Posted by: மீராபாரதி | March 1, 2014

மீரா(பாயின்)வின் கோவிலில் மீரா(பாரதி)

மீரா(பாயின்)வின் கோவிலில் மீரா(பாரதி)

Imageமீரா என்று அன்புடன் அழைக்கப்படும் மீராபாய் எப்பொழுது எனக்கு அறிமுகமானார் எனத் தெரியாது. ஆனால் மீராவின் வெள்ளை நிற சிலைகளை இலங்கையில் கண்ணுற்றபோதெல்லாம் அதில் மயங்கியிருக்கின்றேன். 90களின் ஆரம்பத்தில் எனது நண்பர் ஒருவரின் திருமணத்திற்கும் மீரா சிலையை அன்பளிப்பு செய்திருந்தேன். இது எந்தளவு பொருத்தமானது என்பது கேள்விக்குறியே. ஆனால் காதலை மீரா உயர்ந்த ஒரு தளத்தில் வைத்திருந்தமையினால் அவர்களுக்குப் பொருத்தமானது எனக் கருதினேன்.
இரண்டாயிரமாம் ஆண்டு ஓசோ அறிமுகமாகிய போது பலரை அறிமுகப்படுத்தினார். மீள் வாசிப்புக்கு தூண்டினார். அதில் ஒருவர் மீரா. இதன் பின்னர் மீராவைப் பற்றிய புரிதல் பன்முகமானது. பன்மடங்கானது. மேலும் ஆழமானது. அவர் மீது மரியாதையும் மதிப்பும் உருவானது. அவரைக் காதலின் சின்னமாக கருதி எனது பெயருடன் இணைத்துக் கொண்டேன். மீரா வாழ்ந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் என்றும் எனக்குள் இருந்தது. ஆனால் அது இந்தப் பயணத்தில் நிறைவேறும் என நினைக்கவில்லை. இதனைச் சாத்தியமாக்கியவர் shirley. இவர்தான் இப் பயணத்திற்கான ஒழுங்குகளை மேற்கொண்டு அதைப் பற்றிய விபரங்களை வாசித்து அறிந்து கொண்டார். இந்த வாசிப்பின் பயனாக மீரா வாழ்ந்த இடமும் இராஜஸ்தானில் தான் இருக்கின்றது என்பதை அறிந்து கொண்டார். நாம் பார்க்க வேண்டி இடமாக அதையும் குறித்துக் கொண்டோம். இதன் பின் மீராவைப் பற்றிய தேடிய போது அவர் பிறந்த இடமும் இராஜஸ்தானில் பிக்கினார் என்ற நகரத்திற்கு அருகில் என்பதை அறிந்தோம். ஆனால் நாம் அந்த இடத்தை ஏற்கனவே கடந்து வந்துவிட்டோம்.Image
மீரா திருமணத்தின்பின் வாழ்ந்த அரண்மனை கோட்டை கிராமம் அனைத்தும் ஜோத்பூருக்கும் ஜெயப்பூருக்கும் இடைப்பட்ட நகரம் (கிராமம்) சித்திராகோட் (Chittor/ Chittorgarh). இந்த நகரத்தின் ஒரு புறந்தில் பத்து கீலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு மலை இருக்கின்றது. இந்த மலையின் உச்சியில் பத்து கீலோ மீட்டர் தூரத்திற்கும் ஒரு கோட்டை ஒன்று கட்டப்பட்டிருக்கின்றது. இந்தக் கோட்டையிலிருந்து ஆட்சி புரிந்து அரசன் ஒருவரே மீராவின் கணவர். கணவர் சிவனை வழிபட்டபோதும் மீரா சிவனை வழிபட மறுத்துவிட்டார். தான் கண்ணனையே வழிபடுவேன் என உறுதியாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சிறு வயதில் நடந்த ஒரு சம்பவத்தால் தனது கணவர் கண்ணன் மட்டுமே என்றும் கூறியுள்ளார். ஆகவே கிருஸ்ணன் மீது காதல் கொண்டு அவர் மீது பாடல்களைப் பாடியுள்ளார். இந்தப் பாடல்களை ஊர் ஊராக சென்று ஆடி பாடியுமுள்ளார். தான் வணக்கும் கிருஸ்ணனுக்கு ஆண்கள் பூசை செய்வதை மறுத்து பெண்கள் இந்தக் கோயில்களுக்குள் போக இருந்த தடையையும் மீறி தானே பூசை செய்து வழிபட்டுள்ளார். கணவரின் இறப்பின் பின் மீராவின் செய்கைகளினால் தமக்கு அவமானம் எனக் கருதிய கணவரின் சகோதரர் மீராவிற்கு நஞ்சு வைத்துக் கொன்றதாக நம்பப்படுகின்றது.

Imageஇன்று மீரா ஒரு ஞானியாக மதிக்கப்படுகின்றார். அவர் வழிபடப்படுகின்றார். ஆனால் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மீராவின் உண்மையான உருவம் என்ன என்பது தெரியாதாம். அதேநேரம் இதற்கு முன் வாழ்ந்த அரசர்கள் பலரின் உருவங்களும் சிலைகளாகவும் ஓவியங்களாகவும் உள்ளன. ஆகவே மீராவின் உருவம் மட்டுமல்ல அவர் பற்றி பல உண்மைகளும் மறைக்கப்பட்டுள்ளதாகவே கருதவேண்டி உள்ளது.
இந்தக் கதைகள் ஒரு புறம் இருக்க, மூன்றாவது இந்தியப் பயணத்தின் போது மீரா வாழ்ந்த ஆடிப் பாடிய இடத்திற்கு சென்றது மனதுக்கு மிகவும் திருப்தியாக இருக்கின்றது. அரசர்கள் வாழ்ந்த அரண்மனைகளையும் அவர்கள் கட்டிய கோட்டைகளையும் பயன்படுத்திய ஆயுதங்களையும் பார்க்க விருப்பமில்லாமல் பார்த்து கோவப்பட்டுக் கொண்டிருந்த என் மனதிற்கு இந்த இடம் புதிய உணர்ச்சியை தந்தது. ஆனந்தத்தை அளித்தது. இந்த இடம் தியானம் செய்வதற்கு ஏற்ற இடமாக உணர்ந்தபோதும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்ததால் சாத்தியப்படவில்லை. மற்ற இடங்களைப் போல அல்லாது இந்த இடத்தை விட்டு பிரிய மனமின்றி பிரிந்து வந்தேன். இந்தப் பயணத்தில் மீண்டும் ஒரு முறை சென்று நின்று ஆறுதலாகப் பார்க்க வேண்டிய நான் விரும்புகின்ற ஒரு இடமாக Imageமீரா வாழ்ந்த இந்த இடம் மட்டுமே இருக்கின்றது.

மீராவின் கோயிலில் உல்லாசமாக இருந்தேன்.

நன்றி Shirley.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: