Posted by: மீராபாரதி | August 18, 2012

பிரக்ஞை : ஓர் அறிமுகம் – நிகழ்வு ஒரு பார்வை – ஸ்ரீரஞ்சனி

பிரக்ஞை : ஓர் அறிமுகம் – நிகழ்வு ஒரு பார்வை – ஸ்ரீரஞ்சனி

 ‘பிரக்ஞை’ என்ற சொல்லின் மீதும் அந்த விடயத்தின் மீதும் எனக்கு ஒரு பிரியம் இருக்கிறது. அதனால் அது சம்பந்தமான ஒரு பயிற்சிப்பட்டறையும் புத்தக வெளியீடும் நிகழ்கிறது என்ற போது அதில் கலந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.  அந்த ஆர்வம் தந்த மன உந்துதல்,  யூன் மாதம் 9 ம் திகதி சனிக்கிழமை, நிகழ்ந்த மீரா பாரதியின் பிரக்ஞை ஒர் அறிமுகம் நூல் வெளியீட்டு நிகழ்வில் என்னையும் கலந்து கொள்ளவைத்தது.

‘பிரக்ஞை’ பயிற்சிப்பட்டறை, உணவை ருசிக்கும் அனுபவம் முதல், மிருகங்களாவும் சிறு பிள்ளைகளாகவும் மாறும் அனுபவம் வரை, வேறுபட்ட வித்தியாசமான அனுபவங்களை எமக்குத் தரும் பல செயற்பாடுகளைக் கொண்டிருந்தது. இது முதலாவது அனுபவமாக இருந்ததாலும் வேறு சில தடைகள் ஏற்பட்டதாலுமோ என்னவோ என்னால் அதனை முழுமையாக உணர முடியவில்லை. இருந்தாலும் எந்த விடயத்தையும் ஆறுதலாக அனுபவித்துச் செய்யும் போது உள்ள சுகத்தை உணரத் தேவையான அந்த இயல்பை வளர்த்துக்  கொள்ள எமக்கு பயிற்சி வேண்டும் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.

பிரக்ஞை- ஒர் அறிமுகம்’ என்ற மீரா பாரதியின் புத்தகத்தை வெவ்வேறு கோணங்களில் தர்சன், மகாலிங்கம், சுல்பிகா, மைதிலி, நாதன் ஆகிய ஐவரும் மெலிஞ்சி முத்தனின் தலைமையில் அறிமுகப்படுத்தினர். அந்த அறிமுகம் பிரக்ஞை என்றால் என்ன, அது எப்படித் தனி மனித வாழ்வையும் சமூகத்தையும் பாதிக்கிறது போன்ற பல நல்ல விடயங்களையும் கருத்துக்களையும் சபையினருக்குத் தெளிவு படுத்தியது. மேற்குலக உளவியல் ஆய்வுகள் மனப்பிறழ்வு கொண்டவர்களில் நடத்தப்பட்டதால் அவற்றிலிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் சாதாரண மனிதர்களுக்குப் பொருந்துமா என்ற விவாதம் உட்பட  வேறு சில ஆரோக்கியமான விவாதங்களும் நிகழ்வில் இடம் பெற்றன.

வெறுமனவே அறிமுக விழாக்களுக்குப் போய் மற்றவர்கள் பேசுவதைச் செவிமடுத்து விட்டு வருவதற்குப் பதிலாக சபையினர் பங்குதாரர்களாக மாறி அபிப்பிராயங்களை பரிமாறிக் கொள்ளும் நிகழ்வாக இது இருந்ததில் அனைவருக்கும் மிகுந்த திருப்தி ஏற்பட்டிருக்கும் என நான் கருதுகின்றேன். அது மட்டுமன்றி இரு நிகழ்வுகளையும் குறித்த நேரத்துக்குள்  நடாத்தி நேரத்துக்கு மதிப்புக் கொடுத்தமையும் என்னைக் கவர்ந்தது.

ஸ்ரீரஞ்சனி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: