Posted by: மீராபாரதி | October 24, 2010

சாதிய விடுதலைக்கான முன்நிபந்தனை? – நம் அடையாளங்களுக்கு விடை கொடுத்தல்

சாதிய விடுதலைக்கான முன்நிபந்தனை? – நம் அடையாளங்களுக்கு விடை கொடுத்தல்
 
சுமூக, பொருளாதார விடுதலைப் போராட்டமோ அல்லது தேசிய விடுதலைப் Nபுhராட்டமோ சாதியின் பெயரால் அடக்கப்பட்ட மக்களுக்கு எந்தவகையிலும் விடுதலையைப் பெற்றுத்தரப் போவதில்லை. இந்த நிலையில் இன்று நடைபெறும் ஆயுதங் தாங்கிய தேசிய விடுதலைப் போராட்டம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சாதி விடுதலையை முன்னெடுத்து விடுவிக்கும் என்பதற்கான எந்த சாத்தியப் பாடுகளும் இல்லை. தேசிய விடுதலையையே பெற்றுத்தராது விடப்போகும் இன்றைய போராட்டமும் அதன் அணுகுமுறையும் சாதிய விடுதலையை பெற்றுத் தரும் என எவ்வாறு எதிர்பார்ப்பது. ஆகவே பல்வேறு வகைகளில் அடக்கப்படும் ஒவ்வொரு மனிதரும் தம் மீதான அடக்குமுறைகளை களைந்தெறிவதற்கு தமக்கமான பொருத்தமான வழிமுறைகளை முன்னெடுப்பது தவிர்க்கமுடியாததே. இதனடிப்படையில் தலித் மாநாடு வரவேற்கத்தக்கதே.
உலகத்தில் இன மத மொழி சாதி பால்….என ஒவ்வொரு வகையிலும், பல்வேறு வகைகளில், அல்லது எல்லா வகைகளிலும் அடக்கப்படும் ஒவ்வொரு மனிதரும் விடுதலை பெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்க உரிமையுடையவர்களே.இவ்வாறான மாநாடுகள் சாதிக் கொடுமைகள் பற்றியும் அதன் அமைப்பு முறை செயற்பாடுகள் தொடர்பாகவும் மேலும் ஆழமாக அறிவதற்கும் பரப்புரை செய்வதற்கும் விழிப்புணர்வை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும். இதனடிப்படையில் தலித் மாநாடு வரவேற்கத்தக்கதே.
ஆனால் இச் செயற்பாடுகளின் மூலம் மட்டும் சாதி அடிப்படையில் அடக்கப்பட்ட மனிதர்கள் விடுதலை பெறுவார்களா? இதற்கு வழி செய்யுமா? இல்லை எனில் எது வழி?
 நாம், நமது சிந்தனைகள் செயற்பாடுகளை கடந்த காலங்களுடன் முறித்துக்கொண்டு புதிய சிந்தனைகள் புதிய பார்வைகளை நோக்கி நமது தேடல்களை விரிவுபடுத்த வேண்டிய தேவை இன்று உள்ளது. ஏனனில் மீண்டும் மீண்டும் நம் மீதான அடக்குமுறைகளை உடைத்து எறிவதற்கும் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கும் அடக்குமுறையாளர்களுக்கு எதிரான கருத்துகளை நிலைநாட்டுவதையும் வன்முறை செயற்பாடுகளையுமே இதுவரை எதிர் செயற்பாடாக முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.   இந்த முறைமையே காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றது. இது எந்த வகையிலும் முன்னேறிய அல்லது சிறந்த சமூக அமைப்பை உருவாக்க தவறிவிட்டது என்பது நாம் காணும் ஒரு உண்மை. புரட்சிகள் பல நடந்த பல நாடுகளும் துமிழ் தேசிய விடுதலைப்போரட்டத்தின் இனறைய நிர்க்கதி நிலைமையும் இதை நிறுபிக்கின்றன.
மனிதர்கள் மீதான பல்வேறு வகை அடக்குமுறைகளான இன, மத, மொழி, சாதி, பால் அடக்குமுறைகளுக்கு முகங்கொடுக்கும் மனிதர்கள் அடக்குமுறையாளர்களுக்கு எதிராக வன்முறை செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு முதல், ஒவ்வொருவரும் தான் விடுதலை பெறுவதற்கும் சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கு தனது பங்கு பொறுப்பு என்ன என்று சிந்திப்பது உணர்வது மிக மிக முக்கியமானதும் அவசியமானதுமாகும். இதுவே கூட்டுமுயற்சியின் அடிப்படையில் விடுதலை பெறுவதற்கு வழிவகுக்கும். அல்லது அடக்கப்படும் மனிதர்களின் விடுதலைக்காக ஒரு சிலர் போராடி விடுதலையை சுதந்திரத்தை பெற்றுத்தர முனைவர். இன்று தமிழ் மக்களை விடுதலை செய்ய புலிகள் உட்பட பல ஆயுதக் குழுக்கள் போராடுவதைப்போல் அதாவது மனிதர்களின் விடுதலைக்காக மனிதர்கள் போராடாமல் பிரதிநிதிகள் போராடுவது. இது ஒரு இறவல் விடுதலை அல்லது சுதந்திரம். இது முழுமையானதல்ல. ஏனனில் இந்த விடுதலை சட்டப் புத்தகங்களிலும் மற்றும் பெற்றுக்கொடுத்தவர்களின் வாக்கு வங்கிக்கான ஒரு துரும்பாக அல்லது அவர்களின் புகழைக் கூறும் ஒரு வாசகமாக வரலாற்றில் இடம்பெறும். ஆனால் இவ்வாறான ஒரு விடுதலையின் பின்பும் அடக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் அடிமை மனநிலையில் வாழ்வர்கள் என்தற்கான சாத்தியக் கூறுகளே அதிகம். ஏன்? இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
மனிதர்கள் மீதான ஒவ்வொரு அடக்குமுறைக்கும் மிக நீண்ட கால வரலாறுகள் உண்டு என்பது நாம் அறிந்தது. இவ்வாறான நீண்ட நெடிய கடினமான பயணத்தில் நமது இரத்தத்தில் மட்டுமல்ல எலும்பு மச்சைக்குள்ளும் கலந்துள்ளது நமது அடிமை வாழ்வு. இதிலிருந்து நமது அடக்குமுறையை அகற்றுவதே பெறும் பணி மட்டுமல்ல முக்கியமான பணி கூட. ஆகவே சட்டப் புத்தகத்தில் எழுதப்படும் விடுதலை  அல்லது சுதந்திரம் ஒரு பகுதி வெற்றியே. இது தவிர்க்க முடியாததாயினும் முழுமையானதல்ல. ஆகவே முழுமையான விடுதலையை நோக்கி எவ்வாறு பயணிப்பது?
குறிப்பாக சாதிய அடக்குமுறை தொழில் சார்ந்து ஆதிக்க சக்திகளால் அடையாளப்படுத்தப்பட்டு தமது வாழ்வின் வசதிக்காக உருவாக்கப்பட்டது. இதனடிப்படையில் மனிதர்கள் மீது சுமத்தப்பட்ட அல்லது பச்சை குத்தப்பட்ட ஒரு அடையாளமே இந்த சாதி. இன்றும் சாதிய அடக்குமுறை காவிச் செல்லப்படுவதற்கான காரணங்கள் இரண்டு. ஒன்று பரம்பரை தொழிலிலிருந்து விடுபடாமை அல்லது விடுபடமுடியாமை. இரண்டாவது பரம்பரை தொழிலிலிருந்து விடுபட்டாலும் நமது; சாதிய அடையாளத்தை விரும்பியோ விரும்பாமலோ விடமுடியாமை. இந்த இரண்டு காரணங்களையும் சாதியால் அடக்கப்பட்வர்கள் தம்மக்குள் ஆழமாக ஊடுருவியிருக்கும் வேரை தம்மிலிருந்து களைய முடியுமாயின் முழுமையான விடுதலைக்கான சுதந்திரத்திற்கான சாத்தியம் உண்டு.
புரம்பரை தொழில் தொடர்பாக இரண்டு கருத்துக்களை முன்வைக்கலாம். சுமூக இயக்கத்திற்கு மனிதரின் வழமான வாழ்வுக்கு நடைமுறைகளில் உள்ள பல்வேறு தொழில்கள் மிக முக்கியமானவை. ஆகவே தொழில்களுக்கு ;எதிராக நமது பார்வையை திருப்பத்தேவையில்லை. முhறாக அனைவருக்கும் அடிப்படைக் கல்வியை கட்டாயமாக்குவது.  ஆகக்குறைந்தது 12ம் வகுப்பு (மிகக் குறுகிய எதிர்காலத்தில் ஒரு துறைதொடர்பான பட்டப்படிப்பே ஆகக்குறைந்த தகுதியாக இருக்கும்) வரை கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்துவது. இது ஒரு தொழிலை (பரம்பரை தொழில் உட்பட) ஒரு மனிதர் தன் சுய விருப்பில் தெரிவு செய்வதற்கான தகுதியை வழங்குகின்றது. இதற்கான உரிமை ஒரு மனிதரின் அடிப்படை மனித உரிமை தொடர்பானது. இரண்டாவது அனைத்து தொழில்களையும் குறிப்பாக தலித்துக்கள் எனப்படும் மனிதர்கள் செய்யும் தொழில்களாயினும் சரி பிற சாதிகள் எனப்படும் மனிதர்கள் செய்யும் தொழிலாயினுமு; சரி அனைத்துக்கும் சமூக அந்தஸ்து வழங்கப்படவேண்டும். இவற்றுக்கு வழங்கப்படும் உயர்வான ஊதியம் இந்த மாற்றத்தை உருவாக்குவது மட்டுமல்ல இம் மனிதர்களின் வாழ்வு நிலையையும் இது மாற்றியமைக்கும். குறிப்பாக துப்பரவுத் தொழிலாளர்கள் வேலை செய்யாது விடுவார்களாயின் அதன் விளைவுகள் இன்றைய சூழலில் கற்பனை கூட செய்யமுடியாதளவு பயங்கரமானது. ஆகவே இது போன்ற தொழில்களுக்கு முக்கியத்;துவம் வழங்கப்படவேண்டும். அதாவது பிற தொழில்களான முளை உழைப்புடன் சரி சமனாக கவனிக்கப்பட வேண்டும். இது உடல் உழைப்பாயினும் பிற உடல் அல்லது மன அல்லது முளை வேளைகளுடன் சரிசமமானது என்று ஏற்கும் மன நிலை வரவேண்டும்.
இன்று உலக சமூகம் நோக்கும் பல பிரச்சகைகளுக்கு அடிப்படையாகவும் முக்கியமானதாகவும் இருப்பது அடையாளம் சார்ந்த ஒருமைப்பாடும் அதன் விளைவாக உருவான முரண்பாடுகளும் பிரச்சனைகளுமே. இங்கு ஒரு மனிதரின் அடையாளம் எனக் கூறும்பொழுது இது இன, மத, மொழி, சாதி, நாடு, தேசம், பால், வர்க்க …. எனப் பல அடையாளங்களுடன் பிணைந்துள்ளது. கால நேர சூழ் நிலைக்கு ஏற்ப ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்கள் ஒரு மனிதருக்கு முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த அடையாளங்கள் அனைத்தும் மனிதராக பிறக்கும் ஒவ்வொருவருக்கும் இயற்கையாக இருந்ததல்ல. செயற்கையாக பலவந்தமாக சமூகத்தால் அதிகாரத்தில் இருந்தவர்களால் வழங்கப்பட்டவகைகளே இந்த அடையாளங்கள். இந்த அடையாளங்களிலும் சிலவற்றை நாமாக வலிந்து ஏற்றுக்கொள்வது நாம் வாழும் சூழலுக்காகவும் வாழ்க்கையை தொடர்ந்தும் பிரச்சனைகள் முரண்பாடுகள் இல்லாது சமரசமாக வாழ்வதற்காகவும் இசைவாக்கமடைகின்றோம். இதனால் நன்மைகள் அதிகமாக கிடைக்கலாம். புhதிப்புகள் குறைவாக இருக்கலாம். ஆனால் சாதிய அடையாங்களைப் போன்ற அடக்கப்பட்ட அடையாளத்தை தொடர்ந்தும் நாம் கடைபிடிப்பது ஆதிக்க சாதிகளுக்கும், மனிதர்களுக்கும் நன்மையாகவும் அடக்கப்படும் சாதிகளுக்கும் மனிதர்களுக்கும் பாதகமாகவும் முடிகின்றது. ஆகவே அடக்கப்படும் சாதிகள் தமது அடையாளத்தை இழப்பது அல்லது தூக்கி ஏறிவது அல்லது அடியோடு வேருடன் அழிப்பதே ஒவ்வொருவரும் புதிய மனிதாராக பிறப்பதற்கு வழிவகுக்கும்.
இந்த அடிப்படையில் சாதியத்துக்கு எதிராகப் போராடும் நாம் தலித்துக்கள் என்றடிப்படையில் இணைந்து செயற்படுவதை தவிர்த்து மனிதர்கள் என்ற அடிப்படையில் முன்நோக்கி செயற்படுவதே சாதிய அடையாளங்களை களைவதற்கு வழிவகுக்கும். அல்லது மீண்டும் மீண்டும் தலித்துக்கள் என்றும் வேறுபெயர்கள் கொண்;டும் ஒன்றினைவது இருக்கின்ற சாதிய ;அமைப்பைக் கட்டிக்காப்பதற்கு வழிவகுக்குமே அல்லாது மனிதர்களின் விடுதலைக்கு வழிவகுக்காது. வுhழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நமது சாதிய அடையாளத்தை களைந்து மனிதர் என்ற அடையாளத்தை ஆணித்தரமாக உறுதியாக பயமின்றி துணிவுடன் முன்வைக்கவேண்டும். ஏனனில் நமது இயற்கை அடையாளமான மனிதர் என்பது மறக்கப்பட்டு மிக நீண்ட காலம் சென்றுவிட்டது. முதலில் நாம் மனிதர் என்பது உணரப்படவேண்டும். மதிக்கப்படவேண்டும்.
நூம் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் மனிதராக அடையாளங் கண்டு மதிப்போமாயின் இன்று நடைபெறும் பல பிரச்சனைகள் தாமாக இல்லாதுபோய்விடும். மொழி சார்ந்து அடையாளப்படுத்துவதற்கு மாறாக நாம் அறிந்த மொழிகளினுடாக உயர்ந்த இலக்கியங்கைளப் படைப்பதே எந்த மொழியையும் அழியவிடாது வரலாற்றில் உயர்ந்து நிற்க்கச் செய்யும். இதேபோல் மனிதர்களின் உடல் மனம் ஆன்மா என்பவற்றை ஒன்றினைத்து சுத்தமாக்கி மனிதரை மேன்மேலும் உயரத்திற்கு கொண்டு செல்ல மேலும் பரிணாம வளர்ச்சியடைய வழி காட்ட வேண்டிய மதங்கள் ;மதம் பிடித்து அலைவது மட்டுமல்ல மனிதரை மனிதர் கொன்று குவிப்பதற்கு வழிகாட்டுகின்றன. ஆகவே மத அடையாளங்கள் களையப்பட்டு ஒவ்வொரு மனிதரும் தமக்கான தனித்துவமான பாதைகளில் மேலும் பரிணாம வளர்ச்சியடைவதற்காக தாம் தெரிவு செய்யும் பாதையே ஒவ்வொருவரதும் ஆன்மீகப் பாதையாகும். இது இன்று நடைமுறையில் இருக்கும் மத வியாபார நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டதாக தொடர்பில்லாததாக இருக்கும். இந்த நிறுவனங்களும் மனிதர்களின் மத அடையாளத்தை வலியுத்துவது மனிதர்களின் மீதான அக்கறையினாலோ அல்லது நலன்களினாலோ அல்ல. முhறாக தமக்கான அங்கத்துவ எண்ணிக்கையை அதிகரித்து உறுதியான வியாபாரத்தை ஒழுங்காக நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்வதே. ஆகவே சாதிய அடையாளங்களைப்போல் மத அடையாளங்களும் மனிதர்களுக்கு பாதகமாகவே இருக்கின்றன.
நும்மை அடக்குமறைகளுக்கு உட்படுத்தும் சகல இன, மத, மொழி, சாதி, பால் அடையாளங்களை களைந்து மனிதர்களாக பரிணாமமடைவோம். இதுவே இன்றைய தேவை.
நுமக்கு இன்று தேவை புதிய பார்வையும் புதிய செயற்பாடுகளும் புதிய பாதையுமே.
கடந்த காலத்தில் வாழ்வதா, அல்லது நிகழ் காலத்தில் சுதந்திரமாக வாழ்ந்து, எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதா?
புழையன கழிதலும் புதியன வருதலும் இயற்கையின் நியதி.
பழையதைக் கடைபிடிப்பதா புதியதை கண்டுபிடிப்பதா?
 தெரிவு நமது கைகளில்.
முதலில் நாம் மனிதர், இவ் உலகின் பிரiஐகள், என்ற அடைப்படையிலிருந்து இனிவரும் காலத்தை அணுகுவோம்.
நன்றி
மீராபாரதி
Advertisements

Responses

 1. தலித்தியம் யாழ்ப்பாண சமூகத்துக்கு அவசியம்தானா? – கிருத்திகன்.

  – (யாழ்ப்பாணம்! மேட்டுக்குடி!! தலித்தியம்!!! என்கிற தலைப்பில் ஜனார்த்தனன் கந்தையா எழுதிய பத்தியை முன்வைத்து)

  ஜனார்த்தனனின் கட்டுரையின் ஆரம்பமே புலம்பெயர்ந்த இடங்களில் எழுதிவருகிற எழுத்தாளர்களைப் பற்றித் தொட்டுச் செல்வதால் தொப்பி அளவாகிறது இங்கே. என்னைப் பொறுத்தவரை ‘அழகான உயரமான படித்த உயர் சைவ வேளாள மாப்பிள்ளைக்கு, அதே உயர் சைவ வேளாள குலத்தைச் சேர்ந்த அழகான படித்த பெண் தேவை’ என்கிற பொருள்பட விளம்பரங்கள் வந்து கொண்டிருப்பது சரியென்றால் ‘நெடிதுயர்ந்த, திடகாத்திரமான படித்த பள்ளர் குல ஆண் மகனுக்கு, சகல சௌபாக்கியமும் பொருந்திய நிறைவான பறையர் குலப் பெண்மகள் தேவை’ என்பதுமாதிரியான விளம்பரங்களும் வரவேண்டும் என்கிற போராட்டம் மிகவும் சரியே.

  http://www.kiruthikan.com/4/post/2010/12/4.html

 2. my reply to கிருத்திகன்….
  நட்புடன் கீர்த்தீகனுக்கு….
  தங்களை கட்டுரை வாசித்தேன்….
  உணர்ச்சிபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் எழுதியிருக்கின்றீர்கள்…
  பல் வேறு விடயங்களை தொட்டுச் சென்றுள்ளீர்கள்….
  நான் உடன்பட முடியாத அல்லது எனக்குள் கேள்வி எழுப்புகின்ற தங்களது கருத்துகள் தொடர்பாக மட்டும்
  இங்கு எனது பதிவை முன்வைக்கின்றேன்…

  தங்களது பின்வரும் கூற்றுடன் என்னால உடன்பட முடியவில்லை…

  “‘நெடிதுயர்ந்தஇ திடகாத்திரமான படித்த பள்ளர் குல ஆண் மகனுக்குஇ சகல சௌபாக்கியமும் பொருந்திய நிறைவான பறையர் குலப் பெண்மகள் தேவை’ என்பதுமாதிரியான விளம்பரங்களும் வரவேண்டும் என்கிற போராட்டம் மிகவும் சரியே”

  இவ்வாறான ஒரு கூற்றை விவாதத்திற்காக வைத்துள்ளீர்களா அல்லது இவ்வாறு செய்வது சரி என வாதிக்கின்றீர்களா என புரியவில்லை…

  ஆனால் தங்களது பின்வரும் கூற்று நீங்கள் விவாதத்திற்காக வைக்கவில்லை எனவும் அவ்வாறு நடைமுறையில் செய்வதே சரி எனவும் விவாதிப்பதாக தெரிகின்றது….

  “‘நான் ஒரு வெள்ளாளன்’ என்று எப்படி ஒரு வெள்ளாள சமூகத்தவரால் சொல்ல முடிகிறதோஇ ‘உயர் சைவ வேளாளர்’ என்று அந்தியோட்டி நினைவு மலர்களில் எப்படி அச்சடிக்க முடிகிறதோ அப்படி பள்ளனும் பறையனும் நளவனும் வெளிச்சொல்லவும்இ அச்சடிக்கவும் எங்களை நாங்களே தன்னிலை மேநிலையாக்கம் செய்துகொள்வதில் என்ன பிழை இருக்கமுடியும்?”

  தங்களின் மேற்கூறப்பட்ட முடிவினால் பினவருகின்ற தவறான ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள் என எண்ணத்தோன்றுகின்றது…

  “சேர்கிற இருவரும் தாம் என்ன சாதி என்ற பிரக்ஞையே இல்லாமல் சேரவேண்டும் என்றால் ஒரே வழிஇ மேலே நான் சொன்ன தன்நிலை மேநிலையாக்கம் மட்டுமே தீர்வு.”

  நீங்கள் கூறியதன்படி இருவரும் தமது சாதிகளின் அடையாளங்களை தன்னிலை மேல்நிலையாக்கம் செய்து கொள்ளும் அதேவேளை எப்படி அவர்கள் இருவரும் சாதி என்ற பிரக்ஞை இல்லாமல் சேரலாம் என்பது விளங்கவில்லை….
  ஒரு விடயத்தை தன்னிலை மேலாதிக்கம் செய்யும் பொழுது அது தொடர்பாக பிரக்ஞை ஒருவரிடம் அதிகரிக்குமே தவிர குறையாதல்லவா?

  நீங்கள் கூறுகின்ற வழியல் தமது சாதிகள் தொடர்பாக ஒருவர் தன்னிலை மேலாதிக்கம் செய்வதே சாதிகளை இல்லாது செய்கின்ற வழி என நான் நினைக்கவில்லை…

  இது ஆதிக்க சாதிகள் உருவாக்கிய பொறி வலைக்குள் மீள வீழுகின்ற ஒன்றாகவே நான் பார்க்கின்றேன்….
  அதாவது ஆதிக்க சாதிகள் விருப்பியபடி தங்களது சாதிய அடையாளத்தை தொடர்ந்து காவிச் செல்வதற்கான பாதையாகவே தங்களது பாதை தெரிகின்றது….மேலும் இவ்வாறு செய்வது சாதிய அடையாளத்தை மீள நிறுவுவதாகவும் விலிறுத்துவதாகவும் இருக்கும்….
  தங்களது தன்னிலை மேலாதிக்க முடிவுக்கு பின்வருகின்ற காரணத்தை ஆதராமாக முன்வைக்கின்றீர்கள்…

  “‘நான் ஒரு வெள்ளாளன்’ என்று எப்படி ஒரு வெள்ளாள சமூகத்தவரால் சொல்ல முடிகிறதோஇ ‘உயர் சைவ வேளாளர்’ என்று அந்தியோட்டி நினைவு மலர்களில் எப்படி அச்சடிக்க முடிகிறதோ”
  “என்னைப் பொறுத்தவரை ‘அழகான உயரமான படித்த உயர் சைவ வேளாள மாப்பிள்ளைக்குஇ அதே உயர் சைவ வேளாள குலத்தைச் சேர்ந்த அழகான படித்த பெண் தேவை’ என்கிற பொருள்பட விளம்பரங்கள் வந்து கொண்டிருப்பது சரியென்றால்.”

  ஆதிக்க சாதிகளின் இவ்வாறன செயற்பாட்டிற்கு இக் குறிப்பின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட தங்களது முன்மொழிவுச் செயற்பாடு ஒரு எதிர்விiனாயக (reactive) இருக்கின்றதே ஒழிய பிரக்ஞைபூர்வமான சாதிய கட்டமைப்புக்கு எதிரான அதை இல்லாது செய்வதற்கான ஒரு செயற்பாடாக தெரியவில்லை.

  திருமாவளன் மற்றும் ராமதாஸ் போன்ற பிழைப்பு அரசியல் வாதிகளுக்கு இவ்வாறன சாதிய அடையாளங்கள் அரசியல் தொழில் செய்வதற்கு சாதகமாக இருக்குமேயொழிய அடக்கப்பட்ட சாதிகளை சேர்ந்த மனிதர்களும் விடுதலையைப் பெற்றுத்தருமா என்பது கேள்வியே.
  இதனால்தான் தலித் என அடையாளப்படுத்தும் அரசியலுடன் எனக்கு உடன்பட முடிவதில்லை.

  ஏன்னைப் பொறுத்தவரை இதன் மறுதலையே சரியான பாதையாக இருக்கும்…

  ஓவ்வவொரு சாதியினரும் தம் மீது ஆதிக்க சாதிகளால் கட்டமைக்கப்பட்ட சாதிய அடையாளங்களை கட்டுடைப்பு (deconstruct) செய்யவேண்டும்….அதாவது தாங்கள் கூறுகின்றதன் மறுதலையை செய்யவேண்டும்….தன்னிலை மீதான சாதிய மேலாதிக்கத்தை புற நீக்கம் செய்யவேண்டும்…..
  நமது சாதிய அடையாளங்களிலிருந்து விடுதலை பெற்று சதாரண மனித அடையாளத்தை வெளிப்படுத்துவர்களாக இருக்கவேண்டும்….
  புhடசாலை அனுமதிக்கும் திருமணங்களுக்கும் சாதி என்ன என கேட்பவர்களுக்கு மனித சாதி எனக் கூறுவதே சரியான வழிமுறையாக இருக்கும்…
  சாதிய சட்டதிட்டங்களுடன் அதை நடைமுறைப்படுத்தும் சகல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் ஒத்துழையாது இருக்கவேண்டும்.
  அதாவது ஒத்துழையாமையை இயக்கததை தமது சாதிய அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொருவரும் செய்யவேண்டும். சாதிய சமூக கட்டமைப்புகள் பொருளாதார கல்வி வசதிகளை ஏற்படுத்துவதன் மூலமாக தகர்க்கப்பட வேண்டும். அதாவது சாதிய சமூக கட்டமைப்பை யார் யார் தாங்கியிருக்கின்றார்களோ எவை எவை தாங்கி நிற்கின்றனவோ அவற்று எதிரான போராட்டமாக அமையவேண்டும்.
  உண்மையிலையே பேச்சுத் திருமணம் என்பது இல்லாது போக வேண்டும்.
  இது இல்லாது போகும் வரை நீங்கள் குறிப்பிட்டவாறு ஆதிக்க சாதிகள் தங்கள் சாதிய அடையாளங்களை பயன்படுத்தாதவகையில் சாதிய எதிர்ப்பு கருத்து மேலாதிக்கத்தை சட்டங்களினுடும் மற்றும் பன்முக போராட்டங்களினுடும் முன்னெடுப்பதே சரியானதாகும்.
  அதற்காக காதல் திருமணத்தில் சாதி பார்க்கப்படுவதில்லை என நான் கூறவரவில்லை….
  காதலை முன்பு எதிர்த்த பெற்றோர்கள் இப்பொழுது காதிலித்தாலும் பரவாயில்லை ஆளைப் (சாதி) பார்த்து காதல் செய் என்கின்றனர்…
  ஆகவே சாதிய அடையாளங்களை தன்னிலை மேலாதிக்கம் செய்வதற்குப் பதிலாக ஒவ்வொருவரும் தமது சாதிய மேலாதிக்க அடையாளத்தை புற நீக்கம் செய்வதற்கா வழிகைகளை ஆராயவேண்டும்.
  இது தொடர்பாக ஒரு கட்டுரை ஒன்றை எழுதியுள்ளேன். எனது வலைப்பதிவில் பார்க்கவும்.

  இரண்டாவது எனக்கு முரண்பாடாக இருந்து விடயம் …
  சாதிய அதிகார படி முறை தொடர்பான தங்களது பின்வரும் கூற்று….

  “இந்திய சாதீயக் கட்டுமானங்களில் ஓரளவுக்கேனும் சம அந்தஸ்தில் வைத்து நோக்கப்படுகிற சில சாதிகள் உண்டு. யாழ்ப்பாணக்கட்டமைப்பில் எல்லாமே மேலிருந்து கீழாகவே இருக்கிறது. அவனுக்குக் கீழ இவன்இ இவனுக்குக் கீழ உவன் என்கிற ரீதியில் ஒரு படிக்கட்டுப் போல அமைந்திருக்கிற யாழ்ப்பாண சாதியத்தில்”

  எனது புரிதலில் இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி….
  சுhதிய கட்டமைப்பு என்பது அதிகாரத்துவ படி முறையில் ஒன்றன் கீழ் ஒன்றாகவே கட்டமைக்கப்பட்டிருக்கின்றது….
  சாதிய கட்டமைபில் பிராமணியமே அதிகாரத்திலிருக்கின்ற சாதி….

  இந்தியாவைப் பொருத்தவரை பிராமணியம் என்பது சித்தாந்தளவில் மட்டுமல்ல சமூக கட்டமைபிலும்; அதிகாரத்திலிருக்கின்ற சாதி என்றால் தவறு இல்லை. இதன் கீழ் ஆயிரம் சாதிகள் இருப்பதனால் ஒவ்வொருவரும் நான் தான் உயர்ந்தவர் நீ தாழ்ந்தவர் என போட்டி போடுகின்றனர். இந்தடிப்படையிலையே நீங்கள் கூறுகின்ற இந்திய சாதிய கட்டுமானங்களில் ஒரளவுக்கேனும் சம அந்தஸ்தில் வைத்து நோக்கப்படுகின்ற சாதிகள் சாத்தியமானது. மற்றும் படி சாதிய சமூக கட்டமைப்பு அதிகாரத்துவ படி முறையானதே. இதில் தீண்டத்தாக விளிம்பு நிலை மனித சாதியே மிகவும் கீழ் நிலையில் இருந்து அடக்குமுறையை எதிர்கொள்கின்றது.

  யாழ்ப்பாண சமூகத்தைப் பொருத்தவரை பிராமணிய சிந்தாத்த ஆதிக்கம் இருந்த பொழுதும் வெள்ளாள சாதியே சமூக கட்டமைபில் மேல் நிலையிலும் அதிகாரத்திலும் இருக்கின்ற சாதி. புpராமணிய சாதி கௌவுரவமாகவும் மேல் நிலை சாதியாக மதிக்கப்படுவது மட்டுமே யாழ்ப்பாண சமூகத்தில் இருக்கின்றது. இந்தியாவைப்போல் இவர்களுக்கு சமூக அரசியல் அதிகாரம் இலங்கையில் இல்லை என்றால் தவறில்லை.
  இங்கும் சாதிய கட்டமைபில் ஒவ்வொரு படி நிலையிலுமிருக்கின்ற அடக்குகின்ற அடக்கப்படுகின்ற ஒவ்வொரு சாதிய சமூகங்களுக்குள்ளும் குழு அல்லது பிரிவினைகள் உண்டு. உதாரணமாக ஒரே சாதிய சமூகத்தை சேர்ந்தவர்கள் வீதிக்கு அந்தப்புரத்தல் இருக்கின்றவர்களின் வீடுகளின் கைகழுவ மாட்டார்கள் என வீண் பெருமையும் வீராப்பும் பேசுவார்கள்.

  மேலும் ஒரு குறிப்பு
  சுhதிய விடுதலை தொடர்பாக எழுதுகின்ற பல கட்டுரைகளில் அல்லது அது தொடர்பாக பேசுகின்றவர்கள் சாதாரணமாக பயன்படுத்துகின்ற ஒரு சொல் “தாழ்த்தப்பட்டவர்கள்” என்பது. இந்த சொல்லானது ஆதிக்க சாதிகளால் மேல்நிலையாக்கம் செய்யப்பட்ட ஒன்று என்றால் மிகையல்ல. இச் சொல்லுக்குப் பதிலாக சாதி அடிப்படையில் அடக்கப்பட்ட மனிதர்கள் என பயன்படுத்துவதே பொருத்தவமானது என்பது எனது நிலைப்பாடு.
  இதுவரையான சாதிய அடக்குமுறை தொடர்பான எனது கருத்துப் பதிவு சாதிய விடுதலையின் அடிப்படையில் அமைந்தது.

  இதன் இன்னுமொரு பார்வை வர்க்கப் பார்வை.
  இந்தப் பார்வையின் அடிப்படையில் பொதுவாக மேற்குறிப்பிட்டாறு தான் சுரண்டல்களும் அடக்குமுறைகளும் நிகழ்கின்றன. ஆனால் அதைப் பொதுமைப் படுத்த முடியாது என்றே நினைக்கின்றேன். ஏனனில் சாதியடிப்படையில் உயர் நிலையிலிருக்கின்ற ஒருவர் வர்க்க அடிப்படையில் கீழ் நிலையில் இருப்பதற்கான சாத்தியங்களும் உள்ளன. அவ்வாறு இருக்கின்றமை உண்மையானனதுமே. ஊதாரணமாக இந்தியாவில் வர்க்க அடிப்படையில் மிகவும் கீழ் நிலையில் உள்ள பிராமணியர்கள் அதிகம் இருக்கின்றனர் என அறிந்துள்ளேன். இவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டபோதும் வாழ்நிலை கீழ் நிலையிலையே உள்ளது.

  இதானால் நமது பார்வையில் பன்முக தன்மை அவசியமாகின்றது.
  ஏனனில் நாம் ஒரு சமூக கூட்டத்தை ஒரு அடிப்படையில் அடையாளப்படுத்தி போராடுகின்ற போது அச் சமூகத்திற்குள் வேறு ஒரு அடிப்படையில் இன்னுமொரு கூட்டம் அடக்கப்படுவதை நாம் கவனிக்க தவறவிடக் கூடாது.

  உதாரணமாக பெண்ணிய பார்வையில் …
  தங்களது கட்டுரையில் “பறையனை” இ “அவனுக்குக் கீழ இவன்”இ “வெள்ளாளனும்” என ஆண்பால் நிலைபட்ட சொற்களை கவனித்தேன்.

  இவ்வாறான சொற்கள் கூட அச் சாதிய சமூகத்திற்குள் இருக்கின்ற பெண்களின் அடையாளங்களை அவர்களின் இருப்பை மறுதலிக்கின்றது எனவும் கொள்ளலாம். ஆகவே இவ்வாறன இடங்களில் பொதுவான சொற்களைப் பயன்படுத்தும் பொழுது அனைத்துப் அடையாங்களை கொண்ட மனிதர்கைளையும் நாம் மறுக்காது மறைக்காது முன்நிறுத்தலாம்.

  மேலும்…..
  யாழ் சமூகத்தை எடுத்துக் கொண்டால் வெள்ளா சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் சாதிய அதிகாரங்களையும் சலுகைகளையும் தனது வாழ்வில் அனுபவிப்பார். ஆனால் ஒரு பெண்ணாக தனது வெள்ளாள சமூகத்திற்குள்ளேயும் பொது வெளியிலும் அடக்குமுறையை எதிர்கொள்வார்.
  சுpல சந்தர்ப்பங்களில் அடக்கப்பட்ட சாதி ஆண் ஒருவரால் கூட பெண் என்கின்ற அடிப்படையில் பாலியல் வன்முறையை எதிர்கொள்ளல்hம்.
  அதாவது ஒரு புறம் சாதியால் அடக்கப்பட்ட ஆண், மறு புறம் ஒரு ஆணாக ஆணாதிக்க சிந்தனையையும் அதன் அதிகாரத்தையும் ஆகக் குறைந்நது பொது வெளியிலாவது கொண்டிருப்பார்.
  இதேபோல் பொது வெளியில் ஒரு பெண்ணாக அடக்குமுறையை எதிர்கொள்கின்ற ஆதிக்க சாதியை சேர்ந்த ஒரு பெண் தனது சாதிய சமூகத்திற்குள் சாதியால் அடக்கப்பட்ட ஒரு ஆணை அடக்குவதற்கும் சுரண்டுவதற்குமான சாதியங்களும் சந்தர்ப்பங்களும் உள்ளன.
  இந்தடிப்படையில் சாதி வர்க்க மற்றும் பால் பாலியல் தன்மை பாலியலுறவு என்பவற்றின் அடிப்படையில் பொதுவான சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படதா அடையாளத்தைக் கொண்ட ஒரு பெண்ணே அனைத்துவிதமாக ஒடுக்குமுறை அடக்குமுறை மற்றும் சுரண்டல்களுக்கும் முகம் கொடுப்பார் என்பதை நாம் விளக்கிக் கொள்வதற்கு பன்முகப்பார்வை அவசியமானது.
  நட்புடன்
  மீராபாரதி

 3. உரையாடல்- 8 (மீராபாரதி, சுதா, அற்புதன்)
  தேசம்நெற் வலைத்தளத்தில் மீராபாரதி எழுதிய பதிவிற்கு சுதா அளித்த பின்னூட்டமும் அதனூடாக மீராபாரதியின் பதிவும் அதனூடான உரையாடலும்.

  http://unidentifiedspace.blogspot.com/2008/04/8.html


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: