Posted by: மீராபாரதி | March 3, 2014

கைசேதத்துக்கு உள்ளான ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுப்பிரக்ஞையின்மை பற்றிய வாக்கு மூலம் – மன்சூர் ஏ. காதிர்

மீரா பாரதியின்
பிரக்ஞை ஓர் அறிமுகம் –
தனிமனித மாற்றத்தில் இருந்து சமூகமாற்றத்தை நோக்கி…..

கைசேதத்துக்கு உள்ளான ஒரு மக்கள் கூட்டத்தின்
கூட்டுப்பிரக்ஞையின்மை பற்றிய வாக்கு மூலம்

Imageமன்சூர் ஏ. காதிர்

எழுத்தாளர் மீரா பாரதி இரண்டு வித்திசமான நூல்களை அண்மையில் படைத்துள்ளார். அதில் ஒன்று பிரக்ஞை ஓர் அறிமுகம் தனிமனித மாற்றத்தில் இருந்து சமூகமாற்றத்தை நோக்கி…. என்றநூல். மற்றய நூல் மரணம் இழப்பு மலர்தல் எனும் தலைப்பிலே வெளி வந்துள்ளது.

இந்த இரண்டையும் ‘வித்தியாசமான நூல்கள்’ என்ற மேற்கோள் குறியுடன் நான் குறிப்பிடுவது ஏன் என்பதைத் தெளிவு படுத்தும்போது இக்கருத்துரையின் அரைவாசியைப் பூர்த்தி யடைந்து விடும். மற்ற அரைவாசியைப் பற்றி கருத்துக் கூறலின்போது பிரக்ஞைக்கு உள்ளேயிருந்தும் ஸ்தூலத்துக்கு வெளியே இருந்தும் சில முரண்பாடுகளை சந்திக்க வேண்டி ஏற்படலாம்.

பிரக்ஞை – ஓர் அறிமுகம் என்பது ஐயோரோப்பிய தத்துவ ஞானத்தின் அடிப்படையிலான உளவியல் அம்சங்களைப் பிரதாமனாகத் தாங்கி வருகின்ற ஒரு நூலாகும.; பலமும் பலஹீனமும் நிச்சம் ஆய்வுத் தராசில் சீராக்கப்பட்ட ஆய்வு முறையியலின் நிச்சயப்படுத்தப்பட்ட நியமங்களைக் கொண்டு இந்நூல் அளந்தும் நிறுத்தும் பார்க்கப்பட வேண்டும். இது காலத்தின் தேவையாகும் என்பது மட்டுமன்றி இன்றைய தழிழ் அறிவுச் சூழலில் இது அத்தியாவசியமானதும் ஆகும்.
ஏனெனில் இந்நூலை நான் புரிந்து கொண்ட வரைக்கும் இது அறிவியலின் ஒரு துறையின் தகவல் களஞ்சியமாகச் செயல்படுவது மட்டுமன்றி மற்றொரு உயர்ந்த நோக்கத்தை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றது.

இது சரியாக இருக்குமானால் இந்நூல் அறிவியல் சார்ந்த ஒரு பணியை மட்டுமன்றி சமூகம் சார்ந்த ஒரு பணியையும் செய்ய துடிக்கின்றது என்ற கருத்தை ஒத்துக்கொள்ள வேண்டி வரும். அது பற்றி நூலின் பெயரிலேயே ஆசிரியர் தனிமனித மாற்றத்தில் இருந்து சமூகமாற்றத்தை நோக்கி.. என மிகத்த தெளிவாகவும் வெளிப்படையாகவும் கூறியுள்ளார். அது மக்களை ஒரு வித உளவியல்சார் தயார் நிலையை நோக்கிய ஆற்றுப்படுத்துகையை நோக்காகக் கொண்டிருப்பது போல தென்படுகின்றது.
ஏனெனில் என்னதான் ஐரோப்பிய சிந்தனை மூலங்களில் இருந்து முற்றும் முழுவதுமான ஓர் அறிவியல் பணியை இவர் மேற்கொண்டபோதும் இலங்கைத் தழிழ்ச் சூழலின் சமூகத்தளத்தில் வைத்து இவர் இதனை வாய்ப்புப் பார்க்கின்றார் என்பதே எனது நிலைப்பாடாகும். இது இந்நூலின் அந்தத்தில் கூட தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அந்த பரிசோதனை முயற்சியானது ஒரு சமூகம் சார்ந்த அறிவியல் ஆய்வாளனின் தவிர்க்க முடியாத பொறுப்புக் கூறத்தக்க சமூகப் பணியாகவும் இருக்கின்றது. இத்தகைய அறிவியல் அத்திவாரத்தை கொண்டும் சமூகச் சிலுவையை மிக விருப்பத்துடன் தன் தோள் நிறையச் சுமக்கும் ஆர்வத்துடனும் உள்ள இந்நூலின் ஆக்க முயற்சி என் போன்றவர்களைத் தவிர்த்து துறைசார் புலமையாளர்களால் செய்யப்பட வேண்டிய மிக ஆழமான ஆய்வுப் பணி என்றே மிகுந்த தன்னடக்கத்துடனும் அறிவியல் சார் பொறுப்புக் கூறலுடனும் நான் கருதுகின்றேன். எனினும்இந்நூலின் பலமான அம்சங்கள், இதன் பலஹீனமான அம்சங்கள், இந்த நூலுக்குக் கிடைக்கவுள்ள வாய்ப்புக்கள் மற்றும் இது விளைவிக்கப்போகும் அச்சுறுத்தல்கள் தொடர்பான எனது நேர்மையான கருத்துக்களை எடுத்துரைக்க முடியும்;.

II

ஐரோப்பிய தத்துவ ஞானத்தின் அடிப்படையிலான தமிழ் நூல்கள் பாடத் திட்டங்களின் தேவை கருதி வெளி வருகின்றமையே நமது தழிழ் மொழியிலான அறிதல் பாரம்பரியமாக இருந்து வந்துள்ளது. குறிப்பாக உளவியல் கல்விசார் நூல்கள் கல்வியியல் அல்லது ஆசிரியர் கல்வியியல் போன்ற தொழில் வாண்மை ரீதியான தேவைகளின் நிமித்தமும் அதன் சந்தை வாய்ப்பை மாத்திரம் இலக்காகக் கொண்டுமே வெளிவந்தன.

அதற்குப் புறநடையாக இந்தியாவில் வெளிவந்த ஹிரியண்ணாவின் இந்திய தத்துவம் தொடர்பான அறிவியல் சார் நூலையும் இலங்கையில் வெளிவந்த இந்திய தத்து வஞானம் என்ற நூலையும் குறிப்பிடலாம். முதலில் குறிப்பிட்ட ஹிரியண்ணாவின் நூல் மொழி பெயர்ப்பாகவே தழிழ் வாசகர்களுக்குத் தரப்பட்டது. இதனால் மொழிபெயர்ப்பாக வருகின்ற அறிவியல் நூல்களை இலகு வாசிப்பாக புரிந்து கொள்ளல் என்பது மிகவும் சிரமான ஒரு பணியாகும். அதுவும் தத்துவ ஞானம் சார்ந்த நூலாக இருப்பின் அந்த சிரமத்தை ஒரு பத்து மடங்கால் பெருக்கி பார்த்துக் கொள்ளல் வேண்டும். கதோபநிஷத் என்ற கடேபநிடதத்தை தமிழில் வாசித்தவர்களுக்கு இதிலுள்ள ‘கணகாட்டும் கசகரணமும்’ புரியும். இது தமிழ் வாசகர்களின் தலையெழுத்தகப் போய்விட்டது.
ஆனால் 1970களில் இலங்கையில் வெளி வந்த இந்திய தத்துவ ஞானம் என்ற நூல் தமிழிலேயே அதுவும் இலகு தமிழிலேயே எழுதப்பட்டு இருந்தமையால் அது அப்போதைய தமிழ் வாசகர்களிடையே பிரபல்யம் பெற்றிருந்து.

இதற்கு மாற்றமாக பிற்காலத்தில் தோன்றிய எழுத்தாளர்களும் மெய்யியல் ஆய்வாளர்களும் மிகவும் இறுக்கமாக வந்து கொண்டிருந்த மொழி நடையை சிறிது சிறிதாக ஐதாக்கி நூல்களைத் தந்தனர். இந்த நூல்கள் இருப்பு வாதம் (நுஒளைவநவெயைடளைஅ) என்ற தலைப்பிலும் அந்நியமாதல் மற்றும் ஸ்ரக்சுரலிஸ்ம் என்ற தலைப்புக்களிலும் தமிழில் வெளிவந்தனவற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இவற்றை முறையே எஸ். ராஜதுரை, பாலா, தமிழவன் போன்றோர் எழுதியிருந்தனர்.

ஹிரியண்ணாவின் நூலைத் தமிழ்ப்படுத்தியவரின் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ‘லைட் ரீடிங்’ மட்டத்துக்கு இல்லாவிட்டாலும் கணிசமான அளவு மாற்றங்களை அவை கொண்டிருந்தன. இதனால் இயல்பாக தேடலில் நாட்டமுள்ள பலர் இத்தகைய நூல்களை வாசித்து தங்கள் அறிவுப்ப பரப்பினை விசாலித்துக் கொண்டனர். இந்தக் கட்டத்தில் காணப்பட்ட தத்துவ ஞானம் சார் தமிழ் நூல்களின் நடையை மீராபாரதி இன்னும் ஒரு கட்டத்துக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார் என்பதை இந்தக் கட்டத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும். கட்டுரையின் இறுதிக்கட்டத்தில் சொல்லப்பட வேண்டிய இக்கருத்தை அதன் அத்தியாவசியம் கருதி ஆரம்பத்திலேயே குறித்து வைக்க எனக்குக்கு ஆசையாக உள்ளது.
III

இந்தப் பின்னணியை உள் வாங்கியவர்களாக மீராபாரதியின் பிரக்ஞை தொடர்பான நூலின் மீதான பார்iயை செலுத்த முன் வருவது பயனுடைத்து.

பிரக்ஞை என்ற பதப்பிரயோகம் (awareness) என்ற கருத்தில் பேராசிரியர் நுஃமான் போன்ற பலர்களால் தழிழில் பிரயோகிக்கப்பட்டு வந்தது. ஆனால், மீரா பாரதியோ (consciousness) என்ற ஆங்கிலப் பதத்துக்கான நேரடியான தமிழ்ப் பதமாக பிரக்ஞை என்ற சொல்லைக் கையாண்டுள்ளார்.

அதேவேளை (awareness)என்பதற்கு ‘விழிப்பு நிலை’ என்ற தொடரை அவர் இங்கு பாவிக்கின்றார். இந்த நூல் தொடர்பான சொல்லாடலின்போது நாமும் அவர் வழியிலேயே தொடர்ந்து சென்று வாசகரிடம் சிந்தனை மயக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பதே ஒழுக்கம். மீதி மொழியியலாளர்களின் முடிவிற்கு விடப்படலாம்;.

எது எப்படியிருந்தாலும் தழிழ் வாசிப்புச் சூழலில் இந்த நூலின் பிறப்பாக்கமானது ஓர் அதிஷ;டமான நிகழ்வென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இந்நூலானது ஆசிரியரின் முகவுரை உள்ளடங்கலாக 11 தலைப்புக்களில் 78 பக்கங்கள் வரை வாசகனை பிரமிக்கவும் நிறுத்த முடியாத அங்கலாய்ப்புடன் தொடர்ச்சியாக வாசிக்கவும், வாசித்துக் கொண்டிருக்கையில் சற்று இடை நிறுத்தி யோசிக்கவும் மட்டுமன்றி கனவு காணவும் வைக்கின்து.

இங்கு முதலில் என்னைப் பிரமிக்கச் செய்த அம்சங்களை இந்நூலில் பலமான அம்சங்களாக நான் நிரல்படுத்த முனைகின்றேன். இந்த பலமான அம்சங்களுள் பிரதானமாக மேற்குலக தத்துவ ஞானத்தை கீழைத் தேய அறிதலுடன் தொடர்பு படுத்தியும் அதற்கான கீழைத் தேய பிரயோகங்களை வழிமொழிதலில் காட்டுகின்ற ஆர்வத்தையும் நாம் பிரமிப்புடன் அவதானிக்க முடிகின்றது.

அது நம்முடைய – சிறப்பாக, நமது நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழகப் புத்திஜீவிகளின் தமிழ் மொழியிலான ஆக்கங்களில் நாம் கண்டு கொள்வது மிக மிக அருந்தலானதாகும், பேராசிரியர் நுஃமான் மற்றும் பேராசிரியர் சித்திரலேகா போன்ற மிகச் சிலரைத் தவிர. இன்னும் சற்று வெளிப்டையாகச் சொன்னால் இந்த நூலாசிரியரின் நடையானது வித்துவ முலாம் பூசப்படாமல் கவித்துவ நடைபோல் தங்கு தடையின்றி வருவதான ஒரு உணர்வலையை இத்துறையில் வாசிப்பதில் முட்டப்பாடுகளை அனுபவித்த என்போன்ற வாசகரிடத்தே தோற்றுவிக்கின்றது. ஆனால் மொழிக் கையாட்சியில் மெய்யியல் சார்ந்தவர்களிடம் காணப்பட வேண்டிய இறுக்கமான சொல்லாட்சியும் மொழிசார் வீண் விரயமின்மையும் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் இங்கு கையாளப்பட்டிருப்பதை கோடிட்டுக் காட்ட முடியும்.

இவற்றின் உள்ளடக்கம் தொடர்பில் நாம் கவனம் செலுத்தும்போது இங்கு ஏற்கனவே சொன்ன 11 அத்தியாயங்களும் அல்லது சங்கிலித் தொடர்புள்ள 11 கட்டுரைகளும் நவீன உளவியல் துறையில் நாம் அறிந்திருக்க வேண்டிய பல்வேறு அம்சங்களையும் விலாவாரியாக எடுத்துரைக்கின்றது.

பிரக்ஞை மற்றும் பிக்ஞையின்மை மனித வாழ்வில் தவிர்க்க முடியாத கூட்டுப் பிரக்ஞையின்மை என்பன பற்றிய அறிதலில் ஆசிரியர் மிகுந்த அவதானமும் ஆர்வமும் காட்டியமை மட்டுமன்றி அவற்றில் அவர் தெளிவைக் கண்டிருக்கின்றார் என்பது சிலவேளை வியப்பை ஏற்படுத்துகின்றது.

தெளிவு பெற்றுள்ளார் என்ற எண்ணம் உருவாகுவற்கு அவர் இலங்கையின் தேசியப் பிரச்சினைகளுடன் கூட்டுப் பிரக்ஞையின்மை என்பதனைப் பிசைந்து ஒப்பிட்டுப் பார்ப்பதனைக் காண்பதன் மூலம் நாம் ஊர்ஜிதம் செய்து கொள்ள முடியும்.

அது மட்டுமன்றி படைப்பாளி ஒருவன் தன்னையும் தன் படைப்புக்களையும் சுய விமர்சனம் செய்து கொள்ள பிரக்ஞை தொடர்பிலான ஆரோக்கியமான வழி காட்டலையும் இவர் முன்மொழிந்துள்ளார். இவ்விரண்டு அம்சங்களும் இன்னூலின் மிகப்பலமான பக்கங்கள் மட்டுமன்றி ஆசிரியரின் புரிதலையும் தெளிதல் நிலையையும் நமக்குக் துல்லியமாகக் காண்பிக்கின்றனவுமாகும்.

உள மருத்துவம் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற சிக்மன்ட் புரொய்டு உளவியல் வரலாற்றில் தவிர்க்கப்பட முடியாத ஓர் உளவியல் அறிஞர் ஆவார். கம்பனை நீக்கிய தமிழ் காப்பிய வரலாறு எத்தனை கருத்தற்றதோ அத்தனை கருத்தற்றது புரொய்டின் கருத்துக்களை உள்வாங்காத உளவியலும் உள மருத்துவமுமாகும்.

புரொய்டு உளவியலிலும் உள மருத்துவத்திலும் புரட்சிகரமான மாற்றங்களையும் சாதனைகளையும் நிறுவிக்காட்டினார். அவர்தான் உழளெஉழைரள அiனெஇ ரnஉழளெஉழைரள அiனெ யனெ ளரடி உழளெஉழைரள அiனெ என மனத்தைப் பகுப்பாய்வு செய்ததின் மூலம் உளவியலில் ஆச்சரியகரமான கண்டுபிடிப்புக்களை முன்வைத்தார்.

மட்டுமன்றி ஓர் உயிரியின் பால் நிலை அவாக்களையும் அவை ஆழ்மனதில் ஆதிக்கம் செலுத்தும் விசித்திரங்களையும் பால் நிலை கொண்டுள்ள நிலையான தன்மைகளையும் மற்றும் உயிரி அது கொண்டுள்ள பால் நிலையின் அடிப்படையில் வைத்து ஆட்டுவிக்கப்படும் பாங்கினையும் ஆச்சரியமாகவும் வெளிப்படையாகவும் மட்டுமன்றி ஒழுக்கவியலாளர் கோபப்பட்டு அதனைக் கொச்சையாகப் பார்க்கக்கூடாது என்பதனையும் அவர் விஞ்ஞான பூர்வமாக விளக்கிக் காட்டினார். பால் நிலையின் அடியொற்றியே நமது நடத்தைக் கோலங்கள் தீர்மானிக்கப்படுகின்றன என்பதையும் புரொய்டு விலாவாரியாக விளக்கினார்.

அது தொடர்பாக தமிழ்ச் சூழலிலும் ஏராளமான அறிவியல் ஆய்வுகள் அல்லது தகவல் திரட்டுக்கள் வெளிவந்துள்ளன. அது மட்டுமன்றி இலக்கிய மற்றும் அழகியல் ஆக்கங்கள் கூட தமிழ் இலக்கியச் சூழலிலும் வரத்தொடங்கி விட்டன. குறிப்பாக இது தொடர்பான பல அற்புதமான ஆக்கங்களை இந்திரா பார்த்த சாரதியின் சிறுகதை, நாவல், நாடகம் போன்ற எல்லா ஆக்க முயற்சிகளிலும் நாம் தரிசிக்கலாம். அதற்கு சிறந்த உதாரணமாக அவரின் குருதிப் புனலைக் குறிப்பிடலாம்.

ஆரம்ப காலங்களில் கி. ராஜநாராயணன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி மற்றும் ஈழத்தில் எஸ்.பொ முதலியோர் வேறு சில ‘உள் வாங்கல் சம்மந்தமான குறைபாடுகளால்’ இத்துறையில் முயன்று தவறியுள்ளமையை குறிப்பிட கூச்சப்படத் தேவையில்லை;. இக்கூற்றினை வாசகர்கள் அவர்களின் அரை வேக்காட்டுத் தனம் என்று மொழி பெயர்த்துக் கொள்ளுதல் மிகக் கண்டனமான விமர்சனமாக அமையும். ஆனால் அதில் துறைசார் நுட்பங்களை விஞ்ஞான பூர்வமக கிரகித்து பயன்படுத்தவில்லை என்ற அபிப்பிராயத்தின் பின்னால் தெரிகின்ற தருக்கவியல் நியாயவாதத்தை நாம் பொத்தாம் பொதுவில் புறந்தள்ள முடியாது.

ஆனால் பிரக்ஞையும் பிரக்ஞையின்மையும் கூட்டுப் பிரக்ஞையை அல்லது கூட்டுப் பிரக்ஞையின்மையை நோக்கி வழிப்படுத்தப்படவில்லை என்பதே புரொய்டுக்கு எதிரான பெருள்முதல் வாதிகளின் விமர்சனமாகும். பொருள்முதல் வாதிகள் கருத்தியல் ரீதியாக கூட்டுப் பிரக்ஞையை அல்லது கூட்டுப் பிரக்ஞை இன்மையை அடிப்படையாக வைத்தே தனது பொருள் முதல்வாதக் கருத்துக்களின் போக்குகளை ஊர்ஜிதம் செய்து கொள்கின்றனர். அதன் அடிப்படையில்தான் தனிமனித பிரக்ஞையை அல்லது தனிமனித பிரக்ஞையின்மையை முதன்மைப்படுத்துவது பொருள் முதல்வாதப் பார்வையில் ஓர் அர்த்தப் போலியாகப் பார்க்கப்படுகின்றது. சிக்மன் புரொய்டையும் அவர்கள் கருத்து முதல்வாத எல்லைக் கோட்டுக்குள் அடக்கவே முற்படுகின்றனர்.

ஆனால் மீரா பாரதியின் பிரக்ஞை என்ற இந்நூலின் கருத்துக்களை நான் அவர் கருதியவாறே உள்வாங்கியுள்ளேன் என்று ஆகக்குறைந்தது மீரா பாரதிதானும் ஒத்துக் கொள்வாராயின் எனது கருத்தானது மீராபாரதி சிக்மன்ட் புரொய்டு பற்றிய பொருள் முதல் வாதிகளின் விமர்சனத்தை ஓர் அகவயத் தன்மையான விமர்சனமாகவே பார்க்கப்படல் வேண்டும் என்று கருதுகின்றார் என்றே அர்த்தப்படும்.

ஆனால் இந்தத் தருக்கத்தில் யுங், புரொய்டை விடவும் நீரோட்டம் போன்ற உள்ளகமான தெளிவுகளை கொண்டுள்ளார் என்பதை நடு நிலையில் நின்று பார்க்கும் போது மட்டும் புரிந்து கொள்ள முடியும். இது முடிந்த முடிபன்றி மேலதிக வாசிப்புக்குரிய ஒரு தருக்கமாகும்.

அத்துடன் கூட்டுப் பிரக்ஞையின்மை பற்றிய சொல்லாடல்களை இயற்கை விஞ்ஞான சூத்திரங்கள் (natural science formula) மூலமாகவும் மீரா பாரதி விளக்க முற்படுகின்றார். அது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க இயற்கை விஞ்ஞானத்தில் புலமை சான்றவர்களாலேயே முடியும். அதிலும் உள மருத்துவம்சார் புலமையாளர்கள் அதன் தார்ப்பரியத்தை அக்கு வேறு ஆணி வேறாக பார்க்க முடியும்.

மேலும், கூட்டுப் பிரக்ஞையின்மை என்பதை பரிணாம வளர்ச்சியோடு மட்டுமன்றி ஒவ்வொரு மக்கள் கூட்டத்துடனும் உயிரியலின் அடிப்படையில் உருவாகும் மரபணுக் கடத்துகையின் ஊடாகவும் நிகழும் சங்கிலித் தொடர்பையும் மீரா பாரதி வலியுறுத்த வருகின்றார். இது தொடர்பில் கருத்து வெளியிடுவற்கான அறிவியல் முதிர்ச்சி என்னிடம் காணப்படவில்லை என்றே நான் கருதுகின்றேன்.

அத்துடன் மீரா பாரதி இன்னுமொரு தளத்திற்குச் சென்றும் கூட்டுப் பிரக்ஞையின்மையை விளக்க முற்படுகின்றார். அது இந்திய தத்துவ ஞானத்தின் வைதிகத்திலாயினும் சரி அல்லது அவைதீகத்திலாயினும் சரி உள் வாங்கப்பட்ட கோட்பாடுகளே. எனினும் நான் சார்ந்த நம்பிக்கைகளும் விழுமியங்களும் அதன் அடிப்படைக் கோட்பாடுகளுடனேயே முரண்படுவதால் அது பற்றியும் நான் கருத்தைப் பகிர்ந்து கொள்ள முனைவது ஒரு வகையில் சிறப்பானதன்று. ஆனால் ஒரேயொரு விடயத்தில் இன்னும் கருத்தக் கூற முடியும் என்று நான் நம்புகின்றேன்.

அது போருக்குப் பின்னரான ஈழத் தமிழ்ச் சூழலில் கூட்டுப் பிரக்ஞையின்மை எனும் எண்ணக்கரு மூலம் நாம் வெகு தூரம் சென்று சமூகத்தின் மீள் கட்டமைப்புக்களையும் ஏனைய முன்னாயத்தங்களையும் செய்து கொள்ள முடியும் என்ற கருத்தை நமது புதிய தமிழ்ச் சூழலில் வாய்ப்புப் பார்க்க முடியும் என மீரா பாரதி கருதுவதை நாம் தட்டிக் கழிக்க முடியாது. அது மாத்திரமல்லாது அவரின் சுண்டு விரலைப் பிடித்துக் கொண்டு ஈழத்துத் தழிழ் பேசும் சமூகங்கள் நீண்ட தூரம் இத்துறையில் நடை பயில முடியும் என்பதற்கு என்னால் ஒரு சாட்சியாளனாகக் கடமையாற்ற முடியும்.

அது தழிழ்ச் சூழலில் மீள் கட்டமைப்பை வரன் முறைக்குள் கொண்டு வரவும் அதற்கான பொதுக் கருத்தை உருவாக்கவும் தயார் படுத்தும் ஒரு முயற்சியாகும். மட்டுமன்றி றாயவ நெஒவ என்ற அறிவுபூர்வமான கேள்வியை நோக்கி சமூகத்தையும் குறிப்பாக இளைஞர்களையும் சிந்திக்க வைத்து செயல்படத் தூண்டவும் அதற்கான உளவியல் பக்குவத்தையும் எல்லாத் தரப்பினரிடமும் உருவாக்கவும் இவர் முயல்கின்றார்.

அதற்கு அவர் கையாளும் வழி முறைதான் அனைவரையும் உற்சாகப்படுத் தக்கதாய் உள்ளது. அதில் முக்கியமாது ‘நான்’ பற்றிய அறிதலும் ‘நாம்’ பற்றிய அறிதலும் ஆகும். தமிழர் விடுதலைப் போராட்டமானது 1983களில் நிகழ்ந்த மடைமாற்றம் ‘நாம்’ பற்றிய கூர்மையான அறிதலின் பிராயச் சித்தமான வெளிப்பாடே. மனமுவந்து உயிர் துறக்க வரும் தியாகத் தழும்புகளை உருவாக்கிய சக்தி ‘நாம்’ தொடர்பான கூட்டுப் பிரக்ஞை உணர்வு பூர்மான அல்லது அறிவு பூர்வமான அறிதலின் வெளிப்பாடேயாகும். ஆனால் நமது துரதிஷ;டம் அத்தகைய புரிலானது மீண்டும் யடிழரவ வரசn என்ற கட்டத்துக்கு வந்து சேர்ந்தமையாகும்.

நோர்வேக்கான சமாதானப் பேச்சுவார்த்தை யாத்திரையின் ளனைந side affect ஆகவும் இதனை நாம் புரிந்து கொள்ளலாம். இதனை மீள வலியுறுத்தினால் மீண்டும் ‘நான்’ என்ற பழைய குருடி கதவைத் திறடி நிலையை நோக்கி ஆற்றுப்படுத்தப்பட்டதே எமது கைசேதம். மீரா பாரதி மீண்டும் சமுகத்தை ‘நாம்’ என்ற கட்டத்தை நோக்கி வழி நடாத்தப் பயிற்றுவிக்க ஆர்வம் கொண்டுள்ளமை இந்நூலின் வெற்றியாகும்.
சில வேளை இதற்கு அப்பாலும் சென்று சில தரிசனங்களைக் காண முடியும். கூட்டுப் பிரக்ஞையில் இருந்து வெகு தூரம் கடந்து சென்று கை தேசத்தை கை சேதம் ஆக்கி கூட்டுப் பிரக்ஞையின்மைக்குள் இரண்டறக் கலந்துவிட்ட ஒரு சமூகத்தை ‘நாம்’ என்ற கூட்டுப் பிரக்ஞைக்குள் கொண்டு வரவேண்டிய ஒரு தத்துவார்த்த முன்னெடுப்பாகவும் இதனை நாம் காண முடியும்.

ஆனால் அதற்காக இந்திய தத்துவஞானத்தின் ஒழுக்கங்களைப் புறம் தள்ளிய corporate ஜீவிகள் மீண்டும் சமூகத்தினுள் பிரவேசிக்கும் புனர் ஜீவிதத்துக்கான passport வழங்கும் பணியை மீரா பாரதி போன்ற அறிவு ஜீவிகள் செய்யக் கூடாதிருந்திருகக் வேண்டிச்சுதே என்பதே எனது எதிர்பார்ப்பாகும்;. இது தொடர்பான மேலதிக வாசிப்புக்காக சுவாமி வீவேகானற்தரின் தருக்கவியல் அணுகு முறையையும் அவரின் தனிப்பட்ட வாழ்வில் காணப்பட்ட துப்பரவும் அவரை வாசிக்குமாறு மீரா பாரதியை பரிந்துரை செய்யத் தூண்டுகின்றது.

இதற்கு அப்பாலும் கருத்தியல் தூய்மைவாத விழுமியங்களுடன் மீரா பாரதி பயணிக்கத் தயார் என்றால் இமாம் கஸ்ஸாலியின் யஹ்யா உலூமுத்தீன் மற்றும் கிமியாஏ சாதாத் என்ற கிரந்தங்களையும் அவர் ஐரோப்பிய தத்துவஞானங்களின் அடிப்படையான குறைபாடுகளை விமர்சனம் செய்த ‘பலாததுல் பலாஸபா’ என்ற நூலையும் இத்துறையில் அண்மைக்கால அறிஞரான அலி ஷரீஅத்தியையும் சிபாரிசு செய்ய விரும்புகின்றேன். இந்த விடயம் பற்றி நான் இங்கு இன்னும் மேலே சென்றால் நமது சமூக வேறுபாடுகளுக்குள் ஒரு எல்லை தாண்டும் பயங்கரவாதமாக மறிவிடும் அபாயம் ஏற்படக் கூடும்.
இங்கு ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல இந்நூலின் 11வது அத்தியாயம் வரை ஒரு தெளிவான உள்ளக்க குழப்பங்கள் அருந்தலான தத்துவார்த்த வரன்முறைகளை குழப்பியடிக்காத ஒரு சிறந்த ஆதர்சமான தொடக்கமாக இந்நூல் சென்று கொண்டிருக்கின்றது.

சிலவேளை கூட்டுப் பிரக்ஞையை அவசரமாக அமுல் படுத்துமம் நோக்கில் அதற்குப் பின்னரான கட்டுரைகளைச் சேர்த்திருக்கக் கூடும். ஆனால் அது இந்த முயற்சி பலவீனமான அம்சங்களின் கீழே நிரற்படுத்தக் கூடுமா என்பதை மீரா பாரதி யோசித்திக்க வேண்டிச்சுதே என்பதும் எனது அங்கலாய்ப்பாகும்.

எது எப்படி இருந்தாலும் போருக்குப் பிந்தியதான ஈழத்துத் தமிழ் பேசும் சமுகங்களுக்கிடையே கூட்டுப் பிரக்ஞையை ஒரு சமூகவியல் அடிப்படையிலான இராஜதந்திமாக பல்பரிமாணப் பயன்பாடுகளுடன் முன்னெடுத்துச் செல்லக் கூடிய ஆகக் கூடுதலான வாய்ப்புக்களை இந்த நூல் மூலம் ஏற்படுத்தலாம். போருக்குப் பின்னரான துப்பாக்கிச் சத்தங்கள் கேட்காத இந்த சமூகச் சூழலில் கத்தியில் நடப்பதுபோல் மிகுந்த அவதானத்துடன் வழிநடாத்திச் செல்லும் கூட்டுப் பிரக்ஞையை பலமான அத்திவாரத்துடன் உருவாக்க இந்த நூல் தத்ததுவார்த்தப் பரப்பில் நிச்சயம் உதவும். ஆனால் கத்தியில் நடப்பதுபோல என்ற தொடரை நூலாசிரியருக்கு மட்டும் கேட்கத்தக்கதாக கூறிக் கொள்ள விரும்புகன்றேன். இதுதான் எனது விமர்சன வாய்பாட்டில் வரும் பிரதானமான அச்சுறுத்தலாகும்.

ஆக நாம் என்ற கூட்டுப் பிரக்ஞையை தழிழ்ச் சூழலுக்கு மட்டுமன்றி தமிழ் பேசும் சூழலை நோக்கி அகலப்படுத்துவதைப் பற்றியும் அதற்கான சாத்திய வளங்கள் பற்றியும் அதிமாகவும் தீவிரமாகவும் சிந்திப்போமாக.
மன்சூர் ஏ. காதிர்

This article was read in Batticaloa meeting on 15th February 2014.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: