்கு effective ஆக இருக்கும். அந்த ஆழம் உங்கள் நாடகத்தில் மனதைத் தொடுமளவு வரவில்லை என்பது தான் எல்லா விமர்சனங்களிலும் இருந்து நான் எடுத்துக்கொள்ளும் ஒன்று. அதற்கு ஒரு தொடர்ச்சி தேவை. நடுவில் முறிவுகளோடு அமைந்த உங்கள் பாணியில் அதை கொண்டு வர முடியவில்லை என்று நினைக்கிறேன். இது ஒரு கல்வி தான். பல technical ஆன விடயங்கள் இருக்கின்றன. நாம் நினைப்பது பார்வையாளருக்குப் போய்ச் சேர்வது மிக முக்கியம். ஆனாலும், நல்ல முயற்சி. இன்னும் அதிகம் எதிர்பார்த்ததனால் தான் பல எதிர்மறையான கருத்துக்கள் வந்தன. அப்படி எதிபார்ப்பது நல்ல விடயம் தானே. தொடருங்கள். இனிமேல் இன்னும் நன்றாக செய்யலாம்.

நன்றி சுந்தர், நாதன், நேத்ரா, அரசி மற்றும் கீத்
படங்கள்: ஈகுருவி ஐயா
விமர்சனங்களும் சுயவிமர்சனங்களும் உரையாடலும் பொதுவான ஒரு புரிதலுக்கு எம்மை அழைத்துச் செல்லும் என்பதை முழுமையாக நம்புகின்றேன்.
மீராபாரதி

எனது கேள்விகள் மற்றும் பதில்கள்


கங்கு: எது எனது குரல்?
http://tinyurl.com/hand77g

Advertisements

Responses

  1. […] கங்கு: பன்முக விமர்சனங்கள் – பகுதி – 1 […]

  2. […] பதிவுகள் விமர்சனம் 1 விமர்சனம் 2 எனது அனுபவங்கள் […]

  3. […] பதிவுகள் விமர்சனம் 1 விமர்சனம் 2 எனது அனுபவங்கள் […]


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: