Posted by: மீராபாரதி | November 8, 2010

மார்க்சியம் + தேசியவாதம் = புரட்சிகர முன்னேறிய தேசியவாத மார்க்சியம் +/- delta – எனது (ஒரு) புலம்பல்!!!

மார்க்சியம் + தேசியவாதம் = புரட்சிகர முன்னேறிய தேசியவாத மார்க்சியம்  +/- delta – எனது (ஒரு) புலம்பல்!!!

கடந்த ஓக்டோபர் மாதம் 30 திகதி தேடகம் குழுவினர். “இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் எதிர்கொள்ளும் அரசியல் சவால்களும், செயலுக்கான கருத்துப்பகிர்வும், கலந்துரையாடலும்” என்ற தலைப்பில் ஒரு நிகழ்வை ரொரன்டோவில் ஒழுங்கு செய்திருந்தனர். இதில் மூன்றுவிதமான அரசியல் கருத்துப் போக்குள்ளவர்களை அழைத்து ஒரே மேடையில் இருக்கச் செய்து தமது கருத்துக்களைக்  கூறுவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கியிருந்தனர். இவ்வாறான ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்தமைக்காக தேடகம் குழுவினர் பாராட்டுக்குரியவர்களே. இதேவேளை இவர்களது அழைப்பை ஏற்று தமது கருத்துக்களை கூறவும் மற்றும் பொது மனிதர்களுக்கு (மீண்டும்) முகம் கொடுத்தும் அவர்களது கேள்விகளுக்கு  பதிலளிக்கவும் முன்வந்த மே 18 இயக்கம் மற்றும் வீயூகம் இதழ் ஆசிரியர் குழுவின் சார்பாக வந்த ரகுமான் ஜான், இலங்கையின் செயற்படும் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல், மற்றும் நாடு கடந்த அரசாங்கத்தின் அங்கத்தவர் மற்றும்; சபாநாயகர் பொன். பாலராஜன் ஆகிய மூவரும் பாராட்டுக்குரியவர்களே. இதேவேளை சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து அல்லது அவர்களது செயற்பாடுகளுக்கு ஆதரவளித்து செயற்படுகின்றவர்களையும் அழைத்ததாக ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்திருந்தனர். அவ்வாறு அனுப்பப்பட்ட அழைப்பை நிராகரித்தமைக்காகவும் தாம் சார்ந்த அரசியல் சார்பாக பொது மனிதர்களை சந்திக்க மறுத்தமைக்காகவும் அவர்கள் விமர்சனத்திற்கு உரியவர்களே.

இன்றைய சுழலில் இவ்வாறான ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்வதும் அதை வெற்றிகரமாக நடாத்துவதும் சவாலான விடயங்களே. ஆகவே, இவ்வாறன கூட்டங்களை ஒழுங்கு செய்பவர்களையும் சபையோர் மதிக்கவேண்டும் என்பதும் முக்கியமானதே. ஆனால் பொறுப்புள்ள சில மனிதர்கள் (மதுபோதையில் வந்து) பொறுப்பற்றவிதமாக சபையை குழப்பியதை பார்த்தபோது கவலைப்படவே முடிந்தது. இவ்வளவு மோசமான அனுபவங்களின் பின்பும் நாம் சிறிதாவது வளர்ந்து முன்னேறியதாக தெரியவில்லை. மேலும் சிலரோ மேடையையோ, ஒலி வாங்கியையோ கண்டால் நேரத்தைக் கருத்தில் கொள்ளாது தொடர்ந்து கதைத்துக் கொண்டே இருப்பார்கள். மனிதர்களின் இவ்வாறான செயற்பாடுகளும் இதுபோன்ற நிகழ்வுகளை ஒழுங்காக நடாத்துவதற்கு இடைஞ்சலாகவே இருக்கும்.

இந்த நிகழ்வை “கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும்” என்றே அறிவித்திருத்தனர். ஆனால் சபையோரை கேள்வி மட்டுமே கேட்க அனுமதித்திருந்தனர். இவ்வாறான கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் இவ்வாறன பொது தள கலந்துரையாடல்களை பிரச்சனைகளின்றி ;நடாத்துவதற்கு அவசியமானவைதான். இதற்காக கேள்விகள் மட்டும் தான் கேட்கலாம் என்றோ அல்லது கருத்துக் கூற வரும் பொழுது இடையூறு செய்வதும் இவற்றையும் மீறி உரை நிகழ்த்தியோரின் ஒலிப் பெருக்கி சத்தம் குறைக்கப்பதும் பண்பான செயலல்ல. தமக்கு அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக இவ்வாறு அநாகரிகமாக செயற்படாமல் ஆரோக்கியமாக செயற்பட்டிருக்கலாம். உதாரணமாக ஒருவருக்கு 5 அல்லது 10 நிமிடங்களை ஓதிக்கியிருக்கலாம். இந்த நேரத்திற்குள் ஒருவர் தான் விரும்பியவாறு தனது கருத்தையோ கேள்வியையோ முன்வைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கலாம்.  ஏனனில் ஒவ்வொரு மனிதருக்கும் தமது கருத்துக்களை தெரிவிக்கும் மற்றும் கேள்விகள் கேட்கும் பண்புகள் வேறுபட்டவை. இந்த தனி மனித வேறுபாடுகள் இவ்வாறன பொதுத்தளங்களில் புரிந்துகொள்ளவும் மதிக்கப்படவும் வேண்டும். இனிவரும் காலங்களிலாவது இவ்வாறன விடயங்களை எவ்வாறு ஆரோக்கியமாக முகம் கொடுப்பது என கூட்டங்களை ஒழுங்கு செய்பவர்கள் சிந்திக்கவேண்டியது அவசியமான ஒன்றாகும். ஏனனில் கூட்டத்தின் நோக்கத்தின்படி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் கலந்துரையாடல் நடைபெற்றதா என்றால் கேள்விக்குறியே.

நமக்குள் இருக்கின்ற சந்தேகங்கள் கேள்விகளாக வெளிவருகின்றன. அதை இவ்வாறான கூட்டங்களில் வெளிப்படுத்துகின்றோம். இன்று புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின் அல்லது அவர்களது செயற்பாடுகள் முடக்கப்பட்டு அவர்கள் ஆட்சி செய்த இடம் கைப்பற்ற பின் புலம் பெயர்ந்து வாழும் முன்னால் புரட்சிகர ஜனநாக அரசியல் ஆர்வாளலர்கள் விழித்துக் கொண்டு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளார்கள். இவ்வாறு விழித்தெழுவதும், சிந்திப்பதும், செயற்படுவதும் அவரவர் உரிமை. நாம் என்ன செய்வது? ஏமக்கிருக்கும் உரிமையை பயன்படுத்தி இவ்வாறு எழுதியும், கேள்விகள் கேட்டும், விமர்சனத்துடன் வரவேற்பதைத் தவிர வேறு வழியில்லை. சுமதி ருபனின் என்பவர் இந்த நிகழ்வு தொடர்பான முகநூல் பதிவுக்குறிப்பில், அன்றும் கேள்வி கேட்க விடவில்லை. ஆகவே அது விடுதலைப் போராட்டத்தையே காவு கொடுத்தது. இன்றும் நாம் கேள்வி கேட்க கூடாது என்றால் எப்படி எனக் கேள்வி எழுப்பியிருந்ததார். இவ்வாறு நாம் கேள்வி கேட்காமல் இருப்பது ஒரு புறம் நமது பொறுப்பற்ற செயல். மறுபுறம் எதிர்காலத்தில் ஆரோக்கியமான ஒரு செயற்பாட்டிற்கும் வழிவகுக்காது தடைகல்லாகவே இருக்கும்.

இவ்வாறு நாம் கேள்வி கேட்பதால் நமக்கு எல்லாம் தெரியும் எனபதல்ல அர்த்தம். நமக்குள் கேள்விகள் எழுவது கூட நமக்குள் எழும் சந்தேகங்கள் மற்றும் விளக்கமின்மையாலையே என்பதை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். சிலவேளைகளில் சில விடயங்கள் நமக்குத் தெரியும் என்பதாலும் கூட கேள்விகள் கேட்கலாம். இவ்வாறான கேள்விகள் மற்றவர்களை மடக்கவேண்டும் அல்லது மடையர்கலாக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டதல்ல. மாறாக நாம் அறிந்ததை புரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு முன்நோக்கிய ஆரோக்கியமான வழியில் தொடர்ந்தும் செல்லவேண்டும் என்ற அக்கறையினாலையே கேட்கப்படுகின்றன. இதற்காக பொறுப்பற்ற சிலர் விதண்டா வாதத்திற்காகவும் தமது மேதாவிதனங்களை நிருபிப்பதற்கும் பொறுப்பற்ற கேள்விகள் கேட்பதுண்டு என்பதை மறுப்பதற்குமில்லை. இதனால்; அக்கறையுணர்வுடனும் பொறுப்புணர்வுடன் கேள்விகள் கேட்பவர்களை புறம் தள்ளவேண்டுமா?

மேலும், நாம் கருத்துக் கூறுகின்றவர் அல்லது கேள்வி கேட்பவர் ஒருவரை நமது மனக் கண்ணாடி ஊடாக வடிகட்டியே பார்க்கின்றோம். இவ்வாறான வடிகட்டல் பார்வை கேள்வி கேட்பவர் தொடர்பான நேர் அல்லது எதிர் மறை விம்பங்களை மதிப்பீடுகளை நமக்குள் உருவாக்குகின்றன. இ;தற்கு குறிப்பிட்ட மனிதர்கள் தொடர்பாக ஏற்கனவே நமக்கிருக்கின்றே மதிப்பீடுகளும் பங்களிக்கின்றன. இவ்வாறான நமது பார்வைகள் மனிதர்களுடனான ஆரோக்கியமான உறவுகளுக்கோ செயற்பாடுகளுக்கோ வழிவகுக்காது என்பது நாம் புரிந்துகொள்ளவேண்டிய ஒன்றாகின்றது. ஆகவே கூட்டங்களில் மந்தைகள்போல தலையாட்டி கேட்டுவிட்டு போகின்ற பண்பாடை ஊக்குவிக்காது, கேள்வி கேட்டு விவாதித்து நட்புடன் கலந்துரையாடுகின்ற பண்பை ஊக்குவிப்போம். இதுவே ஆரோக்கியமான செயற்பாடுகளுக்கு வழிவகுக்கும்.

இறுதிப் போர் 2006ம் ஆண்டு ஆரம்பமாகியது. 2008ம் ஆண்டு போர் அதன் உக்கிரத்தை அடைந்து புலிகளின் தலைவர்களை மட்டும் காப்பாற்றுவதற்கா புலம் பெயர் புலிகளின் (தலைமறைவுத்) தலைமையில் தமிழ் பேசும் மனிதர்கள் வீதியில் இற்க்கப்படும் வரை இந்த ஜனநாயக அரசியல் ஆர்வாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? 2009ம் ஆண்டு ஜனவரியிலிருந்து மே மாதம் 18ம் திகதி வரை புலம் பெயர் வீதிகளில் நடைபெற்ற போர் எதிர்ப்பு அலைக்கு இவர்கள் தலைமை தாங்கியிருக்கவேண்டும் அல்லது தமது நிலைப்பாட்டிற்கு ஏற்ப போராட்டத்தை ஒழுங்கு செய்திருக்கவேண்டும்.  இந்த மக்கள் அலையை போரில் அகப்பட்ட மனிதர்களை காப்பாற்றுவதற்காகவும் விடுதலைப் போராட்டத்தைக் காப்பாற்றுவதற்காகவும் வழி நடாத்தியிருக்கவேண்டும். போரை நிறுத்தக் கூறி சிறிலங்கா அரசை கேட்டதைப் போல சர்வதேச ஆதரவை கோரியதைப்போல புலிகளின் தலைமையிடமும் ஆயுதங்களை மௌனிக்கும்படி கோரிக்கை முன்வைத்திருக்கவேண்டும். ஆகக் குறைந்தது கிளிநொச்சியை ;இராணுவம் நெருங்கியபோதாவது புலிகளை மாற்றுவழிகளை தேடக் கூறியோ அல்லது ஆயுதத்தை மௌனிக்கக் கூறியோ கோரிக்கை முன்வைத்திருக்கவேண்டும்.

அவ்வாறு புலம் பெயர்ந்து வாழும் ஜனநாயக அரசியல் ஆர்வாளர்கள் முன்நோக்கி சிந்தித்து செயற்பட்டிருந்தால் சிலநேரம் இறுதி நேரம் நடைபெற்ற போரின் ஊக்கிரத்தை தனித்து மட்டுமல்ல, வெட்கித் தலைகுனியுமளவிற்கு புலிகளின் தலைமை இறுதிக்கட்டத்தில் ஆயுதங்களை மௌனிக்க செய்வதாக அறிவித்த செயற்பாட்டையும் நாம் காணாதிருப்பதற்காவது வழிசெய்திருக்கலாம். ஆனால் அவ்வாறு எல்லாம் இந்த ஜனநாயக அரசியல் ஆர்வாளலர்கள் செய்யவில்லை. மாறாக புலி எதிர்ப்பாளர்கள் கூட இந்த மக்கள் அலையில் இழுபட்;டு புலிக் கொடிகளுடன் சென்றது விமர்சனத்திற்குரியதே. (தேடகம் கூட இவ்வாறு புலிக்கொடியை தாங்கி விதியில் நின்று போராடியதாக கூட சிலர் கூறுகின்றனர்.) ஏனனில், இது மக்கள் அலை என்பது உண்மையான போதும் மறுபுறம் தவறான நோக்கத்தில் வழிநடாத்தப்பட்ட மக்கள் அலை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். ஆனால் அவ்வாறு புர்pந்துகொள்வதற்கு தவறிவிட்டோம்.

மக்கள் அலை ஒன்று எழுச்சி பெற்று விதியில் இறங்கியதால் அது முற்போக்கான புரட்சிகர சக்திகளாகவோ சரியான நோக்கத்திற்காகத்தான் செயற்படுகின்றது என்றோ இருக்கவேண்டிய அவசியமில்லை. ஹிட்லர் காலத்திலும் அந்த மனிதரின் பின்னால் மக்களை அலை அலையாக சென்றனர். அத்வானி ;தலைமையில் அயோத்தியை நோக்கி மக்கள் அலை அலையாக சென்றனர். ஏன் போரை வெற்றி கொண்ட பின் பெரும்பாலான சிங்கள மக்கள் அலை அலையாக விதிகளில் இறங்கி கொண்டாடினர். இவ்வாறு மக்கள் கூட்டம் எழுச்சி பெற்று விதிகளில் இறங்கியது என்பதற்காக அவர்களின் பின் செல்வதா “முன்னேறிய புரட்சிகர முற்போக்கு” சக்திகளின் தலைமைகளின் பங்களிப்பு. இவ்வாறான நமது கடந்தகால நிகழ்கால செயற்பாடுகள், நாம் சில சுழல்களில் எந்தளவு பிரக்ஞையற்று எதிர்வினையாக செயற்படுகின்றோம் என்பதையே புலப்படுத்தியது. இப்பொழுதும் இன்றைய சுழலையும் நாம் வாழும் காலத்தையும் புரியாமல் தொடர்ந்தும் பழமையான கோட்பாடுகளின் அடிப்படையில் சிந்தித்தும் பிரக்ஞையற்றும் எதிர்வினையாகவும் செயற்படுகின்றோமா என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

இந்தடிப்படையில் அன்றைய கூட்டத்தின் கருத்துரைகளை மூன்று வகையாக பிரிக்கலாம்;. முதலாவது செந்தில்வேல் அவர்களின் சொற்பொழிவு. இவர் எங்களைப் போல நாட்டை விட்டு வெளியேறாமல் தொடர்ந்தும் இலங்கையில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருப்பவர். அந்தவகையில் இவர் மதிப்புக்குரியவர். ஆதற்காக விமர்சனத்திற்கு அப்பாற்படடவர்கள் அல்ல. இவரின் சொற்பொழிவு, நாம் வழமையாக கேட்கின்ற மரபுவாத மார்க்சியவாதிகளினால்; மீள மீள சொல்லப்பட்டுவருகின்ற வரட்டு தத்துங்களும் கோட்பாடுகளுமே என்றால் மிகையல்ல. மேலும் இவரது சொற்பொழிவைப் போன்று அழகான அருத்துறுத்த உறுதியான நம்பிக்கையான சொற்பொழிவுகளை எனது குழந்தைப் பருவத்திலிருந்து அதாவது 70களிலிருந்து கேட்டு வந்திருக்கின்றேன். காலத்திற்கு காலம் சொற்பொழிவாற்றும் மனிதர்கள் மட்டுமே; வேறுபட்டுள்ளார்கள். ஆனால் சொற்பொழிவாற்றிய அனைவரது சொற்பொழிவுகளினதும் அடிநாதம் பொதுவாக ஒன்றாகவே இருந்தது. இன்றும் அதேமாதிரி இருந்து வருகின்றமை மிகவும் கவலைக்குரியதே.

ஆனால் அன்றைய இவரது சொற்பொழிவில் ஒரு கருத்து மாற்றம் இருந்தது. அது இன்றைய பிரதான முரண்பாடு இன முரண்பாடு எனக் குறிப்பிட்ட அம்சமாகும்;. இன்றைய பிரதான முரண்பாடு இன முரண்பாடு என்பதை ஏற்றுக் கொண்ட போதும் இதற்கும் வர்க்க முரண்பாடே அடிப்படை என வெளிப்படையாக அல்லது மறைமுகமான தொனிப்பட கூறினார்;. மேலும்,; கட்சியின் பெயரில் லெனினின் பெயரை தாங்கியிருந்தும் சுய நிர்ணைய உரிமை தொடர்பாக ஒன்றும் கதைக்கவில்லை. மாறாக தமிழ் தொழிலாளர்களும் சிங்கள தொழிலாளர்களும் இணைந்த போராட்டமும் ஒற்றையாட்சிக்குள் ஒரு தீர்வு என்ற பழைய பல்லவியையே முன்மொழிந்தார். இவர்களால் இலங்கையில் குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் எந்தவிதமான குறிப்பிடும்படியான தாக்கத்தையும் ஏன் நிகழ்த்தமுடியாமலிருக்கின்றது என்பதற்கு இவ்வாறான இவர்களது கோட்பாட்டு வறுமையும் இரவல் தத்துவங்களும் தான் காரணமா என்பது சிந்தனைக்குரியது. இவர்கள் கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து அர்பணிப்புடன் செயற்பட்டபோதும், இவர்களது அக்கத்துவ எண்ணிக்கை கடந்த பத்துவருடங்களில் ஆகக் குறைந்தது 100 தாண்டியிருக்குமா என்பது கேள்விக்குரியதே. ஆகவே, இவர்கள் தமது செயற்பாடுகளையும் கோட்பாடுகளையும் மனித நலன் மேம்பாடு கருதி மீள்பரிசீலனைக்கு உட்படுத்துவர்களா என்பது எமது விருப்பமாக இருப்பினும் அது கேள்விக்குறியே?

மேலும் இவர் தனது சொற்பொழிவில் பிற அரசியல் கட்சிகளுடன் குறிப்பாக சிறிலங்காவில் உள்ள சிங்கள கட்சிகளுடன் குறைந்த பட்ச உடன்படிக்கை மூலம் இணைந்து செயற்படுவதன் மூலம் சிங்களம் பேசும் மனிதர்கள் மத்தியில் இன முரண்பாட்டின் அம்சங்களை விளக்கி தெளிவுபடுத்தலாம் எனக் கூறினார். இந்தடிப்படையில்  கடந்த தேர்தலில் ஏன் தங்களது கட்சி விக்கிரமபாகுவை ஆதரிக்கவில்லை எனக் கேட்டதற்கு அவருடன் இணைந்து முதலில் பணியாற்றினோம். ஆனால் அவருடைய நடவடிக்கைகள் அதிகாரத்துவமானவை. ஆகவே கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டோம் என்றார். இக் கூற்று இவர் தனது சொற்பொழிவில் கூறிய சிறிலங்காவின் உள்ள கட்சிகளுடன் குறைந்தபட்ச புரிந்துணர்வினடிப்படையில் செயற்படுவோம் எனக் கூறியதற்கு முரணாக அல்லவா இருக்கின்றது. ஓரு புறம் இணைந்து இயங்குவோம் என்கின்றார். மறுபுறம் அது பிழை இது பிழை என பிறரில் குறை காண்கின்றார். இவர்களது உண்மையான நிலைப்பாடுதான் என்ன? இக் கேள்விற்கான பதிலை கேட்பதற்கு இந்த நிகழ்வு ஒரு கலந்துரையாடலாக நடைபெறவில்லை. ஆகவே இங்கு எழுத்தில் பதிவு செய்கின்றேன். இங்கு விக்கிரமபாகுவுடன் இணைந்து வேலை செய்யவில்லை என்பதை விமர்சிப்பதால், நான் அக் கட்சியை சார்ந்தவரோ அல்லது அக் கட்சிக்காக வேலை செய்பவரோ அல்ல. அக் கட்சியின் முன்னால் ஒரு வருட அங்கத்தவர் என்றடிப்படையில் அவர்கள் மீதும் எனக்கு விமர்சனம் உள்ளது என்பதை தெரிவிப்பது அவசியமானது எனக் கருதுகின்றேன்.

சிறிலங்காவில் தமிழர்களின் சுய நிர்ணைய உரிமையை ஏற்று அதற்காக பிரச்சாரம் செய்கின்ற ஒரே ஒரு சிங்கள இடதுசாரிக் கட்சி விக்கிரம பாகுவின் நவ சம சமாஜ கட்சியே (N.s.s.P.) (விஜயடயசின் ரொட்கிச கட்சியையும் சேர்க்கலாம்) என்றால் மிகையல்ல. (குறிப்பாக கொழும்பு வாழ்) தமிழ் பேசும் மனிதர்களும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளும் தமக்கு கஸ்டமான காலங்களில் தமது தேவைகளுக்காக இவர்களை (கனடாவில் என்டிபி கட்சி) பயன்டுத்துவதுடன் மட்டும் தமது வேலையை முடித்துக் கொள்வார்கள். ஆனால் தேர்தல் காலங்களில் பிரதான இனவாத பிற்போக்கு (கனடாவில் கொன்சேவேட்டி கட்சி) கட்சிகளுடன் இனைந்துகூட தேர்தலில் முன் நிற்பார்கள். போரை முன்னெடுத்த இராணுவ தளபதி சரத்பொன்சேக்காவைக் கூட ஆதரிப்பார்கள். ஆனால் தவறியும் விக்கிரமபாகுவை ஆதரிக்க மாட்டார்கள். புலிகளின் தலைமை கூட ரணிலா? மகிந்தவா? என சாஸ்திரம் பார்த்தார்களே ஒழிய சிங்க மக்கள் மத்தியல் அரசியல் ரீதியாக தமது கருத்தை நிலை நிறுத்த விக்கிரமா பாகுவை ஆதரிக்கவில்லை. மேலும் விக்கிரமா பாகுவிற்கு வாக்களிப்பதன் மூலம் தமது சுய நிர்ணைய அரசியல் உரிமைக் கோரிக்கையை சிறிலங்கா அரசிற்கும் அதன் தேசத்திற்கும் மற்றும் சர்வதேசத்திற்கும் தமது அரசியல் நிலைப்பாட்டை உறுதியாகவும் உரக்கவும் தெரிவிக்கலாம் எனக் கூறி தமிழ் பேசும் மக்களை புலிகளின் தலைமை அரசியல் பாதையில் வழிநடாத்தவில்லை. (தமிழ் பேசுகின்ற இடதுசாரி கட்சிகளிடமே இவ்வாறன ஒரு போக்கை காணாதபோது புலிகளிடம் எப்படி எதிர்பார்ப்பது?) இதற்கு விக்கிரமாக பாகுவிடம் பணம் இல்லாமல் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். ஏனனில் புலிகளின் தலைமை மகிந்தவிடம் பணம் பெற்று அவரை வெல்லப் பண்ணியது என்ற கருத்தும் உலாவுவது நாம் அறிந்ததே. இது எந்தளவிற்கு உண்மையே தெரியாது. ஆனால் அவ்வாறு செய்திருந்தால் அதுவே தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு செய்த மாபெரும் (அவர்களது மொழியில்) துரோகமாக இருக்கும் என்றால் மிகையல்ல. இது தமிழ் தேசிய அரசியலில் காணப்படுகின்ற அரசியல் சாணக்கியம் மற்றும் தந்திரோபாயத்தின் வறுமையையே வெளிப்படுத்துகின்றது என்றால் மிகையல்ல.

இரண்டாவதாக கருத்துக் கூறிய ரகுமான் ஜான் அவர்களின் கருத்துரை என்பது 80களில் இருந்து பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள் பேசியதும் மற்றும் அவர்களது வெளியீடுகளிலும் கேட்ட வாசித்த கற்ற வீடயங்களையே மீளவும் கூறுகின்றாரா என்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. இதனால் இவர் ஒன்றுமே புதிதாக கூறவில்லை என முற்றாக ஒதுக்கவில்லை. ஏனனில் இவர் கூறுகின்ற புதிய விடயங்களை புரிந்துகொள்ளும் ஆற்றல் எனக்கு இல்லாமலும் இருக்கலாம் அல்லவா? தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை பிரக்ஞைபூர்வமான ஒரு மக்கள் போராட்டமாக சமூக மாற்றத்திற்கான வழியாகவும் மாற்றுவதற்கும் அதை வழிநடாத்துவதற்கும் இவரும் இவர் சார்ந்த கடந்த கால அமைப்புகளும் உயிர்ப்பு என்ற சஞ்சிகையினுடாக ஆற்றிய பங்களிப்புகளை புறக்கணிக்கவோ எந்தவகையிலும் குறைத்து மதிப்பிடவோ முடியாது. இந்தடிப்படையில் நம்மால் ஒரளவிற்காவது உடன்பட்டு செல்லக்கூடிய கோட்பாட்டு அரசியல் நிலைப்பாடு இவருடையது என்றால் தவறல்ல. மரபுவாத மார்க்சியம் முன்வைக்கின்ற தேசம் என்பதன் வரையரையை இவர் விமர்சனத்திற்கு உட்படுத்துகின்றார். இதன் மூலம் செந்தில்வேல் அவர்களின் கருத்துடன் முரண்படுகின்றார். மறுபுறம் புலிகளின் குறுந்தேசிய வாதத்தை விமர்சிப்பதன் மூலம் பாலராஜனுடனும் முரண்படுகின்றார். ஆகவே, மார்க்சியத்திலும் தேசிய வாதத்திலும் உள்ளாந்து இருக்கின்ற முற்போக்கு கூறுகளை பற்றிப்பிடித்திருக்கின்மையே இவரது கருத்துரையின் அடிப்படை எனலாம். ஆனாலும் இவரது மார்க்சிய கோட்பாட்டிலும்; வறுமை தெரிகின்றதா என்ற கேள்வி எழுகின்றது. ஏனனில் இன்றைய நிலையில் இவர் மார்சியத்திற்கும் தேசியவாதத்திற்கும் இடையில் (மட்டுமே) ஒரு சமரச திருணம் செய்கின்ற ஒரு கோட்பாட்டு செயற்பாட்டையே முன்னெடுக்கின்றார் என்று சிந்திக்கணே;டியுள்ளது.

 1917 வென்ற ரஸ்சிய புரட்சியின் அனுபவங்களை அதாவது லெனின்; காலத்து அனுபவங்களையும் கருத்துக்களையுமே தமது எதிர்கால செயற்பாடுகளுக்கான படிப்பினையாக 2000ம் ஆண்டிலும் ரகுமான் ஜான் கொண்டுள்ளார் என்பதை இவரது வீயூகம் -2 இதழ் கூறுகின்றது. இது இவர்களது கோட்பாட்டு வறுமைக்கு சாட்சியாக இருக்கின்றதா என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியவில்லை. 1917ம் ஆண்டு ரசிய புரட்சி வென்றது உண்மையாயின் அதன் பின் அங்கு நடைபெற்றவைக்கும் இன்று அங்கு நடைபெறுகின்றவைக்கும் லெனினினது கருத்துக்களும் காரணமாக இருக்கல்hம் அல்லவா? நமது விமர்சனத்தை லெனினில் இருந்து ஆரம்பிக்கவேண்டும் என கலந்துரையாடல் ஒன்றில் கிர்த்திகன் என்பவர் குறிப்பிட்டது இங்கு கவனிக்கத்தக்கது. ஏனனில் தொடர்ந்தும் லெனினின் கோட்பாட்டின் அடிப்படையிலையே அதன் பின்னான சோவியத் மற்றும் சினாவின் வரலாறும் மற்றும் பெரும்பாலான சர்வதேச மார்சிய புரட்சிகர கட்சிகளின் வரலாறும் உள்ளது. மறுபுறம் இங்கு தவறு லெனினிலா அல்லது அவரது கருத்துக்களை அப்படியே பயன்படுத்தியவர்களின் தவறா என்பது கவனத்திற்கும் விவாதத்திற்கும் உரிய விடயம் என்றால் மிகையல்ல.

மேலும் மார்க்சியம் லெனினிசத்தில்; இருக்கின்ற நாம் நம்புகின்ற உடன்படுகின்ற அடிப்படை அம்சங்களுக்கு அப்பால், அதில் ஆணாதிக்க மேற்கத்தைய வெள்ளையின ஆதிக்க கருத்துக்களும் மற்றும் அதன் மட்டுப்படுத்தப்பட்ட அறிவுப்பரம்பலும்; அதனுள் உள்ளார்ந்து இருக்கலாம் அல்லவா? மார்க்சியம் அல்லது மேலைத்தேய சமூக விஞ்ஞானம் என்பது தனி மனிதரை கருத்தில் எடுக்காது அதைத் தவிர்த்து சமூகத்தையும் அதன் இயக்கத்தையும் மட்டும் புற நிலையாக வைத்து பார்ப்பதுவும் ஒரு குறைபாடாகவும் இருக்கலாம் இல்லையா என்பதும் விவாதத்திற்கு உரியது. ஆகவே எதிர்கால புரட்சிக்கு அல்லது சமூகமாற்ற்த்திற்கான பாதையில் கீழைத்தேய விஞ்ஞானம் முன்வைக்கும் தனிமனித மாற்றம் எந்தளவு முக்கியத்துவம் பெறும் என்பதும் நாம் இனிவரும் காலங்களில் சிந்திக்கவேண்டிய ஒன்று. ஏனனில் சமூகமும் அதன ;இயக்கமும் அதில் வாழ்கின்ற மனிதர்களை தவிர்த்து புறநிலையாக இருக்கின்ற ஒன்றால்ல. மாறகா சமூகத்தின் ஒவ்வொரு தளங்களிலும் கூறுகளிலும் தனித் தனி மனிதர்களே இருக்கின்றார்கள். இந்த தனிமனிதர்களை எடுத்துவிட்டால் சமூகம் என்பது என்ன என்பது கேள்விகுட்பட்டுவிடும். ஆகவே சமூகமாற்றத்தின் செயற்பாட்டிற்கான இன்றைய தேவை நாம் வாழ்கின்ற சமூகத்திற்கும் சுழலுக்கும் ஏற்ப ஒரு புதிய கோட்பாட்டிற்கான மனம் திறந்த தேடலே. 

மே 18 இயக்கம் – முடிவல்ல. புதிய ஆரம்பம் என கூறுகின்றார்கள் எழுதுகின்றார்கள். அது என்ன புதிய ஆரம்பம் என்றால் அதற்குப் பதில் இல்லை. மே 18 இல் முடிவிற்றது என்ன? தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் முடிவா? ஆல்லது தவறான பாதையில் செயற்பட்ட ஒரு இயக்கத்தின முடிவா? ஆந்த இயக்கம் ஏகபோக உரிமை கொண்டாடி தானே முன்னெடுத்த போராட்டதின் முடிவா? இந்த இயக்கத்தின் இவ்வாறான முடிவுக்கும் போராட்டத்தை இந்த இடத்தில் கொண்டு வந்து ;விட்டமைக்க்கும் காரணம் பிரபாரகன் மட்டுமா? ஆவர் முன்னெடுத்த அரசியல் மட்டுமா? இது ஒரு கோட்பாட்டு பிரச்சனை மட்டும்தானா? புலிகளின் தலைமையிடமிருந்த ஆணாதிக்க பார்வை ஏற்பட்ட தவறுக்கு காரணம் இல்லையா? தமிழ் சமூகத்தினதும்; மற்றும் தனி மனித உளவியல் பிரச்சனைகளும் தோல்;விக்கு காரணம் இல்லையா? இவ்வாறான கேள்விகளுக்கு எல்லாம் பதில் இல்லாத மே 18 இயக்கம் என்பது தோல்வியினால் ஏற்பட்ட வெட்கத்தை மறைப்பதற்கான ஒரு அவசரமான எதிர் செயற்பாடாகவே தெரிகின்றது. மாறாக ஆரோக்கியமான அடித்தளம் கொண்ட செயற்பாடாக தென்படவில்லை.

தவறு தம்மிடம் இல்லை. மாறாக தமக்கு வெளியில் தான் உள்ளது என்ற போக்கும் ஆகவே அதை சரியாக முன்னெடுத்தால் பிரச்சனை இல்லை என்பதாக மட்டுமே சிந்திக்கின்றார்களோ என  சிந்திக்க வைக்கின்றது. ரகுமான் ஜான் அவர்கள் சில மார்க்சியவாதிகள் 83ம் ஆண்டுதான் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஏற்றனர் எனவும் அதுவரை அவர்களது கோட்பாட்டில் வறுமை நிலவியதாகவும் விமர்சனமாக குறிப்பிட்டார்;. ஆனால் அதேபோன்று இன்று தங்களிடமும் (வீயூகம் குழு) அவ்வாறான ஒரு கோட்பாட்டு வறுமை இல்லை என்பதற்கான உத்திரவாதம்தான் என்ன? அப்படி இருப்பின் அவற்றுக்கான (நம்மிடமிருக்கின்ற கோட்பாட்டின் வறுமையின் காரணத்திற்கான) பதில்களைத் தேடும் பொழுதுதான், எதிர்காலங்களில் நாம் பன்முகபட்ட தளங்களில், பன்முக பார்வை கொண்டு ஆரோக்கியமாக செயற்படுவதற்கான அடித்தளத்தை இடலாம். ஆல்லது மீண்டும் மீண்டும் ஒரு வட்டத்திற்குள் சுற்றி ஆரம்பித்த இடத்திலையே மீண்டும் வந்து நிற்கும் துர்பாக்கிய நிலைமை ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

மூன்றாவதாக இந்; நிகழ்வில் பொன். பாலராஜன் அவர்கள் கதைத்தவை, நாம் 90களிலிருந்து புலிகளின் தலைமைகள் கூறியதையும் கேட்டதையும் போன்றும் மற்றும் அவர்களது வெளீயீடுகளில் வாசித்த விடயங்களையுமே மீள நினைவு படுத்தியது போல் மட்டுமே இருந்தது எனக் கூறினால் மிகையல்ல. இவர் புதிதாக கூறிய விடயம் எனில் நாடுகடந்த அரசு(?) அல்லது அரசாங்கம் என்பது மட்டுமே. மற்றும்படி தமிழ் பேசும் மனிதர்களின்; பிரச்சனைக்கு தமிழீழம் தான் தீர்வு என்றும் ஆயுதப் போராட்டம் இல்ல்hது பெறுவதே தமது புதிய நோக்கம் எனவும் உருத்திரகுமாரன் கூறியதையே இங்கு மீளவும் கூறினார். தமிழீழம் பெற்றபின் அதை சோசலிச நாடாக்கலாம் என் காலம் காலமாக மார்க்சியவாத முகமூடி அணியும் தேசியவாதிகள் கூறிவதையும்  கூறினார்.

இவர் தொடர்ந்து கதைக்கும் பொழுது, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மனிதர்கள் அல்லது மனிதர்கள்  எதிர்நோக்கும் பிரச்சனை என்றே கூறினார். எனது கட்டுரைகளில் தமிழ் பேசும் மனிதர்கள் என்றே நான் எழுதுவதுண்டு. இதற்கு காரணம் சமூகம் நம் மீது அதிகாரத்துவத்தினுடாக ஏற்படுத்திய அடையாளங்களையும் அந்த அடையாளங்களின் அடிப்படையில் மனிதர்களுக்கு ஒரு பொதுவான கலாசரா பண்பாட்டுத் தன்மையை ஏற்படுத்துவதாகும். இதனுடாக தனி மனித இருப்பை மறுத்து மக்கள் என்ற ஒரு சொல்லிற்குள் அனைவரையும் அடக்கி அவர்களை ஒரு பொருளாக்கும் நோக்கமாக கொண்டது என்றால் மிகையல்ல. இதை மறுதலிப்பதற்காகவும் தனி மனித இருப்பபை சுயத்தை வலியுறுத்துவதற்காகவுமே தமிழ் பேசும் மனிதர்கள் என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகின்றேன். மேலும் கடந்தகாலங்களில் தனி மனிதர்களுக்கான மதிப்பை வழங்காது அவர்களின் தனித்துவத்தை மதியாது செயற்பட்ட காரணத்தினாலும் தனி மனித உரிமையை வலியுறுத்துவதற்காகவும் தனி மனிதர்களே சமூகத்தின் அடித்தளம் என்பதையும் வலியுறுத்துவதற்காகவும் இச் சொல்லைப் பயன்படுத்தி வருகின்றேன். இதேபோல் சசீவன் என்பவர் தனது வலைத்தளங்களில் தமிழ் சமூகங்கள் என்ற சொல்லை பயன்படுத்துகின்றார். இதற்கு காரணம் தமிழ் பேசும் மக்கள் என பொதுமைப்படுத்துவதன் மூலம் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற அனைத்து தமிழ் பேசுகின்ற மனிதர்கள்; மீதும், யாழ். சைவ வேளாள கருத்தாதிக்கம் நிறுவுவதன் மூலம், வடக்கு கிழக்கில் வாழ்கின்ற பல்வேறு தமிழ் பேசும் சமூகங்களின் அடையாளங்களை மறுக்கப்படுவதை அவர் புரிந்துகொண்டதினால் இருக்கலாம். ஆகவே வடக்கு கிழக்கில் வாழ்கின்ற பல்வேறு தழிழ் பேசுகின்ற சமூகங்களை மதிப்பதற்காக சசீவன் இவ்வாறு எழுதுவதாக இருக்கும் என்றே நினைக்கின்றேன். ஆனால் பாலராஜன் தமிழ் பேசுகின்ற மக்கள் எனப் பயன்படுத்துவது, புலிகளின் வழமையான பிற சமூகங்களை, சக தேசங்களின் இருப்பை மறுக்கின்ற, எல்லோரையும் பொதுவான ஒரு தமிழ் சமூகமாக பார்க்கின்ற கருத்தயலின் அடிப்படையாக இருக்கலாமா என சந்தேகிக்க தோன்றுகின்றது. இது நாடுகடந்த அரசு அல்லது அரசாங்கத்திற்குள் காணப்படுகின்ற புலிகளின் கருத்தியலின் ஆதிக்கத்தையே காண்பிக்கின்றதா? அல்லது பாலராஜனின் தனிப்பட்ட புரிதலா? என்பது புரியவில்லை.

நமது இந்தப் புரிதலின்மைக்குக் காரணம், பாலராஜன் இந்தந் நிகழ்விற்கு தான் தனிப்படவும் நட்பு ரீதியாகவும் வந்ததாகவும் நாடுகடந்த அர(சு)சாங்கத்தின் சார்பாக வரவில்லை எனவும் கூறினார். இதைக் கூட்டத்தை ஒழுங்கு செய்தவர்களே கவனித்திருக்கவேண்டும். ஏனனில் தனிப்பட்ட பாலராஜனிடம் கேட்பத்ற்கு எங்களிடம் (சபையோரிடம்) கேள்விகள் ஒன்றும் இருக்கவில்லை. நட்பு ரீதியாக வந்தது நல்லவிடயம். வரவேற்க வேண்டிய ஒன்று. ஆனால் தான் சார்ந்த அமைப்பு பிரதிநிதியாக வந்திருந்தால் ஆரோக்கியமானதாக பயனுள்ளதாக இருந்திருக்கும். ஆனால் தனிப்படவும் நட்பு ரீதியாகவும் வந்ததாக இவர் கூறியது, இவரது அல்லது இவர் சார்ந்த அமைப்பின் பொறுப்பற்ற தன்மையை காண்பிப்க்கின்றதா? அல்லது சபையோரின் சங்கடமான சிக்கலான கேள்விகளை தவிர்ப்பதையும் நோக்கமாக கொண்ட தந்திரோபாய செயற்பாடா? என்ற கேள்விகளுக்கும் நாமே விடை தேட வேண்டியவர்களாக உள்ளோம். இருப்பினும் இவரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டன. ஆதற்கான தனது தனிப்பட்ட பதில்களையும் இவர் முன்வைத்தார்.

புலிகளின் தலைமை ;அழிக்கப்படும் அல்லது அடக்கப்படும்வரை, அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக புலிகளின் தலைமை முன்னெடுத்த செயற்பாடுகளுக்கும் அதனால் நடைபெற்ற சம்பவங்களுக்கும் எந்தவிதமாக பொறுப்பும் எடுக்காது, மக்களுக்கு பதில் ஒன்றும் கூறாது, நாடு கடந்த அரசாங்க செயற்பாட்டில் உடனடியாக இறங்கியதற்கு காரணம் என்ன? மேலும் இந்த அமைப்பு புலிகள் தொடர்ந்த அரசியலையும், அதன் தலைவர் பிரபாகரனையே மீளவும் தலைவராகவும், அவர்களது புலிக் கொடியையும் முன்வைத்து கொண்டு அரசியல் செய்வதாலும், புலிகளின் சார்பில் பேச்சுவார்தைகளில் கலந்து கொண்டவர் என்றடிப்படையில் உருத்திரகுமாரனுக்கும் இவர் சார்ந்த அமைப்பின் அங்கத்தவர்களுக்கும் பொறுப்பு வடக்கு கிழக்கு வாழ் மனிதர்களுக்கு பதில் சொல்லவேண்டிய பாரிய பொறுப்பு இருக்கின்றது. இந்தப் பொறுப்பை நிறைவேற்றாது தொடர்ந்து பழைய அரசியலை முன்னெடுப்பதும், அம் மனிதர்களையும் அவர்களது கேள்விகளையும் புறக்கணிப்பதும் பொறுப்பற்ற செயல் அல்லவா? இவ்வாறன கேள்வி ஒன்றிக்கு பாலராஜன்; கூறிய பதில், இப்பொழுதுதான் நாம் பல சிரமங்களுக்கு மத்தியில் செயற்பட ஆரம்பித்திருக்கின்றோம். அமைச்சரவையைத் தெரிவு செய்திருக்கின்றோம். நமக்கான அரசியல் யாப்பை உருவாக்கியபின் மக்களை சந்திப்போம். அவர்களது கேள்விகளுக்கான பதிலை நாம் முன்வைப்போம் எனக் கூறினார். இது புலிகளின் பாணியில் அதே (உள்) குத்து வெட்டு செயற்பாடுகள் கொண்ட ஆனால் ஜனநாயக சாயம் பூசிய தமது குறுந்தேசியவாத பிற்போக்கு அரசியலை தமிழ் பேசும் மனிதர்கள் மீது மீண்டும் திணிக்கின்ற ஒரு ஏகபோக செயற்பாடாகவே தெரிகின்றது.  இவ்வாறு கூறுவது எந்தவகையிலும் நாடு கடந்த அரசு அல்லது அரசாங்கத்தின் முக்கியத்துவத்தினை அக் கருத்துருவாக்கத்தினை எந்தவகையிலும் குறைத்து மதிப்பிடுவதல்ல. ஆனால் புலித்தலைமையின் கடந்த கால தவறுகளுக்கும் போராட்டதின் கடைசி காலங்களில் நடைபெற்றவற்றுக்கும் மற்றும் தொடர்ச்சியாக போராட்டத்தை தோல்விக்கு கொண்டு சென்றதற்கும், மக்களின் பணம் மற்றும் சொத்துக்களுக்கும் எந்தவிதமான விளங்கங்களும் பதிலும் கூறாது அவசர அவசரமாக நாடு கடந்த அமைப்பை கட்டி எழுப்ப உழைப்பது சந்தேகங்களையே தோற்றுவிக்கின்றது. ஆகவே இவர்கள் முதலில் தமழ் பேசுகின்றன பொது மனிதர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் அளிப்பதன் மூலமே இவர்களது செயற்பாட்டிற்கான நம்பகத்தன்மை உருவாகும் என்றால் மிகையல்ல. அல்லது இதுவும் புலிகளின் தலைமை செய்ததுபேர்ல் காலம் கடந்தும் விளையாட்டும் மற்றும் பணம் பண்ணும் நோக்கமுமாகவே இருக்கும்.

இறுதியாக இதுவரை தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் நடந்த தவறுகளுக்கும், இப் போராட்டம் தோல்வியை சந்தித்திலும் (அனைத்து) தமது அமைப்புகளது பொறுப்பு என்ன? தமது தவறு என்ன? என்பதற்கான பதில்களை இவர்கள் மூவரும் முன்வைக்கவில்லை? போராட்டம், புரட்சி, அதை முன்னெடுக்கும் இயக்கம், கட்சி எல்லாம் மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் நலன்களுக்காகவும், விடுதலைக்காகவும் மக்களின்; பெயரால் அவர்களின் தலைமையில் நடைபெறுகின்ற ஒன்றாக உணர்ச்சியாளர்களாலும், தேசியவாதிகளாலும், ஜனநாயவாதிகளாலும், இடதுசாரிகளாலும், முன்னேறிய பிரிவினர்களாலும், அரசியல் செயற்பாடுகளில் அக்கறை உள்ளவர்களாலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள். இன்று அனைத்தும் தோல்வி கண்டு நம்பிக்கையிழந்த நிலையில் தோல்விக்கான காரணங்களை, தனிநபர் மற்றும் தாம் சார்ந்த அமைப்புகள் சார்பான சுயஃவிமர்சனங்களை, எந்த மக்களின் விடுதலைக்காக போராட்டத்தை ஆரம்பித்தார்களோ அந்த மக்களின் முன்வைப்பது தான் நியாhயமானது பொறுப்புள்ள செய்றபாடுமாகும். இதற்குமாறாக கட்சிக்குள்ளும் இயக்கத்திற்குள்ளும் தான் சுயஃவிமர்சனங்கள் வைக்கவேண்டும் மாறாக பொது இடத்தில் அல்ல எனக் கூறுவது மரபுவாத நிலைப்பாடே.

மக்களிடம் அனுமதி கேட்டா இயக்கமோ கட்சியோ கட்டினோம். ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என செயற்பட்டோம். இல்லையே. குறிப்பிட்ட சுழலில் எங்களது அறிவிற்கும் நம்பிக்கைக்கும் ஏற்ப மக்களின் விடுதலைக்கு இதுதான் வழி என நாங்கள் உணர்ந்துபோது ஆயுதம் தாங்கினோம். குண்டுகள் வைத்தோம். தற்கொலைத் தாக்குதல்கள் நடாத்தினோம். கட்டாய இராணுவ பயிற்சி அளித்தோம். சிறுவர் இராணுவத்தை உருவாக்கினோம். இவ்வாறான செய்பாடுகளுக்கு எல்லாம் இந்த மக்களின் உழைப்பு பொருளாதார உதவிகளை அல்லது பங்களிப்புகளைப் அதிகாரத்தினுடாகவோ அல்லது பிரச்சாரத்தினுடாகவோ பெற்றோம். ஆனால் இந்த மக்களின் விடுதலைக்காக செயற்பட்டபோதும், இந்த மக்களின் அனுமதியைப் பெற்று நாம் ஒன்றையும் ஒருபோதும் ஆரம்பிக்கவில்லை. மக்களின் அனுமதியின்றியே ஒவ்வொரு செயற்பாடுகளையும் முன்னெடுத்தோம். இதில் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளும் உள்ளடக்கம். ஒரு வேளை போராட்டம் வெற்றி பெற்றிருந்தால் மக்கள் முன் கதாநயாகர்களாக வலம் வந்திருப்போம். வெற்றிக்கான காரணங்களை மக்கள் கேட்கின்றார்களோ இல்லையோ ஆனால் வலிந்து முன்வைத்திருப்போம். உரத்து முழங்கியிருப்போம். ஆனால் நாம் தோற்று அல்லவா போனோம்.  ஆனால் தோல்விக்கான காரணங்களை அதற்கான பொறுப்பை வலிந்து சென்று மக்கள் முன் வைப்பதற்கு மட்டும் தயங்குகின்றோம்.

அதிகமான இழப்புக்களை இதுவரை மக்கள் விடுதலைக்காக கொடுத்துவிட்டார்கள். இப்பொழுது வாழ்கின்ற மனிதர்களுக்கோ நம்பிக்கையீனம் ஏமாற்றம் என்பவற்றிக்கு மேலாக உளவியல் பாதிப்புகளையும் அதிகமாக இந்தப் போராட்டத்தினுடாக வழங்கியுள்ளோம்.  ஆகவே, தோற்றுப்போனதற்கான காரணங்களை மக்கள் முன்வைக்கத் தேவையில்லையா? இதற்கான பொறுப்பு எங்களுக்கு இல்லையா? இவ்வாறன ஒரு பொறுப்பை உணராமல் தட்டிக் கழிக்கின்ற ஒரு நிலைப்பாடு மக்களை மதியாமை மட்டுமல்ல மக்களுக்கு பொறுப்புடன் பதில ;கூறவேண்டிய பொறுப்பை உணராமையே என்றால் மிகையல்ல. தோற்றுப்போன இன்றைய சுழலில் இவ்வாறன ஒரு செயற்பாட்டை மக்கள் முன்னிலையில் முன்னெடுத்த பின்பே தொடர்ந்தும் விடுதலை நோக்கி நமது புதிய தேடல்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுப்பது பண்பாகும். சுரியான நிலைப்பாடாகவும் இருக்கும்.

மேலும் இவர்கள் மூவரும் பெரும்பாலும் பழைய விடயங்களையே மீள மீள புதிய சொற்கள் அல்லது அதே பழைய சொற்களைப் பயன்படுத்தியே தமது பேச்சுக்களை நிகழ்த்தினர். சுமதி ருபன் தனது பதிவில் குறிபிட்டதன்படி இவ்வாறான கருத்துக்களைக் கேட்பதன் மூலம் நாம் இலங்கையினது வரலாறு மற்றும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட வரலாறு என்பவற்றில் காலாநிதி பட்டம் பெற மட்டுமே இவ்வாறன கருத்துரைகள் சொற்பொழிவுகள் கதைகள் உதவி புரியும்;. ஆகவே புதிதாக என்ன சொல்ல வருகின்றீர்கள்? நாம் என்ன புதிதாக அறிந்துகொண்டோம்? ஏன்பதற்கான கேள்விகள் தொடர்ந்தும் கேள்விகளாகவே நமக்குள் இருக்கின்றன.

இறுதியாக மார்க்சியம் தேசியவாதம் என்பவற்றின் அடிப்படைகளை உள்வாங்கிக் கொண்டு பெண்ணியம், பின் நவீனத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், உளவியல், சாதியம், சுழலியல்…என நமது சிந்தனைத்தளத்தை பன்முகத்தளங்களில் விரிவாக்கவேண்டும். இவற்றுக்கிடையில் பன்முக உறவை உருவாக்கவேண்டும். இதிலிருந்தே நமது விடுதலைக்கான நமது புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும். இதுவே ஆராக்கியமான மனித மாற்றத்திற்கும் அதிலிருந்து சமூக மாற்றத்திற்குமான அல்லது இரண்டினதும் சமாந்தரமாக மாற்றத்திற்கு வழிவகுக்கும் என நம்பலாம்.

ஆகவே நமது புதிய சமன்பாடு என்பது பின்வருமாறு இருப்பதே சிறந்ததாக இருக்கும்….

 மார்க்சியம் + தேசியவாதம் + பெண்ணியம் + பின் நவீனத்துவம் + விஞ்ஞானம் + மெய்ஞானம் + உளவியல் +  சாதியம் +சுழலியல் +…= புரட்சிகர முன்னேறிய சிந்தனை

 நான் கேட்ட கேள்விகள் மற்றும் என் நினைவில் இருப்பவற்றின் அடிப்படையிலுமே இக் கட்டுரையை எழுதியுள்ளேன. மேலும் பல கேள்விகள் பலரால் கேட்கப்பட்டன. ஆதை கூட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் அறிக்கையாக சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

நன்றி

மீராபாரதி

Advertisements

Responses

  1. Dear Comrade,Thanks for your concern about the people.You may had been a member of the NSSP for a short period but I worked for the Join Trade Union Federation with Com.A. Annamalai .You know he was the front member of the NSSP and he was massacred by the Mafai and Fascist LTTE or Tamil Tigers.
    Then how can com.Vasudeva nanayakara has been collaborated with this anti marxist and pro Imperialist LTTE. If you are interested in present world affairs ,please go to the sites http://www.globalreserch.ca, or http://www.north starcompass.org. Thanks

  2. Dear Meera
    I stii belive on Tamil nationalism. that could vanish all manner of chauvanism in tamil. this the brilliant and sensible article which i have read recently. well done


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: