Posted by: மீராபாரதி | August 15, 2011

கனடா 2011 – ஒன்டாரியோ மாகாணத் தேர்தலும் (தமிழ்) குடிரவாளர்களும்!

கனடா 2011 – ஒன்டாரியோ மாகாணத் தேர்தலும் (தமிழ்) குடிரவாளர்களும்!
கன்சேவேர்ட்டி கட்சிக்கு வாக்களித்தமைக்காக ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும்.

ஓவ்வொரு தேர்தல்கள் வரும் பொழுதும் யாருக்கு வாக்களிக்க கூடாது எனவும், யாருக்கு வாக்களிப்பது தமிழ் குடிவரவாளர்களுக்கும், அவர்களது தமிழ் தேசிய அரசியலுக்கும் நன்மையானது எனவும் பலர் எழுதியும் மற்றும் கூட்டங்களில் கலந்துரையாடியும் வந்துள்ளனர். ஒவ்வொரு வாக்காளருக்கும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவு செய்வதற்கான ஜனநாயக உரிமை உள்ளது. ஆனால் வாக்களார்கள் தங்களுக்கு எதிராகவே செயற்படுகின்ற கட்சிக்கும் தலைவர்களுக்கும் தமது வாக்குகளை தொடர்ந்தும் அளித்துவருகின்றமைதான் புரிந்துகொள்ளமுடியாததாகவும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்கின்றது. ஆகவே இந்த செயற்பாட்டைக் கேள்விக்கு உட்படுத்துவதில் தவறில்லை.
பெரும்பான்மையான வாக்காளர்கள் பொதுவான சமூகப் போக்கின்பின்னால் இழுபட்டு அல்லது தமது பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையிலையே தமது வாக்குகளை அளிப்பவர்களாக இருக்கின்றனர். உதாரணமாக அண்மையில் டொரன்டோ மாநகரசபைத் தேர்தலில் ரொப் போட்டுக்கும், கனேடிய பாராளுமன்ற தேர்தலில் ஹாப்பருக்கும் கன்சேர்;வெட்டி கட்சிக்கும் வாக்காளர்கள் வாக்களித்தமையை இந்தடிப்படையில் குறிப்பிடலாம். இவ்வாறான கட்சிக்கும் தலைவர்களுக்கும் வாக்களித்ததற்கு பிரதியூபகராமாக வாக்களார்களுக்கு இவர்கள் என்ன செய்கின்றார்கள்? செய்தார்கள்? என்பதை இவர்களது அண்மைய செயற்பாடுகள் நமக்கு தெளிவாக தெரிவிக்கின்றன. இந்த கட்சிகளும் தலைவர்களும் தமக்கு வாக்களித்த மனிதர்களின் உரிமைகளுக்கு எதிராகவும் அவர்களுக்கு கிடைக்கின்ற சலுகைகளை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டே பல நேரங்களில்  செயற்படுகின்றனர் என்பது சந்தேகத்திற்கு இடமற்றது. இதைதான் இக் கட்சிகளும் தலைவர்களும் செய்வார்கள் என ஏற்கனவே பலர் கூறியபோதும் வாக்காளர்கள் இவர்களுக்குத்தான் தமது வாக்குகளை வழங்கினர். இருப்பினும் இந்தக் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் வாக்களிப்பது வாக்களார்களின் நன்மைகளுக்கு எதிரானது என்பதை மீண்டும் மீண்டும் சளைக்காது கூறியும் எழுதியும் மீள ஞாபகப்படுத்த வேண்டியிருக்கின்றமை தவிர்க்க முடியாத வகையில் அவசியமான தேவையாக இருக்கின்றது. இந்தவகையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஒன்டாரியோ மாகாண தேர்தலில், யாருக்கு வாக்களிப்பது நன்மையானது என்பதையும், சிலருக்கு வாக்களிப்பது தீமையானது என்பதையும் மீளவும் எழுத வேண்டி உள்ளது.

ஓவ்வொரு தேர்தலிகளிலும் நமது வாக்குகளை சரியான புரிந்துணர்வுடன் அளிக்காது விடுவோமானால் நமக்கு ஏற்கனவே இருக்கின்ற உரிமைகளையும் மற்றும் கிடைக்கின்ற பல சலுகைகளையும் மேலும் மேலும் இழப்பது தவிர்க்க முடியாததாகும். ஏற்கனவே டொரன்டோ மாநகர சபையிலும் கனடிய பாராளுமன்றத்திலும் வலதுசாரி கொள்கை உடையவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனால் பல பிரச்சனைகளை ஏற்கனவே எதிர்கொள்கின்றோம். மேலும் ஓன்டாரியோ மாகாணத்திலும் வலதுசாரி கொள்கை உடைய கன்சேவேர்ட்டி கட்சியைத் n;தரிவு செய்வோமானால் இனிவருகின்ற நான்கு வருடங்களும் நாம் வீதிகளில் இறங்கி நமது உரிமைகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் தொடர்ச்சியாகப் போராடுகின்ற காலமாகவே இருக்கப்போகின்றது என்பதை எந்;தவிதமான தயக்கமுமின்றி எதிர்வு கூறலாம். இவ்வாறு வீதிகளில் இறங்கிப் போராடப் போகின்றோமா? அல்லது ஏற்கனவே இருக்கின்ற உரிமைகளையும் சலுகைகளையும் பாதுகாத்துக் கொண்டும், மேலும் அதிகமான நன்மைகளைப்; பெற்றுக்கொள்ளும் நோக்கத்தோடும் வாக்களிக்கப் போகின்றோமா என்பது முக்கியமானது. இது நாம் எதிர்வருகின்ற தேர்தல்களில் எந்தக் கட்சியை தெரிவு செய்து வாக்குகளை அளிக்கப்போகின்றோம் என்பதிலையே தங்கியிருக்கின்றது.

கன்சேவேர்ட்டி கட்சிக்கு ஒருவர் ஆதரவளிப்பதும் வாக்களிப்பதும் அதன் பிரதிநிதியாக நிற்பதும் அவரது ஜனநாயக உரிமை. அதேபோல அதை விமர்சிப்பதற்கான ஜனநாயக உரிமையும் நமக்கு உள்ளது. இந்த விடயத்தில் தமிழ் அரசியல் பிரமுகர்களும் தமிழ் முதலாளிகளும் இரட்டைதன்மையுடன்தான் தமது அரசியல் நிலைப்பாடுகளை கொண்டுள்ளனர். இந்த அடிப்படையிலையே இவர்களது கனேடிய அரசியல் செயற்பாடுகளும் இக் கட்சிகளுக்குமான ஆதரவும் தீர்மானிக்கப்படுகின்றது. ஒரு புறம் தமது தமிழ் தேசிய இன உரிமைகளுக்காக குரல் கொடுப்பதாக கனேடிய புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தின் மத்தியில் படம் காட்டிக் கொண்டு செயற்படுகின்றார்கள் இவர்கள். மறுபுறம் இந்த உரிமைகளைப் பற்றி எந்தவித அக்கறையுமற்ற கன்சேவேர்ட்டி கட்சிக்கு தமது ஆதரவை வழங்குகின்றனர். இது இவர்களது அரசியலில் உள்ள மாபெறும் முரண்பாடு. இந்த முரண்பாடானது ஒருபுறம் இலங்கையில் தமிழ் பேசும் மனிதர்களின் உரிமைகளுக்காப் போராடிக்கொண்டும் மறுபுறம் சிறிலங்காவில் மகிந்தவிற்கும், அவரது சுதந்தரக் கட்சிக்கும் அல்லது ரணிலுக்கும் அவரது ஐ.தே கட்சிக்கு ஆதரவளிப்பதையும் போன்றதே என்றால் மிகையல்ல. இவ்வாறு இலங்கையில் சிறிலங்கா அரசாங்கம் சார்பாக செயற்படுகின்றவர்களுக்கும் கனேடிய அரசியலில் கன்சேர்வேட்டி கட்சிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றவர்களுக்கும் இடையில் அரசியலடிப்படையில் எந்தவிதமான வித்தியாசமுமில்லை என்பதை உறுதியாக கூறலாம். ஆனால் புலம் பெயர்ந்த தமிழ் தேசியவாதி பிரமுகர்கள் சிறிலங்காவில் இவ்வாறு செய்வதைத் தவறு அல்லது தூரோகம் எனக் கூறுகின்றனர். ஆனால் புலம் பெயர்நாட்டில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒப்பான கன்சேவேர்ட்டி கட்சியுடன்; கூட்டுச் சேர்ந்து செய்படுவதை நியாயப்படுத்துகின்றனர். அரசியல் தந்திரோபாயம் எனவும் கூறுகின்றனர். இந்த குறுந் தமிழ் தேசியவாத பிரமுகர்கள், இவ்வாறான பிற்போக்குவாத கட்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான காரணம் என்ன?  தேசம், தேசியம், கொடி, மதம், குடும்பம் உறவுகள் தொடர்பாக இருக்கும் (பிற்போக்கான மூட) நம்பிக்கைகள் கனேடிய பழமைவாத கட்சியினருக்கும், குறுந் தமிழ் தேசியவாதிகளுக்கும் பொதுவானதாக இருப்பதே காரணம் என்றால் மிகையல்ல. மேலும் இந்த நம்பிக்கைகள் தொடர்பாக தமிழ் குறுந் தேசியவாதிகளுக்கும், சிங்கள  பேரினவாதிகளுக்கும், வெள்ளையினவாதிகளுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் இல்லை என்பது கசப்பான ஒரு உண்மையே.

புழமைவாத கொள்கைகளையுடைய கொன்சேர்வேட்டிக் கட்சி, அதன் தலைவரும் பிரதமருமான காப்பர், மாநகர முதல்வர் ரொப் பொப் அனைவரும் மத்தியதர வர்க்கத்தினரினதோ அல்லது உழைக்கும் மனிதர்களின் நலன்களிN;ளா, உரிமைகளிளோ என்றுமே அக்கறை இல்லாதவர்கள் என்பதை இன்றுரையான அவர்களது கொள்கைகளும் செயற்பாடுகள் நிறுபிக்கின்றன. இவர்கள் முதலாளிகளின் பாதுகாவலர்களாகவே எப்பொழுதும் இருக்கின்றனர். அவ்வாறு இருப்பது ஆச்சரியமானதல்ல. ஏனனில் அதுதான் அவர்களது அடிப்படைக் கொள்கையே. மேலும்; இவர்கள், தாம் அல்லது தமது முதாதையர்; இந்த நாட்டின் குவரவாளர்கள் என்பதை மறந்தே, புதிய குடிவரவாளர்களுக்கு எதிரான திட்டங்களையும் சட்டங்களையும் நிறைவேற்றுகின்றனர். ஆனால் நாம் இவர்களுக்கு வாக்களிக்கும் போதோ, அல்லது ஆதரவளிக்கும் போதோ, இவர்கள்; குடிவரவாளர்களுக்கு எதிரான கொள்கைகளையே பிரதானமாக கொண்டுள்ளார்கள் என்பதை நாம் கவனத்தில் எடுக்காமலிருப்பது தூர்ப்பாக்கியமானதே.

கன்சேவேர்ட்டி கட்சியானது முதலாளிகளுக்கு சாதகமாகவும் தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகளையும் திட்டங்களையும் பிரதானமாக கடைபிடிக்கின்ற கட்சியாகும். இதன் மூலம் முதலாளிகள் கொள்ளை இலாபங்களை பெறுகின்றனர். இதனால்தான் தமக்கு ஆதரவளிக்கின்ற தமிழ் தேசியவாத பிரமுகர்களுக்கு நிறைய பணத்தையும் அவர்களது வியாபாரங்களுக்கு பல சலுகைகளையும் கன்சேவேர்ட்டி கட்சி வழங்குகின்றது என கனேடிய பல்கலைக்கழக பேராசிரியர் சேரன் கடந்த முறை நடைபெற்ற தேர்தலுக்கான பொது உரையாடல் ஒன்றில் குறிப்பிட்டமை மிகவும் கவனத்திற்குரியது. மேலும் இந்தக் கட்சியானது பெண்களுக்கு எதிரான திட்டங்களை முன்னெடுக்கின்றமையும், உதாரணமாக கருத்தடைக்கு எதிரான நிலைப்பாட்டைக்கொண்டுள்ளமையும் மற்றும் ஏற்கனவே இருக்கின்ற பல்வேறு சிறுவர் வயோதிபர்களுக்கான சமூக நலத்திட்டங்களையும் நிறுத்துகின்ற அல்லது குறைக்கின்ற திட்டங்களையும் கொண்டுள்ளனர்.

மாகாணசபைத் தேர்தலிலும் கொன்சேர்வேட்டி கட்சி வெற்றி பெறுவதானது (புதிய) குடிவரவாளர்கள், தொழலாளர்கள், பெண்கள், பெற்றோர்கள், மாணவர்கள், சிறுவர்கள், மற்றும் குழந்தைகள் அனைவருக்கும் பாதிப்பானதே. மூன்று சபைகளிலும் அவர்களது ஆட்சியும் அதிகாரமும் இருக்கும் பொழுது வாக்காளர்களுக்கு எதிரான கொள்கைகளை சட்டங்களாக நிறைவேற்றுவது இலகுவானதாக இருக்கும். உதாரணமாக அண்மையில் ரொரொன்டோ மாநகரசபை முதல்வர் ரொப் போட்டின் தனிப்பட்ட குடும்ப (பாபிக்குயூ) நிகழ்வுக்கு ஒரு நாட்டின் பிரதமர் வருவது என்பது எந்தளவிற்கு ஒருவருக்கு ஒருவர் பொது அளவில் மட்டுமல்ல தனிப்பட்ட அளவிலும் உறுதுணையாக இருக்கின்றார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிவிக்கின்றது. பிரதமரின் இவ்வாறன வருகையானது, பல்வேறு சமூக நல சேவைகளையும் திட்டங்களையும் குறிப்பாக (புதிய) குடிவரவாளர்களின் திட்டங்களையும், சிறுவர்களுக்கான சேவைகளையும் மற்றும் முக்கியமாக நூலக சேவையையும் கூடக் குறைக்கின்ற, கட்டுப்படுத்துகின்ற, நிறுத்துகின்ற மாநகர முதல்வினர் செயற்பாடுகளை ஆதரிப்பதாக மட்டுமல்ல ஊக்கிவிப்பதாகவுமே இருக்கும். இவ்வாறான ஒரு பிரதமரையும் மாநகர முதல்வரையும் தெரிவு செய்தமைக்காக வாக்களித்த ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும். இவ்வாறன ஒரு தவறை மீளவும் ஒரு முறை மாகாணசபை தேர்தலில் வாக்களிப்பவர்கள் செய்யக்கூடாது என்ற அக்கறையின் காரணமாக இக் கட்டுரை எழுதப்படுகின்றது.
சாதாரணமாக பெரும்பான்மையான (நடுநிலையான?) பொது மனிதர்கள் எந்தவிதமான அரசியல் பற்றிய அக்கறையும் இன்றி பிரதான நீரோட்டத்தில் எந்தக் கட்சி ஆதிக்கம் செலுத்துகின்றதோ அல்லது சமூகத்தில் பொதுவான ஆதரவு போக்கு எந்தக் கட்சிக்கு இருக்கின்றதோ அதற்கே வாக்களித்து வருகின்றனர். இதேவேளை தம்மை பிரமுகர்களாகவும் தமிழர்களின் பிரதிநிதிகளாகவும் கனடிய பொது நிகழ்வுகளில் வெளிப்படுத்தும் பலர் கனேடிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் தொடர்பாக எந்தவிதமான அக்கறையுமில்லாது தனிப்பட்ட நன்மைகளுக்காகவும் இலாபங்களுக்காகவுமே கட்சிகளுக்கு ஆதரவளிக்கின்றனர். இந்தப்பிரமுகர்கள்; உண்மையிலையே தமிழர்களின் உரிமைகள் மற்றும் புதிய குடிவரவாளர்களின் பிரச்சனைகளிலும் அக்கறை உள்ளவர்களாயின் கன்சேவேர்ட்டிக்கு கட்சிக்கு ஆதரவளிக்கமாட்டார்கள். ஆகவே தங்கள் வீடுகளுக்கு தேடி வருகின்ற இந்தத் தமிழ் பிரமுகர்கள் தொடர்பாக நாம் விழிப்பாக இருக்கவேண்டும். இவர்களிடம் கன்சேவேர்ட்டி கட்சிக்கு வாக்களிப்பதால் வாக்காளர்களுக்கு என்ன நன்மை என கேட்கவேண்டும். ஆனால் இந்தப் பிரமுகர்கள் இவ்வாறான கேள்விகளுக்கு, உடனடியாக நமது தேசிய உணர்வை சுரண்டும் வகையில், “தமிழர் ஒருவர் மாகாண பாராளுமன்றத்திலும் இருப்பது தமிழ் மக்களுக்கு நல்லது தானே” என சடைவார்கள். இவ்வாறான சடையலுக்கு எல்லாம் தமிழ் பேசும் வாக்களார்கள் தொடர்ந்தும் சோரம் போகாது சரியான அரசியல் தெளிவுடன் தமது வாக்குகளை அளிக்கவேண்டியவர்களாக உள்ளார்கள்.
இம் முறை கான்சேவேர்ட்டி கட்சியின் சார்பாக மார்க்கம் தொகுதியில் சன் தயாபரன் அவர்கள் போட்டியிடுகின்றார். இவர் தமிழர் என்பதாhல்; முதல் தமிழர் பிரதிநிதி ஒருவரை ஒன்டாரியோ மாகாணப் பாராளுமன்றத்திற்கும் அனுப்பும் படி பிரச்சாரம் செய்யப்படுகின்றது. தமிழ் பேசுகின்ற வேட்பாளரை தெரிவு செய்வதால் மட்டும் புலம் பெயர்ந்த தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை அவர் நிறைவு செய்வார் என எதிர்பார்ப்பது நமது அறியாமையே. ஏனனில் கன்சேவேட்டி கட்சி சார்பாக ஒருவரை தேர்வு செய்து அனுப்புவதால் தமிழ் பேசும் மனிதர்களுக்கு எந்த நன்மையுமில்லை. ஆனால் தமிழ் முதலாளிகளுக்கு வேண்டுமானால் நன்மையிருக்கலாம். ஆகவே, இதற்குமாறாக  எந்தக் கட்சி நமது (தமிழர்களதும் குடிவரவாளர்களதும்) உரிமைகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பதுடன் நம்முடன் இணைந்து செயற்ப்படுகின்றது என்பதை அடையாளம் காணவேண்டும். மேலும் ஒரு கட்சியின் கொள்கைகளின் அடிப்படையிலையே ஒரு வேட்பாளரை தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்புவதன் மூலமே, புலம் பெயர்ந்த தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளையும் (புதிய) குடிவரவாளர்களின் தேவைகளையும் நிறைவு செய்யக்கூடிய சாத்தியம் அதிகம் உண்டு என்றால் மிகையல்ல.
லிபரல் கட்சி நடுநிலையான ஒரு கட்சி. இருப்பினும் லிபரல் கட்சி என்பது மதில் மேல் பூனை போன்றது. இவர்கள் பெரும்பாலும் முதலாளிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பவர்களே. பொது மக்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் போன்ற தோற்றத்தை மட்டுமே தரக்கூடியவர்கள். ஆனால் இறுதியில் முதலாளிகளின் நலன்களுக்காகவே செயற்படுகின்றவர்கள் இவர்கள். ஆகவே இவர்களுக்கு வாக்களிப்பதால் பல் வேறு நிறுவனங்களில் சாதாரண தொழில் புரிபவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. இன்றைய லிபரல் கட்சியின் தலைவர் பொப்ரே, புலிகளின் கடந்தகால செயற்பாடுகளை விமர்சித்தபோதும் தமிழர்களின் உரிமைகளுக்கா குரல் கொடுக்கின்றவர். இதற்காக இவர் மதிக்கப்படவேண்டியவரே. ஆனால் இவர் தவறான கட்சி ஒன்றின் தலைவராக இருப்பது அவரது துரதிர்ஸ்டமே. உதாரணமாக அண்மையில் ஒன்டாரியோ மாகாண முதல்வர் டான்டான் மக்னெட்டி அவர்கள், சிறுவர்களுக்கான பாலியல் கல்வியை பாடசாலைகளில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்து இருபத்தி நான்கு மணிநேரத்தில் அதை சட்டமாக்குவதிலிருந்து பின்வாங்கினார். இதன் மூலம் இவர்களும் பழமைவாத கொள்கைகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் என்பதை தெளிவாக கூறியுள்ளனர். இவர்கள் யார் சார்பாக செயற்பாடுவர்கள் என்பதற்கு இந்த ஒரு உதாரணமே பொதுமானதாகும்.
தமிழர்களைப் பொறுத்தவரை தமிழ் வேட்பாளர் ஒருவர் எந்தக் கட்சியில் இருந்தாலும் கட்சியின் கொள்கைகளைக் கருத்தில் எடுக்காமல் வாக்களிப்பார்கள். இது எந்தவகையிலும் பயனற்றது. ஒருவர் எவ்வளவுதான் நல்லவராக நேர்மையானவராக இருந்தாலும் கன்சேவேர்ட்டி போன்ற பிற்போக்குவாத கட்சியின் சார்பாக தேர்வு செய்யப்பட்டால் அவரது குரல் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். ஆனால் மோசமான ஒருவர் புதிய ஜனநாயக கட்சியின் சார்பாக தெரிவுசெய்யப்பட்டால், அக் கட்சியின் கொள்கைகளினால் உழைக்கும் மனிதர்களுக்கும் குடிவரவாளர்களின் உரிமைகளுக்கும் எதிராக செயற்பட முடியாது. இதனால் தான் கட்சியின் கொள்கைகளும் கருத்துக்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆகவேதான் இனம், மதம், பிரதேசம், ஒரே ஊர் என்ற அறிமுகங்களுக்கு அப்பால் கட்சியின் அடிப்படையில் அதன் கொள்கைகளின் அடிப்படையில் வாக்களிப்பதும் ஆதரவளிப்பதும் மிகவும் முக்கியமானதாகும்.
இந்தப்பின்னனிலியல் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் புதிய ஜனநாயக கட்சியின் சார்பாக நீதன் போட்டியிடுவதை கவனிக்கவேண்டும். நீதனின் கடந்த கால செயற்பாடுகள் நம்பிக்கையளிப்பதாகவோ ஆரோக்கியமானதாகவோ இல்லை என்பதே எனது கணிப்பும் விமர்சனமுமாகும். இவரது அடிப்படை நோக்கம் ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து ஏதாவது ஒரு பாராளுமன்றத்தின் பிரதிநிதியாக வருவதே ஓழிய கட்சியின் கொள்கைள் முக்கியத்துவமில்லை என்பதையே காண்பிக்கின்றது. இது தொடர்பாக இவர் சுயவிமர்சனம் செய்யவேண்டும். இருப்பினும் இந்த முறை மீளவும் புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவதால் இவருக்கு தமிழர்கள் தயக்கமின்றி வாக்களிக்கலாம். ஏனனில் இவர் போட்டியிடுகின்ற கட்சி இவரது பிழைப்புவாத போக்கிற்கு இடமளிக்காது என நம்பலாம்.
மணித்தியால கணக்கிலும் சம்பளத்திற்கும், மற்றும் மாத சம்பளத்திற்கும், சிறு தொழில் செய்பவர்களுக்கும், குடியேறியவர்களுக்கும், புதிய குடிவரவாளர்களுக்கும் நன்மையளிக்கின்ற அவர்களது அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்கின்ற அதற்காக குரல் கொடுக்கின்ற ஒரே கட்சி புதிய ஜனநாயக கட்சியே என்றால் மிகையல்ல. தமிழர்களைப் பொருத்தவரை புலத்தில் வாழ்கின்ற தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் அபிலாசைகளுக்காகவும் குரல் கொடுக்கின்ற ஒரே கட்சி இந்தக் கட்சியே.

மேலும் புதிய ஜனநாயக கட்சி வழமையைப் போன்று தோற்கின்ற கட்சி அல்ல. இப்பொழுது இக் கட்சியானது எதிர்கட்சியளவிற்கு முன்னேறி உள்ளது. மேலும் ஒன்டாரியோ மாகாணத்தில் மட்டுமல்ல கட்சியின் பிரதான தலைவராகவும் பெண்களே உள்ளனர். இது மிகவும் முக்கியமான மாற்றத்தை கனடாவில் ஏற்படுத்தும் என நம்பலாம். நாம் சரியாக செயற்படுவோமானால் எதிர்வரும் ஒன்டாரியோ மாகாண தேர்தலில் முதல் முறையாக பெண் முதல்வரை தெரிவு செய்யலாம். இது மட்டுமின்றி, இதன் தொடர்ச்சியாக அடுத்த கனேடிய பாராளுமன்றத்தின் வரலாற்றில் கனேடிய பிரதமராக ஒரு பெண்ணை முதன் முதலாக கூட தெரிவுசெய்யலாம்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பல முன்னேறிய பிரிவினரும் புதிய சிந்தனைகளை பரப்புகின்றவர்களும் மற்றும் பேரவைகளும் அவைகளும் காங்கிரஸீகளும் உள்ளன. இவர்கள் ஒவ்வொருவரும் தமது அமைப்புகள் சார்ந்து எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது, குடிரவாளர்களுக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் பெண்களுக்கும் மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நன்மையானது என்பதை பொது மேடைகளிலும் மற்றும் ஊடகங்கள் மூலமும் முன்வைக்கவேண்டும். இதுவே இந்த அமைப்புகளின் நோக்கங்களுக்கு வலுச் சேர்க்கும். இது தொடர்பான பிரக்ஞையை விழிப்புணர்வை மனிதர்களிடம் ஏற்படுத்த தமிழ் சமூக நிறுவனங்களும் அரச சார்பற்ற இலாப நோக்கற்ற அமைப்புகளும் தொடர்ச்சியாக இந்தத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்யவேண்டிய தேவை உள்ளது. கல்வியாளர்களும் எழுத்;தாளர்களும் கட்சிகளின் கொள்கைகள் தொடர்பாக விரிவான விளக்கங்களை தொடர்ச்சியாக எழுத ஆரம்பிக்கவேண்ம். இவ்வாறு செயற்படுவதற்கு தேர்தல் காலத்தின் இறுதிவரை காத்திராமல் விரைந்து செயற்படுவது வாக்களிப்பவர்கள் சரியான ஒரு கட்சியை தேர்வு செய்வதற்கு வழிகாட்டும்.

மீராபாரதி
15.08.2011

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: