Posted by: மீராபாரதி | October 21, 2013

இலண்டனில் “மரணம் இழப்பு மலர்தல்” நூல் வெளியீடு – பாலன் தோழர்

இன்று (20.10.13) லண்டனில் ஈஸ்ட்காமில் மீராபாரதியின் “மரணம் இழப்பு மலர்தல்” நூல் வெளியீடும் கலந்துரையாடலும் நடைபெற்றது.

death in London 002பாலசிங்கம் சுகுமார் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. யமுனா ராஜேந்திரன் “மரணம் இன அழிப்பும் அரசியலும்” என்னும் தலைப்பில் உரையாற்றினார். அடுத்து மு. நித்தியானந்தன் “மரணம் அஞ்சலியும் அரசியலும்” என்னும் தலைப்பில் உரையாற்றினார். அதையடுத்து மாதவி சிவலீலன் “மரணம் இழப்பும் பாதிப்புகளும் பெண்களும் குழந்தைகளும்” என்னும் தலைப்பில் உரையாற்றினார். இறுதியாக நூல் ஆசிரியர் மீராபாரதி நன்றி தெரிவித்து உரையாற்றினார்.

மீராபாரதி உரையாற்றும்போது தனது தந்தையின் இழப்பும் அதனை தான் ஆற்றுப்படுத்த தான் எதிர் கொண்ட அனுபவங்களுமே இந்த நூலை எழுத தூண்டியது என்றார். எனவே இங்கு அவரின் தந்தை பற்றி சில வரிகள் கூறவேண்டும் என விரும்புகிறேன். அவரது தந்தையார் “கரவை கந்தாமி” என அறியப்பட்டவர். அவர் தோழர் சண்முகதாசனின் கம்யுனிஸ்ட் கட்சியில் முன்னனி தோழராக செயற்பட்டவர். மாக்சிய லெனிய மாவோசிச சிந்தனையில் புதிய ஜனநாயகப் புரட்சிக்காக தன்னை அர்ப்பணித்து முழுநேர ஊழியராக செயற்பட்டவர். அவர் எனது ஊரைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரைப் பற்றி நான் நன்கு அறிந்திருந்தாலும்கூட அவரை நான் ஒருபோதும் ஊரில் காணவில்லை. 1988ல் கொழும்பில் தோழர் சண்முகதாசனின் இல்லத்திலே அவரைக் கண்டிருக்கிறேன். தோழர் சண்முகதாசனை நான் வீடீயோ பேட்டி கண்டபோது அவரும் அங்கு நின்றிருந்தார். மிகவும் ஆர்வமுடன் அவற்றை பார்த்துக்கொண்டு நின்றார். இறுதியாக தனக்கும் அதில் ஒரு பிரதி தாருங்கள் என்று கேட்டார்.death in London 017

தோழர் கரவைக் கந்தசாமி தனது இறுதிக்காலங்களில் புளட் இயக்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டுக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணம் உண்மையில் புரட்சிகர தோழர்கள் மத்தியில் அதிர்சியையும் கடும் துயரத்தையும் கொடுத்திருந்தது.

அதேவேளை மகனாக அவரது அந்த கொடிய மரணத்தை மீராபாரதி எதிர்கொண்ட அனுபவங்களை நூலாக்கியுள்ளார். அது மட்டுமல்ல மீராபாரதி புளட் இயக்கத்தில் செயற்பட்டதாலும் மேலும் யுத்த பூமியில் வாழ்ந்ததாலும் அவர் பல மரணங்களை தன் வாழ்நாளில் சந்திருக்கிறார். அத்தோடு 2009ல் தமிழ் மக்களுக்கு எற்

Balan Tholar's photo.

பட்ட பாரிய இழப்புகளும் அவரை இந்த நூலை எழுத தூண்டியிருக்கிறது.

பாலசிங்கம் சுகுமார் தனது தலைமையுரையின்போது சுனாமியில் தனது ஒரே மகள் மரணமடைந்தபோது தானும் மனைவியும் துயரம் தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆனால் தமது மகளின் நினைவுகள் தம்மை ஆற்றுப்படுத்தியதை தனது சொந்த அனுபவங்களினூடாக உரையாற்றினார். தனது மூதூர் கிராமம் பல மரணங்களை சந்தித்திருந்தாலும் அது வெளிச்சத்திற்கு வரவில்லை என்றும் இனிமேல் யாவும் பேசப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவர் தான் தனது மகள் நினைவாக பல பொதுத் தொண்டுகள் செய்வதையும் சுட்டிக்காட்டினார்.

Balan Tholar's photo.
யமுனா ராஜேந்திரன் தனது உரையின்போது கோவிந்தனின் “புதியதோர் உலகம்” நாவலுக்கு பின்னர் அதுபோன்று எந்த ஒரு மீள்பார்வை கொண்ட எழுத்தும் வரவில்லை என்றார். இயக்க அரசியலுக்கு அப்பால் முள்ளிவாய்க்கால் அவலம் குறித்த எழுத்துகள் வரவேண்டும் என்றும் அந்த வகையில் மீராபாரதியின் இந்த நூல் அதற்கு ஒரு முதற்படியாக இருக்கிறது என்றார்.

மு.நித்தியானந்தன் தனது உரையில் திலீபன் மரணம், ரஜனிதிரங்கமவின் மரணம் அவற்றின் அஞ்சலிகள் அதன் பின்னனியில் அமைந்த அரசியல்கள் குறித்து பேசினார். எல்லா காலம் சென்ற விரிவுரையாளர்களின் படங்களும் வைக்கப்பட்டிருக்கும்

Balan Tholar's photo.

யாழ் பல்கலைக்கழகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட மருத்துவபீட பேராசிரியர் ரஜனி திரங்கமவின் படம் இன்னும் வைக்கப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

கலந்துரையாடலின்போது கவுன்சிலர் போல் சத்தியநேசன் பல நல்ல கருத்துகளை கூறினார். குறிப்பாக லண்டனில் தமிழ்மக்கள் மரண நிகழ்வின் போது பல சிரமங்களை எதிர் கொள்வதையும் தான் அதற்கு உதவி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Balan Tholar's photo.
சபேஸ் சுகுனசபேசன் அவர்களும் கலந்து கொண்டு கலந்துரையாடலின்போது தனது கருத்துகளை தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்ல அவர் புகைப்படங்களும் எடுத்தார். அவர் அதை இங்கு முடியுமானால் பரிமாறினால் நல்லது.

Balan Tholar's photo.
death in London 015
death in London 014
death in London 005
மரணம்
ஒரு நிகழ்வு..
ஒவ்வொரு கணமும் நடைபெறுகின்றது..
நாம் எதிர் கொள்கிறோமோ? இல்லையோ?
நாம் அதை கவனிக்கிறோமோ? இல்லையோ?
அது நம்முடன் இருக்கிறது. வாழ்கின்றது.
நம் மூச்சைப்போல..

Balan Tholar's photo.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: