Posted by: மீராபாரதி | September 19, 2011

பிரக்ஞை: மனித மூளையில் இருக்கின்றதா?

பிரக்ஞை: மனித மூளையில் இருக்கின்றதா?

 

பிரங்ஞை என்பது மனிதர்களுக்கு அதுவும் நவீன மனிதர்களுக்கு மட்டுமே இருக்கின்றது எனவும் ஆதி கால மனிதர்களிடம் இல்லை எனவும் ஜுலியன் nஐயன்ஸ் (Julian Jaynes) போன்ற உளவியளாலர்கள்  வாதிடுகின்றனர் (Gerd Sommerhoff 3). மறுபுறம் மிருகங்களுக்கு பிரக்ஞை என்பதே இல்லை என வாதிடுகின்றவர்களும் இருக்கின்றார்கள். ஆனால் இன்னுமொரு உளவியளாலரான பிளக்மோர் (Blackmore); சூழலுடன் பங்குபற்றி ஒன்றினைந்து செயற்படுகின்ற அனைத்துக்கும் பிரக்ஞை இருக்கின்றது என கூறுகின்றர்;. ஆகவே மிருகங்களுக்கும் பிரக்ஞை இருக்கின்றது என்கின்ற வாதமும் உண்டு. மிருகங்களிடம் இருக்கின்ற பிரக்ஞை என்பது ஒற்றைப்பரிணமானமானது அதாவது தட்டையானது என்கின்றார் ஓரேஞ் (Orange) (Gary Lachman 36). இதை பிரபஞ்ச பிரக்ஞை (Cosmic Consciousness) என்ற நூலை எழுதிய ஆர்.எம்.பக்ஸ் (R.M.Bucke) என்பவர் உணர்தல் மனம் (Perceptual mind) என்கின்றார் (Lachman 8). இது ஐம்புலன்களின் உணர்வுகளுடன் தொடர்புடையதாகும். அதாவது படம் பிரதிகள் பதிவு செய்யப்படுவதுபோல் மிருகங்களில் இது செயற்படும் என்கின்றார். இதற்குமேல் பிரக்ஞை என ஒன்று மிருகங்களிடம் இல்லை என்கின்றார் ஓரேஞ் (Lachman 37). இவ்வாறான விவாதங்கள், மனிதர்களுக்கு மிருகங்களுக்கும் இடையிலான பிரக்ஞையில் பல வேறுபாடுகள் உண்டு என்கின்ற முடிவுக்கு வருகின்றனர். ஏனனில் மனிதர்களிடம் இருக்கின்ற பிரக்ஞை மிகவும் வேறுபட்டது. முக்கியமாக சுய பிரக்ஞை (self-conscious) என்பது மனிதர்களிடம் மட்டுமே உள்ளது (Lachman  8). இதை ஆர்.எம்.பக்ஸ் (R.M.Bucke) கருத்தை உருவாக்கும் மனம் (conceptual mind) என்கின்றார். இவ்வாறு மனிதர்கள் மிருகங்களில் இருந்து பல தளங்களில் வேறுபடுகின்றனர் என்கின்றனர். மேலும், மனிதர்கள் ஒரு நாவலைலோ நூலையோ வாசிக்கும் பொழுதோ அல்லது படத்தைப் பார்க்கும் பொழுதோ, அவர்கள் இருக்கின்ற இடத்தில் இருந்து கொண்டே இன்மொரு இடத்தில் காலத்தில் சஞ்சரிக்கலாம். இது முக்கியமானதொரு வேறுபாடு என்கின்றனர் (Lachman, 209). இவற்றுக்கு அப்பால், டானியல் டேன்ட் (Daniel Dennett) போன்றவர்கள் பிரங்ஞை என்பது ஒரு கலாசரா உருவாக்கம் என்கின்றனர் (Sommerhoff 3). இதேபோல் ஜோன் லொக் (John Loock) என்பவர் ஒரு மனிதரின் மனதில் ஒடுகின்றதை பற்றிய பார்வையே பிரக்ஞை என்கின்றார் (Lachman, 10) இவ்வாறு பிரக்ஞை தொடர்பாக பல ஆய்வுகள் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றனபோதும், இக் கட்டுரையின் நோக்கம் மனிதர்களுக்குப் பிரக்ஞை இருக்கின்றதா? அப்படி இருப்பின், பிரக்ஞை என்பது உண்மையில் என்ன? அது மனிதரில் எங்கே இருக்கின்றது? மூளையிலா? மூளையில் இருப்பின் அங்கிருந்து எவ்வாறு செயற்படுகின்றது? போன்ற கேள்விகளுக்கான விடைகளைத் தேடுவதற்கு முயற்சிப்பதேயாகும்.

 

வரலாற்றில் புரதான எகிப்தியர்கள் பிரக்ஞையானது இதயத்தில் இருக்கின்றது என நம்பினர். இதனால்தான் இயத்தின் அறிவு என குறிப்பிடுகின்ற அவர்கள்;, மம்மி உருவாக்கத்திhல் மூளையைவிட இதயத்தையே அதிகம் பாதுகாத்துள்ளார்கள். இதேவேளை ஆதி கிரேக்கர்களுக்கு, பிரக்ஞை என்பது வயற்றின் மேல் பகுதியில் இருப்பதாக கருதினார்கள். ஜப்பானிர்களும் தமது பொக்குளுக்கு இரண்டு அங்குலம் மேலாக இருப்பதாக கருதினார்கள்.  விஞ்ஞர்ன பரிசோதனையின் முதல் விஞ்ஞானியான அரிஸ்டோட்டலும் கூட மூளைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்கின்றனர் (Max Velmans). இதனால்தான் மனித வாழ்வு தொடர்பான புரிதலில் பிரக்ஞையே மிகவும் குறைந்தளவு புரிதல் கொண்டதாக (மேற்கு உலக விஞ்ஞர்னம்) இருக்கின்றது என்கின்ற கருத்து நிலவுகின்றது (Sommerhoff 1). ஆகவேதான் தத்துவயிலாளர் டானியல் டேனிட் (Daniel Dennett) கடைசியாக இருக்கின்றதும் அறியவேண்டிய மர்மம், பிரக்ஞை எனவும் ஆனால் அனைவரும் மிகவும் பயங்கரமாக குழப்பத்தில் ஆழந்திருக்கின்ற ஒரு வியடம் இது எனவும் கூறுகின்றார் (Sommerhoff 1). இருப்பினும் நாம் வாழ்கின்ற, இன்றைய உலகத்தில் பிரக்ஞை என்பது மண்டைக்குள் இருக்கின்ற மூன்று இறாத்தல் நிறையுள்ள மூளையில் நடைபெறுகின்ற இரசாயண மற்றும் மின்னலை இயக்கத்தினாலும் உருவாக்கப்படுகின்றது என நம்பப்படுகின்றது. ஏனனில்; பெரும்பான்மையான விஞ்ஞானிகள் மூளையின் செயற்பாட்டில் பிரக்ஞையின் தாக்கம் குறிப்பிடத்தக்கது என்கின்றனர் (புநசன Sommerhoff 3). ஆகவேதான் பிரக்ஞை மூளையில் இருக்கின்றதா என்கின்ற ஆய்வுகள் இன்று பிரபல்யமாக இருக்கின்றன. அவ்வாறு மூளையில் இருக்கின்றது எனின் எங்கு இருக்கின்றது எனவும் எவ்வாறு செயற்படுகின்றது என்பதையும் அறிவது முக்கியமான ஒன்றாக இருக்கின்றது.

 

500,000ம் ஆண்டுகளுக்கு முன்பு மனித மூளையில் ஒரு முக்கிய மாற்றம் நடைபெற்றது என கடந்த கட்டுரையில் பார்த்தோம். இதன் பின் பல மாற்றங்கள் மனிதர்களிலும் அவர்களது மூளையிலும் நடைபெற்றுவந்திருக்கின்றன. இன்றைய மனித மூளையானது இரண்டுவிதமான மனித முதாதையர்களின் பகுதிகளைக் கொண்டுள்ளது என்கின்றார் ஸ்டான் கூச் (Stan Gooch). ஒன்று குரோ-மன்கோன்ஸ் (Cro-Magnons) என்கின்ற மனித இனத்தைச் சேர்ந்தது. இவர்கள் பகுத்தறிவு, தர்க்கீகம் மற்றும் ஆண் தன்மையைக் கொண்ட வெளி உலகினுடன் தொடர்புடையவர்களாகும்.. இவ்வ்hறன பண்புகள் கொண்ட பகுதி மூளையின் பெரு மூளை புறணி (cerebral cortex) உடன் தொடர்புடையது. இன்னுமொரு தன்மையான உள்ளுணர்வு மற்றும் பெண்மை ஆற்றல்கள் மனித முதாதையர்களான நீன்டெர்தல்கிடமிருந்து (Neanderthal) கிடைத்ததாகும் என்கின்றார்.   இதன் தன்மையானது மனிதரின் அக உலகுடன் தொடர்புடையதாகும். இவர்களுக்கு மிகப்பெரிய சிறு மூளை ((cerebellum) மற்றும் உப கோர்டிகள் (sub-cortical) இருந்துள்ளது. இந்த இரு முதாதையர்களின்; இணைவானது இன்றைய மனிதர்கள் முழுமையிலிருந்து இயற்கையிலிருந்து பிரிவதற்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது (Lachman, 140). இயற்கையிலிருந்து ஏற்பட்ட இவ்வாறான பிரிவு உடனடியாக நடைபெற்ற ஒன்றல்ல. மாறாக காலோட்டத்துடன் தொடர்ச்சியாக நடைபெற்ற ஒன்றாகும் என்கின்றனர்.

 

மனித மூளை தொடர்பான ஆய்வுகள் 1980களில் மிகப் பிரபல்யமானது. பாசிட்ரான் உமிழ் வெட்டுவரைவு (PET/Positron Emission Tomography) மற்றும் வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவு (functional magnetic resonance imaging /fMRI) போன்ற நவீன உபகரணங்களின் உதவியுடன் மூளையின் தொழிற்பாடுகள் மிகவும் ஆழமாக ஆராயப்படுகின்றன. இவ்வாறான ஆய்வு முயற்சிகள் பிரக்ஞையின் இருப்பும் அதன் முக்கியத்துவமும் தொடர்பான தரவுகளையும் வெளிப்படுத்துகின்றன (Sommerhoff 148). ஆகவே முதலில் மூளையின் முக்கிமானதும் பிரதான பகுதிகளையும் அமைப்பு வடிவங்களையும் அதன் செயற்பாடுகளையும் மேலோட்டமாகக் குறித்துக் கொண்டு இவை எவ்வாறு பிரக்ஞையுடன் தொடர்பாக இருக்கின்றன என்பதை இறுதியாகப்; பார்ப்போம்.

 

மூளையின் பிரதான மேற்பகுதிகள் என்பவை, முன் மடல் (frontal lobe), சுவர் மடல் (parietal lobe), பக்க மடல் (temporal lobe), பிடரி மடல் (occipital lobe) அல்லது பார்வைப் புறணி (visual cortex) ஆகும். மனிதர்கள் ஒரு விடயத்தை அறியும் பொழுதோ அல்லது பார்க்கும் பொழுதோ, நமது தேவைகளாலும் வெளித்தாக்கங்களாலும் மற்றும் நமது ஐம் புலன்களாலும் ஊந்தப்பட்டு பல தகவல்கள் மூளைக்கு அனுப்பப்படுகின்றது. இது உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும் அதேவேளை வெளி உலகம் தொடர்பான தகவல்களைப் (என்ன? எங்கே? நடைபெறுகின்றன) என்பவற்றை பிடரி மடல் (occipital lobe) அல்லது பார்வைப் புறணி (visual cortex) இல் பதிவு செய்து நமது பிரக்ஞைக்கு மீண்டும் தருகின்றது. ஆனால் உள்வாங்கப்படுகின்ற அல்லது பதிவு செய்யப்படுகின்ற அனைத்து தகவல்களும் மனிதப் பிரக்ஞைக்கு கிடைப்பதில்லை (Sommerhoff, 33). இவ்விடத்தில் இரண்டுவிதமான செயற்பாடுகளை சமாந்தரமாக செய்கின்றது. ஒன்று தான் பெற்ற விடயங்கள் தொடர்பான ஒரு கற்பனை ஒன்றையும்; பதிவு செய்து அனுப்புகின்றது. அல்லது நமது மனம், உணர்வுகள், எண்ணங்கள் இந்த தகவல்களைப் பெற்று  அதற்கமைய செயற்படுகின்றன. இவ்வாறு இரண்டு முறைகளில் வருகின்ற தகவல்கள் மூளையின் கடந்தகால நினைவுகளுடன் பொருந்திப் பார்த்து அதற்கமைய தனது வழமையான செயற்பாடுகளை முன்னெடுகின்றது. மாறாக கடந்த கால நினைவுகளுடன் பொருந்திப் போகாதபோது புதிய செயற்பாடுகளை அல்லது நடத்தைகளை மேற்கொள்;கின்றது (Sommerhoff, 16). இவ்வாறு மூளை செயற்படும் பொழுது, பார்க்கின்ற வடிவங்களையே முதலில் விரைவாகப் பதிவு செய்கின்றது. இடது கண் பார்வையினால் செல்பவை மூளையின் வலது பக்கத்திலும் வலது கண் பார்வையினால் செல்பவை மூளையின் இடது பக்கத்திலும் தமது தகவல்களைப் பதிவு செய்கின்றன. இதேபோல் வலது மூளை உடலின்  இடது பக்கத்தையும் இடது பக்க மூளை உடலின் வலது பக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றது அல்லது செயற்படுத்துகின்றது.  

 

மூளையின் முக்கியமான உட்பகுதிகள் பின்வருவனவை ஆகும். பெரு மூளை புறணி அரைக் கோளங்கள் (cerebral hemispheres),  மூளைத் தண்டு (brainstem), சிறு மூளை (cerebellum), முன் மூளை உள்ளறை (thalamus) மற்றும் அமைகடலா (amygdale). இவை ஒவ்வொன்றும் மனிதருக்கு தேவையான முக்கியமான பணிகளை அல்லது தேவைகளை செய்வன அல்லது கட்டுப்படுத்துவன. உதாரணமாக நமது பசி தாகம் காமம் பயம் போன்ற சகல உணர்வுகள் உணர்ச்சிகள் போன்றவற்றை வெளிப்படுத்துவன. மூளை தொடர்பான விரிவான விளக்கம் மேலும் தேவை எனின் தமிழ் விக்கிபீடியாவைப் பார்வையிடவும். அதற்கான இணைப்பை உசாத்தூணைக் பகுதியில் தருகின்றேன்.

 

இவ்வாறன மூளையின் பலவிதமான இயக்கத்தின் போது 100 பில்லியன் நீயூரோன்கள் (nurons) தகவல்களைப் பரிமாற செயற்படுகின்றன. இந்த நீயூரோன்களுக்கு பல கிளைகள் போன்ற பகுதிகள் இருக்கின்றன. இந்தக் கிளைகளின் நுணிப்பகுதியில் இருந்தே மற்றுமொரு நீயூரோனுக்கான தகவல்கள் axon என்பதன் மூலம் பரிமாறப்படுகின்றன. இவ்வாறான நீயூரோன்களினன் இயக்கம் நமது முள்ளம் தண்டுகளினுடாகவும் பயணித்து மூளையையும் உடலின் அனைத்துப் பாகங்களையும் இணைக்கின்றன (Sommerhoff, 142). இந்தப் பரிமாற்றத்தின் போது ஒரு நீயூரோனிலிருந்து குறைந்;தது 100,000 எண்ணிக்கையான தகவல்கள் மற்ற நீயூரோன்களுக்குப் பாய்கின்றன. இவ்வாறு பாய்கின்றபோது ஏற்படுகின்ற இடைவெளிப் பாச்சலை synapses எனக் கூறுகின்றனர் (Sommerhoff, 155). இந்த இடைவெளி திண்மமாகவும் இருக்கின்றது திரவமாகவும் அல்லது ஒன்றுமற்ற வெளியாகவும் இருக்கின்றது. இது பிரக்ஞையையும் அதன் தன்மையையும் அறிவதற்கு முக்கியமாக குறித்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

 

இவ்வாறு செயற்படுகின்ற மூளை மூன்று முக்கியமான செயற்பாடுகளை மேற்கொள்கின்றது என கேம்பிரிஜ் பல்கலைக்கழ பேராசிரியர் ஜெயராட் சோமரிவ் (Gerd Sommerhoff) கூறுகின்றார். அதாவது நம்மைச் சுற்றியிருக்கின்ற உலகத்தைப் பற்றிய பிரக்ஞை, நம்மைப் பற்றிய பிரக்ஞை, மற்றும் ஒருவரது சிந்தனைகள் மற்றும் உணர்வுகள் உணர்ச்சிகள் தொடர்பான சிந்தனை பற்றிய பிரக்ஞை என தனது பிரக்ஞையை புர்pந்து கொள்ளுதல் (Understaning Consciousness) என்கின்ற நூலில் குறிப்பிடுகின்றார். இவ்வாறன மூன்றும் பிரக்ஞை நிலைகளும் மனித மூளையில் நடைபெறுகின்ற தனிமனித அனுபவம் மற்றும் புற உலகிலிருந்து பெறப்படுகின்ற தகவல்கள் அல்லது பொருட்கள் தொடர்பான பதிவுகள் அனைத்தையும் ஒருங்கினைக்கின்றன (Sommerhoff 1). இந்த ஒருங்கினைக்கப்பட்ட செயற்பாட்டையே மனிதப் பிரக்ஞை எனக் கூறலாம் என்கின்றார்.

 

இடப்புற முளையானது அதாவது இட ngU %is Gwzp miuf; Nfhsq;fs (left cerebral hemisphere) மொழி, தர்க்கம், நேர்கோட்டு சிந்தனை முறை ஆய்வு என்ற பன்புகளை உடையது. அதாவது வெளி உலகை ஒரு “விஞ்ஞர்னியைப் போல பார்த்தல்” இதன் அனுகுமுறையாகும். இது விரைவாக இயங்கி தேவையானதை பெற்றுக்கொள்ளுகின்றது. மறுபுறம் வலப் புற ngU %is Gwzp miuf; Nfhsq;fs (right cerebral hemisphere) என்பது மெதுவாக இயங்கி உலகை முழுமையாக பார்ப்பதும் உள்ளுணர்வுடன் உணர்வது என ஒரு “கலைத்துவப் பார்வையைக்” கொண்டதாக செயற்படுகின்றது (Lachmanஇ 142). இவ்வாறு மூளையின் இரண்டு பகுதிகளும் முரண்பட்டுக்கொண்டே வழமையாக செயற்படுகின்றன (Lachmanஇ 210). ஆனால் வில்சனின் (Wilson) பார்வையில் சிலக் கணங்களிலாவது இவை இரண்டும் இணைந்து இயங்கும் சந்தர்ப்பங்களும் உள்ளன. உதராணமாக அமைதியாகவும் ஆழமான ஆறுதலில் இருக்கும் பொழுது அவ்வாறு செயற்படுகின்றன என்கின்றார். இவ்வாறன நேரங்களில் வலது மூளையானது  விரைவாக இயங்குவதன் மூலம் நமது பார்வையில் புதிய பரிணமானத்தை மும்பரிமாண பார்வையைத் தருகின்றது (Lachman, 210). இது நாம் வழமையாக உலகத்தை தட்டையாகப் பார்க்கின்ற பார்வையிலிருந்து வேறுபடுத்தி, முழுமயான யதார்த்தத்துடனான உறவை நமக்கு ஏற்படுத்துகின்றது. இவ்வாறன கணங்களில், நமது பிரக்ஞையின்மை (unconsciousness), இயந்திரத்தனமான தன்னியல்பான செயற்பாட்டை தற்காலிகமாக நிறுத்திவிடுகின்றது. இதைத்தான் வில்சன் (Wilson) முழுமையடைகின்ற செயற்பாடு என்றும் சமகால நீயூரோ விஞ்ஞானிகள் (Neuroscientists) ஒருங்கிணையும் பிரச்சனை (“binding problem”) எனவும் கூறுகின்றனர் (Lachman, 211).

 

மனம் தொடர்பான தத்துவவியளாளர்களில் ஒருவரான ஜோன் சேர்லி (John Searle) பிரக்ஞை என்பது மூளையினால் உருவாக்கப்பட்டது என்கின்றார் (Lachman, 22). ஆனால் அவ்வாறு இல்லை என்கின்றார் பிரான்ஸின் தத்துவவியலாளர் ஹென்றி பேக்சன் (Henri Bergson) (Lachman, 21 ). பிரக்ஞையே மூளையை பயன்படுத்துகின்றது எனத் தனது படைப்பாற்றலான பரிணாமம் (Creative Evolution) என்ற புத்தகத்தில் கூறுகின்றார். (Lachman, 22). மூளையில் பதியப்பட்டிருப்பதைவிட நமது பிரக்ஞையில் அதிக தகவல்கள் பதியப்பட்டிருக்கின்றன எனவும் இவர்; கூறுகின்றார் (Lachman, 64). ஆனால் குpரிக் (Crick) மற்றும் டென்னேட் (Dennett) போன்றவர்கள் பிரக்ஞையை, மூளையின் ஒரு நிலை (states) அல்லது செயற்பாடு (function) ஆக மட்டும் குறுக்கிவிட்டனர்; (Max Velmans 7). இதற்கு மாறாக, பிரக்ஞை என்பது அவ்வாறானதல்ல எனவும் அது பருப்பொருள் அல்ல எனவும், ஆனால் விசேசமான ஒன்று எனவும், மூளையுடன் இணைந்து செயற்படுகின்றது எனவும் (Sperry, Libet) கூறுகின்றனர்.

 

உதராணமாக நித்திரை மற்றும் விழித்திருத்தல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துகின்ற பகுதியாக முன் மூளை உள்ளறை (thalamus) ஊடாக ஆர்ஸ் (ARAS) எனக் கூறப்படுகின்ற தொகுதி செயற்படுகின்றது (Sommerhoff, 152). நாம் நித்திரை கொள்ளும் பொழுது பிரக்ஞையானது வழமையாக இயங்குவதில்லை. மேலும் நித்திரையிலிருநக்கின்ற ஒருவரது நீயுரல் (neural) செயற்பாடானது குறைந்ததாக இருக்கின்றது (Sommerhoff, 148). இதனால்தான் நித்திரையில் பிரக்ஞையற்ற நிலைகளுக்கு நாம் செல்வது பற்றிய பிரக்ஞையில்லாது இருக்கின்றோம். அதேநேரம்; மூளையின் கோரிட்டிகல் (cortical) பிரக்ஞையை குறைந்தளவிலாவது இயக்கத்தில் வைத்திருப்பதனால் நமது பிரக்ஞையற்றதன்மை நிலைகளை கனவு காண்பதனுடாக கவனிக்க கூடியதாகவும் உள்ளது. ஆகவேதான் தியான நிலை என்பது ஆறுதல் நிலையிலிருக்கும் பொழுதும் ஒருவரது நித்திரையைத் தடுக்கும் வகையில் மூளையில் தலமாஸ் பகுதியையும் மற்ற பகுதிகளையும் செயற்பாட்டுநிலையில் வைத்திருப்பது என்கின்றார் மாவாரோமட்ஸ் (Mavromatis)  (Lachman, 89).  மேலும் இவ்வாறான ஆழமான அமைதியான தியான நிலையில் கூட  பிரிர்nரொன்டல் கோட்டெக்ஸ் (prefrontal cortex) மூளையின் மற்ற பாகங்களைவிட வழமையை விட அதிகமாக செயற்படுகின்றது (Sommerhoff, 14).

 

உள்ளார்ந்த டெம்பொரல் கோட்டேக்ஸ் (infereir temporal cortex) பார்ப்பவைகள் தொடர்பான உள்ளுணர்வையும் அந்த உள்ளுணர்வுகளுடன் தொடர்புடைய பழைய நினைவுகளையும் உருவாக்கக் கூடியவை என்கின்றார் ஜெயராட் சோமரிவ் (Sommerhoff, 146). இதுபோன்று ஹிப்போகம்பஸ் (hippocampus) மற்றும் அமைடலா (amygdale) என்பனவும் இவ்வாறு பழைய நனைவுகளை உருவாக்கவோ அல்லது மீளவும் நிளைவுபடுத்தக் கூடியவை (146). இதுவே நமது பிரக்ஞையின்மையின் (unconsciousness) மீது தாக்கத்தை நிகழ்த்துகின்றது. ஆகவே இது தொடர்பான விரிவான பார்வையை பிரக்ஞையின்மை தொடர்பாக எழுதும் பொழுது பார்ப்போம்.

 

மனிதர்கள் விலங்கியல் படைப்புகள். ஆகவே பிரக்ஞையும் விலங்கியல் பொருள் ஒன்றாகவே இருக்கவேண்டும் என பிரக்ஞையை பொருள் அதாவது உடலின் கூறுகளின் ஒன்றாக பார்க்கின்றார்; (Sommerhoff,  6). ஆப்படி எனின் மூளையின் எப்பாகத்தில் பிரக்ஞை இருக்கின்றது? 

 

மூளையின் முன்மூளை உள்ளறை (thalamus) எனும் பகுதியே பிரக்ஞையின் மையப்பகுதியாகும் என்கின்றார்; மாவரோமட்ஸ் (Mavromatis) (Lachman, 89). இது மூளையின் முக்கியமான மூன்று பகுதிகளான நடுப்பகுதி, மற்றும் லிம்பிக் (Limbic) பகுதி, பெரும் மூளை அரைக்கோளங்கள் (cerebral hemisphere) ஆகியவற்றுடன் இணைந்திருக்கின்றது. இந்த மூளையின் மூன்று பகுதிகளுக்கும் அவற்றுக்கே உரித்தான தனித்துவமான பிரக்ஞையும் அதன் தாக்கமும் உண்டு என்கின்றார். இதனால்தான் ஒரு நிலையில் இருக்கின்ற பிரக்ஞை இன்னுமொரு நிலையில் மிகவும் வித்தியாசமானதாக இருக்கின்றது எனக் கூறுகின்றார் (Lachman, 89). இந்த முன்மூளை உள்ளறை (thalamus) என்பது மிகவும் சிறிய பகுதி பின்;னியல் கிலான்ட்டில் (pineal gland) உள்ளது. இதைத்தான் தத்துவவியலாளர் டேஸ்காட் (Descartes) ஆன்மா இருக்குமிடம் எனக் குறிப்பிடுகின்றார். இருப்பினும் இந்த இடம் தொடர்பான மர்மம் இன்றும் தொடர்கின்றது (Lachman, 89). வெளிச்சங்களுக்கு பரிட்சயமில்லாத இந்த பின்;னியல் கிலான்ட் (pineal gland) பகுதி மனிதக் கருவின் (embryonic) ஆரம்பத்தில் தோன்றி பின் மறைந்துவிடுகின்றது. ஆனால் இதன் தொடர்ச்சி காணப்படுகின்றது எனக் கூறுகின்றனர் (Lachman, 90). இதன் இருப்பிடத்தைக் தான் இந்திய ஆன்மிக ஆய்வுகளின்படி மூன்றாவது கண் என்கின்றனர். இது ஆரம்ப கால மனிதர்களிடம் காணப்பட்டதாகவும் ஆனால் தற்காலிகமாக மனிதர்கள் இதை இழந்துவிட்டபோதும், ஆன்மிகப் புரட்சி ஒன்றின் மூலம் இது மீண்டும் கிடைக்கும் எனவும் மாவாரோமட்ஸ் (Mavromatis) நம்பிக்கை தெரிவிக்கின்றார் (Lachman, 90). மேலும், இதயத்தினுடான அறிவை (“intelligence of the heart”) செயற்படுத்தும் நமது மூளையின் பெரும் மூளைப்புறணி (cerebral cortex) தொழிற்பாட்டை நாம் இழந்ததும் இன்றைய நமது நிலைக்கு காரணம் என்கின்றார் ரேனி ஸ்காவாலா (Schwaller)( Lachman, 132).

 

அண்மைய ஆய்வுகளின்படி இந்த பின்;னியல் கிலான்ட்  (pineal gland) மெலாடொனின் (melationin) என்ற அமினோ அசிட்டை உருவாக்குகின்றது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிக வெளிச்சமும், மனச் சோர்வும், அழுத்தமும் பின்யில் கிலான்ட்டின் (pineal gland) அளவையும் நிறையையும் குறைக்கின்றது. ஆனால் இருட்டிலும், ஆறுதலாகவும் இருக்கும் பொழுது பினையியல் கிலான்ட் (pineal gland) மிகவும் விரைவாக செயற்படுகின்றது. இவ்வாறன நேரங்களில் மெலாட்டொனின் (melationin) என்ற அமிலம் அதிகமாக சுரக்கப்படுகின்றது.  இது உடல் மற்றும் மன ஆறுதல்களை ஏற்படுத்தக் கூடியதாகும். ஆகவேதான்  தியானம் செய்கின்றபோது இந்த அமிலம் அதிகமாக சுரக்கப்படுத்துகின்றமையால் மனம், உடல் என்பன ஆறுதல் ஏற்படுகின்றன. மேலும் இவ்வாறன நிலையில் எண்ணங்களின் செயற்பாடுகள் குறைந்து காணப்படுகின்றது என்கின்றனர்.  (Lachman, 91). இதைவிட பின்;னியல் கிலான்ட்  (pineal gland) மூளையில் இயக்கத்திற்கு அடிப்படையான நியூரோரான்ஸ்மீட்டர்ஸை (neurotansmitter) உருவாக்கத்திற்கும் முக்கியமான காரணியாவும் செயற்படுகின்றது. அதாவது புற மற்றும் அக சக்திகள் நம் மீது ஏற்படுத்தும் தாக்கமும் நமது மூளையில் நீயுரோன்களின் (neurons) இயக்கத்தையும் ஏற்புடத்துபவை பிரக்ஞை எனலாம். அல்லது பிரக்ஞையை விசேசமான ஒரு பொருளாக அதவாது பருப்பொருள் அற்ற ஒன்றாக கருதுகின்றனர். ஆனால் பிரக்ஞையானது உடலில் ஒரு பகுதியான மூளையுடன் சிக்கலான ஒரு நிலையில் உருவாகியிருக்கின்றது. இது பிரக்ஞை என்பது என்ன என்பதை தீர்மானிப்பதை கடினமாக்கி உள்ளது. ஆகவே மூளையின் ஒவ்வொரு பகுதிகளும் பிரக்ஞையுடன் எவ்வாறான உறவைக் கொண்டுள்ளன என விரிவாக இனிவரும் பகுதிகளில்; பார்ப்போம்;.

 

இறுதியாக பிரக்ஞை என்பது ஒரு நிலையா (states) அல்லது மூளையுடன் தொடர்புடைய ஒரு செயற்பாடா (functional object) அல்லது அருருவமா (no-thing) என்ற விவாதம் மேற்குலகில் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றது. இதற்கான பதிலை பதிலை நாம் தத்துவவாதிகளிடமும் உளவியலாளர்களிடமும் தேட வேண்டி இருக்கின்றது. பிரக்ஞை தொடர்பான இந்திய ஐரோப்பிய தத்துவங்கள் என்ன சொல்கின்றன எனப் பார்ப்போம்.

மீராபாரதி

 

19.09.2011

References

Gary Lachman. A secret history of consciousness.

Gerd Sommerhoff, 2000 – Understanding Consciousness

Max Velmans, 2009 – Understanding Consciousness

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: