Posted by: மீராபாரதி | May 8, 2015

கனவுக்குத் திரும்புதல்

கனவுக்குத் திரும்புதல்
இளமைக் காலத்தில் திரைப்படத்தில் நடிக்கும் கனவு இருந்தது. நடிகர்களைப் போல தலை சீவுதல் மட்டுமல்ல உடைகள் அணியவும் விருப்பம் இருந்தது. “கள்ளத்தோணியில்” இந்தியா சென்று திரைப்படங்களில் நடிக்கவும் ஆர்வம் இருந்தது. ஆம் இளமைக் காலம் முழுவது திரைப்படங்களே எம்மை. என்னை ஆட்கொண்டன. இவ்வாறான எனது திரைப்பட ஆர்வம் தொடர்பாக இன்னுமொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுகின்றேன். இன்று இக் குறிப்பை எழுதுவதற்கு வேறு காரணம் உண்டு.

அம்சன் குமார்1கடந்த ஒரு மாதமாக இரண்டு விடயங்களில் மனம் ஒன்றித்திருந்தது. ஒன்று மனவெளியின் அரங்காடல். இரண்டாவது ரொரன்டோ சர்வதேச குறுந் திரைப்பட விழா. இவை மனதுக்கு புத்துணர்ச்சியை அளித்தன. இவற்றின் உச்சமாக கடந்த இரண்டு நாட்களும் குறும்பட பயிற்சிப் பட்டறை இருந்தது. இதனைத் தாய் வீடு பத்திரிகையும் சுயாதீன திரைப்பட மையமும் இணைந்து வழங்கின. இப் பயிற்சியை குறும்பட இயக்குனர் மற்றும் திரைப்படக் கல்லூரி பேராசிரியர் அம்சன் குமார் அவர்கள் வழங்கினார். நமது ரொரன்டோ வாழ் தமிழ் திரைப்பட ஆர்வலர்கள் பலர் பங்குபற்றி பயன்பெற்றனர் என்றால் மிகையல்ல.

அம்சன் குமார் அவர்களை முதன் முதலாக சலனம் திரை சஞ்சிகை மூலமாக சரிநிகரில் வேலை செய்த 90களின் ஆரம்பத்தில் அறிந்திருந்தேன். இந்த சஞ்சிகையின் பல இதழ்களை சேகரித்து வைத்தது மட்டுமல்ல புலம் பெயர்ந்தபோது கொண்டும் வந்திருந்தேன். எனது திரைப்பட இரசனையை அறிவை வளர்த்த சஞ்சிகைகளின் முக்கியமானது இவை. மேலும் நிறப்பிறிகை சஞ்சிகையிலும் இவர் எழுதியதாக ஞாபகம். பல திரைப்படங்கள் தொடர்பாக புதிய பார்வைகளில் நாம் பார்ப்பதற்காக பல கட்டுரைகள் எழுதியவர். இவரின் வழிகாட்டலில் ஒரு பயிற்சிப்பட்டறை நடக்கும் பொழுது அதை தவறவிட விரும்பவில்லை. அதற்கான மனநிலையும் இருக்கின்ற காலம் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் கால் பதிக்கும் ஆர்வமும் இதில் பங்கு பற்றுவதற்கு உந்துதலாக இருந்தது.

அமசன் குமார்2கடந்த இரண்டு மாலைப் பொழுதுகளும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. குறுந் திரைப்படம் என்றால் என்ன? எப்படி எல்லாம் அவற்றை எடுக்கலாம்? எவ்வாறு கமரா ஒளி ஒலி என்பவற்றைப் பயன்படுத்தலாம் என்பதையும் விபரணப் படங்கள் தொடர்பாகவும் அறிந்தோம். மேலும் ஒரு சிறுகதையை எவ்வாறு குறுந் திரைப்படமாக எடுக்கலாம் என்பதையும் அறிந்தோம். இதற்காக அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதை ஒன்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பவித்ரா என்ற குறுந்திரைப்படம் திரையிடப்பட்டது. இதைவிட பயிற்சிப்பட்டறைகள் புதிய அனுபவங்களை அறிவை உறவை தருபவை. மனிதர்களிடம் இருக்கின்ற இடவெளிகளைக் குறைப்பவை. சக மனிதர்கள் தொடர்பான புரிதலை வளர்ப்பவை. இதற்காகவே அரங்க திரைப்பட மன நலப் பயிற்சிப் பட்டறைகளில் ஆர்வமாக நான் பங்குபற்றுவேன். நாம் எதிர்பார்க்காத புதிய விடயங்களை அறிவதற்கான வழியை ஏற்படுத்துவன. அல்லது திறந்து விடுவன. இதற்குப் பங்கு பற்றுகின்றவர்களும் திறந்த மனங்களுடன் இருந்தால் மேலும் சிறப்பானதாக அமையும்.

இறுதியாக நாம் நான்கு குழுவாப் பரிந்து ஒரு சிறுகதையைப் பலவிதங்களில் குறுந்திரைப்படமாக எடுத்தோம். இது எங்கள் அனைவருக்கும் புதிய அனுபவங்களைத் தந்திருக்கும் என நம்புகின்றேன். இவ்வாறான ஒரு படிப்பினையை அனுபவத்தை நாம் பெற்றமைக்குத் தாய்வீடு தீலிப்குமார், சுயாதீன திரைப்படக் குழுத்தின் சார்பாக ரதன் மற்றும் அம்சன் குமார் அவர்களுக்கும் நாம் நன்றி கூறவேண்டும். மேலும் இப் பயிற்சிப்பட்டறை முழுவதும் நம்முடன் இருந்து கமார மூலம் பல்வேறு பங்களிப்புகளை செய்ததுடன் நமது குறுந் திரைப்படங்களையும் அழகாக ஒளிப்பதிவு செய்த ரூபனுக்கும் நன்றி பல. மேலும் எங்களையும் பயிற்சிப் பட்டறை நிகழ்வுகளையும் தமது கமராவிற்குள் எடுத்த கே கே ராஜாவிற்கும் கருணாவிற்கும் நன்றி பல. இப் பயிற்சிப் பட்டறையிலிருந்து சிறந்த நடிகர்கள் நடிகைகள் அடையாளங் காணப்பட்டனர். அதில் குறிப்பிடத்தக்கவர் அருண்மொழி அவர்கள். திரைப்பட இயக்குனர்கள் தயங்காமல் அணுகலாம். திரைமொழியில் ஆற்றலை வெளிப்படுத்தும் முக அமைப்பையும் சிறப்பாக நடிக்கும் ஆற்றலையும் கொண்டவராக இவர் இருக்கின்றார். அதை ரூபன் அவர்கள் அழகாக காட்சிப்படுத்தி உறுதி செய்தார்.

இந்த நிகழ்வு இனிமையானதாக நடைபெற பங்குபற்றிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி பல.

விரைவில் இன்னுமோரு திரைப்பட பயிற்சிப்பட்டறை நடைபெற உள்ளதாக ரதன் அவர்கள் குறிப்பிட்டார்.

இப் பந்தியில் தொடர்ந்தும் எனது சினிமா அனுபவங்களை எழுதுவேன். நீண்ட கால ஆசை. அது. இன்றிலிருந்து ஆரம்பிக்கின்றது…..
மீராபாரதி
07.05.2015

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: