Posted by: மீராபாரதி | May 15, 2015

யாழ்.பல்கலைக்கழ 34வது வருடாந்த அரங்க நிகழ்வு – ஒரு பார்வை

யாழ்.பல்கலைக்கழ 34வது வருடாந்த அரங்க நிகழ்வு ஒரு பார்வை

சிறிலங்கா அரசு: அபிவிருத்து என்று இனவிருத்தியை இல்லாமல் செய்கின்றவர்கள்.

தமிழர்கள்: மூக்கப் பிடிச்சா வாயைத் திறக்கத் தெரியாதவர்கள்?

யாழ் பல்கலைக்கழகத்திற்கு ஒரு அரங்கப் பாரம்பரியம் உள்ளது. பல்வேறு கால கட்டங்களில் பல பேராசிரியர்களாலும் அரங்க ஆற்றல் நிறைந்தவர்களாலும் வழிநடாத்தப்பட்டது. குறிப்பாக ஈழ விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழுந்த 1983களின் பின் அரங்க நிகழ்வினுடாக முக்கியமான காத்திரமான பயனுள்ள பங்களிப்பை இதில் பங்கு பற்றியவர்கள் செய்தார்கள். இவ்வாறான செயற்பாடுகளில் கலைப்பீட நுண்கலைப்பீட மாணவர்களின் பங்களிப்பே முக்கியமானது. sivayoganஇதேபோல் யாழ் மருத்துவ பீட மாணவர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஏற்கனவே உளமனநல மருத்துவ நிபுணர் கலாநிதி சிவயோகன் அவர்கள் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். (http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119029/language/ta-IN/article.aspx) அண்மையில் 34ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் நாடாத்திய வருடாந்த நாடக அரங்க நிகழ்வில் அளிக்கப்பட்ட இரண்டு நாடகங்களைப் (https://www.youtube.com/watch?v=tcyTAFZ6eu0&app=desktop) இணையத்தில் பார்க்க கிடைத்தது. அவை தொடர்பான ஒரு குறிப்பு இது.

இந் நிகழ்வில் 35ம் ஆண்டு மருத்துவ பீட மாணவர்கள் வழங்கிய புனலே பூதமாய் என்ற நாடகத்தை மேடையேற்றிருந்தார்கள். நாடகம் திரைச் சிலையின் மெதுவான விலகலுடன் ஆரம்பித்தது. அப்பொழுது அழகான ஒரு காட்சி மேடையில் விரிந்தது. மேடை நாடகங்களில் திரை விலகுதலும் மூடுதலும் முக்கியமானதொரு விடயம். ஆனால் பல மேடை நாடகங்கள் இதில் கோட்டை விட்டுவிடுகின்றன. சில நாடக அரங்குகளில் திரை விலகுவதையும் மூடுவதையும் அரங்க உரிமையாளர்கள் அல்லது நிர்வாகிகளே செய்கின்றார்கள். இவர்களுக்கு நாடகம் தொடர்பான எந்தவிதமான பரிச்சயமும் இல்லாமல் வெறுமனே இயந்திரத்தனமாகவும் விரைவாகவும் திறந்து மூடுகின்றனர். இதனால் அரங்கின் சூழல் குழம்புகின்றது. மாற்றமடைகின்றது. இது அரங்கில் நடைபெறும் நாடகத்திற்கு ஊறுவிளைவிப்பதாகும். உண்மையில் திரை விலகுவதும் மற்றும் மூடுவதும் அரங்கின் ஒரு அங்கம். இதனை யாழ் மருத்துவப்பீட அரங்கக் குழுவினர் உணர்ந்திருந்தது மகிழ்ச்சியைத் தந்தது மட்டுமல்ல பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தது.

15596_1633715696865925_121511725337924123_nஇந்த நாடகத்தில் பல வசனங்கள் முக்கியமானவையாகப்பட்டன. அவற்றில் சில. “பனங்கொட்டைப் பொறுக்கின கைகள் போர்க் கோடித் தூக்குமா?” எனக் கேள்வி கேட்டுவிட்டு “மூக்கப் பிடிச்சா வாயைத் திறக்கத் தெரியாதவர்கள்?” என தமிழர்களின் அரசியல் பங்களிப்பையும் தந்திரோபாயங்களையும் விமர்சிக்கின்றனர். மேலும் பலர் பிரச்சனைகளை “காசைக் காட்டி” திசை திருப்புவதிலையே அக்கறையாக செயற்படுகின்றனர். மறுபுறம் “நாம் தோன்டின கிணத்தில் பலர் பயன் பெற்றனர்” என நம் பெருமை பேசுகின்றனர். ஆனால் இந்தப் பிரச்சனைகளை இங்கிருந்து தீர்க்காமல் எங்கேயோ எல்லாம் போய் கதைக்கினம் என அரசியல்வாதிகளை விமர்சிக்கின்றனர். குறிப்பாக நிலத்தடி நீரில் எண்ணை கலந்திருப்பது தொடர்பாக “அவங்க இருக்கு என்றாங்க… இவங்க இல்ல என்றாங்க.. நாங்க யாரை நம்புவது…. யாராவது உண்மையைச் சொல்லுங்கோ… மக்கள நிம்மதியாக வாழ விடுங்கோ…” என்கின்றர். இங்கு நிலத்தடி நீர் ஏன்பது இன்று குடாநாட்டில் ஒரு பகுதி மக்கள் எதிர்நோக்கும் உண்மையான ஒரு பிரச்சனை. இன்றைய யதார்த்தம் இது. அதேநேரம் பல பிரச்சனைகள் தொடர்பான ஒரு குறியீடாகவும் எடுக்கலாம்.10422024_1633715706865924_1503970664314574817_n

பிரச்சனைகளுக்கு தீர்வு காண சாமியாரிடம் தீர்வு கேட்டு செல்கின்றனர். அவரை நம்பி அதற்கான திறப்பை சாமியிடம் கொடுக்கின்றனர். அதேவேளை இன்னுமொரு பக்கம் “அபிவிருத்தி என்று இனவிருத்தி இல்லாமல்” செய்கின்றார்கள். எங்களுடைய அரசியல்வாதிகளோ “தங்கட பதவிகளைப் பாதுகாப்பதற்காக சனங்களப் பற்றி நினைக்கினமில்ல”. “நாங்க கதைக்க வேண்டிய நேரத்தில கதைக்காம இருந்திட்டம். அதனால எங்களுக்கு என்று கதைக்க இருந்தவயும் கடைசியில ஏமாத்திப் போட்டினம்.” ஆகவே மக்கள் ஒன்றுபடாமல் இப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது. “யாரையும் நம்பிப் பிரயோசனமில்லை… நாமதான் கையில் எடுக்க வேண்டும்” என நாடகத்தை முடிக்கின்றனர்.

11261665_1633715656865929_4944357918590296610_nஇலங்கையின் வடபகுதியில் குறிப்பாக குடாநாட்டில் நிலத்தடி நீர் இன்று முக்கியமானதொரு பிரச்சனை. அதில் எண்ணைக் கசிவுகள் இருப்பதாகவும் குடிப்பதற்கு ஆபத்தானது எனவும் கூறப்படுகின்றது. இப் பிரச்சனையையே பூதமாக வர்ணித்து அரங்க அளிக்கையை அளித்துள்ளனர். இதில் சாமியர்கள், அரசியல் வாதிகள், அரசாங்கம் என அனைவரும் குற்றஞ்சாட்டப்படுகின்றனர். ஆய்வாளர்களின் முடிவே சரியானது. ஆனால் அதை கேட்காமல் விட்டதால் பிறக்கும் குழந்தைகள் மாற்றுத் திறனாளிகளாகப் பிறக்கின்றனர் என இந் நாடகத்தின் அளிக்கை கூறுகின்றது. இப் பிரச்சனை தொடர்பாக ஆய்வளார் ஒருவரின் கருத்து முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. அதாவது ஈழத் தமிழர்களின் அரசியல் கட்சிகள், அதன் தலைமைகள் மற்றும் மக்களுக்கு இடையில் பிரிவினையை அரசாங்கம் திட்டமிட்டு உருவாக்குவதாக தகுந்த ஆதாரங்களோடும் தர்க்க அடிப்படையிலும் அவர் நிறுவியிருந்தார். இப் புரிதல் இந்த நாடகத்தில் கவனிக்கப்படாமை கவலை தருகின்றது. நாம் ஒரு பிரச்சனையின் நேரடி விளைவுகளையும் அதற்கு இரண்டாவது காரணமாக இருப்பவர்களையும் பற்றி உணர்ச்சிகரமாக பேசுவதிலையே காலத்தைக் கடத்துகின்றோம். ஒரு பிரச்சனையின் பன்முக பக்கங்களையும் அதன் பின்னாலுள்ள விடயங்களையும் கவனிக்கத் தவறுகின்றோம். இவ்வாறான பார்வை எந்தப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு வழிகாட்டுவதில்லை. அதேநேரம் இரண்டாவது அரங்க அளிக்கை இவ்வாறான ஒரு பார்வையை தந்தது எனலாம்.18983_1633715643532597_4824843670392055916_n

34ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மருத்தவ அணி உழிந்த எச்சில் என்ற நாடகத்தை அளித்தனர். இந்த அரங்க அளிக்கை தண்ணீர் பிரச்சனையை மட்டுமல்ல சிறையில் இருப்பவர்கள், காணாமல் போனவர்கள், இடப் பெயர்வு, மீளக் குடியேற்றம், வரலாற்று சின்னங்களை அழித்தல், அரசியல், போன்ற பல பிரச்சனைகளையும் பேசுகின்றது. மேலும் சிறிலங்கா அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்தை கேள்வி கேட்கின்றது. இது 365 நாட்கள் வேலைதிட்டம் என நக்கலடித்து விமர்சிக்கின்றது. சிங்கள தேசம் நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு ஒரு மூல காரணம் என சிங்களப் பெண் பாத்திரம் வழங்கிய தேநீரை விமர்சிப்பதனுடாக ஒரு குறியீட்டின் மூலம் சொல்கின்றனர். இந்த நாட்டில் என்னவும் செய்யலாம் அவை எல்லாம் பிரச்சனையில்லை. ஆனால் நீங்க தமிழ் அல்லது தமிழர் என்றால் அது பிரச்சனை. இதுதான் இலங்கையின் நீண்ட கால யதார்த்தம்.

11068092_1633715816865913_3711091171533357517_nதமிழ் அரசியல்வாதிகளுக்கு கதிரைகளே முக்கியம். இக் கதிரைகளுக்காக தங்களுக்குள் சண்டை போடுகின்றனர்.   கதிரையைப் பிடித்தாலும் அதில் தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தத் தமிழ் அரசியல் வாதிகளை விழிக்கச் சொல்கின்றார்கள். கதிரையில் இருக்கும் நீங்கள் தூங்கினால் யார் எங்களது பிரச்சனைகளைப் பேசுவது? இவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியும். ஆனால் கேட்க வேண்டிய இடத்தில் தட்டிக் கேட்க மாட்டார்கள். மாறாக மக்களை திசை திருப்ப சும்மா ஊர்வலம் அது இது என ஒன்றை ஒழுங்கு செய்வார்கள். அத்துடன் நின்று விடுவார்கள். மேலும் பல காலமாக தைபொங்களுக்குத் தீர்வு வந்து விடும், புதுவருடத்திற்குப் பிரச்சனை தீர்ந்து விடும் எனக் கூறி எங்கள் பிரச்சனைகளை வைத்து வியாபாரம் அல்லவா செய்கின்றனர். ஆகவே நீங்கள் எங்களது பிரச்சனைகளைப் பேசவில்லையானால் நாங்கள் புதியவர்களை உருவாக்குவோம் என சவால் விடுகின்றனர். இந்த அளிக்கையில் “பழம் அழுகினதப் பற்றிக் கதைக்க வரவில்லை. அது அழுகினதற்கான காரணத்தை தேடி வந்திருக்கிறம்.” என்பது ஏற்கனவே குறிப்பிட்டது போல் பிரச்சனைக்கான வேரை மூலத்தைத் தேடுவதில் ஆர்வம் காட்டுவதாகவே இருக்கின்றது.11239624_1633715733532588_4679355751674645057_n

இந்த இரு நாடக அளிக்கைகள் தொடர்பான சில விமர்சனக் குறிப்புகள். ஒரு நாடகத்தில் ஆரம்பத்தில் “நீங்க பார்க்கப்போவது நாடகமல்ல.. எங்கட சமூகத்தில நடந்த நடக்கிற சம்பவங்கள்” எனக் கூறுகின்றனர். இப்படி எல்லாம் கூறவேண்டுமா என்பது ஒரு கேள்வி. ஒரு அரங்க அளிக்கையினுடாக, அக் கலைச் செயற்பாட்டின் ஊடாக, என்ன கூறுகின்றோம் என்பதை அரங்கில் உள்ளவர்கள் உணர வேண்டும். அதுதான் அரங்க அளிக்கையின் செயற்பாடு நோக்கம் என்றே புரிந்துகொள்கின்றேன். இதைத்தான் நாம் சொல்ல வருகின்றோம் எனக் கூறும் பொழுது அரங்கத்திற்கான நோக்கம் காணாமல் போய்விடுகின்றது. மேலும் “சனங்கள் அப்பாவிகள்” எனப் பயன்படுத்தப்படுகின்றது. இது கொஞ்சம் மிகைப்படுத்திய சொல். பொதுசனம் அப்பாவிகள் இல்லை. அவர்களுக்குள் பல்வேறுவிதமானவர்கள் உள்ளார்கள். ஆகவே பொதுசனம் எனச் சொன்னாலே போதும் என நினைக்கின்றேன்.

11140230_1633715640199264_4676815061793577923_nமேலும் இந்த நாடகங்களில் பாடப்படும் பாடல்கள் நன்றாக இருந்தபோதும் சோகம் நிறைந்ததாக காணப்படுகின்றது. “நடந்து திரிந்து குனிந்து விழுந்து வாழ்க்கை தான் மாறுமா.. இது யார் செய்த வேலையோ.. இங்கு ஏன் இந்த வாழ்க்கையோ” இதைப் புலம் பெயர் சூழலில் கேட்கும் பொழுதே மன உளைச்சல் மன அழுத்தம் ஏற்படுகின்றது. அப்படியிருக்கும் பொழுது ஏற்கனவே போரினாலும் வன்முறைகளாலும் இராணுவமய சூழலாலும் உளவியல் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களை இப் பாடல் பாடலின் குரல் மேலும் பாதிக்காதா? நாம் ஏன் எப்பொழுதும் இப்படியான பிரச்சனைகள் பற்றி பாட்டு எழுதும் பொழுதும் பாடும் பொழுதும் அழுதுவடிகின்றோம். இது உளவியல் அடிப்படையில் எம்மை மேலும் அடிமையாக்கும். மற்றவர்களின் தங்கியும் கையேந்தி நிற்கவும் தூண்டும். இதற்கு மாறாக துடிப்பாகவும் நம்பிக்கையுடனும் பாடல்கள் இயற்ற மாட்டோமா? பாட மாட்டோமா? என்ற கேள்வி எனக்கு எப்பொழுதும் ஏற்படும். நாம் நமக்குள்ளும் மாற்றங்களை உருவாக்க வேண்டும். நாம் அடிமைகளல்ல. நமது குரல்கள் உயர்ந்து கம்பீரமாக ஒலிக்க வேண்டும்.11263131_1633715720199256_8590202796045311248_n

நாடகங்களில் சமூகப் பிரச்சனைகளை வெளிப்படுத்தும் போது பார்ப்பதற்கு சில நேரம் பிரச்சார வாடை அடிக்கலாம். ஆனால் இந்த நாடகங்கள் அவ்வாறான பிரச்சார வாடை அடிக்காமல் சிறந்த அரங்க கலை வடிவமாக வெளிப்படுத்தியது அவர்களது வெற்றியாகும். இந்த இரு நாடகங்களிலும் இசை மற்றும் மழை, இடி என்பவற்றின் ஒலிகள் அழகாக இணைக்கப்பட்டிருந்தன. ஒரே மேடை. ஒரே விதமான மேடையமைப்பு. கிணறு மட்டும் இடம் மாறுகின்றது. ஆனால் வேறு வேறு உத்திகள். தங்களுடைய வசதிகளுக்கு ஏற்ப சிறப்பாக செய்தனர்.11217981_1633715826865912_2650140650100612389_n

இரண்டு நாடகங்களிலும் பங்குபற்றிய நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர். உதாரணமாக கிழவன், கிழவி, கருப்பினித்தாய், மாற்றுத்திறனாளிக் குழுந்தை, சாமியார், சீடன், அரசியல்வாதி என ஒவ்வொருவரும் நன்றாக நடித்திருந்தனர்.

ஒரு அரங்க அளிக்கையை ஒளி ஒலி ஓவியமாகப் பார்ப்பது வித்தியாசமான அனுபவமே. நீங்களும் பாருங்கள். உங்களுக்குப் வேறு புதிய அனுபவங்களும் சிந்தனைகளும் தோன்றலாம்.

மீராபாரதி
தொடர்புகளுக்கு meerabharathy@gmail.com

நன்றி – குருபரன் – குளோபல் தமிழ் செய்திகள்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119765/language/ta-IN/-34—–.aspx

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: