Posted by: மீராபாரதி | December 12, 2012

பிரக்ஞை ஓர் அறிமுகம் – டிசே தமிழன்

பிரக்ஞை ஓர் அறிமுகம் – டிசே தமிழன்

meeraa cover......jpg2ndகனடாவிலிருக்கும் மீராபாரதி ‘பிரக்ஞை: ஓர் அறிமுகம்’ என்கின்ற கட்டுரைகளின் தொகுப்பை வெளியிட்டிருக்கின்றார். சமூக மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரும் தத்தம் தனிமனித வாழ்விலிருந்தே அனைத்தையும் தொடங்கவேண்டும் என்கின்ற அடிப்படையில் இந்நூலில் கட்டுரைகள் பல எழுதப்பட்டிருக்கின்றன. ‘பிரக்ஞை’யை எப்படி மேற்குலகில் ஆய்வாளர்கள் பார்கின்றார்கள் என்பதை பல்வேறுபட்ட ஆளுமைகளின் கட்டுரைகளைத் தொகுத்து தனது கருத்துக்களை மீராபாரதி இந்நூலில் முன்வைக்கின்றார்.

ஒரு காலத்தில் தீவிர அரசியலில் ஈழத்திலும் புலம்-பெயர்தேசத்திலிருந்து முழுமையாக இயங்கி, எமது அரசியலில் தளங்களில் எங்கோ தவறிருக்கின்றதென்பதை உணர்ந்து பின்னர் அரசியலில் இருந்து விலகி, தன் சுயம் பற்றித் தொடங்கிய தேடலின் ஒருபகுதியாக இந்நூல் வெளிவந்திருக்கின்றது. அவர் முன்னுரையில் குறிப்-பிட்டிருக்கின்ற மாதிரி அடுத்த நூலாக கீழைத்தேய பார்வையில் பிரக்ஞை குறித்து எழுதுவதை நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன். அதுமட்டுமின்றி எவ்வாறு அவர் ஒருகாலத்தில் தீவிரமாக இயங்கிய கூட்டு அரசியலிலிருந்து விடுபட்டு இவ்வாறான தியானம், பிரக்ஞை போன்றவற்ற்குப் போனார் என்பதையும் இதன்மூலம் அவர் அடைந்த மற்றும் கற்றுக்கொள்கின்ற விடயங்கள் எவை என்பதையும் விரிவாக எழுதவேண்டும்.

அவர் கூறுகின்றபடி சமூக மாற்றமானது தனி மனித மாற்றத்திலிருந்து தொடங்காதவிடத்து எங்கோ ஓரிடத்தில் தேங்கித் தத்தளித்தபடியே இருக்கும் என்பது நாம் இன்றைய காலத்தில் பல்வேறு உதாரணங்களுடன் விளங்கிக்கொள்ள முடியும். எல்லாமே முடிவடைந்து ஒரு பாழ் சூழ்நிலையிலிருந்து எல்லாவற்றையும் மீண்டும் தொடங்க வேண்டியிருக்கின்ற ஈழத்தமிழ்ச் சமூகம், இவ்வாறான புதிய முயற்சிகளை எவ்வித முன்முடிவுகளும் இல்லாது கற்றுக்கொள்ளவோ தேடவோ செய்வது அவசியமாக இருக்கின்றது. புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ளவும் விவாதிக்கவும் பயணிக்கவும் விரும்பும் சமூகமாக நாம் மாறும்போது நாம் விரும்பிய மாற்றங்களையும் மாறுதலையும் என்றேனும் ஒருகாலத்தில் இழப்புக்களின்றி எளிதாய் அடையவும் கூடும்..

நன்றி… டிசே தமிழன் – அம்ருதா டிசம்பர் 2012

http://amruthamagazine.com/

Advertisements

Responses

  1. /சமூக மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரும் தத்தம் தனிமனித வாழ்விலிருந்தே அனைத்தையும் தொடங்கவேண்டும் /

    சரியாகச் சொன்னீர்கள்!


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: