Posted by: மீராபாரதி | August 20, 2010

வீயூகம் சஞ்சிகை: எனது குறிப்புகளும் விமர்சனங்களும்-1

நட்புடன் வீயூகம் நண்பர்களுக்கு….
தங்களுடைய வியூகம் அல்லது “மே 18 இயக்கம்” தொடர்பான விமர்சன உரையாடல் ஒன்றை தாங்கள் ஒழுங்குபடுத்தி விமர்சனங்களை சந்திக்கவும் கலந்துரையாடவும் முன்வருவதையிட்டு மகிழ்ச்சியே. இக் களத்திற்கு என்னால் நேரடியாக வரமுடியாமையினால் இ;க் குறிப்பை எழுதுகின்றேன். இது எனக்குள் எழுந்த கேள்விகள். இக் கேள்விகள் நீங்கள் ஆரம்பித்திருக்கும் பயணத்திற்கு முட்டுக்கட்டைகளல்ல மாறாக முக்கியமானவை என நான் கருதுவதால் முன்வைக்கின்றேன். இதற்குப் பதிலளிப்பதா அல்லது தங்களது உரையாடல் களத்தில் கலந்துரையாடுவதா என்பது தங்களது தெரிவு.
முதலாவது நமது அறிவும் அது தொடர்பான பிரக்ஞையும் நம்மிடம் இருக்கின்றதா என்ற கேள்வி?
இன்று நாம் அறிவு எனக் கொள்வது அல்லது எப்படி அறிவை அறிவது என்பது பிளாட்டோ காலத்தில் உருவாகி அரிஸ்டோட்டளால் வளர்ந்த்;தெடுக்கப்பட்ட அறிவை அல்லது அறிவைத் தேடும் அறிவை உலகின் முதலாவது ஏகாதிபத்தியவாதியாக கருதப்படும் அலெக்சான்டரால் பரந்தளவில் பல நாடுகளின் மீது திணிக்கப்பட்டதன் தொடர்ச்சியே இன்று நாம் அறிவு என்பது அல்லது அறிவதை எவ்வாறு அறிவது என அணுகும் முறை. 2000ம் ஆண்டுகள் கடந்தும் அதிலிருந்து நாம் முறித்துக் கொள்ளவில்லை. மாறாக இத் திணிக்கப்பட்ட விதையானது மேலும் ஐரோப்பிய வெள்ளையின ஆணாதிக்க மற்றும் வர்க்க கருத்தாதிக்கம் தென்னாசியாவின் ஆணாதிக்க சாதிய வர்க்க கருத்தாதிக்கம் என்பவற்றுடன் இணைந்து நம்மில் ஆழாமான அறிவாக புதைந்து விருட்சமாக நம்முள் வளர்ந்திருக்கின்றது.
இதுபோலவே நாம் கூறுகின்ற விஞ்ஞான முறையிலான அறியும் அறிவும் அதன் அணுகுமுறையும் பிரான்ஸின் பேகனால் 500 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அறிவும் அக்காலத்திலிருந்து ஐரோப்பியரால் மேற்கொள்ளப்பட்ட ;காலனியாதிக்கம் மூலம் பரப்பப்பட்டு நமக்குள் அறிவாக திணிக்கப்பட்டது. இந்த அறிவும் அதை அறியும் முறையும் பொருள் சார்ந்தது மட்டுமல்ல தர்க்க ரீதியான மட்டுப்படுத்தப்பட்ட அறிவும் ஆகும். தர்க்கரீதியான முறைமையில் இருக்க்கின்ற முக்கியமான பிரச்சனை இரு முனைதன்மைகள் மட்டும் கொண்டது. அனைத்தையும் வெள்ளை கருப்பாக பார்ப்பது. பன்முகத்தன்மைக்கான இடம் அதில் இல்லை.
இதன் தொடர்ச்சியாகவே கார்ல் மார்க்ஸின் வருகையைப் பார்க்கின்றேன். எனது மேலோட்டமான மார்க்ஸிய அறிதலின் அடிப்படையிலும் அதனை நான் புரிந்துகொண்டதன் அடிப்படையலும் அது சமூக மாற்றத்திற்கான மிக முக்கியமான பார்வையை நமக்கு தந்தது என்பது நாம் அறிந்ததே. பொருளாதாரரீதியாக சுரண்டப்பட்டு அடிமைப்படுத்தப்படும் மனிதர்களின் விடுதலைக்காக விதைக்கப்பட்ட புதிய விதை அது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இந்த மார்க்ஸின் அறிவும் அறிதல் முறையும் ஐரோப்பிய வெள்ளையின் ஆணாதிக்க மையவாத கருத்தியலின் தொடர்ச்சியே என்பதில் சந்தேகமில்லை. வழமைபோல நாமும் அதை இறுகப்பற்றிக்கொண்டு கேள்வியின்றி தொடர்ந்தோம் தொடர்கின்றோம். இந்த பொருள் முதல் வாத அறிவு மனிதர்களைப் பொருளாக பார்க்கவும் இயற்கையை மனதரின் தேவைகளை பூர்த்திசெய்யும் ஒரு பண்டமாகவும் பார்க்க வைத்தது. அதன் விளைவே இன்று நாம எதிர்நோக்கும் மனித படுகொiலைகளும் சுழல் இயற்கை என்பவற்றின் அழிவும்.
இந்த அறிவின் அடிப்படையில் பார்த்தால் கூட விஞ்ஞான முறையிலான அறிவு என்பது முதலில் ஒரு முன்மொழிவை முன்வைத்து அதைப் பரிசோதித்துப்பார்த்து அதன் முடிவுக்கு அமையவே தமது புதிய அறிவு தொடர்பான கருத்தை முடிவை முன்வைப்பர். ஆனால் தாங்கள் அவ்வாறான ஒரு முன்மொழிவை முன்வைக்காமல் உடனடியாகவே “முன்னேறிய கோட்பாட்டின் அடிப்படையில்” என்றும் “முன்னேறிய பிரிவினர்” என்றும் தங்களை வகைப்படுத்தியுள்ளமை மேற்குறிப்பிட்ட விஞ்ஞான முறையிலான அறிவுக்கு முரண்பட்டதாகவே இருக்கின்றது. இந்த “முன்னேறிய கோட்பாடு” மற்றும் “முன்னேறிய பிரிவினர்” என்பதற்கான தங்களின் அளவுகோல் என்ன? எதனுடன் ஓப்பிட்டு இவ்வாறான ஒரு முடிவுக்கு வந்தீர்கள்? எவ்வாறான பரிசோதனையை எங்கு மேற்கொண்டிர்கள்?
இரஸ்சிய அல்லது சீன புரட்சிகளின் போது அவர்கள் தமது சமூகம் அதன் கட்டமைப்பு இப்படி பல அம்சங்கள் தொடர்பான ஆய்வுகளும் அது தொடர்பான அறிவும் விளக்கமும் அவர்களிடம் இருந்ததாக அறிகின்றேன். அப்படி இருந்து உருவான புரட்சியின் இன்றைய நிலைமை என்ன? நமது நிலையோ அவர்கள் புரட்சியை ஆரம்பித்த போது இருந்த நிலையில்லாதது மட்டுமல்ல அதற்காக தயார்படுத்தலான நமது சமூகம் பற்றிய ஆழமான ஆய்வுகள் எதுவும் நம்மிடம் இல்லை என்பது தூர்ப்பாக்கியமானது. மேலும் அப்புரட்சிகளின் இன்றைய நிலைமைக்கு என்ன காரணம் என நாம் கண்டுபிடித்தோமா? அதுவும் இல்லை. நமது செயற்பாடுகள் அடக்கப்பட்ட மனிதர்களின் எதிரியாக இருக்கும் ஆதிக்க சக்திகளின் செயற்பாடுகளுக்கான ஒரு எதிர்வினையாகவே எப்பொழுதும் ஆரம்பக்கின்றது. மாறாக சமூக மாற்றத்திற்கான சிந்தனை அதற்காகன செயற்பாடு நமது சுயசிந்தனையிலிருந்து ஆரம்பிக்காமல் இருப்பது நமது அறிவு மற்றும் சமூகம் தொடர்பான நமது மட்டுப்படுத்தப்பட்ட தன்மையையே காண்பிக்கின்றது.
இங்குதான்; புதிய அறிவுத்தேடலுக்கான தேவை இருக்கின்றது என்பதை நாம் புர்pய வேண்டியவர்களாக இருக்கின்றோம். புதிய அறிவு என்பது பன்முகப்பட்ட தன்மை கொண்டதாக இருக்கவேண்டும். அவ்வாறான அறிவுக்கான அடித்தளம் பிளாட்டோவிற்கு முந்திய ஐரோப்பிய சமூகத்திலும் வட மற்றும் தென் அமெரிக்க பூர்வீக குடிகள் மத்தியிலும் மற்றும் இந்திய சீன அரபிய சமூகங்களில் இருந்திருக்கின்றன. ஆனால் இவை காலப்போக்கில் அப் பிரதேசங்களின் ஆதிக்க சக்திகளான ஆண்களின்; ஆட்சிகளினாலும் சமயங்களாலும் அடக்கப்பட்டு அழிக்கப்பட்டு
வுந்திருக்கின்றன என்பது நாம் புர்pந்துகொள்வேண்டி ஒன்று. இந்த அறிவை தேடவேண்டியது இன்றை முக்கியமான நமது பணிகளின் ஒன்று.
இதனடிப்படையில் சமூகமாற்றத்திற்காக செயற்பாடும் நாம் இருவழிகளில் செயற்படவேண்டி இருக்கின்றது என நினைக்கின்றேன். ஒன்று சமூக அரசியல் தளத்தல் மற்றது அதைக் கொண்டு நடாத்தும் அல்லது ஆதிக்கம் செய்யும் அல்லது மாற்ற விரும்பும் மனிதர்களின் சுய தளத்தில். அதாவது சமூக மாற்றத்திற்கான செயற்பாடு என்பது ஒரு மனிதரின் புற மாற்றத்திற்கான செயற்பாடும் அக மாற்றத்திற்கான செயற்பாடும் சமாந்தரமாக நடைபெறவேண்டிய ஒன்றாகின்றது. அப்பொழுதுதான் ஒரு தனிமனிதர் எந்தளவு சமூகத்தில் ஆதிக்கம் செய்கின்றார் என்றும் ஒரு சமூகம் தனிமனிதரில் எந்தளவு ஆதிக்கம் செய்கின்றது என்பதையும் நாம் புரிந்துகொள்ளலாம்.
ஆனால் இதுவரையான சமூக மாற்றத்திற்கான பயணத்தில் ஒரு தனி மனிதரின் சுய அல்லது அக மாற்றம் என்பது புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கின்றது. இந்த அகம் என்பது ஆணாதிக்க முதலாலித்துவ சாதிய ஆதிக்க சமூகங்காளால் ஆதிக்கம் செய்யப்பட்டும் சுரண்டப்பட்டும் வந்திருக்கின்றன. இது தொடர்பான பிரக்ஞை நம்மிடம் இல்லாமை நம்மையும் நம் மீதான ஆதிக்கங்களையும் புரியமுடியாமைக்கு வழிவகுக்கின்றது. அதன் வெளிப்பாடுகள் தான் சமூகமாற்றத்திற்காக போராட விரும்பும் நாம் நமது கணவன் மனைவி குழந்தைகள் குடும்பம் மற்றும் பொருட்கள் மொழி சமயம் …..என்பவற்றுடன் கண்முடித்தனமாக பற்றுதல் வைத்திருக்கின்றோம். மேலும் ஒரு ஆணாக ஆணாதிக்கவாதியக ஆதிக்க சாதியின் பிரதிநிதியாக முதலாளித்துவ சமூகத்தின் நூகர்வோராக நம்மையறியாது பிரக்ஞையின்றி பல சந்தர்ப்பங்களில் செயற்படுகின்றோம். இதிலிருந்து விடுபடுதல் என்பது புறம் மற்றிய அறிவு மட்டுமல்ல சுயம் பற்றிய புரிதலும் தேவையானது என்பதை நமக்கு கூறுகின்றது.
எனது புரிதலின் அடிப்படையில் சமூக மாற்றத்திற்கான ;அரசியல் செயற்பாட்டில் ஈடுபட விரும்பியதன் காரணம் அனைத்து மனிதர்களுக்கும் சுதந்திரமான சகல உரிமைகளும் உள்ள நல் வாழ்வு ஒன்றை; உருவாக்கவே. மேலும் மனித வளர்ச்சிக்கு அடித்தளமாக சமூக மாற்றம் இருக்கும் என்ற நம்பிக்கையிலுமே. ஆனால் கடந்த கால அனுபவங்கள் இந்த மனிதருக்கு எந்த முக்கியத்துவத்தையும் கொடுக்காமல் மொழிக்காக மதத்திற்காக கருத்துக்காக இப்படி பல புறக் காரணங்களுக்காக மனிதர்களை கொன்றுகுவித்ததையே. மேலும் நாம் வாழும் நிலத்தின் மீது இருந்த பற்றுதல் அளவிற்கு அந்த நிலம் அதன் இயற்கையை தன்மை என்பவற்றின் மீதான எந்த அக்கறையோ அதைப் பாதுகாக்கவேண்டும் என்ற பிரக்ஞையோ இல்லாமலே செயற்பட்டிருக்கின்றோம். இந்த நிலைமை இனிவரும் காலங்களில் மாறவேண்டும் என நினைக்கின்றேன்.
மேலும் பெண்கள் தொடர்பான ஒரு பயன்படுத்தல் நிலை அல்லது டொக்கினாக பயன்படுத்தும் நிலையே அனைத்து செயற்பாட்டு மட்டங்களிலும் காணப்படுகின்றது. குறிப்பாக நாடுகடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான குழுவில் இளம் வயதினருக்கும் பெண்களுக்கும் ஆக இருபது சதவீத ஓதுக்கிடே செய்துள்ளனர். இது தொடர்பான எந்தவிதமான விமர்சனத்தையும் யாரும் முன்வைத்ததாக நான் அறியவில்லலை. இதற்கு வீயூகமும் விதிவிலக்கல்ல. அவர்களது முதல் சஞ்சிகையின் முகப்பில் நான்கு தலைப்புகள் அதில் ;ஒன்று பெண்ணியம் ஆணால் சஞ்சிகையின் உள்ளே மூன்று தலைப்புகளுக்க்hன கட்டுரைகள் மட்டுமே இருக்கின்றன. பேண்ணீயம் தொடர்பான கட்டுரையை என்னால் கட்டுபிடிக்க முடியவில்லை மாறாக ஒரு கட்டுரையின் சமூக பிரச்சனைகளின் பல அம்சங்களான சாதியம் சமயம் என்பவற்றுடன் பெண்ணீயமும் ஒன்றாகவே எழுதப்பட்டுள்ளது. அப்படியிருக்க பெண்ணீயத்தை முகப்பில் போட்டதற்கு காரணம் என்ன? டொக்கினிசம் இல்லையா இது. என்னைப் பொறுத்தவரை ஒரு அமைப்பில் பெண்களிற்கான பங்களிப்புக்கான உறுப்பினரின் வீதம் என்பது ஆண்களுக்கு சரிநிகராக இருக்கவேண்டும். அதாவது ஐம்பது வீதமாக இருக்கவேண்டும். இதில் எந்தவிதமான சமரசங்களுக்கும் இடம் இருக்கக் கூடாது. மேலும் பெண்ணியம் தொடர்பான கருதியிலிலும்; நாம் மேலும் வளரவேண்டும். இதுவே இனிவரும் காலங்களில் ஆணாதிக்க சிந்தனையிலிருந்:து விடுபட்டு மனித சிந்தனை அல்லது பெண்ணிய சிந்தனையின் அடிப்டையில் சமூக மாற்றத்திற்கான செயற்பாட்டை முன்னெடுக்கவும் ஆணாதிக்க பாதையான வன்முறை பாதைக்கு மாற்றாக ஆரோக்கியமான பாதையை கண்டறியவும் வழிவகுக்கும். இந்த ;பெண்ணீய ;சிந்தiனியலும் பல்வேறு சிந்தனைகள் இருக்கின்றன என்பதையும் மறந்து விடாது முதலாளித்துவ மற்றும் ஆணாதிக்க சிந்தனைக்கு உட்படாத பெண்ணிய சிந்தனைகளை உள்வாங்கி செயற்படுவதில் நாம் மிகவும் ஆழமான பிரக்ஞை உடையவர்களாக இருக்கவேண்டும்.
மேலே மே 18 இயக்க நண்பர்கள் எனக் குறிக்காமல் வீயூகம் நண்பர்கள் எனக் குறிப்பிட்டது காரணத்துடனையே. ஏன்னைப் பொறுத்தவரை தங்களுடன் நான் இருந்திருந்தால் மே 18 இயக்கம் என்ற பெயரை வைப்பதற்கு எதிராக வாதாடியிருப்பேன். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவுமில்லை இப்பொழுது காலமும் பிந்திவிட்டது. ஆகவே அது தொடர்பான எனது கருத்தை முன்வைக்கலாம் என நினைக்கின்றேன். மே 18 முடிவடைந்தது தமிழ் பேசும் மனிதர்களின் விடுதலைக்கான போராட்டமல்;ல. மாறாக ஒரு போராட்டத்தின் தவறான வழியும் அதைத் தலைமை தாங்கிய தவறான ஆணாதிக்க வன்முறையை மட்டும் நம்பிய தலைமையுமே அன்று முடிவுக்கு வந்தன. துமிழ் பேசும் மனிதர்களின் மீதான சிறிலங்கா அரசின் அடக்குமுறையோ அதற்கு எதிரான போராட்டமோ அல்லது அவ்வாறு போராடுவதற்கு இருக்குமு; நியாய தன்மையோ முடிவுக்கு வரவில்லை. நீங்கள் “மே 18 இயக்கம்” எனக் குறிப்பிட்டு ஆரம்பித்திருப்பதன் மூலம் அன்று முடிவுற்ற தவறான பாதையையும் அதன் தலைமையையும் நீங்களும் தொடர்வதாகவே அர்த்தப்படுகின்றது. போராட்டம் மே 18 உடன் முடிவடைந்துவிடவில்லை மாறாக போராட்டம் தொடர்கின்றது என்று கருதியிருந்தால் அல்லது புதிய பாதையில் போராட்டத்தை நாம் தொடர்ந்தும் முன்னேடுப்போம் என நீங்கள் கருதியிருந்தால் புதிய ஒரு பெயரை தெரிவு செய்திருப்பின்றீர்கள். இது ஒரு குறியிட்டு பிரச்சனையே என்றாலும் நம் ஆழ் மனதிலிருந்து வெளிப்படும் பழையதை தொடரும் கதையாகவே கருதப்படும். ஆகவே புதிய சிந்தனையுடன் புதிய பெயர் ஒன்றின் தேவையும் இருக்கின்றது என்பதை புரிவீர்கள் என நம்புகின்றேன்.
நன்றி
தங்கள் பதில் கண்டு தொடர்கின்றேன்…
தங்கள் விமர்சன களம் நன்றாக நடைபெறும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகின்றேன்.
மீராபாரதி
(ஆண்மையும் பெண்மையும்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: