Posted by: மீராபாரதி | April 16, 2013

மரணம் – இழப்பு – மலர்தல் – அறிமுகம் 1

மரணம்  வளர்ச்சிக்கான ஒரு படிக்கல்

மே 18, 2009ம் ஆண்டு எல்லாம் நடந்து முடிந்து விட்டதாக செய்திகள் அறிவித்தன. இந்த ஆண்டு, இந்த நாள் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நாளாகும். ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்கா அரசு முன்னெடுத்த இனவழிப்பு போர் முடிவூற்றதாக கூறிய நாள். உலகில் நடந்த போர்களில் இதைவிட அதிகமான மனிதர்கள் இறந்திருக்காலாம். ஆனால் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் ஈழத்து மனிதர்கள் தொடர்ச்சியாக பல வருடங்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட நாட்களின் இறுதி நாள். பல மரணங்கள் நடைபெற்ற நாள். ஈழத் தமிழின அழிப்பு நடந்த நாள். பல இழப்புகளை சந்தித்த நாள். ஈழத் தமிழ் தேசம் முழுமையாக மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்ட நாள். ஈழத் தமிழர்களுக்கு இது ஒரு துக்க நாள்.

சிறு வயதிலிருந்து பல உறவூகளின் மரணத்தைப் பார்த்திருக்கின்றேன். கேட்டிருக்கின்றேன். அதற்காக அழுதிருக்கின்றேன். 1974ம் ஆண்டு இறந்த அப்பாவின் மாமா வித்துவான் கார்த்திகேசு அவர்கள்; அப்பாவை சந்;திப்;பதற்காக அட்டனுக்கு வந்திருந்தார். மீண்டும் யாழ் போகின்ற வழியில் இறந்து போனார். இதுவே நான் அறிந்த என் நினைவில் இருக்கின்ற முதல் மரணம். இதன்பின் அப்பப்பாவின் அக்காவின் (ஆத்தை) கணவர் சிற்றம்பலம் அவர்கள் 1979ம் ஆண்டு இறந்தார். இவர் மிகப் பெரிய உடம்பைக் கொண்ட திடகாத்திரமான மனிதர். குழந்தைகளுக்கு ஏதாவது வருத்தம் எனின் இவரைத் தேடி ஊரவர்கள் வருவார்கள். இவர் வீபூதியை உடலில் பூசி தனது கையால் தடவி விடுவார். இது வருத்ததை மாற்றுமோ இல்லையோ ஆனால் மிகவூம் சுகமாக இருக்கும். அந்த சுகத்தை சிறு வயதில் அனுபவித்திருக்கின்றேன். இவர் தானே சமைத்து பெரிய தட்டு ஒன்றில் நிறைய சோறும் பல கறிகளும் போட்டு சேர்த்து சாப்பிடுவார். எனக்கும் ஊட்டியிருக்கின்றார். அதன் சுவையூம் மனமும் தனித்துவமானது. இவரது மரணமே என்னைப் பாதித்த முதல் மரணம். அந்த சிறு வயதில் நான் மனித இழப்பை உணர்ந்து அழுத முதல் மரணம். ஆனால் நான் அறிந்த என் நினைவில் இருக்கின்ற இரண்டாவது மரணம் இது.

இதன் பின்பு பல மரணங்கள் தொடர்ச்சியாக வந்தன. அப்பாவின் தம்பி (சித்தப்பா)இ அப்பாவின் அம்மா (அப்பாச்சி)இ அப்பாவின் அப்பா (அப்பபப்பா) என மரணங்கள் வாழ்வில் தொடர்ந்தன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவத்தைத் தந்தன என்றால் மிகையல்ல. இவர்கள் ஒவ்வொருவரும் எனது குடும்ப உறவூகள். ஆகவே இந்த இழப்புகள் என்னைப் பாதித்தது ஆச்சரியமானதல்ல. சில உறவூகளது மரணங்கள் நாம் அறியாமலே நடந்தேறின. அப்பப்பாவின் அக்காவின் (ஆத்தை) மரணம். அப்பாச்சியின் மூன்று சகோதரிகளினதும் (பெரியம்மா வித்துவான் மாமி) இரு சகோதரர்களினதும் (கண்ணாடிக் கந்தப்பு வீரகத்தி) மரணங்கள் எப்;பொழுது எப்படி நடந்தன எனத் தெரியாது. ஆனால் வீரகத்தி அப்பாச்சி இறுதியாக முள்ளிவாய்க்காலில் இறந்ததாக அறிந்தேன். இதற்கு மாறாக உறவில்லாதவர்களின் பல மரணங்கள் என்னைப் பாதித்தது ஆச்சரியமானதுதான். ஏன் பாதித்தன?

ஒரு நாள் அப்பா விக்கி விக்கி அழுவதைக் கண்டேன். அப்பொழுது எனக்கு ஒன்பது வயதிருக்கும். அப்பா ஏன் அழுகின்றார் என அம்மாவிடம் கேட்டேன்… “அப்பாவின் அரசியல் தலைவர் மாவோ சீனாவில் இறந்துவிட்டாராம்…” என நாம் வாழ்ந்த அறையில் சுவரில் மாட்டப்பட்டிருந்தஇ பக்க வாட்டில் எடுக்கப்பட்டிருந்த தொப்பி போட்ட மாவோவின் சிலை வடிவானஇ ஒரே ஒரு படத்தைக் காட்டி அம்மா சொன்னார். பதில் புரிந்ததோ அல்லது திருப்பதியோ இல்லையோ தொடர்ந்தும் கேள்வி கேட்கவில்லை. சில வருடங்களின் பின்இ அப்பாவின் கண்களில் மீண்டும் கண்ணீர் துளிகள் விழுவதைக் கண்டேன். இப்பொழுது யாழ்ப்பாணத்தில் யாரோ பல்கலைக்கழக பேராசிரியர் கைலாசபதி இறந்துவிட்டாரம். அந்தக் கவலையில் அழுகின்றார் என்ற பதில் கிடைத்தது. இப்படி யாரோ குடும்ப உறவில்லாத ஒருவருக்காக, ஆனால் அரசியல்; மற்றும் புலமைசார் துhறைகளில் சிறந்து விளக்கிய காரணத்திற்காக, அப்பா அழுவது எனக்கு அந்த வயதில் புரியவில்லை. ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அதை நான் புரிவதற்கான காலம் விரைவில் வந்தது. 1983ம் ஆண்டு மலையகத்தில் அட்டனில் வாழ்ந்த காலம் அது. குட்டிமணி மற்றும் தங்கத்துரை தொடர்பாக பத்திரிகைகளில் வந்த செய்திகளைத் தொடர்ச்சியாக வாசித்திருந்தேன். தமிழ் மக்களின் விடுதலைக்காக சிறை சென்றதாக தமிழ் பத்திரிகைகள் எழுதியிருந்தன. இவர்களுக்கு துhக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது.

குட்டிமணி தனது இறுதி ஆசையாக தனது இறப்பின் பின் தனது கண்களை தமிழர் ஒருவருக்கு தானம் செய்யூம் படி கேட்டிருந்தார். இதன் காரணமாக இவர்கள் மீது அனுதாபமும் மரியாதையூம் ஏற்பட்டிருந்தது. ஆனால் 83ம் ஆண்டு வெலிக்கடைச் சிறையில் நடந்த திட்டமிட்ட படுகொலையில் இவரது கண்கள் பறிக்கப்பட்டன. இதை ரூபவாகினி செய்தியில் ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அன்றுதான் முதன் முதலாக உறவில்லாத ஒருவருக்காக நான் அழுதேன். ஈழத் தமிழ் தேசிய உணர்வூ என்னுள் வித்திட்ட நாளாக அது இருக்கலாம். அன்றுதான் அப்பா முன்பு உறவில்லாத யாருக்காகவோ அழுததற்கான காரணமும் புரிந்தது. அப்பா அன்று வடித்த கண்ணீரும் இன்று நான், நீங்கள் என அனைவரும் வடிக்கின்ற கண்ணீரும் நம் ஆழ் மனதிலிருக்கின்ற ஏதோ ஒன்றை நோக்கிய ஒருமைப்பாட்டின் வெளிப்பாடுகள் என்றால் மிகையல்ல. ஆனால் இந்த ஒருமைப்பாடுகள் பல்வேறு காரணங்களால் வேறுபாடுகளாக வெளிப்படுகின்றமை தவிர்க்க முடியாதது. புரிந்து கொள்ளப்படவேண்டி ஒன்று.

இவ்வாறு சிறுவயதிலிருந்து மரணங்களை எதிர்கொள்கின்ற அனுபவம் தொடர்ந்தது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது நாம் படித்த வகுப்பிலிருந்த சக மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். இந்தச் சிறு வயதிலும் தற்கொலை செய்வார்களா என இப்பொழுதும் எனக்கு ஆச்சரியமே. ஆனால் அன்று அது நடந்தது. நாம் பார்க்கவூம் சென்றிருந்தோம். 1983ம் ஆண்டு இலங்கை பூராவூம் பல கொலைகள் நடந்தன. பல மரணங்கள். இழப்புகள். அட்டனிலுள்ள முதலாளி ஒருவரும் கொல்லப்பட்டார். இவர் அட்டனிலிருந்த மூன்று திரையரங்குகளில் லிபர்ட்டி என அழைக்கப்படும் ஒன்றின் உரிமையாளர். இவற்றைவிட தெய்வம் தந்த வீடு மற்றும் இரத்தத்தின் இரத்தமே போன்ற திரைப்படங்கைளை இலங்கையில் தயாரித்திருந்தார். இவர் மீதான கொலை இவர் தமிழராக இருந்ததுடன்; அந்த நகரில் முக்கியமான பணக்காரராக இருந்ததும் ஒரு காரணமாகும். இந்தக் காலங்களில், இப்படியூம் கொலை செய்வார்களா என நம்பமுடியாதளவிற்கு, சிங்கள இனவாதிகள் பல கொடுரமான முறைகளில் தமிழர்களை கொலை செய்தார்கள் என அறியக் கிடைத்தது. இந்த செய்திகள் குழந்தைகளான எங்களிடம் அதிர்ச்சியையூம் பயத்தையூம் உருவாக்கி இருந்தன.

இதன் பின் நாம் யாழ்ப்பாணத்திற்கு அகதியாகச் சென்றறௌம். அங்கு மரணம் பல்வேறு புதிய அனுபவங்களைத் தந்தது. முன்னால் இலங்கை இராணுவத்தில் பணிபுரிந்த தமிழர் ஒருவர் கொழும்பிலிருந்து அகதியாக வந்து நம்முடன் குருநகர் அகதிகள் முகாமில் தங்கியிருந்தார். அப்பொழுது நாம் ஓட்டோ கிராப் வைத்திருந்தோம். இவரது அழகான கையெழுத்திற்காக முகாமிலிருந்து அனைவரும் இவரிடம் தான் முதல் கையெழுத்தை வாங்கினார்கள். ஆனால் ஒருநாள் இவர் உளவாளி என அடையாளங் காணப்பட்டு அப்பொழுது இருந்த பல இயக்கங்களில் ஒன்றால் சுட்டுக் கொல்லப்பட்டார். நான் இதை அறிந்தபோதும் சென்று பார்க்கவில்லை. இதன்பின் ஒவ்வொரு நாளும் நாவற்குழியிலிருந்து யாழ் நோக்கி பாடசாலைக்கு சைக்கிளில் வருவோம். அப்பொழுது சுடப்பட்ட பல மனிதர்கள் மின் கம்பங்களில் கட்டப்பட்டுஇ வயிறு பிதுங்க, கண் விழிகள் தொங்க, தலை கவிழ்ந்து இருப்பதை பல நாட்கள் காலைக் காட்சிகளாகக் காண்போம்;. இவர்களது கழுத்தில் துரோகிகள் அல்லது உளவாளிகள் அல்லது சமூக விரோதிகள் என்ற செய்தி தொங்கவிடப்பட்டிருக்கும். இவர்களை 32 இயக்கங்களில் ஒரு இயக்கம் ஏதாவது ஒரு காரணத்திற்காக தண்டனை கொடுப்பதற்காக இரவூ சுட்டு இவ்வாறு கட்டியிருப்பார்கள். இதன் பின் மன்னாரில் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்ட 10க்கு மேற்பட்ட இராணுவத்தினரின் உடல்களை நல்லுரின் பின்னால் காட்சிக்கு வைத்திருந்தார்கள். இந்த உடல்கள் இராட்ச உடம்புகளாக காட்சியளித்தன. இதிலிருந்து வந்த மணம் இன்று நினைத்தாலும் வயிற்றைப் பிரட்டுவதாக இருக்கின்றது.

இந்திரா காந்தி அவர்கள் சீக்கிய மனிததொருவரால் சுட்டு கொல்லப்பட்டு இறந்தபோது யாழ் நகரமே சோகமயமாக காட்டியளித்தது. மனதைப் பிசையூம் சோக இசை சுனாமியைப் போல பெருக்கெடுத்து நகரம் எங்கும் ஓடியது. இது யாழ் சென்ற பின் நாம் கண்ட முதலாவது மாபெரும் சோக நிகழ்வூ. அன்று பெரும்பாலான ஈழத்துத் தமிழர்கள் அவரது மரணத்;திற்காக துக்கம் கொண்டாடினார். தங்களின் ஒருவர் இறந்தாக உணர்ந்தார்கள். அந்தளவிற்கு அவரை நம்பியிருந்தார்கள் என்றால் மிகையல்ல. அல்லது இயக்கங்களாலும் கட்சிகளாலும் இவ்வாறான உணர்வூ மக்களுக்குள் கட்டமைக்கப்பட்டதா என இன்று மனம் சந்தேகிக்கின்றது. ஏனெனில் இதற்கு சில காலத்திற்கு முதல் தான் பஞ்சாப் விடுதலைக்காகப் போராடிய இயக்கத்தை மிக மோசனமாக அடக்கி அழித்திருந்தார் அவர். அவ்வாறான ஒருவரை தம் மீதான சிறிலங்கா அரசின் அடக்கு ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிய இயக்கங்கள் மற்றும் தமிழ் கட்சிகள் ஈழத் தமிழர்கள் விடுதலை பெற உதவூவார் என நம்பியது ஒரு முரண்நகைதான்.

இதுபோல் இரண்டாவது சோக நிகழ்வூ ஒன்று நடந்தது. மேற்குறிப்பிட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டும் பிடிபட்டும் காட்சிக்கு வைக்க காரணமான நிகழ்வில் புலிகள் இயக்கத்தின் மன்னார் பொறுப்பாளர் விக்டர் இறந்ததற்கும் இவ்வாறான இசை நகரம் எங்கும் ஓலிபரப்பப்பட்டது. இதன்பின் இவ்வாறான மரணங்கள் தொடர்வதும் சோக இசை ஒலிபரப்புவதும் அதைக் கேட்பதும் தொடர் நிகழ்வூகளாகின. சிவாஜி, எம்.ஜி.ஆர்., கமல், ரஜனி… நடிகர்களின் திரைப்பட சுவரொட்டிகளை தாங்கிய யாழ் நகர சுவர்கள் இதன்பின் பிரமாண்டமான மரண அஞ்சலிகள் மற்றும் வீர வணக்க சுவரொட்டிகளை தாங்கின. நாமும் இவற்றுக்குப் பழக்கபட ஆரம்பித்தோம். ஆனால் இந்த சோக இசை இப்பொழுது கேட்டாலும் மனதை என்னவோ செய்யூம். ஒன்று விரக்தியை உருவாக்கி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அல்லது போராடத் துண்டும்.

ஒரு புறம் சிறிலங்கா இராணுவத்தினால் குழந்தைகளிலிருந்து முதியவர்கள் வரையா நாளுக்கு நாள் சுடப்பட்டு, செல்லடிப்பட்டு, குண்டுகள் போடப்பட்டு, கத்திகளால் வெட்டப்பட்டு, காயப்பட்;;டார்கள். கொல்லப்பட்டார்கள். இவ்வாறான குழந்தைகள், பெண்கள், ஆண்கள் ஆகியோரின் படங்கள் ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளில் வந்தன. கல்வி கற்ற பாடசாலைகள், கும்பிடுகின்ற கோயில்கள், ஆலயங்கள், பஸ் தரிப்பிடங்கள், சந்தைகள் என எல்லா இடங்களிலும் ஆரம்பத்தில் இராணவம் வந்து நேரடியாக சுட்டது. வரமுடியாத காலங்களில் இவற்றின் மீது செல்களையூம் குண்டுகளையூம் ஏவினார்கள். இவை விழுந்து வெடித்து மாணவர்களும் பக்தர்களும் பயணிகளும் பொதுசனங்களும் நாள் தொரும் இறந்தார்கள். பல்கலைக்கழங்களுக்குள் புகுந்து பட்டதாரிகளை சுட்டார்கள். படகுகளில் பயணம் செய்த ஏழைப் பொதுமக்கள்; படுகொலை செய்யப்பட்டார்கள். வயல்களில் வேலை செய்தவர்கள் கொல்லப்பட்டார்கள். பஸ்களில் பயணம் செய்தவர்கள் கொல்லப்பட்டார்கள்.

மறுபுறம் இயக்கங்கள் இராணுவத்திற்கு எதிராக போராடிய அதேவேளை தமக்குள்ளும் தமக்கிடையிலும் சுடுபட்டு, அடிபட்டு, ஒருவரை ஒருவர் உயிரோடு எரித்துக் கொன்றார்கள். தாமும் இறந்தார்கள். இவர்களும் தமதும் மற்றும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த பல போராளிகளைக் கொத்துக் கொத்தாக கொன்றார்கள். முஸ்;லிம்களின் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்ட சிறுவர்கள் முதல் முதியவர்கள் என அனைவரையூம் கொன்றார்கள். இதற்கு எதிர்வினையாக முஸ்லிம்களும் தமிழர்களைக் கொன்றார்கள். இதைவிட சிறிலங்கா அரசுக்கும் தேசத்திற்கு எதிரான தற்கொலைக் தாக்குதல்களால் இலங்கை நாடு அதிர்ந்தது. சிங்களப் பொது மக்கள் மீது இந்த தற்கொலைத் தாக்குதல்கள் நடந்தன. இப்படியான நிகழ்வூகளால் சிதைந்த மனித உடல்களின் தசைகளும் இரத்தமும்; இலங்கையின் பெரும்பாலான குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள ஊர் நகரமெல்லாம் பரவிக் கிடந்தன.

இவற்றுக்கு மேலாக இந்திய இராணுவம் வந்தது. இவர்களும் தாமும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என நிறுபிக்க ஈவிரக்கமின்றி மனிதர்களை அடித்தே கொன்றார்கள். இறந்த மனித உடல்களை தமக்குப் பாதுகாப்பாக்கி அரண்களாக்கி பல மனிதர்களைக் கொன்றார்கள். இவர்களிடம் நாவற்குழி சந்தியில் தனித்து அகப்பட்ட நாம், அப்பா, அம்மா, இரண்டு தங்கைகள் மற்றும் நான் அதிர்ஸ்டவசமாக தப்பினோம். மனிதம் வாழ்கின்றது என்ற நம்பிக்கையைத் தந்த கணங்கள்.

இப்படி பல மரணங்கள், படுகொலைகள் நம் முன்னே நாள்தோறும் நடந்தன. தொடர்ந்தன. இவை நம் வாழ்வின் ஒரு பகுதியாகின. எங்கள் மனமும் இறுக்கமடைந்து வந்தன. ஆனாலும் வாழ்ந்தோம். வாழ்க்கை இதை எல்லாவற்றiயூம் விட உயர்ந்ததாக இருந்தது. இருக்கின்றது. இதன் முக்கியத்துவம் நாம் மற்றவர்களைக் கொல்லும் பொழுது நமக்குப் புரிவதில்லை.. ஆனால் மற்றவர்கள் எங்களை கொல்ல வரும்பொழுது உணருவோம். ஆனால் அப்பொழுது நம்மைக் காப்பாற்ற காலம் கடந்திருக்கும்.

மேற்குறிப்பிட்டதை விட தனிப்பட்ட சில மரணங்கள் கவலையை ஏற்படுத்தின. நாவற்குழியில் இருந்தபோது மணிவண்ணனுடன் ஒன்றாக உயரந்தரம் படித்தேன். என்னைக் கனடா வரும் படியூம் தான் உதவி செய்வதாகவூம் அப்பொழுதே கூறியிருந்தார். ஆனால் நான் பத்து வருடங்களின் பின் கனடா வந்தபோது அவர் இருக்கவில்லை. கார் விபத்தொன்றில் இறந்துபோயிருந்தார். எனக்கு பெண் நண்பர்கள் மிக மிகக் குறைவூ. ஆனால் உயர்தர பரிட்சை எடுத்து விட்டு அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக அப்பொழுது மிஞ்சியிருந்த இரண்டு இயக்கங்களில் ஒன்றைத் தெரிவூ செய்து சேர்ந்தேன். அப்பொழுது அந்தப் பெண் அறிமுகமானார். இவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். ஊர்காவற்படையால் வன்புணர்வூக்கு உள்ளாக்கப்பட்டவர் என மற்றவர்கள் கூறியிருந்தார்கள்;. ஆனால் அதன் பின்பும் நம்பிக்கையூடன் வாழ்ந்தார். எனது விட்டுக்கு நான் அழைத்து வந்த முதல் பெண் இவர்தான். எனக்கு காதல் உறவூ அப்பொழுது யாருடனும் இல்லாதபோதும், காமம் பொங்கி எழுகின்ற வயதானபோதும் எமக்குள் தோழமை உணர்வூ மட்டுமே இருந்தது. வேறு எண்ணங்கள் எனக்கு இருக்கவில்லை. அப்படி இருந்ததை இப்பொழுது நினைத்தாலும் அதிசயமாகவூம் ஆச்சரியமாகவூம்தான் இருக்கின்றது. ஆனால் அது உண்மை. நான் கணிதம் படித்ததும் படிப்பிப்பதும் அவருக்குப் பெருமையாக இருந்தது. ஏனெனில் அவருக்கு கணிதம் ஓடாது. ஆனால் அவர் எனக்கு அரசியல் பொருள் முதல்வாதம்இ வரலாற்றுப் பொருள்முதல் வாதம் என்பவற்றின் அடிப்படைகளை எளிமையாக விளக்கினார். ஒரு நாள் இந்தப் பெண் கவிதை ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இச் செய்தி கேட்டு ஒரு கணம் ஆடிப்போனேன்.

யாழ் பல்கலைக்கழம் சென்ற போதுஇ அங்கு செல்வியூம் சிவரமணியூம் அறிமுகமானார்கள். நாம் ராக்கிங் எதிர்ப்புக் குழு மற்றும் நாடகம்இ கல்வி வட்டம் போன்ற பல செயற்பாடுகளில்; பல்கலைக்கழத்திற்குள் இணைந்து செயற்பட்டோம். ஒரு நாள் சமூக காரணங்களுக்காக சிவரமணி தனது கவிதைகளுடன் தற்கொலை செய்து கொண்டார். இன்மொரு நாள் தனிப்பட்ட அலுவலாக வவூனியா பூந்தோட்டத்திற்;கு சென்றபோது ஒழுங்கை ஒன்றில் பெண் ஒருவர் சிரித்துக் கொண்டு நிற்பதை தற்செயலாக கண்டேன். செல்வி சிரித்துக்கொண்டு நின்றார். அந்த சிரிப்பு இப்பொழுதும் என் மனதில்; அப்படியே இருக்கின்றது. சில மாதங்களின்; பின் இவருக்கு இயக்கம் தண்டனை கொடுத்துக் கொன்றதாக அறிந்தேன். இந்த தண்டனைக்கான காரணமும் வெளியே தெரியாதவாறு 2009ம் ஆண்டு மேயூடன் அழிந்துபோனது. யாழ் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்;துக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்ட ராஜனி திரணகமவினது மரணமும் குறிப்பிட்டதக்கது.

புலிகளின் நாவற்குழி பொறுப்பாளராக இருந்து இந்திய இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட அருள் மற்றும் இறுதிப் போரில் கொல்லப்பட்ட நம்முடன் விளையாடித் திரிந்த போராளி சுதன்இ கந்தன் கருனையில் கொலை செய்யப்பட்ட மாலையகத்தைச் சேர்ந்த போராளி பெஞ்சமின் ஆகியோரையூம் இங்கு நினைவூ கூறவேண்டும். இதன்பின் கொழும்பு பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றபோது சந்தித்த நண்பர் விஜி. இவர் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே இவரது தாயூம் தந்தையூம் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர். இதிலிருந்து இவர் வெளிவர ஆறுதல் கடிதம் எழுதியிருந்தேன். நெகிழ்ந்து போனதாக குறிப்பிட்டார். ஆனால் விஜி திருணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாகியபின் மூளையில் புற்றுநோய் வந்து திடிரென இறந்துபோனார்;. நாட்டில் இருக்கப் பயந்து புலம்பெயருந்து ஜெர்மனியில் வாழ்ந்து கொண்டிருந்து வீரகத்தி அப்பாச்சியின் பேரன் ஒருவர் பாடசாலை செல்லும் வழியில் புகையிரம் அடித்து இறந்தார்.

மேற்குறிப்பிட்ட எல்லா மரணங்களையூம் விழுங்கித் தின்றது 2008ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வைகாசி 18ம் திகதி வரை இலங்கையின் வடபகுதியில் நடைபெற்ற ஈழத் தமிழர்களின் மீதான இன அழிப்பு நடவடிக்கை. இதுபோன்ற இனவழிப்பு நடவடிக்கை ஒன்று கிழக்கில் நடைபெற்றதாகவூம் ஆனால் அதற்கு இந்தளவூ முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கவில்லை என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. என்ன காரணம்? இவ்வளவூ இழப்புகளின் பின்பும் மரணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இறுதியாக புலம் பெயர்ந்த நாடுகளிலும் இன்றுவரை தொடரும் பல படுகொலைகள். சில மரணங்கள் அமைதியானவை. சில இன்னும் ஏன் மரணிக்கவில்லை எனவூம் காத்திருக்க வைத்தவையூம் உண்டு. சிலர் உறவூகளின் உதவியின்றி அநாதைகளாக வயோதிபர் மடங்களில் இறந்ததும் உண்டு. இப்படி எத்தனை மரணங்கள். இவற்றை எதிர்கொண்ட அனுபவங்கள் சவால்கள் எங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. மிகச் சிலரே பதிவூ செய்கின்றௌம். சிலரே சக மனிதர்களுடன் உரையாடுகின்றௌம். ஆனால் பலர் தமக்குள் அடக்கி வைத்துக்கொண்டு அமைதியாக இருப்பதுபோல் வாழ்;கின்றனர். அதேவேளை இவர்களது மனங்கள் எரிமலையாக குமுறிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு தமக்குள் புளுங்கிக் கொண்டிருப்பது நீண்ட காலத்தில் இவர்களுக்கும் இவர்களது எதிர்கால சந்ததியினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. ஆகவே இவர்களுக்கு உள மன நல சமூக சேவையாளர்களின் உதவியூம் வழிகாட்டலும் கிடைக்குமாயின்இ இவர்களுக்கு ஏற்பட்ட இந்த இழப்புகளையூம் அதனால் உருவான வலிகளையூம் துயரங்களையூம்இ தம் வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கும்; பயன்படுத்தலாம்.

 ஈழத்து தமிழ் சமூகம் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வன்முறைகளையூம் போரையூம் சந்தித்து வந்திருக்கின்றது. இதனால் பல மரணங்களையூம் இழப்புகளையூம் சந்தித்திருக்கின்றது. இறுதியாக தன் இனம் அழிக்கப்பட்டதை சாட்சியாக இருந்து பார்த்துள்ளது. இந்த அனுபவங்களிலிருந்தும் பாதிப்புகளிலிருந்தும் உடனடியாக மீள்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆனாலும் அதற்கான முயற்சிகள் இப்பொழுதே மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறான முயற்சிகள் மூலம் சிறிய உதவிகள் பங்களிப்புகளையாகவது நாம் செய்யலாம். இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே “மரணம் இழப்பு மலர்தல்” நுhல் வெளியீடப்படுகின்றது.

இறுதியாக மரணம்இ இழப்புஇ மலர்தல் தொடர்பாக எழுதுவதற்கு ஓசோவின் கருத்துக்கள் தந்த ஊக்கம் முக்கியமானது. இவர் மரணத்தை எவ்வாறு எதிர்கொள்வதுஇ அதை எவ்வாறு ஆழமாக அறிவதுஇ தியானம் செய்வதனுடாக விழிப்பு நிலையை வளர்ப்பதனுடாகவூம் பிரக்ஞையான செயற்பாடுகள் மூலமாகவூம் சுயஅனுபவத்தில் புரிவதுஇ மற்றும் குழந்தைகளுக்கான கல்வித் திட்டத்தில் இதுவூம் ஒரு பாடத்திட்டமாக இருக்கவேண்டும் என பலவற்றுக்கு வழிகாட்டியூள்;ளார். இவ்வாறு பல்வேறு தளங்களில் வழிகாட்டியவர் ஓசோ. இவரை நான் அறிந்திராவிட்டால் இந்த நுhல் வெளிவந்திருக்காது என்றே உணர்கின்றேன். நாம் மேற்குல சிந்தனைகளாலும் அதன் கல்வித் திட்டங்களாலும் ஒவ்வொன்றையூம் பிரித்துப் பிரித்து துண்டு துண்டாக அறிவதற்கும் ஆராய்வதற்கும் பயிற்றப்பட்டவர்கள். பழக்கப்பட்டவர்கள். ஆனால் கிழக்கின் சிந்தனையோ அனைத்தையூம் முழுமையாக பார்ப்பதற்கு வழிநடாத்துவதாகும். இந்தப் பார்வையை இன்றைய தலைமுறையூம் சமூக மாற்றத்திற்காக செயற்படுகின்றவர்களும் புரிந்துகொள்ள வேண்டியது வரலாற்றுக் கடமை என்றே நினைக்கின்றேன். வாழ்வூம் மரணமும் அவ்வாறு பார்க்கப்படவேண்டிய ஒன்றே. மேற்குக்கு மரணம் முடிவூற்ற ஒரு பயணம். கிழக்குக்கு மரணம் மனிதரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான ஒரு படிக்கல்.

மீராபாரதி
18.04.2013

Advertisements

Responses

  1. //வாழ்க்கை இதை எல்லாவற்றiயூம் விட உயர்ந்ததாக இருந்தது. இருக்கின்றது. இதன் முக்கியத்துவம் நாம் மற்றவர்களைக் கொல்லும் பொழுது நமக்குப் புரிவதில்லை.. ஆனால் மற்றவர்கள் எங்களை கொல்ல வரும்பொழுது உணருவோம்//.

    நிதர்சனம் 😦

    எனக்குத் தெரிந்து பக்கச்சார்பற்ற ஒரு பதிவு இது. மிக இறுக்கமானது, வலிமையானது.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: