Posted by: மீராபாரதி | February 22, 2014

மட்டுநகரில் நடைபெற்ற இரு நூல்களின் அறிமுக நிகழ்வு – குறிப்புகள் – தேவா தாஸ்

Imageமீரா பாரதி அவர்களின் பிரக்ஞை நூல் மற்றும் மரணம் இழப்பு மலர்தல் ஆகிய இரு நூல்களின் அறிமுக நிகழ்வு 15/02/2014 ம் திகதி பி.ப 3.00 மணிக்கு வாய்க்கால் கலை இலக்கிய வட்டத்தால் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது இந் நிகழ்வின் தலைவர் கவிஞர் அரசையூர் மேரா. தொகுத்து வழங்கியவர் க .பகீரதன். வரவேற்புரை இ .குகநாதன். நன்றியுரை நூலின் ஆசிரியர் மீரா பாரதி.

ஒரு நிமிட அகவணக்கத்துடன் ஆரம்பமானது பின் தலைமை உரை கவிஞர் அரசையூர் மேரா அவர்களால் நிகழ்த்தப்படது. அந்தடிப்படையில் மீரா பாரதி பற்றி கவி வரிகளுடன் தனது தலைமை உரையினை தொடந்தார் இவரின் நூல்கள் தனிமனித மாற்றத்தில் இருந்து சமூக மாற்றத்தை நோக்கிய நகர்வாக அமைந்துள்ளது. மீரா பாரதியின் பத்து வருட வாசிப்பாக தேடலாக இந் நூல் எமக்கு கிடைக்கின்றது. நமது ஒவ்வொரு வேலைப்பாடுகளுக்கும் பிரக்ஞை முக்கியமானது என்பதை அழுத்திக் கூறியிருக்கின்றார். நாம் எதிர் கொள்ளும் பிரச்சினைக்கு அடிப்படை நமது கடந்தகால செயற்பாடுகள் ஆகவே பிரக்ஞையான செயற்பாடுகள் அவசியம் நமது உணர்ச்சிகளுக்கும் உணர்வுகளுக்கும் அடிப்படை நமக்குள் இருக்கின்ற சக்திகள். ஆகவே மூச்சு தொடர்பான விழிப்பு அவசியம் என்பதையும் இவுலகம் பற்றிய அறிதலுக்கு தியானம் அவசிமாகிறது என்பதை மீரா பாரதி பிரக்ஞை ஊடக கூறியிருக்கின்றார். இவரின் மரண இழப்பு மலர்தல் எனும் நூல் வாசிக்கும்போது நாவல் எனும் நினைப்பை தருவதுடன் கட்டுரை தன்மையினை கொண்டமைந்துள்ளது. மரணத்தின் மீதான பயத்தினை களைந்து எதிர்கொள்ள துனியும்போது மரண இழப்பில் இருந்து விடுபட முடியும் என்பதை கூறி இருக்கின்றார் மரணச்சடங்குகள் யுத்தகால அழிவுகள் பற்றியும் தனது அனுபவத்தின் ஊடக சொல்லி இருப்பது ஒரு வாசிப்பு புதுமையை தருவதாக அமைந்துள்ளது. யுத்தகாலத்தின் பின்பு இந் இரு நூல்களின் வரவு சிறப்பாகும். இந் நூல்களை தந்தமைக்கு பாரட்டுக்களை தெரிவித்து தனது தலைமையுரையை நிறைவு செய்தார்.

அடுத்து நூல்கள் பற்றிய உரைகள் இடம்பெற்றது

கிழக்குப் பல்கலைக்கழ தமிழ் துறைத் தலைவர் பேராசிரியர் ரூபியா வலன்டைனா பிரான்ஸ்

இவ்விரு நூல்கள் பற்றிய மனப்பதிவுகள் இது எவ்வாறு பேசிகிறது என்பது பற்றி கூறினார் பிரக்ஞை பத்துவருட அற்பணிப்போடு உருவாகி இருப்பதை சில நிமிடங்களில் பேசி முடிப்பது என்பது அசாத்தியமானது.

பிரக்ஞை எனும் சொல்லாட்சி 1970 ற்கு பிற்பட்ட காலப்பகுதியில் தான் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்ற காலத்தில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் அடிக்கடி சொல்கின்ற வார்த்தையாக இருந்தது. எனினும் அதன் அர்த்தம் உணர்பு பூர்பமானது என்பது என அறிந்தேன். ஆனால் இந் நூலை வாசிக்கும் போது அதிலிருந்து மாறுபட்டதாக மேற்குலக சிந்தனையின் வெளிப்படக இதன் அர்த்தம் அமைந்துள்ளது. நூலாசிரியர் பிரக்ஞை எனும் சொல் புதிய பரிணாமத்தை பெற்றுள்ளது என்பதைக் கூறியிருக்கின்றார். இந் நூலில் பிரக்ஞை, பிரக்ஞை இன்மை, கூட்டு பிரக்ஞை இன்மை எனும் மூன்று விடயங்கள் பற்றி பேசிகின்றது. மேற்குலக சிந்தனையில் இருந்து பெறபட்ட விடயங்களை பேசிகிறது. பிரக்ஞை இன்மை, கூட்டு பிரக்ஞை இன்மை என்பது ஆபத்தானது. இது சமூக விரோத செயலுக்கு இட்டுச்செல்லும் என்பதைக் கூறியிருக்கின்றார். அத்துடன் பிரக்ஞை எந்த பாகத்தில் இருக்கின்றது.எனும் வினாவும் இங்கு எழுப்பபட்டு இருக்கின்றது. கூட்டு பிரக்ஞை இன்மையை களைவதற்கு சுய பரிசோதனை முக்கியம் என்பதை ஆசிரியர் இலகுவான பயிற்சிகளை தந்திருப்பது சிறப்பானது.

அடுத்து இவரின் மரணம், இழப்பு , மலர்தல் எனும் நூல் மரணத்தின் தன்மை, மரண இழப்பு என்பது மலர்தல் இது இன்னுமொரு வாழ்வின் தொடக்கம் என சொல்லப்படுகின்றது. எளிமையான கருத்துக்களை கொண்டு சிந்திக்க கூடியதாக உள்ளது. பொருத்தமான கவிதைகள் இருப்பது மேலும் சிறப்பாகும். மரணம் எங்களோடு பயணிக்கின்றது. இறப்பு என்பது முக்கியமானது என்றும். வடக்கு கிழக்கு பகுதியில் இடம்பெற்ற கொடூர சம்பவங்கள் பற்றியும் குழந்தைகள் மரணத்தின் இழப்பினை எதிர் கொள்ளும் முறை பற்றி கூறப்பட்டுள்ளது. இது ஒரு அனுபவ பகிர்வாக கிடைத்திருப்பது சிறப்பானது. ஆசிரியருக்கு நன்றி என நூல் தொடர்பாக பல கருத்துக்களை கூறியிருந்தார்.Image

அடுத்து உரை நிகழ்த்தியவர் இராஜரட்டை உப பதிவாளர் மன்சூர் ஏ காதர்

மீரா பாரதியின் இரு நூல்களும் வித்தியாசமான படைப்பாகும். பிரக்ஞை எனும் நூல் ஐரோப்பிய தத்துவம். உளவியல் கருத்துக்கள் தாங்கி வெளிவந்திருக்கின்றது.உயர்ந்த நோக்கம் கொண்டதாக . சமூகம் சார்ந்தும் உளவியல் ஆற்றுப்படுத்தலாகவும். அமைந்துள்ளது. அத்துடன் இது பரிசோதனை முயற்சியாகும்.இது விழிப்பு நிலையினையும். கொண்டு வெளிவந்துள்ளமை தமிழ் வாசிப்பு சூழலில் சிறப்பானதாகும். மரணம். இழப்பு மலர்தல் எனும் நூல் போருக்கு பிந்திய ஈழத்தமிழர் பற்றி பேசிகின்றது. என பல கருத்துக்களை கூறினார்.

அடுத்து உரை நிகழ்த்தியவர் பட்டிப்பளை கதை சொல்லி கருணாகரன்

மீரா பாரதியின் நூல்கள் இரண்டும் அவரின் சொந்த வாழ்வில் அவர் கண்டு அறிந்துகொண்ட அனுபவத்தின் பதிவுகளாகும். அறிவராச்சியின் பகுதியில் இந் சொல்லை அறிந்திருக்கின்றேன் இந் நூல் சமுக மாற்றத்திற்கான ஒரு கருவியாகும்.ஒரு தனி மனிதன் சமுகத்தில் வாழ்கின்ற போது விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்பது பற்றி சொல்லப்படுகின்றது.இந் நூல் வாழ்வியல் தத்துவங்களையும். வாழ்வில் தேவைப்படும் விடயங்களான தியானம். மனம் .சிரிப்பு என பல சிந்தனைகளை கொண்டமைந்த நூலக பிரக்ஞை உள்ளது.

அடுத்து நூல் மரணம் இழப்பு மலர்தல் இது இலகுவாக வாசித்து விளங்க கூடிய வகையில் அமைந்துள்ளது.இறப்புக்கள் இருந்தால்தான் பிறப்புக்கள் இருக்கும் . என்றும் இந் நூல் ஒரு ஆற்றுப்படை இலாக்கியமாக உள்ளது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் மனிதர்களுக்கு இது ஒரு ஆற்றுபடையாகும். வாழ்வில் தனக்கு ஏற்பட்ட அனுபங்களாக இதனை பார்க்க முடியும்.எனவே இவரின் முதலாவது நூல் அறிவராச்சியின் பகுதியாகவும். இரண்டாம் நூல் ஒரு ஆற்றுப்படை இலக்கியமாகும் . என பல கருத்துக்களை கூறினார்.

அடுத்து உரை நிகழ்த்தியவர் மனநல வைத்திய கலாநிதி த.கடம்பநாதன் தான் படிக்கும் காலத்தில் இருந்து மீரா பாரதியை தெரியும். இவரின் சிறந்த தேடலாக இவ் இரு நூல்களும் உள்ளது .உளவியல் தொடர்பான பார்வைகள் இந் நூலில் உண்டு . ஓசோவின் தத்துவங்கள் சிரிப்பின் முக்கியத்துவங்கள் பற்றி சொல்கின்ற நூலாகப் பிரக்ஞை உள்ளது. அடுத்த மரண இழப்பு மலர்தல் எனும் நூல் சொந்த வாழ்வின் அனுபவ பகிர்வாகும். இலங்கையில் ஏற்பட்ட பல இழப்புக்கள் பற்றி கூறுகின்றது. இந் நூலின் சிறுவர்கள் தொடர்பான ஆழமான கருத்துக்கள் முக்கியமானது. தற்கொலை முயற்சிகள் பற்றி கூறியிருப்பதும்.உளநல தேவைகள் எம் மத்தியில் தேவையாக இருக்கின்றது. இந் நூல் இலகுவாக வாசிக்க கூடியதாக இருக்கின்றது. என பல கருத்துக்களை கூறினார் .

தொகுப்பு – தவா தாஸ் – கிழக்குப் பல்கலைக்கழகம்.

நன்றி தேவா தாஸ்

Advertisements

Responses

  1. வாழ்த்துக்கள்


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: