Posted by: மீராபாரதி | December 19, 2011

கூட்டுப் பிரக்ஞையின்மை – பிறப்பின் முன்பிருந்து … பகுதி 4

கூட்டுப் பிரக்ஞையின்மை – பிறப்பின் முன்பிருந்து … பகுதி 4

(கூட்டுப்)பிரக்ஞையின்மையிலிருந்து (கூட்டுப்)பிரக்ஞையை நோக்கி…..

 

பிரக்ஞையின்மை (unconsciousness) என்பதை தனிமனிதர் சார்ந்தது எனவும் அவரது மனதை உள்நோக்கி ஆழமாக சென்று பார்ப்பது என கூறலாம். ஏனனில் இது தனி மனிதர் ஒருவருக்கு ஏற்படும் அனுபவங்கள், பாதிப்புகள், தாக்கங்கள் என்பவற்றாலையே பெரும்பாலும் உருவாகுவது அல்லது இவற்றுடன் இணைந்து செயற்படுவது எனலாம். இது பெருப்பாலும் குறிப்பிட்ட தனிநபருக்கு மட்டுமே அவர் அறிந்தோ அறியாமலோ உரியது. ஆனால் கூட்டுப்பிரக்ஞையின்மை (collective unconsciousness) என்பது தனிமனிதர்களுக்குள் இருந்தாலும் அடிப்படையில் பல மனிதர்கள் சார்ந்ததாக அல்லது அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கின்றது.  மேலும்; இது மனித குழுக்களின் வெளிநோக்கிய பரந்தளவில்hன செயற்பாடுகள் மூலம் அறியக் கூடியது. ஆனால் பிரக்ஞையின்மையைவிட மிகவும் ஆழமாக மனித மனங்களில் இருக்கின்றது எனவும் கூறலாம். ஏனனில் ஒரு மனிதருக்குள் உள்ள கூட்டுப்பிரக்ஞையின்மையானது அவரது தாயினதும் தந்தையினதும் மரபணு மூலக் கூறுகளை கொண்டுள்ளன. இவ்வாறு மனிதருக்குள் இருக்கின்ற கூட்டுப்பிரக்ஞையின்மையின் மூலக்கூறுகள், பெற்றோர், குடும்பம், பெற்றோரின் குடும்பம், உறவினர்கள், பரம்பரை, மொழி, மதம், சாதி, இனம், தேசம், நாடு, சர்வதேசம் என விரிந்து சென்று கொண்டே இருக்கின்றது எனலாம். அதாவது இவை ஒவ்வொன்றினதும் அடிப்படையிலான கூட்டுப்பிரங்ஞையின்மையானது ஒரு தனிநபருக்குள்  ஆழமாக பதிந்து இருக்கின்றது. இவை மனிதரின் அல்லது சூழலில் தேவையைப் பொருத்து அல்லது ஏதாவது ஒரு புறக் காரணங்களால் பாதிக்கப்படும் போது அல்லது தாக்கப்படும் போது பிரக்ஞையின்மையுடாக (unconsciousness) குறிப்பிட்ட மனிதரை ஆதிக்கம் செய்கின்றது எனலாம் (Ellenberger,  706). இவ்வாறன கூட்டுப்பிரக்ஞை தொடர்பாக கார்ல் குட்ஸ்வேவ் யங் (Carl Gustav Jung) என்பவரே முதன் முதலாக விரிவான ஆழமான ஆய்வை மேற்கொண்;டார்;. இது தொடர்பான அவரது விளக்கதை அறிவதன் மூலம் மனிதர்களுக்குள் இருக்கின்ற கூட்டுப்பிரக்ஞையின்மை தொடர்பான புரிதலை வளர்த்துக் கொள்ள முயற்சிக்கலாம். இந்த முயற்சியானது மனிதர்கள் மீதான அதன் பாதிப்பையும் தாக்கத்தையும் புரிந்து கொள்ள உதவிசெய்யும். இவ்வாறன அறிதலும் புரிதலும் மனிதர்களுக்குள் எதிர்மறையாக ஆதிக்கம் செய்கின்ற ஆனால் வாழ்வதற்கு அவசியமற்ற பல உளவியல் சக்திகளையும் எண்ணங்களையும்  நேர்மறையான ஆரோக்கியமான ஒன்றாக மாற்றுவதற்கு வழிவகுக்கும் என்றால் மிகையல்ல.

 

சிக்மன் பிரட் (Sigmund Freud), தனி மனித பிரக்ஞையின்மை (unconsciousness) தொடர்பாகவே அதிகமான அக்கறை கொண்டிருந்தார். குறிப்பாக மனிதர்களது பாலியல் சக்தி, அதன் செயற்பாடுகள், இயல்பூக்கங்கள், ஞாபகங்கள் மற்றும் அவை அடக்கி ஒடுக்கப்படுவதால் மனிதர்களில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவே தனது ஆய்வை மேற்கொண்டார். இதற்கு அவரது குறிப்பான மருத்துவ தொழிலினுடாக மனம் நலம் பாதிக்கப்பட்ட நோயளர்களிடமிருந்து (neurotic patients) கிடைத்த அனுபவமும் தகவல்களுமே அடிப்படையாக இருந்தன. இதேபோல் யங்கிறகும் (Jung) தனது மருத்து தொழிலினுடாக தான் சந்தித்த இன்னுமொரு வகையான மனநோயளர்களின் (schizophrenics patients) அனுபவங்கள் மற்றும் தகவல்கள் அடிப்படையிலையே பிரட்டிலிருந்து வேறுபட்டு தன்னுடைய முடிவுக்கு வந்தார் (Ellenberger,  891). இந்தத் தகவல்களின் அடிப்படையில் மனிதருக்குள் இன்னுமொருவகையான பிரக்ஞையின்மை உள்ளது என்கின்றார் யங். இது மனித வரலாற்றுடன், அதன் பாரம்பரியத்துடன் தொடர்புடையதுடன் மனித உடலுடன் எப்பொழுதும், அதாவது பிறக்கும் போதே உள்ளடங்கி இருக்கின்றது. ஆகவேதான், இதனை வெறுமனே குறிப்பிட்ட ஒரு தனிமனித அனுபவமாகவோ பிரக்ஞையின்மையாவோ (unconsciousness) குறுக்கிவிட முடியாது என்கின்றார். இதன் விளைவாகவே இதனைக் கூட்டுப் பிரக்ஞை (collective unconsciousness) என அழைக்கின்றார் (Jung 155> 357).

 

இதனால்தான் புதிதாக பிறக்கின்ற எந்தவொரு மனிதரும் அவர்களது உடலைத் தவிர வேறு ஒன்றிலும் புதிதாக பிறப்பதில்லை என்கின்றனர். ஏனனில் பிறக்கும் போதே, அவர்களது மனங்களின்  அடியில், மிகவும் ஆழாத்தில் பலவிதமான பிரக்ஞையின்மைகளைக் (unconsciousness) உள்ளடக்கித்தான் பலரும் பிறக்கின்றனர். ஆகவேதான் மனிதர்களின் தனிப்பட்ட பிரக்ஞையின்மை என்பது அவர்களது அனுபவத்திலிருந்து வருவது மட்டுமல்ல என்கின்றார் (Jung 3> 43). இதைத்தான் இவர் கூட்டுப் பிரக்ஞை (collective unconsciousness) என்கின்றார். ஆகவேதான் (கூட்டுப்)பிரக்ஞையின்மைக்கு வரலாற்றுபூர்வமான தன்மையும் பாத்திரமும் இருக்கின்றது என்கின்றார் யங் (Jung 280). இதனடிப்படையில், ஒரு மனிதர் தனது வாழ்வை வருடங்களின் அடிப்படையிலையே சிந்திக்கின்றார். ஆனால், பிரக்ஞையின்மையின் வாழ்வானது மிலேனியம் அடிப்படையிலே இருபதுடன் அவ்வாறுதான் அதனது சிந்தனையும் செயற்படுகின்றது  (Jung 280). அதாவது பிரக்ஞையின்மையானது (unconsciousness)  ஆகக் குறைந்தது 5000 வருடங்கள் மிக பழமையானது மட்டுமல்ல அதேயளவு மனிதரின் எதிர்காலம் தொடர்பாகவும் முன்நோக்கியும் செல்லக்கூடியது என்கின்றார். ஆனால் மனிதரின் பிறப்பின் பின் உருவாகின்ற தனிப்பட்ட தன்முனைப்பு பிரக்ஞைக்கு (ego unconsciousness) குறுகிய காலமே உண்டு என்கின்றார். இது எப்பொழுதும் புதிதாக உருவாகி, விரைவாக முடிவுக்கும் வந்துவிடும் என்கின்றார் (Jung, 287, 711). ஆனால் மனிதர்களது தன்முனைப்பு தான் அவர்களது (கூட்டுப்)பிரக்ஞையின்மை என்பவற்றை புரிந்துகொள்ளமல் இருப்பதற்கு தடையாக இருக்கின்றது. இவை அனைத்தும் இணைந்து மனிதருக்குள் பல்வேறுவகையான முரண்பட்ட இயக்கத்தை இவை நடாத்துகின்றன. இதன் விளைவுகளே மனிதர்கள் வெளிப்படுத்துகின்ற தமது ஆளுமைகளும்யும் அதனுடான செயற்பாடுகளும்.

 

கூட்டுப்பிரக்ஞையின்மை (collective unconsciousness) என்பது ஒருவரது தனிப்பட்ட பிரக்ஞையின்மை (unconsciousness) போல் அவரது சுய பிரக்ஞைக்கு (self-conscious) அவ்வளவு விரைவில் வருவது கிடையாது. ஏனனில் தனிப்பட்ட மனித பிரக்ஞையின்மையால் சில விடயங்கள் அல்லது எண்ணங்கள் ஒரு கணமாவது மனித பிரக்ஞைக்கு வந்த பின்புதான் மனிதர்களின் மறதியால் அல்லது ஒடுக்கப்படுவதால் அவை மீண்டும் மறைந்துவிடுகின்றது. ஆனால் கூட்டுப்பிரக்ஞையின்மை என்பது மனித பிரக்ஞைக்கு எப்பொழுதும் வருவதே இல்லை என்கின்றார் யங். இதனால் இது தனிப்பட்ட முறையில் ஒருவரால் அறியமுடியாதிருக்;கின்றது. ஆனால் ஒவ்வொருவருக்குள்ளும் பிறக்கும் போதே, அதாவது மரபணுவினுடன் இணைந்து பாரம்பரியமாக வருகின்ற,  பரம்பரையாக இருக்கின்ற ஒன்று என்கின்றார் (Jung,  42). இவை மனித உளவியல் சக்தியின் முக்கியமான கூறுகளாகவும் அடிப்படையாகவும் செயற்படுகின்றன என்கின்றார் (Ellenberger,  706). இவ்வாறு மனிதர்களின் மனங்களின் அடி ஆழத்திலிருக்கின்ற இந்தக் கூட்டுப்பிரக்ஞையின்மையானது தனிப்பட்ட ஒருவருக்கு உரிதயதல்ல, மாறாக பிரபஞ்சத்திற்கு உரியது என்கின்றார். எனனில் தனிப்பட்ட பிரக்ஞையின்மையை விட கூட்டுப்பிரக்ஞையின்மை என்பது பெரும்பாலும் எல்லா இடங்களிலும், எல்லா மனிதர்களிலும் பொதுவானதாகவும் ஒரேமாதிரியானதாகவும் காணப்படுகின்றது என்கின்றார். ஆகவே இது அனைவருக்கும் தரிகின்ற ஒன்றாகவும் இருக்கின்றது (Jung,  4).  இவ்வாறு கூட்டுப்பிரங்ஞையின்மையானது சர்வதேசத்திற்கும் (universal) பொதுவானதாக இருப்பதற்கு அடிப்படையாக பல்வேறு கூறுகளை தன்னுள் படிமங்களாக கொண்டுள்ளது.

 

முதலாவது கூறு, மனிதர்களின் மன ஆழங்களில் அல்லது கூட்டுப்பிரக்ஞையின்மையில் (collective unconsciousness) படிந்திருக்கும் பண்பாட்டு மூலம்படிமங்கள் அல்லது படிம வடிவங்கள் அல்லது ஆதிவகைப் படிமங்கள் (Archetypes) எனக் கூறுகின்றார் (Jung,  4).  அதாவது பல்வேறு பிரதிநிதித்துவங்களின் கூட்டு (representations collectives) எனவும் கூறுகின்றார் யங் (Jung,  42). இது அடிப்படையில் பிரபஞ்ச அல்லது சர்வதே குறியீடுகளையே (universal symbols)  அடிப்படையாக கொண்டதாக இருக்கின்றது. இதனால்தான் மனிதர்கள் இன்றைய நவீன யுகத்திலும் பல விடயங்களில் ஆதிகால மனிதர்களைப போலவே பார்க்கின்றனர், சிந்திக்கின்றனர், வாழ்கின்றனர் என்கின்றார். கூட்டுப்பிரக்ஞையின்மையிலிருக்கின்ற இந்த படிமங்களானது மனித பிரக்ஞையின்மையை (unconsciousness) ஆதிக்கம் செலுத்துத்துகின்றது. அதேநேரம் அவர்களது பிரக்ஞைக்கு (consciousness) வருவதில்லை என்கின்றார். ஆனால் இவ்வாறு இது பிரக்ஞையின்மையை ஆதிக்கம் செய்கின்ற நேரங்களில், மனித பிரக்ஞையின் தாக்கம் குறைவானதாகவும் இதனால் மனிதர்கள் கவனக் (attention) குறைவாகவும் விழிப்புணர்வும் (concentration)  குறைந்தும் காணப்படுகின்றனர் (Jung,  155). இவ்வாறன ஆதிவகைப் படிமங்கள் பயமுட்டுபவை மட்டுமல்ல பயங்கரமானவையும் கூட என்கின்றார் (Ellenberger,  725). ஆகவே இவை தொடர்பாக மனிதர்கள் மிகவும் கவனமாகவும் பிரக்ஞையுடனும் இருக்கவேண்டிய தேவை உள்ளது.

 

நம் மனங்களுக்குள் இருக்கின்ற இவ்வாறான கூட்டுப்பிரக்ஞையின்மையின் (collective unconsciousness) வெளிப்பாட்டுக்கான சான்றாக, ஆதிகால மூல படிம வடிவங்களுக்கான ஆதாரமாக, புராண கால நம்பிக்கைகளையும் இதிகாசங்களையும் தேவதைகள் தொடர்பான கட்டுக்கதைகளையும் மனிதர்களுக்குள் உருவாகின்ற பல்வேறுவிதமான கனவுகளையும் குறிப்பிடுகின்றார் யங் (Jung, 5, ; Ellenberger,  706).   உதாரணமாக  வட அமெரிக்கா, அஸ்ரேலியா சைபிரியா என பரந்துபட்டு வாழ்ந்த பழங்கால மனிதர்களிடம் காணப்பட்ட, ஏழு சகோதரிகள் தொடர்பான நட்சத்திர கூட்டங்களின் புராணக் கதையைக் கூறலாம் என்கின்றார் (Lachman, 120). மேலும் மனிதர்களிடம் இருக்கின்ற பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட இரவு பற்றிய பயம் இப்பொழுதும் இருக்கின்றமை கூட்டு பிரக்ஞையின்மையினால்தான் என்கின்றார் யங் (Jung,  169). ஆகவேதான்  நாகரிகமடைந்த மனிதர்கள் எனத் தம்மை இன்று கூறுகின்றவர்கள் கூட ஆதிகால இருண்ட உலகிலிருந்து முழுமையாக இன்னும் விடுதலையடையவில்லை என்கின்றார் யங். இதற்கு காரணம் மனிதர்களது மனமும் அதை ஆதிக்கம் செய்கின்ற பிரக்ஞையின்மையும் மிகவும் பழமை வாய்ந்தவையாகவும் இருக்கின்றமையாகும் (Jung,  280). ஏனனில் மனித மனம் என்பது யதார்த்தத்தில் தான் காண்பதை உடனடியாக ஆதி காலம் முதல் பதிவு செய்து வருகின்றது. இதுவே குறிப்பிட்ட பொருளை மனிதர்கள் மீண்டும் காணும் பொழுது அவர்களது பிரக்ஞையின்மையின் ஊடாக அடையாளங் காட்டுகின்றது. இந்த அடையாளாமானது எப்பொழுதும் உண்மையான யதார்த்தத்தைப ;பிரதிபலிப்பதல்ல. இதனாலையே மனதாலும் (mind), அதை ஆதிக்கம் செய்கின்ற பிரக்ஞையின்மையாலும் (unconsciousness) மனிதருக்கு புதிய பிரச்சனைகளும் அக் முரண்பாடுகளும் அதன் விளைவாக மனநோய்;களும் உருவாக்குகின்றது எனகின்றனர் (Lachman, 23).

.

கூட்டுப் பிரங்ஞைக்குள் (collective unconsciousness) மேற்குறிப்பிட்ட படிமங்களைத் தவிர இன்னுமொரு வகை அல்லது கூறு உள்ளது. இது மனிதர்களுக்குள் இருக்கின்ற ஆளுமைக் கூறுகள் அல்லது ஆன்மா எனக் கூறுகின்றனர். இதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று அனிமா (anima) மற்றுது அனிமஸ் (animus). அனிமா என்பது ஆணிலிருக்கின்ற பெண்மையின் பகுதி. ஆனிமஸ் என்பது பெண்ணிலிருக்கின்ற ஆண்மையின் பகுதி (Ellenberger,  707-8).   இது சீன தத்துவவியலில் குறிப்பிடப்படுகின்ற யங் (yang )( masculine) மற்றும் ஜின் (yin) (feminine) என்பவற்றுடன் ஒப்பிடப்படுகின்றது. மேலும் இவை பிரபஞ்ச அடிப்படையில் பொதுவானதாக இருக்கிறமையும் கவனிக்கக் கூடியது என்கின்றார் (Jung, 59). அனிமா, அனிமஸ் என்ற ஆதிக்க கூறுகள் மனிதரது உடலிலுக்குள் இருக்கின்ற உளவியல் அமைப்பிற்குள் இருக்கின்றது. அதாவது மனிதர்களது பிரக்ஞையின்மையின் அடி ஆழத்தில் இருந்து செயற்படுகின்றன. இவையும் மனித கூட்டுப்பிரக்ஞையின்மையின் முக்கியமான ஒரு கூறு என்கின்றார் யங் (Jung,  286;  Ellenberger, 708).  பொதுவாக மனிதர்களுக்குள் ஆண்மை, பெண்மை ஆகிய இரு கூறுகளும் இருக்கின்றன எனக் கருதப்படுகின்றமைக்கு இந்தக் கோட்பாடானது வலு சேர்க்கின்றது (Ellenberger, 204).  இந்த உளவியல் கூறுகள் புறச் சுழல்களின் அதாவது சமூகத்தினதும் அதன் பண்பாட்டு கலாசார அம்சங்களினாலும் மற்றும் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட பால் அடையாளத்தின் அடிப்படையிலும் இவை செயற்படுகன்றன. அதாவது குறிப்பிட்ட மனிதருக்கு ஏற்றதும் பொருத்தமானதுமான அனிமாவோ அல்லது அனிமஸோ என ஒன்று மட்டுமே இயங்க செய்யப்படுகின்றது. மற்றது இயங்கவிடப்படாது அடக்கப்பட்டுவிடுகின்றது (Ellenberger,  717). இதன் மூலமே பால் அடையாளங்களில் பாலியலுறவுகளில் இருதுருவ அடையாளங்கள் கட்டமைக்கப்பட்டு அமுல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு மனிதருக்குள் நடைபெறுகின்ற பல்வேறு வiகாயன உளவியல் தாக்கங்கள் மனிதர்களை பால் அடிப்படையில் மட்டுமல்ல சகல வகைகளிலும் ஒருவகையான மனநோயாளர்களாக்கிவிடுகின்றன.

 

உண்மையிலையே யங் குறிப்பிடுகின்ற கூட்டுப்பிரக்ஞையின்மை (collective unconsciousness) என்பது இவை மட்டுமல்ல. இவைகளையும் விட பல வகைகள் உள்ளன. இவையே மனித உளிவியலின் மையமாக இருக்கின்றது என்கின்றார் (Ellenberger,  706). மனிதர்களது தனிப்பட்ட பிரக்ஞையின்மைகள் மற்றும் அவர்களது ஆதிகால மனம், மொழி, மதம், இனம், தேசம், நாடு ஆகியவற்றின் வரலாறுகளின் கூட்டுக்களின் தொகுப்பே கூட்டுப்பிரக்ஞையின்மை எனகின்றார் (Jung, 27).    பொதுவாக மனித உளவியல் சக்தியானது சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு முன்னேறி செயற்படும். அவ்வாறு செயற்பட முடியாதாவிடத்து, அவை மனித மனங்களுக்குள் மீண்டும் உள்நோக்கி  மேற் குறிப்பிட்ட மனிதருக்குள் இருக்கின்ற (கூட்டுப்)பிரக்ஞையின்மையையும், ஏற்கனவே உள்ளார்ந்து இருக்கின்ற முரண்பாடுகளையும் மீண்டும் இயங்கச் செய்விக்கின்றது (Ellenberger,  704).   இவை மனிதர்கள் ஒவ்வொருவரதும் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையை அவர்களையறியாமலே பெருமளவு பாதிக்கின்றதுடன் தீர்மானிக்கின்றவையாகவும் இருக்கின்றன. ஆனால் மனிதர்கள்; இதனையே விதி எனக் கூறி அப்படியே ஏற்றுக்கொள்வதன் மூலம் அதன் பின்னனியிலுள்ள உண்மையை அறியாது விட்டுவிடுகின்றனர் (Jung, 30).

 

இவ்வாறன மனித செயற்பாடுகளை, தாமாகவே செயற்படக்கூடிய உள்ளுணர்வுகளின் பிரக்ஞையற்ற படிபமங்கள் என்கின்றனர். இவை மனித நடத்தைகள் மற்றும் பழக்கவழக்கங்களில் ஒரு முறைமையை உருவாக்குகின்றன (Jung,  44). இதனால்தான் மனித செயற்பாடுகள் என்பவை அவர்களது பிரக்ஞைபூர்வமான பகுத்தறிவுக்கும் மன நோக்கங்களுக்கும் அப்பாற்பட்டு பெரும்பாலும் உள்ளுணர்வுகளின் தாக்கத்திற்கு பாதிப்பிற்கும் உட்பட்டது எனக் கூறப்படுகின்றது (Jung, 44). உதராணமாக ஒரு சூழலில் நடைபெறும் நிகழ்வொன்று ஒருவரது கூட்டுப்பிரக்ஞையின்மையின் மூலப் படிமங்களுடன் பொருந்திப்போகின்றபோது அவரது உள்ளுணர்வானது ஒன்றினைந்து இசைந்து இயங்குகின்றது. அல்லது இந்த உள்ளுணர்வானது சகலவிதமான பகுத்தறிவுக்கும் காரண காரியங்களுக்கும் அப்பாற்பட்டு, குறிப்பிட்ட சுழலலுக்கு முரணான வகையில் மனிதரை செயற்பட வைப்பதன் மூலம், குறிப்பிட்ட மனிதருக்குள் அக முரண்பாட்டை உருவாக்கின்றது. இதன் விளைவாக உருவாவதையே மனிதர்களுக்கு ஏற்படுகின்ற ஒருவகையான நரம்பியல் தளர்ச்சி (neurosis) என்கின்றனர் (Jung, 48).

 

மேற்குறிப்பிட்ட மனித உளவியலின் தாக்கத்திற்கு உட்பட்டு வெளிப்படுகின்ற பொதுவான மனித செயற்பாடுகளே அடிப்படையில் மனித ஆளுமைகளாக (personality) இருக்கின்றன. இவ்வாறன மனித ஆளுமைகள் என்பது முகமூடி (mask) போன்றது என்கின்றனர். இது மனிதர்களது பொய்யான ஒரு வெளி தோற்றத்தையே வழங்குகின்றது. இந்த பொய்மையைக் கட்டமைப்பதில் ஒரு சமூகத்தில் இருக்கின்ற தொழில், வர்க்கம், சாதி, அரசியல், கட்சி, தேசம் என பல்வேறு கூறுகளின் பங்களிப்பதுடன் இவற்றின் தொகுப்பாகவே வெளிப்படுகின்றன. இதனை குறிப்பிட்ட ஒரு மனிதர் தொடர்பான அவரது இன, சமூக, தேசிய அடையாளங்கள் தொடர்பான மதிப்பீடுகளில் காணலாம் (Ellenberger,  707). பொதுவான உதராணமாக, சமூகத்தில் ஒவ்வொரு மனிதரும் தான் மதிக்கின்றவரை, உதாரணமாக தனது தந்தையை அல்லது தாயை பிரக்ஞையுடனோ பிரக்ஞையின்மையாகவோ பிரதி செய்பவர்களாகவே இருக்கின்றார்கள். இவ்வாறு ஒவ்வொருவரும் யாரை பிரதி செய்கின்றாரோ அதுவே அவர் வாழ்கின்ற குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் வேராக இருக்கின்றது (Ellenberger,  528).   இவ்வாறு பிரதி செய்கின்றமையில் களவு ஒன்றுமில்லை. மாறாக தமது சமூக மதிப்பை, அந்தஸ்தை உயர்ந்துவதையே அடிப்படை நோக்கமாக இது கொண்டிருக்கின்றது. ஆனால் இதேவேளை மனிதர்களது உண்மையான ஆளுமையானது மறைக்கப்படுகின்றது. இது எந்தளவிற்கு மறைக்கப்படுகின்றதோ அந்தளவிற்கு அது மனிதரின் உளவியலில் ஆதிக்கம் நிறைந்ததாக உருவாகி மனிதரை தவறான பாதைகளுக்கு இட்டுச் செல்கின்றது (Ellenberger,  708).

 

ஒரு குழுவுடனான ஒரு தனிநபரின் அடையாளப்படுத்தலுக்கு அடிப்படையாக இருப்பது உருவாக்கப்படுகின்ற கூட்டு அனுபவம் என்கின்றார் யங். இவ்வாறன ஒரு குழுவின் அனுபவத்தை ஒருவர் பெறுவது என்பதும், தனிபர் ஒருவர் சுய அனுபவத்தை பெறுவது என்பது இரு வேறு விடயங்கள். அதாவது மனிதர்களது மனதின் ஒரு குறிப்பிட்ட வறையறைக்கு உட்பட்டு, ஒரு குழுவிலுள்ள ஒவ்வொருவருடனும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு, ஒன்றுபடுகின்ற  ஒரு குழுவானது பெறுகின்ற அனுபவமானது தனிநபராக பெறுகின்ற அனுபவததைவிட குறைவானதாகவே இருக்கும் என்கின்றார். அதாவது குழு ஒன்றின் கூட்டு அனுபவமானது தனிநபரின் அனுபவத்தை விட குறைவான பிரக்ஞை நிலையிலையே இருக்கின்றது. இதற்கு காரணம் ஒரு குழுவினது உளவியலானது தனிநபரினது உளவியலை விட குறைவானதாக தாழ்ந்ததாகவே இருக்கின்றது (Jung, 125-6; Ellenberger,  528).   . மேலும் இந்தக் குழுவானது மிகப் பெரியாதாகின்றபோது இக் குழுவின் கூட்டு உளவியலானது மிருகத்தினது உளவியலைப் போல இருக்கும் என்கின்றார். இதனால்தான் மிகப் பெரிய குழுக்களினது அல்லது அமைப்புகளினது தார்மீக அறப் போக்கு (moral aspect) என்பது எப்பொழுதும் சந்தேகத்துக்கு உரியது. ஏனனில் இவர்களது உளவியலானது குழுக்களின் (mob) உளவியலாக குறைந்து கீழ் இறங்குகின்றது. ஆகவேதான் இவ்வாறன குழுக்களினால் தார்மீக அறத்திற்கு எதிரான முன்மொழிவுகளைக் கூட மிக சாதரணமாக ஆதரிக்க முடியும். ஏனனில் குழுவில் அதாவது ஒரு சனக் கூட்டத்தில்  உள்ள எந்த ஒரு தனிநபரும் தனது செயலுக்கான பொறுப்பை உணர்வதில்லை என்பது மட்டுமல்ல அதைப் பற்றிய பயமும் கொள்வதுமில்லை (Jung, 125-6). மேலும் ஒரு கூட்டத்தில் அல்லது குழுவிலுள்ள ஒவ்வொரு மனிதரும் தனது தனித்துவதை அல்லது ஆன்மாவை இழந்து குழுவின் ஆன்மாவை கூட்டத்தின் ஆன்மாவை பெறுகின்றார். இந்த குழு ஆன்மாவனது தனிமனிதரின் அறிவைவிட குறைவானது (Ellenberger,  528).  ஆகவே எதையும் செய்வதற்கு துணிந்தவர்களாக தயாரானவர்களாகவே குழுக்களும் குழுக்களிலுள்ள தனிநபர்களும் இருக்கின்றார்கள். மேலும் தனி மனித அனுபவங்களிலும் பார்க்க இவ்வாறான கூட்டு குழு அனுபவங்கள் மீள மீள நடைபெறக் கூடியது என்கின்றார். இதனால்தான் அரசாங்கத்தின் அடிப்படையான வேலையே மனிதர்களது மன சக்திகளை திசைதிருப்பி கட்டுப்படுத்துவதே என்கின்றனர் (Ellenberger,  396).

 

உதாரணமாக ஒரு குழுவிலுள்ள ஒரு மனிதரின் உளவியலானது பெரிதடைகின்றது அல்லது வீக்கமடைகின்றது என்கின்றார் யங். அதேவேளை, பிரட்  மனித கூட்டமானது தம்மை தமது தலைவருடன் அடையாளப்படுத்துகின்றது என்கின்றர் (Ellenberger,  735). இவற்றின்; விளைவாக, மனித உளவியலின் குறிப்பிட்ட சக்தியானது தனது தனித்துவத்தையே தலைவருக்காக விட்டுக் கொடுக்கும் அளவிற்கு துண்டக் கூடியது என்கின்றார். குறிப்பாக இராணுவம் மற்றும் மத நிறுவனங்களைப் பொறுத்தவரை தனது தலைவர் அல்லது கடவுள் அல்லது சாமியார் தன் மீது அன்பு செலுத்துகின்றார் என்ற மாயமான நம்பிக்கை அவர்களை உறுதியாக பிணைத்திருக்கின்றது (Ellenberger,  735). இது அவர்களுக்கிடையிலான பொது அடையாளத்தினுடாக இலகுவாக நிறைவேறுகின்றது. இதுவே இக் குழுவின் ஆக்கிரமிப்பபு மனோபாவத்திற்கும் வழி உருவாக்குகின்றது. ஏனனில் ஓன்றுடனான அடையாளப்படுத்தல் என்பது மனிதர்களிடம் பிரக்ஞையை உருவாக்காது. மாறாக எதிர்ப்பு நிலையை உருவாக்கி பிரிவையும் விலகலையும் முறுகலையும் சாத்தியமாக்குகின்றன (Jung,  171). உதராணமாக மதத்தின் அடிப்படை இயங்கு சக்தியாக இருப்பது இந்தக் கூட்டுப்பிரக்ஞை (யின்மை) என்கின்றார் (Lachman, 138). இவ்வாறன கூட்டுப் பிரக்ஞையை(யின்மையை) பலசந்தர்ப்பங்கிளில் நாம் அனுபவித்திருக்கின்றோம். உதாரணமாக இசை நிகழ்ச்சிகள் மற்றும் உதைப்பந்தாட்டம் போன்ற நிகழ்வுகளிலும் இந்த அனுபவத்தைக் பெறலாம். இவ்வாறான கூட்டுப்பிரக்ஞை(யின்மை) ஆதிக்கம் செலுத்தும் பொழுது தனிமனிதர்கள் மாபெரும் சக்தியின் ஒரு பகுதியாகவே (கூட்டுப்)பிரக்ஞையின்மையுடன் இயங்குவர். இவ்வாறான இயங்குதலுக்கான உணர்வு மனிதர்களிடம் சாதாரணமானக காணப்படுகின்ற ஒன்றே. ஆனால் இவ்வாறான கூட்டுப்பிரக்ஞை(யின்மை)யானது ஹிட்லர் காலங்களில் மனிதர்கள் பின்பற்றியதைப் போல எதிர்மறையாகவும் செயற்பட்டுள்ளது. ஆகவேதான் இவ்வாறான செயற்பாடுகள் அறிவுபூரணமானவையல்ல என்கின்றார் (Lachman,138). உதாரணமாக ஒரு மனிதருக்கு கொடுக்கப்டும் மதிப்பை விட ஒரு நாட்டை அல்லது தேசத்தை அல்லது குழுவை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு சதாரண கொடிக்கான மதிப்பானது பல மடங்கு உயர்வானதாக இருக்கின்றது.  இந்த உணர்வைப் புரிந்துகொள்வதற்கு இவற்றை செய்கின்ற மனிதக் கூட்டங்களின் கூட்டுப்பிரக்ஞையை புரிந்து கொள்வது அவசியமானது.

 

இவ்வாறன குழு அடையாளத்தை மனிதர்கள் பெறுவதும் மிகவு சதாரணமானதும் அதனைப் பின்பற்றுவதற்கு இலகுவான வழியுமாகும். இது ஒரு சதாரண மனநிலையையே. இதன் மூலம் மனிதர்கள் ஆழமான அனுபவங்களுக்கு செல்வதில்லை. ஆனால் இது ஒரு மாற்றத்தை தனிமனிதரில் உருவாக்கும். இந்த மாற்றமானது ஆழமானதல்ல. ஆகவே நீண்ட நாட்களுக்கு தாக்குப்பிடிக்காது. இவ்வாறன குழுவிலிருக்கின்ற ஒரு தனி நபரை அதிலிருந்து அகற்றி விட்டால் குறிப்பிட நபர் மீண்டும் வேறு மனிதராகி விடுவார். மீண்டும் குழுவிலிருந்த அதே மனநிலையை உருவாக்க முடியதாதவாரகவே இருப்பார். ஏனனில் இவ்வாறன குழு அடையாளங்கள் என்பது பிரக்ஞையற்ற தன்மையால் உருவானதே. உதாரணமாக திரைப்படம் பார்க்கும் பொழுது பார்வையாளர்களுடன் ஒன்றுபடுதல் (Jung, 126). இப்படி பல ஆதாரங்களை இவற்றுக்கு காட்டலாம். உதாரணமாக இலங்கையில் நடைபெற்ற இன முரண்பாடுகள் அதனால் ஏற்பட்ட வன்முறைகள், போர்கள், சிறிலங்கா இராணுவத்தின் செயற்பாடுகளும் தமிழ் இயக்கங்கங்களிற்கு உள்ளுக்கும் இடையிலும் நடைபெற்ற பல சம்பவங்கள் இருக்கின்றன. இதன் அர்த்தம் இவ்வாறான குழுக்கள் நேர்மறையான தாக்கங்களை உருவாக்குவதில்லை என்பதல்ல. ஒருவருக்கு உற்சாகம் கொடுக்கவும் தன்னம்பிக்கையை அளிக்கவும் கூடியவை (Jung,  127). இந்த வேறுபாடானது குறிப்பிட்ட செயற்பாடுகள் பிரக்ஞை அல்லது பிரக்ஞையின்மையின் அடிப்படையிலா செயற்படுகின்றது என்பதைப் பொருத்தே அதன் விளைவானது அமைகின்றது.

 

இவ்வாறான கூட்டுப்பிரக்ஞையின்மையின் ஆழ்மனப் பதிவுகள் மனிதர்களின் உளவியலில் உயர்ந்த மதிப்பைக் கொண்டன. ஆகவே இவை அர்த்தமற்றைவ என இலகுவாக ஒதுக்கிவிடுவது முடியாத ஒரு விடயமாகும். ஏனனில் பொதுவாக மனிதர்களைப் பொருத்தவரை இவற்றை மறுப்பது அல்லது ஒதுக்குவது என்பது அவர்களுக்கு மிகப் பெரிய இழப்பாகும். ஆகவே இவ்வாறன புரிதலின் நோக்கமானது இவற்றை மறுப்பதல்ல. மாறாக இதனடிப்பைடயில் உருவாக்கப்படும் கட்டமைப்புகைள உடைத்து தனிநபரின் பார்வையில் உண்மையை காணச் செய்வதாகும். ஏனனில்;; ஒவ்வொரு மனிதர்களும் தமது உண்மையான ;பார்வையை இழந்தவர்களாகவே இருக்கின்றோம்.  இதேபோல் ஒரு நாட்டின் அல்லது தேசத்தின் கூட்டுப்பிரக்ஞையின்மையை புரிந்து கொள்வதற்கு அந்த நாட்டின் அல்லது தேசத்தின் மக்கள் கூட்டத்தின்; வரலாற்றை பன்முக தளங்களில் ஆய்வுகள் செய்வதன் மூலமே புர்pந்துகொள்ளமுடியும். இவ்வாறன புரிதல்களே இந்த மக்கள் கூட்டத்தை அதன் (கூட்டுப்)பிரக்ஞையின்மை (collective unconsciousness) நிலையிலான செயற்பாடுகளிலிருந்து விடுவித்து ஆரோக்கிமான (கூட்டுப்)பிரக்ஞையுடனான (Collective consciousness) செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வழிகாட்டும். அதாவது சமூக மாற்றமானது வெறுமனே சமூக கட்டமைப்புகளையும் மேற் கட்டுமானங்களையும் மாற்றவதால் மட்டும் ஏற்பட்டுவிடுவதல்ல. மாறாக ஒவ்வொரு மனிதரும், அந்த மனிதர் சார்ந்து வாழ்கின்ற மக்கள் கூட்டமும் (கூட்டுப்)பிரக்ஞையுடன் மாறுவதனுடாகவுமே நிலையான சமூகமாற்றத்தை நோக்கிய பயணமானது  சாத்தியமானது எனலாம்.

மீராபாரதி

18.12.2011

 

Lachman, G. A secret history of consciousness.

Jung, C.G. (1968). The Archetypes and the Collective Unconscious 2nd ed. vol.9.

Ellenberger,  H. F. (1970). The Discovery of the Unconscious – The Histroy and Evolution of Dynamic Psychiatry.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: