Posted by: மீராபாரதி | June 26, 2015

தீபன்: யாருடைய குரல்?

தீபன்: யாருடைய குரல்?

cannes%20refugees%201கடந்த மே மாதம் நடைபெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில் தீபன் (Dheepan) என்ற பிரெஞ்சு தமிழ் திரைப்படம் பால்மடோர் ( Palme d’Or) என்ற தங்கப்பனை உயர் விருதைப் பெற்றுக்கொண்டது. இத் திரைப்படத்தை பிரான்ஸின் பிரபலமான இயக்குனர் ஜக்குஸ் ஓடியாட் (Jacques Audiard) இயக்கியுள்ளார். புலம் பெயர்ந்து பாரிசில் ஈழத்து எழுத்தாளர் சோபா சக்தி என்ற ஜேசுதாசன் அந்தனிதாசன் மற்றும் சென்னையைச் சேர்ந்த நாடகக் கரைஞரான காளீஸ்வரி சிறினிவாசன் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த கைதடியைப் பிறப்பிடமாகக் கொண்ட பெற்றோரின் மகள் கிளவுடின் வினாசித்தம்பி பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். இது திரைப்பட ரசிகர்களான எமக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தியே. ஏனெனில் கான்ஸ் திரைப்படவிழாவில் எங்கள் திரைப்படம் ஒன்றை திரையிட விரும்புவது எங்களின் கனவுகளில் ஒன்று. அப்படியிருக்கும் பொழுது நமது நண்பர்கள் நடித்த தமிழ் மொழி பேசும் பிரஞ்சுத் திரைப்படம் ஒன்று விருதும் பெருகின்றதாயின் அது பெரும் மகிழ்ச்சியே. இக் கனவை நனவாக்கியது சோபாசக்தியினதும் தீபன் படக் குழுவினரிதும் பங்களிப்பு என்றால் மிகையல்ல.

DHEEPAN-IMG_9994_NEW-600x538

திரைப்பட இரசிகர்களாக நாம் ஒஸ்காரைவிட கான்ஸ் திரைப்பட விழாவில் சிறிது மதிப்பு வைத்திருக்கின்றோம் என்றால் அது பொய்யல்ல. இத் திரைப்பட விழாவில் இதுவரை வென்ற பல திரைப்படங்களைப் புகழ்ந்திருக்கின்றோம். அந்தப் படங்களில் நடித்த நடிகர்களை அவர்களது அரசியல் சமூக கருத்துக்களுக்கு அப்பாற்பட்டு பாராட்டி இருக்கின்றோம். அப்பொழுதெல்லாம் இந்த நடிகர் இந்தக் கருத்துள்ளவர் என்பதால் நாம் நிராகரிக்கின்றோம் எனக் கூறியதில்லை. இதேபோல் இசையமைப்பாளர் ரகுமான் அவர்கள் இரண்டு ஒஸ்கார் வாங்கியபோது குறிப்பிட்ட திரைப்படம் மீது விமர்சனங்கள் இருந்தபோதும் நாம் மகிழ்ந்தோம். பெருமைப்பட்டோம். வாழ்த்தினோம். அப்பொழுதெல்லாம் அத் திரைப்படத்தின் விமர்சனத்தை தனியாகவும் விருதை தனியாகவுமே பார்த்தோம். அந்தவகையில் சோபாசக்தி என்ற மனிதரின் அரசியல் நிலைப்பாடுகளை சிறிது ஒதுக்கிவைத்துவிட்டு இத் திரைப்படத்தையும் நடிகர்களையும் இயக்குனரையும்  தமிழர்களாகவும் நண்பர்களாகவும் வாழ்த்துவோம். பாராட்டுவோம். இப் பாராட்டும் வாழ்த்தும் எந்தவகையிலும் சோபாசக்தியின் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பான நமது முரண்பாடுகளையோ அல்லது விமர்சனங்களையோ அல்லது இத் திரைப்படம் கூறப் போகின்ற கருத்து தொடர்பான நமது விமர்சனங்களையோ மழுங்கடிக்காது அல்லது வலுவற்றதாக்காது.

இத் திரைப்படத்தின் இயக்குனர் யார்?

thepan jackஇயக்குனர் ஜக்குஸ் ஓடியாட்டின் (Jacques Audiard) திரைப்படங்களை இதுவரை பார்த்தில்லை. இவர் இதற்கு முன்பு ஏழு திரைப்படங்களை இயக்கி இருக்கின்றார். அவற்றுள் சில, A Prophet , Rust & Bone and The Beat That My Heart Skipped. ஐந்து வருடங்களுக்கு முன்பு இவரின் Prophet என்ற திரைப்படம் கான்ஸ் திரைப்படவிழாவில் இரண்டாவது இடத்தைப் பெற்றது. இத் திரைப்படமானது ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை பெற்ற பிரான்சில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற அல்ஜீரிய நாட்டு இளைஞன் ஒருவனின் கதையை மையமாக கொண்டது. பலரினதும் பாராட்டுக்களைப் பெற்றது எனக் குறிப்பிடப்படுகின்றது.

நாம் ஒரு தேநீர் கடையில் இருக்கும் பொழுது எங்களிடம் வந்து பூ விக்கும் ஒருவரின் வாழ்வு எப்படியானது. அவர் எங்கிருந்து வந்தவர்? போன்ற கேள்விகள் தனக்கு முக்கியமானவை என்கின்றார் இத் திரைப்படத்தின் இயக்குனர் ஜக் ஓடியாட். ஏனெனில் ஒரு சமூகத்தில் வேறுபட்டவராக இருப்பவரின் வாழ்வை அறிவதில் ஆர்வமுள்ளவராக உள்ளேன். அந்தவகையில் தீபன் திரைப்படத்தின் வெற்றியானது ஐரோப்பாவில் வாழ்கின்ற இவ்வாறான புலம்பெயர்ந்து வாழ்கின்ற தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் என்கின்றார். இத்திரைப்படத்தின் முக்கியத்துவமானது குடிவரவாளர்களை மையப்படுத்திய அரசியல் பிரச்சனையை மையமாகக் கொண்டதல்ல. மாறாக வசதிகளின்றி வீதிகளில் மிகவும் கஸ்டப்பட்டு வாழ்கின்ற குடிவரவாளர்கள் தொடர்பான கேள்விகளைக் கொண்டது. அந்த வகையில் தீபன் திரைப்படம் முக்கியமானது என விருதைத் தெரிவு செய்த நடுவர்களில் ஒருவர் கூறியுள்ளார். இவ்வாறு ஒரு புறம் பாராட்டுக்கள் இருந்தாலும் மறுபுறம் விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. ஆகவே இத் திரைப்படத்தின் குரலானது ஈழத் தமிழர்களின் குரலாக ஒலிக்குமா? புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் குரலாக ஒலிக்குமா? அல்லது குடிவரவாளர்களின் குரலாக ஓலிக்குமா? அல்லது வழமைபோல வெள்ளை நிற ஐரோப்பிய மைய சிந்தனையின் குரலாகவே ஓலிக்குமா? என்பதை திரைப்படம் திரையரங்குகளுக்கு வரும் வரை காத்திருக்க வேண்டும்.

தீபன் திரைப்படத்தின் கதை என்ன?

hqdefaultஇலங்கையில் போர் முடிவுற்றபின் விடுதலைப் புலிப் போராளிகள் மரணித்த போராளிகளை எரித்துவிட்டு தமது சீருடைகளைக் களைந்து சதாரண உடைகளை அணிந்து கொண்டு மக்களுடன் மக்களாக இணைந்து கொள்கின்றனர். தற்காலிக அகதிகள் முகாமில் ஒருவரை ஒருவர் முன்பின் அறியாத ஒரு பெண், ஒரு போராளி மற்றும் ஒன்பது வயது குழந்தை ஆகியோர் தப்பிப்பதற்காக தம்மை ஒரு குடும்பமாக இணைத்து கொள்கின்றனர். இவர்கள் முகாமிலிருந்து வெளியேறி பிரான்சில் புகலிடம் கோருகின்றார். புகலிட அனுமதியை பிரச்சனையில்லாமல் பெற்றுக் கொண்டு ஒரு புதிய வாழ்வை ஆரம்பிக்க தமக்கென ஒரு குடும்பத்தைப் பொய்யாக உருவாக்குகின்றனர். இவர்கள் வாழ்வதற்கு கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்று கிடைக்கின்றது. இது பிரான்சின் வசதிகள் அற்ற புறநகர்ப் பகுதி. இதேவேளை தீபன் (சோபாசக்தி) பராமறிப்பாளர் வேலை ஒன்றைப் பெற்றுக் கொள்கின்றார். குழந்தை இளையால் (கிளவுடின் வினாசித்தம்பி) பாடசாலைக்கு செல்ல ஆரம்பிக்கின்றார். “துணைவியார்” யாழினிக்கு (காளீஸ்வரி) சமையல் மற்றும் சுத்தம் செய்கின்ற ஒரு வேலை கிடைக்கின்றது. தூரதிர்ஸ்டவசமாக இவர்கள் வசிக்கும் கட்டிடத்திற்கு அருகாமையில் உள்ள கட்டிடம் போதைப் பொருள் விற்கின்ற குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. படத்தின் அரைவாசியில் சிறையிலிருந்து ஒருவர் விடுதலையாகி இவர்கள் வசிக்கின்ற இடத்திற்கு வருகின்ற பொழுது கதை இன்னுமொரு பாதையில் திரும்புகின்றது. புதிதாக வருகின்றவர் போதைப்பொருள் விற்கின்ற குழுவின் தலைமைப் பொறுப்பை மீளப் பெற்றுக் கொள்கின்றார். இச் சூழ்நிலையில் யாழினி இத் தலைமைப் பொறுப்பாளர் மீது ஈர்ப்பு கொள்கின்றார். அதேவேளை தீபன் இக் குழுவின் தாக்குதல்களை எதிர்கொள்ள மீள தனது போராளிக்குரிய குணவியல்புகளை வரவழைத்துக் கொள்கின்றார். இதன்போது அவர் எதிர்கொள்ளும் போரின்தாக்கங்களினால் உருவான போரின் பின்பான மன அழுத்தம் (PTSD) இயல்பாக சித்தரிக்கப்படுகின்றது எனக் கூறப்படுகின்றது.

la-et-mn-cannes-jacques-audiard-20150522புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் வாழ்வை ஐரோப்பிய வெள்ளையர்களின் பார்வையில் இல்லாமல் நமது பார்வையில் கூறினாலே பெரிய விடயம். அவ்வாறு இல்லாவிட்டாலும் ஒரளவு நியாயமாக கூறி அகதிகளின் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வந்தாலே போதும். இத் திரைப்படம் எவ்வாறு கூறுகின்றது என்பதை அறிய ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் திரையிடப்படும் வரை காத்திருப்போம்.

ஆக்கமும் தொகுப்பும் – வீ.கே.எஸ் (V.K.S)

நன்றி உரையாடல் 3

உசாத்துணைகள்
http://www.theguardian.com/film/2015/may/24/jacques-audiard-dheepan-cannes-europe-migrant-workers?CMP=share_btn_fb

http://www.theguardian.com/film/2015/may/21/dheepan-review-tamil-tiger-jacques-audiard-cannes-2015

http://variety.com/2015/film/festivals/dheepan-film-review-cannes-1201502383/

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: