Posted by: மீராபாரதி | September 13, 2015

ராக்கிங் – பல்வேறு சமூக ஒடுக்குமுறைகளின் வெளிப்பாடா?

atanavn இந்த வாரம் யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையே மோதல் என்ற செய்தி ஒன்று பரவலாக வெளிவந்தது. இதற்கான காரணம் சிரேஸ்ட மாணவர்கள் புதிய மாணவர்களை வரவேற்பது என்ற அடிப்படையில் ராக்கிங் செய்தமை என செய்திகள் தெரிவிக்கின்றன. இச் செய்திகளின் விளைவாக   1990ம் ஆண்டு பல்கலைக்கழ மாணவர் ஒருவர் ராக்கிங்கை எதிர்த்ததால் தாக்கப்பட்டார் என்ற பத்திரிகை செய்தியை நண்பர் ஆதவன் முகநூலில்  பிரசுரித்திருந்தார். இத் தாக்குதல் ஆதவன் மீது மேற்கொள்ளப்பட்ட செய்தியே என நினைக்கின்றேன். இவ்வாறான தாக்குதல் நடப்பதற்கு முதல் ஆதவனிடம் ராக்கிங்கை   எதிர்த்து மாணவர்களுடன் சண்டைபோடாமல் அடுத்த வருடம் உங்கள் கல்வியாண்டு மாணவர்கள் ராக்கிங் செய்யாமல் எவ்வாறு தடுப்பது என சிந்தித்து செயற்படுவோம் எனக் கூறியதாக ஞாபகம். அப்பொழுது நான் அவருக்கு ஒரு வருடம் சிரேஸ்ட மாணவராக இருந்தேன்.  ஆனால் அவர் எதிர்ப்பது என்பதில் உறுதியாக இருந்தார். ஆகவே தாக்கப்பட்டார். நான் அவ்வாறு கூறியதற்கு காரணம் சரியாக ஒரு வருடத்திற்கு முதல் சிரேஸ்ட மாணவர்களிடம் நான் வாங்கிய அடி எனலாம்.

1989ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழத்திற்கு புதிய மாணவராக சென்றேன். போகும் பொழுதே ராக்கிங் வாங்குவதில்லை என்ற முடிவுடன் சென்றேன். ஆகவே சிரேஸ்ட மாணவர்கள் சொல்வது எதையும் செய்வதில்லை. ஆகவே அவர்களுடன் முரண்பாடுகள் ஆரம்பித்தன. இதேவேளை திசை பத்திரிகையில் ராக்கிங் எதிர்ப்பு இயக்கம் தேவை என ஒரு கட்டுரையும் எழுதியிருந்தேன். பல்கலைக்கழகம் வந்து ஒரு மாதத்திலையே எங்களை; எதிர்த்து பத்திரிகையில் கட்டுரை எழுதும் அளவிற்கு துணிவா உனக்கு என்ற கோவம் அவர்களுக்கு இருந்தது. ஏற்கனவே ராக்கிங் வாங்காத கோவமும் இதனுடன் இணைந்தது. இவை அனைத்து சிரேஸ்ட மாணவர்களுக்கு என் மீது அதிகமான கோவத்தை உருவாக்கின. ஒரு நாள் வழமைபோல என்னை அழைத்தார்கள். நான் போனேன். அப்படிச் செய் இப்படி செய் எனக் கட்டளை இட்டார்கள். நான் பேசாமல் இருந்தேன். பொறுமையிழந்த அவர்கள் 25க்கு மேற்பட்டவர்கள் என்னைச்  சுற்றிவளைத்து அடித்தனர்.jaffna 1

அப்பொழுது எனக்கு ஈரோசின் மாணவர் அமைப்பான கைசுடன் (GUYS) உறவு இருந்தது. எனக்கு அடி விழுந்ததைக் கேள்விப்பட்ட சில நண்பர்கள் அன்று மாலை பல்கலைக்கழகத்திற்கு வந்தார்கள். ஏற்கனவே இயக்கங்கள் பல்கலைக்கழக பிரச்சனைகளில் தiலையிடுவது தவறு என்ற நிலைப்பாடு இருந்தமையால் அவர்களை எதிர்வினையாற்றாது தடுத்துவிட்டேன். இப் பிரச்சனை பல்கலைக்கழகத்திற்குள் தீர்க்க வேண்டியது எனக் கூறி அவர்களை; அனுப்பிவிட்டேன். ஏனெனில் மற்ற இயக்கங்களை விட குறிப்பாக புலிகள் மறுமலர்ச்சி கழகத்தினுடாக தமது; செயற்பாடுகளையும் சித்தாந்தத்தையும் பல்கலைக்கழத்திற்குள் நிறுவ முற்பட்டனர். இதற்கான ஒரு எதிர்ப்பும் ஆதரவும் நீண்ட காலமாக பல்கலைக்கழகத்திற்குள் இருந்து வந்தது. ஆனால் நாம் கற்ற காலம் (1989) பன்முக முரண்பாடுகள் நிறம்பிய காலம். ஆகவே அதிக அவதானம் தேவைப்பட்டது.

jaffnaமுதலாம் ஆண்டுகளில் ராக்கிங் காலங்களில் நூலகத்திற்குப் போகக் கூடாது. ஆனால் நான் போவேன். அப்பொழுது உள்ளே வந்து சிரேஸ்ட மாணவர்கள் என்னை அழைப்பார்கள். ஒரு நாள் இறுதியாண்டு மாணவர் சிரேஸ்ட மாணவர்களை தடுத்து என்னை உள்ளே இருந்து படிக்க சொன்னார். அவர் கணேசன் குமாரவடிவேல். இன்று அவர் ஒரு காலாநிதி. விஞ்ஞானி.  இப்படியும் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் இருக்கின்றார்கள்.
இன்னுமொரு நாள் நூலகத்திற்கு சென்றேன். ;சிரேஸ்ட மாணவர்கள் அதன் வாசலில் புதிய மாணவர்கள் போகாதபடி காவல் காத்துக்கொண்டு நின்றார்கள். நான் அவர்களது தடுத்தலையும் மீறி சென்றபோது என்னைத் தூக்கிக் கொண்டு போய் நூலகத்தின் வாசலில் இருந்த சகதியான தண்ணித் தொட்டி ஒன்றில் போட்டார்கள். . இன்று நூலகத்திற்கு முன்னால் இருக்கின்ற மாணவர் நிலையம் மற்றும் உணவுச்சாலை என்பன கட்டும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு பயன்படுத்திய தொட்டி அது.

இப்பொழுது அந்த சிரேஸ்ட மாணவர்களில் பலர் புலம் பெயர்ந்துள்ளனர். கஸ்டமான பிற்காலங்களில் தேவையான போது அவர்கள் எனக்கும் நான் அவர்களுக்கும் உதவியிருக்கின்றோம். அண்மையில் ஒரு சிரேஸ்ட மாணவர் மரண வீடு ஒன்றில் என்னைக் கண்டு அன்று என்னை அடித்ததற்காக மன்னிப்பு கேட்டார்.

ragging suriveதனது தவறை அவர் உணர்வதற்கு 25 வருட ;காலங்கள் சென்றிருக்கின்றன. காலம் காயத்தை ஆற்றும் என்பார்கள். இது கொஞ்சம் அதிகமான காலமே. இருந்தாலும் என்ன செய்வது இது அவரின் தவறு மட்டுமில்லைiயே. சமூகத்தின் தவறல்லவா?

புதிய கல்வியாண்டு மாணவர்கள் வந்தபோது நாம் அவர்களை ராக்கிங் இல்லாமல்  வரவேற்பது என முடிவெடுத்து ஒரு குழுவை உருவாக்கினோம். இதில் கொல்லப்பட்ட செல்வி தற்கொலை செய்து கொண்ட சிவரமணி ஆகியோருடன் இன்று கிழக்குப் பல்கலைக்கழ விரிவுரையாளராக இருக்கும் காலநிதி சி. ஜெயசங்கர் புலம் பெயர்ந்து கனடாவிலிருக்கும் பார்த்தீபன் ராஜினி திரணகமவின் தங்கை வாசுகி இன்னும் சிலரும் நானும் இணைந்து செயற்பட்டோம். புதிய மாணவர்களுக்கு ஆங்கில வகுப்புகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று உரையாற்றி அவர்களது பயங்களை நீக்க முயற்சித்தோம். எங்களை; அறிமுகம் செய்து கொண்டோம். நான் எனது சக மாணவ நண்பர்களுடன் நின்று பகிடி மட்டும் நடைபெறுவதை உறுதி செய்தேன். பகிடி வதையாக மாறுவதை இயன்றளவு தடுத்தேன்.
raggingநான் முதன் முதலாக ராக்கிங்கைப் பற்றி கேள்விப்பட்டது பல்கலைக்கழத்தில் அல்ல. 1984ம் ஆண்டு யாழ் மத்திய கல்லுரியில் அகதி மாணவராக உயர்தரம் படித்தபோதே அறிந்தேன். மாணவர் தலைவர்களுக்கான தெரிவு நடைபெற்றபின் அவர்களுக்கு சிரேஸ்ட மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு வைப்பார்கள். அல்லது மாணவர் தலைவர்களாக தெரிவு செய்யப்படுவதற்கு முதல் இப் பயிற்சிகளுக்கு சென்றிருக்க வேண்டும். இது அதிகமாக பாடசாலை முடிந்த பின் மாலை வேளைகளில் நடைபெறும். இந்த வரவேற்பு நிகழ்வு என்பது பெரும்பாலும் பாலியல் செயற்பாடுகளாகவே இருக்கும். நிர்ப்பந்தமாக கைதுமை (சுய இன்பம்)  செய்ய வைக்கப்படுவார்கள். இவ்வாறான செயற்பாடுகளை சுற்றியே வரவேற்பு நிகழ்வு நடைபெறும். பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர் தலைவர்களுக்கான தெரிவுகளில் இவ்வாறு நடைபெறுவதுண்டு எனக் கேள்விப்பட்டதுண்டு. அல்லது மாணவர் தலைவர்களாக தெரிவு செய்யப்படுவதற்கு முதல் இப் பயிற்சிகளுக்கு சென்றிருக்க வேண்டும். சில ;பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவிகளும் இவ்வாறான மோசமான “பகிடி வதைகளில்” ஈடுபட்டதை; அpறியக் கூடியதாக இருக்கின்றது.

ராக்கிங் பிரச்சனையை தீர்க்க வேண்டுமாயின் அதற்கான மூலப் பிரச்சனையைக் கண்டுபிடிக்க வேண்டும். இச் செயற்பாடுகள் பெரும்பாலும்  வன்முறை பாலியல் துஸ்பிரயோகங்கள் சார்ந்தவைகளாகவே இருக்கின்றன. இதற்கான காரணங்களை சமூகத்திலையே தேடவேண்டும். 18 வயது வரை பலவகைகளில் கட்டுப்படுத்தப்பட்டு வளர்க்கப்படும் மாணவர்கள் ஓப்பீட்டளவில் சுதந்திரமாக ;வாழ பல்கலைக்கழக வெளிகளில் திறந்து விடப்படுகின்றார்கள். இந்த சுதந்திரமானது இவர்களிடம் ;பொறுப்பற்ற அதிகாரத்தை வழங்குகின்றது. ஏற்கனவே குடும்பத்திலும் பாடசாலைகளிலும் வன்முறையான அடக்குமுறைகளை எதிர்கொண்டவர்கள். அதனால் பாதிப்புக்குள்ளானவர்கள். இவர்களுக்கு இவ்வாறான ஒரு சுழல் கிடைக்கும் பொழுது அதற்கு எதிர்வினையாற்றுகின்றார்கள் எனலாம். அனைத்து இயக்கங்களும் செய்த மோசமான சித்திரவதைகளை இந்தப் பின்னனிகளில் வைத்துப் பார்க்கலாம். இதேபோல் பாலியல் அடிப்படையிலான தேவைகள் குறிப்பிட்ட வயதுகளில் பூர்த்தி செய்யப்படாது ஒடுக்கப்பட்டவர்கள் அது தொடர்பான ஜனரஞ்சக அறிவைப் பெற்று அதைப் பரிசோதித்துப் பார்க்கும் களமாகவும் இச் ;சூழல் இருக்கின்றது.  மேலும் தாம் விரும்பிய பெண்களை அடைவதற்கான அல்லது பழிவாங்குவதற்கான  ஒரு மார்க்கமாகவும் இந்த வழிமுறைகள் இருக்கின்றன.

ராக்கிங் மாணவர்களை ஒரளவு பாதித்தபோதும் ;மாணவிகளையே அதிகம் பாதிக்கின்றது. இவர்கள் இதனால் பாதிக்கப்பட்டது மட்டுமல்ல பல்கலைக்கழகத்தையும் கல்வியையும் இடையில் விட்டு; செல்வதற்கு நிர்ப்பந்திக்கின்றதுஃ இவ்வாறு சென்ற பெண்கள்; அதிகம்.

இந்தப் பின்னனியில் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு இடம்பெயர்ந்த மாணவராக சென்றேன். எற்கனவே யாழ் பல்கலைக்கழகத்தில் பெற்ற அனுபவத்தினால் சிங்கள மாணவர்களுடன் முரண்படாது ராக்கிங்கை வாங்குவது எனவும் தீர்மானித்திருந்தேன். விஞ்ஞான பீடத்தில் நான் ஒருவரே யாழில் இருந்து வந்த மாணவர். இருப்பினும் குறிப்பாக ஜாதிக சிந்தனை மாணவர்களே என்னுடன் அதிகாமாக உரையாடினார்கள். அவர்களுக்கு என்னுடன் அரசியல் கதைக்க வேண்டும். இவர்கள்  கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழைகளாக இருந்தார்கள். இன்னுமொரு மாணவர்கள் “அல” எனப்படுகின்றவர்கள். இரு குழுக்களை சேர்ந்தவர்களும் இனவாதிகளே. ஆனால் அல சமூக அரசியலை முதன்மைப்;படுத்தாது ஆடல் பாடல் அதாவது வாழ்வை இன்பமாக அனுபவிப்பதையே அக்கறையாகவும் நோக்கமாகவும்; கொண்டவர்கள். பெரும்பாலும் பணக்காரர்களா இருந்தார்கள். இந்த இரு குழுக்களும் தமக்கு ஆட்களை சேர்ப்பதற்காக ராக்கிங் செய்வதில்லை. அடுத்த வருடம் வந்த மாணவர்களுக்கு நாம் ராக்கிங் செய்யவில்லை. அவர்களும் அதற்கடுத்து வந்தவர்களுக்கு ராக்கிங் செய்யவில்லை.. ஆனால் இது தூரதிர்ஸ்டவசமாக தொடரவில்லை.

ஆனால் கலைப்பீடத்திலும் சட்ட பீடத்திலும் மோசமான ராக்கிங் நடைபெற்றது. அங்குள்ள எனது பாடசாலை நண்பர் சட்டபீடம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டதால் ஒரு வருடத்திற்கு முதல் நூழைந்தவர். நான் ராக்கிங் எதிர்ப்பாளர் என்பதை அறிந்து ஒரு சிங்கள மாணவருக்கு போட்டுக் கொடுத்து எனது உடலை வதைத்து ராக்கிங் செய்வித்தார். நான் எதிர்ப்புக் காட்டவில்லை. ஆனால் என்னுடன் அதேயளவு கஸ்டமான ராக்கிங் வாங்கிய சக மாணவர் ஒருவர் பல்கலைக்கழத்தை விட்டுச் சென்றுவிட்டார். அதன்பின் அவரை நான் சந்திக்கவில்லை. இவ்வாறு அதிக ராக்கிங் அங்கு நடைபெறுவதற்கு சட்ட கலைப்பீடங்களில் அதிகளவு தமிழ் மாணவர்கள் இருந்தமையும் ஒரு காரணம்.

போராட்டத்தினுடு வாழ்ந்தாலும் தமிழ் மாணவர்களுக்கு சமூக உணர்வைவிட தமது சுய வாழ்வில் முன்னேறுவதே ;பிரதான நோக்கமாக இருக்கின்றது. சிங்கள மாணவர்கள் இனவாதிகளாக இருந்தபோதும் சமூக அக்கறையும் அந்த உணர்வுமுள்ளவர்களாக இருக்கின்றார்கள் என்பது எனது கணிப்பு. மேலும் புதிய மாணவர்களை வரவேற்பது கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைத்துவமான ஒரு நிகழ்வாக இருக்கும். ஆனால் யாழ் பல்கலைகழகத்தில் பாலியல் ஒடுக்குமுறையின் எதிர்வினையாக வரவேற்பு நிகழ்வு இருக்கும்.

எனது அனுபவங்கள் கொழும்பு விஞ்ஞான பீடத்துடன் சார்ந்தது. இதைப் பொதுமைப்படுத்த தேவையில்லை. ஏனெனில் பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெறுகின்ற ராக்கிங் எல்லாப் பல்கலைக்கழகங்களையும் விட மிக கொடுமையானது அசிங்கமானது. பாலியல் ஒடுக்குமுறையின் விளைவால் உருவான வக்கிரங்களின் வெளிப்பாடே இவர்கள் செய்கின்ற பெரும்பாலான ராக்கிங் செயற்பாடுகள் என அறியக்கிடைக்கின்றன.
இப் பிரச்சனையை தீர்ப்பதற்கு பாடசாலை கல்வியிலிருந்தே பாலியல் கல்வி கற்பிக்கப்படுவது இன்றியமையாதது. மேலும் பாடசாலைகளிலும் வீடுகளிலும் குழந்தைகள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். இரண்டு ;இடங்களிலும் ஜனநாயக சூழல்i உருவாக்க வேண்டும். இளம் சமூகத்தினர் காதல் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும். ஆண் பெண் பாடசாலை பிரிவினைகள் நிறுத்தப்பட்டு கலவன் பாடசாலைகள் உருவாக்கப்பட் வேண்டும். இதைவிட தமது தனிப்பட்ட மற்றும் சமூகப் பிர்ச்சனைகளுக்காக ஒருவரை ஒருவர் பழிவாங்கும் உணர்வு ஏற்படாதவகையில் மாணவர்களைப் பயிற்றுவிப்பதற்கு தியானப் பயிற்சிகள் எல்லா மட்டங்களிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும். மேலும் இவ்வாறான பிரச்சனைகளை ஆரோக்கியமாகத் தீர்ப்பதற்கான மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

ஈழத் தமிழர்கள் மிகவும் மோசமான அனுபவங்களினுடாக தமது வாழ்வைக் கடந்து வந்தபோதும்  நாம் அவற்றிலிருந்து இன்னும் ஒன்றும் கற்கவில்லையோ என்றே நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்க எண்ணத் தோன்றுகின்றது.

மீராபாரதி

நன்றி – படங்கள் – நூலகம்
ஆதவன்
திசை
தினமுரசு

சுகந்தம் 1988.08-11

http://noolaham.net/project/13/1285/1285.pdf

திசை 1989.05.13
 

தின முரசு 1993.07.25

இது தொடர்பாக தேவ அபிரா எழுதிய கட்டுரையையும் இங்கு இணைக்கின்றேன்.
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/123868/language/ta-IN/——.aspx#.VfSasr8HxBB.facebook

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: