Posted by: மீராபாரதி | August 10, 2015

பாலியல் திரைப்படம் (போர்னோகிராபி) & பாலியல் தொழில் தடை செய்ய வேண்டுமா?– ஒரு உரையாடல்.

சோபா சக்தி பாலியல் திரைப்படங்களைத் தடை செய்ய வேண்டியது அவசியம் என்ற அடிப்படையில் அதற்கான காரணங்களை முன்வைத்து  ஒரு பதிவை முகநூலில் எழுதியிருந்தார். இதற்கு எதிர்வினையாக இளங்கோ டிசே அவர்கள் பாலியல் தொழிலை தடைசெய்ய வேண்டியதன் அவசியம் குறித்து அதற்கான காரணங்களை முன்வைத்து தனது பதிவை எழுதியிருந்தார். இருவரது பதிவுகளிலும் முக்கியமான பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்தவகையில் முக்கியமானவை. ஆனால் இரண்டு தடைகளுடனும் உடன்பட முடியாது உள்ளது. ஏனெனில் அவற்றை தடை செய்வதால் மட்டும் பிரச்சனைகள் தீரப்போவதில்லை. பாலியல் திரைப்படங்களையோ (போனோகிராபி) பாலியல் தொழிலையோ தடைசெய்வதற்கு முதல்,  ஆதிக்க சமூகங்களாலும் சமயங்களாலும் காமமும் பாலியலும் அடக்கி ஒடுக்கப்படுவதை விடுதலை செய்ய வேண்டும். இதைச் செய்யாமல் எதைத் தடைசெய்தாலும் பயனில்லை. இவர்கள் மட்டுமல்ல பல பிரச்சனைகள் தொடர்பாக தீர்வுகளை முன்வைப்பவர்களும் அரசும் கூட  தவறும் புள்ளி இதுவே. அதாவது பிரச்சனைகளின் மூலத்தை விட்டுவிட்டு அதனால் உருவான விளைவுகளையே பிரதான பிரச்சனைகளாப் பார்த்து அதற்கான தீர்வைப் பற்றிப் பேசுகின்றார்கள். ஆராய்கின்றார்கள். இவ்வாறு விளைவுகளுக்கான தீர்வை மட்டும் முன்வைப்பது அடிப்படையான மூலப் பிரச்சனைகளை எப்பொழுதும் தீர்க்காது அப்படியே விட்டுவிடுகின்றன..

பாலியல் திரைப்படம் (போனோகிராபி) மற்றும் பாலியல் தொழில் இரண்டும் ஆணாதிக்க ஒருதார சமூகங்களின் காமத்தின் மீதான அடக்குமுறைகளின் விளைவுகள் . இவ் விளைவுகள்  ஒரு புறம் நேர்மறையான பாத்திரத்தை ஆற்றுகின்றன. குறிப்பாக ஆண்களில் பலர் போனோகிராபி திரைப்படங்களைப் பார்த்தே தமது காமத்தின் மீதான இச்சைகளை பூர்த்தி செய்துகொள்கின்றனர். பலர் பாலியல் தொழிலாளர்களிடம் செல்வதன் மூலம்   தமது காம உணர்வுகளையும் உடலின் தேவைகளையும் பூர்த்தி செய்கின்றனர். இந்தடிப்படையில் இவை காமத்தின் மீதான அடக்குமுறையாலும் கட்டுப்பாடுகளாலும் பாதிக்கப்பட்ட ஆண்களின் பாலியல் பிரச்சனைகளுக்கான  வடிகால்கள்தான். இவ்வாறு ஆண்கள் செய்வது காமத்தின் மீதான தடையுடன் மனித உறவுகள் தொடர்பாக சமூகத்தில் இருக்கின்ற கட்டுப்பாடுகளும் பார்வைகளும் இவை உருவாக்கிய கலாசாரங்களும் மேலதிகமான காரணங்களாகும் எனலாம். மேலும் இவ்வாறான ஆதிக்கங்களின் விளைவாக உருவான தனிமனித உளவியலும் இந்த இடத்தில் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விடயங்கள். ஆகவேதான் இந்த இணையங்களுக்கு எதிராக தடைகளைக் கொண்டு வந்த இந்திய அரசாங்கம் அதற்கு எதிராக எழுந்த அலைக்கு அடிபணிந்து குழந்தைகளைப் பாலியல் தூஸ்பிரயோகம் செய்யும் இணையங்களை மட்டும் தடை செய்வதாக தனது தடைகளைத் தளர்த்தி இறங்கி வந்துள்ளது.

மறுபுறம் இரண்டினாலும் எதிர்மறையான பங்களிப்புகளும் உள்ளன. காமம் அடக்கப்பட்ட மற்றும் மனித உறவுகள் கட்டுப்படுத்தப்பட்ட சமூகங்களில் போனோகிராபியை தொடர்ந்து பார்ப்பதாலும் அதில் காட்டப்படும் அதீத யதார்த்தமற்ற உறவுமுறைகளும் பார்ப்பவரது மனநிலையை பாதிக்க செய்கின்றன. மேலும் இவை தவறான தகவல்களை வழங்குவதனால்  இவர்கள்  காமம் தொடர்பாக தவறான முன் முடிவுகளையும் எடுக்கின்றனர். இதன் விளைவாக தமது பெண்களுடன் அல்லது தாம் காணும் பெண்களுடன் பாலியல் துஸ்பிரயோக செயற்பாடுகளில் மட்டுமல்ல வன்முறையை பிரயோகித்து வன்புணர்வுகளிலும் ஈடுபடுகின்றனர். இந்த அடிப்படையில் அதிகம் ஆபத்தானது பாலியல் திரைப்படங்களே (போனோகிராபி).

பாலியல் தொழிலைப் பொறுத்தவரை இளங்கோ டீசே குறிப்பிட்டவாறு சட்டம் கூட அவர்களுக்கு சார்பானதாக இல்லை என்பதைவிட எதிரானதாகவே இருக்கின்றமை தூர்ப்பாக்கியமானது. இதனால் இத் தொழில் செய்பவர்கள் சுரண்டலையும் வன்முறைகளையும் வன்புணர்வுகளையும் சித்திரவதைகளையும் எதிர்கொள்கின்றனர். சில நாடுகள் சுதந்திரமாகவும் சில நாடுகள் வரையறுக்கப்பட்டளவிலும் இவற்றை அனுமதிக்கின்றனர். சில நாடுகள் சட்டரீதியாக முற்றாக தடைசெய்தபோதும் அவை சமூகத்தில் நடைபெறுவதை முழுமையாக தடுக்கமுடியாதுள்ளனர். ஏனெனில் இதற்கான தேவைகள் சமூகத்தில் இருக்கின்றன. ஆகவே இத் தேவைகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பதைப் பற்றி, அதாவது மூலப் பிர்ச்சனையை தீர்ப்பது தொடர்பாக,  உரையாடுவதே பாலியல் தொழிலை இல்லாமல் செய்வதற்கான வழிமுறையாகும். மாறாக அதனைத் தடைசெய்வதல்ல. மேலும் போனோகிராபியுடன் ஒப்பிடும் பொழுது பாலியல் தொழில் பிரச்சனையான ஒரு விடயமல்ல. அதில் பிரச்சனையானது அத் தொழிலை செய்பவர்களது பாதுகாப்பும் உரிமைகளுமே. காமசூத்திராவையும் தந்திராவையும் தந்த இந்திய சமூகத்தில் காமமும் சுதந்திரமான பாலியலுறவுகளும் பிரச்சனைக்குரிய விடயமாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருக்கின்றது எனின் அது பிற்காலத்தில் ஏற்பட்ட பிற்போக்கான அதிகாரத்துவ மாற்றங்களினாலையே ஆகும் எனலாம்.

சோபாவும் இளங்கோவும் குறிப்பிட்டபடி இன்று இந்த இரண்டு செயற்பாடுகளும் பாரிய நிறுவன மயப்பட்ட தொழில்களாக இருப்பதுடன் இதற்காக வறிய நாடுகளிலிருந்து பல பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுகின்றமை முக்கியமான தொழிலாகவும் நடைபெறுகின்றன. ஆகவே பெண்களைப் பொறுத்தவரை இவை இரண்டுமே பாதிப்புகள் நிறைந்தவைதான். ஆனால் இவற்றை தடைசெய்வதால் இவர்களது  பிரச்சனைகள் தீரப்போவதில்லை. மாறாக அதிகரிப்பதற்கான சாத்தியங்களே அதிகம். எவ்வாறு  அனைத்து அல்லது பெரும்பான்மையான ஆண்கள் கைதுய்மையில்  (சுயஇன்பம்) ஈடுபடுவதை  எப்படி தவிர்க்க முடியாதோ அப்படியான  ஒரு பிரச்சனையே  இதுவும். ஆனால் இதில் இரண்டு அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பங்குபற்றவதால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றது.  ஆகவே குறிப்பிட்ட வயதில் ஒழுங்கான பாலியல் கல்வி வழங்கப்படுவதனுடாகவும் மற்றும் பாலியல் சுதந்திரம்  கிடைக்கப்பெறுவதனுடாகவும்  சிலவேளைகளில் இப் பிரச்சனைகளை குறைக்கலாம். மேலும் பாலியல் திரைப்படங்கள் நிறுத்தப்படுவதைவிட அவை யதார்த்தமான கல்வி சார்ந்தவையாக வெளிவரவேண்டும். இவ்வாறு நடைபெற்றாலே ஆகக் குறைந்தது அடுத்த தலைமுறையாவது போனோகிரபியும் பாலியல் தொழிலாளர்களும் இல்லாமல் தமது காமத்தின் தேவைகளை ஆரோக்கியமாக பூர்த்தி செய்து கொள்வார்கள் என்பதே எனது புரிதல்.

அரசுகள் கொண்டுவரும் எல்லா சட்டங்களையும் எதிர்க்க வேண்டும் என்பதல்ல. மாறாக மக்களுக்கும் மற்றும் ஜனநாயகத்திற்கும் விரோதமானவற்றை எதிர்க்கும் அதேவேளை  மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் அவசியமான உரிமைச் சட்டங்கள் நிறைவேற்றப்படும் பொழுது நிச்சயமாக வரவேற்கலாம்.

இளங்கோ அவர்கள் நாம் அதாவது ஆண்கள் சுய மாற்றத்திற்கு உள்ளாவதன் மூலமே இவ்வாறான பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என சரியாக குறிப்பிடுகின்றார். இது முக்கியமானதுதான். அதேவேளை நாம் ஒருவரும் துறவிகளோ சந்நியாசிகளோ அல்லர். சதாரண மனிதர்களாக வாழ்வதனுடாக எவ்வாறு மாற்றங்களை சமூகத்தில் உருவாக்கலாம் என முயற்சிக்கின்றோம். பாலியல் திரைப்படங்களை பார்க்காமல் விடுவதற்கே அதிகமான ஒழுக்கமும் கட்டுப்பாடும் தேவைப்படுகின்றன. இந்த நிலையில் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பாலியல் தொழிலாளர்களிடம் போகாமல் விடுவது என்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. இது அவ்வாறு போகும் ஆண்களிடம் தமது பாலியல் உணர்வுகளை அடக்கக் கோருவதாகும். இவ்வாறு அடக்குவது புதிய பிரச்சனைகளை கொண்டுவரலாம். இவ்வாறான விவாதங்கள் வெறுமனே சோபாவிற்கு எதிராக முன்வைக்க வேண்டும் என்பதற்காக முன்வைக்கப்படும் கருத்துக்களாகவே இருக்கின்றன. ஒரு உரையாடலுக்கான அழைப்பாக இல்லை என்பது கவலைக்குரியதாகும்.

பி.கு – சோபாவின் எதிர்வினை அவரது நிலைப்பாடு அல்லது புரிதல் சார்ந்து அதன் முக்கியத்துவத்துடன் வெளிவந்திருந்தது. அவர் எழுதிய கருத்தில் தவறுகள் இருக்கலாம். எமக்கு முரண்பாடு இருக்கலாம். குறிப்பிட்ட அத் தவறை அல்லது முரண்பாட்டை மட்டுமே நாம் சுட்டிக் காட்டி உரையாட வேண்டும். மாறாக அவரை எள்ளிநகையாடுவதுடனாக நாம் கூறவரும் கருத்தின் வலுவையும் குறைத்துவிடுகின்றோம். இளங்கோ ஏற்கனவே சோபாவின் ஆற்றல்களை பாராட்டியும் முரண்பாடுகளை விமர்சித்தும் எழுதி வந்துள்ளார் என்பது நாம் அறிந்ததே. இருப்பினும் இந்த விடயம் தொடர்பான எதிர்வினையானது சோபாவை எள்ளிநகையாடுவதால் அதில் கூறப்பட்டுள்ள முக்கியமான விடயங்கள் இரண்டாம் இடத்திற்கு சென்று சோபாவே முதன்மைப்படுத்தப்படுகின்றார். இது ஆரோக்கியமான ஒரு உரையாடல் முறையல்ல. ஒருவரைத் தாக்காமல் பண்புடன் விமர்சிக்க முடியாதா? இவ்வாறான பதிவுக்கு இப்படியான நக்கல்கள் தேவையா. நக்கல்கள் பகிடிகள் வாசிப்பதற்கு மகிழ்ச்சியானவைதான் ஆனால் அவை இளங்கோவின் படைப்புகளில் வருவதே பொருத்தமானது என உணர்கின்றேன்.

காமம் மற்றும் பாலியல் பாலியல் தொழில் போன்ற விடயங்கள் தொடர்பாக சில கட்டுரைகளும் எழுதியுள்ளேன். அவற்றை இங்கு இணைக்கின்றேன். மேலும் இக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கம் செய்துள்ளேன். ஆனால் சில காரணங்களால் இன்னும் நூலின் வேலைகள் முற்றுப்பெறவில்லை.

பால், பாலியல் – காமம், காதல் – பெண், பெண்ணியம் – என் அனுபவங்கள் – ஒரு ஆண் நிலை நோக்கு…
http://tinyurl.com/qe6246w

காமம், பிரம்மச்சாரியம், மனிதர்கள், சமூகம் மற்றும் காதல் – ஒரு பார்வை – பகுதி 1

http://tinyurl.com/by7wxbl

சோபாவின் முகநூல் பதிவு

இளங்கோ டிசேயின் முகநூலில் எழுதிய எதிர்வினை பதிவு

திருமணம் : சட்டத்திற்கு உட்பட்ட பாலியல் தொழில்!
பாலியல் தொழில்: சட்டத்தை மீறுகின்ற குற்றம்!
http://tinyurl.com/oh6bn9n

பின்வரும் வீடியாவும் பார்க்கலாம். பயன்மிக்கது.
Why I stopped watching porn | Ran Gavrieli | TEDxJaffa

Advertisements

Responses

  1. இந்த தடை எல்லாநாடுகளுக்கும் / சமூகங்களுக்கும் பொதுவானதாக இருக்கமுடியாது. தடை என்பதிலும் நெறிமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே சரியான பார்வை. போர்னோ வெறும் ஆபாசபடமாக மட்டுமல்ல ஒரு கலை படைப்பாகவும் உருவாக்க ரசிக்க முடியும்.
    //இளங்கோ அவர்கள் நாம் அதாவது ஆண்கள் சுய மாற்றத்திற்கு உள்ளாவதன் மூலமே// – பாலியல் தொழில் என்பது இப்போது ஆண்களுக்கு மட்டுமான தேவையை மட்டும் பூர்த்திசெய்ய‌ என்ற நிலை மாறிவிட்டது. மேலும் மாறிவரும் சமூக அமைப்பில் பாலியல் தொழில் என்பது வெறும் உடல் தேவைக்கு மட்டுமே என்ற வட்டத்திற்க்குள் அடக்கவும் முடியாது.
    எல்லா தொழிலிலும் இருக்கும் சுரண்டல்,சட்டவிரோத செயல்கள் இந்த தொழிலும் இருக்கும். அதுவும் இழுக்கான தொழில் என்ற பார்வையாலும் தடைசெய்த தொழிலாயிருப்பதால் அதில் ஈடுபடுபவர்களுக்கு கொடூரமான பாதிப்பும் சட்டத்தின் பாதுகாப்பும் இல்லாமல் போய்விடுகிற‌து.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: