Posted by: மீராபாரதி | December 23, 2014

2015 தேர்தல்: மகிந்தவின் தோல்வி – தமிழர்களின் வெற்றிப் பயணத்திற்கான புதிய பாதை.

2015 தேர்தல்: மகிந்தவின் தோல்வி – தமிழர்களின் வெற்றிப் பயணத்திற்கான புதிய பாதை.

jeyaஇலங்கையில் 2015 ஆண்டு தை மாதம் நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஒரு கூட்டத்தையும் கலந்துரையாடலையும் தேடகம் (தமிழர் வகைதுறை வள நிலையம் ஒழுங்கு செய்திருந்தது. கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜயகரன் புதிய அரசியல் பண்பாடு ஒன்றை கட்டி எழுப்புவதை நோக்கமாகக் கொண்டு இந் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது எனக் குறிப்பிட்டார். அந்தவகையில் பல்வேறு அரசியல் கருத்து நிலைப்பாடு உள்ளவர்களை இக் கூட்டத்தில் கருத்துரைக்க அழைத்தமை வரவேற்க்கத்தக்கது. ஆனால் இது மட்டும் புதிய பண்பாடு ஒன்றை நமக்குள் உருவாக்காது. மாறாக இதற்கு சமாந்தரமாக ஒவ்வொரு தனி மனிதருக்குள்ளும் மாற்றம் ஏற்படும் போதே அவ்வாறான ஒரு புதிய பண்பாடு உருவாவதற்கான சாத்தியம் உள்ளது என்பதே எனது புரிதல். ஆனால் ஒருவரும் இதை உணரும் காலம் இன்னும் வரவில்லை என்றே நினைக்கின்றேன். இந்த நிகழ்வை இரட்ணம் கணேஸ் அவர்கள் தலைமை தாங்கி வழிநாடாத்தினார்.ratnam

ராஜா யோகராசா உரையாற்றும் பொழுது இவ்வாறான உரையாடலை வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு முதல் நடாத்தியிருந்தால் மேலும் பயனுள்ளதாக இருந்திருக்கும். அப்பொழுது புலம் பெயர்ந்த தமிழர்கள் சார்ப்பாக சில முன்மொழிவுகளை நாம் முன்வைத்திருக்கலாம் எனக் குறிப்பிட்டார்.

rajaநக்கீரன் தங்கவேல் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் உரையாற்றுவதாக கூறப்பட்டது. ஆனால் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் தொடர்பாக இன்னும் முடிவு எடுக்காத நிலையில் எனது தனிப்பட்ட கருத்தையே இங்கு முன்வைக்கின்றேன் என்றார். ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் ஏற்றபட்ட தோல்வி மற்றும் வாக்குகளில் ஏற்பட்ட விழ்ச்சியின் பயத்தினாலையே மகிந்த தேர்தலை முன்கூட்டியே நடாத்துகின்றார். தமிழ் மக்களைப் பொருத்தவரை காணிப் பிரச்சனை முக்கியமானது. இடம் பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிப் போக முடியாத நிலையில் இருக்கின்றனர். காணி இல்லையெனின் நமது போராட்டம் சுயர்நிர்ணையம் என்பன அர்த்தமற்றுப் போய்விடும். தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் மைத்திரிக்கு வாக்களிக்கும்படி கூறுவார்கள் என தான் எதிர்ப்பார்ப்பதாக கூறினானர். ஆனால் கஜேந்திர குமார் போன்ற தேர்தலில் வெல்ல முடியாது மலட்டு அரசியல் வாதிகள் கூறுவது போல் தேர்தலைப் பகிஸ்கரிப்பது பயனற்றது என்றார். ஆகவே கஜேந்திர குமாரின் உரையை இங்கு ஒலிபரப்பியதைக் கண் டித்தார். மேலும் முஸ்லிம் மக்கள் எப்பொழுதும் அரசு சார்பாகவே வெல்பவர்களின் பக்கமே இருப்பார்கள் எனக் குற்றம் சாட்டினார். இவ்வாறு இன்று தமிழ் தேசியத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற ஆணாதிக்க, பால்வாத, முஸ்லிம் எதிர்ப்பு நிலைப்பாட்டை, கருத்தியல் ஆதிக்கத்தை வெளிப்படுத்தினார் நக்கீரன் தங்கவேல் அவர்கள். இவர் பல இடங்களில் உரையாற்றுகின்ற மற்றும் எழுதுகின்ற போது இவ்வாறான ஆணாதிக்க இனவாதக் கருத்துக்களையே வெளிப்படுத்துகின்றார். இவர்களைப் போன்றவர்களால் தான் தமிழ் தேசியத்தின் மீது கறைபடிந்துள்ளது.natkeeran

இவரது கருத்து தொடர்பாக கலந்துரையாடலின் போது பீட்டர் நாம் நமது சொற்களில் செயல்களில் பண்பைக் கடைப்பிடிக்க வேண்டும். அதிகாரத்துவமாகவும் ஜனநாயகமற்ற முறையிலும் பேசுதும் செயற்படுவதும் ஆரோக்கியமானதல்ல எனக் கூறி தங்கவேல் அவர்களின் உரையைக் கண்டித்தார். சுல்பிகா அவர்களும் தங்கவேல் அவர்களின் முஸ்லிம் தொடர்பான கருத்தை மறுத்ததுடன் கண்டித்தார். அவர் மேலும் குறிப்பிட்ட போது முஸ்லிம்கள் தேர்தலின் போது அரசாங்கத்திற்கு எதிராக சரியாகவே வாக்களித்தனர். ஆனால் வாக்குகளைப் பெற்றுக் கொண்டபின்னர் முஸ்லிம் மக்களை அதன் தலைமையானது ஏமாற்றி துரோகம் செய்து அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தது. தலைமைகள் இழைத்த துரோகத்தை ஒட்டுமொத்த முஸ்லிம் மக்கள் மீது போடுவது நியாமில்லை என்றார்.

zulfaதூரதிர்ஸ்டவசமாக நக்கீரன் தங்கவேல் அவர்கள் இழிவாக குறிப்பிட்ட மலடு என்ற சொல்லை நான் உட்பட யாரும் குறிப்பிட்டு கண்டிக்கவோ வாபஸ் பெறும்படி வற்புறுத்தவில்லை. அவரும் தன் மீது கேள்விக்கனைகள் வருதை உணர்ந்து சென்றுவிட்டார். இந்த வயதிலும் இவ்வாறு தொடர்ந்து செயற்படுவதை மதிக்கலாம் அதற்காக அவரது கருத்துக்களை ஏற்க வேண்டும் என்பது விதியல்ல. ஏனெனில் இவரது பிற்போக்கான கருத்துக்களே நம் சமூகத்தைப் பீடித்துள்ள நோய் எனலாம்.thedagam1

இவரைத் தவிர இன்றைய அரசியல் மற்றும் தேர்தல் நிலைப்பாடுகள் தொடர்பாக சுல்பிகா, ராஜா யோகராசா, எஸ்.கே. விக்கினேஸ்வரன், ரகுமான் ஜான், கீதன் பொன்கலன், மற்றும் கஜேந்திரன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர். இவர்களது கருத்துக்களை தொகுத்து கூறினால் பின்வருமாறு கூறலாம்.
சுல்பிகா அவர்கள் தனது கருத்துக்களை முன்வைத்தபோது தான் முஸ்லிம் மக்கள் சார்பாக இங்கு கருத்துக்களை முன்வைக்கவில்லை. எனது கருத்தையே முன்வைக்கின்றேன். எனது கருத்து முஸ்லிம்களின் கருத்துமல்ல என்றார்.

geethaஇந்தத் தேர்தலை மூன்று வகையில் ஆய்வாளர்கள் அணுகுகின்றனர். சிலர் இலட்சியபூர்வமான ஆய்வை முன்வைக்கின்றார்கள். சிலர் நடைமுறை சார்ந்து ஆய்வு செய்கின்றார்கள். யார் தண்டிக்கப்பட வேண்டுமோ அவர்களுக்கும், மற்றும் யார் குற்றம் செய்தவர்களோ அவர்களுக்கும் இன்றைய அரசியல் பாதுகாப்பானதாகவே இருக்கின்றது. இவர்கள் மக்களின் உணர்வுகளையும் பாதிக்கப்படக் கூடிய மக்களின் பிரச்சனைகளையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றார்கள். மேலும் இனக் குழுமங்களின் கரிசனைகளை தமது நலன்களுக்குப் பயன்படுத்துகின்றார்கள்.

இன்றைய எமது கேள்வி ஜனாதிபதி தேர்தலில் நமது தெரிவு யார் என்பதே? மகிந்தவின் பின்னனியில் பிபிஎஸ் (BBS) உள்ளது. இவர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்பதுடன் போரின் பின் திட்டமிட்ட அடிப்படையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை மைத்திரியின் பின்னால் ஜேஏச்யூ(JHU) உள்ளது . இவர்களும் இனவாதத்தை பேசுகின்றவர்கள். ஆனால் வடக்கு கிழக்கைப் பொருத்தவரை பிபிஎஸசின் பாதிப்பு நேரடியாக இல்லை. இந்த நிலையில் தென்னிலங்கையின் முஸ்லிம்கள் தம் மீதான பாதிப்புகளின் அடிப்படையிலையே தமது தெரிவை மேற்கொள்வார்கள். ஆகவே முஸ்லிம்கள் மகிந்தவை எதிர்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

ரகுமான் ஜான் அவர்கள் கூறும் பொழுது சர்வதேச நிலைமைகள்,
உள்ளுர் அரசியல் வர்க்க முரண்பாடுகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்குள் உருவாகியுள்ள பிரச்சனைகள் ஆகிய தளங்களிலையே இத் தேர்தலைப் பார்க்க வேண்டும். பனிப் போரின் பின்பு சீனா பெரிய வல்லரசாக உருவாகி வருகின்றது. தனது பொருளாதரா அரசியல் இராணுவ நிலைகளை உறுதி செய்யும் தேவை அதற்கு உள்ளது. அதன் ஒரு திட்டமே இலங்கையில் நடைபெறும் அபிவிருத்திக்கான செயற்பாடுகளும் முதலிடுகளுமாகும். இதைச் சரியாக புரிந்து கொண்டு மகிந்த கடந்த போரை நடாத்துவதற்கு இவர்களைச் சரியாகப் பயன்படுத்தினார். இதற்காக இந்தியாவை மீறிச் செயற்பட்டது மட்டுமல்ல இந்தியாவின் உதவியையும் பெற்றுக் கொண்டார். அந்தவகையில் மீண்டும் தேர்தலில் வென்றாலும் சர்வதேசம் அவருடன் நல்லுறவையே பேணும்.

தென்னிலங்கையைப் பொருத்தவரை இன்றைய பிரதான முரண்பாடு ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலானது எனலாம். பொதுவாக அதிகார வர்க்கங்கள், அரசு, அரசாங்கம் என்பன ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் ஒத்துழைப்பார்கள். ஆனால் இன்று இலங்கையில் ஆளும் அரசும் அரசாங்கமும் தானே ஆளும் வர்க்கமாகவும் வர முயற்சிக்கின்றது. குறிப்பாக தனது குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு பெரும்பான்மையான முதலீடுகளை செய்கின்றனர். இது அதிகார வர்க்கங்களுக்கு அதிதிருப்பதியை உருவாக்கியுள்ளமையினால் முரண்பாடுகள் தோற்றியுள்ளன. மகிந்தவுக்கு எதிரான இன்றைய எதிர்ப்புக்கு இது ஒரு காரணம். இதபோல் விக்கினேஸ்வரன் அவர்கள் கீழ் வர்க்கத்தினர் பல்வேறு பொருளாதார பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்த போதும் மகிந்தவிற்கு எதிரான இன்றைய சூழ்நிலைக்கு காரணம் மத்தியதர வர்க்கம் எதிர்கொள்கின்ற ஜனநாயகமின்மை மற்றும் ஊடக சுதந்திரம் கல்வி என்பவாகும். இவ்வாறான காரணங்களே தென்னிலங்கையில் இன்று ஆட்சி மாற்றம் விரும்பப்படுவதற்கு காரணம் என்றனர். கீத் பொன்கலனும் இது போன்ற கருத்தையே தெரிவித்த்துடன் தேர்தலைப் பகிஸ்கரிக்காது மைத்திரிக்கு வாக்களிப்பதே சரியானது என்றார்.

மகிந்த போர் வெற்றியைப் பயன்படுத்தி அதனது அதிகாரத்தை மட்டும் நிலைநாட்டவில்லை தனது குடும்ப ஆதிக்க அரசியலையும் ஏற்படுத்தியியுள்ளார். இவர்கள் பல தளங்களில் தம்மை நிலை நிறுதியுள்ளனர். இம் முறையும் இவர்கள் வென்றால் வேரூண்டி விடுவார்கள். இது தமிழர்களுக்கு மட்டுமல்ல முழு இலங்கையின் எதிர்காலத்திற்குமே ஆபத்தானது. இவர்களுடன் ஒப்பிடும் பொழுது மைத்திரி எந்தவகையிலும் மாறுபட்டவர் அல்ல. ஆனால் இவரால் மகிந்தவைப் போல் போரின் வெற்றியைத் தூக்கி பிடித்து அரசியல் செய்ய முடியாது. ஆகவே மைத்திரியை வெல்லச் செய்வது போரின் வெற்றியின் விளைவுகளால் ஆட்சி தொடர்வதற்கான சூழலை மாற்றிவிடுவதுடன். மேலும் சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்வதையும் தடுக்கலாம். அவ்வாறான ஒரு சூழலில் தான் தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான ஜனாநாயக வெளிகள் திறக்கப்படலாம். ஆனால் மகிந்த மீண்டும் வருவது இவை அனைத்தையும் மேலும் இறுக்கமாக மூடுவதற்கான வாய்ப்புகளே அதிகமாகும்.

இவ்வாறான ஒரு சூழலில் மைத்திரிக்கு பெருமளவு ஆதரவு உள்ளது போன்று இருக்கின்றது. ஆனால் இதை திட்டமிட்டு கூறமுடியாது. இருப்பினும் இன்றைய நிலையில் ஜனாநாயக வெளி ஒன்று தேவைப்படுகின்றது. அதை உருவாக்க என்ன செய்யலாம் என்பது தொடர்பாக நாம் சிந்திக்கலாம். மறுபுறம் தமிழர்களைப் பொருத்தவரை
மகிந்த தண்டிக்கப்பட வேண்டிய ஒருவர். அந்தவகையில் இத் தேர்தலில் மகிந்த அடைகின்ற தோல்வியே அவருக்கான ஒரு தண்டணையாகும். ஆனால் தமிழ் தலைமைகள் இதைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் மெனமாக இருப்பதோ அல்லது திரைமறைவு அரசியல் செய்வதோ எடுபடாது. அரசியல் தலைமைகள் தீர்க்கமான முடிவுகளை எடுத்து மக்கள் முன் வைக்க வேண்டும். வெளிப்படைத்தன்மையும் ஜனநாயகத்தையும் பேண வேண்டும். ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறுகின்றவர்கள் அவ்வாறு செயற்படவில்லை என பலரும் குற்றம் சாட்டினார்கள்.

ராஜா யோகராசா தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது முடிவைத் தள்ளிப் போடுவதானது மதில் மேல் பூனையாக இருப்பதாகும். அவர்கள் தமது கடமையை செய்யத் தவறியுள்ளார்கள். தமிழர்களின் அரசியலை மீண்டும் ஒரு முறை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டார்கள். 1978ம் ஆண்டு செய்ததுபோல் இப்பொழுதும் செய்திருக்க வேண்டும். இன்று இவர்கள் ஆயுதப் போராட்டத்தை குறை கூறுகின்றார்கள். ஆனால் நாம் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தது சரியே. பிரபாகரன் மீது விமர்சனங்கள் இருந்தாலும் தனது நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருந்தார். அதனால்தான் இன்று சர்வதேசம் நம்மைக் கவனிக்கின்றது.
அதேநேரம் புலிகள் தலைமைகள் உட்பட அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் தலைமைகள் சிறிலங்காவின் அரசியல் கட்சித் தலைவர்களுடன் மாறி மாறி இரகசிய உடன்பாடுகள் செய்கின்றனர். இது வெளிப்படையான அரசியலல்ல. மாறாக மக்களை ஏமாற்றும் அரசியல் செயற்பாடு. இன்றைய அரசியல் தலைமை அன்று புலிகளின் சொல்லைக் கேட்டு செய்தார்கள் இன்று இந்தியாவின் சொல்லைக் கேட்டு செய்கின்றார்கள். தேர்தல் தொடர்பான முடிவுக்கு கூட இந்தியா என்ன சொல்லப் போகின்றது எனக் காத்திருக்கின்றார்கள். இது எமக்கு எந்தத் தீர்வையும் பெற்றுத் தராது. நாம் நமது சொந்த அரசியலை முன்னெடுக்க வேண்டும். அதில் நின்று கொண்டே மற்றவர்களுடன் பேச வேண்டும். இவர்களின் இவ்வாறான வெளிப்படைத் தன்மையற்ற அரசியல் போக்கினால் விரைவில் புதிய சக்தி ஒன்று உருவாவதைத் தவிர்க்க முடியாது என்றார்.

ponகஜேந்திர குமார் அவர்கள் பதியப்பட்ட ஒலிபதிவு நாடா மூலம் உரையாற்றினார். சிங்கள குடியேற்றத் திட்டங்கள், சிங்கள மயமாகுதல் காணி அபகரித்தல் போன்றன திட்டமிட்டவகையில் நடைபெறுகின்றன. இதைத் தவிர தமிழ் பிரதேசங்களில் கடற் தொழில் செய்பவர்கள், கமம் விவசாயம் செய்பவர்கள் மற்றும் வியாபரிகள் இன்று தென்னிலங்கையில் தங்கி இருப்பதற்கே இன்றைய ஆட்சியாளர்கள் வழி செய்துள்ளார்கள். இந்த நிலையில் நாம் யாரைக் கொண்டு வருவது. மைத்திரி சமாதானத்திற்குப் பதிலாக போரை முன்மொழிந்தவர். சர்வதேச விசாரணை தேவையில்லை எனக் கூறகின்றவர். ஆகவே இத் தேர்தலானது வெறுமனே ஆள் மாறாட்டம் மட்டுமே. மற்றும்படி வேறு எதுவும் மாறப் போவதில்லை. ஆகவே தேர்தலைப் பகிஸ்கரிப்பதே சரியனா நிலைப்பாடு என்றார். இவர்கள் உறுதியான முடிவு எடுத்த போதும் தந்திரோபாயமான முடிவல்ல இது. இவர்களும் புலிகளின் தலைமைபோல நடைமுறையைக் கைவிட்டு இலட்சியதனமாகவே தமது முடிவுகளை எடுத்து செயற்படுகின்றார்கள்.

இன்றைய நிலையில் ஒரு ஆட்சி மாற்றத்தை பலர் விரும்புகின்றனர். அந்தவகையில் மைத்திரி வருவதற்கான சாத்தியமுள்ளது. இதுவே தமிழர்களைப் பொறுத்தவரை சாதகமானதுமாகும்.

தமிழர்களின் அரசியல் மூலோபாயத்திற்கும் தந்திரோபாயத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இரண்டுக்கும் இடையில் நின்று இழுபட்டுக் கொண்டிருக்கின்றது. இது இன்று நேற்று அல்ல நீண்ட காலமாகவே அவ்வாறுதான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் இரண்டு பேருமே இனவாதிகள் என்பதில் தமிழர்கள் யாருக்கும் சந்தேகம் இல்லை. மேலும் இதில் யார் வெற்றி பெற்றாலும் இன முரண்பாட்டுக்கு தீர்வோ தமிழர்களின் மீதான அடக்குமுறைகளுக்கு விடுதலையோ கிடைக்கப் போதில்லை. இருப்பினும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்றடிப்படையில் நாம் கிடைக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் எங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த வேண்டும். அதுவே நமது பலம் ஆகும். ஆனால் நாம் அதை எப்பொழுதும் செய்வதில்லை. சர்வதேச அல்லது பிராந்திய மேலாதிக்க சக்திகளின் பின்னால் இழுபடுவதே நாம் செய்த அரசியலாகும். இப்பொழுதும் அதைத்தான் செய்கின்றோம்.

வைகறை ஆசிரியர் ரவி கூறியபடி நாம் தமிழர்களின் வேட்பாளர் ஒருவரை நியமித்திருக்க வேண்டும். வாக்காளர்களுக்கு இருக்கின்ற இரண்டு வாக்குகளின் ஒன்றை தமிழர் வேட்பாளருக்கும் மற்றதை சிறிலங்கா தேசத்தின் வேட்பாளர் ஒருவருக்கும் போடுவதாக முடிவெடுத்திருக்கலாம். அந்த வேட்பாளர் நம்முடன் அரசியல் உட்ன்பாட்டுக்கு வரும் ஒருவராக இருக்க வேண்டும். இதன் மூலம் நமது பலத்தை நிலைநாட்டுவது மட்டுமல்ல நமது அரசியல் நிலைப்பாட்டை சிறிலங்கா அரசுக்கும் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் மீள ஒரு முறை பறைசாட்டியிருக்கலாம். (இவ்வாறான ஒரு செயலை அடுத்த தேர்தில் செய்வதற்கு இன்றிலிருந்தே நம்மைத் தயார் செய்ய வேண்டும்) இதை நாம் செய்யால் பகிஸ்கரிப்பது அல்லது முடிவு எடுக்காமல் மௌனமாக இருப்பது என்பதையே நமது வழிமுறையா கொண்டுள்ளோம்.
நமக்கு பதவிகளும் பணமும் கிடைக்குமாயின் தேர்தல்களில் பங்கு பற்றுகின்றோம். பதவிகளைப் பெற்றுக் கொள்கின்றோம். அவ்வாறான தேர்தல்கள் நமக்குப் பிரச்சனையில்லை. அப்பொழுது அரசியலமைப்பு சட்டம் பிரச்சனையில்லை. ஆனால் இந்தத் தேர்தலில் நமக்கு தனிப்பட்ட நலன்கள் இல்லை என்றவுடன் பகிஸ்கரிக்கின்றோம். அல்லது நலன்களைப் பெறுவதற்காக மௌனமாக இருக்கின்றோம்.
இப்பொழுது கூட தேர்தலைப் பகிஸ்கரிக்காது இருவருக்கும் வாக்காளிக்காமல் வாக்குகளை இருவரையும் நிராகரிக்கும் வகையில் வாக்களிக்குமாறு தமிழ் தலைமைகள் கூறலாம். இவ்வாறு செய்வதன் மூலம் குறிப்பிட்ட வாக்காளார்கள் இருவரையும் தமிழர் தேசம் தெரிவு செய்ய வில்லை என்பதை தெரியப்படுத்தலாம். இதனால் பாதகங்களும் சாதகங்களும் உண்டு. பாதகம் மகிந்த வெற்றி பெறலாம். ஆட்சி மாற்றம் நடைபெறாது விடலாம். ஜனநாயக வெளி ஒன்று கிடைக்காமல் போகலாம். ஆனால் நமது அரசியலை மீள ஒரு தரம் உறுதியாக நிலைநாட்டலாம்.

இன்று இருக்கின்ற கட்சிகள் பிழைப்புவாத மற்றும் ஆதிக்க வர்க்கங்களினதும் சாதிகளினதும் கட்சிகளாகவே இருக்கின்றன. இவர்களால் ஒருபோதும் தமிழர்களின் விடுதலையைப் பெற்றுத் தர முடியாது. தமிழ் தலைமைகள் சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாடுகளை எடுக்காமல் நீண்ட கால நோக்கில் மக்கள் நலனை முன்னிறுத்தி சிந்தித்து முடிவெடுத்து செயற்படுவதே ஆரோக்கியமானதும் பயனுள்ளதுமாகும். இதற்கு மக்கள் நலனில் அக்கறை கொண்ட மக்களை கலந்துரையாடல்கள் ஊடாக அரசியல் மயப்படுத்தி செயற்படும் கட்சி ஒன்று அவசியமானது.

மீராபாரதி

படங்கள் – நன்றி
தேடகம் கூகுல் மற்றும் முகநூல்

Advertisements

Responses

  1. தேர்தலால் தமிழருக்கு ஒருபயனும் இல்லை வாக்களிக்க வேணாம் என்று சொல்பவர்கள், பாராளுமன்ற, மாகாண தேர்தலில் மட்டும் தங்களுக்கு வாக்கு போட கேட்பது வேடிக்கை யில்லையா?
    தமிழர்கள் தமிழரைமட்டும் பிரதிநிதிப்படுத்தும் கட்சி மூலம் சிரீலங்காவின் அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தமுடியாதது மட்டுமல்ல அவர்களால் சர்வதேசத்தின் இந்தியா உட்பட கவனத்தையும் ஈர்க்கவும் முடியாது. இதற்க்கு சர்வதேசமயமாக்கலே காரணம். மனித உரிமை மீறல், காணாமல் போதல், சுயவிருப்பு, சுய ஆட்சி என்பன பற்றி சர்வதேசம் கவலைப்பட வேண்டிய அளவிற்க்கு சிரீலங்காவில் உள்ள தமிழர் ஒரு பொருளாதார மூலோபாய சக்தி அல்ல. இலங்கையில் பிரதான சிறுபான்மை இனம் என்ற நிலையையும் இப்போ இழந்து போயிருக்கின்றது.
    இந்நிலையில் பொருள் தார தடை, போர்குற்றவிசாரனை இவையெல்லாம் புலம்பெயர் தமிழர் செய்யும் அரசியலே. இதனால் அங்குள்ளவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அங்குள்ள தமிழருக்கும் மற்ற சிறுபான்மையினருக்கும் வாழ்வு அம் மண்ணில் தான். உள்நாட்டு அரசியலின் மையநீரோட்டத்தில் பங்குபற்றுவது ஒன்றே அவர்களுக்கிருக்கும் வழி. அப்படி செய்யாத பட்சத்தில் வெளிநாடுகளின் கண்ணுக்கும் அவர்கள் இடையூறுவிளைவிக்கும் இன குழுக்களாகவே தென்படுவார்கள். அடுத்த பரம்பரை வரும்போது இன, மொழிசார்ந்த அரசியலுக்கு உலகிலேயே எந்த முக்கியமும் இல்லாது போகும்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: