Posted by: மீராபாரதி | September 12, 2011

பிரக்ஞை: ஒரு வரலாற்றுப் பார்வை

பிரக்ஞை: ஒரு வரலாற்றுப் பார்வை

பிரக்ஞை (Awareness) என்றால் என்ன? என்பது தொடர்பாக பலர் தொடர்ச்சியாக கேள்வி கேட்கின்றனர். சாதாரண மனிதர்களிடம் மட்டுமல்ல பல்வேறு புலமைசாh தூறைகளை சேர்ந்தவர்களிடமும் பிரக்ஞை தொடர்பான முரண்பட்ட பார்வைகள் இருக்கின்றமை இதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது. இதற்கு காரணம் மிக அண்மைக்காலமாக பிரக்ஞை (Awareness/ Consciouness) தொடர்பான ஆய்வில் காண்பிக்கப்டும் அக்கறையாகும். அதாவது மேற்குலக விஞ்ஞானிகளைப் பொருத்தவரை 90கள் மற்றும் 2000ம் ஆண்டுகள் என்பன முறையே முளை (Brain) மற்றும் பிரக்ஞை (Consciousness) தொடர்பான ஆய்வுகளைப் பிரதானமாகக் கொண்ட ஆண்டுகள் என்கின்றனர் (Gary Lachman). பிரக்ஞை தொடர்பான இவ்வாறான புதிய ஆய்வுகளின் அடிப்படையில்;, அது தொடர்பான விரிவான ஒரு பார்வையை முன்வைக்கும் முயற்சியே இக் கட்டுரைத் தொடர். இத்; தொடரில் பிரக்ஞையின் வரலாறு மற்றும் அது தொடர்பான விளக்கங்களை வரலாறு, ஆன்மிகவியல், தத்துவியல், பௌதிகவியல், இரசாயணவியல் மற்றும் உளவியல் என பல்துறை புலமைசார் கல்வியலாளர்கள் மற்றும் அறிஞர்களின் பார்iவியல் முன்வைக்க முயற்சிக்கின்றேன். இது தொடர்பான உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை, கேள்விகளை எதிர்பார்க்கின்றேன். ஏனனில் இதுவே பிரக்ஞை (Awareness) தொடர்பான ஆழமானதும் பொருத்தமானதுமான விளக்கத்தையும் புரிதலையும் நமக்கு வழங்கும்.

ஐன்ஸ்டையின் (Einstein) புரட்சிகரமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் மனிதப் பிரக்ஞையில் (Awareness) மிகப் பெரிய தெளிவான மாற்றத்தை ஏற்படுத்தின என்கின்றனர். இவருடன் பிளாங் (Max Planck ), ஹெயின்ஸ்பேர்க் (Heisenberg), சிக்மன் பிரய்ட் (Sigmund Freud ), ஜே;.பி.ரின் (J.B.Rhine), சி.ஜி.யங் (C.G.Jung) என்பவர்களும் இந்த முக்கியமாற்றத்தில் பங்குவகிக்கின்றனர்;. ஏனனில் இவர்களின் பங்களிப்பின் பின்பே உலகம் பற்றிய மேற்குலகின் பாரம்பரிய இயந்திரத்தனமான விஞ்ஞானப் பார்வையில் மாற்றம் ஏற்பட்டு, புதிய பிரக்ஞை மற்றும் அதன் வெளிப்பாடும் உருவாகியது என்கின்றார் கரி லோச்மான் (Gary Lachman 228). பிரக்ஞையைப் பற்றிய ஆய்வுகளும், அனுபவங்களும் கொண்ட மேற்குலகின் ஆய்வாளர்கள், தத்துவவியலாளர்கள் மற்றும் விஞ்ஞர்னிகளுக்கு தமது அனுபவத்தை ஆசிய குறிப்பாக இந்திய அனுபவங்களுடன் ஒப்பிட்டு அதன் சொற்ப் பிரயோகங்களைப் பயன்படுத்துவதில் தயக்கம் இருந்திருக்கின்றது (Gary Lachman, 229). ஏனனில், தாம் தர்க்கம் (logic) மற்றும் பகுத்தறிவுக்கு (Rational) அப்பாற்பட்ட விடயங்களுக்கு அதாவது ஆன்மீகம் மற்றும் அனுபவங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தமது புலமைசார் வட்டத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டுவிடுவோமோ என்ற பயம் இருந்திருக்கின்றது. இதனால் அவர்கள் உண்மையை உணர்ந்தபோதும் அதை வெளிப்படுத்தாது அமைதியாக இருந்திருக்கின்றனர் அல்;லது குறிப்பிட்ட சொற்களைப் பயன்படுத்தாது தவிர்த்திருக்கின்றனர். இதுவும் பிரக்ஞை (Awareness) தொடர்பான பொருத்தமான சொல்லை ஆங்கிலத்தில் பயன்படுத்துவதில் பிரச்சனைகளையும் முரண்பாடுகளையும் உருவாக்கி உள்ளது என்றால் மிகையல்ல. ஆனால் இப்பொழுது சிலர் இந்திய தத்துவஞான மரபில் பயன்படுத்தப்பட்ட சொற்களை அதன் ஆழமான அர்த்தம் கருதிப் பயன்படுத்துகின்றனர்.

ஆசிய நாடுகளில் அல்லது இந்திய தத்துவம் அல்லது ஆன்மீகம் தொடர்பான ஆய்வுகளில் பிரக்ஞை (Awareness) என்றே பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இது சாதாரண மனிதர்கள் மத்தியில் என்ன என்பது தொடர்பான விளக்கம் இப்பொழுதும் குழப்பமாகவே உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இது மேலும் குழப்பத்திற்குள் இருக்கின்றது. இதற்குக் காரணம் பிரக்ஞை என்பதற்கு இரண்டு வகையான சொற்களைப் பயன்படுத்தப்படுகின்றமை எனலாம். முதலாவது சொல் பிரக்ஞை (Awareness) இரண்டாவது சொல் பிரக்ஞை (Consciousness). இவை இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டை எனது புரிதலில் விளக்கிக் கொண்டு இக் கட்டுரையைத் தொடர்கின்றேன்.

முதலவாது சொல்லான பிரக்ஞை (Awareness) என்பது பன்முகபரிமாண தன்மை உடையது. இதற்கு குறிப்பிட்ட திசை இல்லை. இது 360 திசைகளிலும் ஒளியைப்போல ஒளிர்ந்து கொண்டிருப்பது எனலாம். இவ்வாறான ஒரு உயர் நிலையைப் பிரக்ஞையில் (Awareness) அடைந்தவர்கள் மனித வரலாற்றில் மிகச் சிலர் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரண்டாவது சொல்லான பிரக்ஞை (Consciousness) என்பது ஒற்றைப்பரிமாணம் அல்லது இரட்டைப் பரிமாணமானது என்றோ குறிப்பிடலாம். நாம் புதிதாக ஒரு விடயத்தை (குறிப்பாக பாதுகாப்பற்ற கார் அல்லது சைக்கிளல் பழகுதல்) கற்கும் பொழுது ஒற்றைப் பரிணமான பிரக்ஞையைப் (Consciousness) பயன்டுத்துவோம். அல்லது விபத்துக்கள் போன்ற அபாயகரமான சந்தர்ப்பங்களில் நம்மையும் அறியாமலே நமது பிரக்ஞை (Consciousness) விழிப்புற்று அதுவாகவே செயற்படும். இரட்டைப் பரிமாணப் பிரக்ஞை என்பது இதன் அடுத்த கட்டமாகும். தியானப் பயிற்சியில் ஈடுபடும் பொழுது, அல்லது நம்மை நாமே கவனிக்கும் பொழுது இதன் அனுபவத்தைப் பெறலாம். இந்த விளக்கத்தின் அடிப்படையில் வேறுபட்ட பிரக்ஞை நிலையை வேறுபடுத்தும் தமிழ் சொற்களை நான் அறியேன். அவ்வாறு ஏதும் இருப்பின் அறியத் தந்து உதவவும். அதுவரை இக் கட்டுரையில் இரண்டு பிரக்ஞை நிலையையும் தமிழில் பிரக்ஞை எனப் பயன்படுத்தும் அதேவேளை, ஆங்கில சொல்லின் உதவியுடன் வேறுபடுத்தியும் காட்டுவதன்; மூலம் அவற்றுக்கான வேறுபாட்டை நிலைநிறுத்த முயற்சிக்கின்றேன்.

பிரக்ஞை தொடர்பான ஆய்வில் ஈடுபடுகின்றவர்களில் புலமைசார் துறையில் பிரபல்யமாக இருக்கின்ற மாஸ் வெல்மான்ஸ் (Max Velmans) என்பவர் பின்வருமாறு கூறுகின்றார். நாம் பிரக்ஞை எனும் கடலில் நீந்திக்கொண்டிருக்கின்றோம் என்கின்றார். நம் ஒவ்வொருவரதும் பிரக்ஞை என்பது இவ்வாறன பிரக்ஞை எனும் சமுத்திரத்தில் எழுகின்ற ஒவ்வொரு அலை என குறிப்பிடலாம் என்கின்றார் ஓசோ. இதேவேளை ஜப்பானிய சென் குரு ஒருவரின் பின்வரும் கூற்று முக்கியமாக கவனிக்கத்தக்கது. சாதாரண மனிதர்களுக்கும் முழுமையான பிரக்ஞையுள்ளவர்களளெனக் கூறப்படுகின்ற கௌதம சித்தாத்தர் -புத்தர்- போன்றவர்களுக்கும் இடையலான பிரக்ஞையின் வேறுபாடு என்பது நீரும் ஐஸ் கட்டியும் போன்றது என்கின்றார் (David R. Loy). அதாவது புத்தரின் -ஞானமடைந்தவர்களின்- பிரக்ஞையானது சமுத்திரம் போன்று உறையாமல் இருக்கின்ற நிலையுடையது. ஆனால் நமது – சாதராண மனிதர்களின் பிரக்ஞையானது தூருவங்களில் இருக்கின்ற ஐஸ் பாறைகளாக உறைந்துபோய் உள்ளது. இதனால்தான் நாம் உறைந்து போயிருக்கின்ற புத்தர்கள் என்கின்றனர். இதைத்தான் ஓசோ நித்திரையில் இருக்கின்ற புத்தர்கள் என்கின்றார். ஆகவேதான் பிரக்ஞை என்பதைப் புரிந்துகொள்வது மிகவும்; கஸ்டமாக இருப்பது என்பது ஆச்சரியமானதுமல்ல. அதேவேளை அனுபவமாக அதை உணர்தல் என்பதும் அவ்வளவு இலகுவானதல்ல.

மேலும் பிரக்ஞை என்பதை அதனிலும் விட சிறிய பொருளாக நாம் குறுக்கிப் பார்க்கின்றோம். உதாரணமாக மூளையின் ஒரு நிலையாக, எண்ணமாக, மொழியாக, மட்டுமே பார்க்கின்றோம்.  இதற்கு காரணம் நமது அறிசார்ந்த வரலாறும் ஆகும். அதாவது உலகம் என்பது ஒரு பொருளால் அல்லது பருப்பொருள் மற்றும் ஆன்மா ஆகிய இரு பொருற்களால்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்ற நம்பிக்iயுமாகும். ஆகவே பிரக்ஞை என்பது என்ன? எதனால் உருவாக்கப்பட்டுள்ளது? எப்படி செயற்படுகின்றது? எங்கே இருந்து செயற்படுகின்றது? போன்ற கேள்விகளுக்குhன விடைகளைக் காணும் பொழுது நாம்  பிரக்ஞை தொடர்பான ஒரளவு புர்pதலைப் பெறலாம். இவ்வாறான புரிதலைப் பெறுவதற்கு பிரக்ஞையின் வரலாறு தொடர்பாக நாம் அறிய வேண்டியவர்களாக இருக்கின்றறோம். ஏனனில்; அணுவிற்குள் இருக்கின்ற சக்தி போல், மனிதர்களுக்குள்ளும் வெடிப்பதற்கு தயாரான நிலையில் பன்முகதன்மை வாய்ந்த, பலவகையான பிரக்ஞையானது அடி ஆழத்தினுள் உறைந்து இருக்கின்றது என பல, ஆர். ஏம். பக் (R.M.Bucke), வில்லியம் ஜேம்ஸ் (William James), ஹென்றி பேக்சன் (Henri Bergson), ஓரேஞ் (A.R.Orange ).  போன்ற தத்துவவியலாளர்களும் விஞ்ஞானிகளும் நம்புகின்றனர். இது நீட்சே (Nietzsche) நம்புவதுபோல், யார் அதைக் கண்டுபிடிக்கின்றார்களோ அவர்களுக்குள் மாபெறும் மாற்றத்தை அதாவது சாதாரண மனிதரிலிருந்து புதிய மனிதரைத் தோற்றுவிக்கும் எனவும் நம்புகின்றனர். (Gary Lachman 33).

பிரக்ஞை தொடர்பான தேடல் என்பது பல நூற்றாண்டுகளாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஒரு விடயம். கிரிஸ்துவுக்கு முன்பு 800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த தேடல் இருப்பதாக வரலாறு கூறுகின்றது. இந்தத் தேடல்களின் அடிப்படையில், மூன்றரை பில்லியன் ஆண்களுக்கு முன்பே, பிரக்ஞையானது பொருளுடன் ஒன்று கலந்து அல்லது அதனை ஆக்கிரமித்து மிகவும் சிக்கலான ஆனால் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு வாழும் உயிராக உருவாகி உள்ளது என்கின்றனர். இவ்வாறுதான் பருப்பொருட்களினுடாக பிரக்ஞையானது செயற்பட ஆரம்பித்திருக்கின்றது (Gary Lachman 102). இவ்வாறு தனது பயணத்தை ஆரம்பித்த பிரக்ஞை பல்வேறு வெற்றிகளையும் தோல்விகளையும் தனது பயணத்தில் கண்டுள்ளது என்கின்றனர். கணித மேதையும் தத்துவவியலாளரான அவுஸ்பென்சிகி (P.D.Ouspensky), மனித இனத்தினுடான பிரக்ஞையின் பயணமானது மிகவும் வெற்றிகரமாக ஒழுங்கமைக்கப்ட்டுள்ளது என்கின்றார் (Gary Lachman 102).

ஆரம்பத்தில் மனிதர்களும் மிருகங்களும் இயற்கையுடன் ஒன்றினைந்தே வாழ்ந்தனர். ஆனால் 500,000ம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதரில் நடைபெற்ற முளை வெடிப்பானது இயற்கையிலிருந்து ஒருவகையாயன பிரிவினை அனுபவத்தை மனிதர்களுக்கு கொடுத்தது என்கின்றனர். இதை விஞ்ஞர்னிகள் மூளை வெடிப்பு (Brain Explosion) எனக் கூறுகின்றனர். அதாவது இந்த வெடிப்புக்கு முன்பு சுமார் இரண்டு மில்லியன் ஆண்டுகளாக மனிதர்களின் முளையின் அளவானது 600-800 சென்டிமீட்டர் கனளவுக்கு இடைப்பட்டதாகவே இருந்துள்ளது. ஆனால் அதன் பின் கடந்த 500,000 ஆண்டுகிளில் இதன் அளவானது 1330 சென்டிமீட்டர் கனளவாக அதாவது இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. இந்த வெடிப்பின் பின்னர் மனிதர்களின் பிரக்ஞையில் ஏற்பட்ட மாற்றமானது அவர்களது பார்வையிலும் மாற்றத்தை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளதாக கருதுகின்றனர். ஏற்கனவே தாம் பார்த்த அதே உலகை புதிய பார்வையில் அந்த மனிதர்கள் பார்க்க ஆரம்பித்தனர் என்கின்றார்கள் ஆய்வாளர்கள். இந்த மாற்றமே நாகரிக உலகிற்கு வித்திட்டதாகவும் இவர்கள் நம்புகின்றனர் (Gary Lachman 126).

இந்த வெடிப்பின் பின்னரே இயற்கையையின் மாற்றங்களையும் மற்றும் தனி மனித மாற்றங்கள், அவர்களுக்கு இடையிலான உறவுகள் என்பவற்றை மனிதர்கள் அடையாளம் காண ஆரம்பித்தனர். உதாரணமாக காலநிலை மாற்றங்கள், சந்திரனின் ஒவ்வொரு காலகட்டங்கள் மற்றும் கர்ப்பச்சிதைவு எனப் பலவற்றைக் கவனிக்க ஆரம்பித்தனர். இவ்வாறு பிரக்ஞையானது வேவ்வேறு பாத்திரங்களினுடாக தனது பயணத்தை வரலாற்றில் தொடர்ந்து வந்திருக்கின்றது. இதனால்தான் சில தத்துவவியளாலர்களும் விஞ்ஞானிகளும் உளவியலாளர்களும் பிரக்ஞையும் பரிணாமவளர்ச்சி (Evolution of Consciousness) அடைகின்றது என்கின்றனர். இதேவேளை பிரக்ஞையினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உயிரினங்கள், தமது சுயமான இயக்கத்தில் செயற்படக்கூடியவாறு பிரக்ஞையானது தனது நேரடியான ஆதிக்கத்தை உயிரினங்கள் மீது தளர்த்தி இயங்கா நிலைக்கு சென்றுள்ளது என்கின்றனர். இவ்வாறான மாற்றம் பிரக்ஞையின் பயணத்தில் ஒரு முக்கியமான திருப்பு முனையாகின்றது.( Gary Lachman 103). இதுவே தனி மனிதர்களில் பிரக்ஞையின்மையாகவும் (unconsciousness) மனிதக் குழுக்களிடம் கூட்டுப் பிரக்ஞையின்மையாகவும் (collective unconsciousness) உறைந்து போயிருக்கின்றது எனலாம். இது தொடர்பாக (கூட்டுப்)பிரக்ஞையின்மை என்ற தலைப்பின் கீழ் வரும் பொழுது விரிவாக உரையாடுவோம்.

நம்மைப் போன்ற நவீன மனிதர்கள் 100,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்;பிரிக்காவில் முதன்முதலில் காணப்பட்டதாக அறியப்படுகின்றது. இவர்கள் இயற்கையுடன் மிகவும் நெருக்கமானதாக இருந்ததாகவும் நம்பப்படுகின்றது. எங்களுக்கு இருந்ததுபோல் இவர்களுக்கு பிரக்ஞை இருந்ததா என்பதை அறிவது கடினமானது என்கின்றனர். 60,000 ஆண்டுகளின் பின்பே நம்மைப் போல பழக்கவழக்கங்கள் மற்றும் நடத்தைகளைக் கொண்ட மனிதர்கள் உருவானர்கள் என நம்பப்படுகின்றது. 40,000 ஆண்டுகளுக்களுக்கு முன்பு கலாசார மாபெரும் வெடிப்பு (Cultural big bang) நடைபெற்றதாக அறியப்படுகின்றது. இதைத்தான் பழைய கற்காலம் (Old Stone Age ) என்கின்றனர். இக் காலத்தில் தான் முதல் முறையாக கலை, மதம், தொழில்நூட்பம், மாயாஞாலம் மற்றும் சமூக கட்டமைப்புகள் தோன்றியதாக கருதப்படுகின்றது. இந்தப் பிரக்ஞையின் வரலாற்றில் சுய-பிரக்ஞை self-consciousness) என்பது எப்பொழுது தோன்றியது என்பதை அறிவது கஸ்டமானபோதும் அல்லது சாத்தியமே இல்லாதபோதும், நாம் வரலாறு எனக் கொள்கின்ற குறியீடுகள் மற்றும் எழுத்துக்கள் என்பவற்றின் பதிவுகள் சுய-பிரக்ஞையின் ஆரம்பம் எனக் கொள்ளலாம் என்கின்றனர் (Gary Lachman 107). அதாவது “நான்” என்பதன் தோற்றமே வரலாறு என்பது ஆரம்பமாவதற்கு அடிப்படையாக இருந்திருக்கின்றது. (Gary Lachman 108). ஆகவேதான் 5000 ஆண்டுகளுக்கு முன்பான நாகரிகத்தின் தோற்றம் என்பதே வரலாற்றின் ஆரம்பமாக கருதப்படுகின்றது என்கின்றனர். இது தொடர்பாக பல வாதப் பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன.

உதாரணமாக மாரிஜா கிம்பட்டாஸின் (Marija Gimbutas) ஆய்வின்படி தாய்வழி கற்காலம் என்பது கி.மு 7000ம் ஆண்டுகளுக்கும் 3500ம் ஆண்டுக்கும் இடைப்பட்டது என்கின்றார் (Gary Lachman 111). இக் காலத்தில் அதிகாரத்துவப படிநிலையற்ற பால் வேறுபாடற்ற ஆரோக்கியமான படைப்பாற்றல்களும் உறவுகளும் நிலவிய காலம் என்கின்றார். ஆனால் கி.மு 2800ம் ஆண்டளவில் இது முடிவுக்கு வந்ததாக குறிப்பிடுகின்றார். இந்த அழிவின் பின்பே இன்றைய அதிகாரபடிமுறை நிறைந்த, சமத்துவமற்ற, ஆண் மையப்படுத்திய தந்தைவழி சமூகம் உருவாகியது என்கின்றார் (Gary Lachman 112).

இதேவேளை ஏகிப்திலுள்ள ஸ்பினிக்ஸ் (Sphinx) என்ற ஆரம்பகால கட்டிடக்கலையின் உருவாக்கம் கி.மு வெறும் 2500 ஆண்டுகள் என்றே நம்பப்பட்டு வந்தது. ஆனால் அவ்வாறு அல்ல எனவும், மாறாக 10,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும் கண்டறிந்தார் ரேனி ஸ்காவாலர் (Rene Schwaller). இவர், இந்தக் கட்டிடக்கலையை உருவாக்கியவர்களின் பிரக்ஞை என்பது இதயத்தின் அறிவு (“the intelligence of heart) எனக் குறிப்பிடுகின்றார். கொலின் வில்சன் (Colin Wilson) என்பவரின் நம்பிக்கையின்படி, இவர்களுக்கும் இதற்கு முன்வும் இருந்த மனிதர்களிடமும் கூட்டுப் பிரக்ஞை (collective consciousness) இருந்துள்ளதாக நம்புகின்றார். ஏனனில் பிரமிட்டுக்களை கட்டுவதற்காக 20 தொன் நிறையுடைய கற்களை மேல் நோக்கி கொண்டு சென்றது இவ்வாறன ஒரு மாபெரும் கூட்டுச் சக்தியின் மூலமே சாத்தியம் என்கின்றார் (138). இதனால்தான் எங்களுடையதைவிட மிகவும் வேறுபட்ட பிரக்ஞை கொண்டவர்களாக அக் கால மனிதர்கள் இருந்துள்ளனர் என்கின்றார் ஸ்காவாலர் (Schwaller)). இவர்களது அறிவு அதாவது அறிதல் என்பது, வெறுமனே கற்பதன் மூலம் கிடைத்ததல்ல என்கின்றார். இவர்களது இயற்கையின் இயக்கம் மற்றும் அதன் சேர்தல் தொடர்பான அறிவானது பிரக்ஞைபூர்வமான புரிதலில் உருவானது என்கின்றார். ஆகவேதான், ஆதிகால ஏகிப்தியர்கள் விண்வெளியை ஆராய்வதற்கு தொலைநோக்கு கருவிகளை கண்டுபிடிக்க தேவையற்றவர்களாக இருந்தார்கள். ஏனனில் விண்வெளியை அவர்கள் அறியவேண்டுமாயின் அது அவர்களது நூண்னுணவின் மூலம் சாத்தியமானதாக இருந்திருக்கின்றது என்கின்றார் ஸ்வாலார் (Gary Lachman 137). இவ்வாறான ஒரு தன்மைமை நாம் இழந்ததற்கு காரணமாக நமது பகுத்தறிவு, தர்க்கீகம் என்பவற்றின் ஆதிக்கம் காரணம் என இன்றைய அறிவுத் தேடலின் முறையை விமர்சிக்கின்றார். (Gary Lachman 132).

இதைவிட, எழுத்து எதிர் தாய்க் கடவுள்’ (The Alphabet Versus the Goddess) என்கின்ற புத்தகத்தை எழுதிய லெனோஆர்ட் சாலின் (Leonard Shlain), இயற்கையை உணர்ந்து புரிந்து கொள்வதிலிருந்து மனிதர்கள் விடுபட்டமைக்கு இன்னுமொரு காரணம் கி.மு 1700-1500 களில் எழுத்துக்களின் உருவாக்கமும் என்கின்றறார்  (Gary Lachman 141). இவ்வாறன எழுத்துக்களின் உருவாக்கம் ஒரு புறம், சட்ட ஓழுங்குகள், ஜனநாயம், பொருளாதாரம், விஞ்ஞானத்தின் வளர்ச்சி, தத்துவம், அரங்கு என்பவற்றின் உருவாக்கத்திற்கு வித்திட்டது. மறுபுறம் இயற்கையை சுரண்டுவதற்கும், போர், ஏகாதிபத்தியம், இனவாதம், பாலியல்வாதம், பால் அரசியல், என்பவற்றுக்கும் அடிப்படையாக இருந்ததுடன் மனித வரலாற்றையும் மாற்றியது என்கின்றார். இதனால் மனித இனம் இழந்தது தமது உள்ளுணர்வும் மற்றும் இயற்கையுடன் பிரக்ஞையுடன் பங்குபற்றிய தாய்மைவழிப் பண்பும் என்கின்றார். மேலும் நமது வலது முளையின் செயற்பாட்டை இழந்து இடது முளை ஆதிக்கம் செலுத்துகின்ற நாகரிகம் உருவாக்கியது என்கிற்hர் லெனோஆர்ட் சாலின் (Gary Lachman 142).

நாம் இழந்து போன நமது பிரக்ஞையை மீளவும் கண்டுபிடித்து முழுமையாகப் பயன்படுத்த முடியாதா? என்பதே இன்று விஞ்ஞானிகள் முன்னுள்ள கேள்வி. அவ்வாறு பயன்படுத்துவதற்கு முதல், பிரக்ஞை எங்கே இருக்கின்றது என்பதை அறிவது முக்கியமான ஒன்றாக இவர்களுக்கு இருக்கின்றது. அதிகமானவர்கள் முளையிலையே பிரக்ஞை இருக்கின்றது எனவும் முளையே பிரக்ஞையை இயக்குகின்றது எனவும் நம்புகின்றனர். இதை விஞ்ஞானபூர்வமாக நிறுவவும் முயல்கின்றனர். ஆகவே அடுத்த பகுதியில் பிரக்ஞையும் முளையும் அவற்றின் இணைந்த செயற்பாடுகள் தொடர்பாகவும் விரிவாகப் பார்ப்போம்.

மீராபாரதி

11.09.2011

உசாத்துணைகள்

Gary Lachman. A secret history of consciousness.

David R. Loy. Awareness bound and unbound : Buddhist essays.

Max Velmans. Understanding consciousness.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: