Posted by: மீராபாரதி | April 21, 2011

கனேடிய தேர்தல்: தமிழ் பேசும் மனிதர்களின் வாக்குகள் யாருக்கு?

 கனேடிய தேர்தல்: தமிழ் பேசும் மனிதர்களின் வாக்குகள் யாருக்கு?

தேர்தல் வந்தாலே பல பகிடிகளை ஆச்சரியங்களை; காணலாம் இரசிக்கலாம். அது மட்டுமல்ல சில உண்மைகளையும் அறியலாம். ஆனால் இந்தப் பகிடிகளுக்கும் அதை இரசிப்பதற்கும் அப்பால் பலரின் குறிப்பாக அதிகாரமற்ற பொருளாதார பலமற்ற பரந்துபட்ட மனிதர்களினதும் இவர்களில் தக்கியிருக்கும்; வாக்களிப்பதற்கான வயதை அடையாத ;குழந்தைகளினதும் வாழ்க்கையைத் தீர்மானிப்பதே இந்தத் தேர்தல்கள். ஆகவே இவர்களைப் பொருத்தவரை இந்தத் தேர்தல் முக்கியமானது. இவ்வாறான பாராளுமன்ற தேர்தல்கள்pல் வாக்களிப்பதன் மூலம் இந்த மக்களின் வாழ்க்கையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. ஆனால் முதலாளித்துவ (வரையறுக்கப்பட்ட) ஜனநாயகத்திற்குள்  நமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட உரிமையை ஜனநாயகத்தின்; மீது நம்பிக்கை வைத்து அதன் அதியுச்ச எல்லைவரை பயன்படுத்துவNது நாம் செய்யக் கூடியது. மறுபுறம்; இருக்கின்ற கட்சிகளுக்கு இடையிலும் பாரிய வித்தியாசங்கள் இல்லாத விடத்து இந்தத் தேர்தல்கள் ஏதோ ஒரு கட்சியை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கும் அவர்களுக்கு ஆட்சி செய்யும் அதிகாரத்தை வழங்குவதற்குமான ஒரு வழிமுறை மட்டுமே. அதிலும் கனடா மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இரண்டில் ஒரு கட்சியை ஆட்சியில் அமர்த்துவதற்கான தேர்;தல்களே இவை. இந்தடிப்படையில் இத் தேர்தலில் குடிவரவாளர்களாகிய நமது குறிப்பாக தமிழர்களது பொறுப்பு மற்று பங்களிப்பு என்ன என்பதை நாம் புரிந்துகொள்வது முக்கியமானது.

இக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது தேர்தல் தொடர்பாக சில தமிழ்க் கட்டுரைகளை வாசிக்க கிடைத்தது. முதலாவது கட்டுரை டிசே எழுதியது. இவர் தனக்கே உரிய தனித்துவமான வெளிப்பாட்டுடன் அழகாக எழுதியது. இது பழமைவாதக் கட்சிக்கு குடிவரவளார்கள் ( குறிப்பாக தமிழர்கள்) ஏன் வாக்களிக்கக் கூடாது என்பதை பல ஆதாரங்களுடனும் உதாரணங்களுடனும் ஆணித்தரமாக முன்வைத்துள்ளது. இத்துடன் அருண்மொழிவர்மன் பழமைவாத வலதுசாரிக் கட்சியின் தேர்தல் விளம்பரத்தை முன்வைத்து அதன் தமிழர் விரோதப் போக்கை வெளியிட்டிருந்தார். இதைவிட நற்கிரன் என்பவரும் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். இவர் பழமைவாத வலதுசாரிக் கட்சிக்கு வாக்களிக்காது புதிய ஜனநாயக கட்சிக்கு வாக்களிப்பதே தமிழர்களின் அரசியல் நலன்களுக்கு சாதகமானது என்றடிப்படையில் தனது கருத்தை முன்வைத்துள்ளார். இவர்களது இந்தப் பணியால் நான் அதிகம் எழுதவேண்டிய தேவையை குறைத்துள்ளார்கள். நன்றிகள் நண்பர்களே. இக் கட்டுரைக்கான இணைப்புகள் இக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

எனது தனிப்பட்ட பார்வையில் தேர்தலில் வாக்களிப்பது என்பது அனைத்துக் கட்சிகளையும் புறக்கணிப்பதற்கான வாக்கை அளிப்பதே விருப்பமான தேர்வு. ஆனால் கனடிய சட்டத்தின்படி வாக்குச் சீட்டை முறைகேடாகப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது எனக் கூறப்படுகின்றது. ஆனால்; இந்தியாவிலுள்ள சட்டத்தின்படி எந்த ஒரு வேட்பாளரையும் கட்சியையும் தெரிவு செய்ய விருப்பமில்லையாயின் அதைத் தெரிவிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால்தான் உலகிலையே முதன்மையான ஜனநாயக நாடு என இந்தியாவைக் கூறுகின்றார்களா? ஆனால் கனடிய வாக்குச் சீட்டில் அந்த தெரிவு இல்லை. அந்தவகையிலும் இந்த ஜனநாயகம் என்பது முழுமையானதல்ல. மேலும் ஒடுங்கிய வரையறைக்கு உட்பட்ட ஜனநாயகமே இது. ஆகவே நாம் இருப்பதற்குள் நல்லதை தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திலையே உள்ளோம்.

இருப்பதில் நல்ல கட்சி எது? கனடிய பொருளாதரத்தில் அக்கறை கொண்ட கட்சி எது? கனேடிய முதலாளிகளுக்கு அல்லாது உழைப்பவர்களுக்கு ஆதரவாக செயற்படக் கூடிய கட்சி எது? குறிப்பாக தமிழ் பேசும் மனிதர்களைப் பொறுத்தவரை, குடிவரவாளர்களின் நலனில் அக்கறை கொண்ட கட்சி எது? சுர்வதே அரசியலில் முற்போக்கான அல்லது ஆகக் குறைந்தது நியாயமான பாத்திரத்தை ஆற்றக் கூடிய கட்சி எது? இலங்கை அரசாங்கம் தொடர்பான நியாயமான நிலைப்பாட்டையும் மற்றும் தமிழ் பேசும் மனிதர்களின் உரிமைகள் தொடர்பான உண்மையான அக்கறை கொண்ட கட்சியும் எது? ஏன பலவாறு சிந்தித்தே கனேடிய குடிவரவாளர்கள் குறிப்பாகத் தமிழ் பேசும் மனிர்தர்கள் இந்தத் தேர்தல்களில் வாக்களிப்பது பயனுள்ளதாக இருக்கும். இதுவே கனடாவில் வாழ்கின்ற தமிழ் பேசும் மனிதர்களுக்கும் புதிதாக வந்த, வருகின்ற அல்லது வரவிருக்கின்ற குடிவரளவாளர்களுக்கும் மற்றும் நம்மில் தங்கியிருக்கின்ற குழந்தைகளின் வாழ்விற்கும் அவர்களது எதிர்காலத்திற்கும் நன்மையானதாகும். இது மட்டுமல்ல, இலங்கையில் தொடர்ந்தும் எந்த அரசியல் உரிமைகளும் பொருளாதார வாய்ப்புகளும் வாழ்க்கை வசதிகளும் இல்லாது வாழ்கின்ற மனிதர்களுக்கு ஏதோ ஒரு வகையில் ஆதரவுக் கரம் நீட்டுவதற்கும் வழிவகுக்கும். ஆகவே இப்பொழுது கனடாவில் இருக்கின்ற கட்சிகளுக்குள் நல்ல கட்சி எது எனவும் குடிவரளார்களுக்கும் தமிழ் பேசும் மனிதர்களுக்கும் நன்மையளிக்கக் கூடிய கட்சி எது எனவும் பார்ப்போம்.

கனடாவில் நான்கு பிரதான தேசிய அரசியல் கட்சிகளே உள்ளன. அவையாவன பழமைவாதக் கட்சி (கொன்சேவேர்ட்டி), லிப்பிரல் கட்சி, புதிய ஜனநாயக கட்சி (என்.டி.பி), பச்சைக் கட்சி (கீரின்). இதைத் தவிற கியூபெக்குவா என்ற மாநில அல்லது மாகண கட்சிகளும் மேலும் சிறிய கட்சிகளும் உள்ளன. பொதுவாக ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு அரசியல் நிலைப்பாடு உண்டு. இந்த நிலைப்பாடு என்பது உயிரணு சார்ந்ததா அல்லது வெறும் நம்பிக்கை அடிப்படையிலானதா, அல்லது பழக்கதோஸமா என்பதில் கருத்துமுரண்பாடுகள் உண்டு. இதை அறிவதற்காக ஆய்வுகளும் நடைபெறுகின்றன. இப்படி எதோ ஒரு காரணத்திற்காக தமது வாக்குகளை தொடர்ந்து ஒரு கட்சிக்கு எந்தக் கேள்விகளையும் கேட்காது அளித்துவருபர்கள் உண்டு. இவர்களை மாற்றுவது என்பது சிறிது கடினமான விடயம். புpரக்ஞை மற்றும் பகுத்தறிவுடன் விடயங்களை ஆராய்ந்து வாக்களிப்பவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையானவர்களே. இதைத்தவிர இடைநடுவில் ஊசலாடும் பல வாக்களர்கள் உள்ளனர். இவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என தீர்மானிப்பது, ஒவ்வொரு அரசியல் கட்சிகளினது நிலைப்பாடுகளையும் கடந்த கால அரசியற் செயற்பாடுகளையும் அடிப்படையாக் கொண்டது. இவர்களது வாக்குகளே பெரும்பாலும் தேர்தல்; முடிவுகளை தீர்மானிப்பதில் முக்கியமான பங்கையாற்றுகின்றன. இப்பொழுது உள்ள சிக்கல் என்னவெனின் தமிழ் பேசும் மனிதர்கள் கட்சி அடிப்படையல் வாக்களிப்பதா அல்லது வேட்பாளர்களின் அடிப்படையில் வாக்களிப்பதா என்பதே பெரும் கேள்வி?

ஒருபுறம் தனிமனிதர்கள் பதவிக்கு வருவதால் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என்பதற்கு ஓபாமா நல்ல உதாரணம். இப்பொழுதும் போரை அதுவும் புதிய போரை பல காரணங்களை முன்வைத்து முன்னெடுக்கின்றார். இது சமூக நிறுவனங்களும் அவற்றின் கருத்து மேலாதிக்கமும் அரசியலில் எந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை நிறுபிக்கின்றன. மறுபுறம் தனிமனிதர்கள் தாம் நம்புவதை தமது உறுதியான செயற்பாடுகளின் மூலம் செயற்படுத்தியுள்ளனர் என்பதற்கு கனடாவில் பிரதம பதவி வகித்த இரு முக்கிய தலைவர்களான லெஸ்ரர் பியர்சனும் பியட் ருடோவும் உதாரணமாக உள்ளார்கள். மேலும் இவர்கள் அதி முக்கியமான சட்டங்களையும் முடிவுகளையும் பெரும்பான்மை ஆதரவு கொண்ட பாராளுமன்றத்தின் மூலம் செயற்படுத்தவில்லை. மாறாக சிறுபான்மை அரசினுடாகவே செயற்படுத்தினர். ஆகவே தனிமனிதர்கள் முக்கியமான பதவிகள் அதிகாரங்கள் மேலாக தமது குறிப்பான ஆளுமையை கட்சியினுள் நிலைநாட்டாதவிடத்து இக் கட்சிகளினுள் அதிக ஆதிக்கம் செய்யமுடியாது. இரண்டாவது கனேடிய கட்சிகள் அனைத்தும் வெள்ளையின ஆண் தலைவர்களையே பிரதானமாக கொண்ட கட்சிகள். மேலும் சில பெண் தலைவர்கள் இருப்பினும் ஆணாதிக்க கருத்துக்கள் ஆழமாக வேருண்றி ஆதிக்கம் செலுத்தும் கட்சிகளே இவை. இக் கட்சிகளில் பெண்களின் நிலை எவ்வாறோ அவ்வாறே பல்வேற நிற குடிவரவாளர்களின் நிலை மட்டுமல்ல இந்த மண்ணின் சொந்தக்காரர்களான முதல் பிரஜைகளின் நிலையும் அதுவே. ஆகவே இக் கட்சிகளினுள் தனிமனிதர்கள் குறிப்பாக பல்வேறு நிற குடிவரவாளர்கள் ஆதிக்கம் செலுத்துவது என்பது சிறிது கடினமானதே. ஆகவே தமிழ் பேசும் மனிதர்களைப் பொருத்தவரை கட்சிகளின் அரசியல் நிலைப்பாடுகளை தெரிந்தும் புரிந்தும் கொண்டு வாக்களிப்பதே உள் நாட்டு அரசியலிலும் மற்றும் சர்வதே அரசியலிலும் பயனுள்ள விளைவுகளை ஏற்படுத்தும்.

புழமைவாத கொள்கைகளைக் கொண்ட கொன்சேவேட்டிக் கட்சியே இருக்கின்ற கட்சிகளில் பல்வேறுவகைகளில் பிற்போக்கானது. இக் கட்சியும் அதன்; கொள்கைகளும் ஏற்கனவே கனடாவில் வாழ்கின்ற குடிவரவாளர்களுக்கும் புதிதாக வருகின்ற அல்லது வரப்போகின்ற குடிவரவாளர்களுக்கும் மட்டும் எதிரான கட்சியல்ல. மேலும் வெள்ளையினத்தவர்களில் உள்ள மத்தியதர வர்க்கத்தினருக்கும் அதற்கும் கீழ் நிலையில் வாழ்வோருக்கும் மற்றும் முக்கியமாக இந்த நாட்டுக்கு உரிமையாளர்களான முதல் பிரஜைகளுக்கும் எதிரானதே; என்றால் மிகையல்ல. இதற்கு ஆதரவளிக்கின்ற தமிழர்கள் தமக்கு எதிரான ;உரிமைகள் சலுகைகள் வாய்ப்புக்களுக்கு எதிராகவும் காத்திரமான சர்வதேச அரசியலுக்கு எதிராகவுமே வாக்களிக்கின்றர் என்பதை புரிந்துகொள்ளாதவிடத்து தொடர்ச்சியான தவறிழைக்கின்றனர். மேலும் இவர்களுக்கு வாக்களிப்பதானது தமிழ் தேசிய விடுதலைக்கு எதிராகவே வாக்களித்து ஆதரிக்கின்றனர் என்றாலும்; மிகையானதல்ல. இதை இவர்கள் புர்pயாதவரை “புலிகளின் அரசியல் மொழியில்” போராட்டத்திற்கும் தமிழர்களது அரசியல் உரிமைகளுக்கும் எதிரான சக்திகளாவர். இந்தடிப்படையில் இந்த கட்சியில் சார்பாக தேர்தல் களத்தில் நிற்பவர்கள் தொடர்பாகவும் இக் கட்சி வெற்றிவாகை சூடுவதாற்காக உழைப்பவர்கள் தொடர்பான கணிப்பீட்டை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். இருப்பினும் இவர்களுக்கு வாக்களிப்பதா இல்லை என்பதை தீர்மானிப்பது தங்கள் ஒவ்வொருபரதும் ஜனநாயக உரிமை.

லிபரல் கட்சியும், மேற்குறிப்பிட்டவர்கள் போன்ற இவர்களது முன்னால் தலைவர்களின் ஆளுமை இ;ல்லாதவிடத்து, ஒரு வகையில் பிற்போக்குவாத கட்சிதான். ஆனால் தனது பெயருக்கு ஏற்ப சில தாராளமயவாத கொள்கைகளைப் பின்பற்றுகின்ற ஒரு கட்சி. இவர்களது நிலைப்பாடுகள் மதில் மேல் பூனை போன்றது. ஆகவே இவர்கள் முன்வைக்கின்ற அலலது அமுல்படுத்துகின்ற கொள்கைகள் மற்றும் சட்டங்கள் கூட முதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்குமம் மற்றும் பிற்போக்குவாத சமய நிறுவனங்களுக்குமே பெரும்பாலும் சாதகமாக இருந்து வருகின்றது. ஒரு நாள் காலை பாடசாலைகளில் பாலியல் கல்வியைக் கொண்டுவருவது என அறிவித்த ஒன்டாரியோ லிப்பரல் கட்சித் தலைவர் அன்று மாலையே சமய நிறுவனங்களின் நிர்ப்பதந்தத்தால் அந்த சட்ட மூலத்தை வாபஸ் வாங்கினார். இவ்வாறு தமது கொள்கைகளில் உறுதியில்லாது முதலாளித்துவ மற்றும் சமய நிறுவனங்களால் ஆட்டுவிக்கப்படுகின்ற தலைவர்களே இவர்கள்.

புதிய ஜனநாயக கட்சி மேற்குறிப்பிட்ட இரு கட்சிகளைவிடவும் ஒரளவு முன்னேறி கட்சியே. ஆனால் இது இதுவரை நாட்டின் தலைமைப்பதவிக்கு வராது இருப்பதால் இது தொடர்பான எதிர்மானங்களை கூறமுடியாது. ஆனாhல் கொள்கையடிப்படையில் இக் கட்சி குடிவரவாளர்களுக்காகும் பெண்களுக்கும் கனடாவின் முதல் பிரஜைகளுக்கும் ஆதரவான கட்சி எனலாம். மேலும் இவர்கள் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் அதன் நியாயத்தன்மையையும் பொதுவெளிகளில் வெளிப்படையாக குரல் கொடுப்பது மட்டுமல்ல பங்கும் பற்றுகின்றார்கள். ஆனால் இலங்கையைப் போன்று தமிழ் பேசும் மனிதர்களது உரிமைகளை மதித்தும் போராட்டத்தை ஏற்றும் அவற்றுக்கு சார்பாக குரல் கொடுக்கின்ற சிங்கள தேசத்தின் கட்சிகளுடன் (உதாரணமாக என்.என்.எஸ்.பி.) கூட்டமைத்து அவர்களுக்கு வாக்களிக்காது வழமைபோல யூ.என்.பி உடனோ அல்லது சுதந்திரக் கட்சி உடனோ கூட்டமைத்து  வாக்களிப்பதைக் போலவே இங்கும் லிபரலுக்கோ கன்சேவேட்டிக் கட்சிக்கோ வாக்களிக்கின்றனர். ஏனனில் என்.டி.பி ஆட்சிக்கு வராது என ஒரு வலுவில்லாத காரணத்தை கூறுவதன் மூலம் தமது அடிப்படை அரசியலையும் அதன் நோக்கத்தையும் தவறவிடுகின்றனர். இந்த வலுவில்லாத காரணங்களை மீளாய்விற்கு உட்படுத்தி தமது வாக்கை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் தமது அரசியல் எதிர்பார்ப்புகளையும் அபிலாசைகளையும் உறுதியாக கனேடிய பாராளுமன்றத்தில் தமிழ் பேசும் மனிதர்கள் நிலைநாட்டலாம். ஆதற்கான காலம் கனித்துள்ளதாகவே கருதலாம்.

குளோப் அன்ட மெயில் பத்திரிகையில் வெளிவந்த பழமைவாதக் கட்சி சார்பாக போட்டியிடுகின்ற டீவியை (தொல்லைக்காட்சியில்) தொலைக்காட்சியல் பணியாற்றி ரா “கவன்” என்பவரது பேட்டி பல உண்மைகளை வெளிக்கொண்டுவருகின்றது. இது கனடாவில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த தமிழ் தேசியவாதிகளின்; இரட்டைவேடத்தையும் அரசியல் வியாபாரத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இவர்களைப் போன்றவர்களால் தான் விடுதலைப் போராட்டம் எந்தமுடிவுமின்றி அழிக்கப்பட்டு இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பேசும் மனிதர்கள் அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்னர் என்றால் மிகையல்ல. இவர் மட்டுமல்ல கடந்த காலங்களில் கனேடிய புலம் பெயர் தமிழர்களிடையே தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்த பலர் கன்சேவேட்டிக் கட்சி சார்பாக தேர்தலில் நின்றும் அந்தக் கட்சிக்காக வெளிப்படையாக உழைத்துமுள்ளனர்.  இவர்கள் இவ்வாறு செயற்படுவதற்கு ஐனநாயக உரிமை உள்ளது. ஆனால் எந்த அரசியலின் அடிப்படையில் இவ்வாறு செய்கின்றார்கள் என்பதை முன்வைக்கத்தவறிவிடுகின்றனர். ரா “கவன்”; மட்டும் விதிவிலக்கா தனது இரட்டை வேடத்தை வெளிப்படையாக அம்பலப்படுத்தியுள்ளார். இதற்குக் இன்று புகழ் தேடுவதற்கும் பணம் உழைப்பதற்கும் புலிகள் களத்தில் இல்லாததும் மற்றும் தேசிய தலைவருடன் ஒன்றாக நின்று படம் பிடித்து பெருமைப்படுவதற்கு அவர் இல்லாததும் காரணமாக இருக்கலாம். ஆகவே தமிழ் பேசும் வாக்காளர்கள் இவர்கள் தொடர்பாக மிகவும் கவனமாகவும் சிந்தித்துமே தமது வாக்களை அளிக்கவேண்டிய நிலையில் உள்ளனர்.

சில தமிழ் தேசியவாதிகள் எந்தக் கட்சி தேர்தலில் நிற்பதற்கு இடம் தருகின்றதோ அதற்காக தமது அரசியல் கொள்கைகளை விட்டுவிட்டு அக் கட்சியின் சார்பாக தேர்தலில் நிற்பார்கள் என்பதற்கு கடந்தகாலங்களில் தேர்தலில் பங்குபற்றிய பல தமிழ் வேட்பாளர் பட்டியலை தேடிப் பார்த்தால் புர்pயும். இருப்பினும் புதிய ஜனநாயக கட்சி தமிழ் பேசும் மனிதர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த தொடர்ச்சியாக இடம் ஒதிக்கி வந்துள்ளதுடன் அவர்களது அரசியல் உரிமைகளுக்காகவும் தோல் கொடுத்துள்ளது. இதனால் இக் கட்சியின் சார்பாக நிற்பவர் இக் கட்சியின் கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என வாக்காளர்கள் நம்பத்தேவையில்லை. ஆனால் இக் கட்சி இடம் ஒதுக்குவதற்குப்; பல காரணங்கள் இருந்தபோதும், இந்தக் கட்சி மட்டுமே தமிழ் பேசும் மனிதர்களின் பிரச்சனை தொடர்பாக தொடர்ச்சியாக குரல் கொடுத்துவருகின்ற ஒரே கட்சி.  இக் கட்சியின் சார்பாக நிற்கின்ற ராதிகா சிற்சபேசன். இவரது உள்ளார்ந்த  ;உண்மையான அரசியல் என்ன என்பது தெரியாது. ஆனால் இக் கட்சியின் சார்பாக தேர்தலில் நிற்கின்றார் என்பது மட்டுமே உண்மையானது. இருப்பினும் இவர் சார்ந்து கட்சி, இருக்கின்ற கட்சிகளிலையே ஒரளவு பரவாயில்லை என்பதால் தமிழ் பேசும் மனிதர்கள் வாக்களிப்பதற்கு தகுதியான கட்சி எனலாம். ஆகவே தமிழ் பேசும் மனிதர்கள் இவர் சார்ந்த கட்சியின் அடிப்படையில் தமது வாக்குகளை அளிப்பதில் தவறில்லை எனலாம். இவருக்கு வாக்களிக்கும் அதே நேரம் ரா “கவன்”; கன்சவேட்டி சார்பாக நிற்கின்ற தொகுதியில் அவருக்கு வாக்களிக்காது அத் தொகுதியில் நிற்கின்ற என்.டி.பி வேட்பாளருக்கு ( Dan Harris) வாக்களிப்பதன் மூலம் கனேடிய அரசியலில் தமது அரசியல் நிலைப்பாட்டை தமிழ் பேசும் மனிதர்கள் உறுதியாக நிலைநாட்டலாம்  என நம்பலாம்.

இறுதியாக இவ்வாறன தேர்தல் நேரங்களிலாவது கனடாவில் இயங்குகின்ற தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் உரிமைகளுக்காக போராடுகின்ற செயற்படுகின்ற அமைப்புகள் குழுக்கள் மற்றும் வட்டங்கள் இத் தேர்த்ல் தொடர்பாக தமது அரசியல் நிலைப்பாடுகளை முன்வைத்து கலந்துரையாடல்களை நிகழ்த்துவது பல வழிகளில் நன்மையானது என்பதை ஏன் புரிந்துகொள்கின்றார்கள் இல்லை? மேலும் இது தொடர்பான கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்வதன் மூலம் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது நன்மையானது என்பதை நாம் புரிந்துகொள்வதற்கும் பிறர் அறிந்து கொள்வதற்கும் வழிவகுக்கலாம் அல்லவா?

நமது வாக்குகளை பிரக்ஞையுடன் அளிப்போமாக!

க‌ன‌டாத் தேர்த‌ல் 2011

http://djthamilan.blogspot.com/2011/04/2011.html

கொன்சர்வேடிவ் கட்சியின் தேர்தல் விளம்பரம்

http://arunmozhivarman.com/

தமிழர் வாக்கு யாருக்கு?

http://worldinmind.blogspot.com/

Advertisements

Responses

 1. தமிழர்கள் தம் சார்பாக ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பவேண்டுமானால் அவர்கள் ஒற்றுமையாக ஒன்றினைந்து வாக்களிக்கவேண்டியது என்.டி.பி கட்சியின் வேட்பாளர் ராதிகா சிட்சபேசனுக்கே. இவர் தமிழர் என்பதற்காக மடடும் வாக்களிக்க வேண்டும் என்பதல்ல. இவர் சார்ந்த கட்சியின் அரசியல் நிலைப்பாடு கன்சேர்ட்டி கட்சியினதை விட முன்னேற்றகரமானது.

  இவர் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளன. ஏனனில் கடந்த 23 வருடங்களாக இவர் போட்டியிடும் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியவர் டெரிக் லி. இந்த முறை இவர் போட்டியிடவில்லை. ஆகவே லிப்பிரல் கட்சி சார்பாக நம்மைப் போல வெள்ளையினமற்ற வேறு நிற வேட்பாளரே போட்டியிடுகின்றார். ஆகவே இதுவரை லிபிரல் கட்சிக்கு வாக்களித்தவர்கள் இவருக்கும் வாக்களிப்பார்கள் என்பது சந்தேகமானதே. இதன் காரணமாக லிபரல் கட்சியின் வாக்குகள் பிரிவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்த வாக்குகளை என்.டி..பி கட்சி பெறுமாயின் ராதிகா வெற்றி பெறலாம். மேலும் தேர்தல் கணிப்புகள் என்.டி.பி கட்சி அதிகளவு வாக்குகளையும் ஆசனங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கின்றன.

 2. Facebook இல் லிபரல் கட்சியின் மைக்கல் இக்னாற்றியேவ் பற்றிய சர்ச்சை ஒன்றின் மூலம் ரா’கவன்’ அவர்களுக்கு வலுச்சேர்க்க நண்பர்கள் சிலர் முயற்சித்தபோது தனியாக அடிபடவேண்டியிருந்தது. அங்கே சண்டை பிடித்தது லிபரல் கட்சியையும் மைக்கல் இக்னாற்றியேவையும் நியாயப்படுத்த அல்ல. ரா’கவன்’ செய்வது போலித்தனம் என்பதைச் சுட்டவே. இதிலும் தமிழ் ஊடகங்களும் கனேடியத் தமிழ்த் தலைவர்களும் ‘தமிழர்கள் ஒன்றாய்ச் சேர்ந்து ரா’கவனை’ பாராளுமன்றம் அனுப்புவோம் என்று சொல்வது வேடிக்கை. தொகுதிவிட்டுத் தொகுதி வாக்களிக்க முடியுமா என்ன? ரா’கவன்’ உண்மையிலேயே தமிழர் குரலைப் பாராளுமன்றில் ஒலிக்கவைக்க விரும்பினால் அல்லது தமிழ் பேசும் மனிதர்களின் குரலாக ஒலிக்க விரும்பினால் புதிய ஜனநாயகக் கட்சியோடு சேர்ந்தோ அல்லது சுயேட்சையாகவோ போட்டியிடலாம். சுயேட்சையாகப் போட்டியிட்டு பாராளுமன்றம் போகாவிட்டாலும், அந்தத் தொகுதித் தமிழ் பேசும் மக்கள் அனைவரது வாக்குகளையுமாவது பிரிப்பதன் மூலம் ஒரு செய்தியைப் பொதுவில் சொல்லியிருக்கலாம்.

  நன்றாக எழுதியிருக்கிறீர்கள் மீரா… உங்கள் கவனத்துக்கு அது //ஜேம்ஸ் பியர்சன்// அல்ல, லெஸ்ரர் பியர்சன்

 3. நன்றி கீர்த்தீகன்….
  தங்கள் சுட்டிக்காட்டலுக்கு….
  மாற்றம் செய்துவிட்டேன்….

  உங்கள் கருத்துடன் உடன்படுகின்றேன்…
  ஆனால் தமிழ் தேசிய அரசியலில் உள்ள குறைபாடு….அரசியல் பற்றிய அக்கறையின்றி சும்மா தமிழ் தமிழ் இனம் என கூக்குரல் இடுவது மட்டும்தான்….


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: