Posted by: மீராபாரதி | December 17, 2013

“மரணம், இழப்பு, மலர்தல்” – ஒரு பயிற்சிப் புத்தகம் – ஞானதாஸ்

Imageநீண்ட நாட்களுக்குப் பிறகு ‘கட்டுரைத் தொகுதி’ வகையைச் சார்ந்த புத்தகம் ஒன்று என்னைப் பாதித்ததுள்ளது.(இதில் கவிதைகளும் உண்டு, கதைகளும் உண்டு. ஆயினும் பிரதானமாக கட்டுரைகளைக் கொண்டுள்ளதால் கட்டுரைத் தொகுதி எனக் கூறுகிறேன்)

அது மீராபாரதி பிர…க்ஞை மீராபாரதியின்,

“மரணம், இழப்பு, மலர்தல்”

என்னை மட்டுமல்ல. என் மனைவியையும் அது பாதித்தது. அவர் என்னை மாதிரி அல்ல. ஒரு புத்தகத்தை வாசித்து விட்டு உணர்ச்சிவசப்படக் கூடியவர் அல்ல. கதைப் புத்தகம் வாசித்தாலே இலேசில் உணர்ச்சி வசப்படமாட்டார். இந்தக் கட்டுரைத் தொகுதி அவரைப் பாதித்தது என்பது எனக்குக் கொஞ்சம் அதிசயந்தான்.

என் நண்பர்கள் (இளவயது) சிலரிடமும் கொடுத்தேன். அவர்களையும் இது பாதித்தது.

வெறுமனே, எமது புத்திஜீவித்தனத்துக்கும், அறிவுத் தேடலுக்கும் மட்டும் தீனி போட்டு எமது தன்முனைப்பையும், அறிவுக் கர்வத்தையும் வளர்க்கப் பெரும் உதவி செய்து வரும் புத்தகங்களை, வாசிப்பதை நான் நிறுத்திப் பல காலங்களாகிவிட்டது.

நான் செய்யும் வேலைகளுக்காகவும், எனது துறைசார்ந்தும், ஏதாவது தகவல் தேவைப்படுமாயின் மட்டும் அவ்வகைப் புத்தகங்களை வாசிப்பதுண்டு.

மற்றப்படி, உடல் ரீதியாகவோ, உளரீதியாவோ, ஆத்ம ரீதியாகவோ என்னை மாற்றக்கூடிய, எனக்குள் ஒரு உருமாற்றத்தை ஏற்படுத்தவல்ல, ஒரு வழிகாட்டியாக, ஒரு பயிற்சி;ப் புத்தகமாக இருக்கக் கூடிய புத்தகங்களை மட்டுமே நான் வாசிப்பதுண்டு.

இன்னொரு புத்தகத்தை எழுதுவதற்காகவோ, மற்றவர்களுக்கு என் அறிவை வெளிப்படுத்துவதற்காகவோ நான் புத்தகங்கள் வாசிப்பதில்லை.

மீராபாரதியின், “மரணம், இழப்பு, மலர்தல்” அறிவுத் தேடலுக்கான தீனி அல்ல.

இது ஒரு பயிற்சிப் புத்தகமாகவே எனக்குப் படுகிறது.

குறிப்பாக, மீராபாரதியைப் போன்று, பல மறக்க கடினமான மரணங்களைச் சந்தித்த எனக்கு, அண்மையில் எங்கள் ‘ஐயா’வை இழந்த எங்களுக்கு, இப்புத்தகம், ஒரு மரணத்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், அதை எவ்வாறு கடந்து செல்ல வேண்டும் என்ற வழிகாட்டுதலை வழங்குகிறது.

சுகமாக வாழ, வேலையில் வெற்றிபெற, காசு சம்பாதிக்க, அதுக்கு இதுக்கு என பல வழிகாட்டுதற் புத்தகங்கள் உள்ளன. ஆனால் வாழ்வில் ஒருவர் விடாது அனைவரும் எதிர்கொள்ளக் கூடிய மரணம் என்னும் நிதர்சனத்தை, தவிர்க்க முடியாத யதார்த்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது, அதனை எவ்வாறு கடந்து செல்வது என்று யாரும் எழுத யோசிப்பதில்லை, குறிப்பாக ஈழத்துத் தமிழ்ச் சூழலில்.

பலர் அவ்வாறான விடயங்களை வாசிக்கவும் துணிவதில்லை.

ஆனால், அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய, அதுவும் கூட்டு மரணங்களை, கொத்துக் கொத்தான இழப்புகளை எதிர்கொண்ட ஈழத்துத் தமிழச் சமூகம் ஒவ்வொருவரதும் கையேடாக இருக்க வேண்டிய புத்தகமாக,

“மரணம், இழப்பு, மலர்தல்”

உள்ளது.

இதில் உள்ள விசேஷம் என்னவென்றால், மீராபாரதி, இதனை அனுபவபூர்வமாக எழுதியுள்ளார்.

சிறு வயது முதல், தான் கண்ட தன்னைப் பாதித்த ஒவ்வொரு மரணங்களையும், அந்த நினைவுகளையும் பிழிஞ்செடுத்து, அவற்றுக்கு தனது ‘ஞான’ப் பார்வையை வழங்கி அதை எழுத்தாக்கி உள்ளார்.

இதில் உள்ள ஒரு தனித்துவம் என்னவென்றால்,

மரணத்தை மட்டுமல்ல,

உங்களில் ஒருவரை… உங்கள் தந்தையை, தம்பியை, தங்கையை, அண்ணனை, அக்காவை, நண்பரைக் கொன்ற ஒரு கொலையாளியை எவ்வாறு எதிர்கொள்வது!

பழிவாங்கல் உணர்வை,

அந்த அக அதிர்ச்சி (Trauma) உணர்வை

எவ்வாறு கடந்து செல்வது பற்றியும் வழிகாட்டப்படுகிறது. அதுவும் வெறுமனே போதனையாக அல்ல. அவரது சொந்த அனுபத்தினூடாக.

இந்த உழைப்பு இலகுவான காரியமல்ல.

ஓஷோ சொல்வது போன்று ‘வார்த்தைகளால் சொல்ல முடியாத விடயத்தை வார்த்ததைகளில் சொல்லுதல்!’

வார்ததைகள் பலவீனமானைவை.

இந்த விடயம் பற்றிப் பேசுவதுதான், உலகில் மிகவும் கஸ்டமான வார்த்தைப் பிரயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஞானதாஸ்
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: