Posted by: மீராபாரதி | June 29, 2013

மனிதருக்கும் மிருகத்திற்குமான வேறுபாட்டை உணர்தல் – பயிற்சிப்பட்டறையின் வெளிப்பாடு….ஜெ.சுபா

puttalam and viki place 040விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஆதரவில்

பெண் தலைமை தாங்கும் குடும்பப் பெண்களுக்கு புத்தள மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நாள் பயிற்சிப்பட்டறை பற்றி குறிப்பு.

கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களும்
தலைமை தாங்கும் குடும்பப் பெண்களின் உடல் உள சமூக ரீதியான பாதிப்புக்களிலிருந்து மீளவும் சுதந்திரமாக தமது ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட பயிற்சிப்பட்டறை. இந்த நிகழ்வில் இருபத்தைந்து பெண்கள் பங்குபற்றினர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் தியானம் என்றால் என்ன? என்பது பற்றி அனைவரிடமும்  கேள்வி தொடுக்கப்பட்டது. இதன்போது ஒவ்வொருவரும் அவரவர் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். பங்குபற்றிய ஒவ்வொருவரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர். பின்பு தமது மனதில் தோன்றுவதை சித்திரமாக வரையும் படி கேட்கப்பட்டது. சிறுசிறு தயக்கங்களின் மத்தியிலும் அனைவரும் தமது எண்ணத்தில் தோன்றியதை அழகான சித்திரங்களாக வரைந்தனர். சிலர் தாம் வீட்டில் பொருளாதார தேவைகளிற்காக வளர்க்கின்ற பிராணிகளையும்  ( உ+ம் : ஆடு, மாடு, கோழி) போன்றவற்றையும் சிலர் தமது பிள்ளைகளையும் தாம் இழந்த கணவரையும் தமது ஓவியங்களில் வரைந்தனர். இவ்வாறு அவர்களது உள்ளத்தில் எழுந்தவற்றையும் தமது அடிமனங்களில் உள்ளவற்றையும் அழகான ஓவியங்களாக சித்தரித்தனர். இவ்வாறு வரைந்த பின் அப்படத்தை கையில் வைத்திக்கொண்டு சிறிது நேரம் தாம் வரைந்த படங்களை அவர்கள் உற்றுநோக்குவதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.puttalam and viki place 014

இதன் பின் அனைவரும் எழுந்து நின்று 15 நிமிட உடற்பயிற்சி செய்தனர். பங்குபற்றிய பெரும்பான்மையினர் நோன்பு இருந்தபோதும் எந்தவித சோம்பலின்றி மிகவும் உற்சாகமாக தமது பங்களிப்பை வழங்கினர். உதாரணமாக 60 வயது பாட்டி ஒருவரின் செயல்கள் அனைவரையும் வியக்க வைத்ததுடன் அனைவரது மனதையூம் கவர்ந்து சென்றார். உடற்பயிற்சியின் தொடர்ச்சியாக அவரவர் மனதிலுள்ள கோப தாபங்களை எப்படி வெளிக்காட்டுவது என்ற வகையில் ஒரு சிறிய பயிற்சியொன்று நடைபெற்றது. அதன்படி நமக்கு புரியாத மொழிகளில் அதாவது சீன ஜப்பான மொழிகளில் பங்குபற்றியவர்கள் அனைவரும் தமது கோவங்கள் தீரும்வரை ஒருவரையொருவர் புரியாத மொழியில் உரத்தக் கதைத்தனர்… கத்தினர். இது மிகவூம் சுவாரசியமானதாக இருந்தது. இது புதுமையானதாகவும் எங்கும் காண முடியாத ஒரு அனுபவத்தையும் தந்தது. இதைப் பங்குபற்றியவர்களிலும் கண்டு கொண்டோம். இந்தப் பயிற்சியிலும் பங்குபற்றியோர் எதுவித தயக்கங்களுமின்றி மிக விறுவிறுப்படன் கலந்து கொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

puttalam and viki place 028இதன் பின்பு ஒவ்வொருவரும் தமக்கு விருப்பமான மிருகமொன்றினை மனதில் கற்பனை செய்துகொண்டு அம் மிருகத்தினைப் போல நடித்துக் காட்டினர் . தொடர்ந்து அனைத்து மிருகங்களும் ஒன்று சேர்ந்து ஒரு சித்திரமொன்றை வரைந்தனர். அச்சித்திரத்தை வரைந்த போது மிருகங்களைப் போல கத்தி முட்டி மோதிக் கொண்டு  வரையும் படி வேண்டுகோள் விடப்பட்டது. ஐந்து நிமிடங்கள் மிகவூம் ஆக்ரோசமானதாக இருந்தது. மனிதர்கள் மிருகங்களாக மாறினால் எப்படியிருக்குமோ அதேபோல் தம்மைத் தாமே மாற்றிக்கொண்டனர். இந்த நிலையில் பங்குபற்றியவர்கள்  வரைந்த சித்திரத்தில் மரங்கள், இலைகள், காய்கனிகள் என்பன மிருகங்களுடன் தொடர்பு படுத்தப்பட்டிருந்தன.

ஒரு சிறிய இடைவேளைக்கு பின் பயிற்சி மீண்டும் ஆரம்பமாகியது. ஒரு மணித்தியால தியானம் நடைபெற்றது. அதில் அனைவரும் கண்களை மூடிய வண்ணம் கால்களை நன்றாக நிலத்தில் பதித்து நெஞ்சை நிமிர்த்தி மூச்சுக் காற்றை வெளியனுப்பியும் உட்ச் செலுத்தியும் பயிற்சி செய்தனர். பின்னர் இதுவரையிலும் நடைபெற்ற பயிற்சிகளின் அடிப்படையில் தற்போது அவர்களது நிலை எவ்வாறுள்ளது என்பதை அறிவதற்கு பயிற்சி நடந்த்து. இதற்கு தற்போது தங்களது மனதில் என்ன தோன்றுகிறதோ அதனை மீண்டுமொருமுறை சித்திரமாக வரையூம் படி கேட்கப்பட்டனர். இதன்போது ஆரம்பத்தில் வரைந்த சித்திரங்களை விட மிகவூம் வேறுபட்ட விதத்தில் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன. அதில் கணவனிடமிருந்து பிரிந்து வாழ்பவர்கள் கணவனோடு ஒன்று சேர்வது போன்ற சித்திரங்களும், முன்பு கஷ்டங்களை வரைந்தவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் சித்திரங்களாக வரைந்தனர். இதன்போது கரம்பை என்ற கிராமத்திலிருந்து வருகை தந்திருந்த தாய் முதல் வரைந்த சித்திரத்தில் தனது மூன்று பிள்ளைகளை மட்டும் குறிப்பிட்டிருந்தார். இரண்டாவது தடவை வரைந்த சித்திரத்தில் அவரின் மூன்று குழந்தைகளும் கிணற்றில் விழுந்தது போல் வரைந்திருந்தார். அவ்விரண்டு சித்திரங்களுக்கிடையிலான வித்தியாசத்தைக் கண்டு அத்தாயிடம் அதற்கான காரணம் கேட்கப்பட்டது. அதற்கு  அவர் இப்பயிற்சிக்கு வரும் போது தமது மூன்று குழந்தைகளையும் தனியாக வீட்டில் விட்டுவிட்டு வந்ததாகவும் தாம் எதையுமே யோசிக்கவில்லை எனக் கூறினார். ஆனால்  இப் பயிற்சியின் பின் மூலம் முழுமையாக தமது குழந்தைகளிடம் சென்ற போது தமது வீட்டின் அருகில் ஒரு கிணறு இருப்பதாகவூம்  எதுவித பாதுகாப்புமின்றி தாம் குழந்தைகளை விட்டுவிட்டு வந்த்தாகவும் கூறினார். இதனால் தமது எண்ணம் முழுதும் அக்குழந்தைகள் கிணற்றில் விழுந்து விடுவார்களோ என்பதிலையே இருந்த்து. இதையே தமது சித்திரத்தின் மூலம் வெளிப்படுத்தினார் எனக் கூறினார். இதனால் அந்தத் தாய் பயிற்சி முடிவடையும் முன்பு அப்பயிற்சியிலிருந்து செல்லும்படியும் குழந்தைகளை போய் பார்க்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதுபோல் சிலருக்கு தமது குழந்தைகள் கணவர் ஆகியோரின் எண்ணங்கள் வந்ததாகவும் கூறினர்.puttalam and viki place 036

இந்த பயிற்சி நடைபெற்ற நாள் நோன்பு காலம். ஆகவே வந்திருந்தவர்கள் தமது உடற் களைப்பு காரணமாகவும் போதிய நேரம் இல்லாத படியாலும் மீண்டும் ஒருமுறை இப்பயிற்சியை தங்களுக்கு வழங்கும்படி   கேட்டுக்கொண்டார்கள். இப் பயிற்சியைப் பற்றி அவர்களிடம்  கேட்ட போது இப்பயிற்சி மிகவும் வித்தியாசமான முறையில் இருந்த்தாகவும் தமது கஷ்ட துன்பங்களைத் தாம் மறந்து வாழ்க்கையில் சிறுகுழந்தைகள் போல் விளையாடி தமது மனதில் தோன்றும் எண்ணங்களை பயமின்றி வெளிப்படுத்தி மிகவூம் மகிழ்ச்சியாக இருந்த்தாகவும் கூறினார்கள்.

puttalam and viki place 030பெண் தலைமை தாங்கும் குடும்பப் பெண்களுக்கான ஒரு நாள் பயிற்சிப்பட்டறையில் பயனாளிகள் இறுதியில் வழங்கிய தமது கருத்துக்கள்

பரீதா உம்மா…
“… உடலாலும் உள்ளத்தாலும் ஆரோக்கியமானதொரு பயிற்சியாக இருந்தது.வீட்டில் பல்வேறு கஷ்டங்களுடன் இருந்த நான்  இப்பயிற்சியிக்குப் பிறகு ஒரளவு மனநிறைவை உணர்ந்தேன்”.

நஸ்லிஹா…
“இப்பயிற்சி முழுநாள் பயிற்சியாக அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனைய பெண்களுக்கும் இப் பயிற்சியை வழங்கினால் பயனள்ளதாக இருக்கும். நான் சுயதொழிலில் ஈடுபடுபவர். இப்பயிற்சியின் மூலம் எனக்கு  புத்துணர்ச்சி கிடைத்துள்ளது.”

ரஹ்மத் நிசா…
“… மனதிற்கு அமைதி கிடைத்தது”.

ரோஜியா…
“இப்பயிற்சியினுடாக சிரித்து விளையாடியதினால் தான் ஓரு பெண் என்பதையும் மறந்து சிறு குழந்தையைப் போல் சந்தோஷமாக இருந்தேன்.”puttalam and viki place 034

ராழியா…
“நான் வரைந்த மூன்று சித்திரங்கள் மூலம் எனது மனவெளிப்பாட்டினை உணர்ந்தேன்”.

கனீசா…
“வித்தியாசமான மொழிகளினாலும் முகபாவனையாலும் மூச்சு விடுதலில் வித்தியாசத்தை உணர்ந்தேன்.”

கசீனா உம்மா…
“நோன்பு காலத்தில் விழுதின் மூலம் மார்க்க சொற்பொழிவு கேட்கக் கிடைக்கும் என்று தான் வந்தேன்.  வீட்டுப் பிரச்சினையால்  கவலையுடன் இருந்த நான் கவலையெல்லாம் மறந்து சந்தோஷமாக இருக்கின்றேன்.  இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்த விழுதிற்கு நன்றி.”

பஸ்மினா…
“மனிதனுக்கும் விலங்கினத்திற்கும் உள்ள வேறுபாட்டை தான் சத்தத்தின் மூலமும் செயற்பாட்டின் மூலமும் உணர்ந்தேன்.”

நாபியா…
“விழுதின் ஏனைய பயிற்சியை விட இப்பயிற்சி  வேறுபட்ட ஒரு பயிற்சியாக அமைந்த்து.”

ஜாரினாஸ்…
“… ஒவ்வொரு விடயமும் அடுத்து என்னவாக அமையும் என்ற ஆர்வத்தினை ஏற்படுத்தியது. மேலும் மூச்சுப் பயிற்சியின் மூலம் மனிதனின் அவயவங்களின் செயற்பாட்டையும் தெரிந்து கொண்டேன்.”

puttalam and viki place 042நோனா உம்மா…
“பல நல்ல விடயங்களைக் கற்றுக் கொள்ளக் கூடியதாக அமைந்த்து. இந்நிகழ்ச்சியை முழு நாள் நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நான் பயம் வெட்கம் எதுவுமின்றி இந்நிகழ்சிசியில் கலந்து கொண்டேன்.”

இசியா உம்மா….
“உடலுக்கு ஆரோக்கியமான ஒரு பயிற்சியாக இருந்த்து. சித்திரங்களின் மூலம் மனதில் உள்ளவற்றைத் தெரிந்து கொண்டேன்.”

ஜெ.சுபா – ஆவணப்படுத்தல் உத்தியோகத்தர் – விழுது – புத்தளம் கிளை

25.07.2012puttalam and viki place 061

puttalam and viki place 060இதுபோன்ற ஒரு பயிற்சிப் பட்டறை வன்னி நெடுங்கேணியிலுள்ள கணவரை இழந்த பெண்களுக்கும் நடைபெற்றது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: