Posted by: மீராபாரதி | June 17, 2011

ஜெயமோகன் – சில அவதானங்கள்! குறிப்புகள்! மற்றும் கேள்விகள்?

ஜெயமோகன் – சில அவதானங்கள்! குறிப்புகள்! மற்றும் கேள்விகள்?

அண்;மையில் டீசே தமிழன் (தமிழன் – தேசியவாதத்தின் பாதிப்பா?) எக்ஸோராக் குறிப்புகள் என்ற பகுதியில் கீழ் சுய பிரகடனம் (http://djthamilan.blogspot.com/2011/01/blog-post.html)  என்ற கட்டுரையை எழுதியிருந்தார். இதில் தனக்கும் ஜெயமோகனுடன் இருந்த பத்தாண்டு கால பகையை (இலக்கிய விவாதம் சார்ந்தது …தனிப்பட்டதல்ல) முடிவுக்கு கொண்டுவருவதாக ஆரோக்கியமான நேர்மறையான பார்வையுடன் எழுதியிருந்தார். இவரின் இந்தக் குறிப்பின் பின்னனியில் இருந்த> இந்த விவாதம் தொடர்பான> ஆரம்பக் கட்டுரைகளை வாசிப்பதற்கு கிடைக்கவில்லை. ஆனால் இவரது கட்டுரை ஜெயமோகனின் இணையத்தளத்தை பார்ப்பதற்கு ஆவலை ஏற்படுத்தியது.

ஜெயமோகனின் படைப்புகளை சரிநிகர் காலத்திலிருந்து அறிந்திருந்தபோதும் வாசிப்பதற்கு ஊந்தப்படவில்லை. (இங்கு சரிநிகர் என்ற சொல்லை வாசித்த உடனையே என்னைப்பற்றிய ஒரு முத்திரை வாசிப்பவருக்கு முன்னால் விழுந்திருக்கும்.) மேற்குறிப்பிட்ட டீசேயின் கட்டுரையை வாசிக்கும்வரை அவரது படைப்புகள் ஒன்றையும் வாசித்ததில்லை. இதற்கு காரணம் கருப்பி (சுமதி ருபன்) தனது கட்டுரையில் (karupu.blogspot.com/2005/03/blog-post_09.html ) குறிப்பிட்டதுபோல் நான் அறிந்த நண்பர்கள் மூலம் எனக்கு ஜெயமோகன் தொடர்பாக கிடைத்த முத்திரை காரணமாக இருக்கலாம். மேலும் கடந்த பதினைந்;தாண்டுகளுக்கு மேலாக இலக்கிய படைப்புகளை வாசிப்பதை முழுமையாகப் புறக்கணித்தே வந்திருக்கின்றேன். இதற்கான காரணத்தை இன்னுமொரு சந்தர்ப்பத்தில் எழுதுகின்றேன். ஆனால் மேற்குறிப்பிட்ட நிகழ்வின் பின் இவர் எழுதிய சில கட்டுரைகளை காந்தி> லோகியின் காதல்> கடவுள்> ஜக்கி போன்றவற்றை மேலோட்டமாகவும்; அவரது டீசேக்கான பதிலையும் அவருடனான சந்திப்பை ஆழமாகவும் வாசித்தேன். இந்தக் கட்டுரைகளின் அடிப்படையிலையே எனக்குள் எழுந்த சந்தேகங்களையும் உணர்வுகளையும் கேள்விகளையும் குறிப்புகளாக இங்கு பதிவு செய்கின்றேன்.

நான் ஜெயமோகன் போன்று பரந்த ஆழமான வாசிப்பு கொண்ட ஒரு வாசருமல்ல படைப்பாளியுமல்ல. ஒரு சாதாரண சமூக அக்கறையுள்ள மிகக் குறைந்தளவு வாசிப்பனுபவங் கொண்ட ஒரு வாசகர் என்பதை இக் குறிப்பை வாசிப்பவர்கள் தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.

ஜெயமோகனுடன் பின்வரும் விடயங்களால் ஈர்க்கப்பட்டேன். முதலாவது தன்னைப்பற்றி ஒருவர் எதிர்மறையாக கதைத்தபோதும் கோவம் பாரட்டாது உரையாடியமை. இரண்டாவது கடவுள் என்பது ஒரு உணர்வு. அது நாத்திகத்தையும் ஆத்திகத்iயும் கடந்து ஒரு உணர்வு அல்லது அனுபவ நிலை என எழுதியிருந்தமை. (இவ்விதமான ஒரு புரிதலின் அடிப்படையிலையே “நான் ஒரு கடவுள்” (http://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D) என்ற நூலை ஓசோவின் கருத்துக்களினடிப்படையில் குழந்தைகளின் பார்வையில் எழுதினேன்). மூன்றாவதாக ஒரு படைப்பாளி என்பவர் தன்னை இழந்து தான் உருவாக்கும் பாத்திரத்திற்குள் முழுமையாக  தன்னை அர்ப்பணிக்கவேண்டும். அப்பொழுதுதான் அந்தப் பாத்தரத்தை முழுமையாக பிரசவிக்க முடியும் என்கின்ற கூற்று. இப்படி அவர் எழுதிய பல விடயங்கிளில் நான் வாசித்த சிறு சிறு விடயங்கள் எனக்கு முக்கியமான விடயங்களாக இருப்பதுடன் மேலும் வாசிப்பதற்கான ஆவலைத்துண்டின என்றால் மறுப்பதற்கில்லை..

ஒருவருக்கு எதைப் பாதிக்கின்றதோ அதைத்தான் தனது படைப்பில் கொண்டுவரமுடியும் என்கின்ற டீசேயின் கருத்துடன் உடன்படுகின்றறேன். இதேவேளை ஜெயமோகன் டீசே மீது வைக்கின்ற பின்வரும் விமர்சனத்துடன் உடன்படுகின்றேன். அதாவது இவர்களைப் போன்றவர்கள் தமது அரசியலுக்குடாகவே இலக்கிய படைப்புகளைப் பார்க்கின்றனர். அதைத்தாண்டி வருகின்றார்கள் இல்லை. இதனால் இவர்களது படைப்புகள் ஒரு வரையரைறக்குள் அகப்பட்டுவிடுகின்றன என்கின்றார். இது இன்றைய குறிப்பாக இருபதுகளையும் முப்பதுகளையும் வயதுகளையுடைய நான் வாசித்த (புலி சார்பு அல்லது எதிர்ப்பு அல்லது தமிழ் தேசியம் சார்பு அல்லது எதிர்ப்பு) படைப்பாளர்களின் எழுத்துக்களை கவனிக்கும் பொழுது அறியமுடிகின்றது எனலாம்.

மேற்குறிப்பிட்ட விமர்சனத்தை அல்லது குற்றச்சாட்டை முன்வைக்கின்ற ஜெயமோகன்> அவர்களுக்கு இருப்பதுபோலான> தனக்கான வரையறையையும் புர்pந்து> உணர்ந்து கொண்டாரா என்பதே எனது கேள்வி? ஊதாரணமாக ஒரு ஈழ எழுத்தாளருக்கு (http://www.jeyamohan.in/?p=14933) என்ற இவரது கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “ஒரு கதாபாத்திரத்தையோ> கதையையோ அதன் ஆசிரியன் கொஞ்சம் கூட மாற்ற முடியாதென்பதை எழுத்தாளன் சொன்னால் நல்ல வாசகன் கண்டிப்பாகப் புரிந்து கொள்வான் என்றே நம்புகிறேன்.”  இதிலுள்ள கருத்தல்ல மாறாக கையாளப்பட்ட சொற்களே கவனிக்கப்படவேண்டியது. இவ்வாறன சொற்களைப் போன்று இவரது மேற்குறிப்பிட்ட கட்டுiரையில் மேலும் பல ஆண்நிலைப்பட்ட சொற்கள் பரவிக்கிடக்கின்றன. இக் கட்டுரையானது பொதுவான ஒன்று என்பதுடன் ஜெயமோகன் என்கின்ற வாழ்கின்ற ஒரு பாத்திரத்தின் கூற்று. இன்றைய காலத்தில் இவ்வாறன கட்டுரைகளில் பொதுப்பால் எழுத்துக்கள் வருவதே பொருத்தமானது. ஆனால் அவ்வாறு பொதுப்பால் சொற்கள் இல்லாது ஆண்பால் சார்ந்த சொற்கள் மட்டும் வந்திருப்பது ஜெயமோகனிடமிருக்கின்ற தந்தையாதிக்க (தந்தையம்) கருத்துக்களை பிரதிபலிக்கவில்லையா? பிரக்ஞைபூர்வமாக பகுத்தறிவுடன் எழுதும் தனது கட்டுரைகளிலையே இவ்வாறன சொற்களைக் கடக்க முடியாதவராகவே இவர் இருக்கின்றார் என்பதே எனது உணர்வும் விமர்சனமுமாகும். இவ்வாறனா ஒரு விமர்சனத்தை வாழ்க்கையும் மனிதப்பாத்திரங்களையும்; படைத்த (?) கடவுளின் முன்வைக்க முடியாது. ஆனால் ஜெயமோகன் என்கின்ற பாத்திரத்தின் கூற்றை விமர்சிக்கலாம் தானே? இதேபோல் ஜெயமோகன் என்கின்ற படைப்பாளி மீது அல்லது அவர் உருவாக்கிய பாத்திரத்தின் மீது சாதியம் தொடர்பாக நண்பர்கள் விமர்சனத்தை முன்வைக்கலாம் தானே? அதில் உண்மை அல்லது நியாயம் இருக்கலாம் என்றே நம்புகின்றேன். இதற்கான ஆதாரத்தையும் ஜெயமோகனே தருகின்றார்.

மேற்குறிப்பிட்ட தனது கட்டுரையில் ஜெயமோகன் கூறுகின்றார் ஒரு பாத்திரப் படைப்பானது நமது ஆழ்மனதிலிருந்து பிரக்ஞையற்று (unconscious mind) தானாகவே வெளிப்படவேண்டும் அல்லது வெளிப்படுகின்ற ஒன்று என்கின்றார். இந்த தனிமனித ஆழ்மனமே சமூக ஆழ் மனம் எனவும் குறிப்பிடுகின்றார். இக் கூற்றுடன் உடன்படுகின்றேன். அதாவது இவ்வாறன தனிமனித அல்லது சமூக ஆழ்மனதை கூட்டு பிரக்ஞையற்ற ஆழ்மனம் (collective unconscious mind) எனக் குறிப்பிடலாம். இந்த தனிமனித மற்றும் சமூக ஆழ்மனதில் என்ன இருக்கின்றன?

நமது ஆழ்மனம் மற்றும் சமூக ஆழ மனம் என்பது (எனது புரிதலில்) இதுவரை காலமும் நமக்குள் ஆழமாக புகுத்தப்பட்ட ஆண்நிலைப்பட்ட தந்தையாதிக்க> சாதிய> தேசியவாதக் கருத்துக்களல்லவா? மேலும் நமது சமூக கலாசார ஒழுங்கங்களால் நாமே அடக்கி ஒடுக்கிய உணர்வுகள்> உணர்ச்சிகள் அல்லவா நம் ஆழ்மனதில் கட்டுண்டு கிடக்கின்றன. இவர் குறிப்பிடுவது போன்று இதுவல்லவா நமது கனவில் கூட வருகின்றது. ஆகவே இவர் குறிப்பிடுகின்றதன்படி இவ்வாறன ஒரு நிலையிலிருந்து ஒருவர் எழுதுகின்றபோது அவரது எழுத்துக்களில் பாத்திரப் படைப்புகளில் இயல்பாகவே ஆணாதிக்க சாதிய தேசியவாதக் கருத்துக்கள் இடம் பெறலாம் அல்லவா? ஆகவெ> எப்படி ஜெயமோகன் அவர்கள் ஈழத்து எழுத்தாளர்கள் அரசியல் கோட்பாடுகள் என்பவற்றுக்குள் கட்டுண்டு அதனுடாகவே தமது படைப்புகனை வெளிக்கொண்டுவருகின்றார்கள் என்பது உண்மையோ அதேயளவு உண்மையானதாக இருக்கவேண்டும் ஜெயமோகன் அவர்களும் தனது ஆழ்மன ஆணாதிக்க> சாதிய> தேசியவாத கோட்பாடுகளுக்குள் கட்டுண்டு இருக்கின்றார் என்பது உண்மையானதாக இருக்கவேண்டும். ஆகவே டீசே> அருண்மொழி> மைதிலி போன்றவர்கள் இவர் மீது வைக்கின்ற பல்வேறு விமர்சனங்கள் அல்லது குற்றச்சாட்டுக்கள் உண்மையாகின்றன அல்லவா?

நமது தமிழ் கலைப்படைப்புகள் உலகத்தரம் வாய்ந்ததாக இல்லாமலிருப்பதற்கு காரணம் இவர் கூறுவதுபோல் ஆழ்மனதிலிருந்து பிரக்ஞையற்று (collective unconscious mind) நாம் எழுதுவதால்தானோ என்ற சந்தேகம் எனக்கு எழுகின்றது. ஏனனில் இவ்வாறான நமது அல்லது சமூக ஆழ் மனதிலிருந்து பிரக்ஞையற்று ஒரு படைப்பு உருவாகும் பொழுது அது புதுமையானதாக இருக்காது. மாறாக இன்னுமொருவர் படைத்ததை வேறு மொழியில் சொற்களில் படைத்தாகவே இருக்கும். இதற்கு காரணம் நமது பிரக்ஞையற்ற (unconscious) நிலையும் சமூக ஆழ் மனத்தில் (collective unconscious mind) தங்கியிருப்பதுமாகும். ஆகவே ஒரு படைப்பு உலகத்தரம் அல்லது உயர்ந்த தரம் வாயந்ததாக இருப்பதற்கு மேற்குறிப்பிட்ட நிலைக்கு மாறன ஒரு நிலையிலிருந்தே ஒரு எழுத்தாளர் தனது படைப்பை படைக்க வேண்டும் என நான் உணர்கின்றேன். அதாவது ஒரு படைப்பாளர் தனது ஆழ் மனதை அல்லது சமூக ஆழ்மனதைக் கடந்து மனமற்ற (no-mind) முழுமையான கூட்டு பிரக்ஞையிலிருந்து (collective conscious) எழுதப்பட்டதாகவே இருக்கவேண்டும் என்றே நினைக்கின்றேன். அப்பபொழுதுதான் வாழ்வின் யாதார்த்தமான பாத்திரங்களினுடாக தமது கற்பனையில் ஆரோக்கியமான உயர்ந்த தரம் வாய்ந்த ஒரு படைப்பை படைக்க கூடியதாக இருக்கமுடியும். உதாரணமாக ரவித்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி தொடர்பாக ஒரு நிகழ்வைக் கேள்விப்பட்டேன். இது எந்தளவு உண்மையோ தெரியாது. ஆனால் நான் கேள்விப்பட்டதை இங்கு ஒரு உதாரணமாக பகிர்ந்துகொள்வது பொருத்தமானது எனக் கருதுகின்றேன்.

தாகூரின் கீதாஞ்சலி இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு தெரிவாகியிருந்தபோது நடைபெற்ற ஒரு நிகழ்வு. தாகுர் அவர்கள் இந்தப் படைப்பின் தனது ஆங்கில மொழிபெயர்ப்பை சரிசெய்வதற்காக ஆங்கில் இலக்கணம் கற்ற தனது நண்பரான ஒரு பாதிரியாரிடம் கொடுத்திருக்கின்றார். அவரும் அதில் ஒரு பகுதியை ஆங்கில இலக்கணத்திற்குப் பொருந்திவராததால் திருத்தியிருக்கின்றார். தாகூரும் அந்த தீருத்தத்தை ஏற்று நோபல் தெரிவுக்குழுவிற்கு அனுப்பியிருக்கின்றார். பின்பு தெரிவுக்குழுவினுடனான ஒரு சந்திப்பின்போது குழுவிலிருந்த ஒருவர் மேற்குறிப்பிட்ட ஆங்கில இலக்கணம் திருத்தப்பட்ட பகுதியை பற்றி மட்டும் குறிப்பிட்டு அது குறிப்பிட்ட நாவலின் போக்கினை இடையூறு செய்கின்றது என்ற தொனிபடக் கூறினாராம். இதன்பின் தாகூரும் ஆங்கில இலக்கணம் திருத்தப்பட்டதைக் குறிப்பிட்டிருக்கின்றார். இதனடிப்படையில் இரண்டு விடயங்களை நாம் புரிந்துகொள்ளலாம் என நினைக்கின்றேன். ஒன்று ஒரு இலக்கியப் படைப்பு என்பது நாம் வழமையாகப் பயண்படுத்தும் மொழி இலக்கணத்தை கடந்தது என்பதாக கொள்ளலாம். ஆழகான சொற்களை வெட்டி வெட்டி ஒட்டுவதால் ஒரு சிறந்த படைப்பு உருவாகிவிடமுடியாது. இரண்டாவது அதியுயர் கூட்டுப் பிரக்ஞையில் (collective conscious) அல்லது ஆழ்மன கூட்டு பிரக்ஞையின்மையில் (collective unconscious mind) படைக்கப்படுகின்ற இலக்கியங்களின் போக்கை ஒருவர் எவ்வகையான பிரக்ஞைநிலையில் ( un/conscious status) இருக்கின்றாரோ அவரால் தனது நிலையிலிருந்தே புரிந்துகொள்ள முடியும் என்பதே. இதனால்தான் நோபல் தெரிவுக்குழுவிலிருந்த ஒருவரால் குறிப்பிட்ட அந்தப் பகுதியை மட்டும் அடையாளம் காணக்கூடியதாக இருந்துள்ளது. மேலும் அதியுயர் கூட்டுப் பிரக்ஞையில் படைக்கப்படுகின்ற ஒரு படைப்பே உயர்ந்த புதிமையான உலகத்தரம் வாய்ந்த இலக்கியமாகவும் காலம் கடந்தும் வாழ்கின்றது எனலாம். (இதேவேளை> நோபல் பரிசுக்கான இலக்கியத் தெரிவுக்குழு அரசியல் ஆதிக்கங்களுக்கு அப்பாற்பட்டதல்ல என்பதை கவனத்தில் கொள்கின்றேன்.)

இந்தடிப்படையில் பிரக்ஞையற்றவர்கள் (unconscious) ஏதோ ஒருவகையில் தமது படைப்புகளில் தமது ஆழ்மனதிலிருக்கின்ற அடக்கப்பட்ட உணர்வுகளை அல்லது ஆதிக்க கருத்துக்களை தமது படைப்புகளில் பிரதிபலிக்கின்றார்கள் என்பதே உண்மையாகும். இதனால் இவர்களது படைப்புகளில் ஆணாதிக்க சாதிய தேசிய சார்புகள் இருப்பது தவிர்க்கப்பட முடியாதவையாக இருக்கின்றன. இவ்வாறான சார்புத் தன்மைகளை தவிர்க்கவே முடியாதா? இந்த இடத்தில் தான் ஜெயமோகன் மீதான அடுத்த விமர்சனத்தை முன்வைக்கின்றேன். மேற்குறிப்பிட்டவாறு ஆழ்மன பிரக்ஞையற்ற (collective/ unconscious mind) வெளிப்பாடே ஒரு பாத்திரப் படைப்பு என்துடன் உடன்பட்டாலும் ஒரு படைப்பாளி அதனுடன் மட்டும் நின்றுவிடுவதில்லையே. குறிப்பிட்ட பாத்திரத்திற்கு வெளியேயும் வந்து மூன்றாவது நபராக (அதாவது பாத்திரமாகவும் படைப்பாளியாகவும் இல்லாமல்;) இருந்தும் அப்பாத்திரத்தை விபரிக்க வேண்டுமல்லவா? வெறும் யதார்த்தத்தை மட்டும் பிரதிபலிப்பதுடன் படைப்பாளியின் பொறுப்பு முடிவடைந்துவிடுகின்றதா? உதராணமாக சோபாசக்தி மற்றும் ராமகிஸ்ணன் போன்றவர்கள் சிறந்த தமிழ் படைப்பாளிகள் என்பதில் சந்தேகமில்லை. எனது பெண் நண்பர் ஒருவர் இவர்களது படைப்புக்களை வாசித்தபோதும் ஒரு விமர்சனத்தை முன்வைக்கின்றார். அதாவது இவ்வளவு அக்கறையுடன் நன்றாக எழுதும் இவர்கள் தமது கட்டுரைகளில் அல்லது பேட்டிகளில் பாலியல் தொழிலாளர்களை “வேசிகள்” என்றே குறிப்பிடுகின்றனர். ஒரு படைப்பில் ஒரு பாத்திரத்திற்கு ஊடாக இவ்வாறு கூறுவதும் படைப்புக்கு வெளியே ஒரு மனிதராக கூறுவதற்கும் வித்தியாசம் உள்ளது என்றே நினைக்கின்றேன். இவ்வாறன இவர்களது எழுத்துக்கள் இவர்கள் எவ்வாறான ஒரு சமூகநிலையில் பிரக்ஞையின்றி (unconscious) இருக்கின்றனர் என்பதையே பிரதிபலிக்கின்றது. இவர்கள் மீது இதற்காக ஆணாதிக்கவாதிகள் என்ற குற்றச்சாட்டை பெண்ணிலைவாதிகள் முன்வைப்பதுபோல் ஜெயமோகனின் படைப்புகளில் பாத்திரங்களுக்கு அப்பாற்பட்டு வருகின்ற பொதுவான வெளிப்படுத்தல்களில் படைப்புகளில் பிரக்ஞையற்று வெளிப்படுகின்ற சாதிய ஆணாதிக்க கூறுகளை ஒருவர் அடையாளம் காணலாம் அல்லவா?

இறுதியாக இவ்வாறன விமர்சனங்கள் ஒருவரை புண்படுத்துவதற்காகவே அல்லது குற்றச்சாட்டுவதற்காகவோ எழுதப்படுவதில்லை. மாறாக கருத்துப்பரிமாற்றத்திற்காகவே நடைபெறுகின்ற ஒன்று. ஆனால் ஜெயமோகனின் விமர்சனங்களில் ஒரு விதமான மேட்டிமைத் தனம் தானே சரி என்கின்ற போக்கும் தெரிகின்றது. இதேபோல்அண்மையில் வளர்மதி> இராமகிஸ்ணன் தொடர்பாக முன்வைத்த கராரான விமர்சனம் என்பது எதிர்மறையானது என்பதையும் இங்கு குறிப்பிடுவது நல்லது என்றே நினைக்கின்றேன்.

ஒருமுறை பேராசிரியர் ஒருவர் பின்வருமாறு குறிப்பிட்டார். அதாவது இலக்கியத்திலும் ஒவ்வொரு தரங்கள் இருக்கின்றன என. பெரியோர் படிக்கின்ற இலக்கியங்களை குழந்தைகள் படிக்கமுடியாது. ஆதனால்தான் குழந்;தை இலக்கியம் இருக்கின்றது. இப்படி ஒரு மனிதரின் ஒவ்வொரு காலகட்டத்திற்கான இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. இவ்வாறு படைக்கின்ற படைப்பாளிகளும் அவர்களுக்குரிய காலகட்டங்கள் இருக்கின்றன. அந்தக் காலகட்டத்திலிருந்தே தமது படைப்புகளை அவர்கள் படைக்கின்றனர். உதாரணமாக வயதில் குறைந்த ஒருவர் வயது கூடிய ஒருவரைவிட சிறந்த இலக்கியத்தை படைக்கமுடியும். இதேவேளை வயது கூடிய ஒருவர் இடைநிலையான அல்லது மேலும் தாழ்ந்த இலக்கியங்களையும் படைக்கலாம். இவ்வாறான கீழ்நிலை அல்லது இடைநிலை இலக்கியங்களை படைக்கின்ற வயது கூடியவர்கள் மீதான விமர்சனமானது ஆரோக்கியமானதாக நேர்மறையானதாக இருப்பதே சரியானது என்பது எனது நிலைப்பாடு. ஆப்பொழுதுதான் கீழ் அல்லது இடைநிலையிலிருக்கின்ற ஒரு படைப்பாளி உயர்ந்த நிலையை அடையாவோ சிறந்த இலக்கியத்தை படைக்கவோ வழிகாட்டமுடியும்.

மாறாக எதிர்;மறையான ஆரோக்கியமற்ற விமர்சனத்தை வைப்பதன் மூலம் நாம் ஒரு படைப்பாளியை முத்திரை குத்துவது மட்டுமல்ல அவரைப் புறக்கணிப்பதற்hகன காரணகர்த்தாக்களாகவும் இருக்கின்றோம். இது ஒரு தவறான போக்கே. ஆனால்; பல விமர்சகர்களை இவ்வாறான ஒரு போக்கிலையே எழுத துண்டுகின்றது. உதராணமாக வளர்மதி மற்றும் அருண்மொழிவர்மனின் விமர்சனங்களில் பல நியாயங்கள் இருப்பினும் கூட அவர்களது அடிதடி எழுத்துக்கள் விமர்சனத்தின் தரத்தினை குறைத்துவிடுகின்றன.  ஊதாரணமாக வளர்மதி ராமகிஸ்ணன் மீது இவ்வளவு காட்டமா இருக்கவேண்டியதில்லை. மாறாக ராமகிஸ்ணன்; எந்த நிலையில் இருக்கின்றார்  எனப் புரிந்துகொள்வதன் மூலம் அவரை மேலும் வளப்பதற்கு உதவிபுரியலாம். ஏனனில் அவரது இலக்கியப் பணியின் முக்கியத்துவத்தை நாம் புறக்கணிக்க முடியாது. அவரது எழுத்துக்கள் ஆரம்ப அல்லது வளர்ந்து வருகின்ற பல வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆகக் குறைந்தது ரமணிசந்திரனை வாசிப்பதிலிருந்து விடுவிப்பதற்காவது இவரது எழுத்துக்கள் வாசகர்களுக்கு பயன்படுகின்றன என்றால் மிகையல்ல. ஆகவே விமர்சனங்களை முன்வைப்பவர்கள் கூட ஒரு முன்மாதிரியானவர்களாக இருக்கவேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என்றால் தவறில்லை.

நமது படைப்புகளின்> எழுத்துக்களின்> விமர்சனங்களின் முக்கிய நோக்கமே கருத்துக்களையும் நமது அனுபவங்களையும் பகிர்வது மட்டுமல்லவே. ஒரு படைப்பபை உருவாக்குவதன் மூலம் நாமும் வளர்ந்து பிறரும் வளர்வதற்கான ஒரு வழியல்லவா?. பொதுவாக ஓவ்வொருவரும் வாசிப்பதை ஒரு பழக்கமாக உருவாக்குவதே பெரும் பிரச்சனையாக இருக்கின்ற சூழல் நமது. இவ்வாறு ஒன்றுமே வாசிக்கபலிருப்பவர்களை ரமணிச்சந்திரனையாவது வாசிப்பது அல்லது வாசிக்கத் துண்டுவது தவறில்லை என்றே நினைக்கின்றேன். ஏனனில் வாசிப்பு என்பது எதோ ஒரு இடத்தில் ஆரம்பிக்கப்படவேண்டும்.

டீசே குறிப்பிட்டதைப்போல ஜெயமோகன் புறக்கணிக்க கூடியவரல்ல. ஆழமான பரந்த வாசிப்பை கொண்டவராகவே தெரிகின்றார். பல  சுவையான விடயங்களை தொட்டுச் செல்கின்றார். அனைவரையும் வாசிப்போம். விமர்சிப்போம். பரஸ்பரம் வளர்வதற்கு ஊந்துதலாக இருப்போம். 

நன்றி

மீராபாரதி

14.06.2011

Advertisements

Responses

 1. ஜெயமோகன் பற்றிய உங்கள் கருத்தில் எனக்கு ஒரு மாற்றுக் கருத்து உண்டு. ஜெயமோகனை நீங்களோ அல்லது டீசேயோ அல்லது அது போன்ற பரந்து பட்ட வாசிப்பு உள்ளவர்களோ அணுகும்போது பிரச்ச்னையில்லை. எனவே உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒரு விடயம் பற்றி, அறிமுகமான ஒரு விடயம் பற்றி (அனேக விடயங்கள் பற்றிய வாசிப்போ அலல்து அறிமுகமோ உங்களுக்கு இருப்பதால்) ஜெயமோகன் எழுதுவதை அணுகும்போது உங்களுக்கு அந்தக் குறித்த விடயம் பற்றி இருக்கும் கருத்துகளும், வாசிப்புகளும் ஜெயமோகன் சொல்கின்ற கருத்துக்களுடன் ஊடாடவே செய்கின்றன.

  ஆனால் அதே நேரம் ஒருவர் ஜெமோ ஊடாக ஒரு விடயத்தை அணுகும்போது அல்லது அறிமுகமாகின்றபோது அடு எத்தனை எதிவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதே கவனிக்கவேண்டியது. தனது தொடர்ச்சியான எழுத்துக்களூடாக ஜெமோ நிறுவ முயலும் அல்லது கட்டியெழுப்ப முயலும் விடயங்கள் மிகவும் அபாயகராமனவை.

  ஜெயமோகன் தெரிவித்த சில கருத்துக்கள்

  1. மு தளையசிங்கம் ஆபாசமாகக் கதை எழுதினார் என்பதால் ஊராரால் அடித்துக் கொல்லப்பட்டார்.
  2. இலங்கை ஒரு தீவாக இருப்பதால் ஈழத்தவர்கள் மனம் மூடுண்டு போய் இருக்கின்றது.
  3. ஈழத்தில் 30 ஆண்டுகளாகப் போர் நடப்பதால் அதன் இளைய தலைமுறையினரின் மனம் பூசல் நிறைந்து போய்க்கிடக்கின்றது
  4. காஷ்மீரில் பிரச்ச்னை இருக்கின்றது என்பது பிரிவினைவாதிகள் கட்டியெழுப்பிய விம்பம்.
  5. கமாலாதாஸ் கருப்பாகவும் அவலட்சணமான தோற்றம் கொண்டவராகவும் இருந்த்தால் அவருக்கு ஆண்கள் மீது வெறுப்பும், அதிகம் காமமும் இருந்தது. அதையே அவர் தனது எழுத்தில் வெளிப்படுத்தினார்.
  6. அஜயன் பாலா ஒரு முறை காந்தியாரை விமர்சித்து எழுதியவுடன் ஜெமோ எழுதினார் அஜயன் பாலா ஒரு கிறீஸ்தவர், அதனாலே அவர் காந்தியாரை எதிர்க்கின்றார் என்று ஒரு பெரிய கட்டுரையை. அதன் பின்னர் அஜயன் பாலா தான் கிறீஸ்தவர் அல்ல என்று தெரிவிக்க அதன் பின்னர் ஜெமோ சொன்னார், அஜயன் பாலா கிறீஸ்தவர் இல்லை என்பதைத் தவிர அந்தக் கட்டுரைரில் இருக்கின்ற ஏனைய விடயங்கள் எல்லாம் சரியானவை என்று.

  ஜெயமோகனை நான் தொடர்ச்சியாக இடையீடு செய்யக் காரணம் இது போன்று ஜெமோ தொடர்ச்சியாகப் பரப்பும் புரளிகளே. மற்றப்டி அவர் ஆளுமையுள்ள ஒரு புனைவெழுத்தாளர். அதே நேரம் அவரது புனைவுகளிலும் வெளிப்படும் அரசியல் எனக்கு தொடர்ச்சியாக எரிச்சல் ஊட்டவே செய்கின்றது.

  எனினும், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விடயங்களும் முக்கியமானவையே. கவனிக்கின்றேன்

 2. நன்றி அருண்மொழிவர்மன்…
  ஜெயமோகன் தொடர்பான தங்களது விமர்சனங்களுக்கான காரணங்களிலும் தங்களது அக்கறைக்கான நோக்கங்களிலும் எனக்கு முரண்பாடுகள் இல்லை….
  எனது அக்கறை எல்லாம் நாம் எவ்வாறு விமர்சனத்தை முன்வைக்கின்றோம் என்பது பற்றிய அக்கறையே….
  அதாவது நமது பண்பு தொடர்பான விடயமே அக்கறைக்குரியது….
  ஏனனில் நாம் வைக்கின்ற விமர்சனத்தில் எவ்வளவுதான் உண்மைய நியாயம் இருந்தாலும்….
  அது வைக்கப்படுகின்ற பண்பைப் பொறுத்து அதன் முக்கியத்துவத்தை இழந்துவிடலாம்…..
  அவ்வளவே…

  தங்களதும் வளர்மதியினதும் கேள்விகள் சரியானவையாக இருந்தபோதும்….கோவம் நியாயமானபோதும்… அக்கறை உண்மையானபோதும்…
  நீங்கள் முன்வைக்கின்ற விமர்சன முறையில் எனக்கு விமர்சனம் உள்ளது.
  நன்றி


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: