Posted by: மீராபாரதி | August 10, 2010

காமம், பிரம்மச்சாரியம், மனிதர்கள், சமூகம் மற்றும் காதல் – ஒரு பார்வை- பகுதி 4

காமம், பிரம்மச்சாரியம், மனிதர்கள், சமூகம் மற்றும் காதல் – ஒரு பார்வை- பகுதி 4

காமம், பிரம்மச்சாரியம், சமூகம், மனிதர்கள், குழந்தைகள், பெண்கள், பால், பாலியல் தன்மை, பாலியலுறவுகள் வண்புணர்வுகள் என்பன தொடர்பாக கடந்து மூன்று பகுதிகளிலும் ஒரளவு விரிவாக பார்த்தோம். இக் கட்டுரையினடிப்படையில் ஆணாதிக்க மற்றும் சமய ஆதிக்கம் நிலவும் சமூகங்களில் எவ்வாறு காமம் மற்றும் அது தொடர்பான அறிவுகள் அடக்கப்பட்டு மறுபுறம் பிரமச்சாரியம் சமூகத்தில் அந்தஸ்தில் உயர் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் அதேவேளை பெண்களும் குழந்தைகளும் எவ்வாறு பாலியலடிப்டையில் சுரண்டப்பட்டு அடக்கப்படுகின்றனர் என்பதை அறிந்தோம். மேலும் மனிதர்களின் பால் (sex), பால்தன்மை (gender) மற்றும் பாலியல் தன்மை (sexuality) அடையாளங்கள் பாலியலுறவுகள் (sexual behaviors) என்பன எவ்வாறு ஆணாதிக்க ஒருதார இருபாலுறவு சமூகத்தால் இரு எதிர் எதிர் முனைகளாக மட்டும் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதையும் இந்தக் கட்டமைவுகளுக்கு அப்பாற்பட்டவர்களை உடல் குறைபாடுடையவர்களாக அல்லது ஊளவியல்ரீதியாக பாதிக்கப்பட்ட மனப்பிறள்வு கொண்டவர்களாக சித்தரிக்கப்டுவதையும் பார்த்தோம். இறுதியாக மனிதர்களிடம் உருவாக்கப்பட்ட இவ்வாறான உளவியல் சிக்கல்களையும் மற்றும் குழந்தைகள் இயந்திரமயமாக நெறிப்படுத்தல், பெண்கள் மீதான பாலியலுறவுகளில் நடைபெறும் வன்புணர்வுகளையும் பொதுவாக நடைபெறும் வன்புணர்வுகளையும் அறிந்தோம். இவற்றிலிருந்து நம்மை எவ்வாறு விடுவிப்பது என்பது தொடர்பாகவும் மற்றும் மாற்றிடாக எவ்வாறான ஆரோக்கியமான வழிமுறைகளைப் பின்பற்றுவது என்பது தொடர்பாகவும் பார்த்தோம். இந்த அறிவின் அடிப்படையில் மனிதர்களின் பாலியலுறவுகள் வன்புணர்வுகள் மற்றும் தூஸ்பிரயோகங்கள் போன்ற பிரச்சனைகள் தொடர்பாகவும் மற்றும் இவ்வாறன செய்திகள் தொடர்பாக ஊடகங்கள் எந்தளவு சமூகப் பொறுப்புணர்வுடன் வெளியீடுகின்;றன என்பதையும் நான்காவதும் இறுதிப்பகுதியுமான இந்தப் பகுதியில் பார்ப்போம்.

பொதுமனிதர்களது குறிப்பாக பிரபல்யமானவர்களது பாலியலுறவுகள் வன்வுணர்வுகள் துஸ்பிரயோகங்கள் தொடர்பான செய்திகளை பொது மனிதர்கள் மற்றும் ஊடகங்கள் எப்படிப் பார்க்கின்றன என்றும் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன எனவும் விமர்சனபூர்வமாக பார்ப்பது முக்கியமானது. இவ்வாறன செய்திகளை வாசிக்கும் நம் ஒவ்வொருவருக்கும் இவை தொடர்பான ;ஒரு அடிப்படைப் பார்வை இருக்கும். இந்தப் பார்வையானது நம்மை ஆதிக்கம் செலுத்தும் அல்லது நாம் தேர்த்தெடுத்த கருத்தமைவின் அல்லது சமூக சமய நம்பிக்கையின் அடிப்படையிலமைந்ததாக இருக்கும். இதனால் நம் ஒவ்வொருவருக்கும் வேறுவேரான கருத்துக்கள் இச் செய்திகள் தொடர்பாக இருக்கும். இதேவேளை நமது கருத்துக்களை ஆதிக்கம் செலுத்தும் ஒரு சமூக கருவியாக ஊடகங்களும் செயற்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இது இவ்வாறான விடயங்கள் தொடர்பாக பொதுவான ஒரு கருத்து மேலாதிக்கத்தை பொது மனிதர்களிடம் உருவாக்குகின்றது. ஆகவே பொதுசன ஊடகங்களுக்கு இவ்வாறன செய்திகளை வெளியீடுவதில் சமூக பொறுப்புணர்வு உள்ளது. ஆனால் குறிப்பிட்ட செய்தி ஒன்றை பிரசுரிக்கும் ஒவ்வொரு ஊடகமும் தமக்கான அரசியல் மற்றும் சமூக கருத்துக்கள் நோக்கங்களை அடிப்படையிலையே வெளியீடுகின்றன. இது அவர்களது கருத்துச் சுதந்திரமாக இருந்தபோதும், நாம் அச் செய்திகளை அது வெளிப்படுத்தும் கருத்துக்களை அப்படியே உட்கொள்ளாது விமர்சனப+ர்வமாக பார்க்கவேண்டியது நமது பொறுப்பாகின்றது. குறிப்பாக சாமியார்களின் அல்லது மத குருமாரின் பாலியல் செய்திகளை வெளியீடும் பிரதான ஊடகங்கள் தமது ஊடகங்களை பிரபல்யப்படுத்துவதிலும் வருமானத்தை பெருக்குவதையுமே பிரதானமான நோக்கமாக கொண்டிருப்பார்கள். இது தொடர்பான ஒரு ஆரோக்கியமான உரையாடலை இவை நடாத்துவதில்லை. அதேநேரம் மதங்களின் மீது ஆழமான நம்பிக்கைவைத்திருக்கும் பொது மனிதர்களுக்கு இந்த செய்திகள் முக்கியமானவை. ஆகவே ஊடகங்கள் இந்த மனிதர்களின் மத நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறும் அதேவேளை இந்த நம்பிக்கைகளை மேலும் வலுவுட்டி நிலைநாட்டும் வகையிலையே வெளியீட்டு இதனுடாக தமது பல நோக்கங்களை நிறைவு செய்து கொள்வார்கள். பொது மனிதர்களும் தமது மத நம்பிக்கைகளை தொடர்ந்தும் பாதுகாப்பதற்காக இந்த சாமியர்களுக்கு எதிராக போர்க் கொடி தூக்குவார்கள். இதற்கு மறுபுறம் நாஸ்திகவாதிகள் சாமியர்களின் ஏமாற்று செயற்பாடுகளினால் மகிழ்வடைந்து இச் செய்திகளை கேளியும் கிண்டலுமாக வெளியிடுவார்கள். இவர்களது பிரதான நோக்கம் சமயங்களையும் அதைத் தலைமைதாங்கி நடாத்தும் இந்த சாமியார்களையும் பொது மனிதர்களிடம் இருந்து அந்தியப்படுத்துவதும் அவர்களது இரட்டைவேடங்களை வெளிக்கொண்டுவந்து பொது மனிதர்களது மூட நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்குவதும் என பொதுவாக கூறலாம். ஆனால் இவர்களும் தங்களது கேலி கிண்டல்களுக்கு அப்பால் ஒரு ஆராக்கியமான விவாதத்தை முன்வைக்காது சமயங்களுக்கும் சாமியர்களுக்கும் எதிரான தமது கொள்கைகள் கோட்பாடுகள் சரியானவை என நிறுபிப்பதில் மட்டுமே கவனமாக இருக்கின்றார்கள். மூன்றாவது தரப்பினரான சமூக அக்கறை கொண்ட மனிதர்கள் இவ்வாறன விடயங்களை விவாதப்பொருளாக்கி ஆரோக்கியமான உரையாடலை நாடாத்த முனைவார்கள். ஏனனில் இவ்வாறன உரையாடல்கள் மூலமே நாம் நமது கடந்தகால நம்பிக்கைகளை கேள்வி கேட்கவும் நமது அறியாமையை நீக்கவும் முடியும். இதுவே சமூக மாற்றத்திற்கான ஆராக்கியமான பாதையாக அமையும். ஆனால் அவ்வாறனா நோக்கத்துடன் பொறுப்புணர்வுடன் இவ்வாறன செய்திகளை சமூக அக்கறை உள்ள ஊடகங்கள் பிரசுரிக்கின்றார்களா ஒளிபரப்புகின்றார்களா அல்லது வாசகர்களும் பார்வையாளர்களும் விமர்சனபூர்வமாக பார்கின்றோமா விவாதிக்கின்றோமா என்பது கேள்விக்குறியதே.

நித்தியானத்தம் என்ற சாமியார் வேடம் அணிந்த மனிதர் மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் அது தொடர்பான செய்திகள் தொடர்பான ஒரு பார்வையை இங்கு முன்வைக்கின்றேன். முதலாவது அவர் தன் மீது நம்பிக்கைவைத்துள்ள மனிதர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்றடிப்படையிலும் இம் மனிதர்களது மத நம்பிக்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் மாறாக நடந்து அவற்றை அவமதித்துள்ளார் என்றடிப்படையிலும் அவர் மீது ஊடகங்களும் பொது மனிதர்களும் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள். இரண்டாவது தனது அதிகாரத்தை தூஸ்பிரயோகம் செய்து பல பெண்களை பாலியல் அடிப்படையில் பயன்படுத்தி ;துஸ்பிரயோகம் செய்தும் சுரண்டியுமுள்ளார் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள். மூன்றாவது மனிதர்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்துகின்றார் என வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள். இன்னுமொருபுறம் இவர் எந்த தவறும் செய்யவில்லை பாலியலுறவில் ஈடுபடுவது ஒருவரது தனிப்பட்;ட சுதந்திரம். ஆகவே இவருக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கத்தேவையில்லை. பாலியலுறவில் ஒருவர் ஈடுபட்டதற்காக தண்டிப்பது தனிமனித உரிமை மீறல் என்றும் குரல்கள் ஒலிக்கின்றன. இப்படி பல கோணங்களில் இப் பிரச்சனையை ஆராயலாம். இதில் யார் சொல்வது சரியானது?

முதலாவது பொதுவான குற்றச்சாட்டுகளின்; அடிப்படையில் நித்தியானத்தம் மீது வைப்படக் கூடிய குற்றச்சாட்டு பிரம்மச்சாரியத்தை போதித்தது மட்டுமல்ல தான் பிரம்மச்சாரி என மற்றவர்களை நம்பவைத்தது மோசம் செய்தது எனக் கூறலாம். இவ்வாறு இவர் போதனை செய்திருக்காவிட்டால் ஒரு பெண்ணுடன் உறவாடுவதோ அல்லது பாலியலுறவில் ஈடுபடுவதோ தவறானதாக கருதப்பட்டிருக்காது. ஆனால் அவர் தனது மத போதனைகளுக்கும் தனிப்பட்ட வாழ்விற்கும் முரண்பாடாக இருந்துள்ளார். ஆதனால்தான்; மத நம்பிக்கை சார்ந்த மனிதர்களால் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் அவரும்; பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றார். இந்தக் குற்றச்சாட்டு நியாயமானதாக இருப்பினும் இப்படியான இரட்டை வாழ்வை நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் நமது சமூக அரசியல் மற்று சமய தளங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றோம். பல அரசியல் தலைவர்கள் தொடர்பாக ஊடகங்கள் மௌனமாக இருப்பது ஏன்? ஆகவே ஊடகங்கள் ;இந்த விடயங்களில் பக்கச் சார்பாகவே செய்திகளை வெளியீடுகின்றனர். ஆகவே இவ்வாறன குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் ஒவ்வொருவரும் தமது மனசாட்சியை கேள்வி ;கேட்டபின் மற்றவர் மீது குற்றம் சுமத்துவதே நியாயமானது. இதன் அர்த்தம் அவரை நியாயப்படுத்துவதல்ல. மாறாக நித்தியானத்தம் போன்றவர்கள் இவ்வாறு ஈடுபடுவதற்கு மறுபுறம் காரணமாக இருக்கும் சமய நம்பிக்கைகளையும், அதன் பழக்கவழங்கங்களையும் மற்றும் சாஸ்திர சம்பிரதாய சடங்குகளையும் கேட்விக்குட்படுத்துவதே நியாயமானதாகும். குறிப்பாக பாலியல் மற்றும் பாலியலுறவுகள் தொடர்பாக சகல சமய நிறுவனங்களின் நிலைப்பாடுகளையும் அவர்களது கருத்துக்களையும் கேள்விக்குட்படுத்துவதே சரியான வழிமுறையாகும். இந்து சமயம் மட்டுமல்ல எல்லா சமய நிறுவனங்களிலும் இவ்வாறன பிரச்சனைகள் இருக்கின்றன. இதில் உள்ள மதத் தலைவர்கள் பலர் இதுதொடர்பான பிரச்சனைகளுக்கு தொடர்ந்து முகம் கொடுத்துக் கொண்டே வருகின்றனர். ஆகவே நித்தியானந்தம் போன்ற சாமியர்கள் போன்று எதிர்காலத்தில் மேலும் பலர் வரமால் தடுப்பதற்கும், மற்றும் பொது மனிதர்களின் ஆன்மீக தேடலை சுரண்டி பயன்படுத்தாமலிருப்பதுற்கும் சமய கோட்பாடுகளையே முதலில் கேள்வி கேட்கவேண்டும். இதற்கு மாறாக மதவாதிகள் தமது மதங்களை துயனவாக கட்டிக் காப்பதற்கும் மூட நம்பிக்கைள் மூலம் பொது மனிதர்களை தொடர்ந்தும் ஏமாற்றுவதற்கும் வசதியாக நிதியானத்தம் போன்ற மனிதர்களை குற்றவாளிகளாக்கி பிரச்சனையை தனி மனித பிரச்சனையாக்கி திசை திருப்பிவிடுகின்றனர். இதில் ஊடகங்களின் பங்கு கணிசமானது. ஆகவே சமூக அக்கறையுள்ளவர்களும் சமூக மாற்றத்தில் அக்கறையுள்ளவர்களும் சமூகத்தின் பொதுவான கருத்தக்களுக்கும் அதன் ஆதிக்க போக்கிற்கும் தாமும் இழுபடாமல் இந்த வட்டத்திற்கு வெளியில் நின்று நிதானமாகவும் பிரக்ஞைபூர்வமாகவும் இப் பிரச்சனையை பார்ப்பதே ஆரோக்கியமானதாக இருக்கும்.

இரண்டாவது குற்றச்சாட்டு பெண்களின் பார்வையில் முன்வைக்கப்படுவது, இதுவே மிகமுக்கியமானது. அதவாது நித்தியானந்தம் தனது அதிகாரம் பண பலம் பிரபல்யம் என்பவற்றை பயன்படுத்தி எத்தனை பெண்களை பாலியல் சுரண்டலுக்குப் பயன்படுத்தியிருக்கின்றார் என்பதை அறிவதே இவர் மீதான குற்றச்சாட்டுக்கு நியாயமானதும் முக்கியமானதுமான ஆதாரமாக இருக்கும். ஏனனில் இவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக முன்வைத்துள்ள களவாக எடுக்கப்பட்ட வீடியோவில் இவர் ஒரு பெண்ணுடன் எவ்வாறு பாலியல் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றார் என்பது இவர் தொடர்பான பல கேள்விகளை எழுப்புகின்றது. இதனடிப்படையில் நித்தியானந்தம் இருக்கின்ற விடியோவை அலசி அராய்ந்தால் (அந்த விடியோவில் இருப்பவர் அவர் என உறுதிசெய்யப்படும் பட்சத்தில்) அவர் ஒரு சாதாரண மனிதர் என்பதும் புத்தக அறிவின் மூலம் தான் அறிந்ததை மற்றவர்களுக்கு பகிர்ந்துள்ளார் என்பது வெளிச்சமாகின்றது. விடியோவின் அடிப்படையில் முதலில் நித்தியானந்;தர் முக்தி (ஞானம்) என்ற ஒன்றை அடையவில்லை என்பது புலனாகின்றது. ஏனனில் அவரது செயற்பாடுகள் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களின் பிரக்ஞையற்ற இயந்திரத்தனமான செயற்பாடுகளாகவே தென்படுகின்றன. சாதாரண மனிதர்களைப் போன்று இன்னும் காமத்திலிருந்து விடுபடாமலும் மறாக அதை அடக்கியே வாழ்கின்றார் என்பதையும் அவரது பிரக்ஞையற்ற சிறுபிள்ளைத்தனமாக சிலுமிச செயற்பாடுகள் மூலம் நிறுபனமாகின்றது. மேலும் மூன்றாவது பகுதி கட்டுரையில் குறிப்பிட்டவாறு ஒரு பெண்ணுடனான அவரது உறவு இன்னும் ஆணாதிக்க தன்மையிலையே இருக்கின்றது என்பது துல்லியமாக தெரிகின்றது. அதாவது ஆண் பெண் இரு பாலருக்கும் இடையிலான காம உணர்வின் வேறுபாடுகளின் அடிப்படையைக் கூட நித்தியானந்தம் புரிந்துகொண்டதாக தெரியவில்லை. உதாரணமான ஒரு ஆணே முதலில் பெண்ணிற்கான பாலியல் விளையாட்டுக்களில் ஈடுபடுவது பொருத்தமானதும் சரியானது எனவும் ஆய்வுகள் தெரிவிப்பதாக மூன்றாவது பகுதியில் பார்த்தோம். இதற்கு மாறாக நித்தியானத்தம் என்ற மனிதருக்கே அப் பெண் உறவுக்கு முன்பான பாலியல் விளையாட்டுக்களை செய்கின்றாள். ஆகவே காம மற்றும் பாலியலில் ஆய்வுகள் செய்கின்றேன் என்ற நித்தியானந்தரின் கூற்று பொய்யாகின்றது. இது தொடர்பாக அவர் கேள்விக்குள்ளாக்கப்டவேண்டும். ஏனனில் பாலியலுறவு தொடர்பாக ஆய்வு செய்வதாக இவர் மேலும் மேலும் பொய்கள் கூறி பொது மனிதர்களை ஏமாற்றுகின்றார் என்றே கருதவேண்டும். மேலும் வீடியோவில் காண்பிக்கப்பட்ட பெண்ணைத் தவிற வேறு பல பெண்களுடனும் இவர் இவ்வாறு ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் இவரது ஆணாதிக்க செயற்பாடுகள் எழுப்புகின்றன. இதன் அர்த்தம் ஒரு மனிதர் (அவர் ஆணோ பெண்ணோ) ஒருவருடன் தான் பாலியலுறவு கொள்ள வேண்டும் என்ற ஆணாதிக்க சமூகத்தின் ஒரு தார பாலியலுறவு கருத்தியலை இங்கு முன்வைக்கவில்லை. மாறாக நித்தியானந்தம் தனது பதவி பணம் அதிகாரம் என்பவற்றை பயன்படுத்தி பல பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டியிருக்கலாமா என்ற கேள்வியே முக்கியமானது. அவ்வாறு நிறுபிக்கும் பட்சட்த்தில் அவர் குற்றவாளியாகின்றார்.

நித்தியானத்தம் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக முன்வைக்கப்பட்ட வீடியோவில் கவனிக்கப்படவேணடிய இன்னொரு முக்கியமான அம்சம் ஒன்று உண்டு. பொவான ஆணாதிக்க சமூக வழமையாக பெண் என்பவள் ஆணின் அடிமையாக ஆணுக்கு சேவகம் செய்வதும் அவனது காம மற்றும் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்பவளாகவே இந்த ஆணாதிக்க சமூகத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றாள். இந்த வீடியோவில் காண்பிக்கப்பட்ட பெண்ணும் சமூகத்தில் வாழும் பெரும்பான்மையான பெண்களை போல ஒரு ஆணின் தேவைகளை பாலியல் ஆசைகளையும் கனவுகளையும் ப+ர்த்தி செயற்படுகின்றவளாகவே இருக்கின்றாள். மேலும் மனிதர்கள் தமது ஆணாதிக்க ஆண்டான் அடிமை மற்றும் நிலபிரபுத்துவ உணர்வுகளிலிருந்து இன்னும் விடுபடவில்லை என்பது இன்றைய அரசியல் நீரோட்டத்தில் மட்டுமல்;ல நித்தியானந்தரின் விடீயோவிலும் புலனாகின்றது. எப்படி அரசியலில் குறிப்பாக இலங்கையில் மகிந்தவை துட்டக்கைமுனுவாகவும் பிரபாகரனை எல்லாளனாகவும் கற்பிதம் செய்கின்றோமோ அதேபோல் இந்தியாவில் எவ்வாறு அரசியல் தலைவர்களை அரசர்களுடன் ஒப்பிடுவது மிக சர்வசாதாரணமான இப்பொழுதும் பின்பற்றப்படுகின்றதோ, அதேபோல் நித்தியானத்தனையும் ஒரு அரசனாக கடவுளாக கற்பிதம் செய்து அவரது தொண்டர்களும் இந்தப் பெண்ணும் சேவகம் செய்கின்றார்கள். இந்த வீடியோவில் இருவருக்கும் இடையில் காண்பிக்கப்படும் உறவு ஆணாதிக்க அடிப்படையிலான காதலாக இருக்கலாம். ஆனால் நித்தியானந்தம் போதிக்கும் அல்லது போதித்ததாக கூறப்படும் இரு மனிதர்களுக்கு இடையிலான சமத்துவமான காம மற்றும் காதல் உறவைக் காணமுடியவில்லை. மாறாக அடக்கப்பட்ட காமத்தின் ஆசைகளை ப+ர்த்தி செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக சுரண்டும் செய்ற்பாடுகளாகவே நித்தியானந்தரின் செய்கைகள் இருக்கின்றன. ஒருவரும் இந்தடிப்படையில்; இவருக்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைக்கமாட்டார்கள். ஏனனில் இவ்வாறன பெண்ணின் செயற்பாடுகள் ஆண் பெண் உறவுகளில் சர்வசாதாரணமான சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பழக்கவழக்கமாகவே பார்க்கப்படுகின்றது. இச் செயற்பாடுகள் எந்த ஒரு மனிதர்களுக்கும் குறிப்பாக ஆண்களுக்குப் பிரச்சனையானதல்ல. ஏனனில் இதுபோன்ற பாலியலுறவு முறைகளே சமூகத்தில் வாழும் ஆணாதிக்கத்திற்குட்பட்ட நம்மைப் போன்ற மனிதர்களால் வழமையாக பின்பற்றப்படுகின்றமையால் இவ்வாறன விடயங்கள் தவறானவைகளாக தெரிவதில்லை. ஆகவே நமது பிரக்ஞைக்கு பிழையாக தெரியாததால், அக்கறைக்கு அப்பாற்பட்டனவையாக இருக்கின்றன. ஆனால் பெண்ணிய பார்வையில் நித்தியானந்தம் இப் பெண்ணை தனது பாலியல் தேவைகளுக்காக சுரண்டுகின்றார் என்பதையே இப் பெண்ணின் செயற்பாடுகள் புலப்படுத்துகின்றன. சமூக அக்கறை உள்ள சஞ்சிகைகள் இவற்றை கேள்விக்கு உட்படுத்தியிருக்கவேண்டும் ஆனால் அவையும்; அதைச் செய்யத் தவறிவிட்டன. இதனால்தான் பொதுமனிதர்களுக்கும் ஊடகங்களுக்கும் தமது அல்லது ஒரு சமயத்தை அவமதித்தது மட்டுமே முக்கியமான விடயமாக இருக்கின்றது. இதனடிப்படையிலையே நித்தியானந்தம் மீதான பிரதான குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது. இதற்குக் பாலியல் பாலியலுறவு மற்றும் பெண்களை எவ்வாறு இந்த சமூகம் பார்க்கின்றது பயன்படுத்துகின்றது போன்றன தொடர்பான நமது அறிவின் எல்லையும் வறுமையுமே காணரம்.
மறுபுறம் நித்தியானந்தம்; உறவு கொண்ட பெண் அவர் மீது எந்தவிதமான பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டையோ அல்லது பாலியல் மற்றும் அதிகாரத்துவ தூஸ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்வில்லை. ஆகவே அப் பெண்ணுடன் உறவாடியதை எந்தவிதமான கட்டுப்பாடுகளுமின்றி தமது செய்திக்கு ஆதாரமாக முழுமையாக ஒளிபரப்பியமை ஊடகங்களின் தனிமனித உரிமை மீறல் ஆகும். ஊடகங்கள் நித்தியானத்தம் மீதான குற்றச்சாட்டை மட்டும் நிறுபிக்க வேண்டுமாயின் அவரின் முகத்தை மட்டும் ஒளிபரப்பியருப்பதே நியாயமானதாக இருந்திருக்கும். குறிப்பிட்ட பெண்ணின் முகத்தை முழுமையாக மறைப்பது மட்டும்ல்ல யாரென அடையாளப்படுத்தியுமிருக்கக் கூடாது. ஆனால் இந்த குற்றச் சாட்டுக்களுடன் எந்தவகையிலும் நேரடியாக தொடர்பற்ற ஆனால் தன் விருப்பத்துடன் ஒரு உறவில் ஈடுபட்ட ஒரு பெண்ணின் செயற்பாடுகளை ஒளிபரப்பியது மட்டுமல்லாமல் அதை மீள மீள ஒளிபரப்பியமை அப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்வில் தலையீடு செய்த அடிப்படை மனித உரிமை மீறல் ஆகும். அதில் காண்பிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகவும் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட தனி மனித உரிமை மீறல் தொடர்பாகவும் கருத்துக்கள் பல வலைத்தளங்களில் வெளிவந்தமை மகிழ்ச்சியான விடயமே. ஆனால் பிரதான ஊடகங்கள் இந்தவிடயத்தில் எந்த பொறுப்பும் இல்லாமல் இவ்வாறு ஓளிபரப்பியமை அவர் ஒரு பெண்ணாகவும் மற்றும் பிரபல நடிகையாக இருந்தமையுமே காரணமாகும். ஏனனில் இதன் மூலம் ஊடகங்கள் இச் செய்தியை தமக்கு வருவாயை மட்டுமே பெருக்கிக்கொள்ளும் ஒரு பொருளாக பெரும் வியாபாரமாக்கியது. இது மட்டுமல்ல இவ்வாறு கேள்வியின்றி விமர்சனமின்றி ஓளிபரப்பியமை ஆணாதிக்க சமூக பழக்கவழக்கங்களை மேலும் வலுப்படுத்துகின்றன என்றால் மிகையல்ல. இந்த ஊடகங்கள் மீது அப் பெண் தனிமனித உரிமை மீறல் அடிப்படையில் மானநஸ்ட வழக்கு தாக்கல் செய்யவேண்டியது முக்கியமான ஒரு விடயமாகும்.

இதன் மூலம் ஊடகங்களின் வரையரை மட்டுமல்ல அவர்களின் சமூக பொறுப்பு என்ன என்பது தொடர்பாகவும் தெளிவான ஒரு பார்வை இனிவரும் காலங்களில் முன்வைக்கப்படவேண்டும். இன்றைய நவீன் தொலிநூட்;ப வசதிகளினால் இதுபோன்ற தனி மனித உரிமைகளை மீறும் விடயங்களை இலகுவாக செய்துவிடலாம். ஆகவே தனி மனித உரிமை, சமூக அக்கறை மற்றும் பொறுப்பு தொடர்பான விடயங்களிலும் ஊடகங்களின் எல்லைகள் அல்லது அவர்கள் இவ்வாறான செய்திகளைத் தெரிவிப்பதிலுள்ள பொறுப்புணர்வு என்பவை தொடர்பான வரையறைகள் முன்வைக்கப்படவேண்டியது தவிர்க்கப்படமுடியாததாக எழுகின்றது. அல்லது 50 வருடங்களுக்கு முன்பு ஜோர்ஜ் ஒவல் (George Orwell) எழுதிய “1984” கதைபோன்று சிதைந்துபோன அல்லது சிதைக்கப்பட்ட அல்லது சிதைந்துபோவது தவிர்க்கப்பட முடியாத சோவியத்யூனியனுக்குள் இருந்த வாழ்வைப் போன்று நமது வாழ்வின் ஒவ்வொரு கணமும் இவ்வாறான நவீன தொழிநூட்ப வசதிகள் மூலமாக கண்காணிப்பட்டு நமது சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவது தவிர்க்க முடியாதுபோய்விடும். இன்று இவ்வாறன விடயங்களில் மதவாதிகள் மட்டுமே அதிகமாக அகப்படுவதால் மனித உரிமைவாதிகளும் மற்றும் நாஸ்திகர்களான இடதுசாரிகளும் மகிழ்ச்சியடையலாம். ஆனால் நாளை ஒரு சமூக மாற்றத்திற்காக சுரண்டல்களுக்கு எதிராக உழைக்கும் மனிதர்கள் மீதும் அவர்களது செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்த இவ்வாறான விடயங்களை அதிகாரத்தில் உள்ள ஊடகங்கள் பயன்படுத்தப்படலாம் என்பதில் நாம் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது கட்டாயமானதாகும். ஏனனில் இந்த வியாபார ஊடகங்களின் நோக்கம் இவ்வாறனா செய்திகளுடன் இலாபம் பெறுவது மட்டுமல்ல தொடர்ந்தும் பிற்போக்கு ஆணாதிக்க மற்றும் மூட மத சிந்தனைகளை சமூகத்தில் உறுதியாக நிலைநாட்டுவதற்கு இவ்வாறான செய்திகளைப் மீள மீள பிரசுரிப்பதும் ஒளிபரப்புவதுமாகும் ஒரு காரணமாகும்.

ஆணாதிக்க சமூகத்தால் ஒரு ஆணாக கட்டமைக்கப்பட்டு வளர்க்கப்பட்ட நான் முழுமையாக ஆணாதிக்க கருத்துக்களிலிருந்து விடுபட்டிருப்பேன் என உணரவோ நம்பவோ இல்லை. இருப்பினும் எம் மீதான ஆதிக்கங்களை கட்டுடைத்து நம்மை புதிதாக மீள் உருவாக்கம் செய்வது என்பது ஒர் தொடர்ச்சியான பயணம். இந்தடிப்படையில் ஒரு ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண்ணைவிட ஒரு ஆண் பெண்ணியவாதியாக இருப்பது அவ்வளவு கஸ்டமானதல்ல. ஆனாலும் ஒரு நபருக்குள் நடைபெறும் மாபெரும் உள்போராட்டம் என்றால் மிகையல்ல. ஒரு புறம் ஆணாதிக்க சிந்தனைகளின் ஆதிக்கம். அதேவேளை எது ஆணாதிக்கம் என்றும் அல்லது எது இல்லை என்றும் புரியமுடியாத கையறுநிலை. இந்ந நிலையில் ஒரு ஆண் வழமையாக மேற்கொள்ளப்படும் மனித வாழ்விற்கு தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்கும்; அதேவேளை அந்த ஆண் பெண்ணியவாதியாக இருந்து பெண்களையும் அவர்கள் உணர்வுகளையும் மதித்து அவர்களை சுரண்டாது பாலியலுறவு வன்புணர்வுகளிலோ பாலியல் துஸ்பிரயோகங்ளோ ஈடுபடாது ஒவ்வொரு கணமும் பிரக்ஞையாக வாழ்வது என்பது மிகவும் சவலான ஒரு விடயம். இது நான் மட்டுமல்ல சமூக மாற்றத்தில் அக்கறை உள்ள ஒவ்வொரு மனிதரும் குறிப்பாக ஆணும் முகம் கொடுக்கவேண்டிய பிரச்சனை இது. இந்தடிப்படையில்தான் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர்.உ.ரா.வரதராசன் அவர்களது இறப்பும் மற்றும் அவர் குறிப்பிட்ட தனது அக வாழ்வுக்கும் புற அல்லது பொது வாழ்வுக்கும் இடையில் மட்டுமல்ல அவற்றுக்குள்ளான பிரச்சனைகளையும் பார்க்கவேண்டி உள்ளது. இவரது கட்சியும் இது தொடர்பான பிரச்சனையை பூசி மெழுகியுள்ளதாகவே தெரிகின்றது. இதற்கு காரணம் பாலியல் மற்றும் பாலுறவு தொடர்பாக இந்த இடதுசாரி கட்சிகளும் மரபாந்த சமூக கருத்துக்களையா கொண்டிருக்கின்றார்கள் என சந்தேகிக்க வேண்யுள்ளது. இது தொடர்பாக பொறுப்புணர்வுடன் ஆனால் வெளிப்படையான ஒரு கலந்துரையாடலை அவர்கள் நடாத்துவது இனிவரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சனைகளை முகம் கொடுப்பதற்கு சரியான ஒரு பார்வையைக் கொடுக்கலாம். ஆல்லது தொடர்ந்தும் நமது மனதில் ஆழப்பதிந்திருக்கும் பிற்போக்கான சமூக சிந்தனைகளுடன் பிரக்ஞையற்று சமரசம் செய்வதையே தொடர்ந்துகொண்டு இருப்போம்.

இவ்வாறான பிரச்சனைகளைப் பார்ப்பதற்கு நமது அறிவு தொடர்பான விளக்கத்தையும் தெளிவாக்கி செல்வது நன்மையளிக்கும். இன்றைய காலத்தில் குறிப்பாக தென்னாசிய சமூகங்களில் வாழும் மனிதர்களின் அறிவை, அவர்கள் மீதான சமூக ஆதிக்கமானது ஆகக் குறைந்தது இரு வழிகளிலாவது கட்டுப்படுத்துகின்றது. முதலாவது மேலைத்தேய சிந்தனைக்கான முக்கியத்துவத்தை அளிப்பதன் மூலம். இரண்டாவது சமயங்களில் மீதான நம்பிக்கையும் அது ஏற்படுத்திய கட்டுப்பாடுகளையும் கட்டாயமாகவும் விமர்சனமின்றியும் பின்பற்ற நிர்ப்பந்திப்பதன் மூலம். லவ்லொக்(lovelock) என்ற சுழலியல் அறிஞர் கூறுகின்றார் இன்றைய மேற்கத்தைய விஞ்ஞான அறிவை உற்பத்தி செய்யும் சமூக அரசியல் விஞ்ஞான நிறுவனங்கள் கலிலியோ காலத்து சமய நிறுவனம் போலவே செயற்படுகின்றன. ஏனனில் அன்று கலிலியோ ஏற்படுத்திய அறிவுப் புரட்சியை எப்படி சமய நிறுவனங்கள் நிராகரித்தார்களோ அதேபோல் இன்று உருவாக்கப்படும் புதிய அறிவுப் புரட்சிகளை இன்றைய மேற்கத்தைய விஞ்ஞான அறிவை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் நிராகரிக்கின்றன அல்லது அடக்குகின்றன என்கின்றார். மறுபுறம் தென்னாசியாவில் இருக்கின்ற சமய நிறுவனங்கள் இப் பிரதேசங்களில் உருவாகிய கடந்தகால அறிவையும் அதற்கான தேடல்களையும் சமய அறிவாக மாற்றி அதனை ஒரு சடங்காக மட்டுப்படுத்தி தம் மதத்துடன் இணைத்து பொது மனிதர்களைக் கட்டிப்போடுதவற்கும் கேள்வியின்றி அவர்கள் பின்பற்றுவதற்கும் மட்டுமே பயன்படுத்துகின்றனர். மறுபுறம் சமயங்களுக்கு எதிரானவர்கள் அல்லது இவ்வாறான கீழைத்தேய அறிவை விஞ்ஞான அறிவல்ல என வாதிடும் ஐரோப்பிய சிந்தனைக்கு அடிமைப்பட்ட அறிஞர்கள் தென் பூகோளம் (Global South- இது வட அமெரிக்க மற்றும் மேற்குலகையும் மற்றும் வட பகுதி தவிர்ந்த பிரதேசங்களை குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது) உருவாக்கிய அறிவையும் அதன் உண்மையான பயன்பாட்டையும் புரிந்துகொள்ள தவறுகின்றனர். இயற்கையான வழிகள் மூலம் இந்த மன நோய்களை எவ்வாறு குணப்படுத்தலாம் என்பதைபற்றிய அக்கறையும் ஆர்வமும் நமக்கு வேண்டும். ஆனால் பிரச்சனை என்னவெனில், இயற்கையான வழிகளான தியானம் மூச்சுப் பயிற்சி மற்றும் யோகா, தந்திரா போன்ற ஆசிய பிரதேசங்களில் உருவான அறிவுகளை அங்கு ஆதிக்கத்திலிருக்கும் சமயங்களும் அதன் சாமியார்களும் ஆட்கொள்வதால் அந்த அறிவின் முக்கியத்துவம் பொது மனிதர்களுக்கு பயனில்லாமல் போகின்றது. மறுபுறம் இந்த சமயங்களும் சாமியார்களும் தம் பிரதேசங்களில் உருவான அறிவை மனிதர்ளை சுரண்டுவதற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். இப் பிரதேசங்களில் உருவான இவ்வாறன அறிவுகள் மனிதர்களின் காமம் பாலியலுறவு மனித உறவு மற்றும் உளவியல் என்பவற்றை மேம்படுத்த நன்றாகவே பயன்படுத்தப்படக் கூடியன. ஆனால் இந்த அறிவுகள் இப் பிரதேசங்களின் பிரதான ஆதிக்க அறிவுத் தளங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளமை மிகவும் துயரமானது.

தென்னாசிய மனிதர்கள் அறிவை மதிக்கும் அல்லது பெற்றுக்கொள்ளும் முறைகளில் இருக்கும் முரண்பாடுகள் கவனத்திற்கு உரிய விடயம். மேற்குலகில் அறிவு தொடர்பான விடயங்கள் சமய நிறுவனங்களிலிருந்தும் அச் சமூகம் சார்ந்த காலாசார பாதிப்புகளிலிருந்தும் ஒரளவாவது விடுதலை பெற்று சுதந்திரமாக இருப்பதுதான் என்றால் மிகையல்ல. ஆனால் இந்த நிலை இன்னும தென்னாசிய சமூகங்களில் ஏற்படவில்லை. அகவே இச் சமூகங்களில் அறிவு என்பது அதன் சமய கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாக இயங்க வேண்டிய தேவை உள்ளது. மனித நலன்களுக்கும் வளர்ச்சிக்கும் மற்றும் சுற்று சுழலைப் பாதுகாப்பதற்குமான அக்கறையும் அது தொடர்பான அறிவுத்தேடலும் சமூக சமய முதலாளித்துவ ஆதிக்க நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டு சுதந்திரமாக அதேவேளை அடக்குமுறைகளுக்கும் முகம் கொடுத்து ஆனால் சுதந்திரமாக வளர்ந்தும் வந்திருக்கின்றன. இந்த அறிவுகள் பிரபஞ்சத்தையும் அதில் வாழும் மனிதர்களையும் எவ்வாறு சமநிலையில் வைத்திருப்பது என்பது தொடர்பான அக்கறை கொண்டவை. ஆனால் சமூக சமய ஆதிக்க நிறுவனங்களால் அவை உள்வாங்கப்ட்டோ அல்லது அழிக்கப்பட்டடோ அடக்கப்பட்டோ வந்திருக்கின்றன. இதன் ஆதிக்கங்களிலிருந்து இந்த அறிவைப் பிரித்து சுதந்திரமாக்க முடியுமானால் அதைப் பொது அறிவாக்க முடியுமானால் இந்த சமய நிறுவனங்களும் சாமியார்களும் மதகுருமார்களும் மற்றும் முதலாளித்துவ மருந்து நிறுவனங்களும் மனிதர்களை தொடர்ந்தும் சுரண்டுவதிலிருந்தும் ஏமாற்றுவதிலிருந்;தும் விடுவிக்கலாம். மேலும் காமம் காதல் மற்றும் தியானம் என்பனவும் அவைபோன்ற மனித வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தேவையான பல விடயங்கள் சமூக விஞ்ஞான தத்துவார்த்த அடிப்படையில் நோக்கப்பட்டுவந்திருக்கின்றன. குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் இவை ஒரு புறம் சமயங்கள் சார்ந்தும் மறுபுறம் மேற்கத்தைய விஞ்ஞானம் சார்ந்தும் மற்றும் இவை இரண்டுக்கும் அப்பாற்பட்டு சுதந்திரமாகவும் இதற்கான தேடல்கள் முயற்சிகள் நடைபெற்றுவந்திருக்கின்றன. ஆனால் குறிப்பாக தென்னாசிய சமூகங்களில் இவ்வாறன ஒரு சுழல் இன்னும் உருவாகவில்லை. அனைத்தும் மதங்களுக்குடாகவே பாhக்க்ப்படுன்றன. மத நிறுவனங்களின் கட்டுப்பாடுகளை மீறி கூறப்படுகின்றனவைக்கு மதிப்பு இல்லை. இந்த நிலை மாறப்படவேண்டும். அப்பொழுதே மனிதரின் பிரக்ஞை, மூச்சு, காம சக்தி மற்றும் தியானம் தொடர்பான சுயாதினமான சுதந்திரமான கருத்துக்கள் அறிவுகள் பரவலாக்கப்டும் சாத்தியம் ஏற்படும். ஆகவே பிரக்ஞை, மூச்சு, காம சக்தி மற்றும் தியானம் என்பன சமய நிறுவனங்களில் இருந்து விடுதலை பெற்று பொதுவான பாடங்களாக அனைவருக்கும் கற்பிக்கப்படவேண்டும். ஏனனில் இவை தொடர்பான அறிவு மனிதர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு தேவையானவையும் முக்கியமானதுமாகும். இது தொடர்பாக ஞானி அவர்களும்; தனது குமுதத்தற்கான பத்தியிலும் வலைப்பதிவிலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 70 ஆண்டு கால் சோவியத் யூனியன் வரலாற்றில் அதாவது பல தலைமுறைகளை கண்ட நாட்டில் 90களின் பின் ஏற்பட்ட மாற்றம் அதவாது முதலாளித்துவ ஐனநாயக சுழல் மனிதர்களை மீண்டும் மதங்களை நோக்கி மிக இலகுவாக இழுத்துள்ளது. இது எதனால். இது போன்று ஆசிய ;நாடுகளில் பல சாமி மனிதர்கள் பொது மனிதர்களை தொடர்ந்தும் ஏமாற்றிய பொழுதும் மிண்டும் மீண்டும் ஏதா ஒரு சாமியாரிடம் பொது ;மனிதர்கள் அடைக்கலமாகின்றார்கள். இவ்வாறு நடைபெறுவதற்கான மனித தேவையையும் அதற்கான ஊளவியல் காரணத்தையும் சமூக மாற்றத்தில் அக்கறை உள்ளவர்கள் ஒ;வவொருவரும் அறிய வேண்டியது மிக முக்கியமானதும ;அவசியமானதுமான ஒன்று. இதைப் புறக்கணிப்பதானது உண்மையான முழுமையான சமூக மாற்றம் என்பது ;தொடர்ந்தும் குறைபாடு கொண்டதாக மட்டுமல்ல பாரிய தவறொன்றை தொடர்ந்தும் சமூக மாற்றத்திற்காக செயற்படுகின்றவர்கள் விடுவதாகவே இருக்கும்.

காதல் என்பது காமத்தைப் போன்றோ பிரம்மச்சாரியத்தை போன்றோ மனித வாழ்வில் இடையல் உருவாகி இடையல் இல்லாமல் போகும் ஒரு விடயமல்ல. ஒரு மனிதர் உருவாவதில் இருந்து இற்ப்பதுவரை அவரது வாழ்வில் ஒன்றாக பயணிக்கும் ஒரு முக்கியமான உந்து சக்தி. ஆனால் காமத்தையே இன்னும் கடக்காத நாம் (அல்லது நான்) காதல் தொடர்பாக எழுதுவது அர்த்தமற்றது. ஏனனில் எனது பிரக்ஞையற்ற நிலையின் காரண… See Moreமாக நான் எழுதும் விடயங்கள் ஆணாதிக்க கருத்தியலாகவும் மற்றும் காம மற்றும் பாலியல் அடக்குமுறையின் வெளிப்பாடாக எக் கணத்திலும் வந்துவிடலாம். ஏனனில் அந்தளவிற்கு இவ்வாறான கருத்தாக்கங்கள் நமக்குள் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்த நிலையில் நமது காம உணர்வையும் மற்றும் பாலியல் உறவுக்கான தேவையையும் நாம் விரும்புகின்றவர்களிடம் எவ்விதமான பயமுமின்றி தயக்கமுமின்றி நாகரிகமாக வெளிப்படுத்தும் கலாசாரமும் அதேநேரம் மற்றவர் மறுக்கும் சமயத்தில் அதை ஏற்கும் பண்பும் கொண்ட ஒரு சமூகம் உருவாக்கப்படவேண்டும். அப்பொழுதுதான் பாலியல் சுரண்டல்கள் வன்புணர்வுகள் துஸபிரயோகங்கள் என்பவற்றிலிருந்து நாம் ஒவ்வொருவரும் விடுபட முடியும். இதற்கு முதலடிப்படையானது காமம் மற்றும் பாலியல் உறவுகள் தொடர்பான கலந்துரையாடல் மற்றும் விவாதங்கள் பரவலாக தயக்கமின்றி வெளிப்படையாக தமிழ் எழுத்து சுழலில் நடைபெறவேண்டும். இரண்டாவது தியானம் மற்றும் பிரக்ஞை என்பனவற்றின் முக்கியத்துவமும் தேவையும் வரலாற்றில் பல்வேறு வழிகளில் தேடலுக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கின்றன. துரதிர்ஸ்டவசமாக சமய நிறுவனங்களின் ஆதிக்கத்தினால் இது அவர்களுக்கு ஊரியதா மட்டும் பார்க்கப்படுவது துர்ப்பாக்கியமானது. ஆவற்றிலிருந்து அவை விடுதலை செய்யப்பட்டு மனித வளர்ச்சிக்கும் நல்வாழ்விற்கும் சமய நிறுவனங்கள் சாராத அறிவாக பயன்படுத்தப்படவேண்டும். அப்பொழுதே மத நிறுவனங்களிலிருந்தும் அதை பிரதிநிதித்துவப்படுத்தும் சாமியார்கள் மற்றும் மதபோதகர்களிலிருந்தும் நாம் விடுதலையடைவது மட்டுமல்ல அவர்கள் நம்மை ஏமாற்றாமலும் சுரண்டாமலும் இருப்பதிலிருந்து விடுபடுவோம்.
இக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது கனடாவில் ஒன்றாரியோ மாகாண முதல்வர் மூன்றாம் வகுப்பிலிருந்து பாhல், பாலியல் மற்றும் பாலியலுறவு கல்வியை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கட்டுரை எழுதிமுடியும் தறுவாயில் தனது முடிவை மறுபரிசீலனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முடிவானது பாலியல் சுதந்திரம் இருக்கின்றதாக கூறப்படுகின்ற மேலைத்தேய நாடுகளின் கூட பாலியல் மற்றும் அது தொடர்பான கல்வியை கற்பிப்பதற்கு எவ்வளவு தடைகள் இருக்கின்றன என்பதை காண்பிக்கின்றது. ஆனாலும் பாலியல் கல்வி போன்ற செயற்பாடானது கனடாவில் மட்டுமல்ல அனைத்து நாடுகளுக்கும் விரைவாக பரவலாக்கப்படவேண்டிய அவசரமான தேவை உள்ளது. இதன் மூலம் சமூகத்தில் நடைபெறும் பாலியல் பாலியலுறவு மற்றும் வன்புணர்வு தூஸபிரயோகங்கள் போன்ற பிரச்சனைகளுக்கு ஒரளவாவது தீர்வு ஒன்றைக் காணலாம். ஆரோக்கியமான ஒரு மனித சமூகம் ஒன்று தொடர்ந்தும் இந்த ப+மியில் உயிர் வாழவேண்டுமாயின் இவ்வாறன ஒரு கல்வித்திட்டம் முன்நிபந்தனiயானது என்றால் மிகையல்ல.

மீராபாரதி
(ஆண்மையும் பெண்மையும்)

Advertisements

Responses

  1. கோவில் கருவறைக்குள் உல்லாசம் கோவில் அர்ச்சகர் கைது !
    http://inioru.com/?p=7726

    meerabharathy
    Posted on 11/18/2009 at 12:36 am
    நட்புடன் இச் செய்தியை எழுதிய எழுத்தாளருக்கும் வெளீயிட்ட ஆசிரியருக்கும் மற்றும் வாசக நண்பர்களுக்கும்…

    இந்த இணையத்தளமானது சமூக அக்கறையுள்ள சமூக மாற்றத்தை உருவாக்க விரும்புகின்ற ஒன்றாகவே நான் பார்க்கின்றேன். அதை அடைவதற்கான உருவாக்குவதற்கான கருத்துக்கள் பாதைகள் வேறு வேரானவையாக இருந்தபோதும் நமது நோக்கம் ஒன்றே.

    ஆந்த அடிப்படையில் இச் செய்தி தொடர்பான எனது கருத்தை விமர்சனத்தை இங்கு முன்வைப்பது பொருத்தமானது எனக் கருதுகின்றேன்.

    முதலாவது மேற்குறிப்பிட்ட செய்தியை வெளியிட்ட முறையானது ஒரு மூன்றாம்தரத்திலான செய்தித்தாள்கள் வெளியீடும் செய்தி போன்றதாகவே நான் பார்க்கின்றேன். ஏனனில்….

    அண்மையில் ஒரு பெண்ணியக் கட்டுரை ஒன்றும் அது தொடர்பான விபரணப்படம் ஒன்றும் பார்த்தேன். இது கனடாவில் பழங்குடி பெண்களை வெள்ளையின ஆண்கள் எவ்வாறு வன்புணர்ச்சி செய்து கொலைசெய்கின்றனர் மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பானது.

    அக் கட்டுரையினது விபரணப்;படத்தினதுமு; நோக்கமானது அக் குறிப்பிட்ட ஆணை பிரபல்யப்படுத்துவதோ அல்லது வெளிக் கொண்டுவருவதோ அல்ல. அதற்கும் மேலாக இவ்வாறன வன்புணர்ச்சிகளும் கொலைகளும் நடைபெறுவதற்கான சமூக காரணிகளை ஆராய்ந்திருந்தது. ஏனனில் இச் சமூக காரணிகளே இவ்வாறன சம்பவங்கள் நடைபெறக் காரணமாக இருக்கின்றன. இச் சமூக காரணிகளை கண்டுபிடித்து அதற்கான தீர்வைக் காணும் பொழுது இவ்வாறான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான தீர்வுகளை நாம் காண முயற்சிக்கலாம்.
    ஆல்லது மேற்குறிப்பிட்ட செய்தி போன்று எய்தவர் இருக்க அம்மை நோகும் கதையாகவே இருக்கும்…
    இனி மேற்குறிப்பிட்ட செய்தியை பகுத்தாய்வுக்கு உட்படுத்துவோம்….

    முதலாவது இவ்வாறன செயலில் ஈடுபட்டது ஒரு ஆண்…

    ஆந்தவகையில இது ஆச்சரியமானதல்ல…நாம் வாழுவது ஒரு ஆணாதிக்க சமூகத்த்pல்…இதில் ஆண்களுக்கு அதிகாரம் கட்டுக்கடங்காதிருக்கின்றது…ஆகவே ஒரு ஆண் தான் விரும்பியதை செய்வதில் எந்தவிதமான தடையும் அந்த ஆணின் சமூக சாதிய வர்க்க பிண்ணியைப் பொறுத்து இருக்கப்போவதில்லை….ஆகவே இங்கு விமர்சிக்கப்படவேண்டியது ஆணாதிக்க சமூகத்தையே…அந்த ஆண் தனது ஆணாதிக்க மனோபாவத்தை பயன்படுத்த pஅவ்வாறான ஒரு செயலில் ஈடுபட்டிருந்தால்..ஆணாதிக்க சமூகத்தில் ஆண் எவ்வாறு எல்லாம் நன்மை அடைகின்றான்…பெண்ணை தனது தேவைகளுக்கு எற்ப எவ்வாறு அடக்கி பயன்படுத்துகின்றான்…என அலசி ஆராய வேண்டும்…இதை விடுத்து….

    இரண்டாவது…

    ஆந்த ஆணின் சாதிய பின்னணி முக்கியமானது. செய்தியின் அடிப்படையில் அவர் ஒரு பிராமண சாதியைச் சேர்ந்தவராகவே இருக்கலாம். ஆகவே கண்டறியவேண்டியது…அதில் ஈடுபடுத்தப்பட்ட அல்லது ஈடுப்பட்ட பெண்களின் சாதிய பிண்னணி…ஏனனில் ஆதிக்க சாதிகள் அடக்கப்பட்ட சாதி பெண்களை தமது காம இச்;சைகளுக்கு தொடர்ந்தும் சுரண்டி வருவது வரலாறு. ஆப் பெண்கள் சாதியால் அடக்கப்பட்டவர்களாக இருப்பின் இச் செய்தியின் பின்னணியை சாதிய சுரண்டலினதும் அடக்குமுறையினதும் அடிப்படையில் அணுகவேண்டும். ஆதிக்க சாதிகளின் பாலியல் சுரண்டலுக்கு எதிரானதாக இச் செய்தி இருந்;திருக்க வேண்டும்….அதைவிடுத்து..

    ஆக் குறிப்பிட்ட பெண் ஒரே சாதியை சேர்ந்தவராக இருப்பின் ஒன்று ஆணாதிக்கத்தின் அடிப்படையில் நோக்கலாம் அதாவது ஏற்கனவே மேலே கூறியது போல் ஆண்களால் பெண்கள் எவ்வாறு பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்பது பற்றிய ஆய்வாக இச் செய்தி இருந்திருக்கவேண்டும்.

    இவ்வாறு பல் வேறு கோணங்களில் அக் குறிப்பிட்ட சம்பவத்திற்கான சமூக காரணிகளை கண்டறிந்து வெளீயிடும் பொழுது சமூகத்தில் புறையோடிப்போயிருக்கும் ஆணாதிக்க அதிகாரத்துவத்தையும் அதன் துஸ்பிரயோகங்களையும் அடக்குமுறைகளையும் மற்றும் அனைத்துவிதமான சுரண்டல்களையும் பிற்போக்குத்தனங்களையும் வெளிக்கொண்டுவரலாம். இது சமூக மாற்றத்தை நோக்கிய செயற்பாட்டிற்கான ஒரு அடியாக இருக்கும்.

    இதைவிடுத்து இவர் அவரோடு கருப்பகிரக்த்திலோ சொர்க்கத்திலோ சல்லாபித்தால் நமக்கு என்ன…நம்மால் முடியவில்லையே என பொறாமையாக இருக்கின்றதா…அல்லது…
    இரு மனிதர்கள் அது பிராமணனாக இருந்தால் என்ன தலித்தாக இருந்தால் என்ன தமது இயற்கையான காம சக்தியை வெளிப்படுத்துதல் தவறேதுமில்லையே…அவ்வாறு தவறு என கூறுகின்றவர்கள் யார் என மீண்டும் சமூக ஆய்வு செய்யவேண்டும்….இவ்வாறு கூறுபவர்கள் நமது பிற்போக்கான கலாசார பண்பாட்டு அம்சங்களை தூக்கிப்பிடிக்கும் சமூக ஆதிக்கசக்திகளே…இச் சக்திகளையே சமூகத்தின் முன்வெளிக்கொண்டு வரவேண்டும்….

    மூன்றாவது…

    எனது புரிதலில் நீங்கள் நாத்திகர்கள் என்றே நம்புகின்றேன். அப்படியாயின் ஒரு கோயிலுக்குள் அதன் கர்ப்பகிரகத்தில் ஒரு மனிதர் காம செயற்பாட்டில் ஈடுபடுவதில் தவறு என்ன? அது துய்மையான இடம் என நீங்களும் கருதுகின்றீர்களா? குhம செயற்பாட்டால் தூய்மை போய்விட்டது எனக் கவலைப்படுகின்றீர்களா?

    காமத்தைக் கட்டிப்போட்டு அடக்கி அழகு பார்க்கும் வேடிக்கை பார்க்கும் சமூகத்தில் இருவர் பயமின்றி காமஉறவில் ஈடுபடுவதற்கு கடவுள் இருக்குமிடமான கருப்பகிரகத்தைத் தவறி வேறு எந்த இடமும் பாதுகாப்பானதல்ல…

    இங்கு நாம் அந்த செய்தியின் பின்னணியில் கவனிக்கவேண்டியது வர்க்க சாதி பிரிவுகளுக்கு அப்பாற்பட்டு இரு மனிதர்கள் காம உறவில் ஏன் அவ்வாறு களவாக ஈடுபடுகின்றனர்….அதற்கான சுதந்திரம் சமூகத்தில் மறுக்கப்படுகின்றதா?

    ஆவ்வாறு மறுக்கப்படுகின்றதாயின் அதற்கான காரணம் என்ன? என்றடிப்படையில் ஆய்வு செய்யவேண்டும்…
    காமம் மனிதரின் இயற்கையான சக்தி. அது ஏன் நமது சமூகத்தில் அடக்கப்பட்டிருக்கின்றது. இந்த அடக்குமுறைக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் தொடர்பிருக்கின்றதா? தொடர்பிருந்தால் அதற்கான பின்னணி காரணம் என்ன? என்பன கண்டறியப்பட்டு களையப்படவேண்டும்..
    அனைத்து மனிதரும் அனைத்து அடக்குமுறைகளிலிருந்தும் {(காம அடக்குமுறையிலிருந்தும்) விடுதலை பெற்று சுநத்திரமாக வாழவேண்டும்…

    எனது சொந்த அனுபவத்தில் காமத்தை அடக்குவதால் நான் படும் அவஸ்தையை யாரிடமும் சொல்லமுடியாது படும்பாடு இருக்கின்றதே…

    இளமையில் இலட்சியக் கொள்கைப்பிடிப்பால் அரசியல் வாழ்விற்காக காமத்தை கட்டுப்படுத்தி சுய இன்பம் மட்டும் வாழ்வானது…

    முடியாதபோது 27வயதில்(!) காமத்தை அனுபவிப்பதற்காகவே காதலியை கைபிடித்து…அப்பாடா பிரச்சனை தீர்ந்தது என நினைத்துபோது…

    அது அனை திறந்த்த வெள்ளம் போல் அதன் பின்தான் பாய்ந்து வருகின்றது…

    அதன் பின் பத்து வருடங்களாக தியான பயிற்சியில் இருந்தும் ம்ம்ம்…அது ஓய்ந்தபாடில்லை…
    ஒரு ஆணாக இருந்து…அதிலும் பெண்ணியவாதியாக இருந்து…எனது உள் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் மதிப்புக் கொடுத்து…அதேவேளை பெண்ணையும் மதித்து அவளது உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் மதிப்புக் கொடுத்து அவள் மீது எனது ஆணாதிக்க அதிகாரத்தை பிரயோகிக்காது…பாலியல் அடிப்படையில் சுரண்டாது பிரக்ஞையுடன் நேர்மையாக இந்த பிற்போக்கு சமூகத்தில் வாழ்வது என்பது….

    ஆப்பாடா….இக் கஸ்டத்தை யாரிடம் முறையிடுவது…. கடவுள் மீது நம்பிக்கையில்லை…நல்ல தலைமைகளும் இல்லை…வழி காட்டிகளும் இல்லை..என்ன வாழ்வு இது…

    பிரச்சனை என்னவெனில் காமத்தை எவ்வாறு தீர்ப்பது அதற்காக மற்று பாலிடம் எவ்வாறு அணுகுவது என்பது தொடர்பான அறிவு நமது சமூகத்தில் இல்லை….குறிப்பாக ஆண்கள் காதல் என்பதையே காமத்தை தீர்ப்பதற்கு பயன்படுத்துகின்றனர். இது துர்ப்பாக்கியமானதே… பெண்ணுடன் எனக்கு காதல் இல்லை காமம் தான் உள்ளது என வெளிப்படையாக சொல்லவும் முடியாது…ஏனனில் அந்தளவு திறந்து உரையாடும் சமூகம் அல்ல நம்முடையது…அதனால் பல முற்போக்கு பேசும் ஆண்களே பெண்களுடன் உறவு கொள்வதற்கு மறைமுகமாகவே அணுகுகின்றனர்…ஆணிக்கே இந்த நிலையெனின் பெண்ணின் நிலை…

    இதன் சக்தியைக் கண்டுபயந்து தான் ஆணாதிக்க வர்க்கம் ஆரம்ப காலத்திலையே அடக்கிவிட்டதா?
    ஆய்வுகளின் படி ஒரு ஆண் ஆகக் குறைந்தது 3 நிமிடங்களுக்கு ஒரு முறை காமத்தைப் பற்றி சிந்திக்கின்றான்….பெண் ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கு ஒரு முறை சிந்திக்கின்றாள்…

    இக் காம பிரச்சனையிலிருந்து நாம் ஒருவரும் தப்பமுடியாது…இன்று மனிதர்களிடம் இருக்குமு; பல உளவியல் பிரச்சனைகளுக்கு காமத்தை அடக்கி வாழ்வதும் ஒரு காரணம்…இருப்பினும் ஒவ்வொருவரும் நமது அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப இப் பிரச்சனைக்கு முகம் கொடுக்கின்றோம்….இதற்கான நமது தீர்வுகள் எல்லாம் சரி என நாம் வாதிட முடியாது எனனில் எந்தளவிற்கு நம்மை பிற்போக்கான சமூக கருத்துகள் ஆதிக்கம் செய்கின்றது என்பதை பொருத்தது அது…

    உண்மையிலையே காமம் ஒரு பிரச்சனையல்ல…ஆனால் பிரச்சனைக்குரியதாக ஆக்கப்பட்டுள்ளது….
    நானும் இங்கு பிரச்சனைக்கு வரவில்லை…எனது கருத்தை மட்டுமே முன்வைக்கின்றேன்…மீண்டும் நேரம் கிடைக்கும் பொழுது கேள்விகள் இருப்பின் பதில் எழுதுவேன்…

    நன்றி
    மீராபராதி
    (பெண்மையும் ஆண்மையும்)


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: