Posted by: மீராபாரதி | December 27, 2014

குழந்தைகளுக்கான பாலியல் கல்வி – எவ்வாறு கற்பித்தல்?

குழந்தைகளுக்கான பாலியல் கல்வி – எவ்வாறு கற்பித்தல்?

வன்புணர்வு மற்றும் பாலியல் தூஸ்பிரயோகங்கள் குறைந்த புதிய தலைமுறையை உருவாக்குவதற்கான பெற்றோரின் ஆசிரியர்களின் பொறுப்புகள் என்ன?

ஒரு வயது முதல் பல்கலைக்கழகம் செல்லும் வரை பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு வழிகாட்ட முடியும். முதலில் மூன்று பிரிவுகளாக குழந்தைகளை வயதினடிப்படையில் பிரித்துக் கொள்வது நல்லது. முதலாவது குழந்தைகள், இரண்டாவது சிறுவர் சிறுமியர், மற்றும் மூன்றாவது பதின்ம அல்லது வாலிப வயதை உடையவர்கள்.

images1ஒரு வயது முதல் ஐந்து வயது குழந்தைகள்:

  1. அனுமதி பெற வேண்டும் என்பதைக் கற்பியுங்கள். ஒருவரை தொடுவதற்கான அனுமதி பெறவேண்டும். உதாரணமாக, “உன்னைக் கட்டிப் பிடித்து விடைபெறலாமா?” எனக் கேட்பது. மற்றவர் அனுமதி தராதவிடத்து அதை ஏற்றுக் கொள்ளப் பழகுவது. மேலும் கட்டிப்பிடித்து விடைபெறுவதற்குப் பதிலா கையை அசைத்து விடைபெறலாம் அல்லது தனது கை அசைவினுடாக அன்பு முத்தங்களை வழங்கலாம் எனக் கற்பிக்கலாம்.
  2. மற்றவரைப் புரிந்து கொள்ள வேண்டும் -இதற்கு உதவுவது – குழந்தை செய்த ஒரு செயல் மற்றவரை எந்தளவு பாதித்திருக்கும் எனப் புரியவைப்பது. எமக்கு ஒரு பொருள் தேவை என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அதைப் பெறுதவற்காக மற்றவரை துன்புறுத்தவோ கஸ்டப்படுத்தவோ கூடாது. அப்படி எங்களுக்கு நடந்தால் எவ்வளவு கஸ்டமாக வலியாக வேதனையாக இருக்கும் என்பதை கற்பனை செய்யச் சொல்வது. இதைக் கூறும் பொழுது குழந்தை தான் செய்த செயலுக்காக வெட்கப்படாதபடி அரவணைத்து அன்பாக கூறவேண்டும்.images
  3. பிரச்சனையில் மாட்டுப்பட்டிருப்பவர்களுக்கு அல்லது கஸ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவுவது – எவ்வாறு எனக் கற்பிப்பது அல்லது அவர்களுக்கு உதவ நம்பிக்கையான பெரியவர்களிடம் தெரிவிக்க பழக்குவது. இதற்கு தம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதைக் கவனிப்பதைப் பழக்குவது. இவ்வாறு உதவுவதையும் மற்றும் ஒருவர் கஸ்டத்தில் இருக்கின்றார் என்பதை அறியத்தந்த செயலுக்காக குழந்தையைப் புகழ்வது. அதேநேரம் பெரியவர்களுக்கு எதுவும் தேவையெனின் அதை பெரியவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்பதையும் மறக்காமல் நினைவூட்டுவது.
  4. “முடியாது” “வேண்டாம்” மற்றும் “நிறுத்து” போன்ற சொற்கள் முக்கியமானவை என்பதையும் அவை மதிக்கப்பட வேண்டிய சொற்கள் என்பதையும் கற்பிப்பது. ஒருவர் “வேண்டாம்” அல்லது “நிறுத்து” எனக் கூறினால் நாம் என்ன செய்கின்றோமோ அதை உடனடியாக நிறுத்த வேண்டும். எக் காரணங்களுக்காகவும் தொடரக்கூடாது. இதேபோல் நமக்கு பிடிக்காத ஒரு விடயத்தை மற்றவர்கள் செய்கின்றபோது நாம் “வேண்டாம்” அல்லது “நிறுத்து” எனக் கூறினால் அவர்கள் நிறுத்த வேண்டும். அவ்வாறு அவர்கள் நிறுத்தவில்லையெனின் எமக்கு அது பாதுகாப்பானதா மற்றும் அவர்களுடன் கூட்டுச் சேர்வதா என்பதைச் சிந்திக்கவும் தெரிவு செய்யவும் வேண்டும். அல்லது புதிய நண்பர்களைத் தெரிவு செய்ய வேண்டும். இவ்வாறான இடங்களில் பெரியவர்கள் “வேண்டாம்” அல்லது “நிறுத்து” போன்ற சொற்களின் முக்கியத்துவதை குழந்தைகளுக்கு விளங்கப்படுத்தலாம். இது அவர்களினுள் மேலும் ஆழமாக பதியும். குழந்தைகளின் தெரிவை மதிப்பது அவர்களிடம் தன்நம்பிக்கையை உருவாக்கும்.teen 2
  5. முக உணர்வுகளையும் உடல் மொழிகளையும் கவனிக்கவும் கற்றகவும் குழந்தைகளைத் தூண்ட வேண்டும். உதாரணமாக பயம், மகிழ்வு, கவலை, வெறுப்பு, கோவம் போன்ற உணர்வுகளை மற்றவர்கள் வெளிப்படுத்தும் பொழுது கவனிக்கப் பழக்க வேண்டும்.
  6. ஒரு குழந்தையை கட்டாயப்படுத்த வேண்டாம். எந்தக் காரணங்களுக்காகவும் ஒருவரைக் கட்டிப்பிடிக்கவோ தொடவோ முத்தம் கொடுக்கவோ குழந்தைகளைக் கட்டாயப்படுத்த வேண்டாம். முதியவர்கள் பேரன் பேத்தி மார் கட்டாயப்படுத்துப் பொழுது கூட குழந்தைகள் விரும்பாதவிடத்து மாற்று வழிகளை மேற்கொள்ளுங்கள். கை அசைத்து அல்லது கைகளினால் அன்பைப் பறக்கவிடுதல் போன்ற செய்கைகளினுடாக விடை பெறுவதை ஊக்குவிக்கலாம். குழந்தைகள் இல்லாபோது நாம் ஏன் ஏதற்காக அப்படி செய்தோம் என்பதைப் பெரியவர்களிடம் விளங்கப்படுத்தலாம். அப்படியிருந்தும் பெரியவர்களுக்கு அது பிரச்சனையாக இருந்தால் இருந்து விட்டுப்போகட்டும். ஏனெனில் ஒரு குழந்தைக்கு எது நல்லதோ பாதுகாப்பானதோ மகிழ்வானதோ அதையே பழக்க வேண்டும். அதுவே முக்கியமானது. இவ்வாறு மற்றவர்கள் செய்வதையும் ஊக்குவிக்க வேண்டும்.
  7. குழந்தைகள் குளிக்கும் பொழுது தங்களின் பாலுறுப்புகளை கழுவுவதை ஊக்குவியுங்கள். நிச்சயமாக சில நேரங்களில் பெற்றோர் உதவ வேண்டும். அதேநேரம் பாலுறுப்பு முக்கியமானது என்பதையும் அதை நன்றாகப் பராமறிக்க வேண்டும் என்பதையும் கற்பிக்க வேண்டும். இது தனது உடல் தொடர்பான மதிப்பை மட்டுமல்ல தன் உடல் மீது தனக்குள்ள உரிமையையும் குழந்தைகள் உணர்வதற்கு வழியேற்படுத்தும். குழந்தைகளின் பாலுறுப்புகளை மட்டுமல்ல உடலின் பாகங்களையும் கழுவுவதற்கு உதவி செய்வதற்கான அனுமதியை அவர்களிடம் பெற்றுக் கொண்ட பின்பே கழுவிவிடுங்கள். குழந்தை அனுமதிக்காத விடத்து அதை மதியுங்கள்.1279644724-sex-ed-module
  8. குழந்தைகள் “ஆம்” அல்லது “இல்லை” “வேண்டாம்” “முடியாது” எனக் கூறுவதற்கான சந்தர்ப்பங்களை அவர்களது நாளாந்த தெரிவுகளில் வழங்குங்கள். அவர்கள் தங்களது ஆடைகளைத் தெரிவு செய்ய விடுங்கள். என்ன விளையாட விரும்புகின்றார்கள் என்பதைத் தெரிவு செய்ய விடுங்கள். எவ்வாறு தலைவார விரும்புகின்றார்கள் என்பதைத் தெரிவு செய்ய விடுங்கள். அவர்கள் தெரிவு செய்வதற்கு அனுமதியுங்கள். அதற்காக குளிர்காலங்களில் எவ்வாறான ஆடைகள் அணிய வேண்டும் என்பதை கற்பிக்க வேண்டும். முக்கியமானது என்ன வெனில் அவர்களது தெரிவுகளை நாம் மதிக்கின்றோம் அல்லது அவர்களது குரலை நாம் கேட்கின்றோம் என்பதையும் அவை எங்களுக்கு முக்கியமானவை என்பதையும் குழந்தைகள் புரிந்துகொள்ள உணர்ந்து கொள்ள வழி செய்ய வேண்டும். அதேவேளை அவர்களது பாதுகாப்பிலும் உடல் நலத்திலும் நாம் அக்கறையாக இருக்கின்றோம் என்பதையும் உணர்த்த வேண்டும்.
  9. குழந்தைகள் தமது உடல் தொடர்பாக தாம் விரும்பியவாறு வெட்கப்படாது கதைப்பதை அனுமதியுங்கள். உடல் உறுப்புகளுக்கு குறிப்பாக பாலியலுறுப்புகளுக்கு சரியான சொற்களைக் கற்பியுங்கள். இவ்வாறு உடல் மற்றும் பாலியல் தொடர்பாக கற்பிக்கும் பொழுது பாதுகாப்பான இடத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். “இவ்வாறான ஒரு கேள்வியை கேட்டது மகிழ்ச்சியாக உள்ளது” எனக் கூறுங்கள். உங்களுக்கு உடனடியாகப் சரியான பதில் தெரியவில்லை எனின் நான் இதுபற்றி அறிந்து விட்டு கூறுகின்றேன் எனக் கூறுங்கள். ஆனால் நிச்சயமாக பதில் கூறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.       அவர்கள் கேள்வி கேட்டவுடன் நீங்கள் வெட்கப்பட்டால் அல்லது அவர்களது கேள்வியை நிறுத்த விரும்புவதாக உணர்ந்தால், அதற்கான பதிலை அளிப்பதற்கு தனியாகவோ அல்லது உங்களது துணையுடனோ சொல்லிப் பழகுங்கள். நிறையத்தரம் இவ்வாறு பழகினால் குழந்தைக்குப் பதிலளிப்பது இலகுவாக இருக்கும்.cost-of-free-love-04
  10. நம் உள்ளுணர்வுகள் தொடர்பாக உரையாடுங்கள். சிலநேரங்களில் ஒருவகையான, வித்தியாசமான உணர்வுகள் தோன்றும். ஆனால் ஏன் அவ்வாறு தோன்றுகின்றது என்பது தெரியாது. ஆனால் தோன்றும். குழந்தைகளிடம் கேளுங்கள் அவர்களுக்கு அவ்வாறு எதாவது ஏற்பட்டதா என. அவர்கள் கூறும் பதிலை காது கொடுத்து கேளுங்கள்.

இந்த உள்ளுணர்வு சிலநேரங்களில் சரியானதாக இருக்கும் என்பதைக் கற்பியுங்கள். இவ்வாறான உணர்வுகள் ஏற்படும் பொழுது குழப்பமாக உணர்ந்தால் தயங்காமல் எங்களுடன் உரையாடிய பின் முடிவு எடுங்கள் என ஊக்குவியுங்கள். உங்களுக்கு விருப்பமில்லாமல் அனுமதியில்லாமல் உங்களைத் தொடுவதற்கு ஒருவருக்கும் உரிமை இல்லை என்பதை நினைவுபடுத்துங்கள்.

  1. சொந்தமான சொற்களைப் பயன்டுத்தி அவர்கள் விரும்புவதை அல்லது தங்களது வாழ்க்கையில் நடப்பவற்றைக் கூறச் சொல்லுங்கள்.

ஐந்திலிருந்து பன்னிரென்டு வயது வரையான குழந்தைகளுக்கு

teen 4இந்த வயதிலிருந்தே ஒவ்வொருவரின் வெளியையும் மதிப்பதற்கான வழிமுறைகளை கற்றுக்கொடுங்கள்.

  1. உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஆரோக்கியமானது என்பதைக் கற்பியுங்கள். சில நேரங்களில் இந்த மாற்றங்கள் குழப்பமாக இருக்கும். உதாரணமாக பல் விழுதல், முகப்பரு, மற்றும் குறிப்பிட்ட இடங்களில் மயிர் வளர்தல் போன்றவை. இவை பற்றிக் குழந்தைகளுடன் உரையாடும்போது வேறுவிதமான உணர்வுபூர்வமான விடயங்களையும் உங்களுடன் அவர்கள் உரையாடலாம் என்ற நம்பிக்கையை கொடுக்கும். இவ்வாறு உரையாடும் பொழுது நேரடியாகவும் விஞ்ஞான அறிவினடிப்படையிலும் வெட்கம் இல்லாது பதிலளியுங்கள். மீண்டும் நினைவில் கொள்ளுங்கள் இவ்வாறான கேள்விகளைக் கேட்டவுடன் நீங்கள் வெட்கப்படுவதாகவோ அல்லது கேள்வியை நிறுத்துவதாகவோ உணர்ந்தால் உடனடியாக பதிலளிக்காதீர்கள். எவ்வாறு ஆரோக்கியமாக நேர்மையாக சரியான பதிலை அளிக்கலாம் என்பதைப் பயிற்சி செய்தபின் பதிலளியுங்கள்.
  2. குழந்தைகளுக்கு எது நல்ல உணர்வையும் கூடாத உணர்வையும் தருகின்றது என்பது தொடர்பாக உரையாட ஊக்குவியுங்கள். கூச்சம் காட்டுவது பிடிக்குமா? எது பிடிக்கும்? எது பிடிக்காது? மற்றக் குழந்தைகள் உங்களை துன்புறுத்தும் போது அல்லது கஸ்டப்படுத்தும் போது எப்படி இருக்கும்? குழந்தையின் மனதிலிருந்து என்ன வருகின்றதோ அதை வெளிப்படுத்துவதற்கான வெளியை உருவாக்குங்கள்.Gokulam Kathir-Velicham 1
  1. குழந்தைகளுக்கு நடைபெறுகின்ற மாற்றங்கள் அனைத்து இயற்கையானது என்பது நினைவூட்டுங்கள். இந்த வளர்ச்சியானது அனைவருக்கும் நடைபெறும் ஒன்றாகும் என்பதைப் புரியவையுங்கள்.
  2. விளையாடும் பொழுது பாதுகாப்பான ஆரோக்கியமான சொற்களைப் பயன்படுத்த கற்பியுங்கள். நண்பர்களுடன் உரையாடும் பொழுது அல்லது உடன்பாடுகளை மேற்கொள்வதற்காக உரையாடும் பொழுது பாதுகாப்பான ஆரோக்கியமான சொற்களைப் பயன்படுத்த வழிகாட்டுங்கள். இது முக்கியமானது. ஏனெனில் பல குழந்தைகள் போர் விளையாட்டுக்களில் தம்மையும் அறியாது ஒன்றுபட்டு விடுவார்கள். இதனுடாக மற்றவர்களைப் பாதிக்கச் செய்கின்ற தம் மன உணர்வுகளை தயக்கமில்லாது வெளிப்படுத்துவார்கள்.
  3. மற்றவர்களின் மன உணர்வுகளை அறிய உணரக் கற்பியுங்கள். தம்முடன் விளையாடுகின்றவர்களின் மன நிலையை அறிவதற்கு தாம் விளையாடுகின்ற எந்த ஒரு விளையாட்டையும் அடிக்கடி இடையில் நிறுத்துவதற்கு கற்பியுங்கள். விளையாட்டிலிருந்து அடிக்கடி சிறிது ஓய்வு எடுக்கவும் அனைவரது உணர்வுகளும் நன்றாக உள்ளதா என்பதையும் உறுதி செய்யப் பழகுவதையும் கற்பியுங்கள்.images3
  4. விளையாட்டின் போது அனைவரது முக உணர்வுகளை ஒவ்வொரு குழந்தைகளும் கவனிக்க வேண்டும் என்பதை ஊக்குவியுங்கள். எல்லோரும் மகிழ்சியாகவும் ஒரே புரிதலிலும் இருக்கின்றார்கள் என்பதை உறுதி செய்யக் கூறுங்கள்.
  5. நண்பர்களுடன் விளையாடும் குழந்தைகள் விளையாட்டுத் திடலில் நடந்ததைப் பார்த்ததை வெளிப்படுத்த பங்களிக்க வேண்டும். ஒரு நிகழ்வு தொடர்பாக அவர்கள் என்ன செய்திருப்பார்கள்? அல்லது வித்தியாசமாக என்ன செய்திருக்கலாம்? என்பதைக் கேளுங்கள். அவர்கள் (பகிடி)வதைகள் தொடர்பாக குறிப்பிட்டால் நடந்தைதை மீள விபரிக்கும் படி கூறவும்.
  6. குழந்தைகளின் ஆண் பெண் நட்புறவுகள் அல்லது விருப்பம் தொடர்பாக கேளி செய்யாதீர்கள். அவர்கள் இந்த உறவுகள் தொடர்பாக எதை உணர்தாலும் அது ஏற்றுக் கொள்ளுங்கள். அது நட்புக் கடந்த ஒரு காதல் ஈர்ப்பாக இருப்பதை உணர்ந்தால் அதைக் குறிப்பிடாதீர்கள். மாறாக குறிப்பிட்ட ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அருடனான உறவு எப்படிப் போகின்றது? எனக் கேளுங்கள். அதைப் பற்றி மேலும் உரையாடவோ அல்லது உரையாடாமல் இருப்பதற்கோ உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள்.sex education
  7. குழந்தைகளின் சில பழக்கவழக்கங்கள் மற்றவர்களைப் பாதிக்கின்றது என்பதைக் கற்பியுங்கள். இதை நீங்கள் எப்பொழுதும் இலகுவான வழிகளில் செய்யலாம். சிலர் சத்தம் போடும் போது அல்லது மோசமான வார்த்தைகளையோ குப்பைகளையோ கொட்டும் போது மற்றவர்கள் அதற்கு எப்படிப் பதிலளிக்கின்றார்கள் அல்லது எதிர்வினையாற்றுகின்றார்கள் என்பதைக் கவனிக்கும்படி குழந்தைகளிடம் கூறுங்கள். இதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என சிந்திக்கின்றீர்கள் எனக் குழந்தைகளிடம் கேளுங்கள். இக் குப்பைகளை யாராவது சுத்தம் செய்ய வேண்டுமா? இச் சொற்களைக் கேட்டு சிலர் பயப்பிடுவார்களா? குழந்தைகள் தெரிவு செய்யும் சொற்கள் செயற்பாடுகள் எப்படி மற்றவர்களைப் பாதிக்கின்றது என்பதை விளங்கப்படுத்துங்கள். எப்பொழுது கத்துவதற்கான நல்ல நேரங்கள் என்பதையும் எந்த வெளிகள் குப்பைகளைக் கொட்டுவதற்கோ அல்லது குப்பையாக்குவதற்கோ பொருத்தமானவை என்பதையும் உரையாடுங்கள்.
  8. உதவிகள் செய்வதற்கான சந்தர்ப்பங்களைத் தேடிச் செல்லுங்கள் என குழந்தைகளுக்கு கற்பியுங்கள். குப்பைகளை எடுத்து துப்பரவு செய்யலாமா? பயணத்தின் போது ஒருவரின் வாசிப்பை இடைஞசல் செய்யாதவகையில் அமைதியாக இருக்கலாமா? ஒருவர் உள்ளே வருவதற்கு கதவைத் திறந்து வைத்திருக்கலாமா? ஒருவரின் சுமையைக் குறைப்பதற்கு உதவலாமா? இவ்வாறு பல வழிகளில் பல பாத்திரங்களினுடாக குழந்தைகள் உதவி செய்வதற்கு கற்பிக்கலாம்.teen 1

பதின்ம மற்றும் இளம் வயதிலுள்ளவர்களுக்கான கல்வி

  1. “நல்ல தொடுகை கூடாத தொடுகை” தொடர்பான கல்வியூட்டல் குறிப்பாக பதின்ம வயது மாணவர்களுக்கு கற்பிப்பது பிரச்சனைக்கு உரியது ஒன்றே. ஏனெனில் இந்த வயதில் தான் பல்வேறுவகையான தொடுகை விளையாட்டுக்கள் ஆரம்பிக்கும் காலாமாகும். பின் பக்கத்தில் அடிப்பது, மற்றவருக்கு வலியை உண்டாக்கும் வகையில் ஆண்குறியில் அடிப்பது அல்லது மார்பில் கிள்ளுவது, இது தொடர்பாக இளைஞர்களிடம் உரையாடும் பொழுது இளைஞிகள் இந்த விளையாட்டுக்களை விரும்புவதாக தாம் நினைப்பதாக கூறுகின்றனர். ஆனால் இளைஞிகளிடம் கேட்கும் பொழுது தாம் இதை விரும்பவில்லை என்றே கூறுகின்றனர்.

இவ்வாறான விளையாட்டுக்கள் எவ்வாறு மற்றவர்களைப் பாதிக்கின்றது என்பதை குழந்தைகள் மற்றும் இளைஞர்களுடன் உரையாட வேண்டும். இதை அவர்கள் தவிர்க்கவே விரும்புவார்கள். ஆனால் இது தொடர்பாக அவர்களை உரையாட ஊக்குவிப்பது மிக முக்கியமானது. தம்மை ஒருவர் இவ்வாறு தாக்கும் பொழுது அது எவ்வாறு தமக்கு வலிக்கின்றது அல்லது எவ்வளவு கஸ்டமாக இருக்கின்றது என்பதை இவர்கள் உணரச் செய்ய வேண்டும்.

இவ்வாறு யாராவது செய்வதை அடுத்த முறை நீங்கள் கண்டால் இது வெறுமனே ஆண்களின் விளையாட்டல்ல மாறாக ஒருவரின் வெளி மீதான அத்துமீறலும் மற்றும் (பாலியல்) தூஸ்பிரயோகமும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். முடிந்தால் அதைச் செய்பவருக்கும் உணர்த்த வேண்டும். முடியாதபோது பெரியவர்களுக்கு அல்லது பொறுப்பானவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.std

  1. பதின்ம வயதினரின் தன்னம்பிக்கையை கட்டி எழுப்புதல். இடைநிலை வகுப்புகளில் மற்றவர்களை அதாவது குறிப்பிட்ட தேர்வு செய்யப்பட்ட அடையாளங்களை நோக்கியே (பகிடியா) துன்புறுத்துவது அத்துமீறுவது என்பது மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு நடைபெறுவது குறிப்பிட்டவர்களின் அதாவது பாதிக்கப்பட்டவர்களின் பதின்மங்களின் ஆரம்பத்திலிருந்தே (13 வயதிலிருந்து) அவர்களின் தன்னம்பிக்கையை இழப்பதற்கு வழிவகுக்கின்றது. உதாரணமாக பதினேழு வயது வரும் பொழுது 78 வீதிமான பெண் குழந்தைகள் தமது உடலை வெறுப்பவர்களாக இருக்கின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன.

ஆகவே நாம் சிறுவயதிலிருந்தே குழந்தைகள் ஒவ்வொருவரும் எவ்வளவு சிறப்பானவர்கள் என்பதை அவர்களுக்கு கூறி வளர்க்க வேண்டும். ஆனால் தூரதிர்ஸ்டவசமாக குழந்தைகள் பதின்மத்தை அடையும் பொழுது நாம் அவர்களது ஆற்றல்களைப் புகழ்வதை நிறுத்தி விடுகின்றோம். ஆனால் அவர்களின் தன்னம்பிக்கை வளர்வதில் இது தான் முக்கியமானதும் நெருக்கடியானதுமான காலமாகும். இது வெறுமனே அழகு சம்பந்தப்பட்ட விடயமல்ல. ஆகவே அவர்களது ஆற்றல்கள், திறமைகள், அன்பு, மற்றும் தோற்றப்பாடு தொடர்பான ஆரோக்கியமான நேர்மறையான குறிப்புகளை தொடர்சியாக குறிப்பிடுங்கள்.

குழந்தைகள் இப் புகழ்சிகளை ஏற்க மறுத்தாலும் நாம் கூறவேண்டும். எப்பொழுதும் நம்மைப் பற்றிய நல்லவகைகளை கேட்கும் பொழுது எங்களைப் பற்றிய பெருமை அதிகரிக்கும். தன்னம்பிக்கை உருவாகும்.

  1. பதின்மங்களின் மத்தியிலிருந்து பாலியல் வியடங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக உரையாட ஆரம்பியுங்கள். ஆனால் அதற்கான உடன்பாட்டை அனுமதியை உள்வாங்கிக் கொண்டே செய்ய வேண்டும். காமம், பாலியலுறவு, பாதுகாப்பான பாலியலுறவு முறைகள் மற்றும் அதனால் பரவும் நோய்கள் போன்வற்றைத் திருமணத்திற்கு பின் உரையாடுவதில் நாம் வல்லவர்கள். ஆனால் இந்த உரையாடல்கள் பதின்மங்களின் மத்தியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இது அவசியமானதும் முக்கியமானதுமாகும்.

உதாரணமாக, “ஒரு பெண்ணோ ஆணோ உங்களில் விருப்பமாக இருக்கின்றார் என்பதை எப்படி புரிந்து கொண்டு கூறுவீர்கள்?” “உங்களின் விருப்புக்கு உரியவர் அல்லது காதலர் உங்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க தயார் என்பதை எப்படி அறிவீர்கள்?” போன்ற கேள்விகளை கேட்கலாம்.

இக் கேள்விகள் உடன்பாடு (consent) தொடர்பாக உரையாடுவதற்கான நல்ல சந்தர்ப்பம். அதாவது ஒருவரை தொடுவதற்கு அல்லது முத்தமிடுவதற்கு அனுமதி கேட்க வேண்டும் என்பதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். இந்த நேரங்களில் மற்றவரின் “ஆம்” என்பது தான் “ஆம்” ஆகும் என்பதை விளக்க வேண்டும். மாறாக மற்றவர் “இல்லை” “முடியாது” “வேண்டாம்” என சொல்வது அவர்களின் உடன்பாட்டுக்கான அர்த்தமல்ல.
பதின்மங்களில் இவ்வாறான உடன்பாடு (consent) தொடர்பான கல்வியூட்டலை அளிப்பது ஆரோக்கியமானது. பிற்காலங்களில் இவர்கள் தவறான பழக்கவழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பதற்கும், அல்லது ஒருவர் பாதிக்கப்பட்ட பின்பும் அதிலிருந்து மீள்வதற்காக மீளவும் கல்வியூட்டலைச் செய்யத் தேவையில்லாமல் இருக்கும். ஆகவே இவ்வாறான கல்வியை இளமையிலையே கற்பிப்போம்.teen 3

  1. பதின்மங்களில் தான் மாணவ மாணவிகளிடையே காமம் மற்றும் பாலியல் பாலியலுறவு தொடர்பான உரையாடல்கள் ஒரே பாலினர் இருக்கின்ற சூழல்களில் நடைபெறும். இவர்களுடைய விருப்பங்களும் ஈர்ப்புகளும் இயல்பானவையும் ஆரோக்கியமானவையுமாகும் என்பதை நாமும் புரிந்து கொண்டு அவர்களுக்கும் புரியவைக்க வேண்டும். தமக்கு ஏற்பட்டுள்ள ஈர்ப்பை எவ்வாறு இவர்கள் வெளிப்படுத்துவது என்பதை பற்றி நாம் அவர்களுடன் உரையாடவேண்டும். அதேவேளை குழந்தைகள் மற்றக் குழந்தைகளைப் பாலியல் பண்டங்களாக கதைப்பதை நாம் பெற்றோர்களாக ஆசிரியர்களாக தடுப்பதற்கு நாம் அதிகமான விடயங்கள் செய்ய வேண்டும்.

உதாரணமாக ஒரு சிறுவன் “அவள் நல்ல சமான்” என சொல்வதை நாம் கேட்கலாம், அப்பொழுது, “நான் நினைக்கின்றேன் அவள் சமானிலும் விட மேலானவள்” என நாம் கூறலாம். இக் கணத்தில் அவர்கள் எங்களை வெறுப்பாகப் பார்த்தாலும் நமது கருத்து அவர்களின் மனதில் ஒரிடத்தில் பதியும். இவ்வாறு நாம் தாம் அவர்களுடன் இருந்து அவர்களை வழிநாடாத்த வேண்டும். “அவளோ அவனோ நன்றாகப் பாடுவாள், ஆடுவான், எழுதுவாள்” என அவர்களது பல்வேறு ஆற்றல்களைக் இந்த இடத்தில் குறிப்பிடலாம். இதன் மூலம் குழந்தைகள் மற்றவர்கள் மீது வைத்திருக்கும் எதிர்மறையான பாலியல் அடிப்படையிலான முத்திரையை மாற்றலாம்.

  1. ஒருவர் வளர்வது என்பது அவரது ஹோமோன்களின் மாற்றமும் ஆகும் என்பதை விளக்குவது முக்கியமானது. இந்த ஹோமோன்கள் எம்மை சிலநேரங்களில் சரியாக சிந்திக்க விடாது. ஏனெனில் சில நேரங்களில் எங்கள் ஆசைகள் அடைய முடியாதளவு பெரிதாக இருக்கும். அல்லது நாம் கோவமானவர்களாக குழம்பிப்போனவர்களாக கவலையானவர்களாக இருப்போம். இந்த வயதில் இவ்வாறான புதிய உணர்வுகளுடன் இருப்பது சதாரணமானது, பொதுவானது, இயல்பானது. இதில் தவறேதுமில்லை. ஆகவே குழந்தைகள் எந்த உணர்வுகளைக் கொண்டிருந்தாலும் அதைப் பற்றி எங்களுடன் தாராளமாக உரையாடலாம் என்பதை அவர்களுக்கு கூறவேண்டும். ஆனால் இவ்வாறான புதிய உணர்வுகள் விருப்பங்கள் தேவைகள் எல்லாம் வேறு யாருடைய பொறுப்புமல்ல. அவர்களுடைய பொறுப்பு என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். ஆகவே தம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் அன்பைக் காட்டுவதுடன் மரியாதை கொடுப்பதையும் பழகவேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
  2. பதின்ம மற்றும் உயர்கல்வி கற்கும் இளைஞர்களிடம் ஆண்மை என்றால் என்ன என்பது தொடர்பாக உரையாட வேண்டும். இளைஞர்களுடன் ஆண்மையின் நல்ல பக்கங்கள் தொடர்பாக உரையாடலாம். அதேவேளை எங்களது கலாசாரத்தில் இருக்கின்ற ஆண்மை தொடர்பான எதிர்மறையான அம்சங்கள் என்ன என்பதைக் கேட்கலாம். மேலும் நாம் வேறு வேறு ஆண்மை அல்லது பால்தன்மை கொண்ட ஆண்களை எவ்வாறு உள்வாங்கலாம் என்பதைக் கேட்கலாம். இவ்வாறான பல்வேறு தன்மைகள் கொண்ட ஆண்கள் நம் சமூகத்தில் இருக்கின்றார்கள். அவர்கள் யார் எனக் கேட்கலாம். மேலும் ஆரோக்கியமான ஆண்தன்மை தொடர்பான கலந்துரையாடல்களை பாடசாலைகளில் ஆரம்பித்து பல்கலைக்கழகம் வரை தொடரலாம். இந்த உரையாடல்கள் மூலமே வன்முறையற்ற ஆண் தன்மை கொண்ட சமூகத்தை எதிர்காலத்தில் உருவாக்க ஊக்குவிக்கலாம். ஏனெனில் சமூகத்திலிருக்கின்ற வன்புணர்வு கலாசாரத்தை இல்லாமல் செய்வது என்பது ஏற்கனவே ஆண்மை தொடர்பாக இருக்கின்ற சமூக கற்பிதத்தை மாற்றுவதில் முக்கியமான பங்கு வகிக்கின்றது.
  3. இளமையில் கொண்டாட்டங்கள் தொடர்பாக பதின்ம வயதினருடன் நேர்மையாக உரையாட வேண்டும். சில தகவல்களை அவர்களுக்கு கூறத் தவறக்கூடாது. இந்த வயதில் மது மற்றும் போதை மருந்துகள் பயன்படுத்துவதை நாம் விரும்பவில்லை என்பதை தெளிவாக உறுதியாக கூறவேண்டும். இருப்பினும் பதின்ம வயதின் கொண்டாட்டங்கள் தொடர்பாக நாம் அறிந்தே உள்ளோம். ஆகவே சில கேள்விகளைக் கேட்பதன் மூலம் இது தொடர்பான உரையாடலைத் தொடரலாம்.

உதாணரமாக மது பாவித்த பின்பு நீங்களும் உங்கள் நண்பர்களும் பாதுகாப்பாக இருக்கின்றீர்கள் என்பதை எப்படி உறுதி செய்வீர்கள்?

நீங்கள் அளவுக்கு அதிகமாக குடித்துள்ளீர்கள் என்பதை எப்படி அறிவீர்கள்?
அதிகமாக குடித்தபின் எவ்வாறு பாதுகாப்பாக வீட்டுக்குச் செல்வீர்கள்? யாருடன் செல்வீர்கள்? யாரை உதவிக்கு அழைப்பீர்கள்?

உங்களது மது அல்லது போதைப் பாவனை அதனது எல்லையைக் கடந்து விட்டதை, அதவாது ஆபத்தான நிலைக்கு வந்துள்ளதை அல்லது அதற்கு நீங்கள் அடிமையாகிவிட்டதை எப்படி அறிவீர்கள்?

நீங்கள் அதிகமாக மது அல்லது போதைப் பொருட்கள் பயன்படுத்திய பின் உங்கள் செயற்பாடுகள் பழக்கவழக்கங்கள் எவ்வாறு மாறுகின்றன? இந்த நிலையில் உங்களிடமிருந்து எப்படி மற்றவர்களைக் காப்பாற்றுவீர்கள்? உதாரணமாக உங்களுக்கு இந்தப் பயன்படுத்தலால் கோவம் அதிகமாகி மற்றவர்களின் வெளிகளை பாதுகாப்பான சூழலை அத்துமீறுவதை எவ்வாறு கட்டுப்படுத்துவீர்கள்?

நீங்கள் அதிகமாக மது அல்லது போதைப் பொருட்கள் பயன்படுத்திய பின் ஒருவருக்கு முத்தம் கொடுக்கலாமா? அல்லது ஒருவரைத் தொடலாமா? அல்லது ஒருவருடன் பாலியலுறவு கொள்ளலாமா? என்பதை எப்படி அறிவீர்கள்?

இவ்வாறான சூழ்நிலைகளில் அவர்கள் ஒருவகையான மயக்கத்தில் இருப்பார்கள் எனவும் ஆகவே மற்றவர்களின் சைகைகள் அறிவிப்புகள் குழப்பமானதாகவும் இதனடிப்படையிலான அவர்களின் முடிவுகள் தெளிவின்மையாகவும் இருக்கும் என்பதை விளக்குங்கள். மற்றவர்களின் சைகைகளை நீங்கள் சரியாகத்தான் புரிந்து கொண்டிர்கள் என்பதை எப்படி அறிவீர்கள்? ஆகவே முக்கியமாக மது அல்லது போதைப் பொருட்கள் பயன்படுத்தியிருக்கும் பொழுது மற்றவர்களைத் தொடுவதற்கோ அல்லது முத்தம் கொடுப்பதற்கோ அவர்களின் அனுமதியைப் பெறவேண்டும் என்பதைக் கூறுங்கள்.

அளவுக்கு அதிகமாக மது மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்தியிருப்பவர்கள் மற்வர்களை தொடவோ துன்புறுத்தவோ பாலியல் தூஸ்பிரயோகம் செய்யவோ கூடாது என்பதை விளங்கப்படுத்துங்கள். அவ்வாறு ஒருவர் நடந்தால் அதற்கு எதிராக நிற்கவும் அதைத் தடுக்கவும் அல்லது உதவி கோரவும் கற்பியுங்கள்.

இவ்வாறான கொண்டாட்டங்கள் பாவனைகள் தொடர்பாக பதின்ம வயதினருடன் உரையாடும் பொழுதும் பயன்படுத்தும் சொற்களில் மிகவும் கவனமாக இருங்கள். முக்கியமாக இதனால் ஏற்படுகின்ற பாதிப்பைத் தடுப்பது பாதிக்கப்படுகின்றவர்களில் (victim) பொறுப்பல்ல என்பதைப் புரியவையுங்கள். எப்பொழுதும் இதற்கான பொறுப்பை எடுக்க வேண்டியவர் அதைச் செய்தவரே (perpetrator) என்பதை உணர்த்துங்கள். ஆகவே அவர்தான் (perpetrator) சரியான முடிவை எடுத்து மற்றவர் மீது பாதிப்பை ஏற்படுத்தாதவகையில் நடந்து கொள்ளவேண்டும் என்பதைப் புரியவையுங்கள்.

  1. பதின்ம வயதில் தமக்கு விருப்பமானவர்களுடன் அல்லது ஈர்க்கப்பட்டவர்களுடன் ஆழமான (பாலியலுறவு உட்பட) உறவை வைத்திருப்பார்கள். இவர்களுடன் காமம் பாலியுலுறவு மற்றும் அதற்கான ஆரோக்கியமான உடன்பாடு (healthy consent), பரஸ்பரம் மதித்தல் என்பன தொடர்பாக தொடர்ச்சியாக உரையாட வேண்டும். அவர்கள் தமக்கு இவை தொடர்பாக தெரியும் என்பார்கள் இருப்பினும் தொடர்ச்சியாக உரையாடுவது இவற்றின் முக்கியத்துவம் தொடர்பாக விரைவில் அவர்கள் புரிந்து கொள்ள வழிவகுக்கும். மேலும் இவை தொடர்பாக வெளிப்படையாக திறந்த மனதுடன் உரையாடுவது தமது நண்பர்களை மதிப்பது, உடன்பாடு கொள்வது போன்றன இயல்பான பழக்கவழக்கங்களில் ஒன்றாக மாறிவிடும். அதாவது அவர்களின் சாதாரண இயல்பாகிவிடும்.
  2. இறுதியாக பதின்ம வயதினர் காமம், பாலியலுறவு, பாலியல் தூஸ்பிரயோகங்கள், வன்முறைகள், உடன்பாடுகள் தொடர்பாக மேலும் அறிவதற்கு ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு இது தொடர்பாக அறிவதில் கற்பதில் ஆர்வம் இருப்பதால் அதற்கான தகவல்களை எந்த வழியிலாவது பெற்றுக் கொள்வார்கள். நாங்கள் இந்தத் தகவல்களை அன்புடன் அக்கறையுடன் நேர்மையாக உண்மையாக தொடர்ச்சியாக வழங்குவோமாயின் அவர்கள் இத் தகவல்களை தங்களுடன் இந்த உலகத்திற்கு எடுத்துச் செல்வார்கள்.

சரியான தகவல்கள் கருத்துக்கள் குழந்தைகளுக்கு கிடைக்குமாயின் அவர்கள் பார்வையாளர்களாக ஒதுங்கியிருந்து பார்த்துக் கொண்டு நிற்காமல் பொறுப்புடன் தேவையான நேரங்களில் செயற்படுவதற்கு ஊக்குவிக்கும். ஏனெனில் இந்த உலகத்தில் இவ்வாறு பொறுப்பெடுப்பவர்களே அதிகம் தேவைப்படுகின்றார்கள். மேலும் உலகத்தில் சரியானதையும் நல்லதையும் செய்வதற்கு குழந்தைகளுக்கு பொருத்தமான தகவல்களை வழங்க வேண்டும். இது எங்களின் பொறுப்பு. அப்பொழுதான் வன்முறையற்ற ஆணாதிக்கமற்ற மற்றவர்களை மதிக்கின்ற ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை உடைய சமூகம் ஒன்றும் உருவாகும்.

மூலம் – Julie Gills, Jamie Utt, Alyssa Royse and Joanna Schroeder
The Healthy Sex Talk: Teaching Kids Consent, Ages 1-21
தமிழில் – v.k.s.மீராபாரதி

அனைவருக்கும் புது வருட வாழ்த்துக்கள்.

புதுவருடம் என்பது குறிப்பிட்ட நாளுக்கு மட்டும் உரியதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நாம் மாறாதவரை நாட்கள் மட்டுமே புதிதாக இருக்கும். நாம் பழமையானவர்களாக இருந்து புதிய நாளையும் பழையதாக மாற்றிவிடுவோம். ஆகவே ஒவ்வொரு நாளும் புது வருடமாக இருக்க வேண்டுமாயின். நமக்குள் மாற்றம் வேண்டும். இந்த மாற்றமே புதிய நாள் ஒவ்வொன்றையும் புதிய வருடம் போல் செழிப்பானதாக ஆரோக்கியமானதாக மாற்றும். மாறுவதற்கு நாம் தயாரா?

இம் மொழிபெயர்ப்புக் கட்டுரையே உங்களுக்கான எனது புதுவருட பரிசு.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: