Posted by: மீராபாரதி | May 22, 2014

ஈழத் தமிழ் தேசத்தின் கொடி எது?

ஒவ்வொரு நாட்டுக்கும் தேசத்திற்கும் அதற்குரிய கொடிகள் உண்டு. இக் கொடிகள் அந்த நாட்டின் தேசத்தின் உயரிய பண்பாட்டையும் வளத்தையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டிய கொடியை பல்வேறு ஆளுமைகள் சேர்ந்து உருவாக்க வேண்டும். தூரதிர்ஸ்டவசமாக ஈழத் தமிழ் தேசத்தில் இன்னும் அது நடைபெறவில்லை.

ஒரு நாட்டை அல்லது தேசத்தை ஆள்வதற்கு பல்வேறு கட்சிகள் தமது கருத்து நிலைகளிலிருந்து போட்டி போடுவார்கள். இக் கருத்து நிலைகளுக்கு ஏற்ப தமது கட்சிக் கொடியையும் உருவாக்குவார்கள். இவை கட்சி மட்டத்துடன் அல்லது தேர்தல் காலங்களுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டவை. இக் கட்சிக் கொடிகள் குறிப்பிட்ட நாட்டின் தேசத்தின் கொடிகளாக மாறுவதில்லை. மாறவும் கூடாது. ஆனால் சில நாடுகளில் தூரதிர்ஸ்டவசமாக அவ்வாறு நடைபெற்றுள்ளன. இது தவறான முன்னுதாரணமாகும்.

இந்தடிப்படையில் ஈழத் தமிழ் தேசத்தின் கொடியானது இன்றுவரை உருவாக்கப்படவில்லை என்பதே உண்மையாகும். ஈழத் தேசத்தின் விடுதலைக்காக ஐனநாயக(?) வழியிலும்(?) ஆயுதப் போராட்ட வழியிலும் பல கட்சிகளும் அமைப்புகளும் இயக்கங்களும் செயற்பட்டன. போராடின. இக் கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் ஒவ்வொரு கொடிகள் இருந்தன. புலிகள் அமைப்பு பல காரணங்களால் ஈழப் போராட்டத்திற்காக போரிட்ட தனியான அமைப்பாக 2009ம் ஆண்டுவரை குறிப்பிட்ட காலம் செயற்பட்டது. பல தாக்குதல்களிலும் வெற்றி பெற்றதனால் புலிகளின் புலிக் கொடியானது பிரபல்யமானது. ஆகவே இது ஈழத் தமிழர்களின் கொடியாகவும் கட்டமைக்கப்பட்டது. அவ்வாறான பிரம்மை உருவானது. உருவாக்கப்பட்டது. ஆனால் இது புலிகள் இயக்கத்தின் கொடியே என்றால் மிகையல்ல.

உண்மையில் புலிக் கொடி ஈழத் தமிழர்களின் கொடியா என்பது கேள்விக்குறியது. தமிழர்களுடன் புலிக் கொடியானது தொடர்புடையதற்கு வரலாற்றுக் காரணங்களே அடிப்படையாக இருக்கின்றன. ஈழத்தைப் பொறுத்தவரை பண்டாரவன்னியன் மற்றும் சங்கிலியன் போன்ற அரசர்களும் மற்றும் தமிழகத்தை அல்லது தென்னிந்தியாவை ஆட்சி செய்த அரசர்களும் புலிக் கொடியை தமது கொடியாக பயன்படுத்தி உள்ளனர் என அறியப்படுகின்றது. ஆகவே இது தமிழர்களின் கொடியாகவும் உணரப்படுகின்றது. ஒன்றை நாம் மறக்க கூடாது இந்த அரசர்கள்  மக்களின் பிரதிநிதிகள் அல்லர். தமது படைபலத்தின் மூலம் மக்களை மத சாதி வர்க்க அடிப்படையில் அடக்கி சுரண்டி ஆட்சி செய்தவர்கள். இவர்களின் கொடி தமிழர்களின் கொடியல்ல. ஏன் தமிழக தமிழர்களின் கொடியுமல்ல. நிச்சயமாக ஈழத் தமிழ் தேசத்தின் கொடியல்ல. தூரதிர்ஸ்டவசமாக புலிகள் இயக்கத்தின் புலிக் கொடியும் மேற்குறிப்பிட்ட அரசர்களின் வரலாற்றின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டதாக அறியப்படுகின்றது. ஆகவே ஈழத் தமிழ் தேசம் தனக்கான கொடியை உருவாக்க வேண்டும்.

புலிக் கொடி நமது வீரத்தின் அடையாளமாக இருக்கலாம். அடக்கு முறையாளர்களுக்கு எதிரான நமது கோவத்தின் அடையாளமாக இருக்கலாம். அல்லது நமது மிருகத்தனத்தின் அடையாளமாகவும் இருக்கலாம். எப்படி இருப்பினும் கடந்த கால வரலாற்றின் அடிப்படையில் புலிக் கொடி ஈழத் தமிழர்களின் கொடியல்ல. அந்தக் கொடியைப் பயன்படுத்துவது பல்வேறு வகைகளில் ஈழத் தமிழ் தேசத்திற்கு எதிரான செயற்பாடாகவே இருக்கும்.

ஆகவே ஈழத் தேசத்திற்கான ஒரு கொடியை உருவாக்குவது தொடர்பாக சிந்திப்போம்.

மீராபாரதி
18.05.2014

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: