Posted by: மீராபாரதி | March 20, 2014

குக்கூ குழந்தைகள் வெளி நண்பர்களுடன் ஒரு பொழுது….

குக்கூ குழந்தைகள் வெளி நண்பர்களுடன் ஒரு பொழுது….
Kuku children 435ஈரோட்டில் கருங்கல்பாலையத்திற்கு அருகில் உள்ள கிராமத்திற்கு சென்றேன். இந்தக் கிராமத்திலுள்ள குழந்தைகளுடன்தான் குக்கூ நண்பர்கள் பணியாற்றுகின்றார்கள். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. கடந்த கால பல தலைமுறைகள் பாடசாலைக் கல்வி அற்றவர்கள். அல்லது ஆரம்பக் கல்வியுடன் நிறுத்தியவர்கள். இதனால் பலர் சுமை தூக்குவது, சந்தையில் வியாபாரம், தோட்டம், கமம் என பல தொழில்களை செய்பவர்கள். சில காலங்களுக்கு முன்பு இந்த இடம் சண்டியர்களின் இடமாக இருந்தது. எதெற்கெடுத்தாலும் சண்டித்தனமே இவர்களின் பதிலாக இருந்தது. இவ்வாறு பல விடயங்களை சிலம்பாட்ட ஆசிரியர் மாதேஸ் குறிப்பிட்டார்.

Imageமாதேஸ் ஆரம்பக் கல்வியுடன் பாடசாலைக் கல்வியை நிறுத்தினாலும் சிலம்பாட்டத்தில் சிறந்தவர். இதை இவர் தனது தகப்பனாரிடமிருந்து கற்றுக்கொண்டார். இப்பொழுது சைலாத் சிலம்பு சங்கம் என்பதை உருவாக்கி புதிய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதுடன் அவர்களுக்குப் பயிற்சியளித்து இந்தக் கலை வளர்வதற்கும் பங்களிக்கின்றார். மேலும் குக்கூ குழந்தைகள் படிப்பகத்துடன் இணைந்து சிவராஜின் வழிகாட்டலில் கல்வி அறிவை வளர்க்கவும் மற்றும் நம்மாழ்வாரின் செயற்பாடுகளுக்கும் ஈரோட்டில் பொறுப்பாக இருக்கின்றார். இன்று இவரது வழிகாட்டுதலில் பல இளைஞர்கள் சிலம்பாட்டத்தில் பயிற்சி பெற்று சக மாணவர்களுக்கும் சிறுவர்களுக்கும் பயிற்சிளிக்கின்றனர். மேலும் கலைத்தாய் அறக்கட்டளை என்ற அமைப்பினுடாக தமிழர்களின் பாராம்பரிய கலைகளான சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், தப்பாட்டம், கும்மியாட்டம் போன்றன வளர்வதற்கும் பங்களிக்கின்றார். தான் இவ்வாறு செயற்படுவதற்கு காரணமாகவும்  முன்னுதாரணமாக ஒரு இளைஞரை அடையளாம் காட்டினார்.Image

மாதேஸ் குறிப்பிட்டவர் பொன்.லோகேஸ். இவர் தனது நான்கு வயதிலிருந்து சிலம்பாட்டத்தை தனது குருவான (இரத்த உறவில்லாத) “தாத்தா” ஒருவரிடம் கற்று வந்தார். இளமைக் காலங்களில் புருஸ்லிலை கதாநாயகனாகக் கொண்டு காராட்டி மற்றும் குங்பு என்பவற்றில் பயிற்சி எடுத்துள்ளார். ஆனால் காலோட்டத்தில் இவையெல்லாம் சிலம்பாட்டத்திற்குள் வந்துவிடுகின்றன என்பதைப் புரிந்து கொண்டு சிலம்பாட்டத்தில் மட்டும் சிறப்பு பயிற்சி எடுத்துள்ளார்.  இன்று சிலம்பாட்டத்தில் அகில இந்தியளவில் முக்கியமானவராக இருக்கின்றார். அதேவேளை இந்த சமூகம் அல்லது கிராமத்திலிருந்து முதன் முதலாக உயர்கல்வி கற்றவர் இவர்தான். பொறியில் தூறையில் பட்டம் பெற்றவர். Imageஇப்பொழுது கப்பற்பொறியல் துறையில் மேற்பட்டம் பெற்று தொழில் வாய்ப்புக்காக காத்திருக்கின்றார். இவரின் பின்பே இந்த சமூகத்திலிருந்து பல மாணவர்கள் பல்கலைக்கழங்களுக்கு சென்றுள்ளனர். தனது உழைப்பினுடாக சிலாம்பாட்டத்திற்கு என ஒரு பாடசாலையை நிறுவுவதை தனது கனவாக கொண்டுள்ளார். இதன் ஆரம்ப முயற்சியாக பல மாணவர்களுக்கு பயிற்சிளித்து வருகின்றார். இவரின் அர்ப்பணிப்பான பங்களிப்பே மாதேஸை மீண்டும் சிலம்பாட்டத்தில் அக்கறை கொள்ள வைத்தது. இன்று இவர்கள் பல நண்பர்களுடன் இணைந்து சமூகத்தின் மேம்பாட்டிற்காக கல்வியறிவை வளர்ப்பதற்கும் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய கலைவடிவங்கள் அழிந்து போகாமல் இருப்பதற்கும் வேண்டிய செயற்பாடுகளை பல அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்கின்றனர்.Image

மாலை குக்கூ மாணவர்களுடன் சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்தனர். இரண்டு மணித்தியாலங்கள் தமது பாடசாலைக் கல்விக்கான வீட்டுவேலைகளை மேற்கொண்டனர். பின் என்னுடன் கலந்துரையாடினர். குழந்தைகள் முதற்கொண்டு பெரிய மாணவர்கள் வரை அனைவரும் பல கேள்விகள் கேட்டனர். மகிழ்ச்சியாக இருந்தது. இவர்கள் வெளியிலிருந்து மனிதர்கள் வந்து தம்மை சந்திப்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றார்கள். இந்தக் குழந்தைகளின் கல்விக்கு அப்பாற்பட்ட வேறு ஆற்றல்களை அறிந்து கொள்ள விடியும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அடுத்த நாள் காலை ஐந்தரை மணிக்கு எழும்பி ஆறுமணியளவில் மைதானத்திற்கு சென்றேன். சிலம்பு ஆசிரியர் நண்பர் பொன் லோகேஸ் அழைத்துச் சென்றார். குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை  ஒவ்வொருவராக வந்தனர். சிறிது நேரத்தில் எல்லோரும் ஒழுங்கு முறையில் நிற்க பயிற்சிகள் ஆரம்பமானது. தமிழர்கள் மரபில் பின்பற்றப்பட்டுவந்த ஆனால் இப்பொழுது அழிந்து செல்கின்ற பல பாரம்பரிய கலைகள் பயிற்சியளிக்கப்பட்டன. குழந்தைகள் இதுவரை தாம் பழகிய கரகாட்டம் ஒயிலாட்டம் சிலம்பாட்டம் என ஒவ்வொன்றையும் நிகழ்த்திக் காட்டினார்கள்.Image

இரண்டு மணித்தியால பயிற்சியின் பின் மாணவர்கள் வீடுகளுக்கு சென்று காலை உணவை உண்டு(?) உடை மாற்றி பாடசாலைக்கு சென்றார்கள். இவர்கள் மாட்டு வண்டியில் ஆனந்தமாக சென்றதை கண்டேன். மீண்டும் நான்கு மணிக்கு பாடசாலை முடிய வீட்டுக்கு வந்து குக்கூ குழந்தைகள் படிப்பகத்திற்கு வந்து கற்பார்கள். இது குழந்தைகளுக்கான நூலகம். இதேபோல் பெரியவர்களுக்கும் ஒரு நூலகம் தனியாக உள்ளது.

சிலம்பு சுற்றுவதில் மூன்று படிநிலைகள் இருக்கின்றன என மாதேஸ் கூறினார். Imageமுதலாவது சிலம்பு விளையாட்டு அடுத்தது சிலம்பு சண்டை. அதற்கடுத்தது சிலம்பாட்டம். இந்தப்படி நிலைகள் ஒரு வளர்ச்சி முறையைக் கொண்டன. சிலம்பாட்டம் உடலுக்கு அல்ல உடல் உறுப்புகளுக்கு பயிற்சியளிப்பவை என்றார். இவர் மேலும் குறிப்பிட்டபோது தமிழர் மரபில் பெண்களே வீரத்திற்கும் ஆண்கள் அழகுக்கும் குறிப்பிடப்படுகின்றார்கள். மிருகங்களில் ஆண்களே அழகானவை. ஆனால் பெண்கள் வீரம் கொண்டவை. அப்பொழுதுதான் அவர்களால் தமது குழந்தைகளை காப்பற்றவும் வளர்க்கவும் முடியும். இது மனித சமூகத்திற்கும் பொருந்தும். இதனால்தான் இந்தப் பயிற்சிகளில் முதலில் இடப் பக்கம் இருந்தே ஆரம்பிக்கின்றோம். இது பெண்மையின் பக்கம். அதாவது வீரத்தின் பக்கம். பயிற்சியின் போது மேற்கு நோக்கி இருப்பது எதிர் திசையில் போட்டி போட்டு செல்வதற்கு எனப் பல விடயங்களை விளக்கினார்.Image

சிறு தெய்வ வழிபாடுகள் கிராமங்களில் முக்கியமானவை. இன்று தெய்வங்களாக இருப்பவர்கள் பழங்காலங்களில் இக் கிராமங்களின் காவலர்களாக அரசர்களின் ஊழியர்களாக இருந்திருக்க வேண்டும் என்றார். ஆனால் காலோட்டத்தில் இவர்கள் தெய்வங்களாக மாறி இந்தக் கிராமங்களை காப்பவர்கள் ஆனார்கள். இன்று பெரு தெய்வ வழிபாடுகளினால் இதற்கும் அழிவு ஏற்படுகின்றது என்றார்.Image

ஈரோட்டிலிருந்து குக்கூவின் பிரதான செயற்பாட்டாளர்களான பீட்டரையும் சிவராஜையும் சந்திப்பதற்காக திருவண்ணாமலைக்கு சென்றேன். இவர்கள் என்னை மிகவும் அன்புடன் வரவேற்றதுடன் தமது செயற்பாடுகளையும் விபரித்தனர். இயற்கை வேளாண்மை முறையில் பயிரிடப்பட்ட தமிழர் பாரம்பரிய உணவு வகைகளை முக்கியமாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக அன்று ஒரு பாயாசம் செய்து தந்தார்கள். அதன் சுவையே அறுசுவையாக இருந்தது. பல வகையான இயற்கையான சத்து உணவு தயாரிப்புகளைக் கொண்ட நூல் ஒன்றை “நல்ல சோறு” என்ற பெயரில் தமது இயல்வாகை வெளியீட்டு நிறுவனத்தால் வெளியீட்டுள்ளனர். இவ்வாறு இயற்கை உணவு திட்டங்களை அறிமுகப்படுத்துடன் மேலும் பல திட்டங்கைள முன்னெடுக்கின்றனர். உதாரணமாக சிறுவர்களும் முதியவர்களும் சேர்ந்து வாழக்கூடிய அதேநேரம் ஏழை மாணவர்களுக்கு புதிய கல்வியை அறிமுகப்படுத்தவும் திட்டம் ஒன்றை இவர்கள் உருவாக்கியுள்ளார்கள். இதை நடைமுறைப்படுத்த திருவண்ணாமலையில் இருந்து பதினைந்து மைல்கள் தூரத்திலிருக்கின்ற காட்டுக்கு அருகில் நிலம் ஒன்றை வாங்கி உள்ளார்கள். அந்த நிலத்தைப் பார்ப்பதற்காக சென்றோம்.

Imageஅது ஒரு மலையடியில் உள்ள கிராமம். மண் பாதை ஒன்றினுடாக சென்றடைந்தோம். நிலம் சிகப்பு மண். பழமையான கிணறு. அதற்கருகில் இவர்களது திட்டத்திற்கமைய கிணறு ஒன்று வெட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த இடத்திற்கு அருகில் காடு ஒன்றிருக்கின்றது. இருட்டும் வரை இந்த இடத்தில் இருந்து இயற்கையின் அழகை இரசித்தோம். நம்மை உரசிச் செல்லும் தென்றலையும் இந்த தென்றலுக்கு காட்டில் உள்ள மரங்கள் ஆடுவதால் எழும் ஒலியையும் இரசித்தபடி இருந்தோம். யானைகளும் வேறுபல மிருகங்களும் உலா வருகின்ற இடம். இருப்பினும் பயமின்றி இருந்தோம். Image
 

நண்பர் விநோத்தும் பாஸ்கரும் ஒரு இரவு கிரிவலம் பகுதியை சுற்றிக் காட்டினர். அந்த வீதியில் ஒரு இளம் ஓவியரை சந்தித்தோம். இவர் தனது குடும்பத்தினர் நடாத்துகின்ற சிறிய தேநீர் கடையில் இரவு நேரங்களில் வேலை செய்கின்றார். காலையில் தந்தையும் பகலில் அண்ணனும் வேலை செய்கின்றனர். இந்தக்  கடையில் தனது ஓவியங்களை காட்சிக்கு வைத்துள்ளார். அவற்றைப் பார்வையிட்டோம். நண்பர் சுட்ட சுடு சுடு சிறு வடையும் இவரது தாய் சுட்ட குழி தோசையும் உண்டோம். மிகவும் சுவையாக இருந்தது. பயணம் செய்கின்ற போது இவ்வாறான பெட்டிக் கடைகளில் உண்பதை இயன்றளவு தவிர்ப்பேன். உடல் நோய்வாய்பட்டு பயணம் தடைபடக் கூடாது என்பதற்காக. ஆனால் இவ்வாறான கடைகளில்தான் குறிப்பிட்ட ஊருக்கே உரிய சுவை இருக்கின்றது. இந்த நண்பரின் கடையின் முன்னால் மாணிக்கவாசகர் திருவம்பாவை பாடிய கோயில் உள்ளது. நாம் இவர்களுடன் உரையாடிவிட்டு நம் பயணத்தைத் தொடர்ந்தோம்.Image

மீராபாரதிImage

 

 

மாணிக்க வாசகர் திரும்பாவை பாடிய கோயில்Image

குழந்தைகள் பாடசாலைக்கு வண்டியில் செல்கின்றனர்.ImageImage

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: