Posted by: மீராபாரதி | June 9, 2011

(சுய) விமர்சனமும் (சுய)மாற்றமும்

(சுய) விமர்சனமும் (சுய)மாற்றமும்

 இலங்கையில் நடைபெற்ற போரை முடிக்கு கொண்டுவந்ததுடன் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டமானது (தற்காலிகமாகவேனும்) முடக்கப்பட்டுவிட்டது. இவ்வாறன ஒரு சுழலுக்குப் பின்> இதுவரை நடந்தவற்றையும் இப்பொழுது நடப்பவற்றையும் ஒவ்வொருவரும் தமது சமூக மற்றும் அரசியல் தளங்களிலிருந்தும் பல்வேறு கோணங்களிலிருந்தும் பார்த்து மதிப்பிடுகின்றனர் அல்லது விமர்சிக்கின்றனர். இந்த விமர்சனங்களானது இலங்கை அரசாங்கத்தையும் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குபவர்களையும் அவர்களின் ஆதரவாளர்களையும் மற்றும் புலிகளது தலைமைகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் முன்னால் இயக்கங்களின் தலமைகளையும் நோக்கியே பிரதானமாக முன்வைக்கப்படுகின்;றது. குறிப்பாக தலைமைப் பொறுப்பிலிருந்தவர்களை சுயவிமர்சனம் செய்யும் படியும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இதேவேளை கலை இலக்கிய தளங்களிலும் பல்வேறு சமூக அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து பலவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பெரும்பாலும் இவ்வாறான விமர்சனங்கள் தாம் சரியானவர்கள் எனவும் மற்றவர்கள் பிழையானவர்கள் எனவும் நிறுவுவதையே நோக்கமாக கொண்டிருப்பதுடன் அவ்வாறான நிலைப்பாட்டில் உறுதியாகவும் இருப்பதாகவே உணரமுடிகின்றது.

 

நாம் முன்வைக்கின்ற விமர்சனங்கள் ஒருவரை அல்லது ஒரு அமைப்பை பிழையானதாகவும் அல்லது துரோகியாகவும் நிறுபிப்பித்து குற்றவாளிக் குண்டில் நிறுத்துவதையே பிரதான நோக்கமாக கொண்டு முன்வைக்கப்படுகின்றது. இதற்காக ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சம்வங்களை முதன்மைப்படுத்தி> நமது சமூகத்தின் மேலாதிக்கம் செய்கின்ற கருத்தினுடாக> குறிப்பிட்ட நபரையோ> அமைப்பையோ> சம்வங்களையோ பார்த்து மூன்றாம் தரமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதன் மூலம் குறிப்பிட்ட நபரை அல்லதுஅமைப்பை “பிறராக” கட்டமைக்கின்றோம் (Gerald M. Mara). இதற்காகப் பயன்படுத்தப்படும் விமர்சனப் பண்புகள் மற்றும் சொற்கள் என்பன ஆரோக்கியமற்றதாகவே காணப்படுகின்றன. இவ்வாறன விமர்சனங்கள் எந்தவகையிலும் கடந்த காலத்தில் நடைபெற்ற பிரச்சனைகளை மாற்றவோ எதிர்காலத்தில் ஆரோக்கியமாக செயற்படுவதற்கோ உதவப்போவதில்லை. மாறாக தொடர்ச்சியாக பிளவுகளையும் N;தால்விகளையுமே தரும். மேலும் இவ்வாறான (சுய)விமர்சனங்கள் அவை முன்வைக்கப்படுவதற்கான நோக்கத்தையும் அடைகின்றதா என்பதும் கேள்விக்குறியதே. இவ்வாறான எதிர்மறை பண்பிலிருந்து எவ்வாறு நேர்மறையாக (சுய)விமர்சனங்களை முன்வைப்பது என்பது நம் முன்னுள்ள பெரும் சவாலே. 

 

ஆரோக்கியமான தொடர்ச்சியான செயற்பாட்டிற்கும் எதிர்காலத்தை நோக்கிய பயணத்திற்கும் சுய-விமர்சனம் மற்றும் விமர்சனம் என்பது தொடர்பான ஆழமானதும் விரிவானதுமான பார்வை அவசியமாகின்றது. இதை நாம் பிரக்ஞைபூர்வமாக அறிந்தும் புரிந்தும் உணரவேண்டிய கட்டாயமானதும் நிர்ப்பந்தமானதுமான ஒரு சுழலில் இருக்கின்றோம் என்பதை நாம் உள்வாங்கிக் கொள்வதே நமது முதல் வெற்றியாகும். இந்தப் புரிதலினடிப்படையில் சுய-விமர்சனம் மற்றும் விமர்சனம் என்பவற்றின் முக்கியத்துவம் தொடர்பாக, சமூக விஞ்ஞானம்> உளவியல் மற்றும் பெண்ணியம் என மூன்று அடிப்படைகளில் எவ்வாறு பார்க்கப்படுகின்றன என்பதனை தொடர்; கட்டுரைகளாக எழுத முயற்சிக்கின்றேன். இக் கட்டுரையானது> ஆரோக்கியமான நேர் மறை விளைவுகளைத் தரக் கூடிய வகையில்> மனித உறவுகளின் உருவாக்குவதற்கும் அதைப் பேணுவதற்கும் மற்றும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கும்> எவ்வாறு சுய-விமர்சனம் மற்றும் விமர்சனம் என்கின்ற முக்கியமான செயற்பாட்டை>பயன்படுத்தலாம் என்பதை தேடுகின்றது. இதற்காக (சுய)விமர்சனத்தின் வரலாற்றையும் மற்றும் அதன் பண்புகள் தன்மைகள் தொடர்பான சில கருத்துக்களையும் ஹென்றி (Hendrie Weisinger) என்பவர் எழுதிய (The Critical Edge) என்ற நூலின் அடிப்படையில் சுருக்கமாக முன்வைக்கின்றேன்.  இது மேற்குலகு சார்ந்த ஒரு பார்வையாக இருந்தபோதும்> வரலாற்றில் (சுய) விமர்சனத்தின் (சோக்கிரட்டிஸ்> பிரைட்> டார்வின்> கலிலியோ) பங்களிப்பானது சமூக மாற்றங்களுக்கும் அடித்தளமாகியிருந்திருக்கின்றது என்பதனால் முக்கியத்துவமானதாகும் என்பதை மறுக்க முடியாது.

 

அரசை விமர்சித்தவர் என்பதற்காக தண்டைபெற்ற சோக்கிரட்டிஸின்  வாழ்க்கை (மேற்குலகின்) உலக வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டமே. இவரது சீடர்களான பிளாட்டோவும் அரிஸ்டோட்டலுமே விமர்சனம் தொடர்பான சொல்லாடலை அறிமுகப்படுத்தி அதற்hகன வரையறைகளை முன்வைத்த முதன்மையானவர்கள்;. இக் காலங்களில் விமர்சனம் என்பது புத்திஜீவிகளின் ஒரு செயற்பாடாகவே பார்க்கப்பட்டது. ஆனால் இதன் பின் மேற்குலகில் ஏற்பட்ட கிருஸ்தவத்தின் எழுச்சியானது அனைத்தும் இறைவனிடமிருந்தே வாய் வழியாக கிடைக்கப்பெருகின்றன என்ற நம்பிக்கையானது விமர்சனப்பார்வையை மழுங்கடித்தது. இது உலகின் இருண்ட காலத்திற்கு வித்துட்டதுடன்> விமர்சனம் தொடர்பான முயற்சிகளையும் வளர்ச்சிகளையும் தடுத்தது எனலாம்.  நீண்ட காலத்தின் பின் பிரான்ஸிஸ் பேகன் (Francis Bacon)  மற்றும் ஜோன் லொக் (John Locke) என்பவர்களால் பரிசோதனையடிப்படையிலான விமர்சனவியல் முன்வைக்கப்படுகின்றது. இவர்கள் தனிப்பட்ட உணர்வுரீதியான விமர்சனங்களுக்கும் கலை ரீதியான விமர்சனங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கவில்லை. மாறாக இவர்களது விமர்சன முறையானது பெரும்பாலும் புற பொருள் சார்ந்ததாகவே இருந்தது. இதனால் தனிப்பட்ட வெளிப்பாடுகளும் உள்ளுணர்வுசார்ந்த விமர்சனங்களும் அடக்கி ஒடுக்கப்பட்டன எனலாம். இதன் பின் ஜோர்ஜ் பேக்கர்லி (George Berkeley) இமானுவல் கான்ட் (Immanuel Kant) போன்றவர்களால் தனிமனித உணர்வுகளுக்கும் மனதிற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இது படைப்பாளிக்கும் அவரது படைப்புக்கும் இடையிலான உறவு தொடர்பான விமர்சனம் என்பது பிரதான வியடயமாக உருவாகுவதற்கு வழியேற்படுத்தியது. இதன் அடுத்தபடியாக படைப்புக்கும் வாசகருக்குமான உறவே விமர்சன தளத்தில் பிரதான பங்குவகித்தது (Jean-Paul Sartre). இவ்வாறாக விமர்சனம் தொடர்பாக வரலாற்றில் ஏற்பட்ட பல்வேறு தத்துவார்த்த ;பார்வைகள் அது தொடர்பான மூன்று கூறுகளை முக்கியத்துவப்படுத்தின. அவையாவன விமர்சனத்திற்கான வரையறை> விமர்சனம் என்பது தனிப்பட்டது என்ற புரிதல்> மற்றும் அதன் நோக்கத்தை தெளிவுபடுத்தல். ஆரம்பத்தில் கலைக்குள்ளும் தத்துவத்திற்குள் மட்டும் இருந்த (சுய) விமர்சனமானது இன்று சமூகத்தின் பல்வேறு தளங்களில்  முக்கியமான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது.

 

மறுபுறம் இன்று மனிதர்களின் பேச்சுரிமையும் விமர்சன பார்வையையும் ஊக்குவிக்கப்படுகின்றன. இது மனிதர்களுக்கு இடையிலான உரையாடல் என்பது இன்று தவிர்க்கமுடியாதது மட்டுமல்ல மிகவும் முக்கியத்துமான ஒன்றாகவும் மாற்றியிருக்கின்றது. அதேநேரம் விமர்சனமானது உணர்ச்சிகளால் நிரம்பிவழிகின்றது. அதுவும் தன்முபை;புடன் (Ego) மிகவும் பிணைக்கப்ட்டிருக்கின்றது. இதனால் விமர்சனம் என்பது> “எனக்கு எல்லாம் தெரியும், நான் சொல்வதே சரியானது மட்டுமல்ல எனக்கு எப்படி செய்வது என்றும் தெரியும்” என்ற நிலைப்பாட்டிலிருந்து முன்வைக்கப்படுவது ஆரோக்கியமற்றதாகும். ஆனால் நாம் வழமையாக அவ்வாறான ஒரு நிலைப்பாட்டிலிருந்துதான் நமது (சுய) விமர்சனங்களை முன்வைக்கின்றோம். இது விமர்சனம் என்பதையும் அதன் பண்பையும் நோக்கத்தையும் கொலை செய்துவிடுகின்றது. இவ்வாறான விமர்சனங்கள் துரதிhஸ்டமாக மரணத்தை தழுவிவிடுகின்றன. இவ்வாறான ஒரு பண்பு நிலையில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்; வெறும் சொற்களாக இருப்பது மட்டுமல்ல ஏதற்காக (சுய)விமர்சனத்தை முன்வைக்கின்றோமோ> அந்த நோக்கத்திற்கு எதிரான விளைவுகளையே இறுதியில் தருகின்றன.

 

பொதுவாக ஒருவர் விமர்சனம் செய்யும் பொழுது அதிகாரத்துவமாகவும் திமிருடனும் தனது விமர்சனத்தை முன்வைப்பார். இதற்கு மாறாக ஒருவர் சுய-விமர்சனம் செய்யும் பொழுது வெட்கித் தலைகுனிந்து குற்றவுணர்வுடனுமே செய்கின்றார். உதாரணமாக நான் சுய-விமர்சனம் செய்கின்றபொழுது உணர்ச்சிவசப்பட்டு பெரும்பாலும் அழுதுவிடுவதுண்டு. ஆனால் விமர்சனம் செய்யும் பொழுது மிகவும் ஆக்கிரோசமாக கோவமாக முன்வைப்பதுண்டு. இவ்வாறான பண்பில் என்னில் மாறுதலை ஏற்படுத்தவேண்டும் என்ற அக்கறையை கொண்டுள்ளதுடன்; இது தொடர்பான (சுய)விமர்சனமும் என் மீது நானே முன்வைக்கின்ற ஒன்றாகும். ஆனால் மாற்றம் மிகவும் மந்தமாகவே நடைபெறுகின்றது. இருந்தபோதும் மாற்றம் அவசியமானதும் இன்றியமையாததுமாகும் என்பதை அழுத்தமாகவும் உறுதியாகவும் கூறவேண்டியுள்ளது.

 

ஏனனில் இவ்வாறன உணர்ச்சி நிலைகள்> பண்புகள் ஒருவர்; முன்வைக்கும் (சுய)விமர்சனம் தொடர்பாக எதிர் மறை விளைவுகளை உருவாக்கும் சாத்தியம் உள்ளது. மேலும்;; பல சந்தர்ப்பங்களில் முன்வைக்கப்படுகின்ற சுய-விமர்சனங்களோ அல்லது விமர்சனங்களோ ஆரோக்கியமற்றதாக இருப்பதுடன் எதிர் மறை விளைவுகளையே தந்துள்ளது. விரும்பிய விளைவுகளைத் தரவில்லை என்பது துரதிர்ஸ்டமானதே. ஆகவே சுயவிமர்சனம் செய்கின்ற முறைமையில் பண்பில் மாற்றம் தேவைப்படுகின்றது. அதாவது சுய-விமர்சனமும் விமர்சனமும் மேற்கூறப்பட்ட மனிதப் பண்புக்கு மறுதலையாக முன்னெடுக்கப்படுவதே ஆரோக்கியமானதாக இருக்கும் எனக் கூறலாம்.  அதாவது சுய விமர்சனத்தை மிகவும் உறுதியான நிலைப்பாட்டுடனும் கராராகவும் அதேநேரம் சுய மதிப்புடனும் வைக்கவேண்டும். மறுபுறம் விமர்சனத்தை மிகவும் பக்குவமாகவும் அமைதியான பண்புடனும் மற்றவரை மதித்தும் முன்வைக்கவேண்டும். இவ்வாறன ஒரு மனிதப்பண்பு நிலையில் முன்வைக்கப்படும் (சுய)விமர்சனமே ஆரோக்கியமானதாக இருக்கும். மேலும் இவ்வாறான (சுய)விமர்சன செயற்பாட்டை மிகவும் பண்பட்ட நிலையில் ஆரோக்கியமாக முன்வைப்பதற்கு அதற்கான சுமுகமான சுழல் முன் நிபந்தனையாக உருவாக்கவோ அல்லது இருப்பதை உறுதிசெய்ய வேண்டியதும் முக்கியமானதாகும்.

 

மறுபுறம் நாம் நமது கருத்துக்களில் நிலைப்பாடுகளில் உறுதியாக இருப்பது நல்ல விடயமே. ஆனால் இந்த உறுதித்தன்மையே மற்றவரின் கருத்தை அறிவதற்கும் அவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் நாம் முக்கியத்துவம் வழங்காது விடுவதற்கும் காரணமாகின்றது. ஏனனில் மற்றவரின் கருத்தை அறிவதற்கான திறந்த மனம் நம்மிடம் இல்லாது போய்விடுகின்றது. மேலும் ஒருவர் கூறுகின்ற அல்லது நாம் வாசிக்கும் கருத்தொன்றை நாம் நம் மனதினுடாக வடிகட்டி நமக்கு சாதாகமாகவே உள்வாங்கிக்கொள்கின்றோம். இங்கு வடிகட்டல் என்பது நமது மனம் தொடர்பானது. ஆதவாது நாம் பொதுவாகவே பிரக்ஞையற்று இவ்வாறான விமர்;சன செயற்பாடுகளை முன்னெடுப்பதால் நம் மனதில் ஏற்றகனவே உருவாக்கப்பட்ட கலாசார> மத> மற்றும் கல்வி அரசியல் போன்ற மேலாதிக்க கருத்தின் கட்டமைவுகள் வடிகட்டிகளாக தொழிற்பட்டு ஒரு கூற்றின் உண்மையான அர்த்தத்தை நாம் பெறுவதற்கு தடையாக இருக்கின்றன. அதவாது பல சமூக கட்டுப்பாடுகளும் ஒருவர் ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைப்பதற்கு தடைகள் உள்ளன.

 

இன்றும் நாம் மாபெரும் சிந்தனையாளர்கள் எனப் போற்றும் சோக்கிர்ட்டிஸ் மற்றும் கலிலியேர் போன்றவர்களும் அன்றைய ஆட்சி மற்றும் மத அதிகாரத்துவத்தினால் அவர்களது விமர்சனங்கள் அல்லது மாற்றுக் கருத்துக்கள் கட்டுப்படுத்தப்பட்டது என்பது நாம் அறிந்ததே. இது மட்டுமல்லாது அவ்வாறான கருத்துக்களை முன்வைத்தமைக்காக தண்டனைக்கும் உள்ளாகியுள்ளனர் என்கின்றன வரலாற்று ஆய்வுகள். இவை எல்லாம் நாம் அறிந்த கடந்தகால உதாரணங்களேயானபோதும் இன்றைய நடைமுறை வாழ்விலும்; இவ்வாறான உதாரணங்களைக் காணலாம். ஏனனில் கலாசரம்> கல்வி> மற்றும் மத நிறுவனங்களின் ஆதிக்கம்> அதிகாரத்துவம் என்பனவும் ஆரோக்கியமான நேர்மையான விமர்சனங்களை முன்வைப்பதற்கு தடையாக இருக்கின்றன என்றால் மிகையல்ல. குறிப்பாக தமிழ் சுழலில் முதல் தடையாக இருப்பது நமது கல்வி முறைமைகளும் மற்றும் கலாச்சார பண்புகளும் காரணமாக இருக்கின்றன. உதாரணமாக நமது கல்விமுறையானது ஆசிரியர் சொல்வதை பற்றி எந்தவிதமான கேள்விகளும் கேட்காது அவர் கூறுவதை சரி என ஏற்று பின்பற்றும் பழக்கத்தையே நடைமுறையாகக் கொண்டுள்ளது. இரண்டாவது ஆசிரியர்களை> பெரியவர்களை அதிகாரத்திலுள்ளவர்களை எதிர்த்து கேள்வி கேட்பதற்கு மாறாக மரியாதை செலுத்தும் கலாசார பண்பு நம்மிடம் ஆழமாக உறைந்துபோய்யுள்ளது. இவையெல்லாம் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதற்கு தடையாக இருக்கின்றன எனலாம். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் நாம் விமர்சனம் முன்வைப்பது என்பதை கனவில் கூட கற்பனை செய்து பார்க்கமுடியாது. ஆகவே நாம் ஒவ்வொருவரும் நமக்குள் பல் மாற்றங்களை செய்யவேண்டியவர்காள உள்ளோம்.

 

ஒரு கருத்தை நாம் திறந்த மனதுடன் எந்தவிதமான மதிப்பிடலும் இன்றி முதலில் அறிந்து கொள்வதற்கு பிரக்ஞையின் வளர்ச்சி அவசியமானது. மேலும்; சமூக நிறுவனங்கள் ஏற்கனவே நம் மீது செலுத்துகின்ற கருத்தாதிக்கங்கள் தொடர்பான பிரக்ஞைபூர்வமான புரிதலும் இருப்பது முக்கியமாகின்றது. இவ்வாறன பிரக்ஞையும் புரிதலும் இருக்கும் பொழுது மட்டுமே> ஒருவர் (சுய) விமர்சனங்களை முன்வைக்கும் பொழுது> அவர் என்ன சொல்கின்றார்?> என்ன நோக்கித்திற்காக கூறுகின்றார்?> எவ்வாறான பண்பு நிலையில் தன் (சுய)விமர்சனத்தை முன்வைக்கின்றார்?> தனது கருத்தைக் கேட்பவரை நோக்கிய விமர்சனம் முன்வைப்பவரது பண்பு? கூறுகின்றவர்> மற்றும் கேட்கின்றவர்களின் பிரக்ஞை அல்லது பிரக்ஞையற்ற நிலை  எனப் பல விடயங்களை நாம் புரிந்துகொள்ள முடியும். ஏனனில் இவ்வாறன பல கூறுகள் ஒரு (சுய)விமர்சனத்தின் தாற்பரியத்தை தீர்மானிக்கின்றன.

 

ஒரு செயற்பாட்டின் போதான நடைமுறை விமர்சனம் என்பது தவறை மட்டும் கண்டுபிடிப்பதை நோக்கமாக் கொண்டதல்ல. மாறாக ஆரோக்கியமானதாகவும் மேன் நோக்கி செல்வதையும் நோக்கமாக கொண்டதாகும். ஆனால் இவ்வாறான ஒரு மாற்றத்திற்கு நமது சொல்லாடல்களில் புதிய சொற்களையும் அணுகுமுறைகளையும் பண்புகளையும் உருவாக்கவேண்டியவர்களாக உள்ளோம். அப்பொழுதுதான் நமது விமர்சனத்தின் நோக்கம் ஒருவர் மீதான அல்லது ஒரு செயற்பாட்டின் மீதான  அக்கறையும்; அதற்கான ஆதரவு நிலையின் பாற்பட்டது என்பதையும் மேலும் மேம்பட்டதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது என்பதையும் புரியவைக்க முடியும். இதனடிப்படையில் நம்பிக்கையை ஏற்படுத்தி மற்றவருக்கு உதவவும் முடியும்.

 

உண்மையான நேர்மையான விமர்சனம் என்பது ஒரு வகையில் சுயவிமர்சனமாகவே இருக்கவேண்டும். ஏனனில் ஒருவரை அல்லது ஒன்றை விமர்சிப்பதன் மூலம் அதை கேட்பவர் மட்டுமல்ல முன்வைப்பவரும் வளர்வதற்கான ஒரு செயற்பாடே விமர்சனம் என்ற புரிதல் இருக்கவேண்டும். மேலும் விமர்சனத்தை கேட்பவர் மீளவும் பதிலளிப்பதற்கான வெளியையும் முன்வைக்கப்படும் விமர்சனம் வழங்கவேண்டும். ஆகவே விமர்சன ஒழுங்குமுறை ஒன்றைப் பின்பற்றுவது அவசியமானது எனக் கருதப்படுகின்றது. இந்த விமர்சன ஒழுங்குமுறையானது இறுக்கமான முடிவான ஒரு வரையறையல்ல. மாறாக தொடர்ச்சியமான மாற்றத்தை வேண்டி நிற்பமாகும்.

 

இதேவேளை பொருப்பான (சுய) விமர்சனம் ஒன்றை செய்வது இலகுவான காரியமல்ல. மிகவும் கஸ்டமானதும் சிக்கலானதுமான ஒரு விடயமே. பொதுவாக ஆரோக்கியமான விமர்சனம் என்பது மற்றவரை நோகடிக்காது காயப்படுத்தாது நமது கருத்தை முன்வைப்பதும் அவரை ஏற்கச் செய்வதும் நமது நோக்கத்தில் இணைந்து செயலாற்றி வெற்றிபெருவதுமாகும். ஆகவே விமர்சனத்தின் நோக்கமானது நமது இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்டபோதும் விரைவாக அடைவதை நோக்கமாகக் கொண்டதல்ல. ஏனனில் ஒரு இலக்கை அடைவது என்பது நடைமுறை செயற்பாடுகளும் பிரச்சனைகளும் சார்ந்தது. ஆகவே விமர்சனம் ஒன்றை முன்வைப்பதற்கு முதல் பொறுமையும் காத்திருத்தலும் எந்த நேரத்தில் சூழலில் முன்வைப்பது என்பதையும் எவ்வாறு சமரசம் செய்வது என்பதையும் அறிந்திருக்கவேண்டியவர்களாக உள்ளோம். இதன் மூலமே ஒரு விடயத்துடன் நம்மை இணைத்துக் கொள்வதோ அல்லது விலத்திக் கொள்வதோ ஆரோக்கியமாக நடைபெறும். ஆனால் நாம் விமர்சனத்தின் இவ்வாறன கஸ்டங்களையும் சிக்கல்களையும் புரிந்துகொள்ளாதவர்களாக அவசரப் புத்திக்காரர்களாகவே இருக்கின்றோம். இதனால் மேலும் பிரச்சனைகளையும் முரண்பாடுகளையும் வளர்த்து அதிகரிக்கின்றோம்.

 

ஆகவே> ஒரு ஆரோக்கியமான விமர்சனத்தை முன்வைப்பதற்கு நாம் ஒரு வரை ஒருவர் பரஸ்பரம் மதிப்பவர்களாக இருக்கவேண்டியது அவசியமாகின்றது. மேலும் ஒரு விமர்சனத்தை வைப்பதற்கு முதல் அதை எவ்வாறு ஆரோக்கியமாக வைப்பது என்பது தொடர்பாக நாம் ஆழமாக சிந்திக்கவேண்டியும் உள்ளது. ஏனனில் பல சந்தர்ப்பங்களில் நாம் முன்வைக்கும் விமர்சனங்கள் பலரின் வாழ்க்கையே கேள்விக்குள்ளாக்குவதாகும். ஆகவே விமர்சனத்தை மிகச் சாதாரணமான ;ஒரு விடயமாக எடுக்கக் கூடாது. இது மிகவும் முக்கியமான ஒரு விடயமாக அக்கறையுடன் முழுமையான ஈடுபாட்டுடன் அணுகப்படவேண்டி ஒன்றாகும்.

 

ஏனனில் விமர்சனம் என்பது தனிப்பட்ட ஒருவரின் கருத்தாக இருப்பினும் விமர்சனம் என்பது ஒரு கலை. இவ்வாறான ஆரோக்கியமான காலாபூர்வமாக முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் நம்மையும் பிறரையும் அமைப்புகளையும் மட்டுமல்ல சமூகத்தையே மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவை. ஆனால் அதை எப்படி பயன்படுத்துகின்றோம் என்பது நமது கைகளிலையே தங்கியுள்ளது. பொறுமையாகவும் பொறுப்புடனும் ஆழமான புர்pதலுடனும் சக மனிதர்களையும் அவர்களது கருத்துக்களையும் மதித்தும் நமது விமர்சனங்களை முன்வைப்போமா?

 

 (சுய)விமர்சனங்கள் பல்வேறு வழிகளில் முன்வைக்கப்படலாம் என ஹென்றி (Weisinger) எனபவர் தனது நூலில் (The Critical Edge) குறி;ப்பிடுகின்றார். உதராணமாக (சுய)விமர்சனங்கள் எனப்படுபவை தனி நபர்கள் நேரடியாக சந்திப்பதன் மூலமாக> எழுத்தின் மூலமாக> கடிதம் மூலமாக> இரண்டாவது நபரினுடாக> ஒரு குழுவின் முன்னிலையிலோ> எனப் பல வகைகளில் முன்வைக்கப்படலாம். மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு முறைமைகளுக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கின்றது. அதேவேளை எந்த (சுய) விமர்சன முறைமையைப் பயன்படுத்துவது என்பது ஒருவரது சூழலையும்> யாரை அல்லது எதை நோக்கமாகக் கொண்டு வைக்கப்படுகின்றது என்பதைப் பொருத்தும் தீர்மானிக்கப்படுகின்றது. இருப்பினும் இந்த முறைமைகள் ஒவ்வொன்றிக்கும் அதனது எல்லைகளும்> நன்மைகளும்> தீமைகளும் இருக்கின்றன. ஆகவே எவ்வாறான ஒரு விமர்சன முறையை தேர்வு செய்வது என்பது கூட நம் முன் உள்ள ஒரு சவாலே. ஏனனில் (சுய)விமர்சனத்தின் அடிப்படை நோக்கமே ஒரு மனிதர் தன்னை> அல்லது தனக்கும் பிற மனிதருக்குமான உறவை அல்லது குறிப்பிட்ட ஒரு செயற்பாட்டை அல்லது இருக்கின்ற சுழலை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிக்கும் ஒரு வழிமுறையே என்றால் மிகையல்ல.

 

ஒரு செயற்பாடு வெற்றி பெறுவதற்கும் தோல்வியடைவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் சுய-விமர்சனம் மற்றும் விமர்சனம் என்பவற்றின் பங்களிப்பானது வெற்றிக்கும் தோல்விக்கும் மிக முக்கியமான காரணங்கள் என்றால் மிகையல்ல. வெற்றி பெறுவதற்கு முன்பும் அல்லது அதற்கான பாதையில் பயணிக்கும் பொழுதும் இந்த இரு செயற்பாடுகளும் முக்கியமான பங்காற்றுகின்றன. ஆதாவது வெற்றி பெற்ற பலர் நிச்சயமாக நமது செய்பாட்டின் வழியில் தம்மையும் தமது செயற்பாடுகளையும் (சுய)விமர்சனத்;திற்கு உட்படுத்தியும் மற்றும் பிறரது விமர்சனங்;களை வரவேற்றும் உள்வாங்கியும் அவற்றிக்கு ஏற்ப மாற்றங்களை உருவாக்கி முன்னோக்கி நகர்த்தியிருப்பர். இவ்வாறன (சுய)விமர்சன பண்புகள் இல்லாது வெற்றிபெற்றவர்களுக்கு சில சாதகமான அம்சங்கள் அவர்களது பயணத்தின் போக்கில் நடைபெற்றிருக்கலாம் என்பதனால் இவற்றின் முக்கியத்துவத்தை புறந்தள்ள வேண்டியதில்லை. ஆனால் பெரும்பாலும் தமது நோக்கங்களில் செய்ற்பாடுகளில் தோற்றவர்கள் தம்மையும் தமது செயற்பாடுகளையும் சுய-விமர்சனத்திற்கு உட்படுத்தாமலும் மற்றும் பிறரது விமர்சனங்கைள உள்வாங்காமால் இருந்தது மட்டுமல்ல புறம் தள்ளியமையும் முக்கியமான காரணங்கள் எனலாம். இது மட்டுமின்றி விமர்சனங்கள் வருவதைக்கூட தடைசெய்தமையும் தோல்விக்கான முக்கியமான காரணங்கள் என்றால் மிகையானதல்ல. ஒரு நோக்கமும் அதற்கான செயற்பாடு தோற்றபின்பு கூட (சுய) விமர்சனம் என்பவற்றுக்கு முக்கியத்தவம் வழங்காமல் இருப்பது குறிப்பிட்ட நபர்கள் தலைமைகள் மற்றும் அமைப்பினதும் அதில் பங்காற்றுகின்ற மனிதர்களினதும் பொறுப்பற்றதனமேயாகும்.

 

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் இன்றைய நிலைமைக்கு வருவதற்கான காரணம் சுய-விமர்சனம் மற்றும் விமர்சனம் என்பவற்றின்; முக்கிய பங்களிப்பை ஒவ்வொருவரும் புறக்கணித்தமை குறிப்பிடத்தக்க முக்கியமான ஒரு கூறு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டிய சுழலில் இருக்கின்றறோம். ஆனால் இவ்வளவு அழிவுகளுக்கும் தோல்விகளுக்கும் பின்பும் நாம் இதைப் புரிந்துகொண்டோமா என்றால் சந்தேகமே.

 

மே 18இ 2009ம் ஆண்டின் பின் குறிப்பாக தமிழிழ விடுதலைக் கழகத்தின் பின்னனியிலிருந்து விரிவான வரலாற்று அனுபவ கட்டுரைகள் முக்கியமான நான்கு வெளிவந்திருக்கின்றன அல்லது வருகின்றன. முதலாவது இனியொரு சஞ்சிகையில் வெளிவந்த ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்  ஜயரின் ஆரம்பகால போரட்ட வரலாற்றுப்பதிவு. இரண்டாவதும் தேசம்நெட்டில் வெளிவந்த அடுத்த காலட்டத்தைக் கொண்ட ஜென்னி எழுதிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எனது சாட்சியம் –  ஜெ ஜென்னி வரலாற்றுப் பதிவு. இதே காலகட்ட பதிவை புதிய ஜனநாயக மக்கள் முன்னணில் எழுதும் நேசனின் புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் அனுபவம். நான்காவது மேற்குறிப்பிட்டவர்கள் அனைவரிலுமிருந்து வேறுபட்டது. ஏனனில் மேற்குறிப்பிட்ட மூவரும் தலைமைப் பதவியிலிருந்தவர்கள். ஆனால் சாதாரண உறுப்பினராக தனது “புளாட்டில் நான்” அனுபவத்தை மறுஆய்வு பதிவு செய்கின்றார். இவை ஒவ்வொன்றும் பெரும்பாலும் விமர்சன அடிப்படையும் ஒரளவு சுய விமர்சனத்தைக் கொண்டனவாகவும் இருக்கின்றன. (பி.கு: இந்தப் பதிவுகளில் இப்பொழுதும் இலங்கையில ;வாழ்பவர்கள் பெயர்கள் பகிரங்கமாக பகிரப்படுகின்றது. இந்தப் பெயர்கள் குறிப்பிட்டவர்களின் அனுமதி பெற்றா நடைபெறுகின்றது என்பது முக்கியமான கவனத்திற்கு உரிய விடயமாகும். ஏனனில் இதுஅவர்களுடைய வாழ்வுடன் தொடர்பு பட்டதாகும். ஆகவே இவ்வாறு எழுதுகின்றவர்கள் இதைக் கவனிப்பார்களா?) இருப்பினும் இவை ஒவ்வொன்றும் அதனது சமூக அரசியல் தளங்களில் இருந்து தத்துவம்> கோட்பாட்டு> மற்றும் செயற்பாடு என்பவற்றின் அடிப்படையில் மிகவும் ஆழமான> விரிவான விமர்சனங்களை வேண்டி நிற்பனவாகும். இவ்வாறு முன்வைக்கப்படுகின்ற விரிவான ஒரு விமர்சன பார்வையே இந்த வரலாற்று கட்டுரைகளிலிருந்து நாம் படிப்பினைகளை பெருவதற்கு பேருதவிபுரியும்.

 

இவ்வாறான ஒரு சுழலில் ரகுமான் ஜான் அவர்கள் முக்கியமானவராக இருக்கின்றார். ஏனனில் தமிழீழ விடுதலைப் போராட்டதின் ஆரம்ப காலங்களில் தலமைப் பொறுப்பில் செயற்பட்டவர்களில் இன்றுவரை உயிர் வாழ்கின்ற மிகச் சிலரில் ஒருவர் இவர். இவர் முன்னால் கழகத்தின் தலைமைப் பொறுப்பிலும் பின் தீப்பொறி மற்றும் உயிருப்பிலும் அதன் பின் தமிழீழ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளராகவும் செயற்பட்டு இருக்கின்றார். இன்று மே-18 இயக்கத்தின் செயற்பாட்டாளாரகவும்  வியூகம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் தொடர்ந்தும் நம்பிக்கையுடன் செயற்படுகின்றார். இதனால்தான் ரகுமான் ஜான் மீதான முதலாவது விமர்சனமே தனது கடந்த காலம் தொடர்பாக அவர் இன்னும் (சுய)விமர்சனம் செய்யவில்லை என்பது தான். ஏனனில் இவர் கழகத்திலும் தீப்பொறியிலும் தலமைப் பொறுப்பில் இருந்த காலங்களில் செயற்பட்ட விதம் தொடர்பாக பல விமர்சனங்கள் பல முனைகளில் இருந்து வைக்கப்படுகின்றது. சிலர் பொதுத் தளங்களிலும் சிலர் தனிப்படவும் இன்னும் சிலர் முதுகுக்குப்பின்னாலும் தமது விமர்சனங்களை முன்வைக்கின்றனர். பல விமர்சனங்கள் அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு தனிப்பட்ட தாக்குதல்களாகவே முன்வைக்கப்டுகின்றன. அவ்வாறான விமர்சனங்கள் ஆரோக்கியமான விமர்சனங்காக இல்லை என்றபோதும் கூட> இவ்வாறான விமர்சனங்களுக்கு பதில் அளிப்பதற்கு  அப்பால்> ஜான் அவர்கள் தனது கடந்தகாலம் தொடர்பாக (சுய)விமர்சனம் செய்யவேண்டிய ஒரு சூழலிலையே உள்ளார். இவ்வாறு நான் கூறுவது> அவருடன் சில காலம் அரசியல் வேலை செய்தவர் என்றடிப்படையில் மட்டுமே;. மேலும் இன்று அவர் முன்வைக்கும் கருத்துகள் தொடர்பாக எனக்குள்ள விமர்சனங்களை முன்வைக்கின்றேன். இதை நான் முன்வைத்தால் சிலர் எனக்கும் அவருக்கும் எதோ தனிப்பட்ட பிரச்சனையாக குறுக்கி இதன் முக்கியத்தைவத்தை குறைத்துவிடுகின்றனர். எனக்கு அவருடன் தனிப்பட்ட தகராறு என்று ஒன்றும் இல்லை. அதேநேரம் ரகுமான்ஜான் இதற்குப் பதிலளிக்கும் பொழுத சுய விமர்சனம் என்பது பொது இடத்தில் வைப்பதல்ல. அது கட்சிக்குள் கட்சி அங்கத்தவர்கள் முன்னிலையில் வைப்பதாகும் என்கின்றார். அப்படி எனின் இவர் மற்றவர்கள் தொடர்பாக முன்வைக்கின்ற சொந்த மற்றும் புனைப் பெயர்களில் முன்வைக்கின்ற விமர்சனங்கள் எந்தவகையில் நியாயமானதாகும். இந்த விமர்சனங்கள் கட்சிக்குள் வைக்கப்படவேண்டியவை இல்லையா? இன்று விவாதங்கள் பொதுத்தளத்திலையே நடைபெறுகின்றன. ஆகவே சுய விமர்சனங்கள் பொதுத்தளத்திலையே வைக்கப்படுவது சரியானதும் நியாயமானதுமாகும். ஆவர் முன்வைக்கப்போகின்ற நேர்மையான (சுய)விமர்சனமே அவர் முன்னெடுத்துச் செல்கின்ற செயற்பாட்டுக்கு மட்டுமல்ல எதிர்காலத்தில் செயற்படப்போகின்ற அடுத்த தலைமுறையினருக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கும். ரகுமான்ஜான் எவ்வாறு இருக்கப்போகின்றார் என்பது அவரது தெரிவாகும்.

 

இதேபோல் விடுதலைப் புலிகளின் ஆரம்ப காலத்திலிருந்து செயற்பட்ட நாமறிய தப்பித்திருக்கும் ஒருவர் கே.பி மட்டுமே. இவர் இன்றிருக்கும் சூழ்நிலையில் நேர்மையான (சுய)விமர்சனத்தை வைக்கமுடியுமா என்பது ஒரு கேள்விக்குறியே. ஆனால் இவரது வரலாற்று அனுபவ பகிர்வு என்பது விடுதலைப் புலிகளின் வரலாற்றைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இதேவேளை கே.பியுடன் இணைந்து உருத்திரகுமாரனும் மற்றும் நெடியவனும் விடுதலைப் புலிகளின் இறுதிப் போராட்டகாலங்களில் முக்கியமான பங்கையாற்றி உள்ளார்கள் என அனைத்து பத்திரிகைகளும் செய்திகள் வெளிவிடுகின்றன. ஆகவே இவர்கள் தமது செயற்பாட்டை தொடர்வது ஒரு புறம் நடக்கின்றபோதும்>  இறுதியாக என்ன நடந்தது என்பது தொடர்பான (சுய)விமர்சனத்தை மக்கள் முன் தவிர்க்க முடியாது வைக்கவேண்டியவர்களாக உள்ளார்கள். ஆனால் இதை அவர்கள் செய்வார்களா என்பது கேள்விக்குரியானதே.

 

(சுய) விமர்சனம் தொடர்பான புதிய வரலாற்றை நமது சமூகத்தில் உருவாக்குவோமாக!

 

அடுத்து (சுய)விமர்சனம் தொடர்பான உளவியல் பார்வையை முன்வைக்க முயற்சிக்கின்றேன்.

 

மீராபாரதி

06.06.2011

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: