Posted by: மீராபாரதி | August 21, 2011

(சுய) விமர்சனம் – ஒரு பன்முக கலைத்துவப் படைப்பாற்றல் -பகுதி 3

(சுய) விமர்சனம் – ஒரு பன்முக கலைத்துவப் படைப்பாற்றல் -பகுதி 3

(சுய)விமர்சனப் பண்பு அல்லது ஆற்றல் என்பது அடிப்படையில் நமது கோட்பாடுகளை செயற்பாடுகளாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டதாகும். இதை நிறைவேற்றுமுகமாக, எதிர்மறையாக இருக்கின்ற கோட்பாடுகளை, நிகழ்வுகளை, சூழல்களை நேர்மறையான கோட்பாடாகவும், தாக்கம் நிறைந்தாதாகவும் மாற்றுவதற்கு உதவி செய்வதே (சுய)விமர்சன செயற்பாடாகும். அதாவது பல்வேறு கருத்துக்களையும் உள்வாங்கி அவற்றின் முக்கியமான கூறுகளை உள்ளடக்கும் அதேவேளை ஏற்கனவே கூறப்பட்ட கருத்துக்கு மாறாக புதிய கருத்தொன்றை முன்வைப்பதே (சுய)விமர்சன செயற்பாட்டின் அடிப்படைப் பண்பாகும். இவ்வாறான செயற்பாட்டை பன்முகதன்மை வாய்ந்த கலாபூர்வமான படைப்பாற்றல் எனக் கூறினால் மிகையல்ல. ஆனால், இவ்வாறான ஒரு நேர்மறையான செயற்பாட்டை முன்னெடுப்பதற்காக ஒரு முன்நிபந்தனையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஒருவரோ அல்லது ஒரு சமூகமோ முகம் கொடுக்கும் பிரச்சனைக்கு ஒரே ஒரு சரியான விடை மட்டும் இல்லை என்பதையும், குறிப்பிட்ட பிரச்சனையிலும் அதற்கான தீர்விலும் பல்வேறு வகையான  தாக்கங்களை நிகழ்த்துகின்ற காரணிகள் இருக்கின்றன என்பதையும் ஏற்றுக்கொள்வதாகும். இவ்வாறு ஏற்றுக்கொள்ளும் பொழுதே, ஏற்கனவே இருக்கின்ற எதிர்மறை காரணிகளை எவ்வாறு நேர்மறையாக மாற்றலாம் என்பது தொடர்பாக ஆராய்வது இலகுவாகின்றது.

இக் கட்டுரையில் வருகின்ற முன்மொழிவுகள், ஹென்றி (ர்நனெசநை றுநளைiபெநச) என்பவர்; தனது நூலில் (வுhந ஊசவைiஉயட நுனபந)  வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்படுகின்றது. இம் முன்மொழிவுகளை உலகத்தில் உள்ள பல்வேறு அரச நிறுவனங்களையும் மற்றும் மிகப் பெரிய சர்வதேச தனியார் நிறுவனங்களையும்; சேர்ந்த 5000ம் முகாமைத்துவ நபர்கள் மற்றும் தொழிலார்;களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களில் அடிப்டையில் முன்வைக்கப்பட்டவை என்பது முக்கியமாக கவனிக்கவேண்டியதாகும். இவர்கள்; விமர்சனங்கள் உருவாகின்ற பொதுவான சந்தர்ப்பங்களையும்  அதனால்; ஏற்படும் பிரச்சனைகளையும் தமது அனுபவங்களினுடாக முன்வைத்தனடிப்படையில் அதற்கான தீர்;வுகள் ஆராயப்பட்டிருக்கின்றன.

விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற முறைமைகள் மற்றும் சூழ்நிலைகள் பலவகைப்படும். அவையாவன, தொலைபேசி, கடிதங்கள், இரண்டாவது நபரினுடாக விமர்சனங்களைப் பெறுதல், ஒருவரது கலாச்சார பண்பினால் ஆன பழக்கவழக்கங்களை அல்லது கலாசார பண்புகளுக்கு ஏற்ப செயற்படாமையினால் வைக்கப்படுகின்ற விமர்சனங்கள். மற்றும் தொழில் செய்கின்றபோது சக நண்பர்களை விமர்சித்தல், ஒரு குழுவிலுள்ள நபரை அல்லது குறிப்பிட்ட குழுவையே விமர்சித்தல், முன்பு சக செயற்பாட்டாளராக இருந்த ஒருவர் தற்பொழுது உயர் பதவியிலிருக்கின்றபோது அல்லது கீழ் நிலையில் வேலை செய்கின்றபோது விமர்சித்தல், கோவத்துடன் பதிலளிக்கும் ஒருவரை விமர்சித்தல், சக செயற்பாட்டாளர்களின் தவறுகளினால் அல்லது கீழ் வேலை செய்பவர்களின் தவறுகளினால் உயர் பதவியிலிருப்பவர்கள் ஒருவரை விமர்சித்தல், மற்றும் எப்பொழுதும் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைப்பவரை விமர்சித்தல். மேற்குறிப்பிட்டவாறு பல சூழ்;நிலைகளில் பல்வேறு முறைமைகளினுடாக, நாம் விமர்சனங்கள் முன் வைக்கின்றபோது அல்லது நம் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றபோது அவை எவ்வாறு எதிர்கொள்ளப்படுகின்றது என்பதை அறிவது முக்கியமானது. இவ்வாறு அறிவதற்கு நமது சாதாரண வாழ்வில் நிறைய சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. இவ்வாறன ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சக நண்பர்களை அல்லது அங்கத்தவர்களை இழக்காது, உறவுகளைப் பாதிக்காது எவ்வாறு ஆரோக்கியமாக விமர்சித்தல் என்பதே நமது அடிப்படை நோக்கமாக இருக்கவேண்;டும். ஏனனில் உறவுகளை உருவாக்குவதும் அதைப் பேணுவதும் கூட்டாக செயற்படுவதுமே நமது வாழ்வின் அடிப்படை அம்சம். இதை நாம் எவ்வாறு ஆரோக்கியமாக முன்னெடுக்கின்றோம் என்பதிலையே நமது நோக்கத்தின் வெற்றி தோல்வி நிர்ணையிக்கப்படுகின்றது.
ஒரு விமர்சனத்தை முன்வைப்பதற்கு முதல் மற்றும் முன்வைக்கும் பொழுதும் கவனிக்கவேண்டிய அடிப்படையான சில விடயங்கள் உள்ளன. முதலாவது விமர்சனத்தை நேரடியாக முன்வைப்பதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குதல். ஏனனில் இது தனிப்பட்டளவில் நேருக்கு நேரான பார்வையை கொண்டிருக்கும். ஆகவே, ஒருவரின் சொற்களுக்கு அப்பாற்பட்டு அவரது உடல் மொழியையும் கவனிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் ஒரு விமர்சனமானது ஒருவரை தனிப்பட்ட முறையில் தாக்குகின்றதா? அல்லது ஒருவரை தற்பாதுகாப்பதற்கா முன்வைக்கப்படுகின்றதா? அல்லது தற்பாதுகாப்பதற்காகவே வரவேற்கப்படுகின்றதா? அல்லது உண்மையிலையே ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக முன்வைக்கப்படுகின்றதா? கேட்கப்படுகின்றதா? என முன்வைக்கப்படுகின்ற ஒரு விமர்சன செயற்பாட்டின் பலபரிமாணங்களை கவனிக்கவேண்டி உள்ளது. ஆகவே, விமர்சன செயற்பாடானது இடைவெளியில்லாத தொடர்ச்சியான உரையாடலைக் கொண்டதாக இருப்பதே ஆரோக்கியமானது. ஏனனில் உரையாடலில் இடைவெளிகள் ஏற்படும் பொழுது குறிப்பான விமர்சன கலந்துரையாடலில் தொய்வுகள் ஏற்படலாம். இதனால் அதன் பண்பு, தொனி மற்றும் சூழ்நிலை மாற்றமடைவதால் விமர்சனத்தின் தாக்கம் மற்றும் நோக்கம் என்பவற்றில் மாற்றங்கள் ஏற்படலாம். அல்லது குறிப்பான விமர்சன செயற்பாடு தடைபடலாம். விமர்சன உரையாடலில் பங்குபற்றுகின்ற இருவருக்கும் அல்லது ஒரு குழுவிற்கு பொருத்தமான நேரமில்லாது விடின் குறிப்பிட்ட விமர்சன செயற்பாட்டை பிற்போடுவது நல்லது.

ஒரு (சுய)விமர்சன செயற்பாடானது தொடர்ச்சியான இயல்பான ஒரு கலந்துரையாடலாக இருக்கும்மாறு ஒரு சூழலையும், சந்தர்ப்பத்தையும், நேரத்தையும் உருவாக்கவேண்டும். இதுவே விமர்சனத்தை ஆரோக்கியமாக முன்வைக்கவும்;, விமர்சனத்தை ஏற்பவர் அதை முழுமையாக உள்வாங்கி கேட்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும். அதாவது (சுய)விமர்சனம் பரஸ்பர உரையாடலாக இருக்கவேண்டும். இதற்கு மாறாக விமர்சனக் கலந்துரையாடலின் முனைப்பானது ஒருவர் மீதான அல்லது ஒரு குழு மீதான ஒரே திசையிலான விமர்சனமாக மட்டும் இருக்கும் பொழுது, விமர்சனத்தைக் கேட்பவர் பயமுறுத்தலுக்கு உள்ளாக்கப்படலாம்  அல்லது குறிப்பிட்ட நபரோ, குழுவோ உணர்ச்சிவசப்பட்டு எதிர்தாக்குதலை நடத்தலாம். இந்த எதிர்தாக்குதலானது தம்மைப் பாதுகாப்பதாகவோ அல்லது விமர்சனம் முன்வைப்பரை விழுத்துவதற்காகவோ இருக்கலாம். ஆகவேதான், ஒரு விமர்சன செயற்பாட்டை மேற்கொள்வதற்கு முன் பல முன் தயாரிப்புகளை செய்யவேண்டியது அவசியமாகும். உதாரணமாக, விமர்சனம் முன்வைக்கும் விடயங்கள் தொடர்பான குறிப்புகளை தயாரித்தல் மற்றும் அதை எவ்வாறு முன்வைப்பது என்பது தொடர்பாக பரிட்ச்சாத்தமாக ஈடுபடுதல் என்பனவாகும். மேலும் விமர்சனங்களை முன்வைக்கும் பொழுது குறிப்பான உதாரணங்களை முன்வைத்து விளங்கப்படுத்துவது சிறந்தது. ஏனனில், இது ஒருவரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிப்பதான தோற்றத்தைக் கொடுப்பதைவிட விமர்சனத்தை இலகுவில் ஒருவருக்குப் புர்pயவைப்பதாக இருக்கும்;. இவ்வாறான பண்புகள், செயற்பாடுகள் நடைபெறப்போகின்ற விமர்சன உரையாடல் செயற்பாட்டை மேன்மேலும் பண்பட்டதாக மேம்பட்டதாக்கும். இது ஆரோக்கியமானதாகும். இதன் விளைவானது, விமர்சன உரையாடலை நட்புறவானதாகவும் குறைந்தளவு பதட்டத்தையும் ஏற்படுத்துவாதாக மாற்றுக்கூடியதாகும்.

விமர்சன செயற்பாட்டை மேற்கொள்ளும் பொழுது குறிப்புகளை வைத்துக் கொண்டே விமர்சனம் செய்தல் நல்லது. இது விமர்சனம் வைப்பதில் ஒரு ஒழுங்கையும் சரியான பாதையில் குறிப்பிட்ட செயற்பாடானது செல்வதையும்; பேண உதவும். மேலும் இது குறிப்பான பிரச்சனையிலிருந்து விலகிச் செல்லாது இருப்பதையும் உறுதி செய்யும். குறிப்புகளில் “பதட்டமடைய வேண்டாம்” “அவசரப்படவேண்டாம்” “ஆறுதலாக கலந்துரையாடு” என எழுதி வைப்பதும் நம்மை நிதானமாகவும் நேர்மறையாகவும் விமர்சனக் கலந்துரையாடலை முன்னெடுக்க உதவி செய்யும். இவ்வாறான ஒரு அணுகுமறை, நம்மைப் பாதுகாப்பதையும் தவிர்க்கும் அல்லது குறைக்கும். ஆனால் வழமையாக, நாம் விமர்சனங்களை முன்வைக்கும் பொழுது, எப்படி முன்வைக்கின்றோம் அல்லது பதிலளிக்கின்றோம்?; என்ன செய்கின்றோம்? என்பவற்றை நாமே அறியாதிருக்கின்றமை துரதிர்ஸ்டமானதாகும். இதற்குக் காரணம், நம்மை நாமே பிரக்ஞைப+ர்வமாக கவனிக்கும் பழக்கத்தைக் கொண்டவர்காள நாம் இல்லை. ஆகவே இவ்வாறான ஒரு பழக்கத்தை நம்மில் வளர்க்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

எழுத்தின் மூலம் முன் வைக்கப்படுகின்ற விமர்சனத்தில் நன்மையும் உள்ளது தீமையும் உள்ளது. இது ஒரு ஆவணமாக இருப்பது நேர்மறையான விடயம். மீள மீள வாசிக்கலாம். விமர்சனத்தின் தன்மையைப் பொறுத்து மீள் வாசிப்பதன் விளைவு இருக்கும். நாம் பொதுவாக துரதிர்ஸ்டவசமாக ஆரோக்கியமற்ற எதிர்மறையான விமர்சனங்களையே முன்வைக்கவே பழகியிருக்கின்றோம். இவ்வாறான ஆரோக்கியமற்ற எதிர்மறையான விமர்சனமானது மீள வாசிப்பவரை தொடர்ந்தும் கீழே விழுத்தும்;. இதற்குமாறாக முன்வைக்கப்பட்ட விமர்சனமானது ஆரோக்கியமான நேர்மறையானதாக இருப்பின் அது ஒரு படிப்பினையாக அனுபவமாக இருக்கும். வாசிப்பவர் மட்டுமல்ல விமர்சனத்தை முன்வைத்தவரும் பல நன்மைகளை பெற்றுக்கொள்வார். ஆகவே பல நேர்மறையான விடயங்களை பல இடங்களில் குறிப்பிட்டுக்கொண்டே எந்த ஒரு விமர்சனத்தையும் முன்வைக்கவேண்டும். இது விமர்சனத்தை எதிர்கொள்பவரை மேன்மேலும் விமர்சன செயற்பாட்டை ஆரோக்கியமாகப் பார்க்கத் துண்டும். துண்டுவதாக இருக்கவேண்டும். இதேவேளை, விமர்சனத்தை எதிர்நோக்கியவரிடமிருந்து உடனடியான நேரடிப் பதில் கிடைக்காமல் விடுவது இந்த எழுத்து முறையில் முன்வைக்கப்படுகின்ற விமர்சனத்தின் எதிர்மறையான தன்மையாகும். இந்த எதிர்மறைத்தன்மையானது ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் செயற்படின் நேர்மறையாக மாற்றப்படக் கூடியதே.

விமர்சனமானது தன்னிலையிலிருந்தும் மற்றும் நேரடியாகவும் முன்வைக்கப்படுவதும் உரையாடப்படுவதும் முக்கியமானது. ஏனனில் இரண்டாவது நபருக்கு ஊடாக முன்வைக்கப்படுகின்ற விமர்சனப் பண்பானது பிரச்சனைக்குரிய விமர்சன செயற்பாடாகும்;. இவ்வாறான இரண்டாம் நபர்களுக்கூடாக முன்வைக்கப்படும் விமர்சனங்களை, நம்மை பாதுகாப்பதற்காக உடனடியாக எதிர்க்காது, விமர்சனம் மற்றும் விமர்சனத்தை முன்வைத்தவர் தொடர்பான நம்பகத்தன்மையை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். விமர்சனமானது எந்தளவு உண்மையானது என்பதற்கு அப்பால் அதைத் தெரிவித்தமைக்காகவும் மற்றும் பிறருக்கு கூறாமல் விட்டமைக்காகவும் குறிப்பிட்ட நபருக்கு நன்றி சொல்வது முக்கியமானது. அதேவேளை, இந்த இரண்டாவது நபர், விமர்சனத்தை முன்வைத்த நபரை கூற மறுக்கும் சந்தர்ப்பத்தில், விமர்சனத்தை முன்வைத்த குறிப்பிட்ட நபரை நேரடியாக கதைக்கும் படி இரண்டாவது நபருக்கு கூறுவதே பொருத்தமான செயற்பாடும் நல்ல பண்புமாகும். இருப்பினும் முன்வைக்கப்பட்ட விமர்சனத்தில் நியாயத்தன்மை இருப்பின் விமர்சனம் எங்கிருந்து வருகின்றது என்பது முக்கியமானதல்ல. மாறாக அவ்வாறான விமர்சனம் வராது இருப்பதற்கு தேவையான ஆரோக்கியமான வழிகளை, செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுக்கின்றோம் என்பதே முக்கியமானது. குறிப்பாக ஒரு குழுவில் வேலை செய்யும் பொழுது, இவ்வாறான விமர்சனங்களை இரண்டாம் நபருக்கு ஊடாக அறியும் பொழுது, குழுவின் பொறுப்பாளருடன் நேரடியாக இதைக் குறிப்பிட்டு அதற்கான தீர்வை கண்டுபிடிப்பது ஆரோக்கியமானது. இதேவேளை குழுப் பொறுப்பாளருடன் எப்படியான உறவை வைத்திருக்கின்றோம் என்பதையும் கவனத்தில் கொண்டே இவ்வாறு செயற்படவேண்டும்.

ஒரு குழுவினுள் விமர்சனத்தை முன்வைக்கும் பொழுது மிகவும் பிரக்ஞையுடன் செயற்படவேண்யவர்களாக இருக்கின்றோம். ஏனனில் இதுவே மிகவும் கஸ்டமான செயற்பாடாகும். குறிப்பான ஒரு நபரின் மீது தனிப்பட்ட தாக்குதலை விமர்சனமாக ஒரு குழு செயற்பாட்டில் செய்யும் பொழுது பல எதிர்மறைத் தன்மைகள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட நபர் கஸ்டத்திற்கு உள்ளாகலாம். வெட்கப்படலாம். கோவப்படலாம். இவ்வாறான பல்வேறு உணர்வுகள் உணர்ச்சிகளைப் பொறுத்து அவரது பதில் கருத்தும், செயற்பாடும் இருக்கும். இது ஆரோக்கியமற்ற விமர்சனமாக அல்லது வெளிப்பாடாக இருக்கும் பொழுது குழுவிலிருக்கின்ற பிற அங்கத்தவர்களும் தமது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளாது தவிர்க்கவே முயற்சிப்பர். இதனால் குழுவில் மன அழுத்தமே அதிகரிக்கும். இதைத் தவிர்ப்பதற்கு சில வழிமுறைகள் உண்டு. முதலாவது தனிப்பட்ட நபரை குறிப்பிட்டு விமர்சிப்பதை தவிர்த்து குறிப்பான வேலை தொடர்பான விமர்சனத்தை முன்வைக்கலாம். இது குழுவிலுள்ள அனைவரிடமும் குறிப்பான வேலை தொடர்பான பங்களிப்பை கோரும் அதேவேளை பொருப்பான நபர் தனது பொறுப்பை உணர்வதற்கும் வழிவகுக்கும். இவ்வாறு தனிப்பட்ட நபர் மீதான விமர்சனங்களை பொதுவான விமர்சனமாக முன்வைக்கலாம். அல்லது புனைவுகள் மற்றும் குறியீடுகள் மூலம் குறிப்பான பிரச்சனை தொடர்பான விமர்சனங்களை முன்வைக்;லாம். இது குழுவிற்குள் ஒருமைப்பாட்டையும் அங்கத்தவர்களது பங்களிப்பையும் மேலும் அதிகரிக்கச் செய்யும். ஏந்த ஒரு பிரச்சனையையும் பொதுவானதான முன்வைத்து குழுவின் பங்களிப்புடன் அவர்களது விமர்சனங்களையும் கருத்துக்களையும் அறிந்து குறிப்பான பிரச்சனைக்கு தீர்வு காண்பதே ஆரோக்கியமான விமர்சன செயற்பாடாகும்.

விமர்சன செயற்பாட்டில் கோவம் ஏற்படுவது அடிக்கடி நடைபெறுகின்ற சாதாரண ஒரு விடயமாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் யார் நம் மீது விமர்சனத்தை முன்வைத்தாலும் அல்லது நாம் யார் மீது விமர்சனத்தை முன்வைத்தாலும் நமது கோவத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கவேண்டும். இதேபோல் இன்னுமொரு நபருக்கு (அவர் விமர்சனத்தை முன்வைப்பவராக இருந்தாலும் சரி அல்லது ஏற்பவராக இருந்தாலும் சரி) உருவாகும் கோவத்தை எவ்வாறு மாற்றுவது என்பதிலும் ஆ;றலுள்ளவர்களாக இருக்கவேண்டும். இவ்வாறு செய்யத்தவறுவோமாயின் விமர்சன செயற்பாட்டின் நோக்கத்திலிருந்து விலகிச் செல்வது தவிர்க்க முடியதாததாகிவிடும். ஏனனில் மாற்றுக் கருத்துக்களை உள்வாங்கக் கூடிய ஒரு மன நிலையில் இருக்கமாட்டர்கள். ஆகவே விமர்சன செயற்பாட்டிற்கான காரணங்கள் பின்தள்ளப்பட்டு கோவம் என்பதே பிரதானமான பிரச்சனையாகிவிடும். ஒருவரின் கோவத்தைச் சுட்டிக் காட்டும் பொழுது அவரது கோவம் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகமானது. ஆகவே “உனது கோவத்தை நிற்பாட்டு” என்றோ அல்லது “உன்னைப் பாதுகாக்கின்றாய்” என்றோ கூறுவது மேலும் கோவத்தைக் கூட்டும். இதற்குமாறாக ஒருவர் ஏன் கோவம் அடைகின்றார் என சிந்திப்பதே ஆரோக்கியமானதும் பயனுள்ளதுமாகும். ஏனனில் இக் கோவத்திற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். ஆகவே கோவத்தை எவ்வாறு குறைப்பது என்பது தொடர்பாக கவனம் செலுத்துவது நல்லது. உதாரணமாக விமர்சன உரையாடலில் பங்குபற்றுகின்றவர்கள் அவசரப்படாது ஆறுதலாக கதைக்கலாம். ஆரம்பத்திலையே “நான் சொல்வதைக் கேட்டு கோவப்படவேண்டாம்” எனக் கூறலாம். விமர்சன உரையாடலில் கோவம் என்பது ஆதிக்கம் செலுத்தாதவாறு இருப்பதற்கான நமது சகலவிதமான ஆற்றல்களையும் பயன்படுத்துவது பயனுள்ளதும் ஆரோக்கியமானதுமாகும்.

விமர்சனத்தை முன்வைப்பவர்கள், விமர்சனத்தை எதிர்கொள்கின்றவரின் பக்கமே இருக்கின்றோம் என்பதை குறிப்பிட்ட நபருக்கு உறுதி செய்வது அவசியமானது. இது அவரை ஆரோக்கியமான பயனுள்ள வகையில் பதிலளிப்பதற்கு ஊந்துதலாக இருக்கும். விமர்சன செயற்பாடு என்பது ஒருவருக்கு அல்லது குழுவிற்கு உதவி செய்வதற்கோ அல்லது குறிப்பட்ட நபரையோ குழுவையோ அடித்து விழுத்துவதை நோக்கமாக கொண்டதல்ல. அவ்வாறு கொண்டிருக்கவும் கூடாது. இது விமர்சனத்தின் நோக்கத்தை தவறாக புரிந்து கொண்டதாகவும் இருப்பதுடன், அவ்வாறு புரிந்துகொள்ளவுமே வழிவகுக்கும். மேலும் பல்வேறுபட்ட கலாசார மற்றும் பண்புகள் கொண்ட மனிதர்களுடன் வேலை செய்யும் பொழுதும் பல விமர்சனங்களை எதிர்கொள்ளும் அல்லது முன்வைக்கும் சாத்தியங்கள் உள்ளது. மறுபுறம் இவ்வாறான கலாசார பண்புகளை கடைபிடிக்காதவர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதுண்டு.இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒவ்வொருவருடைய கலாசார மற்றும் பண்புகள் தொடர்பான தரவுகளை அறிந்து வைத்திருப்பதும் நல்லது. இது ஆரோக்கியமான விமர்சனத்திற்கு பல சந்தர்ப்பங்களில் வழி ஏற்படுத்தும். மேலும் இதன்மூலம் குறிப்பிட்ட கலாசார பண்புகள் தொடர்பான நமது எதிர்மறைப் பார்வையையும் மற்றும் தனிநபர் தொடர்பான நமது எதிர்மறை பார்வைகளையும் மாற்றிக் கொள்ளலாம்.

(சுய)விமர்சன உரையாடலின்போது, முரண்பாடுகளை தீர்ப்பதற்காகவே (சுய)விமர்சனம் என்பதை அழுத்தமாக குறிப்பிடுதல், மற்றும் இடையிடையே விமர்சன செயற்பாட்டின் நோக்கத்தை உறுதிசெய்தல் என்பதும் முக்கியமானதாகும். அதாவது நாம் ஒரே நோக்கத்திற்காக செயற்படுகின்றவர்கள் என்கின்ற நட்புறவை வெளிப்படுத்தும் பண்பை நினைவுட்டல். இது மற்றவரை எதிர்மறையிலிருந்து நேர்மறையான பார்வைக்கு மாற்றுவதுடன் புதியவகையான அனுபக் கல்வியையும் நமக்கு வழங்கும். இறுதியாக, குறிப்பாக விமர்சனக் கலந்துரையாடலில் முக்கிமான விடயங்கள் தொடர்பான நமது பொதுவான புரிதல்கள் மற்றும் உடன்பாடுகள் தொடர்பான குறிப்புகளை எடுத்தல் அவசியமானது. மேலும் தொடர்ச்சியான செயற்பாடாக, விமர்சனத்தின் பின் அது ஏற்படுத்திய ;தாக்கம் தொடர்பாக அறிதல் மற்றும் நபர்களுக்கு இடையிலான உறவை தொடர்ந்தும் வைத்திருத்தல் என்பவை முக்கியமானவையாகும். ஏனனில் விமர்சனம் ஒன்று நம் மீது வைக்கப்பட்ட பின்பு நாம் எந்தளவு மனதளவில் விழுந்திருப்போம் என நமது அனுபவங்கள் மூலம் ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆகவே இதிலிருந்து மீள்வதற்கும் விமர்சனம் எதிர்கொண்டவரை கீழ் விழாது செய்வதற்கும் நம்பிக்கையுடன் தொடர்ந்து செயற்படுவதற்கும் தொடர்ச்சியான நட்புடறவை பேணுவது அவசியமானதும் முக்கியமானதுமாகும்.

விமர்சனக் கலை என்பது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆரோக்கியமான விளைவுகளைத் தரக்கூடியவகையில் கருத்துக்களை முன்வைக்கின்ற மற்றும் பெற்றுக்கொள்கின்ற ஆற்றலாகும். இதன்மூலம் கருத்துக்களை ஒன்றுபடுத்தி நமது செயற்திட்தத்தை சிறந்த தரமுள்ளதாக உயர்த்துவதாகும். இது வேலைதிட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு இடையில் பண்பான ஆரோக்கியமான உறவையும் ஏற்படுத்துவதாகும். இறுதியாக நமது நோக்கங்களை நாம் அடைவதற்கு இது வழிவகுக்கும். ஆகவே நாம் விமர்சனக் கலையில் சிறந்து விளங்கவேண்டியவர்களாக இருக்கின்றறோம்.

மீராபாரதி
பி.கு. தனிப்பட்டளவில் நான் எதிர்நோக்கிய பிரச்சனைகளின் விளைவினாலும் என்னவிலாவது (சுயவிமர்சனத்துடன்) மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியமானது என உணர்ந்ததனாலும் விமர்சனம் தொடர்பான தேடுதலில் ஈடுபட்டபோது  கிடைத்தது இந்தப் புத்தகம். இதில் பல பயனுள்ள  விடையங்கள் இருந்தமையினால் அனைவருடனும் பகிர்ந்துகொள்கின்றேன்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: