Posted by: மீராபாரதி | November 23, 2011

மரணித்தவர்களுக்கான மரியாதை: நமது முரண்கள்

மரணித்தவர்களுக்கான மரியாதை: நமது முரண்கள்

அருண்மொழிவர்மணின் “ஈழப் போராட்டத்தில் பெண் புலிகள்” (http://keetru.com/index.php?option=com_content&view=article&id=17404%3A2011-11-15-00-23-13&catid=4%3Areviews&Itemid=267) என்ற கட்டுரைக்கான விமர்சனம்

அண்மையில் பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற நூல் வெளியீட்டு விழாவில், ஈழப் போராட்டத்தில் பெண் புலிகள் , என்ற தலைப்பில் அருண்மொழிவர்மன் அவர்கள் உரையாற்றினார். இந்த உரையில் கூறப்பட்ட சில கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் தொடர்பான எனது கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் பதிவு செய்வது முக்கியமானது என நினைக்கின்றேன்.

அவரது மேற்குறிப்பிட்ட உரையின் பதிவில் “…“நினைவு தினங்கள் என்பவை நினைவு செய்வதற்காக மாத்திரமே. அவை வேறெதற்காகவும் அல்ல….” மற்றும் “…இன்றைய தினம் இறப்புகளைப் பற்றிய தினம். போரைப் பற்றிதல்ல. இவர்கள் அப்பாவிகள்…” என்ற ரிக் சலுட்டின் வசனத்தை நினைவு நாள் தொடர்பாக மேற்கோள் காட்டியிருந்தார். இவை ஆழமான பரிசீலனைக்கும் விமர்சனத்திற்கும் உரியவை. முதலாவது இச் சொற்றொடருக்கு பின்னியில் ஒரு ஆழமான அரசியல் இருக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அவர் கூறுவதுபோன்று இவை வெறும் நினைவு தினங்களோ அல்லது இறப்புகளை மட்டும் பற்றிய தினமல்ல. இவ்வாறான நினைவு தினங்கள் ஊடாக அரசியல் கருத்துக்களும் குறிப்பிட்ட தேசம் தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்களையும் மற்றும் தேசத்தின் மீதான அதீத பற்றையும் பொறுப்புணர்வையும் புதிய தலைமுறையினரின் மனங்களில் ஆழப்பதிவு செய்து அவர்களை உருவாக்குகின்றார்கள் ஆட்சியாளர்கள்;.

இரண்டாவது மரணித்தவர்கள் என்பதற்காக மரணித்த மனிதர்கள் அனைவரும் அப்பாவிகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட கட்டமைக்கப்பட்ட கருத்தாகும். ஏனனில் பொதுவாக இராணுவத்தினர் போர் நடைபெறும் காலங்களில் மனித விழுமியங்களையே கேள்விக்குள்ளாக்குகின்ற ஜனநாயக மீறல்களிலும் மற்றும் சித்திரவதை செய்றபாடுகளில் ஈடுபட்டவர்கள் என்பதை நாம் அறியாததல்ல. இதற்கு ஆதராமாக இன்றுவரை ஆப்பாகானிஸ்தான் ஈரான் லிபியா மற்றுமல்ல இந்தியா மற்றும் இலங்கை இராணுவங்கள் கூட போர்க்காலங்களில் எவ்வாறு செயற்பட்டனர் என்பது சாட்சியாகவும் ஆதாரமாகவும் இருக்கின்றனர். மேலும் முலாளித்துவ ஆக்கிரமிப்பு நாடுகளான அமெரிக்கா, கனடா, பிரிட்டிஸ் பிரான்ஸ் போன்ற நாடுகள் ஆகக் குறைந்தது முதலாவது உலகப்போரில் இருந்து என்ன செய்யதார்கள் என்பது நாம் அறியதாததல்ல. இந்த இராணுவத்தினர் தமது தலைவர்களின் சொல் கேட்டுத்தான் மந்தைக் கூட்டங்கள் போல் போருக்கு செல்கின்றார்கள். இதனால் இவர்கள் இறந்த பின் அப்பாவிகளாகி விடுவார்களா? இது எந்த வகையில் நியாயமாகும்? அப்படி எனில் அவர்கள் போர்க்காலங்களில் செய்த மனித உரிமை மீறல்களுக்கு அர்த்தம் என்ன? மேலும் மேற்குறிப்பிட்ட நாடுகளைப் பிரதிநித்துவப்படுத்தி போர்களில் மரணித்த இராணுவ வீரர்களை நினைவு கொள்ளுவது தொடர்பாக நாம் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளிலிருந்து வந்தவர்கள் கேள்விக்குhள்ளாக்க வேண்டும். இது தொடர்பாக மிகவும ;அவதானமாகவும் பிரக்ஞையுடனும் செயற்படவேண்டும். இந்தடிப்படையில் மேற்குறிப்பிட்ட கூற்று மிகவும் விமர்சனத்திற்கு உரியது என்றே கருதுகின்றேன். இவ்வாறன ஒரு கூற்றை தனது கருத்தை நிலைநாட்டுவதற்காக அருண்மொழிவர்மன் மேற்கோள் காட்டியமை எனக்கு அதிர்ச்சியாக இருந்ததுடன் மனவருத்ததைத்தையும் தந்தது.

இன்று கனேடிய அரசு தமது முதலாளித்துவ நோக்கங்களுக்காக ஜனநாயம் என்கின்ற பெயரில் பல நாடுகளில் ஆட்சி மாற்றங்களை உருவாக்குவதற்காக தமது இராணுவத்தினரை அனுப்புகின்றனர். இவ்வாறு அணுப்பப்பட்டு அந்த நாடுகளில் போரிடுகின்ற கனேடிய இராணுவத்தினரை எதிர்த்து நிற்கின்ற குறிப்பிட்ட நாட்டின் மனிதர்களை சித்திரவதை செய்கின்ற இந்த கனேடிய இராணுவத்தினரை அப்பாவிகள் என நாம் நினைவு கூறுவதா? இவர்களை நினைவு கூறுவதை சிறிலங்கா அரசாங்கத்தின் பேரினவாத அடக்குமுறைக்கு எதிராக போராடி மரணித்த போராளிகளை நினைவு கூறுவதுடன்; ஒப்பிடுவதா? அல்லது இந்தப் போராளிகளை நினைவு கூறுவதை நியாயப்படுத்துவதற்காக ஆக்கிரமிப்பு இராணுவத்தினருக்கு மரியாதை செலுத்தும் நினைவு நாளை ஆதரிப்பதா? ஆதாரமாக கொள்வதா? அப்படி எனின் தமிழ் பிரதேசங்களில் மரணித்த இலங்கை இந்திய இராணுவத்தினருக்கு அளிக்கப்படும் நினைவு நாளை என்னவென்று கூறுவது? அல்லது நாம் புலம் பெயர்ந்து (கனடா போன்ற) நாடுகளில் வாழ்வதால் அந்த நாட்டிற்காக வெளிநாடுகளை ஆக்கிரமித்து மனிதர்களை கொலை செய்து இனங்களை அழித்து மரணித்த குறிப்பிட்ட நாட்டின் (கனேடிய) இராணுவத்தினரின் நினைவு நாளை அந்த நாடுகளுடன் சமரசமாக வாழ்வதற்காக நினைவு கூறுவதா? நமக்குளேயே எவ்வளவு முரண்? இந்த முரண்கள் களையப்படவேண்டியவையல்லவா?

நண்பர்கள் சிலர் குறிப்பிடுவது போன்று புலிகளின் தலைமையும் அவர்களால் உருவாக்கப்பட்ட புலிப் போராளிகளும் நமது சமூகத்திலிருந்தே உருவானவர்கள். அவர்களது தவறுகள் எல்லாம் நமது சமூகத்தின ;தவறுகளே. மேலும் புலிகளின் ஆட்சிக் காலத்தில் மேலோங்கியிருந்து தேசியவாத கருத்துக்கள் ஆவர்களுடையது மட்டுமல்ல. தமிழ் தேசத்தின் மீதான அடக்குமுறையும் அதற்கு எதரான போராட்டமும் ஆரம்பமான காலங்களிலிருந்தே கட்டமைக்கப்பட்டு வந்துது என்ற கருத்துடன் எனக்கு உடன்பாடே. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பிரதான் ஐந்து ஈழத் தமிழ் விடுதலை இயக்கங்களுக்கும் இடையில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. அனைவரும் ஒரே வகையான ஆணாதிக்க ஆதிகாரத்துவ பண்புகளை; கொண்டவர்களாகவே இருந்துள்ளனர். அனைவரும் தமிழ் பேசும் மனிதர்களுக்கு எதிரதான செயற்பாடுகளை பல தடவைகள் முன்னெடுத்துள்ளனர். யாரிடமும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான சரியான கோட்பாடோ செயற்திட்டமோ இருக்கவில்லை. ஆகவே யார் மற்றவர்களை அழித்து ஆதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தாலும் புலிகளின் தலைமை என்ன செய்ததேர் அதையே செய்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் புலிகளின் தலைமை இந்த விடயத்தில் முந்திக் கொண்டதுடன் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை தனது கையில் எடுத்து ;தனித்துப் போராடி 15 வருடங்கள் ஆட்சி செய்து இறுதியர்க தன்னால் எதிர்த்து நிற்கா முடியாமல் அழிந்து போய்விட்டது. இதனால் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்பான விமர்சனமானது முன்வைக்கப்படும் பொழுது அது விடுதலைப் புலிகளை நோக்கியே முன்வைக்கப்படுகின்றது. ஆகவே இந்த விமர்சனங்கள் புலி எதிர்ப்பு விமர்சனங்களாக மட்டும் பார்க்கப்படத் தேவையில்லை. ஏனனில் நமது அடிப்படை ;நோக்கமே; அடக்கப்பட்ட மனிதர்களை விடுதலை ;செய்வதுதானே. ஆவர்கள் நலன் சார்ந்து தானே நமது பார்வைகள் இருக்கவேண்டும். மாறாக குறிப்பிட்ட கட்சியோ இயக்கமோ சார்ந்தது அல்லவே. இதன் அடிப்படையில் நான் ஒரு நடுநிலையாளர் அல்ல. எந்த மனிதர்கள் அடக்கப்படுகின்றார்களேர் அவர்கள் சார்ந்தே எனது குரல் மற்றும் எழுத்து இருக்கும். யார் அடக்குகின்றார்களோ அவர்களுக்கு எதிரானதாகவே அவை இருக்கும்.

ஒரு புறம் புலிகள் இயக்கத்தை பாசிஸ்ட்டுகள் எனக் கூறுவதன் மூலம் பல்வேறு காரணங்களாலும் சூழ்நிலையாலும் அவர்களுடன் இணைந்து போராடிய போராளிகளை பாசிஸ்ட்டுக்கள் என முத்திரை குத்தி அவமதிக்கின்றனர் ஒரு சாரார். மறுபுறம் புலிகளைத் தவிர்ந்த பிற இயக்கங்களில் இருந்தவர்களை புலிகளின் தலைமை கட்டமைத்த துரோகிகள் என்ற கருத்தாக்கத்தை உள்வாங்கி அவமதிக்கின்றனர் இன்னுமொரு சாரார்.

ஈழப் பெண் விடுதலை தொடர்பாக குறிப்பிடும் பொழுது “… வறட்டுத்தனமாக மேற்கத்தின் பெண்ணியக் கோட்பாடுகளையோ … முன்வையாமல் எமது இனஇ மதஇ தேசியஇ பண்பாட்டுஇ நடைமுறைஇ மானுடவியல் சார்ந்த பெண்ணிய நோக்கில் இந்தப் பிரதியை அணுகுவதே சரியானதாயிருக்கும்” என்கின்றார். இந்தப் பெண்ணிய நோக்கு என்ன என விளக்கியிருந்தால் இங்கு இது தொடர்பாக கேள்வி கேட்க வேண்டி ஏற்பட்டிருக்காது. ஈழத்து தமிழ் இனம், மதம், பண்பாடு கலாசராங்கள் மற்றும் நடைமுறை வாழ்வில் பெண்கள் எவ்வாறு பார்க்கப்படுகின்றனர், வைக்கப்படுகின்றனர், அடக்கப்படுகின்றனர், சுரண்டப்படுகின்றனர் என்பது நாம் அறிந்ததே. இவை எல்லாம் ஆணாதிக்க பார்வை கொண்ட கட்டுமானங்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. ஈழத்து தமிழ் பெண்கள் சிங்கள பேரினவாத அடக்கு முறையிலிருந்து மட்டுமல்ல இவ்வாறான தமிழ் தேசத்திற்குள் இருக்கின்ற அக அடக்குமுறைகளிலிருந்தும் விடுதலை வேண்டியே நின்றனர். இந்த அடிப்படையில் உருவானதுதான்; ஈழத்து தமிழ் பெண்களின் பெண்ணிய கோட்பாடும் கருத்தாக்கமும் ஆகும். வறட்டுத்தனமாக கோட்பாடுகள் பெண்ணியத்தில் மட்டுமல்ல மார்க்சியம் மற்றும் தேசியவாதம் என அனைத்துக் கருத்தாக்கங்களிலும்; இருக்கின்றன. இந்த வரட்டுத்தனங்களை விமர்சிக்கின்ற ஆரோக்கியமான கோட்பாடுகளும் மேற்கிலும் கிழக்கிலும் இருக்கின்றன. இவ்வாறான கோட்பாடுகளின் உதவிகளுடனும் அது தரும் வெளிச்சங்களிலும் தான் நாம் நமது தேசத்திற்கான கோட்பாடுகளையும் போராட்ட நடைமுறைகளையும் உருவாக்க வேண்டியவர்களாக இருக்கின்றறோம். இவ்வாறான ஆரோக்கியமான கோட்பாடுகளை புறக்கணிப்பது என்பதே நம்மை குறுகிய வறட்டுத்தானமான கோட்பாட்டு உருவாக்கத்திற்கு இழுத்துச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் அருண்மொழிவர்மன் தமிழ் சமூகத்திற்குள் நடைமுறையில் இருக்கின்ற பெண்களுக்கு எதிரான போக்கை கருத்தாக்கத்தை மறந்துவிட்டு பின்வருமாறு குறிப்பிடுகின்றார், “… மிகுந்த மனோவலிமையும்இ தைரியமும்இ தாம் எந்த விதத்திலும் ஆணாதிக்கத்துக்கு உட்பட்டிருக்கவேண்டியதில்லை என்பதை முழுமையாக உணர்ந்தும் வாழ்ந்து வந்தார்கள்.” இவ்வாறு தனது கட்டுரையின் ஆரம்பத்தில் தான் பெண் போராளிகளது வாழ்வை உள்ளார்ந்து உணர்ந்தது போல் உறுதியாக குறிப்பிடுகின்றார். ஆனால் தான் கூறியது உண்மையல்ல என்பதை தனது கட்டுரையின் இரண்டு இடங்களில் குறிப்பிடுகின்றார். முதலாவது “ஆதிலட்சுமிஇ … பாரதிக்கு என்ற கவிதையில் ஆணாதிக்க சமூகம் ஒன்றில் தன் அடிமைத்தனத்தை உதற முற்படும் பெண் எதிர்கொள்ளுகின்ற சிக்கல்களை” இ குறிப்பிடுகின்ற கவிதையை உதாரணம் காட்டுகின்றார். புpன் இறுதிப் பகுதியில் பின்வருமாறு கூறி தனது கருத்தின் மூலமே உறுதிப்படுத்துகின்றார். ““போரின் பின்னால்இ குறிப்பாக போரில் விடுதலைப் புலிகள் ராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் பெண் போராளிகள் அடைந்திருக்கின்ற கையறு நிலை பேசப்படவேண்டியதே.” இப் போராளி பெண்களுக்கு ஏற்பட்ட இவ்வாறன கையறு நிலை இலங்கை அரசாலும் இராணுவத்தாலும் மட்டும் ஏற்பட்டதல்ல. மாறாக தமிழ் சமூகத்தாலும் ஏற்பட்டது என்பதை அங்கிருந்துவரும் செய்திகளே தெரிவிக்கின்றன என்பதை அவர்; அறியாததல்ல.
இவரைப் பொறுத்தவரை புலிகளின் தலைமையும் அதன் கட்டுமானங்களையும் வலிந்து நியாயப்படுத்துபவராகவே இருக்கின்றார். இதனால் தான் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்தவர்களுக்குத் தெரியும் பெண்கள் அங்கு எவ்வளவு மதிக்கப்பட்டார்கள் என்பதும்இ எத்தனை சமத்துவத்துடன் பார்க்கப்பட்டார்கள் என்பதும்.” “எல்லா விதங்களிலும் ஆண்களுக்கு சமமாகவே மதிக்கப்பட்டார்கள் என்றும்இ ஆண்கள் ஈடுபட்டிருந்த அனைத்துத் துறைகளிலும் பெண்களும் ஈடுபட்டிருந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.” இவ்வாறு இவர் குறிப்பிடுவது இவரது பெண்ணியம் பெண் விடுதலை தொடர்பான அறியாமையை காண்பிக்கின்றதா அல்லது புலிகளை வலிந்து நியாயப்படுத்தலை காண்பிக்கின்றதா என்பதை வாசகர்கள் தான் தீர்மானிக்கவேண்டும்.

ஆணாதிக்க கருத்தாதிக்கம் என்பது அணைத்து சமூக கட்டமைப்புகளுக்குள்ளும் வாழ்வின் அம்சங்களுக்குள்ளும் உள்ளாவாங்கப்பட்டு அதுவே இயல்பான வாழ்வாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நமது சமூகங்களில் எது ஆணாதிக்கம் எனப் பிரித்தறிவது மிகவும் கஸ்டமான காரியம் தான். மேற்கு நாடுகளில் ஒரளவு முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் பெண்ணி கருத்தாதிக்கங்கள் இருந்தபோதும் நடைமுறையில் பெண்கள் எந்தளவு அடக்கி சுரண்டப்படுகின்றார்கள் என்பது நாம் அறியாததல்ல. இப்படி இருக்கும் பொழுது விடுதலைப் புலிகளின் ஆட்சியின் கீழ் சுதந்திரமாக பெண்கள் வாழ்ந்தார்கள் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அது விடுதலையல்ல சுதந்திரமல்ல. மனிதர்கள் பயத்தினாலும் அடக்குமுறையாலும் ஒழுக்காமாக வாழ்வது என்பது ஒருவர் விடுதலையடைந்து சுதந்திரமாக வாழ்கின்றார் என்பதைத் தீர்மானிக்காது. இது சவுதி போன்ற கடுமையான ;சட்டங்களை; நடைமுறைப்படுத்துகின்ற நாடுகளுக்கும் பொருந்தும் புலிகளின் ஆதிக்கத்துக்கள் வாழ்ந்தவர்களுக்கும் பொருந்தும் என்றே நினைக்கின்றேன். ஆகவே தமிழ் தேசத்தின் பெண்ணிய விடுதலையை நாம் மேலோட்டமாக பார்க்க முடியாது. இந்த அடிப்படையில் எழுதப்பட்டதே எனது “இரு தேசியங்கள்: இடையில் நசிபடும் மனித (பெண்) உடல்கள்” (https://meerabharathy.wordpress.com/2011/05/22/%e0%ae%87%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8/கட்டுரை.

இந்த அடிப்படையில் ஒரு புறம் புலிகளின் ஆயுதம் தாங்கிய பெண் போராளிகளை மட்டும் நினைவு கூறும் நாம், செல்வியைப் போன்ற சமூக மற்றும் பெண் விடுதலையை நேசித்த அரசியல் போராளிகளை மறந்துவிடுகின்றோம். அல்லது இவ்வாறான அரசியல் போராளிகள் கொல்லப்பட்டமையை அவர்கள் மாற்று இயக்கங்களை சோர்ந்தவர்கள் எனக் கூறி முத்திரை குத்தி நியாயப்படுத்தி விடுகின்றோம். புலிகளின் தலைமை செல்வியைப்; போன்றவர்களை கொலை செய்துவிட்டு அதை நியாயப்படுத்துவதற்காக இவர் மாற்று இயக்கமான ஈ.எ;ன.டி. எல் புடன்; இணைந்து செயற்பட்டவர் என புலிகளும் புலிகளின் ஆதரவாளர்களும் பரப்புரை செய்து நியாயப்படுத்துகின்றனர். புலித் தலைமையின் அராஜகங்களை மட்டுமல்ல தான் சார்ந்த புளொட் இயக்கத்தின் அராஜகங்களையும் மற்றும் சமூகத்தில் நிலவும் பொதுவான ஆணாதிக்க மனனோபாவங்களுக்கும் கருத்தாதிக்களுக்கும் எதிராக போராடியதற்காக கொலை செய்யப்பட்டவர் செல்வி. அருமொழிவர்மணின் கட்டுரையில், “ஆதிலட்சுமிஇ … பாரதிக்கு என்ற கவிதையில் ஆணாதிக்க சமூகம் ஒன்றில் தன் அடிமைத்தனத்தை உதற முற்படும் பெண் எதிர்கொள்ளுகின்ற சிக்கல்களை” இ எழுதியதாக குறிப்பிடுகின்றவர் இதற்கான பொருத்தமான உதாரணமான செல்வியை மறந்தது அல்லது மௌனமாக இருந்தது தற்செயலானதா? அதே நேரம்; விடுதலைக்காகப் போராடிய எல்லாப் போராளிகளையும் மதிக்க வேண்டும் என மட்டும்; கூறும் இவர்; செல்வி போன்றவர்களின் படுகொலையைப் பற்றி மௌனமாக இருந்தமை வருத்தத்திற்கும் விமர்சனத்திற்கும் உரியதே. இது முரண்பாடாக இல்லையா?

நான் அறிந்தவரையில் அல்லது அவரது நெருங்கிய நண்பர்கள் உறுதிப்படுத்துவது போல் அவர் குறிப்பிட்ட இயக்கமான ஈ.எ;ன.டி. எல் எவ் உடன் இணைந்தோ தொடர்பிலோ இருக்கவில்லை. அவ்வாறு இருந்திருப்பினும் அதற்காகவே அவரது கொலையை நியாயப்படுத்துவது நமக்குள் இருக்கின்ற முரண்நகையாகும். இவ்வாறு கூறுவது புலிகள் மட்டுமே பெண்களின் விடுதலைக்கு அல்லது பெண்ணிய செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இருந்தனர் என்பதற்காகவல்ல. அனைத்து தமிழ் இயக்கங்களும் ஆணாதிக்க சிந்தனைக்கு உட்பட்டு தாம் செய்த ஒவ்வொரு கொலைகளையும் இவ்வாறு முத்திரை குத்துவதன் மூலம் நியாயப்படுத்தியது தான். ஆகவே இவ்வாறான தாம் சார்ந்த இயக்கங்களின் கட்சிகளின் பார்வைகளிலிருந்து நாம் எப்பொழுது வெளிவருகின்றோமோ அப்பொழுது நியாயமாகவும் சரியாகவும் நேர்மையாகவும் சமூக விடுதலை நோக்கி சிந்திக்க முடியும். இதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் நாம் சார்ந்த இயக்கங்களை நியாயப்படுத்தாது அதற்கான சார்புத்தன்மைகளிலிருந்து வெளியே வருவதுதான்.
புலிகளின் தலைமை முன்னெடுத்த போராட்டத்தின் மீதான விமர்சனம் என்பது வெறுமனே அருண்மொழிவர்மன் குறிப்பிடுவது போன்று “புலிகள் மீது எனக்கும் விமர்சனங்கள் உண்டுஇ அவை பெரிதும் புலிகளின் ஜனநாயக விரோதப் போக்கை விமர்சிப்பவை.” மட்டுமல்ல. இது அவர்களது சுத்த இராணுவ கண்ணோட்டம் மற்றும் அரசியலற்ற தன்மை தேசம், தேசியம் தொடர்பான கோட்பாடுகள் என நீண்டு செல்கின்றன. இது ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் நமது தேசிய விடுதலைப் போரட்டதின் வரலாற்றுடன் விமர்சனபூர்வமாக பார்க்கப்படவேண்டிய ஒன்று, ஆகவே நமது அரசியல் மற்றும் ஆயுத விடுதலைப் பேராட்டத்தை தலைமை தாங்கிய கட்சிகள் இயக்கங்கள் அனைத்தும் விமர்சனத்திற்கு உட்பட்டவையே. மாறக புலிகளின் தலைமை (தாமே வலிந்து தனித்து) போரட்டத்தைக் கையில் எடுத்துப் போராடினார்கள் என்தற்காக அவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பது நாம் மீண்டும் தவறிழைக்கவே வழிவகுக்கும்;.
இன்று மாற்றுக் கருத்தினர் எனக் கூறுவோர் பலர் முன்பு வேவ்வேறு இயக்கங்களிலிருந்து சக போராளிகளாகப் தமிழ் தேச விடுதலைக்காகப் உண்மையாகவும் நேர்மையாகவும் போராடியர்வர்கள் தான். ஆனால் குறிப்பிட்ட இயக்கங்களின் தலைமையாலும் மற்றும் புலிகளின் தனித்துவ தலைமைக்கான விருப்பிற்காக இந்த இயக்கங்கள் தடை செய்யப்பட்டமையாலும் தம் விருமப்பத்திற்கு மாறாக புலம் பெயர்ந்தவர்கள் தான் இந்த மாற்றுக் கருத்தாளர்கள். இவர்களில் பலர் மீண்டும் சென்று போராட்டத்தில் ஈடுபட விரும்பியர்வகள் பலர். ஆனால் புலிகளின் தலைமை தமது தலைமையை ஏற்றவர்களை மன்னித்தார்கயே ஒழிய அவர்கள் புதிதாக இயக்கங்களையோ ;கட்சிகளையோ உருவாக்க அனுமதித்ததில்லை. ஆனால் இன்று இந்த மாற்றுக் கருத்தாளர்கள் என்வர்கள் செத்த பாம்புகள் என வேண்|டுமானால் கூறலாம். இவர்களால் இனி ஒன்றுமே செய்ய முடியாது என்பதுதான் எனது நிலைப்பாடு. வேண்டுமானால் எழுதுவதையும் விமர்சிப்பதையும் செய்யலாம். மேலும் இவர்கள் ஒரு அமைப்பாகவும் பலம் பொருந்திய சக்தியாகவும் இல்லை. ஆகவே நமது கவனம் செல்ல வேண்டியது மிகப் பெரிய தொடர்பு வலைப்பின்னலையும் புலம் பெயர் மக்களிடம் சேர்த்த பணத்தையும் கொண்டு பண பலத்துடன் நிறுவனமாகவும் சக்தியாகவும் இருக்கின்ற புலம் பெயர்ந்த புலி தலைமையையே. இவர்கள் செத்த பாம்புகள் அல்ல. உயிருள்ள பாம்புகள். இதன் பொறுப்புகளில் இருக்கின்ற பலர் 2008க்கு முன்பு புலிகளின் தலைமையால் அங்கிருந்து அனுப்பப்பட்டவர்களே. இவர்கள் புலம் பெயர்ந்த தேசங்களில் ஆடும் ஆட்டத்தைக் கொண்டே புலிகளின் தலைமை எவ்வாறன தன்மையை கொண்டிருந்தனர் என்பதை புரிந்து கொள்வது கடினமானதல்ல. மரணித்த போராளிகளின் நினைவு தினங்களை எந்தளவு இவர்கள் அவமதிக்கின்றார்கள் என்பது இன்று வெளிப்படையாக தெரிகின்ற ஒன்று. ஆகவே குறிப்பாக கழகத்திலிருந்த பலர் இன்று சுய விமர்சனம் செய்வதைப் போல இவர்களும் முதலில் சுய விமர்சனம் செய்ய வேண்டியவர்களே. மேலும் 2008ம் ஆண்டு மே 18 என்ன நடந்தது என்பதை அனதை;து தமிழ் பேசுகின்ற மனிதர்களுக்கும் பதில் கூற வேண்டிய பொறுப்பு உள்ளவர்கள். அடக்குமுறை தொடர்ந்த வண்ணம் இருக்கின்ற இந்த சூழலில் உடனடியான போராட்டம் சாத்தியமில்லாது இருக்கலாம். ஆனால் நாம் என்ன தவறு செய்தோம் எங்கே தவறு நிகழ்ந்தது என்பதை பார்த்து; நம்மை; மீளுருவாக்கம் செய்கின்ற காலமே இது.

இதற்கு நண்பர் ஒருவர் குறிப்பிட்டதைப் போல ஈழத்தில் இருந்து வருகின்ற முக்கியமான படைப்புகளான தீபச் செல்வனினதும் யோ கர்ணனினதும் பதிவுகள் கவனத்திற்கு உரியவை. தீபச் செல்வனின் பதிவுகளின் உண்மைத்தன்மை நூறு வீதம் எனக் கொண்டாலும் யோ. கர்ணணின் பதிவுகள் ஆகக் குறைந்தது 25 வ|Pதமாவது உண்மைத்தன்மை கொண்டதாக இருக்காத என்பதை கருத்தில் எடுத்து செயற்படுவதே சிறந்தது.

அருண்மொழிவர்மன் பின்வருமாறு எங்களைப் பார்த்துக் கேட்கின்றார். “ஈழம் பற்றிய பேச்சுக்கள் வரும்போதெல்லாம் எம்மால் எதையும் செய்ய முடியாது என்பதுதான் யதார்த்தம் என்று சொல்லப்படுவதை அண்மைக்காலமாக நான் கவனித்தும் எதிர்கொண்டும் இருக்கின்றேன். இந்த மண்டபத்தில் இருப்பவர்கள் மிகப் பெரும்பான்மையானவர்கள் எழுத்தாளர்கள் அல்லது படைப்பாளிகள் அல்லது அரசியல் செயற்பாட்டாளர்கள். எம்மால் உண்மையாகவே ஏதும் செய்யமுடியாதா?
மன்னிக்கவேண்டும் அருண்மொழிவர்மண் எதுவுமே செய்யமுடியாது என்பது தான் யதார்த்தமான உண்மை. இதற்கு காரணம் எனக்கு என்னில் நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் தனி ஒருவரால் ஒன்றுமே செய்ய முடியாது. கூட்டு வேலை ஒன்றினுடாக மாத்திரமே நமக்கான நமது ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை தேசத்தின் விடுதலையையும் அடக்கப்பட்ட ;மனிதர்களையும் விடுதலை செய்ய முடியும். ஆனால் அவ்வாறன கூட்டு உழைப்பிற்கு உங்களைப் போன்றவர்களிலும் கடந்த காலங்களில் நான் ஈடுபட்ட அரசியல் செய்ற்பாட்டாளர்கள் மீதும் நம்பிக்கை இல்லை. இவ்வாறு கூறுவதற்கு மீண்டும் மன்னிக்க வேண்டும்.

நாம் இன்று என்ன செய்யலாம் என்பது தொடர்பாக ஒரு முன்மொழிவு “புலம் பெயர்ந்த மனிதர்களின் பொறுப்பு என்ன? – ஒரு முன்மொழிவு” ( https://meerabharathy.wordpress.com/2011/08/05/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf/) அனுப்பியிருந்தேன். அதற்கு கிடைத்த பதில்களும் நாம் ஒன்றுமே செய்ய முடியாது என்தைதான் உறுதிப்படுத்துகின்றன.

குழந்தைப் போராளிகள் தொடர்பாக அடிக்கடி குறிப்பிடுகின்றீர்கள். ஆகவே இது தொடர்பாக தங்களது நிலைப்பாடு என்ன என்பதையும் மேற்கில் அவர்கள் எவ்வாறு பார்க்கப்படுகின்றார் மூன்றாம் உலக நாடுகளில் எவ்வாறு பார்க்கப்படுகின்றார்கள் என்பதையும் விளக்கி ஒரு கட்டுரை எழுதுவீர்களா?
இறுதியாக விமர்சனங்கள் என்பதை நேர்மையுடனும் உண்மையுனும் முன்வைக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறன ஒரு பண்பை பொதுவில் காணமுடியாமை தொடர்ந்தும் நம்பிக்கையினத்தையே தருகின்றது.

இல்லை நம்பிக்கை தருவீர்களாக இருந்தால். நமது கடந்த காலங்களை வேரறுத்துக் கொண்டும் ஒவ்வொருவரும் சுய விமர்சனத்திற்கும் சுய மாற்றத்திற்கு தயார் என்று கூறுங்கள் உங்களுடன் நான் எப்பொழுதும் நிற்பேன்.

தமிழ் தேசத்தின் விடுதலைக்காகப் போராடி மரணித்த போராளிகளின் உறவுகளும் நண்பர்களையும் எனது சொற்கள் பாதித்திருந்தால் என்னை மன்னித்து கொள்ளுங்கள். அதேவேளை என்னையும் புரிந்து கொள்ளுங்கள்.

மீராபாரதி
நவம்பர் 22, 2011

 

Advertisements

Responses

 1. ஒரு கட்டுரை வடிவில் உங்கள் கருத்துக்களை முன்வைத்ததற்கு நன்றிகள். எனக்கு ஞாயிறூ, திங்கள், புதன் வகுப்பு என்பதாலும், வெள்ளி இரண்டு வேலையும், சனி மாலை வேலை என்பதாலும் பதிலளிக்க சிலநாட்கள் (எப்படியும் ஒரு வாரம் ) எடுக்கும். நிச்சயம் பதிலளிக்கின்றேன்

 2. நட்புடன் அருண்மொழிவர்மனுக்கு…
  தங்கள் உடனடி குறிப்புக்கு நன்றிகள்.
  இவ்வளவு கஸ்டப்பட்டு வேலை செய்யும் நீங்கள் முதலில் உங்களை உங்கள் உடல் மற்றும் மன நிலைகளைக் கவனித்துக் கொள்ளுங்கள்…இதுவே மிக முக்கியம்…
  மேலும் உங்கள் குழந்தையையும் கவனித்துக் கொள்ளுங்கள்…
  இதற்குப் பிறகும் நேரம் இருந்தால் ஆறுதலாக எழுதுங்கள் உங்கள் பதில் கட்டுரையை…
  அவசரம் ஒன்றுமில்லை….
  நல்ல மனநிலையில் இருந்தால் மட்டுமே; நாம் ஆரோக்கியமான எண்ணங்களை எழுத முடியும் என்பது எனது புரிதல்…
  மீண்டும் நன்றிகள்

 3. a comment by a friend….
  The trials, and arguments against the Cambodian communist regime is a very successful by Vietnamese and western propaganda..
  we could draw parallels between [the] propaganda against LTTE and the Pol Pot regime.. […this] was not trying to justify the Pol Pot regime, but … encouraging to view things from anthropological perspective.. I think we should do the same with LTTE.. LTTE is not a one single movement, and the leadership is not just that of LTTE.. It’s the continuum of the age-old Tamil nationalism.. we can’t ignore that continuum and just blame on LTTE’s leadership.. It’s all about space, and place, and the continuity of that place (the locale), also the impact of broader narratives of wider space.. .. .. of course it will bring no problem for those who view the Cambodian regime as genocidal, and want to establish that LTTE was also a genocidal militant group.. But I think by putting all the blame on LTTE, we are conveniently, and very cleverly ignoring the faults that are ours, and that of our whole discourses on nationalism and politics.. .. LTTE is a typical product of Tamil nationalism that dominated our discourses since the beginning of 1920’s, it’s not the cause, it’s just a consequence.. It couldn’t have been otherwise…- by N

 4. நண்பர் ஒருவரின் கருத்து….
  நீங்கள் இராணுவம் குறித்து வைக்கும் கருத்துக்களில் எனக்கும் உடன்பாடே.
  ஆனால் பிரச்சினை என்னவென்றால் கனடாவில் கொண்டாட்டப்படும் ‘நவம்பர் 11 நினைவுநாளில்’ அதிகமாய் 1ம்ஃ2ம் உலகமகாயுத்தங்களில் இறந்தவர்களே முன்னிலைப்படு…த்துவதை நாமறிவோம்.
  1ம்ஃ2ம் உலகமகாயுத்த வீரர்களை முன்னிலைப்படுத்தத் தொடங்கி இப்போது வரை இறந்த அனைத்து கனேடிய இராணுவத்தை நினைவுகூர்கிறார்கள். [ஆனால] 1ம்ஃ2ம் உலகமகாயுத்தத்தில் போரிட்ட இராணுவத்திற்கும், இன்று ஆப்கானிஸ்தானில் அனுப்பப்பட்டிருக்கும் இராணுவத்திற்குரிய வேறுபாடுகளைப் பற்றிய புரிதலோடு நாம் பேசவேண்டும் என்பதே

  உங்களின் வாதப்படி ‘ஒடுக்கப்படுகின்றவர்களுக்காய்’ போராடுபவர்கள் என்பதை எடுத்துக்கொண்டால் கனேடிய இராணுவமும் ஹிட்லர் என்ற ஒடுக்குமுறையாளருக்கு எதிராகப் போராடினவர் என்றொரு எதிர்வாதத்தை வைக்கமுடியும். எனவே ‘ஒடுக்கப்படுகின்றவர்கள்’ என்பதை பொதுவாக (அதாவது கறுப்புஃவெள்ளையாக) எல்லா இடங்களிலும் வைத்துப் பார்க்கமுடியாது என்பதே எனது கருத்தாகும். உதாரணமாக தமிழர் என்ற அடையாளம் சிங்களவர் ஒடுக்கும்போது அது ஒடுக்கப்படும் இனமாகவும்இ அதேசமயம் முஸ்லிம்களைத் துரத்தியதால் இன்னொருவகையில் ஒடுக்கும் இனமாக இருப்பதையும் நாமறிவோம். எனவே தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள் என்கின்றபோது எங்கேஃஎந்தச் சந்தர்ப்பத்தில் என்ற கேள்வியை எழுப்பி அதன் பின்னணியைக் கூறினாலே பொருத்தமாக இருக்கும். …

  உதாரணமாய் ஸ்ராலின் பற்றி நாமனைவரும் அறிவோம். ஆனால் அவர் முன்வைத்த தேசியமே நாஜிகளுக்கு எதிராக வெற்றிகொள்ளும்வரை போராடும் ஒரு மனோநிலையைஇ மொஸ்கோ விழாது தடுத்திருக்கின்றது. ஹிட்லருக்கு எதிராகப் போராடும்போது ஸ்ராலினை …நாம் ஒடுக்கியவருக்கு எதிராக வைத்தே பார்க்கவேண்டியிருக்கிறது. அதேசமயம் அவர் செய்த உட்படுகொலைகள்ஃகுலாக்குகளை வைத்து அவரை ஒடுக்குமுறையாளராகப் பார்க்க வேண்டியிருக்கின்றது. ஏன் இன்றைய யூதர்களின் வரலாற்றைப் பேசும்போது கூட நமக்கு அவ்வாறான வெவ்வேறான விதமார் பார்வை தேவையாக இருக்கிறதல்லவா?

  அதேபோன்றுதான் புலிகளையும் வெவ்வேறு பின்னணியில் வைத்தே பார்க்கவேண்டியிருக்கிறது. நம்முடைய தமிழ் ஆய்வாளர்கள் தவறவிடுகின்ற புள்ளியும் இதுதான்.

  ஒரு உதாரணத்திற்கு, புலிகளின் தற்கொலைப் படை பற்றி நாம் உடனே எழுந்தமானமாக எழுதிவிட முடியாது. இது நமது வரலாற்றில் பலிகொடுத்தல் என்ற சடங்கிலிருந்து நீட்சியான ஒன்று. நாம் அந்தத் தொடர்ச்சியைப் பார்க்காது ஒரு துண்டை மட்டும் எடுத்து முழுவரலாறாகப் பேசுவதுதான் ஆபத்தானது. உண்மையில் இந்தப் பலிகொடுத்தல் சடங்கு பற்றி நாகார்ஜூனனும், தமிழவன் (கொஞ்சமும்) எழுத முற்பட்டிருக்கின்றார்கள். ஆனால் வழமை போல எல்லாவற்றிற்கும் உடனேயே தீர்வும்இ எதிர்வினையும் செய்யும் தமிழ் மனங்கள் இந்தப்புள்ளியைப் பற்றி கவனிக்கவேயில்லை….
  ….

  நாங்கள் வேண்டுமென்றால் எங்கள் விருப்புஃவெறுப்புக்கேற்ப புலியை அடிக்கவோ ஆராதிக்கவோ மட்டுந்தான் முடியும். இதற்கான காரணங்களை நாம் மானுடவியல் பார்வையில் ஆராயாதவிடத்துஇ எதிர்காலத்தில் புலிகளை விட இன்னும் மோசமான ஒரு இ…யக்கம் தோன்றுவதைத் தடுக்கவே முடியாது என்றே நினைக்கின்றேன்.

  சோழரும்ஃசேரரும்ஃபாண்டியரும் ஒரேமொழியைப் பேசிக்கொண்டு ஏன் தங்களுக்குள் அடிபட்டுக்கொண்டிருந்தார்கள் என்று பல இயக்கங்கள் தோன்றிய தொடக்க காலங்களிலேயே நாம் ஆராய்ந்திருப்போமாயின் சகோதரப்படுகொலைகளை இந்தளவுக்குச் செய்து நம் தலையில் நாமே மண்ணள்ளிப் போட்டிருக்கமாட்டோம் அல்லவா?

  எனவே இவ்வாறான வித்தியாசங்களை நாம் கவனத்தில் கொள்வது அவசியம் என நினைக்கின்றேன்.

  மற்றும்படி எந்த இராணுவமாய் இருந்தாலென்ன? அவை எங்கேயும் எப்போதும ஒரேமாதிரியே இயங்கக்கூடியவைதான். அமைதிப்படை என்ற பெயரோடு இந்திய இராணுவத்தின் ‘நற்செயல்களை’ நேரில் பார்த்த சாட்சிகளல்லவா நாம்?/


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: