Posted by: மீராபாரதி | April 9, 2012

கலாசாரமும் கருக்கலைப்பும் – நமது அறியாமையும்

கலாசாரமும் கருக்கலைப்பும் – நமது அறியாமையும்

இலங்கையின் ஈழத்தில் அல்லது வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காலசார சீரழிவு என பல செய்திகள் அண்மையில் இணையங்களில்  காணக்கிடைத்தன. பூங்காங்களில் ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக இருந்து கதைப்பதிலிருந்து கருக்கலைப்பு வரையும் மற்றும் பாலியல் தொழில் என்பனவும் கலாசரா சீரழிவு என முத்திரை குத்தப்பட்டு செய்திகளாக வெளிவருகின்றன.  இதற்கான குற்றச்சாட்டை பொதுவாக இளம் சமூகத்தை நோக்கி முன்வைக்கப்ட்டாலும் பெரும்பாலும் பெண்களை நோக்கியே குறிப்பாக சுட்டப்படுகின்றன. இதனால் இவர்கள் தமிழ் கலாசரத்தின் பலிக்கடாக்களா ஒருபுறமும், குற்றவாளிகளா மறுபுறமும் இருக்கின்றனர். ஆகவே முதலில் இவ்வாறான கருத்துக்கள் எதனடிப்படையில் முன்வைக்கப்படுகின்றன? யார் முன்வைக்கின்றார்கள்? ஏன் முன்வைக்கப்படுகின்றது? போன்ற கேள்விகள் ஆய்வுக்குரியன. இரண்டாவது இவ்வாறான நிகழ்வுகளை சமூகத்தில் நடைபெறும் எதிர்மறையான பிரச்சனையாக பார்க்கப்படுவதிலிருந்து  வேறு வழிகளில் பார்க்கலாமா என சிந்திப்பதும் முக்கியமானது. இது தொடர்பான இணையத்தளங்களில் தேடியபோது ஆரோக்கியமான கட்டுரைகள் இரண்டு மட்டுமே கிடைத்தன. ஒன்று தேவகௌரியின் “யாழ்ப்பாண கலாசாரம் சீரழிகின்றதா?” மற்றது தேவ அபிராவினது “ஈழத்து டொமினிக்ஸ்திரௌஸ்கான்களும் காலாசார சீர்கேடுகளும்”. மற்றவை எல்லாம் கல்தோன்றா மண்தோன்றா காலத்து முன்தோன்றிய  தமிழ் கலாசராத்தை பாதுகாப்பவையா மட்டுமே இருக்கின்றன. இந்த இணை செய்திகளின் இணைப்புகள் சில இறுதியில் உள்ளன.

 

 

தமிழ் பேசும் மனிதர்களுக்கு என ஒரு பொதுவான கலாசராம் உள்ளது. அதேநேரம், இந்தியத் தமிழர்களுக்கும் ஈழத்து தமிழர்களுக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் பிற நாடுகளில் இருக்கின்ற தமிழ் பேசுகின்ற சமூகங்களுக்கும் தாம் பேசுகின்ற மொழியால் ஒரு பொதுவான கலாசராம் இருந்தபோதும் அவற்றில் பல வேறுபாடுகள் இருக்கின்றன. இவை குறிப்பிட்ட நாடுகளுக்கும், தேசங்களுக்கும், பிரதேசங்களுக்கும் அவற்றின் வரலாற்றுக்கும் ஏற்ப வேறுபடுகின்றன. பொதுவாக இந்தக் கலாசாரமானது ஒருபுறம் ஆரோக்கியமான ஆரோக்கியமற்ற பண்புகளையும், தன்மைகளையும் கொண்டுள்ளன. மறுபுறம் இது ஆண், சாதி, வர்க்கம்,  என பல்வேறு கருத்தாதிக்கங்களை மையமாக கொண்டிருப்பதுடன் அவற்றின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை என்றால் மிகையல்ல. இந்தக் கலாசராங்களில் இருக்கின்ற நேர்மறையான ஆரோக்கியமான  பண்புகளும் பிரச்சனைக்குரியவை அல்ல. இக் கட்டுரைக்கு முக்கியமானவையுமல்ல. ஆனால் பிரச்சனைக்கும் விமர்சனத்திற்கும் உரியவை இதன் எதிர்மறையான ஆரோக்கியமற்ற பண்புகளே. இவற்றைக் களைந்து (அல்லது உதிர்ந்து (நன்றி சசீவன்) கொண்டு செல்வதே, தமிழ் சமூகங்கள் முன்னேறுவதற்கு அடிப்படையானதாகும். குறிப்பாக தமிழ் சமூகம் இன்று எதிர்நோக்கும் எதிர் பாலினர் நட்புக்கொள்ளுதல் (டேட்டிங் முறை), காதல், திருணமத்திற்கு முன்பான பாலியலுறவு, கர்ப்பம் தரித்தல், கருப்பசிதைவு அல்லது கருஅழிப்பு, பாலியல் தொழில் என்பன தமிழ் காலாசார சீரழிவாக முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இவை அனைத்தும் மேற்குறிப்பிட்ட அனைத்து தமிழ் சமூகங்களிலும் காலங்காலமாக மறைமுகமாகவேனும் இருந்து வந்திருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இது தொடர்பான இன்றைய அக்கறை என்பது, இவ்வாறான செயற்பாடுகளால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை, எவ்வாறு இல்லாமல் செய்வதும் என்பதும், அதற்காக ஆரோக்கியமான வழிகளை முன்னெடுப்பதற்கு வழிகாட்டுவதுமே. இவ்வாறான விடயங்கள் தொடர்பான கருத்துப்பரிமாற்றங்களும் மற்றும் புதிய கருத்தாதிக்கங்களும் அதற்கான தேவைகளும் உணரப்படுகின்றன.

 

மனிதர்களின் பாலியலுறவு மற்றும் பாலியல் தொழில் தொடர்பான நமது அறிவும் அறியாமையும் தொடர்பாக ஏற்கனவே இரு கட்டுரைகள் எழுதி எனது “பிரக்ஞை” வலைப்பதிவில் பதிவுவிட்டுள்னேன். இதேபோல் நட்புறவு கொள்ளுதல் (டேட்டிங் முறை) மற்றும் கருத்தடை சாதனங்கள், கருக் கலைப்பு தொடர்பான நமது அறிவும் அறியாமையும் தொடர்பாக விரிவான தனித்தனி கட்டுரைகள் எழுதவேண்டியது இன்றைய சுழலில் மிகவும் அவசியமானது.  அதற்கான ஒரு ஆரம்பமாக இக் கட்டுரையில் எனது பொதுவானதும் மேலோட்டமானதுமான கருத்துக்களை முன்வைக்கின்றேன்.

 

போருக்கு பிந்திய சமூகங்களில் மனிதர்கள் வாழ்வு என்பது எப்பொழுதும் கட்டுப்பாடுகளை மீறியதாகவே இருந்து வருகின்றது. போரில் வெற்றி பெற்ற சமூகத்தில் மட்டுமல்ல தோற்ற சமூகத்திலும் இதுவே இயல்பாக இருக்கின்றது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இதன் விளைவாக மனிதர்கள் பொதுவாக எந்தவிதமான கட்டுப்பாடுகளுமின்றி விரக்தியுடன் மனநிம்மதியற்று அலைகிறார்கள். ஈழத்து தமிழ் சமூகங்களைப் பொறுத்தவரை கடந்த மூப்பது ஆண்டுப் போரும் வன்முறையும் கலந்த வாழ்வு முறையானது பல்வேறுவகையான புதிய அனுபவங்களையும் பார்வைகளை பெற்றிருக்கின்றது. இதுவரை விடுதலைப் போராட்டம் என்ற குறிகோளுடன் இயங்கிய இந்த சமூகங்கள், இப்பொழுது வாழ்க்கை தொடர்பான நம்பிக்கையற்று கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன. இருப்பினும் மனித இயல்பூக்கங்களில் ஒன்றான காதலும் காமமும் இந்த வெற்றிடத்தை குறிப்பாக இளம் சமூகங்களில் இலகுவாக நிரப்பிவிடுகின்றன. ஆனால் இவற்றுக்கு எதிராக தமிழ் சமூகங்களில் காலம் காலமாக இருக்கின்ற எதிர்மறை பார்வையானது இவற்றை ஆரோக்கியமான வழிகளில் இயல்பாக இயங்குவதற்கு ஆதரவு கொடுக்காது தடுத்து நிறுத்தவே முனைகின்றன. ஏனெனில் இந்த சமூகங்கள் காதலுக்கும் காமத்திற்கும் எதிரானவர்களாகவே அதன் (குறைந்த்து அண்மைய) வரலாறுதோறும் இருந்து வந்திருக்கின்றன. ஆனால் இந்த சமூகங்களில் குழந்தைகள் நாள் தோறும் பிறக்கின்றமை ஒரு முரண்நகையே. இதன் விளைவுகள், இந்த சமூகங்கள் ஆரோக்கியமற்றவையாகவும்  அறியாமையிலும் தொடர்ந்தும் இருப்பதற்கே வழிசெய்கின்றன.

 

முதலாவது காதல் என்பது மனிதர்களிடமிருக்கின்ற சாதாரண இயல்பூக்கமான உணர்வு. ஆனால் தமிழ் சமூகமானது இலங்கியங்களிலும், திரைப்படங்களிலும், அரங்குகளிலும் காதலைப் போற்றுவதுடன் மட்டும் நின்றுவிடுகின்றன. அதேநேரம் நடைமுறை வாழ்வில் காதலுக்கு எதிரான போக்குகளே அதிகமாக இருக்கின்றன. இவ்வாறான எதிர்ப்புகளுக்கு காரணிகளாக பராம்பரியமாக இருப்பவை வர்க்க, சாதிய, மத பின்னணிகளே. அதாவது காதல் மூலம் மாறுபட்ட சாதிய, மத, வர்க்க பின்னணியிலுள்ளவர்க்ள் இணைந்து விடுவதாற்கான சாத்தியங்கள் அதிகமானது. இதனைத் தடுத்து நிறுத்துவதற்காகவே நடைமுறை வாழ்வில் காதல் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத சமூகங்களான இருக்கின்றன. இதனால்தான் பெரும்பாலும் சமூக நிறுவனங்கள் இதற்கு எதிராக சிகப்பு கொடி காட்டுபவையாகவே இருக்கின்றன. ஆனால் காதலினால் உந்தப்பட்ட மனித இயல்பூக்கமானது, இவ்வாறான கட்டுப்பாடுகளையும் மீறி தமது காதல் உணர்வை வெளிப்படுத்தி எந்தவிதமான பிரச்சனைகளையும் எதிர் கொள்ள தயாராக இருக்கின்றன. சில காதல்கள் வெற்றி பெருகின்றன. பல தோல்வியடைகின்றன. ஆனால் இன்றைய நவீன தொழிற்நூட்ப தகவல் பரிமாற்ற உலகில் காதலுக்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன என்றால் மிகையல்ல. இதன் ஒரு வெளிப்பாடாகவே மேற்கத்தைய காலாசாரமான டேட்டிங் முறைகள் தமிழ் சமூகத்தில் அறிமுகமாகி பிரபல்யமாகி வருவதை தடுத்து நிறுத்த முடியாதுள்ளது.

 

இரண்டவாது இவ்வாறான டேட்டிங் உறவு முறைகள் தொடர்பாக தமிழ் திரைப்படங்கள் அறிமுகப்படுத்தினாலும் அவை தமிழ் காலாசார அடிப்படைகளிலையே மதிப்பிடப்பட்டு தீர்மானிக்கப்படுகின்றமை துரதிர்ஸ்டமானது.  இவ்வாறன டேட்டிங் முறைகளுக்கு இன்று எதிர்ப்புகள் எழும்பினாலும் காலோட்டத்தில் அவை சமூக வழமைக்குள் வந்துவிடுவது தவிர்க்க முடியாது என்பதை புரியாதவர்களாகவே இருக்கின்றோம். புலம் பெயர்ந்த தமிழ் தேசிய வாதிகள் புலம் பெயர்ந்து வாழும் தமது குழந்தைகள் டேட்டிங் போவதை, விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்கின்றனர் அல்லது அங்கீகரிக்கின்றனர். அல்லது தடுக்க முடியாது இருக்கின்றனர். ஆனால் புலத்தில் -ஈழத்தில்- இவ்வாறன செயற்பாடுகள் நடைபெறுகின்ற பொழுது கலாசார சீரழிவு எனக் கூச்சலிடுகின்றனர். இது இவர்களது வழமையான இரட்டை வேடம் என்றால் மிகையல்ல. இவ்வாறன புதிய உறவு முறைகளை எதிர்ப்பதற்குப் பதிலாக, டேட்டிங் முறைகளை எவ்வாறு தமிழ் சமூகம் உள்வாங்கி ஆரோக்கியமான வழிகளில் அதனைப் பயன்படுத்தி பயன் பெறலாம் என சிந்திப்பதே நல்லது.

 

டேட்டிங் முறைகளில் பல வகைகள் உள்ளன. இதன் அடிப்படை நோக்கமானது, ஒருவரை ஒருவர் சந்திப்பதற்கு அல்லது அறிந்து கொள்வதற்கான ஒரு ஆரம்ப அறிமுக செயற்பாடு எனலாம். இவ்வாறான வழிமுறையானது, சதாரணமாக இருவர் தேநீர் அருந்துவதிலிருந்து, உணவு உண்பது, திரைப்படத்திற்கு செல்வது என ஆரம்பிக்கின்றது. சில நேரங்களில்; உடலுறவு வரை வளர்ந்து செல்கின்றது. இதில் எதை இருவரும் தேர்வு செய்கின்றார்கள் என்பதும் அவரவர் வசதிகளையும், தேவைகளையும், சுழலையும் பொறுத்து தீர்மானிக்கப்படுகின்றன. இவ்வாறான திருமணத்திற்கு முந்திய உறவுகள் பாலியலுறவில் நிறைவடைகின்றபோதே பிரச்சனைகள் அதிகம் எதிர்நோக்கப்படுகின்றன. அதேவேளை இவ்வாறு புதிதாக அறிமுகமாகின்ற இருவர்களுக்கு இடையிலான புரிந்துணர்வுகள் ஆழமற்றவையாக இருப்பதாலும் மற்றும் அவர்களது பொறுப்பற்றதன்மைகளாலும் மேலும் சில பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். குறிப்பாக ஆண்களின் பாலியல் விருப்பங்களுக்கான பெண்களது பதிலானது பொதுவாக “நோ” “இல்லை” “முடியாது” என்பனவாகவே இருக்கின்றன. இந்தப் பதில்களை ஆண்கள் அதற்கு எதிர்மாறான அர்த்தத்திலையே புரிந்து கொள்கின்றனர். இதன் விளைவாக ஆண்கள் தமது, அதிகாரத்துத்தை பிரயோகித்து பெண்களின் விருப்புக்கு மாறாக வன்புணர்வுகளில் ஈடுபடுகின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே டேட்டிங் போன்ற புதிய முறைமைகள் தொடர்பான ஆழமான விரிவான கலந்துரையாடால்கள் அணைத்து மட்டங்களிலும் நடைபெறுவதை தமிழ் சமூக நிறுவனங்கள் ஊக்குவிக்கவேண்டும். மேலும் இவ்வாறன புதிய நட்பு அறிமுக முறைமை தொடர்பான விரிவான கட்டுரைகள் தொடர்ச்சியாக தமிழில் வெளிவரவேண்டியதும் அவசியமானதாகும்..

 

மூன்றாவது தமிழ் கலாசாரமானது திருமணத்திற்கு முன்பான ஆண் பெண்களுக்கிடையிலான பாலியலுறவுகள்  தொடர்பான எதிர்மறைப்பார்வையையே கொண்டுள்ளது. குறிப்பாக பெண்கள் திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வதை அனுமதிப்பதுமில்லை ஏற்றுக்கொள்வதுமில்லை. ஒரு பெண் அவ்வாறு ஈடுபட்டவர் என அறியும் பொழுது அப் பெண்ணினது திருமண வாழ்வு மட்டும் பிரச்சனைக்கு உள்ளவாதில்லை. அவரது வாழ்வே பிரச்சனைக்குறியாதாகவும் கேள்விக்குறியாகி விடுகின்றது. அதிலும் இன்னுமொரு படி மேல் சென்று திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் தரித்துவிட்டால் குறிப்பிட்ட பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் இன்னும் அதிகமாகின்றது. ஆனால் இதற்கு காரணமான ஆண்கள் எந்தவிதமான தண்டனைகளுக்கும் உள்ளாவதில்லை என்பதுடன் அவர்கள் மீது எந்தவிதமான குற்றங்களும் முன்வைக்கப்படுவதில்லை. இதனால் தமது நடைத்தைகளுக்கு எந்தவிதமான பொறுப்புகளையும் எடுக்காது தப்பிவிடுகின்றனர். அதாவது ஆண்கள் தப்புவதற்கு ஏற்ற வகையிலையே சமூக கட்டுமானங்களும் கருத்தாதிக்கங்களும் நிலவுகின்றன. ஆனால் பெண்களுக்கு, “நடத்தை கெட்டவள்”, “வேசை”, “கர்ப்பத்தைக் கலைத்தவள்”, “கொலைகாரி”,; மற்றும் “குழந்தையைக் கொன்றவள்” என பல்வேறு அவப்பெயர்களை வழங்கி அவர்களிடம் குற்றவுணர்வை ஏற்படுத்துவதுடன் சாதாரண வாழ்விலிருந்து சமூகமானது அவர்களைப் புறக்கணித்துவிடுகின்றது. இவ்வாறான பிரச்சனைகளிலிருந்து பெண்கள் விடுதலை பெறுவதற்கு தமிழ் சமூகமானது எவ்வாறு இவ்வாறன பிரச்சனைகளை அணுகலாம் என்பது தொடர்பாக சிந்திக்க வேண்டிய ஒரு கால கட்டத்தில் இருக்கின்றோம். ஏனனில் குறிப்பாக பாலியலுறவினால் ஏற்படும் கர்ப்பங்களை தவிர்ப்பதற்கு கருத்தடை சாதனங்கள் தொடர்பான அறியாமை மிகவும் முக்கியமான ஒரு காரணியாக இந்த சமூகங்களில் இருக்கின்றது.

 

நான்காவது திருமணத்திற்கு முன்போ பின்போ பாலியலுறவில் ஈடுபடுகின்றவர்கள் அதனால் ஏற்படும் அநாவசியமான கருப்பத்தை தவிர்ப்பதற்காக கருத்தடை சாதனங்கள் தொடர்பான அறிவை பெற்றிருப்பது மிக மிக அவசியமானது. கருத்தடைக்கான வழிமுறைகள் பலவகை உள்ளன. இக் கருத்தடை சாதனங்கள் வெறுமனனே குடும்ப கட்டுப்பாடுகளுக்கு மட்டும் பயன்படுவதில்லை. மாறாக கர்ப்பமடையாது பாலியலுறவை அனுபவிப்பதற்கும், இளம் வயது கர்ப்பங்களைத் தவிர்ப்பதற்கும், பாலியலுறவினால் ஏற்படும் நோய்களை தவிர்ப்பதற்கும் கருத்தடை சாதனங்கள் மிகவும் பயன்மிக்கவை. குறிப்பாக தமிழ் சமூகங்களில் வாழும் பெண்களின் எதிர்கால வாழ்வானது கர்ப்பங்களினால் தீர்மானிக்காமல் இருப்பதற்கும் அதேநேரம்  பாலியலுறவில் ஈடுபட்டுக் கொண்டு சுந்திரமாக வாழ்வதற்கும் இவ்வாறன கருத்தடை சாதனங்கள் நேர்மறையான பங்களிப்பை செய்கின்றன.  ஆகவே கருத்தடை சாதனங்கள் தொடர்பான பிரக்ஞையை மிகப் பரவலாக தமிழ் சமூகங்களில் ஏற்படுத்துவதுடன் மிக இலகுவாகவும் இலவசமாகவும் அவை கிடைக்கும் வகையிலான பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும். இதுவே அநாவசியமான கருக்கலைப்புகளை தவிர்க்கும்.

 

ஐந்தாவது கருக்கலைப்பானது பல சமூகங்களில் அங்கீகரிக்கப்படாது தடைசெய்யப்பட்டிருக்கின்றன. இருந்தபோதும் மேற்குறிப்பிட்ட பல காரணங்களினால் கருக்கலைப்பு பொதுவாக அனைத்து சமூகங்களிலும் சட்டத்திற்கும் புறம்பாக வழமையாக நடைபெறுகின்ற ஒரு விடயமாகும். இவ்வறான கருக்கலைப்புகளுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஈழத்தில் இராணுவத்தின் பிரசன்னம் அதிகமாக இருப்பதாலும் அவர்கள் போரில் வென்று இருப்பதாலும் அதிகாரம் நிறைந்தவர்களா இருக்கின்றனர். இவர்கள் தமிழ் பெண்களை வண்புணர்வதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளன. அவ்வாறு நடைபெறுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறான ஆதிகாரத்துவத்தாலும் இனவாதபோக்குகளாலும் நடைபெறுகின்ற வன்புணர்வுகளில் குறிப்பிட்ட பெண்களின் பாதுகாப்பு குறித்து ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம் என எழுதுவது மிகவும் வேதனையானது. இது ஒரு அரசியல் பிரச்சனை. இராணுவத்தின் பிரசன்னத்தை வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இருந்து நீக்குவதே இவர்களினால் மேற்கோள்ளப்படும் வன்புணர்வுகளிலிருந்து தமிழ் பேசும் பெண்கள் தப்பிப்பதற்கு இருக்கின்ற ஒரே தீர்வு.  இதேநேரம், தமிழ் சமூகத்திலுள்ள ஆணாதிக்க பார்வை கொண்ட ஆண்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண்களை வன்புணர்வு செய்வதை மறுப்பதற்கில்லை. இந்த ஆண்களிடம் இந்த பிரச்சனைகள் தொடர்பான விழிப்பையும் பிரக்ஞையையும் ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே ஒரளவாவது அவர்களால் முன்னெடுக்கப்படும் வன்புணர்வுகளை குறைக்கலாம். இவற்றைவிட சில பெண்கள் தாமே விரும்பி திருணமத்திற்கு முன்பு தமது காதலர்களுடன் உடலுறவு கொள்வதும் ஆச்சரியமான ஒரு நிகழ்வல்ல. இவ்வாறன காதல் உறவுகளின் போது தமது அறியாமையினால் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாது பாலியலுறவில் ஈடுபடுவதால் அவசியமற்ற கர்ப்பங்கள் உருவாகின்றன. இவ்வாறான பிரச்சனைகள் கருத்தடை சாதனங்கள் தொடர்பான அறியாமையை நீக்குவதன் மூலம் தடுக்கப்படக் கூடியவையே. ஆனால் இவ்வாறன அறியாமையால் உருவான கருப்பத்தைக் கலைப்பதற்கு சமூக அங்கிகாரமோ சட்ட அனுமதியயோ இல்லாமை குறிப்பிட்ட பெண்களது பிரச்சiனைகளை மேலும் சிக்கலுக்குள்ளாக்கிவிடுகின்றது. மேற்குறிப்பிட்டவாறான சந்தர்ப்பங்களில் உருவாகும் கர்ப்பங்களை குறிப்பிட்ட பெண்கள் பொதுவாக பாராமரிக்க விருப்புவதில்லை. மாறாக அதை முளையிலையே அழித்து தம்மை அதன் சுமையிலிருந்து விடுதலை செய்யவே விரும்புவர். ஆனால் (தமிழ்) சமூகங்கள் பெண்களின் இவ்வாறான உறவுகளையும் அதனால் ஏற்படும் கருப்பங்களையும் கருக்கலைப்புகளையும் ஏற்றுக்கொள்வதே இல்லை. இதற்கு பெண்ணின் மீது மட்டும் தவறு இல்லாதபோதும் அவள் மட்டுமே குற்றவாளியாக்கப்படுகின்றாள். இதற்கு காரணமான (சிங்கள, தமிழ் அல்லது பௌத்த, இந்து, முஸ்லிம்) ஆண்கள் தப்பி விடுகின்றனர். ஆகவே இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாக தமிழ் சமூகமானது அன்பும் அரவணைப்பும் கரிசனையும் உள்ளவர்களாக இருந்தாலே இப் பெண்கள் நம்பிக்கை பெற்று மீண்டும் சமூகத்தில் வாழ்வதற்கு வழிவகுக்கும்.

 

ஆறாவது இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எந்தவிதமான ஆதரரவும் அன்பும் கிடைக்காத காரணங்களினால் இவர்கள் மிகவும் இலகுவாக பாலியல் தொழில்களுக்கு இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். அதேவேளை பாலியல் தொழில் ஒரு சமூகத்தில் நிலவுவதற்கு பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக பொருளாதாரம், பாலியல் அடக்குமுறைகள், மற்றும் இவை தொடர்பான கருத்தாதிக்கங்கள். இவ்வாறான காரணங்களை தீர்காத வரை பாலியல் தொழில் எந்த ஒரு சமூகத்திலிருந்தும் மறைந்து விடாது. ஆகவே இவ்வாறன காரணங்கள் மறையும் வரை இவ்வாறான தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு தகுந்த பாதுகாப்புகளும் உரிமைகளும் வழங்கப்படவேண்டியது அவசியமானதும் தவிர்ப்பப்படமுடியாததுமாகும். பாலியல் தொழிலாளர்களும் பெண்ணியவாதிகளும் குறிப்பிடுவதுபோல் பாலியல் தொழிலாளர்களது பிரச்சனையும் அடிப்படையில் மனித உரிமைகள் சார்ந்த ஒரு பிரச்சனையே என்றால் மிகையல்ல. இது தொடர்பாக “பிரக்ஞை” வலைப்பதிவிலுள்ள விரிவான கட்டுரை எழுதப்பட்டுள்ளது..

 

 

இறுதியாக மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் உருவாகுவதற்கு காரணம் நமது காலாசராமும் புதிய விடயங்கள் தொடர்பான அறியாமையுமே. ஆகவே இவ்வாறான பிரச்சனைகளுக்கான தீர்வானது, காதல் ,காமம், பாலியலுறவு, கருத்தடை சாதனங்கள், மற்றும் கருக்கலைப்பு தொடர்பான தமது கருத்துக்களை மீளுருவாக்கம் செய்வதும் புதிய அறிவுகளை உள்வாங்கி தம்மை விரிவாக்கம் செய்வதுமே ஆகும். முதலாவதாக இன்றைய நவீன தொடர்பூடகங்களினாலும் தகவல் பரிமாற்றங்களினாலும் மனித உடல்களிலும் பல மாற்றங்கள் விரைவாக நடைபெறுகின்றன. இதனால் கடந்த காலங்களைப் போல் அல்லாது இப்பொழுது சிறுவர்கள் சிறுவயதிலையே பாலியல் ரீதியாக முதிர்ச்சியடைந்து விடுகின்றனர். அதாவது பாலியலுறவுக்கு தயாராகி விடுகின்றனர். குறிப்பாக 14 வயதில் மனிதர்கள் தமது காமசக்தியின் உச்சத்தைப் அடைகின்றார்கள் எனக் கூறப்படுகின்றது. ஆகவே பாலியலுறவு கொள்வதற்கான வயதாக 14 வயதுக்கு மேல் என அங்கிரிப்பததே ஆரோக்கியமானது. ஆனால் (அனைத்து சமூகங்களும் உட்பட) தமிழ் சமூகமானது திருணமத்திற்கான வயதாக, அதாவது பாலியலுறவில் ஈடுபடுவதற்கான அங்கீகாரமாக 18 வயதையே இப்பொழுதும் பின்பற்றுகின்றது. பல சமூகங்கள் பாலியலுறவையும் திருமண உறவையும் பிரித்து பால காலமாகிவிட்டது. ஆனால் தமிழ் சமூகமானது இப்பொழுதும் திருமணத்திற்கு உட்பட்ட பாலியலுறவையே அங்கீகரிக்கின்றது. ஆகவே இது தொடர்பான கருத்துப்பரிமாற்றங்கள் தமிழ் சமூகத்தில் நடைபெறவேண்டியது அவசரமான அவசியமாகும். இளம் பருவத்தினருக்கு குறிப்பாக பதின்நான்கு வயதிலிருந்தே பொருத்தமான அறிவையும் தகவல்களையும் வழங்குவதனுடாக ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

 

இரண்டவாது பாலியலுறவில் பொதுவாக அனைவருமே ஈடுபடுவார்கள். இது இயற்கையான ஒன்று. ஆனால் இவ்வாறான உறவில் எவ்வாறு பாதுகாப்பாக ஈடுபடுவது அதற்கான சாதனங்கள் என்ன என்பது தொடர்பான அறிவூட்டலை பாடத்திட்டங்களில் இணைக்கவேண்டும். இவ்வாறான செயற்பாடுகளே சிறுவயது பிரசவங்கனைளயும் திருமணமத்திற்கு அப்பாற்பட்ட கருகட்டலால் ஏற்படும் கருச்சிதைவுகளையும் அல்லது பிறக்கின்ற குழந்தைகளை கொலை செய்வதையும் அநாதைகளா விட்டுவிட்டு செல்வதையும் தவிர்க்க முடியும். இதன் மூலம் குறிப்பான பெண்களை மட்டும் குற்றவாளியாக்கும் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்கள் தமது வாழ்வை குற்ற உணர்வின்றி தொடர வழிவகுக்கலாம்.

 

மூன்றாவது திருமணம் என்பது வெறுமனே இரு தனிமனிதர்கள் ஒன்றாக வாழ்வது மட்டுமல்ல. இரு உலகங்கள் ஒன்றாக வாழ்தல் எனக் கூறுகின்றனர். ஆகவே இதில் மிப் பெரிய சாவால்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். ஆகவே, பொறுப்புக்களை பகிர்வது, புரிந்துணர்வு, மற்றும் விட்டுக் கொடுப்பு என பல விடயங்கள் உள்ளடங்கி உள்ளன. அதிலும் குழந்தை வளர்ப்பு என்பது மேலும் பொறுப்பான ஒரு செயற்பாடு. ஆகவே குழந்தை வளர்ப்பு தொடர்பான அறிவுட்டல்களும் தேவைப்படுகின்றன. ஆகவே இருவர் திருணம் செய்வதற்கு முதல் மேற்குறிப்பிட்ட பாலியலுறவு, கர்ப்பம், கர்ப்பத்தடை, மற்றும் குழந்தை வளர்ப்பு என்பது தொடர்பான அறிவூட்டல்களையும் பயிற்சிகளையும் பெற்று அதற்கான சான்றிதழைப் பெருவதை ஒரு முன்நிபந்தனையாக வைப்பது பலவகைகளில் நன்மையானது. மேலும் திருமணத்திற்கான வயது என்பது 21 வயதாக அதிகரிக்கவும் வேண்டும். அப்பொழுதுதான் 14 வயிதிலிருந்து காமத்தை அனுபவித்தவர்கள் ஆழமான காதல் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவும் பொறுப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான பக்குவத்தையும் ஆளுமைகளையும் அடைந்திருப்பார்கள். மேலும் இருவர் இணைந்து வாழ்வதற்காக வழியாக திருணமன உறவு முறைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்குவதற்கு பதிலாக, ஆரம்பத்தில் இருவர் குறைந்தது சில காலங்களுக்காவது இணைந்து வாழ்வதை ஊக்குவிப்பதே ஆரோக்கியமானது. ஏனெனில் பொதுவாக சமூகங்களில் குறிப்பாக தமிழ் சமூகங்களில் திருமணத்திற்கும் மற்றும் குழந்தை பெறுவதற்குமான நோக்கங்களும் காரணங்களும் பலவகையானவை. இந்த நோக்கங்களும் காரணங்களும் திருணம் செய்பவர்கள் தொடர்பாகவே அல்லது பிறக்கின்ற குழந்தை தொடர்பாகவே அக்கறை குறைந்தவையாகவே இருக்கின்றமை தூரதிர்ஸ்டமானது. இவ்வாறன கருத்து நிலைகளில் மாறுதல்கள் ஏற்படுவது அவசியமாகும்.

 

 

தமிழ் சமூகங்களானது குறிப்பாக ஈழத்து தமிழ் சமூகங்கள் கடந்த மூப்பது ஆண்டு காலமாக தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான தேவையின் நிமித்தம் ஆயுத காலாசாரத்தை உருவாக்கின. இப் புதிய கலாசராமானது பாரம்பரிய தமிழ் காலாசாரத்தின் போர்முறைகளுக்குப் புதியதொன்றே. இப் புதிய கலாசாரமானது வீட்டுக்குள் அடக்கப்பட்டு அடைபட்டிருந்த பெண்களை வீட்டுக்கு வெளியே அழைத்து ஆயுதபாணிகளாக அலங்கரித்து பெருமைப்பட்டது உலகில் இருக்கின்ற தமிழ் சமூகங்கள். குறிப்பிட்ட காலம் இது ஒரு புதிய புரட்சிகரமான காலாசாரமாக தமிழ் சமூகத்தில் நிலவிவந்தது. சமூகத்தின் தேவையைப் பொருத்து இவ்வாறான கலாசார மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஆனால் இவ்வாறான புதிய கலாசாரங்கள் ஆரோக்கியமான பண்புகளுடனும் நேர்மறையான தன்மைகளுடனும் செல்கின்றனவா என்பதை ஒவ்வொரு கணமும் பிரக்ஞைபூர்வமாக உறுதிப்படுத்திக் கொண்டே முன்செல்ல வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை என்பதை இன்று முன்னால் போராளிப் பெண்கள் ஈழத்து தமிழ் சமூகத்தில் எதிர் கொள்ளும் பிரச்சனைகளும் புலம் பெயர்ந்த ஈழத்து தமிழர்கள் அவர்களுக்கு வழங்குகின்ற மதிப்பையும் பார்க்கின்றபோது தெரிகின்றது. ஆகவே மாற்றங்கள் என்பது வெறும் பயன்படுத்தலாக மட்டும் குறுகிவிடக்கூடாது. இவ்வாறன மாற்றங்கள் தொடர்பான தொடர்ச்சியான கலந்துரையாடல்களும் பிரக்ஞைபூர்வமான முன்நகர்வுகளும் அவசியமானவையாகும்.

 

போரின் பின்னான இன்றைய ஈழத்து தமிழ் சமூகமானது இன்னுமொரு புதிய காலாசரா மாற்றத்தை நோக்கி செல்கின்றது. ஆகவே இம் மாற்றமானது ஆரோக்கிமான வழியில் நேர்மறைத்தன்மையுடன் செல்வதை உறுதி செய்வது முக்கியமானது. அதற்கான பொறுப்பு சமூக அறிஞர்களுக்கும் புலமைசார்துறையினருக்கும் ஊடகங்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உண்டு. இவர்களது பிரக்ஞைபூர்வமான செயற்பாடுகளும் படைப்புகளும் ஆய்வுகளும் ஊடாக கருத்து மேலாதிக்கம் ஒன்றை ஏற்படுத்துவதன் மூலம் புதிய கலாசாரத்தின் பாதையை நிர்ணையம் செய்ய முடியும். ஆனால் அவ்வாறான ஒரு செயற்பாட்டையும் படைப்புகளையும் பரவாலாக காணமுடிவதில்லை.  இந்தடிப்படையில், இன்று ஈழத்தில் காலாசரா சீரழிவு எனப்படுவது என்ன? என்பது தொடர்பாகவும் இதன் விளைவாக உருவாகின்ற கருக்கலைப்பு எவ்வாறு பார்க்கப்படுகின்றது? என்பது தொடர்பாகவும் விரிவான ஆழமான கருத்துக்கள் வெளிவரவேண்டி உள்ளன. இவ்வாறான புதிய கருத்துக்கள் வராது விடுமாயின் சமூகமானது மீண்டும் வழமையான பழைய கருத்தாதிக்கதிக்கத்pற்கு உட்பட்டு புதிய கலாசராம் வெளிவராது தடுத்துவிடும். அல்லது புதிய கலாசாரமானது சிரழிவான பாதையை நோக்கி செல்லவும் வழிவகுக்கலாம்.

 

காதல், பாலியலுறவுகள், பாலியல் தொழில் என்பவற்றை தமிழ் சமூகம் தொடர்ந்து அடக்குமாயின் அவை அழிந்துவிடாது. மாறாக அவை இரகசியமான வழிகளில் நடந்தே தீரும். அதைத் தடுக்க முடியாது. இவ்வாறு மறுக்கப்படுவதால் அதில் ஈடுபடுகின்றவர்கள் குற்றவாளிகள் ஆக்கப்படுவதுடன் குற்றவுணர்வுக்கும் உள்ளாகின்றனர். இதற்காக புதிய காலாசாரம் ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதை உருவாக்குவது என்பது முடியாததோ அல்லது கஸ்டமான ஒரு காரியமோ அல்ல. ஏனெனில் மேற்குறிப்பிட்ட பல அல்லது சில விடயங்கள் மேற்குலகத்திற்கு மட்டுமே பொருத்தமானது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கலாம். இது ஒரு தவறான குற்றச்சாட்டாகவே இருக்க முடியும். ஏனெனில் கடந்த நூறாண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய கலாசாரத்தில் குறிப்பாக ஆங்கில காலாசாரம் தளபடாங்களுக்கே ஆடை அணிவித்த ஒரு பிற்போக்கான சமூகம். ஆனால் இன்று பாலியலுறவு, கர்ப்பம், கருக்கலைப்பு தொடர்பாக கிரிஸ்தவ மத நிறுவனங்களின் எதிர்ப்பையும் மீறி மிகவும் அல்லது ஒரளவாவது முன்னேறியுள்ளன என்றால் மிகையல்ல. ஆனால் காலங்காலமாக தென்னாசிய சமூகங்களில் காமம், பாலியலுறவு தொடர்பான விடயங்கள் பொது வெளியில் உரையாடபட்டுவந்தமைக்கான சான்றுகள் இருக்கின்றன. ஆனால் காலனித்துவ ஆட்சிக்குப்பின் அவர்களின் கருத்தாதிக்கங்களை நன்றாக உள்வாங்கிக் கொண்டதால் அதிலிருந்து விடுபட முடியாதவர்களாக தென்னாசிய சமூகங்கள் இருக்கின்றன. இதேவேளை காலனித்துவ ஆட்சியாளர்களின் சமூகங்கள் அவ்வாறான கருத்தாதிக்கங்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டன. ஆகவே இவ்வாறன கருத்தாதிக்கங்களிலிருந்து விடுபட்டு முன்னே செல்லவேண்டிய ஒரு காலகட்டத்தில் தமிழ் சமூகமானது இருக்கின்றது.  தமிழ் சமூகமானது கல்தோன்றி மண் தோன்றா முன்தோன்றிய முத்த குடியாக இல்லையா என்பதைப் பற்றி எல்லாம் நான் அறியேன். ஆனால் தமிழ் சமூகமானது முன்னேறி செல்லவேண்டிய ஒரு சமூகம் என்பதில் மட்டும் எனக்கு சந்தேகமில்லை. அவ்வாறு நமது தமிழ் சமூகம் முன்னேறி செல்ல, இளம் சமுதாயம் அதிகமாக காதல் செய்வதை அதிகமாக வரவேற்போம். பாதுகாப்பிற்காக கையில் கருத்தடுப்பு சாதனங்களை வைத்திருப்பதை மேலும் ஊக்குவிப்போம். திருமணங்களை தள்ளிப் போடுவதை ஆதரிப்போம்…குழந்தை பெறுவதை ஆறுதலாகவும் பொறுப்புணர்வுடனும் செய்யவேண்டும் எனக் கூறுபவர்களுக்கு துணை நிற்போம். இவ்வாறான விடயங்களை திறந்த வெளிகளில் திறந்த மனதுடன் வெளிப்படையாக உரையாடுவோம்.

மீராபாரதி

19.01.12

நன்றி – ஏதுவரை – http://eathuvarai.net/?p=128

 

யாழ்ப்பாண கலாசாரம் சீரழிகின்றதா?”

http://www.penniyam.com/2011/10/blog-post_11.html

 

ஈழத்துடொமினிக்ஸ்திரௌஸ்கான்களும் (Dominique Strauss-Kahn)கலாச்சாரச்சீர்கேடுகளும்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/69389/language/en-US/–Dominique-Strauss-Kahn–.aspx

 

பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்…

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/59643/language/ta-IN/article.aspx

இளவயது கர்ப்பத்திலும் யாழ் மாவட்டம் முதலிடம்!

http://www.ndpfront.com/?p=28980

ஒரு வருடத்தில் யாழில் 54 பாலியல் வல்லுறவு சம்பவங்கள்இ 247 முறையற்ற கர்ப்பம் தரிப்பு

www.neruppu.com/?p=34606

 

http://tinyurl.com/7nr7cy7

 

http://salasalappu.com/?p=43446

 

http://www.tamilwin.com/view.php?22oRq5203Qj142e2kFbI3b3T6Dg4d2p1h4cc3PoWcd404QIdb0eBRQbe

http://www.eelamdaily.com/news/3679/57/.aspx

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/59643/language/ta-IN/article.aspx

http://www.paadini.blogspot.com/2011/07/24.html

http://www.penniyam.com/2011/10/blog-post_11.html

http://www.yarl.com/forum3/index.php?showtopic=92795

Advertisements

Responses

  1. Very nice article, nicely written


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: