Posted by: மீராபாரதி | August 20, 2013

அ.யேசுராசா – குறிப்பேட்டிலிருந்து

யேசுராசா

ஏதிலி நண்பர்கள் குழு 2009 அல்லது 2010ம் ஆண்டு  சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்தார்கள். அதில் என்னை எழுத்தாளர் அ.யேசுராசா மற்றும் திசை பத்திரிகை தொடர்பான கருத்துக்களை முன்வைக்கும்படி கேட்டனர். அங்கு வாசித்த உரையின் திருத்திய வடிவம் இது.

 

நான் யேசுராசா அவர்களை இருவழிகளில் அறிந்திருந்தேன். முதலாவது ஈரோஸ் மாணவர் அமைப்புடன் வேலை செய்தபோது எனது நண்பர்கள் வேலு மற்றும் அன்பழகன் மூலம் அவரை அறிந்திருந்தேன். மேலும் ஆரம்ப இளம் எழுத்தாளனாக திசை பத்தரிகைவாயிலாகவும் அவரை இரண்டு மூன்று முறை சந்தித்திருக்கின்றேன். அதில் எனது இரண்டு கட்டுரைகளையும் வெளியீட்டிருந்தார். இப் பத்திரிகையிலையே எனது முதல் கட்டுரை வெளியானது. இப் பத்திரிகை ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை வெளிவரும். பரமேஸ்வரா சந்தியில் உள்ள கடையில் நின்று முதல் பத்திரிகை வாங்கி ஆரம்பத்திலிருந்து இறுதிவரை படித்தபின்பே அடுத்தவேளை. இவ்வாறு எதிர்காலங்கங்களில் இலங்கையில் வாசித்த பத்திரிகை சரிநிகர். கனடாவில் வாசித்தது வைகறை.

 

எனது நண்பர்கள் மூலம் யேசுராசா அவர்கள் தொடர்பாக அறிந்தது என்னவெனில் இவர் மிக முக்கியமான தமிழ் இலக்கிய திரைப்பட விமர்சகர். இவர் கவிஞராக கவிதைகள் எழுதியபோதும் தனது எழுத்தாற்றலை அதனுடன் மட்டுப்படுத்தியவரல்ல. அதற்கப்பாலும் திரைப்படம் மற்றும் நாடகங்கள் தொடர்பாகவும் எழுதியவர். பிற நாட்டு சிறந்த திரைப்படங்களை யாழ் திரைப்பட ஆர்வலர்களுக்கு அறிமுகப்படுத்தி கலந்துரையாடல்களை நடாத்தியிருக்கின்றார். இவர்கள் மூலமாகவே சத்தியஜித் ரே போன்ற திரைப்பட நெறியாளர்களை அறிந்து கொண்டேன். இதைவிட நவீன கலையுடனும் ஈடுபாடுகொண்டவராக இருந்துள்ளார். அன்று யாழ்ப்பாணத்தில் நவீன ஓவிய சிற்ப்பக் கலையில் முக்கியமானவராக கருதப்பட்ட மார்க் மாஸ்டருடனும் மற்றும் பலருடனும் குறிப்பாக இலண்டனில் வாழும் பத்மநாப ஐயருடனும் இணைந்து நவீன கலையை வளர்க்கும் நோக்கில் செயற்பட்டவர். இதன் விளைவாக மார்க் மாஸ்டரின் ஓவியங்களில் தொகுப்பொன்றை  “தேடலும் படைப்புலகமும்” என்ற அழகான முக்கியமான நூலை  பதமநாப ஐயர், க.சுகுமார் ஆகியோருடன் இணைந்து இவர் வெளியிட்டார். இவற்றைவிட இவரது தொடர்ச்சியான தேடலுக்கும் செயற்பாட்டிற்கும் ஆதாரமாக இருப்பது இவர் வெளியிட்ட அலை என்ற சஞ்சிகை. அதாவது அலை யேசுராசா என குறிப்பிடும் அளவிற்கு தமிழ் கலை இலக்கிய அரசியல் வாசகர் மட்டத்தில் முக்கியமானவரா இருக்கின்றார். ஆரம்பத்தில் அலை சஞ்சிகையை நான்கு நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்துள்ளார்கள். பின் ஒவ்வொருவராக விலக   25 – 35 இதழ்கள்வரை யேசுராசா அவர்கள் தனித்து வெளியிட்டுள்ளார்.

புலம் பெயர் நாடுகளில் நடைபெறும் ஈழம் வாழ் தமிழ் பேசும் மனிதர்களின் விருது விழாக்களில் பலருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இவரைப்போன்ற பலர் இந்த விருதுகளிலிருந்து புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர். இதற்கு காரணம் அரசியலா அல்லது சாதிய வகுப்பு கல்வி பாகுபாட அதனடிப்படையிலான புறக்கணிப்பா என்பது ஆராயப்படவேண்டிய ஒரு விடயமாகும். (இந்த இடத்தில் காலம் செல்வம் அவர்கள் இடைமறித்து தாம் பலமுறை கேட்டதாகவும் ஆனால் யேசுராசா அவர்கள் தனக்கு விருதுகள் ஒன்றும் வேண்டாம் எனவும் தனது நூல்களை விற்றுத் தந்தாலே போதும் எனக் கேட்கின்றார் எனக் கூறினார்).

 

இவர் இலங்கை தபால் அலுவலகத்தில் ;வேலை பார்த்தவர். பேராதனை தபாலகத்தில் வேலை செய்தபோது பல சிங்கள கலை இலக்கிய எழுத்தாளர்களை நண்பர்களாக கொண்டதுடன் அவர்களது படைப்புகள் தொடர்பாகவும் தமிழ் உலகுக்கு எழுதியும் அது தொடர்பான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளர்.  சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியவுடன் இளம் எழுத்தாளர்களை ஊக்கிவிக்கும் முகமாக சில சிறியளவிளான வெளியீடுகளை செய்துள்ளார். இவரது பொருளாதார ரீதியாக பலம் கொண்டவராக இல்லாதபோதும் தொடர்ந்தும் தனது தளத்தில் செயற்படுகின்றவராகவே இருக்கின்றார்.  அந்த அடிப்படையில் குறிப்பேட்டிலிருந்து என்ற இந்த நூல் அலை வெளீயிட்டின் 10 நுலாக 2007ம ஆண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கடந்த முப்பது ஆண்டுகால எழுதப்பட்ட 16 படைப்புகளை “குறிப்பேட்டிலிருந்து’ என்ற ஒரு நுலாக வெளிக்கொண்டுவந்திருக்கின்றார். மூன்றாவது மனிதன் சஞ்சிகையின் ஆசிரியர் ஏம்.பௌசார் அவர்கள் கண்ட நேர்காணல் ஒன்று   இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் அவரது கலை இலக்கிய பணி அது தொடர்பான விமர்சனங்கள் மற்றும் எதிர்நோக்கிய பிரச்சனைகளை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். ஆவர் தொடர்பான முக்கியமான ஒரு பதிவு இந்த நேர்காணல்.

மீராபாரதி – 2009ஃ2010

 

மீராபாரதி – 2009ஃ2010

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: